ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.

~1 ஆதியாகமம் 1:1

1 ஆதாம், சேத், ஏனோஸ்,
2 கேனான், மகலாலெயேல், யாரேத்,
3 ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு,
4 நோவா, சேம், காம், யாப்பேத்.
5 யாப்பேத்தின் குமாரர், கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.
6 கோமரின் குமாரர், அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.
7 யாவானின் குமாரர், எலிசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள்.
8 காமின் குமாரர், கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள்.
9 கூஷின் குமாரர், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்; ராமாவின் குமாரர், சேபா, திதான் என்பவர்கள்.
10 கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.
11 மிஸ்ராயீம் லூதீமியரையும், ஆனாமியரையும், லெகாபியரையும், நப்தூகியரையும்,
12 பத்ரூசியரையும், பெலிஸ்தரைப் பெற்ற கஸ்லூகியரையும், கப்தோரியரையும் பெற்றான்.
13 கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும்,
14 எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும்,
15 ஏவியரையும், அர்கீயரையும், சீநியரையும்,
16 அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும் பெற்றான்.
17 சேமின் குமாரர், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசக் என்பவர்கள்.
18 அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான்.
19 ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவன் பேர் பேலேகு, ஏனெனில் அவன் நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவன் சகோதரன் பேர் யொக்தான்.
20 யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், ஆசர்மாவேத்தையும், யேராகையும்,
21 அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும்,
22 ஓபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,
23 ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும் பெற்றான்; இவர்கள் எல்லாரும் யொக்தானின் குமாரர்.
24 சேம், அர்பக்சாத், சாலா,
25 ஏபேர், பேலேகு, ரெகூ,
26 செரூகு, நாகோர், தேராகு,
27 ஆபிராமாகிய ஆபிரகாம்,
28 ஆபிரகாமின் குமாரர், ஈசாக்கு, இஸ்மவேல் என்பவர்கள்.
29 இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மவேலின் மூத்த குமாரனாகிய நெபாயோத், கேதார், அத்பியேல், மிப்சாம்,
30 மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா,
31 யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள்; இவர்கள் இஸ்மவேலின் குமாரர்.
32 ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய கேத்தூராள் பெற்ற குமாரர், சிம்ரான், யக்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்பவர்கள்; யக்ஷானின் குமாரர், சேபா, தேதான் என்பவர்கள்.
33 மீதியானின் குமாரர், ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் கேத்துராளின் குமாரர்.
34 ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கின் குமாரர், ஏசா இஸ்ரவேல் என்பவர்கள்.
35 ஏசாவின் குமாரர், எலீப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள்.
36 எலிப்பாசின் குமாரர், தேமான், ஓமார், செப்பி, கத்தாம், கேனாஸ், திம்னா, அமலேக்கு என்பவர்கள்.
37 ரெகுவேலின் குமாரர், நகாத், சேராகு, சம்மா, மீசா என்பவர்கள்.
38 சேயீரின் குமாரர், லோத்தான், சோபால், சிபியோன், ஆனா, தீசோன், எத்சேர், தீசான் என்பவர்கள்.
39 லோத்தானின் குமாரர், ஓரி, ஓமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவர்கள்.
40 சோபாலின் குமாரர், அல்வான், மானகாத், ஏபால், செப்போ, ஓனாம் என்பவர்கள்; சிபியோனின் குமாரர், அயா, ஆனாகு என்பவர்கள்.
41 ஆனாகின் குமாரரில் ஒருவன் திஷோன் என்பவன்; திஷோனின் குமாரர், அம்ராம், எஸ்பான் இத்தரான், கெரான் என்பவர்கள்.
42 ஏத்சேரின் குமாரர், பில்கான், சகவான், யாக்கான் என்பவர்கள்; திஷானின் குமாரர், ஊத்ஸ், அரான் என்பவர்கள்.
43 இஸ்ரவேல் புத்திரரை ஒரு ராஜா ஆளாததற்கு முன்னே, ஏதோம் தேசத்தில் அரசாண்ட ராஜாக்களானவர்கள்: பேயோரின் குமாரன் பேலா என்பவன்; இவன் பட்டணத்தின் பேர் தின்காபா.
44 பேலா மரித்தபின் போஸ்ரா ஊரானாகிய சேராகின் குமாரன் யோபாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
45 யோபாப் மரித்தபின், தேமானியரின் தேசத்தானாகிய ஊசாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
46 ஊசாம் மரித்தபின், பேதாதின் குமாரன் ஆதாத் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான், இவன் மீதியானியரை மோவாபின் நாட்டிலே முறிய அடித்தவன்; இவன் பட்டணத்தின்பேர் ஆவீத்.
47 ஆதாத் மரித்தபின், மஸ்ரேக்கா ஊரானாகிய சம்லா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
48 சம்லா மரித்தபின், நதியோரமான ரேகோபோத்தானாகிய சவுல் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
49 சவுல் மரித்தபின், அக்போரின் குமாரன் பாகாலானான் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
50 பாகாலானான் மரித்தபின், ஆதாத் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்; இவன் பட்டணத்தின்பேர் பாகி; மேசகாபின் குமாரத்தியாகிய மாத்திரேத்தின் மகளான அவன் மனைவியின் பேர் மெகேதபேல்.
51 ஆதாத் மரித்தபின், ஏதோமில் ஏற்பட்ட பிரபுக்களானவர்கள்; திம்னா பிரபு, அல்யா பிரபு, எதேத் பிரபு,
52 அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு,
53 கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு,
54 மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு, இவர்களே ஏதோமின் பிரபுக்கள்.


1 Adam, Seth, Enosh;
2 Kenan, Ma-hal'alel, Jared;
3 Enoch, Methu'selah, Lamech;
4 Noah, Shem, Ham, and Japheth.
5 The sons of Japheth: Gomer, Magog, Madai, Javan, Tubal, Meshech, and Tiras.
6 The sons of Gomer: Ash'kenaz, Diphath, and Togar'mah.
7 The sons of Javan: Eli'shah, Tarshish, Kittim, and Ro'danim.
8 The sons of Ham: Cush, Egypt, Put, and Canaan.
9 The sons of Cush: Seba, Hav'ilah, Sabta, Ra'ama, and Sab'teca. The sons of Ra'amah: Sheba and Dedan.
10 Cush was the father of Nimrod; he began to be a mighty one in the earth.
11 Egypt was the father of Ludim, An'amim, Le'habim, Naph-tu'him,
12 Pathru'sim, Caslu'him (whence came the Philis'tines), and Caph'torim.
13 Canaan was the father of Sidon his first-born, and Heth,
14 and the Jeb'usites, the Am'orites, the Gir'gashites,
15 the Hivites, the Arkites, the Sinites,
16 the Ar'vadites, the Zem'arites, and the Ha'mathites.
17 The sons of Shem: Elam, Asshur, Arpach'shad, Lud, Aram, Uz, Hul, Gether, and Meshech.
18 Arpach'shad was the father of Shelah; and Shelah was the father of Eber.
19 To Eber were born two sons: the name of the one was Peleg (for in his days the earth was divided), and the name of his brother Joktan.
20 Joktan was the father of Almo'dad, Sheleph, Hazarma'veth, Jerah,
21 Hador'am, Uzal, Diklah,
22 Ebal, Abim'a-el, Sheba,
23 Ophir, Hav'ilah, and Jobab; all these were the sons of Joktan.
24 Shem, Arpach'shad, Shelah;
25 Eber, Peleg, Re'u;
26 Serug, Nahor, Terah;
27 Abram, that is, Abraham.
28 The sons of Abraham: Isaac and Ish'mael.
29 These are their genealogies: the first-born of Ish'mael, Neba'ioth; and Kedar, Adbeel, Mibsam,
30 Mishma, Dumah, Massa, Hadad, Tema,
31 Jetur, Naphish, and Ked'emah. These are the sons of Ish'mael.
32 The sons of Ketu'rah, Abraham's concubine: she bore Zimran, Jokshan, Medan, Mid'ian, Ishbak, and Shu'ah. The sons of Jokshan: Sheba and Dedan.
33 The sons of Mid'ian: Ephah, Epher, Hanoch, Abida, and Elda'ah. All these were the descendants of Ketu'rah.
34 Abraham was the father of Isaac. The sons of Isaac: Esau and Israel.
35 The sons of Esau: Eli'phaz, Reu'el, Je'ush, Jalam, and Korah.
36 The sons of Eli'phaz: Teman, Omar, Zephi, Gatam, Kenaz, Timna, and Am'alek.
37 The sons of Reu'el: Nahath, Zerah, Shammah, and Mizzah.
38 The sons of Se'ir: Lotan, Shobal, Zib'eon, Anah, Dishon, Ezer, and Dishan.
39 The sons of Lotan: Hori and Homam; and Lotan's sister was Timna.
40 The sons of Shobal: Al'ian, Man'ahath, Ebal, Shephi, and Onam. The sons of Zib'eon: Ai'ah and Anah.
41 The sons of Anah: Dishon. The sons of Dishon: Hamran, Eshban, Ithran, and Cheran.
42 The sons of Ezer: Bilhan, Za'avan, and Ja'akan. The sons of Dishan: Uz and Aran.
43 These are the kings who reigned in the land of Edom before any king reigned over the Israelites: Bela the son of Be'or, the name of whose city was Din'habah.
44 When Bela died, Jobab the son of Zerah of Bozrah reigned in his stead.
45 When Jobab died, Husham of the land of the Te'manites reigned in his stead.
46 When Husham died, Hadad the son of Bedad, who defeated Mid'ian in the country of Moab, reigned in his stead; and the name of his city was Avith.
47 When Hadad died, Samlah of Masre'kah reigned in his stead.
48 When Samlah died, Sha'ul of Reho'both on the Euphra'tes reigned in his stead.
49 When Sha'ul died, Ba'al-ha'nan, the son of Achbor, reigned in his stead.
50 When Ba'al-ha'nan died, Hadad reigned in his stead; and the name of his city was Pa'i, and his wife's name Mehet'abel the daughter of Matred, the daughter of Me'zahab.
51 And Hadad died. The chiefs of Edom were: chiefs Timna, Al'iah, Jetheth,
52 Oholiba'mah, Elah, Pinon,
53 Kenaz, Teman, Mibzar,
54 Mag'di-el, and Iram; these are the chiefs of Edom.

1 இஸ்ரவேலின் குமாரர், ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்,
2 தாண், யோசேப்பு, பென்யமீன், நப்தலி, காத், ஆசேர் என்பவர்கள்.
3 யூதாவின் குமாரர், ஏர், ஓனான், சேலா என்பவர்கள்; இந்த மூன்று குமாரர் சூவாவின் மகளான கானான் ஸ்திரீயினிடத்தில் அவனுக்குப் பிறந்தவர்கள்; ஏர் என்னும் யூதாவின் மூத்த குமாரன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனானபடியால் அவர் அவனைக் கொன்றுபோட்டார்.
4 அவன் மருமகளாகிய தாமார் அவனுக்கு பாரேசையும் சேராவையும் பெற்றாள்; யூதாவின் குமாரர் எல்லாரும் ஐந்துபேர்.
5 பாரேசின் குமாரர், எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.
6 சேராவின் குமாரர் எல்லாரும், சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா என்னும் ஐந்துபேர்.
7 சாபத்தீடான விஷயத்திலே துரோகம்பண்ணி இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணின ஆகார் என்பவன், கர்மீ புத்திரரில் ஒருவன்.
8 ஏத்தானின் குமாரர் அசரியா முதலானவர்கள்.
9 எஸ்ரோனுககுப் பிறந்த குமாரர், யெர்மெயேல், ராம், கெலுபா என்பவர்கள்.
10 ராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் யூதா புத்திரரின் பிரபுவாகிய நகசோனைப் பெற்றான்.
11 நகசோன் சல்மாவைப் பெற்றான்; சல்மா போவாசைப் பெற்றான்.
12 போவாஸ் ஓபேதைப் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்.
13 ஈசாய் தன் மூத்த குமாரன் எலியாபையும், அபினதாப் என்னும் இரண்டாம் குமாரனையும், சிம்மா என்னும் மூன்றாம் குமாரனையும்,
14 நெதனயேல் என்னும் நாலாம் குமாரனையும், ரதாயி என்னும் ஐந்தாம் குமாரனையும்,
15 ஓத்சேம் என்னும் ஆறாம் குமாரனையும், தாவீது என்னும் ஏழாம் குமாரனையும் பெற்றான்.
16 அவர்கள் சகோதரிகள் செருயாள், அபிகாயில் என்பவர்கள்; செருயாளின் குமாரர், அபிசாய், யோவாப், ஆசகேல் என்னும் மூன்றுபேர்.
17 அபிகாயில் அமாசாவைப் பெற்றாள்; அமாசாவின் தகப்பன் இஸ்மவேலியனாகிய யெத்தேர் என்பவன்.
18 எஸ்ரோனின் குமாரன் காலேப் எரீயோத் என்னப்பட்ட தன் பெண்ஜாதியாகிய அசுபாளாலே பெற்ற குமாரர், ஏசேர், சோபாப், அர்தோன் என்பவர்கள்.
19 அசுபாள் சென்றுபோனபின் காலேப் எப்ராத்தை விவாகம்பண்ணினான்; இவள் அவனுக்கு ஊரைப் பெற்றாள்.
20 ஊர் ஊரியைப் பெற்றான்; ஊரி பெசலெயேலைப் பெற்றான்.
21 பிற்பாடு, எஸ்ரோன் அறுபது வயதானபோது கிலெயாத்தின் தகப்பனாகிய மாகீரின் குமாரத்தியை விவாகம்பண்ணி, அவளிடத்தில் பிரவேசித்தான்; இவள் அவனுக்குச் செகூபைப் பெற்றாள்.
22 செகூப் யாவீரைப் பெற்றான்; இவனுக்குக் கீலேயாத் தேசத்தில் இருபத்துமூன்று ஊர்கள் இருந்தது.
23 கேசூரையும் ஆராமையும் யாவீரின் கிராமங்களையும், கேனாத்திலுள்ள கிராமங்களாகிய அறுபது ஊர்களையும் அவர்கள் கையிலே வாங்கினார்கள்; இவர்கள் எல்லாரும் கிலெயாத்தின் தகப்பனாகிய மாகீரின் குமாரர்.
24 காலேபின் ஊரான எப்ராத்தாவில் எஸ்ரோன் இறந்துபோனபின், எஸ்ரோனின் பெண்ஜாதியாகிய அபியாள் அவனுக்குத் தெக்கொவாவின் தகப்பனாகிய அசூரைப் பெற்றாள்.
25 எஸ்ரோனுக்கு முதற்பிறந்த யெர்மெயேலின் குமாரர், ராம் என்னும் மூத்தவனும், பூனா, ஓரென், ஓத்சேம், அகியா என்பவர்களுமே.
26 அத்தாராள் என்னும் பேருள்ள வேறொரு மனைவியும் யெர்மெயேலுக்கு இருந்தாள்; இவள் ஓனாமின் தாய்.
27 யெர்மெயேலுக்கு முதற்பிறந்த ராமின் குமாரர், மாஸ், யாமின், எக்கேர் என்பவர்கள்.
28 ஓனாமின் குமாரர், சம்மாய், யாதா என்பவர்கள்; சம்மாயின் குமாரர், நாதாப், அபிசூர் என்பவர்கள்.
29 அபிசூருடைய மனைவியின் பேர் அபியாயேல்; அவள் அவனுக்கு அக்பானையும் மோளிதையும் பெற்றாள்.
30 நாதாபின் குமாரர், சேலேத், அப்பாயிம் என்பவர்கள்; சேலேத் புத்திரரில்லாமல் மரித்தான்.
31 அப்பாயிமின் குமாரர் இஷி முதலானவர்கள்; இஷியின் குமாரர் சேசான் முதலானவர்கள்; சேசானின் குமாரத்தி அக்லாய்.
32 சம்மாயின் சகோதரனாகிய யாதாவின் குமாரர், யெத்தெர், யோனத்தான் என்பவர்கள்; யெத்தெர் குமாரரில்லாமல் மரித்தான்.
33 யோனத்தானின் குமாரர், பேலேத்சாசா என்பவர்கள்; இவர்கள் யெர்மெயேலின் புத்திரர்.
34 சேசானுக்குக் குமாரத்திகளேயன்றி குமாரர்கள் இல்லை; சேசானுக்கு யர்கா என்னும் பேருள்ள எகிப்திய வேலைக்காரன் ஒருவன் இருந்தான்.
35 சேசான் தன் குமாரத்தியைத் தன் வேலைக்காரனாகிய யாகாவுக்குக் கொடுத்தான்; அவள் அவனுக்கு அத்தாயியைப் பெற்றாள்.
36 அத்தாயி நாதானைப் பெற்றான். நாதான் சாபாதைப் பெற்றான்.
37 சாபாத் எப்லாலைப் பெற்றான்; எப்லால் ஒபேதைப் பெற்றான்.
38 ஓபேத் ஏகூவைப் பெற்றான்; ஏகூ அசரியாவைப் பெற்றான்.
39 அசரியா ஏலேத்சைப் பெற்றான்; ஏலேத்ஸ் எலெயாசாவைப் பெற்றான்.
40 எலெயாசா சிஸ்மாயைப் பெற்றான்; சிஸ்மாய் சல்லுூமைப் பெற்றான்.
41 சல்லுூம் எக்கமியாவைப் பெற்றான்; எக்கமியா எலிசாமாவைப் பெற்றான்.
42 யெர்மெயேலின் சகோதரனாகிய காலேபின் குமாரர், சீப்பின் தகப்பனாகிய மேசா என்னும் முதற்பிறந்தவனும் எப்ரோனின் தகப்பனாகிய மெரோசாவின் குமாரருமே.
43 எப்ரோனின் குமாரர், கோராகு, தப்புவா, ரெக்கேம் செமா என்பவர்கள்.
44 செமா யோர்க்கேயாமின் தகப்பனாகிய ரெக்கேமைப் பெற்றான்; ரெக்கேம் சம்மாயைப் பெற்றான்.
45 சம்மாயின் குமாரன் மாகோன்; மாகோன் பெத்சூரின் தகப்பன்.
46 காலேபின் மறுமனையாட்டியாகிய எப்பாள் ஆரானையும் மோசாவையும், காசேசையும் பெற்றாள்; ஆரான் காசேசைப் பெற்றான்.
47 யாதாயின் குமாரர், ரேகேம், யோதாம், கேசாம், பேலேத், எப்பா, சாகாப் என்பவர்கள்.
48 காலேபின் மறுமனையாட்டியாகிய மாகாள் சேபேரையும் திர்கானாவையும் பெற்றாள்.
49 அவள் மத்மன்னாவின் தகப்பனாகிய சாகாபையும், மக்பேனாவுக்கும் கீபேயாவுக்கும் தகப்பனாகிய சேவாவையும் பெற்றாள்; காலேபின் குமாரத்தி அக்சாள் என்பவள்.
50 எப்ராத்தாளிடத்தில் முதற்பிறந்த ஊருடைய குமாரனாகிய காலேபின் குமாரர், கீரியாத்யாரீமின் மூப்பனான சோபாலும்,
51 பெத்லெகேமின் மூப்பனான சல்மாவும், பெத்காதேரின் மூப்பனான ஆரேப்புமே.
52 கீரியாத்யாரிமின் மூப்பனான சோபாலின் குமாரர், ஆரோவே, ஆசியம் மெனுகோத் என்பவர்கள்.
53 கீரியாத்யாரிமிலிருந்த வம்சங்கள், எத்திரியரும் பூகியரும் சுமாத்தியரும் மிஸ்ராவியருமே; இவர்களிடத்தில் சோராத்தியரும், எஸ்தவோலியரும் பிறந்தார்கள்.
54 சல்மாவின் சந்ததிகள், பெத்லெகேமியரும், நேத்தோப்பாத்தியரும், பெத்யோவாப் என்னும் அதரோத் ஊராரும், மானாத்தியரிலும் சோரியரிலும் பாதிஜனங்களுமே.
55 யாபேசில் குடியிருந்த கணக்கரின் வம்சங்கள், திராத்தியரும் சிமாத்தியரும் சுக்காத்தியருமே; ரேகாப் வீட்டாரின் தகப்பனாகிய அம்மாத்தின் சந்ததியாரான கேனியர் இவர்களே.


1 These are the sons of Israel: Reuben, Simeon, Levi, Judah, Is'sachar, Zeb'ulun,
2 Dan, Joseph, Benjamin, Naph'tali, Gad, and Asher.
3 The sons of Judah: Er, Onan, and Shelah; these three Bath-shu'a the Canaanitess bore to him. Now Er, Judah's first-born, was wicked in the sight of the LORD, and he slew him.
4 His daughter-in-law Tamar also bore him Perez and Zerah. Judah had five sons in all.
5 The sons of Perez: Hezron and Hamul.
6 The sons of Zerah: Zimri, Ethan, Heman, Calcol, and Dara, five in all.
7 The sons of Carmi: Achar, the troubler of Israel, who transgressed in the matter of the devoted thing;
8 and Ethan's son was Azari'ah.
9 The sons of Hezron, that were born to him: Jerah'meel, Ram, and Chelu'bai.
10 Ram was the father of Ammin'adab, and Ammin'adab was the father of Nahshon, prince of the sons of Judah.
11 Nahshon was the father of Salma, Salma of Bo'az,
12 Bo'az of Obed, Obed of Jesse.
13 Jesse was the father of Eli'ab his first-born, Abin'adab the second, Shim'ea the third,
14 Nethan'el the fourth, Raddai the fifth,
15 Ozem the sixth, David the seventh;
16 and their sisters were Zeru'iah and Ab'igail. The sons of Zeru'iah: Abi'shai, Jo'ab, and As'ahel, three.
17 Ab'igail bore Ama'sa, and the father of Ama'sa was Jether the Ish'maelite.
18 Caleb the son of Hezron had children by his wife Azu'bah, and by Jer'ioth; and these were her sons: Jesher, Shobab, and Ardon.
19 When Azu'bah died, Caleb married Ephrath, who bore him Hur.
20 Hur was the father of Uri, and Uri was the father of Bez'alel.
21 Afterward Hezron went in to the daughter of Machir the father of Gilead, whom he married when he was sixty years old; and she bore him Segub;
22 and Segub was the father of Ja'ir, who had twenty-three cities in the land of Gilead.
23 But Geshur and Aram took from them Havvoth-ja'ir, Kenath and its villages, sixty towns. All these were descendants of Machir, the father of Gilead.
24 After the death of Hezron, Caleb went in to Eph'rathah, the wife of Hezron his father, and she bore him Ashhur, the father of Teko'a.
25 The sons of Jerah'meel, the first-born of Hezron: Ram, his first-born, Bunah, Oren, Ozem, and Ahi'jah.
26 Jerah'meel also had another wife, whose name was At'arah; she was the mother of Onam.
27 The sons of Ram, the first-born of Jerah'meel: Ma'az, Jamin, and Eker.
28 The sons of Onam: Sham'mai and Jada. The sons of Sham'mai: Nadab and Abi'shur.
29 The name of Abi'shur's wife was Ab'ihail, and she bore him Ahban and Molid.
30 The sons of Nadab: Seled and Ap'pa-im; and Seled died childless.
31 The sons of Ap'pa-im: Ishi. The sons of Ishi: Sheshan. The sons of Sheshan: Ahlai.
32 The sons of Jada, Sham'mai's brother: Jether and Jonathan; and Jether died childless.
33 The sons of Jonathan: Peleth and Zaza. These were the descendants of Jerah'meel.
34 Now Sheshan had no sons, only daughters; but Sheshan had an Egyptian slave, whose name was Jarha.
35 So Sheshan gave his daughter in marriage to Jarha his slave; and she bore him Attai.
36 Attai was the father of Nathan and Nathan of Zabad.
37 Zabad was the father of Ephlal, and Ephlal of Obed.
38 Obed was the father of Jehu, and Jehu of Azari'ah.
39 Azari'ah was the father of Helez, and Helez of Ele-a'sah.
40 Ele-a'sah was the father of Sismai, and Sismai of Shallum.
41 Shallum was the father of Jekami'ah, and Jekami'ah of Eli'shama.
42 The sons of Caleb the brother of Jerah'meel: Mare'shah his first-born, who was the father of Ziph. The sons of Mare'shah: Hebron.
43 The sons of Hebron: Korah, Tap'puah, Rekem, and Shema.
44 Shema was the father of Raham, the father of Jor'ke-am; and Rekem was the father of Sham'mai.
45 The son of Sham'mai: Ma'on; and Ma'on was the father of Bethzur.
46 Ephah also, Caleb's concubine, bore Haran, Moza, and Gazez; and Haran was the father of Gazez.
47 The sons of Jah'dai: Regem, Jotham, Geshan, Pelet, Ephah, and Sha'aph.
48 Ma'acah, Caleb's concubine, bore Sheber and Tir'hanah.
49 She also bore Sha'aph the father of Madman'nah, Sheva the father of Machbe'nah and the father of Gib'e-a; and the daughter of Caleb was Achsah.
50 These were the descendants of Caleb. The sons of Hur the first-born of Eph'rathah: Shobal the father of Kir'iath-je'arim,
51 Salma, the father of Bethelem, and Hareph the father of Beth-gader.
52 Shobal the father of Kir'iath-je'arim had other sons: Haro'eh, half of the Menu'hoth.
53 And the families of Kir'iath-je'arim: the Ithrites, the Puthites, the Shu'mathites, and the Mish'ra-ites; from these came the Zo'rathites and the Esh'taolites.
54 The sons of Salma: Bethlehem, the Netoph'athites, At'roth-beth-jo'ab, and half of the Man'aha'thites, the Zorites.
55 The families also of the scribes that dwelt at Jabez: the Ti'rathites, the Shim'e-athites, and the Su'cathites. These are the Ken'ites who came from Hammath, the father of the house of Rechab.

1 தாவீதுக்கு எப்ரோனிலே பிறந்த குமாரர்: யெஸ்ரெயேல் ஊராளான அகினோவாமிடத்தில் பிறந்த அம்னோன் முதற்பேறானவன்; கர்மேலின் ஊராளான அபிகாயேலிடத்தில் பிறந்த தானியேல் இரண்டாம் குமாரன்.
2 கேசூரின் ராஜாவாகிய தல்மாயின் குமாரத்தி மாக்காள் பெற்ற அப்சலோம் மூன்றாம் குமாரன்; ஆகீத் பெற்ற அதோனியா நாலாம் குமாரன்.
3 அபித்தாள் பெற்ற செப்பத்தியா ஐந்தாம் குமாரன்; அவன் பெண்ஜாதியாகிய எக்லாள் பெற்ற இத்ரேயாம் ஆறாம் குமாரன்.
4 இந்த ஆறு குமாரர் அவனுக்கு எப்ரோனிலே பிறந்தார்கள்; அங்கே ஏழுவருஷமும் ஆறுமாதமும் அரசாண்டான்; எருசலேமிலோ முப்பத்துமூன்று வருஷம் அரசாண்டான்.
5 எருசலேமில் அவனுக்குப் பிறந்தவர்கள்: அம்மியேலின் குமாரத்தியாகிய பத்சுவாளிடத்தில் சிமீயா, சோபாப், நாத்தான், சாலொமோன் என்னும் நாலுபேரும்,
6 இப்கார், எலிசாமா, எலிப்பெலேத்,
7 நோகா, நேபேக், யப்பியா,
8 எலிசாமா, எலியாதா, எலிபேலேத் என்னும் ஒன்பதுபேருமே.
9 மறுமனையாட்டிகளின் குமாரரையும் இவர்கள் சகோதரியாகிய தாமாரையும் தவிர, இவர்களெல்லாரும் தாவீதின் குமாரர்.
10 சாலொமோனின் குமாரன் ரெகொபெயாம்; இவனுடைய குமாரன் அபியா; இவனுடைய குமாரன் ஆசா; இவனுடைய குமாரன் யோசபாத்.
11 இவனுடைய குமாரன் யோராம்; இவனுடைய குமாரன் அகசியா; இவனுடைய குமாரன் யோவாஸ்.
12 இவனுடைய குமாரன் அமத்சியா; இவனுடைய குமாரன் அசரியா; இவனுடைய குமாரன் யோதாம்.
13 இவனுடைய குமாரன் ஆகாஸ்; இவனுடைய குமாரன் எசேக்கியா; இவனுடைய குமாரன் மனாசே.
14 இவனுடைய குமாரன் ஆமோன்; இவனுடைய குமாரன் யோசியா.
15 யோசியாவின் குமாரர், முதல் பிறந்த யோகனானும், யோயாக்கீம் என்னும் இரண்டாம் குமாரனும், சிதேக்கியா என்னும் மூன்றாம் குமாரனும், சல்லுூம் என்னும் நாலாம் குமாரனுமே.
16 யோயாக்கீமின் குமாரர், எகொனியா முதலானவர்கள்; இவனுக்கு மகனானவன் சிதேக்கியா.
17 கட்டுண்ட எகொனியாவின் குமாரர் சலாத்தியேல்,
18 மல்கீராம், பெதாயா, சேனாசார், யெகமியா, ஒசாமா, நெதபியா என்பவர்கள்.
19 பெதாயாவின் குமாரர், செருபாபேல், சிமேயி என்பவர்கள்; செருபாபேலின் குமாரர், மெசுல்லாம், அனனியா என்பவர்கள்; இவர்கள் சகோதரி செலோமீத் என்பவள்.
20 அசூபா, ஒகேல், பெரகியா, அசதியா, ஊசாபேசேத் என்னும் ஐந்துபேருமே.
21 அனனியாவின் குமாரர், பெலேத்தியா, எசாயா என்பவர்கள்; இவனுடைய குமாரன் ரெபாயா; இவனுடைய குமாரன் அர்னான்; இவனுடைய குமாரன் ஒபதியா; இவனுடைய குமாரன் செக்கனியா.
22 செக்கனியாவின் குமாரர், செமாயா முதலானவர்கள்; செமாயாவின் குமாரர், அத்தூஸ், எகெயால், பாரியா, நெயாரியா, செப்பாத் என்னும் ஆறுபேர்.
23 நெயாரியாவின் குமாரர், எலியோய், எசேக்கியா, அஸ்ரீக்காம் என்னும் மூன்றுபேர்.
24 எலியோனாயின் குமாரர், ஒதாயா, எலியாசிப், பெலாயா, அக்கூப், யோகனான், தெலாயா, ஆனானி என்னும் ஏழுபேர்.


1 These are the sons of David that were born to him in Hebron: the first-born Amnon, by Ahin'o-am the Jezreelitess; the second Daniel, by Ab'igail the Car'melitess,
2 the third Ab'salom, whose mother was Ma'acah, the daughter of Talmai, king of Geshur; the fourth Adoni'jah, whose mother was Haggith;
3 the fifth Shephati'ah, by Abi'tal; the sixth Ith'ream, by his wife Eglah;
4 six were born to him in Hebron, where he reigned for seven years and six months. And he reigned thirty-three years in Jerusalem.
5 These were born to him in Jerusalem: Shim'e-a, Shobab, Nathan and Solomon, four by Bath-shu'a, the daughter of Am'mi-el;
6 then Ibhar, Eli'shama, Eliph'elet,
7 Nogah, Nepheg, Japhi'a,
8 Eli'shama, Eli'ada, and Eliph'elet, nine.
9 All these were David's sons, besides the sons of the concubines; and Tamar was their sister.
10 The descendants of Solomon: Rehobo'am, Abi'jah his son, Asa his son, Jehosh'aphat his son,
11 Joram his son, Ahazi'ah his son, Jo'ash his son,
12 Amazi'ah his son, Azari'ah his son, Jotham his son,
13 Ahaz his son, Hezeki'ah his son, Manas'seh his son,
14 Amon his son, Josi'ah his son.
15 The sons of Josi'ah: Joha'nan the first-born, the second Jehoi'akim, the third Zedeki'ah, the fourth Shallum.
16 The descendants of Jehoi'akim: Jeconi'ah his son, Zedeki'ah his son;
17 and the sons of Jeconi'ah, the captive: Sheal'tiel his son,
18 Malchi'ram, Pedai'ah, Shenaz'zar, Jekami'ah, Hosh'ama, and Nedabi'ah;
19 and the sons of Pedai'ah: Zerub'babel and Shim'e-i; and the sons of Zerub'babel: Meshul'lam and Hanani'ah, and Shelo'mith was their sister;
20 and Hashu'bah, Ohel, Berechi'ah, Hasadi'ah, and Ju'shab-he'sed, five.
21 The sons of Hanani'ah: Pelati'ah and Jeshai'ah, his son Rephai'ah, his son Arnan, his son Obadi'ah, his son Shecani'ah.
22 The sons of Shecani'ah: Shemai'ah. And the sons of Shemai'ah: Hattush, Igal, Bari'ah, Neari'ah, and Shaphat, six.
23 The sons of Neari'ah: Eli-o-e'nai, Hizki'ah, and Azri'kam, three.
24 The sons of Eli-o-e'nai: Hod'avi'ah, Eli'ashib, Pelai'ah, Akkub, Joha'nan, Delai'ah, and Ana'ni, seven.

1 யூதாவின் குமாரர், பாரேஸ், எஸ்ரோன், கர்மீ, ஊர், சோபால் என்பவர்கள்.
2 சோபாலின் குமாரன் ராயா யாகாத்தைப் பெற்றான்; யாகாத் அகுமாயியையும் லாகாதையும் பெற்றான்; சோராத்தியரின் வம்சங்கள் இவைகளே.
3 ஏதாம் என்னும் மூப்பனின் சந்ததியார், யெஸ்ரெயேல், இஷ்மா, இத்பாஸ் என்பவர்கள்; இவர்களுடைய சகோதரியின் பேர் அத்செலெல்போனி;
4 கேதோருக்கு மூப்பனான பெனுவெல், உஷாவுக்கு மூப்பனான எசேர் என்பவர்கள்; இவர்கள் பெத்லெகேமுக்கு மூப்பனான எப்ராத்தாவுக்கு முதற்பிறந்த ஊரின் குமாரர்.
5 தெக்கோவாவுக்கு மூப்பனான அசூருக்கு ஏலாள், நாராள் என்னும் இரண்டு பெண்ஜாதிகள் இருந்தார்கள்.
6 நாராள் அவனுக்கு அகுசாமையும், எப்பேரையும், தெமனியையும், ஆகாஸ்தாரியையும் பெற்றாள்; நாராளின் குமாரர்கள் இவர்களே.
7 ஏலாளின் குமாரர், சேரேத், எத்சோகார், எத்னான் என்பவர்கள்.
8 கோஸ் என்பவன் அனூபையும், சோபேபாகையும், ஆருமின் குமாரனாகிய அகர்கேலின் வம்சங்களையும் பெற்றான்.
9 யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம்பெற்றவனாயிருந்தான். அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள்.
10 யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார்.
11 சூகாவின் சகோதரனாகிய கேலூப் மேகீரைப் பெற்றான்; இவன் எஸ்தோனின் தகப்பன்.
12 எஸ்தோன் பெத்ராபாவையும், பசேயாகையும், இர்நாகாஷின் தகப்பனாகிய தெகினாகையும் பெற்றான்; இவர்கள் ரேகாவூர் மனுஷர்.
13 கேனாசின் குமாரர், ஒத்னியேல், செராயா என்பவர்கள்; ஒத்னியேலின் குமாரரில் ஒருவன் ஆத்தாத்.
14 மெயோனத்தாய் ஒபிராவைப் பெற்றான்; செராயா கராஷீமன் பள்ளத்தாக்குக்கு மூப்பனாகிய யோவாபைப் பெற்றான்; அவர்கள் தொழிலாளிகளாயிருந்தார்கள்.
15 எப்புன்னேயின் குமாரனாகிய காலேபின் குமாரர், ஈரு, ஏலா, நாகாம்; ஏலாவின் குமாரரில் ஒருவன் கேனாஸ்.
16 எகலெலேலின் குமாரர், சீப், சீப்பா, திரியா, அசாரெயேல்.
17 எஸ்றாவின் குமாரர், யெத்தேர், மேரேத், ஏப்பேர், யாலோன்; மேரேத்தின் பெண்ஜாதி மிரியாமையும், சம்மாயியையும், எஸ்தெமோவா ஊருக்கு மூப்பனான இஸ்பாவையும் பெற்றாள்.
18 அவன் பெண்ஜாதியாகிய எகுதியாள், கேதோரின் தகப்பனாகிய யாரேதையும், சோக்கோவின் தகப்பனாகிய ஏபேரையும, சனோவாவின் தகப்பனாகிய எக்குத்தியேலையும் பெற்றாள்; மேரேத் விவாகம் பண்ணின பார்வோனின் குமாரத்தியாகிய பித்தியாளின் குமாரர் இவர்களே.
19 நாகாமின் சகோதரியாகிய ஒதியாவினுடைய பெண்ஜாதியின் குமாரர் கர்மியனாகிய ஆபிகேயிலாவும், மாகாத்தியனாகிய எஸ்தேமோவாவுமே.
20 ஷீமோனின் குமாரர், அம்னோன், ரின்னா, பென்கானான், தீலோன் என்பவர்கள், இஷியின் குமாரர், சோகேதும் பென்சோகேதுமே.
21 யூதாவின் குமாரனாகிய சேலாகின் புத்திரர்: லேக்காவூர் மூப்பனான ஏரும் மரேசார் மூப்பனான லாதாகும், மெல்லிய புடவை நெய்த அஸ்பெயா வீட்டுவம்சங்களும்,
22 யோயாக்கீமும், கோசேபாவின் மனுஷரும், மோவாபியரை ஆண்ட யோவாஸ், சாராப் என்பவர்களும், யசுபிலெகேமுமே; இவைகள் பூர்வகாலத்தின் செய்திகள்.
23 இவர்கள் குயவராயிருந்து நெத்தாயிமிலும் கெதேராவிலும் குடியிருந்தார்கள்; ராஜாவின் வேலையை விசாரிக்கிறதற்கு அங்கே வாசம்பண்ணினார்கள்
24 சிமியோனின் குமாரர், நெமுவேல்,யாமின், யாரீப், சேரா, சவுல் என்பவர்கள்.
25 இவன் குமாரன் சல்லூம்; இவன் குமாரன் மிப்சாம்; இவன் குமாரன் மிஸ்மா.
26 மிஸ்மாவின் குமாரரில் ஒருவன் அம்முவேல்; இவன் குமாரன் சக்கூர்; இவன் குமாரன் சீமேயி.
27 சீமேயிக்குப் பதினாறு குமாரரும் ஆறு குமாரத்திகளும் இருந்தார்கள்; அவன் சகோதரருக்கு அநேகம் பிள்ளைகள் இருந்ததில்லை; அவர்கள் வம்சமெல்லாம் யூதாவின் புத்திரைப்போலப் பெருகினதுமில்லை.
28 அவர்கள் பெயெர்செபாவிலும், மொலாதாவிலும், ஆத்சார்குவாவிலும்,
29 பில்லாவிலும், ஏத்சாமிலும், தோலாதிலும்,
30 பெத்தூவேலிலும், ஓர்மாவிலும், சிக்லாகிலும்,
31 பெத்மார்காபோத்திலும், ஆத்சார்சூசிமிலும், பெத்பிரியிலும், சாராயிமிலும் குடியிருந்தார்கள்; தாவீது ராஜாவாகுமட்டும் இவைகள் அவர்கள் பட்டணங்களாயிருந்தது.
32 அவர்களுடைய பேட்டைகள், ஏத்தாம், ஆயின், ரிம்மோன், தோகேன், ஆசான் என்னும் ஐந்து பட்டணங்கள்.
33 அந்த பட்டணங்களைச் சுற்றிலும், பாகால்மட்டுமுள்ள அவர்களுடைய எல்லாப் பேட்டைகளும், அவர்கள் வாசஸ்தலங்களும், அவர்களுடைய வம்ச அட்டவணையும் இவைகளே.
34 மெசோபாபும், யம்லேகும், அமத்சியாவின் குமாரன் யோஷாவும்,
35 யோவேலும், ஆசியேலின் மகன் செராயாவுக்குப் பிறந்த யோசிபியாவின் குமாரன் ஏகூவும்,
36 எலியோனாயும், யாக்கோபாவும், யெசொகாயாவும், அசாயாவும், ஆதியேலும், யெசிமியேலும் பெனாயாவும்,
37 செமாயா பெற்ற சிம்ரியின் மகன் யெதாயாவுக்குப் பிறந்த அல்லோனின் புத்திரனாகிய சீப்பியின் குமாரன் சீசாவும் என்று,
38 பேர்பேராய் எழுதியிருக்கிற இவர்கள் தங்கள் வம்சங்களில் பிரபுக்களாயிருந்தார்கள், இவர்கள் பிதாக்களின் வீட்டார் ஏராளமாய்ப் பரம்பினார்கள்.
39 தங்கள் ஆடுகளுக்கு மேய்ச்சலைத் தேடும்படிக்கு தேதோரின் எல்லையாகிய பள்ளத்தாக்கின் கீழ்ப்புறமட்டும் போய்,
40 நல்ல செழிப்பான மேய்ச்சலையும், அமரிக்கையும், சுகமுமுள்ள விஸ்தாரமான தேசத்தையும் கண்டுபிடித்தார்கள்; பூர்வத்திலே காமின் சந்ததியார் அங்கே குடியிருந்தார்கள்.
41 பேர்பேராய் எழுதியிருக்கிற இவர்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களிலே அங்கே போய், அங்கே, கண்டுபிடித்தவர்களின் கூடாரங்களையும், தாபரங்களையும் அழித்து, இந்நாளிலே இருக்கிறதுபோல, அவர்களைச் சங்காரம்பண்ணி, அங்கே தங்கள் ஆடுகளுக்குமேய்ச்சல் இருந்தபடியினால், அவர்கள் அந்த ஸ்தலத்திலே குடியேறினார்கள்.
42 சிமியோனின் புத்திரராகிய இவர்களில் ஐந்நூறு மனுஷரும், அவர்கள் தலைமைக்காரராகிய இஷியின் குமாரரான பெலத்தியாவும், நெகரியாவும், ரெப்பாயாவும், ஊசியேலும், சேயீர் மலைத்தேசத்திற்குப் போய்,
43 அமலேக்கியரில் தப்பி மீதியாயிருந்தவர்களை மடங்கடித்து, இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி அங்கே குடியேறினார்கள்.


1 The sons of Judah: Perez, Hezron, Carmi, Hur, and Shobal.
2 Re-ai'ah the son of Shobal was the father of Jahath, and Jahath was the father of Ahu'mai and Lahad. These were the families of the Zo'rathites.
3 These were the sons of Etam: Jezreel, Ishma, and Idbash; and the name of their sister was Hazzelelpo'ni,
4 and Penu'el was the father of Gedor, and Ezer the father of Hushah. These were the sons of Hur, the first-born of Eph'rathah, the father of Bethlehem.
5 Ashhur, the father of Teko'a, had two wives, Helah and Na'arah;
6 Na'arah bore him Ahuz'zam, Hepher, Te'meni, and Ha-ahash'tari. These were the sons of Na'arah.
7 The sons of Helah: Zereth, Izhar, and Ethnan.
8 Koz was the father of Anub, Zobe'bah, and the families of Ahar'hel the son of Harum.
9 Jabez was more honorable than his brothers; and his mother called his name Jabez, saying, "Because I bore him in pain."
10 Jabez called on the God of Israel, saying, "Oh that thou wouldst bless me and enlarge my border, and that thy hand might be with me, and that thou wouldst keep me from harm so that it might not hurt me!" And God granted what he asked.
11 Chelub, the brother of Shuhah, was the father of Mehir, who was the father of Eshton.
12 Eshton was the father of Bethra'pha, Pase'ah, and Tehin'nah the father of Irna'hash. These are the men of Recah.
13 The sons of Kenaz: Oth'ni-el and Serai'ah; and the sons of Oth'ni-el: Hathath and Meo'nothai.
14 Meo'nothai was the father of Ophrah; and Serai'ah was the father of Jo'ab the father of Ge-har'ashim, so-called because they were craftsmen.
15 The sons of Caleb the son of Jephun'neh: Iru, Elah, and Na'am; and the sons of Elah: Kenaz.
16 The sons of Jehal'lelel: Ziph, Ziphah, Tir'i-a, and As'arel.
17 The sons of Ezrah: Jether, Mered, Epher, and Jalon. These are the sons of Bith'i-ah, the daughter of Pharaoh, whom Mered married; and she conceived and bore Miriam, Sham'mai, and Ishbah, the father of Eshtemo'a.
18 And his Jewish wife bore Jered the father of Gedor, Heber the father of Soco, and Jeku'thiel the father of Zano'ah.
19 The sons of the wife of Hodi'ah, the sister of Naham, were the fathers of Kei'lah the Garmite and Eshtemo'a the Ma-ac'athite.
20 The sons of Shimon: Amnon, Rinnah, Ben-ha'nan, and Tilon. The sons of Ishi: Zoheth and Ben-zo'heth.
21 The sons of Shelah the son of Judah: Er the father of Lecah, La'adah the father of Mare'shah, and the families of the house of linen workers at Beth-ashbe'a;
22 and Jokim, and the men of Coze'ba, and Jo'ash, and Saraph, who ruled in Moab and returned to Lehem (now the records are ancient).
23 These were the potters and inhabitants of Neta'im and Gede'rah; they dwelt there with the king for his work.
24 The sons of Simeon: Nem'uel, Jamin, Jarib, Zerah, Sha'ul;
25 Shallum was his son, Mibsam his son, Mishma his son.
26 The sons of Mishma: Ham'mu-el his son, Zac'cur his son, Shim'e-i his son.
27 Shim'e-i had sixteen sons and six daughters; but his brothers had not many children, nor did all their family multiply like the men of Judah.
28 They dwelt in Beer-sheba, Mola'dah, Ha'zar-shu'al,
29 Bilhah, Ezem, Tolad,
30 Bethu'el, Hormah, Ziklag,
31 Beth-mar'caboth, Ha'zar-su'sim, Beth-biri, and Sha-ara'im. These were their cities until David reigned.
32 And their villages were Etam, A'in, Rimmon, Tochen, and Ashan, five cities,
33 along with all their villages which were round about these cities as far as Ba'al. These were their settlements, and they kept a genealogical record.
34 Mesho'bab, Jamlech, Joshah the son of Amazi'ah,
35 Jo'el, Jehu the son of Joshibi'ah, son of Serai'ah, son of As'i-el,
36 Eli-o-e'nai, Ja-ako'bah, Jeshohai'ah, Asai'ah, Ad'i-el, Jesim'iel, Benai'ah,
37 Ziza the son of Shiphi, son of Allon, son of Jedai'ah, son of Shimri, son of Shemai'ah --
38 these mentioned by name were princes in their families, and their fathers' houses increased greatly.
39 They journeyed to the entrance of Gedor, to the east side of the valley, to seek pasture for their flocks,
40 where they found rich, good pasture, and the land was very broad, quiet, and peaceful; for the former inhabitants there belonged to Ham.
41 These, registered by name, came in the days of Hezeki'ah, king of Judah, and destroyed their tents and the Me-u'nim who were found there, and exterminated them to this day, and settled in their place, because there was pasture there for their flocks.
42 And some of them, five hundred men of the Simeonites, went to Mount Se'ir, having as their leaders Pelati'ah, Ne-ari'ah, Rephai'ah, and Uz'ziel, the sons of Ishi;
43 and they destroyed the remnant of the Amal'ekites that had escaped, and they have dwelt there to this day.

1 ரூபன் இஸ்ரவேலுக்கு முதற்பிறந்த சேஷ்டபுத்திரன்; ஆனாலும் அவன் தன் தகப்பனுடைய மஞ்சத்தைத் தீட்டுப்படுத்தினபடியினால், கோத்திரத்து அட்டவணையிலே அவன் முதற் பிறந்தவனாக எண்ணப்படாமல், அவனுடைய சேஷ்டபுத்திர சுதந்தரம் இஸ்ரவேலின் குமாரனாகிய யோசேப்பின் குமாரருக்குக் கொடுக்கப்பட்டது.
2 யூதா தன் சகோதரரிலே பலத்ததினால் ராஜாதிபத்தியம் அவன் சந்ததியிலுண்டானது; ஆகிலும் சேஷ்டபுத்திர சுதந்தரம் யோசேப்புடையதாயிற்று.
3 இஸ்ரவேலின் முதற்பேறான ரூபனின் குமாரன் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ என்பவர்கள்.
4 யோவேலின் குமாரரில் ஒருவன் செமாயா; இவன் குமாரன் கோக்; இவன் குமாரன் சிமேய்.
5 இவன் குமாரன் மீகா; இவன் குமாரன் ராயா; இவன் குமாரன் பாகால்.
6 இவன் குமாரன் பேரா; ரூபனியரின் பிரபுவான இவனை அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசர் சிறைபிடித்துப்போனான்.
7 தங்கள் சந்ததிகளின்படியே தங்கள் வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட அவன் சகோதரரில் தலைவர் ஏயேலும், சகரியாவும்,
8 யோவேலின் மகனாகிய சேமாவுக்குப் பிறந்த ஆசாசின் குமாரன் பேலாவும்; இவன் சந்ததியார் ஆரோவேரிலும்; நேபோமட்டும், பாகால்மயோன்மட்டும் வாசம்பண்ணினார்கள்.
9 கிழக்கே ஐபிராத்து நதிதொடங்கி வனாந்தரத்தின் எல்லைமட்டும் அவர்கள் வாசம்பண்ணினார்கள்; அவர்கள் ஆடுமாடுகள் கீலேயாத்தேசத்தில் மிகுதியாயிற்று.
10 சவுலின் நாட்களில் ஆகாரியரோடு அவர்கள் யுத்தம்பண்ணி, தங்கள் கையால் அவர்கள் விழுந்தபின், அவர்கள் கூடாரங்களிலே கீலேயாத்தின் கீழ்ப்புறமெல்லாம் குடியேறினார்கள்.
11 காத்தின் புத்திரர் அவர்களுக்கு எதிரே பாசான்தேசத்திலே சல்காமட்டும் வாசம்பண்ணினார்கள்.
12 அவர்களில் யோவேல் தலைவனும், சாப்பானும் அவனுக்கு இரண்டாவதுமாயிருந்தான்; யானாயும் சாப்பாத்தும் பாசானில் இருந்தார்கள்.
13 அவர்கள் பிதாக்களின் வீட்டாராகிய அவர்கள் சகோதரர், மிகாவேல், மெசுல்லாம், சேபா, யோராயி, யாக்கான், சீகா, ஏபேர் என்னும் ஏழுபேர்.
14 இவர்கள் ஊரிக்குப் பிறந்த அபியேலின் குமாரர்; ஊரி என்பவன் யெரொவாவுக்கும், யெரொவா கீலேயாத்துக்கும், கீலேயாத் மிகாவேலுக்கும், மிகாவேல் எசிசாயிக்கும், எசிசாயி யாதோவுக்கும், யாதோ பூசுக்கும் குமாரராயிருந்தவர்கள்.
15 கூனியின் குமாரனாகிய அப்தியேலின் மகன் அகி, அவர்கள் பிதாக்களின் வீட்டுத் தலைவனாயிருந்தான்.
16 அவர்கள் கீலேயாத்திலிருக்கிற பாசானிலும் அதின் வெளிநிலங்களிலும், சாரோனின் எல்லாப் பேட்டைகளிலும் அவைகளின் கடையாந்தரங்கள்மட்டும் வாசம்பண்ணினார்கள்.
17 இவர்களெல்லாரும் யூதாவின் ராஜாவாகிய யோதாமின் நாட்களிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் நாட்களிலும் தங்கள் வம்சத்து அட்டவணைப்படி தொகை, ஏற்றப்பட்டார்கள்.
18 ரூபன் புத்திரரிலும், காத்தியரிலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரிலும் கேடகமும் பட்டயமும் எடுத்து, வில்லெய்து, யுத்தத்திற்குப் பழகி, படைக்குப் போகத்தக்க, சேவகர் நாற்பத்து நாலாயிரத்து எழுநூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.
19 அவர்கள் ஆகாரியரோடும், யெத்தூர் நாப்பீஸ் நோதாப் என்பவர்களோடும் யுத்தம்பண்ணுகிறபோது,
20 அவர்களோடே எதிர்க்கத் துணைபெற்றபடியினால், ஆகாரியரும் இவர்களோடிருக்கிற யாவரும் அவர்கள் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டார்கள்; அவர்கள் யுத்தத்திலே தேவனை நோக்கிக் கூப்பிட்டு, அவர்மேல் நம்பிக்கை வைத்தபடியினால் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்.
21 அவர்கள் இவர்களுக்கு இருந்த மிருகஜீவன்களாகிய ஐம்பதினாயிரம் ஒட்டகங்களையும், இரண்டுலட்சத்து ஐம்பதினாயிரம் ஆடுகளையும், இரண்டாயிரம் கழுதைகளையும், மனுஷரில் லட்சம்பேர்களையும் பிடித்தார்கள்.
22 யுத்தம் தேவனால் நடந்தபடியினால் அநேகர் வெட்டுண்டு விழுந்தார்கள்; தாங்கள் சிறைப்பட்டுப்போகுமட்டும் இவர்களுடைய ஸ்தலத்திலே குடியிருந்தார்கள்.
23 மனாசேயின் பாதிக்கோத்திரத்துப் புத்திரரும் அந்த தேசத்தில் குடியிருந்து, பாசான்தொடங்கிப் பாகால் எர்மோன்மட்டும், செனீர்மட்டும், எர்மோன் பர்வதமட்டும் பெருகியிருந்தார்கள்.
24 அவர்கள் தங்கள் பிதாக்களின் வீட்டுத் தலைவராகிய ஏப்பேர், இஷி, ஏலியேல், அஸரியேல், எரேமியா, ஒதாவியா, யாதியேல் என்பவர்கள் பராக்கிரம வீரரான மனுஷரும் பேர்பெற்ற தலைவருமாயிருந்தார்கள்.
25 அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனுக்குத் துரோகம்பண்ணி, தேவன் அவர்களுக்கு முன்பாக அழித்திருந்த தேச ஜனங்களின் தேவர்களைப் பின்பற்றிச் சோரம்போனார்கள்.
26 ஆகையால் இஸ்ரவேலின் தேவன் அசீரியா ராஜாவாகிய பூலின் ஆவியையும், அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசரின் ஆவியையும் எழுப்பினதினாலே, அவன் ரூபனியரும், காத்தியரும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தாருமாகிய அவர்களைச் சிறைபிடித்து இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, ஆலாவுக்கும் ஆபோருக்கும் ஆராவுக்கும் கோசான் ஆற்றங்கரைக்கும் கொண்டுபோனான்.


1 The sons of Reuben the first-born of Israel (for he was the first-born; but because he polluted his father's couch, his birthright was given to the sons of Joseph the son of Israel, so that he is not enrolled in the genealogy according to the birthright;
2 though Judah became strong among his brothers and a prince was from him, yet the birthright belonged to Joseph),
3 the sons of Reuben, the first-born of Israel: Hanoch, Pallu, Hezron, and Carmi.
4 The sons of Jo'el: Shemai'ah his son, Gog his son, Shim'e-i his son,
5 Micah his son, Re-ai'ah his son, Ba'al his son,
6 Be-er'ah his son, whom Til'gath-pilne'ser king of Assyria carried away into exile; he was a chieftain of the Reubenites.
7 And his kinsmen by their families, when the genealogy of their generations was reckoned: the chief, Je-i'el, and Zechari'ah,
8 and Bela the son of Azaz, son of Shema, son of Jo'el, who dwelt in Aro'er, as far as Nebo and Ba'al-me'on.
9 He also dwelt to the east as far as the entrance of the desert this side of the Euphra'tes, because their cattle had multiplied in the land of Gilead.
10 And in the days of Saul they made war on the Hagrites, who fell by their hand; and they dwelt in their tents throughout all the region east of Gilead.
11 The sons of Gad dwelt over against them in the land of Bashan as far as Sal'ecah:
12 Jo'el the chief, Shapham the second, Ja'nai, and Shaphat in Bashan.
13 And their kinsmen according to their fathers' houses: Michael, Meshul'lam, Sheba, Jo'rai, Jacan, Zi'a, and Eber, seven.
14 These were the sons of Ab'ihail the son of Huri, son of Jaro'ah, son of Gilead, son of Michael, son of Jeshish'ai, son of Jahdo, son of Buz;
15 Ahi the son of Ab'di-el, son of Guni, was chief in their fathers' houses;
16 and they dwelt in Gilead, in Bashan and in its towns, and in all the pasture lands of Sharon to their limits.
17 All of these were enrolled by genealogies in the days of Jotham king of Judah, and in the days of Jerobo'am king of Israel.
18 The Reubenites, the Gadites, and the half-tribe of Manas'seh had valiant men, who carried shield and sword, and drew the bow, expert in war, forty-four thousand seven hundred and sixty, ready for service.
19 They made war upon the Hagrites, Jetur, Naphish, and Nodab;
20 and when they received help against them, the Hagrites and all who were with them were given into their hands, for they cried to God in the battle, and he granted their entreaty because they trusted in him.
21 They carried off their livestock: fifty thousand of their camels, two hundred and fifty thousand sheep, two thousand asses, and a hundred thousand men alive.
22 For many fell slain, because the war was of God. And they dwelt in their place until the exile.
23 The members of the half-tribe of Manas'seh dwelt in the land; they were very numerous from Bashan to Ba'al-her'mon, Senir, and Mount Hermon.
24 These were the heads of their fathers' houses: Epher, Ishi, Eli'el, Az'ri-el, Jeremiah, Hodavi'ah, and Jah'di-el, mighty warriors, famous men, heads of their fathers' houses.
25 But they transgressed against the God of their fathers, and played the harlot after the gods of the peoples of the land, whom God had destroyed before them.
26 So the God of Israel stirred up the spirit of Pul king of Assyria, the spirit of Til'gath-pilne'ser king of Assyria, and he carried them away, namely, the Reubenites, the Gadites, and the half-tribe of Manas'seh, and brought them to Halah, Habor, Hara, and the river Gozan, to this day.

1 லேவியின் குமாரர், கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
2 கோகாத்தின் குமாரர், அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.
3 அம்ராமின் பிள்ளைகள், ஆரோன், மோசே, மிரியாம் என்பவர்கள்; ஆரோனின் குமாரர், நாதாப், அபியூ, எலெயாசர், இத்தாமார் என்பவர்கள்.
4 எலெயாசார் பினெகாசைப் பெற்றான்; பினெகாஸ் அபிசுவாவைப் பெற்றான்.
5 அபிசுவா புக்கியைப் பெற்றான், புக்கி ஊசியைப் பெற்றான்.
6 ஊசி செராகியாவைப் பெற்றான்; செராகியா மெராயோதைப் பெற்றான்.
7 மெராயோத் அமரியாவைப் பெற்றான்; அமரியா அகிதூபைப் பெற்றான்.
8 அகிதூப் சாதோக்கைப் பெற்றான்; சாதோக் அகிமாசைப் பெற்றான்.
9 அகிமாஸ் அசரியாவைப் பெற்றான்; அசரியா யோகனானைப் பெற்றான்.
10 . யோகனான் அசரியாவைப் பெற்றான்; சாலொமோன் எருசலேமில் கட்டின ஆலயத்திலே ஆசாரிய பணிவிடையைச் செய்தவன் இவன்தான்.
11 . அசரியா அமரியாவைப் பெற்றான்; அமரியா அகிதூபைப் பெற்றான்.
12 . அகிதூப் சாதோக்கைப் பெற்றான்; சாதோக் சல்லூமைப் பெற்றான்.
13 . சல்லூம் இல்க்கியாவைப் பெற்றான்; இல்க்கியா அசரியாவைப் பெற்றான்.
14 . அசரியா செராயாவைப் பெற்றான்; செராயா யோசதாக்கைப் பெற்றான்.
15 . கர்த்தர் நேபுகாத்நேச்சாரைக்கொண்டு யூதா ஜனங்களையும் எருசலேமியரையும் சிறைபிடித்துக்கொண்டுபோகச் செய்தபோது யோசதாக்கும் சிறைப்பட்டுப்போனான்.
16 . லேவியின் குமாரர், கெர்சோம், கோகாத், மெராரி என்பவர்களே.
17 . கெர்சோமுடைய குமாரரின் நாமங்கள், லிப்னி, சிமேயி என்பவைகள்.
18 . கோகாத்தின் குமாரர், அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.
19 . மெராரியின் குமாரர், மகேலி, மூசி என்பவர்கள். லேவியருக்கு அவர்கள் பிதாக்கள் வழியாய் உண்டான வம்சங்கள்:
20 . கெர்சோமின் குமாரன் லிப்னி; இவன் குமாரன் யாகாத்; இவன் குமாரன் சிம்மா.
21 . இவன் குமாரன் யோவா; இவன் குமாரன் இத்தோ; இவன் குமாரன் சேரா; இவன் குமாரன் யாத்திராயி.
22 . கோகாத்தின் குமாரரில் ஒருவன் அம்மினதாப், இவன் குமாரன் கோராகு, இவன் குமாரன் ஆசீர்.
23 . இவன் குமாரன் இல்க்கானா; இவன் குமாரன் அபியாசாப்; இவன் குமாரன் ஆசீர்.
24 . இவன் குமாரன் எல்க்கானா; இவன் குமாரன் ஊரியேல்; இவன் குமாரன் ஊசியா; இவன் குமாரன் சவுல்.
25 . எல்க்கானாவின் குமாரர், அமாசாயி, ஆகிமோத் என்பவர்கள்.
26 . எல்க்கானாவின் குமாரரில் ஒருவன் சோபாய், இவன் குமாரன் நாகாத்.
27 . இவன் குமாரன் எலியாப்; இவன் குமாரன் எரோகாம்; இவன் குமாரன் எல்க்கானா.
28 . சாமுவேலின் குமாரர், அவனுடைய முதற்பேறான வஷ்னீ அபியா என்பவர்கள்.
29 . மெராரியின் குமாரரில் ஒருவன் மகேலி; இவன் குமாரன் லிப்னி; இவன் குமாரன் சிமேயி; இவன் குமாரன் ஊசா.
30 . இவன் குமாரன் சிமெயா; இவன் குமாரன் அகியா; இவன் குமாரன் அசாயா.
31 . கர்த்தருடைய பெட்டி நிலைபெற்றபோது, தாவீது கர்த்தருடைய ஆலயத்தில் சங்கீத சேவையை நடத்துகிறதற்கு ஸ்தாபித்தவர்களும்,
32 . சாலொமோன் எருசலேமிலே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டித் தீருமட்டும் ஆசரிப்புக் கூடார வாசஸ்தலத்திற்கு முன்பாக சங்கீத சேவையுடன் தங்கள் முறைமையின்படியே பணிவிடை செய்துவந்தவர்களுமாகிய மனுஷரும் அவர்கள் குமாரருமானவர்கள்.
33 . கோகாத்தியரின் குமாரரில் ஏமான் என்னும் பாடகன்; இவன் யோவேலின் குமாரன்; இவன் சாமுவேலின் குமாரன்.
34 . இவன் எல்க்கானாவின் குமாரன்; இவன் யெரொகாமின் குமாரன்; இவன் எலியேலின் குமாரன்; இவன் தோவாகின் குமாரன்.
35 . இவன் சூப்பின் குமாரன்; இவன் இல்க்கானாவின் குமாரன்; இவன் மாகாத்தின் குமாரன்; இவன் அமாசாயின் குமாரன்.
36 . இவன் எல்க்கானாவின் குமாரன்; இவன் யோவேலின் குமாரன்; இவன் அசரியாவின் குமாரன்; இவன் செப்பனியாவின் குமாரன்.
37 . இவன் தாகாதின் குமாரன்; இவன் ஆசீரின் குமாரன்; இவன் எபியாசாப்பின் குமாரன், இவன் கோராகின் குமாரன்.
38 . இவன் இத்சாரின் குமாரன்; இவன் கோகாத்தின் குமாரன்; இவன் இஸ்ரவேலின் குமாரனாகிய லேவியின் குமாரன்.
39 . இவன் சகோதரனாகிய ஆசாப் இவன் வலதுபக்கத்திலே நிற்பான், ஆசாப் பெரகியாவின் குமாரன்; இவன் சிமேயாவின் குமாரன்.
40 . இவன் மிகாவேலின் குமாரன்; இவன் பாசெயாவின் குமாரன்; இவன் மல்கியாவின் குமாரன்.
41 . இவன் எத்னியின் குமாரன்; இவன் சேராவின் குமாரன்; இவன் அதாயாவின் குமாரன்.
42 . இவன் ஏத்தானின் குமாரன்; இவன் சிம்மாவின் குமாரன்; இவன் சீமேயின் குமாரன்.
43 . இவன் யாகாதின் குமாரன்; இவன் கெர்சோமின் குமாரன்; இவன் லேவியின் குமாரன்.
44 . மெராரியின் புத்திரராகிய இவர்களுடைய சகோதரர் இடதுபக்கத்திலே நிற்பார்கள்; அவர்களில் ஏதான் என்பவன் கிஷியின் குமாரன், இவன் அப்தியின் குமாரன்; இவன் மல்லூகின் குமாரன்.
45 . இவன் அஸபியாவின் குமாரன்; இவன் அமத்சியாவின் குமாரன்; இவன் இல்க்கியாவின் குமாரன்.
46 . இவன் அம்சியின் குமாரன்; இவன் பானியின் குமாரன்; இவன் சாமேரின் குமாரன்.
47 . இவன் மகேலியின் குமாரன்; இவன் மூசியின் குமாரன்; இவன் மெராரியின் குமாரன்; இவன் லேவியின் குமாரன்.
48 . அவர்கள் சகோதரராகிய மற்ற லேவியர் தேவனுடைய ஆலயமாகிய வாசஸ்தலத்தின் பணிவிடைக்கெல்லாம் வைக்கப்பட்டிருந்தார்கள்.
49 . ஆரோனும் அவன் குமாரரும் சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டும் பீடத்தின்மேல் தூபங்காட்டி, மகா பரிசுத்த ஸ்தலத்தின் எல்லாவேலைக்கும், தேவனுடைய தாசனாகிய மோசே கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேலுக்காகப் பாவநிவிர்த்தியுண்டாக்குகிறதற்கும் வைக்கப்பட்டிருந்தார்கள்.
50 . ஆரோனின் குமாரரில் எலெயாசர் என்பவனுடைய குமாரன் பினேகாஸ்; இவன் குமாரன் அபிசுவா.
51 . இவன் குமாரன் புக்கி; இவன் குமாரன் ஊசி, இவன் குமாரன் செராகியா.
52 . இவன் குமாரன் மெராயோத்; இவன் குமாரன் அமரியா; இவன் குமாரன் அகித்தூப்.
53 . இவன் குமாரன் சாதோக்; இவன் குமாரன் அகிமாஸ்.
54 . அவர்கள் பேட்டைகளின்படியே அவர்கள் எல்லைக்குள்ளான அவர்கள் வாசஸ்தலங்களாவன: கோகாத்தியரின் வம்சமான ஆரோனின் புத்திரருக்கு விழுந்த சீட்டின்படியே,
55 . யூதாதேசத்திலிருக்கிற எப்ரோனையும் அதைச் சுற்றியிருக்கிற வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்.
56 . அந்தப் பட்டணத்தின் வயல்களையும் அதின் பட்டிகளையும் எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்குக் கொடுத்தார்கள்.
57 . இப்படியே ஆரோனின் புத்திரருக்கு எப்ரோன் என்னும் அடைக்கலப்பட்டணங்களில் ஒன்றையும், லிப்னாவையும் அதின் வெளிநிலங்களையும், யாத்தீரையும் எஸ்தமோவாவையும் அவற்றின் வெளிநிலங்களையும்,
58 . ஈலேனையும் அதின் வெளிநிலங்களையும், தெபீரையும் அதின் வெளிநிலங்களையும்,
59 . ஆசானையும் அதின் வெளிநிலங்களையும், பெத்சேமேசையும் அதின் வெளிநிலங்களையும்,
60 . பென்யமீன் கோத்திரத்திலே கேபாவையும் அதின் வெளிநிலங்களையும், அலெமேத்தையும் அதின் வெளிநிலங்களையும், ஆனதோத்தையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவர்கள் வம்சங்களுக்குக் கொடுத்த இவர்கள் பட்டணங்களெல்லாம் பதின்மூன்று.
61 . கோகாத்தின் மற்றப் புத்திரருக்கு வேறொரு கோத்திர வம்சத்திலும், பாதிக்கோத்திரமாகிய மனாசேயின் பாதியிலும் விழுந்த சீட்டின்படியே பத்துப் பட்டணங்கள் இருந்தது.
62 . கெர்சோமின் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படியே, இசக்கார் கோத்திரத்திலும், ஆசேர் கோத்திரத்திலும், நப்தலி கோத்திரத்திலும், பாசானிலிருக்கிற மனாசே கோத்திரத்திலும் பதின்மூன்று பட்டணங்கள் இருந்தது.
63 . மெராரியின் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படியே ரூபன் கோத்திரத்திலும், காத் கோத்திரத்திலும், செபுலோன் கோத்திரத்திலும் விழுந்த சீட்டின்படி பன்னிரண்டு பட்டணங்கள் இருந்தது.
64 . அப்படியே இஸ்ரவேல் புத்திரர் லேவியருக்குக் கொடுத்த பட்டணங்களும் அவைகளின் வெளிநிலங்களும் என்னவென்றால்,
65 . சீட்டுப்போட்டு, சிலருக்கு யூதா புத்திரரின் கோத்திரத்திலும், சிமியோன் புத்திரரின் கோத்திரத்திலும், பென்யமீன் புத்திரரின் கோத்திரத்திலும், பேர்பேராகச் சொல்லப்பட்ட அந்தப் பட்டணங்களைக் கொடுத்தார்கள்.
66 . கோகாத் புத்திரரில் மற்ற வம்சங்களுக்கு அவர்கள் எல்லையான பட்டணங்கள் அவர்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்திலே இருந்தது.
67 . எவையெனில், அடைக்கலப்பட்டணங்களில் அவர்களுக்கு எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சீகேமையும் அதின் வெளிநிலங்களையும், கேசேரையும் அதின் வெளிநிலங்களையும்,
68 . யோக்மேயாமையும் அதின் வெளிநிலங்களையும், பேத்ஓரோனையும் அதின் வெளிநிலங்களையும்,
69 . ஆயலோனையும் அதின் வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும்,
70 . மனாசேயின் பாதிக்கோத்திரத்திலே ஆனேரையும் அதின் வெளிநிலங்களையும், பீலியாமையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவைகள் காகாத் புத்திரரிலுள்ள மற்ற வம்சங்களுக்கு இருந்தது.
71 . கெர்சோம் புத்திரருக்கு மனாசேயின் பாதிக்கோத்திர வம்சத்திலே பாசானிலிருக்கிற கோலானும் அதின் வெளிநிலங்களும், அஸ்தரோத்தும் அதின் வெளிநிலங்களும்,
72 . இசக்கார் கோத்திரத்திலே கேதேசும் அதின் வெளிநிலங்களும், தாபிராத்தும் அதின் வெளிநிலங்களும்,
73 . ராமோத்தும் அதின் வெளிநிலங்களும், ஆனேமும் அதின் வெளிநிலங்களும்,
74 . ஆசேர் கோத்திரத்திலே மாஷாலும் அதின் வெளிநிலங்களும், அப்தோனும் அதின் வெளிநிலங்களும்,
75 . உக்கோக்கும் அதின் வெளிநிலங்களும், ரேகோபும் அதின் வெளிநிலங்களும்.
76 . நப்தலி கோத்திரத்திலே கலிலேயாவிலிருக்கிற கேதேசும் அதின் வெளிநிலங்களும், அம்மோனும் அதின் வெளிநிலங்களும், கீரியாத்தாயிமும் அதின் வெளிநிலங்களும் இருந்தது.
77 . மெராரியின் மற்றப் புத்திரருக்கு செபுலோன் கோத்திரத்திலே ரிம்மோனும் அதின் வெளிநிலங்களும், தாபோரும் அதின் வெளிநிலங்களும்,
78 . எரிகோவுக்கு அப்புறமாயிருக்கிற யோர்தானுக்கு அப்பாலே யோர்தானுக்குக் கிழக்கே இருக்கிற ரூபன் கோத்திரத்திலே வனாந்தரத்திலுள்ள பேசேரும் அதின் வெளிநிலங்களும், யாத்சாவும் அதின் வெளிநிலங்களும்,
79 . கேதேமோத்தும் அதின் வெளிநிலங்களும், மேப்பாத்தும் அதின் வெளிநிலங்களும்,
80 . காத் கோத்திரத்திலே கீலேயாத்திலுள்ள ராமோத்தும் அதின் வெளிநிலங்களும், மக்னாயீமும் அதின் வெளிநிலங்களும்,
81 . எஸ்போனும் அதின் வெளிநிலங்களும், யாசேரும் அதின் வெளிநிலங்களும் இருந்தது.


1 The sons of Levi: Gershom, Kohath, and Merar'i.
2 The sons of Kohath: Amram, Izhar, Hebron, and Uz'ziel.
3 The children of Amram: Aaron, Moses, and Miriam. The sons of Aaron: Nadab, Abi'hu, Elea'zar, and Ith'amar.
4 Elea'zar was the father of Phin'ehas, Phin'ehas of Abishu'a,
5 Abishu'a of Bukki, Bukki of Uzzi,
6 Uzzi of Zerahi'ah, Zerahi'ah of Merai'oth,
7 Merai'oth of Amari'ah, Amari'ah of Ahi'tub,
8 Ahi'tub of Zadok, Zadok of Ahim'a-az,
9 Ahim'a-az of Azari'ah, Azari'ah of Joha'nan,
10 and Joha'nan of Azari'ah (it was he who served as priest in the house that Solomon built in Jerusalem).
11 Azari'ah was the father of Amari'ah, Amari'ah of Ahi'tub,
12 Ahi'tub of Zadok, Zadok of Shallum,
13 Shallum of Hilki'ah, Hilki'ah of Azari'ah,
14 Azari'ah of Serai'ah, Serai'ah of Jehoz'adak;
15 and Jehoz'adak went into exile when the LORD sent Judah and Jerusalem into exile by the hand of Nebuchadnez'zar.
16 The sons of Levi: Gershom, Kohath, and Merar'i.
17 And these are the names of the sons of Gershom: Libni and Shim'e-i.
18 The sons of Kohath: Amram, Izhar, Hebron, and Uz'ziel.
19 The sons of Merar'i: Mahli and Mushi. These are the families of the Levites according to their fathers.
20 Of Gershom: Libni his son, Jahath his son, Zimmah his son,
21 Jo'ah his son, Iddo his son, Zerah his son, Je-ath'erai his son.
22 The sons of Kohath: Ammin'adab his son, Korah his son, Assir his son,
23 Elka'nah his son, Ebi'asaph his son, Assir his son,
24 Tahath his son, Uri'el his son, Uzzi'ah his son, and Sha'ul his son.
25 The sons of Elka'nah: Ama'sai and Ahi'moth,
26 Elka'nah his son, Zophai his son, Nahath his son,
27 Eli'ab his son, Jero'ham his son, Elka'nah his son.
28 The sons of Samuel: Jo'el his first-born, the second Abi'jah.
29 The sons of Merar'i: Mahli, Libni his son, Shim'e-i his son, Uzzah his son,
30 Shim'e-a his son, Haggi'ah his son, and Asai'ah his son.
31 These are the men whom David put in charge of the service of song in the house of the LORD, after the ark rested there.
32 They ministered with song before the tabernacle of the tent of meeting, until Solomon had built the house of the LORD in Jerusalem; and they performed their service in due order.
33 These are the men who served and their sons. Of the sons of the Ko'hathites: Heman the singer the son of Jo'el, son of Samuel,
34 son of Elka'nah, son of Jero'ham, son of Eli'el, son of To'ah,
35 son of Zuph, son of Elka'nah, son of Mahath, son of Ama'sai,
36 son of Elka'nah, son of Jo'el, son of Azari'ah, son of Zephani'ah,
37 son of Tahath, son of Assir, son of Ebi'asaph, son of Korah,
38 son of Izhar, son of Kohath, son of Levi, son of Israel;
39 and his brother Asaph, who stood on his right hand, namely, Asaph the son of Berechi'ah, son of Shim'e-a,
40 son of Michael, son of Ba-ase'iah, son of Malchi'jah,
41 son of Ethni, son of Zerah, son of Adai'ah,
42 son of Ethan, son of Zimmah, son of Shim'e-i,
43 son of Jahath, son of Gershom, son of Levi.
44 On the left hand were their brethren the sons of Merar'i: Ethan the son of Kishi, son of Abdi, son of Malluch,
45 son of Hashabi'ah, son of Amazi'ah, son of Hilki'ah,
46 son of Amzi, son of Bani, son of Shemer,
47 son of Mahli, son of Mushi, son of Merar'i, son of Levi;
48 and their brethren the Levites were appointed for all the service of the tabernacle of the house of God.
49 But Aaron and his sons made offerings upon the altar of burnt offering and upon the altar of incense for all the work of the most holy place, and to make atonement for Israel, according to all that Moses the servant of God had commanded.
50 These are the sons of Aaron: Elea'zar his son, Phin'ehas his son, Abishu'a his son,
51 Bukki his son, Uzzi his son, Zerahi'ah his son,
52 Merai'oth his son, Amari'ah his son, Ahi'tub his son,
53 Zadok his son, Ahim'a-az his son.
54 These are their dwelling places according to their settlements within their borders: to the sons of Aaron of the families of Ko'hathites, for theirs was the lot,
55 to them they gave Hebron in the land of Judah and its surrounding pasture lands,
56 but the fields of the city and its villages they gave to Caleb the son of Jephun'neh.
57 To the sons of Aaron they gave the cities of refuge: Hebron, Libnah with its pasture lands, Jattir, Eshtemo'a with its pasture lands,
58 Hilen with its pasture lands, Debir with its pasture lands,
59 Ashan with its pasture lands, and Beth-she'mesh with its pasture lands;
60 and from the tribe of Benjamin, Geba with its pasture lands, Al'emeth with its pasture lands, and An'athoth with its pasture lands. All their cities throughout their families were thirteen.
61 To the rest of the Ko'hathites were given by lot out of the family of the tribe, out of the half-tribe, the half of Manas'seh, ten cities.
62 To the Gershomites according to their families were allotted thirteen cities out of the tribes of Is'sachar, Asher, Naph'tali, and Manas'seh in Bashan.
63 To the Merar'ites according to their families were allotted twelve cities out of the tribes of Reuben, Gad, and Zeb'ulun.
64 So the people of Israel gave the Levites the cities with their pasture lands.
65 They also gave them by lot out of the tribes of Judah, Simeon, and Benjamin these cities which are mentioned by name.
66 And some of the families of the sons of Kohath had cities of their territory out of the tribe of E'phraim.
67 They were given the cities of refuge: Shechem with its pasture lands in the hill country of E'phraim, Gezer with its pasture lands,
68 Jok'me-am with its pasture lands, Beth-hor'on with its pasture lands,
69 Ai'jalon with its pasture lands, Gath-rim'mon with its pasture lands,
70 and out of the half-tribe of Manas'seh, Aner with its pasture lands, and Bil'e-am with its pasture lands, for the rest of the families of the Ko'hathites.
71 To the Gershomites were given out of the half-tribe of Manas'seh: Golan in Bashan with its pasture lands and Ash'taroth with its pasture lands;
72 and out of the tribe of Is'sachar: Kedesh with its pasture lands, Dab'erath with its pasture lands,
73 Ramoth with its pasture lands, and Anem with its pasture lands;
74 out of the tribe of Asher: Mashal with its pasture lands, Abdon with its pasture lands,
75 Hukok with its pasture lands, and Rehob with its pasture lands;
76 and out of the tribe of Naph'tali: Kedesh in Galilee with its pasture lands, Ham'mon with its pasture lands, and Kiriatha'im with its pasture lands.
77 To the rest of the Merar'ites were allotted out of the tribe of Zeb'ulun: Rim'mono with its pasture lands, Tabor with its pasture lands,
78 and beyond the Jordan at Jericho, on the east side of the Jordan, out of the tribe of Reuben: Bezer in the steppe with its pasture lands, Jahzah with its pasture lands,
79 Ked'emoth with its pasture lands, and Meph'a-ath with its pasture lands;
80 and out of the tribe of Gad: Ramoth in Gilead with its pasture lands, Mahana'im with its pasture lands,
81 Heshbon with its pasture lands, and Jazer with its pasture lands.

1 இசக்காருடைய குமாரர், தோலா, பூவா, யசுப், சிம்ரோன் என்னும் நாலுபேர்.
2 தோலாவின் குமாரர், ஊசி, ரெப்பாயா, யெரியேல், யக்மாயி, இப்சாம், சாமுவேல் என்பவர்கள்; தோலாவுக்குப் பிறந்த இவர்கள் தங்கள் பிதாக்கள் வம்சத்தலைவரும் தங்கள் சந்ததிகளிலே பராக்கிரமசாலிகளுமாயிருந்தார்கள்; தாவீதின் நாட்களில் அவர்கள் தொகை இருபதினாயிரத்து அறுநூறுபேராயிருந்தது.
3 ஊசியின் குமாரரில் ஒருவன் இஸ்ரகியா; இஸ்ரகியாவின் குமாரர், மிகாயேல், ஒபதியா, யோவேல், இஷியா என்பவர்கள்; இவர்கள் ஐந்துபேரும் தலைவராயிருந்தார்கள்.
4 அவர்கள் பிதாக்கள் வம்சத்தாரானவர்கள் சந்ததிகளில் யுத்தமனுஷரான கூட்டங்கள் முப்பத்தாறாயிரம்பேர் அவர்களோடிருந்தார்கள்; அவர்களுக்கு அநேகம் பெண்ஜாதிகளும் பிள்ளைகளும் இருந்தார்கள்.
5 இசக்காருடைய மற்ற எல்லா வம்சங்களிலும் அவர்களுக்குச் சகோதரரான பராக்கிரமசாலிகள் தங்கள் வம்ச அட்டவணைகளின்படியெல்லாம் எண்பத்தேழாயிரம்பேராயிருந்தார்கள்.
6 பென்யமீன் குமாரர், பேலா, பெகேர், யெதியாயேல் என்னும் மூன்றுபேர்.
7 பேலாவின் குமாரர், எஸ்போன், ஊசி, ஊசியேல், யெரிமோத், இரி என்பவர்கள்; இவர்கள் தங்கள் பிதாக்களின் வம்சத்தில் பராக்கிரமசாலிகளான ஐந்து தலைவராயிருந்தார்கள்; இவர்கள் வம்ச அட்டவணைக்குள்ளானவர்கள் இருபத்தீராயிரத்து முப்பத்துநாலுபேர்.
8 பெகேரின் குமாரர், செமிரா, யோவாஸ், எலியேசர், எலியோனாய், உம்ரி, யெரிமோத், அபியா, ஆனதோத், அலமேத் என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் பெகேரின் குமாரர்.
9 தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவராகிய அவர்கள் சந்ததிகளின் அட்டவணைக்குள்ளான பராக்கிரமாலிகள் இருபதினாயிரத்து இருநூறுபேர்.
10 யெதியாயேலின் குமாரரில் ஒருவன் பில்கான்; பில்கானின் குமாரர், ஏயூஷ், பென்யமீன், ஏகூத், கெனானா, சேத்தான், தர்ஷீஸ், அகிஷாகார் என்பவர்கள்.
11 யெதியாயேலின் குமாரராகிய இவர்கள் எல்லாரும் தங்கள் பிதாக்கள் வம்சத்தாரில் தலைவராயிருந்தார்கள்; இவர்களில் யுத்தத்திற்குப் போகத்தக்க சேவகரான பராக்கிரமசாலிகள் பதினேழாயிரத்து இருநூறுபேர்.
12 சுப்பீமும், உப்பீமும் ஈரின் குமாரர், ஊசிம் ஆகேரின் குமாரரில் ஒருவன்.
13 நப்தலியின் குமாரரான பில்காளின் பேரன்மார், யாத்சியேல், கூனி, எத்சேர், சல்லூம் என்பவர்கள்.
14 மனாசேயின் புத்திரரில் ஒருவன் குலஸ்திரீயினிடத்தில் பிறந்த அஸ்ரியேல்; அவன் மறுமனையாட்டியாகிய அராமிய ஸ்திரீயினிடத்தில் கீலேயாத்தின் தகப்பனாகிய மாகீர் பிறந்தான்.
15 மாகீர் மாக்காள் என்னும் பேருள்ள உப்பீம் சுப்பீம் என்பவர்களின் சகோதரியை விவாகம்பண்ணினான்; மனாசேயின் இரண்டாம் குமாரன் செலோப்பியாத்; செலோப்பியாத்திற்குக் குமாரத்திகளிருந்தார்கள்.
16 மாகீரின் பெண்ஜாதியாகிய மாக்காள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குப் பேரேஸ் என்று பேரிட்டாள்; இவன் சகோதரன் பேர் சேரேஸ்; இவனுடைய குமாரர் ஊலாம், ரேகேம் என்பவர்கள்.
17 ஊலாமின் குமாரரில் ஒருவன் பேதான்; இவர்கள் மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குப் பிறந்த கீலேயாத் புத்திரர்.
18 இவன் சகோதரியாகிய அம்மொளெகேத் இஸ்கோதையும் அபியேசரையும் மாகலாவையும் பெற்றாள்.
19 செமிதாவின் குமாரர், அகியான், சேகேம், லிக்கே, அனியாம் என்பவர்கள்.
20 எப்பிராயீமின் குமாரரில் ஒருவன் சுத்தெலாக்; இவனுடைய குமாரன் பேரேத்; இவனுடைய குமாரன் தாகாத்; இவனுடைய குமாரன் எலாதா; இவனுடைய குமாரன் தாகாத்.
21 இவனுடைய குமாரன் சாபாத்; இவனுடைய குமாரர் கத்தெலாக், எத்சேர், எலியாத்; இவர்கள் தேசத்தில் பிறந்த காத்தூராருடைய ஆடுமாடுகளைப் பிடிக்கப்போனபடியால் அவர்கள் இவர்களைக் கொன்றுபோட்டார்கள்.
22 அவர்கள் தகப்பனாகிய எப்பிராயீம் அநேகநாள் துக்கங்கொண்டாடுகையில், அவன் சகோதரர் அவனுக்கு ஆறுதல் சொல்லவந்தார்கள்.
23 பின்பு அவன் தன் பெண்ஜாதியினிடத்தில் பிரவேசித்ததினால், அவள் கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெற்றாள்; அவன், தன் குடும்பத்துக்குத் தீங்கு உண்டானதினால், இவனுக்குப் பெரீயா என்று பேரிட்டான்.
24 இவனுடைய குமாரத்தியாகிய சேராள் கீழ்ப்புறமும் மேற்புறமுமான பெத்தோரோனையும், ஊசேன்சேராவையும் கட்டினவள்.
25 அவனுடைய குமாரர், ரேப்பாக், ரேசேப் என்பவர்கள்; இவனுடைய குமாரன் தேலாக்; இவனுடைய குமாரன் தாகான்.
26 இவனுடைய குமாரன் லாதான், இவனுடைய குமாரன் அம்மியூத்; இவனுடைய குமாரன் எலிஷாமா.
27 இவனுடைய குமாரன் நூன்: இவனுடைய குமாரன் யோசுவா.
28 அவர்களுடைய காணியாட்சியும், வாசஸ்தலங்களும், கிழக்கேயிருக்கிற நாரானும், மேற்கேயிருக்கிற கேசேரும் அதின் கிராமங்களும், பெத்தேலும் அதின் கிராமங்களும், சீகேமும் அதின் கிராமங்களும், காசாமட்டுக்குமுள்ள அதன் கிராமங்களும்,
29 மனாசே புத்திரரின் பக்கத்திலே பெத்செயானும் அதின் கிராமங்களும், தானாகும் அதின் கிராமங்களும், மெகிதோவும் அதின் கிராமங்களும், தோரும் அதின் கிராமங்களுமே; இவ்விடங்களில் இஸ்ரவேலின் குமாரனாகிய யோசேப்பின் புத்திரர் குடியிருந்தார்கள்.
30 ஆசேரின் குமாரர், இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா என்பவர்கள்; இவர்கள் சகோதரி சேராள்.
31 பெரீயாவின் குமாரர், ஏபேர், மல்கியேல் என்பவர்கள்; இவன் பிர்சாவீத்தின் தகப்பன்.
32 ஏபேர் யப்லேத்தையும், சோமேரையும், ஒத்தாமையும், இவர்கள் சகோதரியாகிய சூகாளையும் பெற்றான்.
33 யப்லேத்தின் குமாரர் பாசாக், பிம்மால், அஸ்வாத் என்பவர்கள்; இவர்களே யப்லேத்தின் குமாரர்.
34 சோமேரின் குமாரர் அகி, ரோகா, எகூபா, ஆராம் என்பவர்கள்.
35 அவன் சகோதரனாகிய ஏலேமின் குமாரர், சோபாக், இம்னா, சேலேஸ், ஆமால் என்பவர்கள்.
36 சோபாக்கின் குமாரர், சூவாக், அர்னெப்பர், சூகால், பேரி, இம்ரா,
37 பேசேர், ஓத், சம்மா, சில்சா, இத்ரான், பேரா என்பவர்கள்.
38 யெத்தேரின் குமாரர், எப்புன்னே, பிஸ்பா, ஆரா என்பவர்கள்.
39 உல்லாவின் குமாரர், ஆராக், அன்னியேல், ரித்சியா என்பவர்கள்.
40 ஆசேரின் புத்திரராகிய இவர்கள் எல்லாரும் தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவரும் தெரிந்துகொள்ளப்பட்ட பராக்கிரமசாலிகளும், பிரபுக்களின் தலைவருமாயிருந்தார்கள்; அவர்கள் வம்ச அட்டவணைகளில் யுத்தத்திற்குப் போகத்தக்க சேவகரின் இலக்கம் இருபத்தாறாயிரம்பேர்.


1 The sons of Is'sachar: Tola, Pu'ah, Jashub, and Shimron, four.
2 The sons of Tola: Uzzi, Rephai'ah, Je'ri-el, Jah'mai, Ibsam, and Shem'uel, heads of their fathers' houses, namely of Tola, mighty warriors of their generations, their number in the days of David being twenty-two thousand six hundred.
3 The sons of Uzzi: Izrahi'ah. And the sons of Izrahi'ah: Michael, Obadi'ah, Jo'el, and Isshi'ah, five, all of them chief men;
4 and along with them, by their generations, according to their fathers' houses, were units of the army for war, thirty-six thousand, for they had many wives and sons.
5 Their kinsmen belonging to all the families of Is'sachar were in all eighty-seven thousand mighty warriors, enrolled by genealogy.
6 The sons of Benjamin: Bela, Becher, and Jedi'a-el, three.
7 The sons of Bela: Ezbon, Uzzi, Uz'ziel, Jer'imoth, and Iri, five, heads of fathers' houses, mighty warriors; and their enrollment by genealogies was twenty-two thousand and thirty-four.
8 The sons of Becher: Zemi'rah, Jo'ash, Elie'zer, Eli-o-e'nai, Omri, Jer'emoth, Abi'jah, An'athoth, and Al'emeth. All these were the sons of Becher;
9 and their enrollment by genealogies, according to their generations, as heads of their fathers' houses, mighty warriors, was twenty thousand two hundred.
10 The sons of Jedi'a-el: Bilhan. And the sons of Bilhan: Je'ush, Benjamin, Ehud, Chena'anah, Zethan, Tarshish, and Ahish'ahar.
11 All these were the sons of Jedi'a-el according to the heads of their fathers' houses, mighty warriors, seventeen thousand and two hundred, ready for service in war.
12 And Shuppim and Huppim were the sons of Ir, Hushim the sons of Aher.
13 The sons of Naph'tali: Jah'zi-el, Guni, Jezer, and Shallum, the offspring of Bilhah.
14 The sons of Manas'seh: As'ri-el, whom his Aramean concubine bore; she bore Machir the father of Gilead.
15 And Machir took a wife for Huppim and for Shuppim. The name of his sister was Ma'acah. And the name of the second was Zeloph'ehad; and Zeloph'ehad had daughters.
16 And Ma'acah the wife of Machir bore a son, and she called his name Peresh; and the name of his brother was Sheresh; and his sons were Ulam and Rakem.
17 The sons of Ulam: Bedan. These were the sons of Gilead the son of Machir, son of Manas'seh.
18 And his sister Hammo'lecheth bore Ishhod, Abi-e'zer, and Mahlah.
19 The sons of Shemi'da were Ahi'an, Shechem, Likhi, and Ani'am.
20 The sons of E'phraim: Shuthe'lah, and Bered his son, Tahath his son, Ele-a'dah his son, Tahath his son,
21 Zabad his son, Shuthe'lah his son, and Ezer and E'le-ad, whom the men of Gath who were born in the land slew, because they came down to raid their cattle.
22 And E'phraim their father mourned many days, and his brothers came to comfort him.
23 And E'phraim went in to his wife, and she conceived and bore a son; and he called his name Beri'ah, because evil had befallen his house.
24 His daughter was She'erah, who built both Lower and Upper Beth-hor'on, and Uz'zen-she'erah.
25 Rephah was his son, Resheph his son, Telah his son, Tahan his son,
26 Ladan his son, Ammi'hud his son, Eli'shama his son,
27 Nun his son, Joshua his son.
28 Their possessions and settlements were Bethel and its towns, and eastward Na'aran, and westward Gezer and its towns, Shechem and its towns, and Ayyah and its towns;
29 also along the borders of the Manas'sites, Beth-she'an and its towns, Ta'anach and its towns, Megid'do and its towns, Dor and its towns. In these dwelt the sons of Joseph the son of Israel.
30 The sons of Asher: Imnah, Ishvah, Ishvi, Beri'ah, and their sister Serah.
31 The sons of Beri'ah: Heber and Mal'chi-el, who was the father of Bir'zaith.
32 Heber was the father of Japhlet, Shomer, Hotham, and their sister Shu'a.
33 The sons of Japhlet: Pasach, Bimhal, and Ashvath. These are the sons of Japhlet.
34 The sons of Shemer his brother: Rohgah, Jehub'bah, and Aram.
35 The sons of Helem his brother: Zophah, Imna, Shelesh, and Amal.
36 The sons of Zophah: Su'ah, Har'nepher, Shu'al, Beri, Imrah,
37 Bezer, Hod, Shamma, Shilshah, Ithran, and Be-e'ra.
38 The sons of Jether: Jephun'neh, Pispa, and Ara.
39 The sons of Ulla: Arah, Han'niel, and Rizi'a.
40 All of these were men of Asher, heads of fathers' houses, approved, mighty warriors, chief of the princes. Their number enrolled by genealogies, for service in war, was twenty-six thousand men.

1 பென்யமீன், பேலா என்னும் தன் மூத்த குமாரனையும், அஸ்பால் என்னும் இரண்டாம் குமாரனையும், அகராக் என்னும் மூன்றாம் குமாரனையும்,
2 நோகா என்னும் நாலாம் குமாரனையும், ரப்பா என்னும் ஐந்தாம் குமாரனையும் பெற்றான்.
3 பேலாவுக்கு இருந்த குமாரர் ஆதார், கேரா, அபியூத் என்பவர்கள்.
4 அபிசுவா, நாமான், அகோவா,
5 கேரா, செப்புப்பான், ஊராம் என்பவர்கள் எகூதின் குமாரர்.
6 கேபாவின் குடிகளுக்கு மூப்பான தலைவராயிருந்து, இவர்களை மனாகாத்திற்கு அழைத்துக்கொண்டுபோனவர்கள், நாமான், அகியா, கேரா என்பவர்களே.
7 கேரா அவர்களை அங்கே அழைத்துக்கொண்டுபோனபின்பு, ஊசாவையும், அகியூதையும் பெற்றான்.
8 அவர்களை அனுப்பிவிட்டபின், சகராயீம் மோவாப் தேசத்திலே ஊகிம் பாராள் என்னும் தன் பெண்ஜாதிகளிடத்திலே பெற்ற பிள்ளைகளைத்தவிர,
9 தன் பெண்ஜாதியாகிய ஓதேசாலே யோவாபையும், சீபீயாவையும், மேசாவையும், மல்காமையும்,
10 எயூசையும், சாகியாவையும், மிர்மாமவையும் பெற்றான். பிதாக்களின் தலைவரான இவர்கள் அவனுடைய குமாரர்.
11 ஊசிம் வழியாய் அவன் அபிதூபையும் எல்பாலையும் பெற்றான்.
12 எல்பாலின் குமாரர், ஏபேர், மீஷாம், சாமேத்; இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன்.
13 பெரீயாவும் சேமாவும் ஆயலோன் குடிகளுடைய பிதாக்களிலே தலைவராயிருந்தார்கள்; இவர்கள் காத்தின் குடிகளை ஓட்டிவிட்டார்கள்
14 அகியோ, சாஷாக், எரேமோத்,
15 செபதியா, ஆராத், ஆதேர்,
16 காயேல், இஸ்பா, யோகா என்பவர்கள் பெரீயாவின் குமாரர்.
17 செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ஏபேர்,
18 இஸ்மெராயி, இஸ்லியா, யோபாப் என்பவர்கள் எல்பாலின் குமாரர்.
19 யாக்கிம், சிக்ரி, சப்தி,
20 எலியேனாய், சில்தாய், எலியேல்,
21 அதாயா, பெராயா, சிம்ராத் என்பவர்கள் சிமியின் குமாரர்.
22 இஸ்பான், ஏபேர், ஏலியேல்,
23 அப்தோன், சிக்ரி, ஆனான்,
24 அனனியா, ஏலாம், அந்தோதியா,
25 இபிதியா, பெனூயேல் என்பவர்கள் ஆஷாக்கின் குமாரர்.
26 சம்சேராய், செகரியா, அத்தாலியா,
27 யரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எராகாமின் குமாரர்.
28 இவர்கள் தங்கள் சந்ததிகளின் பிதாக்களிலே தலைவராயிருந்து, எருசலேமிலே குடியிருந்தார்கள்.
29 கிபியோனிலே குடியிருந்தவன், கிபியோனின் மூப்பன்; அவன் பெண்ஜாதியின்பேர் மாக்காள்.
30 அவன் மூத்த குமாரன் அப்தோன் என்பவன்; மற்றவர்கள் சூர், கீஸ், பாகால், நாதாப்,
31 கேதோர், அகியோ, சேகேர் என்பவர்கள்.
32 மிக்லோத் சிமியாவைப் பெற்றான்; இவர்களும் தங்கள் சகோதரரோடுங்கூட எருசலேமிலே தங்கள் சகோதரருக்குச் சமீபத்தில் குடியிருந்தார்கள்.
33 நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான்.
34 யோனத்தானின் குமாரன் மேரிபால்; மேரிபால் மீகாவைப் பெற்றான்.
35 மீகாவின் குமாரர், பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்கள்.
36 ஆகாஸ் யோகதாவைப் பெற்றான்; யோகதா அலமேத்தையும், அஸ்மாவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான்.
37 மோசா பினியாவைப் பெற்றான், இவன் குமாரன் ரப்பா; இவன் குமாரன் எலியாசா; இவன் குமாரன் ஆத்சேல்.
38 ஆத்சேலுக்கு ஆறுகுமாரர் இருந்தார்கள்; அவர்கள் நாமங்களாவன, அஸ்ரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், செகரியா, ஒபதியா, ஆனான்; இவர்கள் எல்லாரும் ஆத்சேலின் குமாரர்.
39 அவன் சகோதரனாகிய எசேக்கின் குமாரர், ஊலாம் என்னும் மூத்தகுமாரனும், ஏகூஸ் என்னும் இரண்டாம் குமாரனும், எலிபேலேத் என்னும் மூன்றாம் குமாரனுமே
40 ஊலாமின் குமாரர் பராக்கிரமசாலிகளான வில்வீரராய் இருந்தார்கள்; அவர்களுக்கு அநேகம் புத்திரர் பெளத்திரர் இருந்தார்கள்; அவர்கள் தொகை நூற்றைம்பதுபேர்; இவர்கள் எல்லாரும் பென்யமீன் புத்திரர்.


1 Benjamin was the father of Bela his first-born, Ashbel the second, Ahar'ah the third,
2 Nohah the fourth, and Rapha the fifth.
3 And Bela had sons: Addar, Gera, Abi'hud,
4 Abishu'a, Na'aman, Aho'ah,
5 Gera, Shephu'phan, and Huram.
6 These are the sons of Ehud (they were heads of fathers' houses of the inhabitants of Geba, and they were carried into exile to Mana'hath):
7 Na'aman, Ahi'jah, and Gera, that is, Heglam, who was the father of Uzza and Ahi'hud.
8 And Shahara'im had sons in the country of Moab after he had sent away Hushim and Ba'ara his wives.
9 He had sons by Hodesh his wife: Jobab, Zib'i-a, Mesha, Malcam,
10 Je'uz, Sachi'a, and Mirmah. These were his sons, heads of fathers' houses.
11 He also had sons by Hushim: Abi'tub and Elpa'al.
12 The sons of Elpa'al: Eber, Misham, and Shemed, who built Ono and Lod with its towns,
13 and Beri'ah and Shema (they were heads of fathers' houses of the inhabitants of Ai'jalon, who put to flight the inhabitants of Gath);
14 and Ahi'o, Shashak, and Jer'emoth.
15 Zebadi'ah, Arad, Eder,
16 Michael, Ishpah, and Joha were sons of Beri'ah.
17 Zebadi'ah, Meshul'lam, Hizki, Heber,
18 Ish'merai, Izli'ah, and Jobab were the sons of Elpa'al.
19 Jakim, Zichri, Zabdi,
20 Eli-e'nai, Zil'lethai, Eli'el,
21 Adai'ah, Berai'ah, and Shimrath were the sons of Shim'e-i.
22 Ishpan, Eber, Eli'el,
23 Abdon, Zichri, Hanan,
24 Hanani'ah, Elam, Anthothi'jah,
25 Iphdei'ah, and Penu'el were the sons of Shashak.
26 Sham'sherai, Shehari'ah, Athali'ah,
27 Ja-areshi'ah, Eli'jah, and Zichri were the sons of Jero'ham.
28 These were the heads of fathers' houses, according to their generations, chief men. These dwelt in Jerusalem.
29 Je-i'el the father of Gibeon dwelt in Gibeon, and the name of his wife was Ma'acah.
30 His first-born son: Abdon, then Zur, Kish, Ba'al, Nadab,
31 Gedor, Ahi'o, Zecher,
32 and Mikloth (he was the father of Shim'e-ah). Now these also dwelt opposite their kinsmen in Jerusalem, with their kinsmen.
33 Ner was the father of Kish, Kish of Saul, Saul of Jonathan, Mal'chishu'a, Abin'adab, and Esh-ba'al;
34 and the son of Jonathan was Mer'ib-ba'al; and Mer'ib-ba'al was the father of Micah.
35 The sons of Micah: Pithon, Melech, Tare'a, and Ahaz.
36 Ahaz was the father of Jeho'addah; and Jeho'addah was the father of Al'emeth, Az'maveth, and Zimri; Zimri was the father of Moza.
37 Moza was the father of Bin'e-a; Raphah was his son, Ele-a'sah his son, Azel his son.
38 Azel had six sons, and these are their names: Azri'kam, Bo'cheru, Ish'mael, She-ari'ah, Obadi'ah, and Hanan. All these were the sons of Azel.
39 The sons of Eshek his brother: Ulam his first-born, Je'ush the second, and Eliph'elet the third.
40 The sons of Ulam were men who were mighty warriors, bowmen, having many sons and grandsons, one hundred and fifty. All these were Benjaminites.

1 இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் வம்ச வரலாற்றின்படி எண்ணப்பட்டார்கள்; இவர்கள் நாமங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது, யூதா கோத்திரத்தார் தங்கள் துரோகத்தினிமித்தம், பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள்.
2 தங்கள் காணியாட்சியிலும் தங்கள் பட்டணங்களிலும் முன் குடியிருந்தவர்கள் இஸ்ரவேலரும் ஆசாரியரும் லேவியரும் நிதினீமியருமே.
3 யூதா புத்திரரிலும், பென்யமீன் புத்திரரிலும், எப்பிராயீம் மனாசே என்பவர்களின் புத்திரரிலும், எருசலேமில் குடியிருந்தவர்கள் யாரென்றால்,
4 யூதாவின் புத்திரனாகிய பேரேசின் சந்ததியில் பானியின் குமாரனாகிய இம்ரியின் மகனான உம்ரிக்குப் பிறந்த அம்மியூதின் குமாரன் ஊத்தாய்.
5 சேலாவின் சந்ததியில் மூத்தவனாகிய அசாயாவும், அவன் பிள்ளைகளும்,
6 சேராவின் சந்ததியில் யெகுவேலும், அவன் சகோதரராகிய அறுநூற்றுத்தொண்ணூறுபேருமே.
7 பென்யமீன் புத்திரரில் அசெனூவாவின் குமாரனாகிய ஓதாவியாவுக்குப் பிறந்த மெசுல்லாமின் மகன் சல்லு.
8 எரோகாமின் குமாரன் இப்னெயா; மிக்கிரியின் குமாரனாகிய ஊசியின் மகன் ஏலா; இப்னியாவின் குமாரனாகிய ரேகுவேலுக்குப் பிறந்த செபதியாவின் மகன் மெசுல்லாம் என்பவர்களும்;
9 தங்கள் சந்ததிகளின்படி இருந்த இவர்கள் சகோதரராகிய தொளாயிரத்து ஐம்பத்தாறுபேருமே; இந்த மனுஷர் எல்லாரும், தங்கள் பிதாக்களின் வம்சத்திலே பிதாக்களின் தலைவராயிருந்தார்கள்.
10 ஆசாரியர்களில் யெதாயா, யோயாரிப், யாகின்.
11 அகிதூபின் குமாரனாகிய மெராயோதின் மகன் சாதோக்குக்குப் பிறந்த மெசுல்லாவின் குமாரனாகிய இல்க்கியாவின் மகன் அசரியா என்பவன் தேவாலயத்து விசாரணைக் கர்த்தன்.
12 மல்கியாவின் குமாரனாகிய பஸ்கூருக்குப் பிறந்த எரோகாமின் மகன் அதாயா; இம்மெரின் குமாரனாகிய மெசில்லேமித்தின் மகன் மெசுல்லாமுக்குப் பிறந்த யாசெராவின் குமாரனாகிய ஆதியேலின் மகன் மாசாய் என்பவர்களும்,
13 அவர்கள் சகோதரரும், தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவரான ஆயிரத்துஎழுநூற்று அறுபதுபேர் தேவாலயத்துக்கடுத்த பணிவிடைக்குத் திறமையுள்ளவர்களாயிருந்தார்கள்.
14 லேவியரில் மெராரியின் சந்ததியான அசபியாவின் குமாரனாகிய அஸ்ரீகாமுக்குப் பிறந்த அசூபின் மகன் செமாயா,
15 பக்பக்கார், ஏரேஸ், காலால், ஆசாபின் குமாரனாகிய சிக்ரிக்குப் பிறந்த மிகாவின் மகன் மத்தனியா,
16 எதுத்தூனின் குமாரனாகிய காலாலுக்குப் பிறந்த செமாயாவின் மகன் ஒபதியா; நெத்தோபாத்தியரின் கிராமங்களில் குடியிருந்த எல்க்கானாவின் குமாரனாகிய ஆசாவின் மகன் பெரகியா,
17 வாசல் காவலாளிகளாகிய சல்லுூம், அக்கூப், தல்மோன், அகிமான் என்பவர்களும், இவர்கள் சகோதரருமே; இவர்கள் தலைவன் சல்லுூம்.
18 லேவிபுத்திரரின் சேனைகளில் இவர்கள் கிழக்கேயிருக்கிற ராஜாவின் வாசலைக் காவல்காத்துவந்தார்கள்
19 கோராகின் குமாரனாகிய எபியாசாபுக்குப் பிறந்த கோரேயின் மகன் சல்லுூமும், அவன் பிதாவின் வம்சத்தாராகிய அவனுடைய சகோதரருமான கோராகியர் பணிவிடைவேலையை விசாரித்து, அவர்கள் பிதாக்கள் கர்த்தருடைய பாளயத்திலே வாசஸ்தலத்திற்குப்போகிற வழியைக் காவல்காத்ததுபோல, வாசஸ்தலத்து வாசல்களைக் காத்துவந்தார்கள்.
20 எலெயாசாரின் குமாரனாகிய பினெகாசுடனே கர்த்தர் இருந்தபடியினால், அவன் முற்காலத்திலே அவர்கள்மேல் விசாரணைக்காரனாயிருந்தான்.
21 மெசெல்மியாவின் குமாரனாகிய சகரியா ஆசரிப்புக் கூடாரவாசல் காவல்காரனாயிருந்தான்.
22 வாசல்களைக் காக்கிறதற்குத் தெரிந்துகொள்ளப்பட்ட இவர்களெல்லாரும் இருநூற்றுப் பன்னிரண்டுபேராயிருந்து, தங்கள் கிராமங்களின்படியே தங்கள் வம்சத்து அட்டவணைகளில் எழுதப்பட்டார்கள்; தாவீதும், ஞானதிருஷ்டிக்காரனாகிய சாமுவேலும், அவர்களைத் தங்கள் வேலைகளில் வைத்தார்கள்.
23 அப்படியே அவர்களும், அவர்கள் குமாரரும் கர்த்தருடைய ஆலயமாகிய வாசஸ்தலத்து வாசல்களைக் காக்கிறவர்களை முறைமுறையாய் விசாரித்து வந்தார்கள்.
24 வாசல்களைக் காக்கிறவர்கள் நாலுதிசைகளாகிய கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்தார்கள்.
25 அவர்கள் சகோதரர் தங்கள் கிராமங்களிலிருந்து, ஏழுநாளுக்கு ஒருவிசை மாறிமாறி அவர்களோடிருக்க வருவார்கள்.
26 தேவாலயத்தின் பண்டகசாலைகள் மேலும் பொக்கிஷசாலைகள்மேலுமுள்ள விசாரணை உத்தியோகம் லேவியரான அந்த நாலு பிரதான காவலாளர்வசத்தில் ஒப்புவிக்கப்பட்டது.
27 காவல் அவர்களுக்கு ஒப்புவித்திருந்தபடியால் அவர்கள் தேவாலயத்தைச் சுற்றிலும் இராத்தங்கியிருந்து, காலமே கதவுகளைத் திறந்துவிடுவார்கள்.
28 அவர்களில் சிலரிடத்தில் ஆராதனை பணிமுட்டுகள் ஒப்புவித்திருந்தது; அவர்கள் அவைகளை எண்ணி உள்ளே கொண்டுபோய், எண்ணி வெளியே கொண்டுவருவார்கள்.
29 அவர்களில் சிலர் மற்றப் பணிமுட்டுகளின் பரிசுத்த பாத்திரங்கள் எல்லாவற்றின்மேலும், மெல்லிய மா, திராட்சரசம், எண்ணெய், சாம்பிராணி, சுகந்தவர்க்கங்களின்மேலும் விசாரணைக்காரராயிருந்தார்கள்.
30 ஆசாரியரின் குமாரரில் சிலர் சுகந்தவர்க்கத்தால் பரிமளதைலம் இறக்குவார்கள்.
31 லேவியரில் கோராகியனான சல்லுூமின் மூத்த குமாரனாகிய மத்தித்தியாவுக்குப் பலகாரம் சுடுகிற வேலையின் விசாரிப்பு ஒப்புவித்திருந்தது.
32 அவர்கள் சகோதரராகிய கோகாத்தியரின் புத்திரரில் சிலருக்கு ஓய்வுநாள் தோறும் அப்பங்களை ஆயத்தப்படுத்தும் விசாரிப்பு இருந்தது.
33 இவர்களில் லேவியருடைய பிதாக்களிள் தலைவராகிய சங்கீதக்காரர் இரவும்பகலும் தங்கள் வேலையை நடத்தவேண்டியிருந்தபடியால், மற்ற வேலைக்கு நீங்கலாய்த் தங்கள் அறைகளில் இருந்தார்கள்.
34 லேவியரில் பிதாக்களின் தலைவராகிய இவர்கள் தங்கள் சந்ததிகளுக்குத் தலைமையானவர்கள்; இவர்கள் எருசலேமிலே குடியிருந்தார்கள்.
35 கிபியோனிலே குடியிருந்தவர்கள் யாரென்றால், கிபியோனின் மூப்பனாகிய யெகியேல், இவன் பெண்ஜாதியின்பேர் மாக்காள்.
36 அவன் மூத்த குமாரனாகிய அப்தோனும், சூர், கீஸ், பாகால், நேர், நாதாப்,
37 கேதோர், அகியோ, சகரியா, மிக்லோத் என்பவர்களுமே.
38 மிக்லோத் சீமியாமைப் பெற்றான்; இவர்களும் தங்கள் சகோதரரோடுங்கூட எருசலேமிலிருக்கிற தங்கள் சகோதரருக்குச் சமீபத்தில் குடியிருந்தார்கள்.
39 நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான்.
40 யோனத்தானின் குமாரன் மெரிபால்; மெரிபால் மீகாவைப் பெற்றான்.
41 மீகாவின் குமாரர், பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்கள்.
42 ஆகாஸ் யாராகைப் பெற்றான்; யாராக் அலெமேத்தையும், அஸ்மாவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான்.
43 மோசா பினியாவைப் பெற்றான்; இவன் குமாரன் ரப்பாயா; இவன் குமாரன் எலியாசா; இவன் குமாரன் ஆத்சேல்.
44 ஆத்சேலுக்கு ஆறு குமாரர் இருந்தார்கள்; அவர்கள் நாமங்களாவன, அரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், சேராயா, ஒபதியா, ஆனான், இவர்கள் ஆத்சேலின் குமாரர்.


1 So all Israel was enrolled by genealogies; and these are written in the Book of the Kings of Israel. And Judah was taken into exile in Babylon because of their unfaithfulness.
2 Now the first to dwell again in their possessions in their cities were Israel, the priests, the Levites, and the temple servants.
3 And some of the people of Judah, Benjamin, E'phraim, and Manas'seh dwelt in Jerusalem:
4 Uthai the son of Ammi'hud, son of Omri, son of Imri, son of Bani, from the sons of Perez the son of Judah.
5 And of the Shi'lonites: Asai'ah the first-born, and his sons.
6 Of the sons of Zerah: Jeu'el and their kinsmen, six hundred and ninety.
7 Of the Benjaminites: Sallu the son of Meshul'lam, son of Hodavi'ah, son of Hassenu'ah,
8 Ibne'iah the son of Jero'ham, Elah the son of Uzzi, son of Michri, and Meshul'lam the son of Shephati'ah, son of Reu'el, son of Ibni'jah;
9 and their kinsmen according to their generations, nine hundred and fifty-six. All these were heads of fathers' houses according to their fathers' houses.
10 Of the priests: Jedai'ah, Jehoi'arib, Jachin,
11 and Azari'ah the son of Hilki'ah, son of Meshul'lam, son of Zadok, son of Merai'oth, son of Ahi'tub, the chief officer of the house of God;
12 and Adai'ah the son of Jero'ham, son of Pashhur, son of Malchi'jah, and Ma'asai the son of Ad'i-el, son of Jah'zerah, son of Meshul'lam, son of Meshil'lemith, son of Immer;
13 besides their kinsmen, heads of their fathers' houses, one thousand seven hundred and sixty, very able men for the work of the service of the house of God.
14 Of the Levites: Shemai'ah the son of Hasshub, son of Azri'kam, son of Hashabi'ah, of the sons of Merar'i;
15 and Bakbak'kar, Heresh, Galal, and Mattani'ah the son of Mica, son of Zichri, son of Asaph;
16 and Obadi'ah the son of Shemai'ah, son of Galal, son of Jedu'thun, and Berechi'ah the son of Asa, son of Elka'nah, who dwelt in the villages of the Netoph'athites.
17 The gatekeepers were: Shallum, Akkub, Talmon, Ahi'man, and their kinsmen (Shallum being the chief),
18 stationed hitherto in the king's gate on the east side. These were the gatekeepers of the camp of the Levites.
19 Shallum the son of Ko're, son of Ebi'asaph, son of Korah, and his kinsmen of his fathers' house, the Ko'rahites, were in charge of the work of the service, keepers of the thresholds of the tent, as their fathers had been in charge of the camp of the LORD, keepers of the entrance.
20 And Phin'ehas the son of Elea'zar was the ruler over them in time past; the LORD was with him.
21 Zechari'ah the son of Meshelemi'ah was gatekeeper at the entrance of the tent of meeting.
22 All these, who were chosen as gatekeepers at the thresholds, were two hundred and twelve. They were enrolled by genealogies in their villages. David and Samuel the seer established them in their office of trust.
23 So they and their sons were in charge of the gates of the house of the LORD, that is, the house of the tent, as guards.
24 The gatekeepers were on the four sides, east, west, north, and south;
25 and their kinsmen who were in their villages were obliged to come in every seven days, from time to time, to be with these;
26 for the four chief gatekeepers, who were Levites, were in charge of the chambers and the treasures of the house of God.
27 And they lodged round about the house of God; for upon them lay the duty of watching, and they had charge of opening it every morning.
28 Some of them had charge of the utensils of service, for they were required to count them when they were brought in and taken out.
29 Others of them were appointed over the furniture, and over all the holy utensils, also over the fine flour, the wine, the oil, the incense, and the spices.
30 Others, of the sons of the priests, prepared the mixing of the spices,
31 and Mattithi'ah, one of the Levites, the first-born of Shallum the Ko'rahite, was in charge of making the flat cakes.
32 Also some of their kinsmen of the Ko'hathites had charge of the showbread, to prepare it every sabbath.
33 Now these are the singers, the heads of fathers' houses of the Levites, dwelling in the chambers of the temple free from other service, for they were on duty day and night.
34 These were heads of fathers' houses of the Levites, according to their generations, leaders, who lived in Jerusalem.
35 In Gibeon dwelt the father of Gibeon, Je-i'el, and the name of his wife was Ma'acah,
36 and his first-born son Abdon, then Zur, Kish, Ba'al, Ner, Nadab,
37 Gedor, Ahi'o, Zech-ari'ah and Mikloth;
38 and Mikloth was the father of Shim'e-am; and these also dwelt opposite their kinsmen in Jerusalem, with their kinsmen.
39 Ner was the father of Kish, Kish of Saul, Saul of Jonathan, Mal'chishu'a, Abin'adab, and Eshba'al;
40 and the son of Jonathan was Mer'ib-ba'al; and Mer'ib-ba'al was the father of Micah.
41 The sons of Micah: Pithon, Melech, Tahr'e-a, and Ahaz;
42 and Ahaz was the father of Jarah, and Jarah of Al'emeth, Az'maveth, and Zimri; and Zimri was the father of Moza.
43 Moza was the father of Bin'e-a; and Rephai'ah was his son, Ele-a'sah his son, Azel his son.
44 Azel had six sons and these are their names: Azri'kam, Bo'cheru, Ish'mael, She-ari'ah, Obadi'ah, and Hanan; these were the sons of Azel.

1 பெலிஸ்தர் இஸ்ரவேலரோடே யுத்தபண்ணினார்கள்; இஸ்ரவேல் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடி, கில்போவா மலையிலே வெட்டுண்டு விழுந்தார்கள்.
2 பெலிஸ்தர் சவுலையும் அவன் குமாரரையும் நெருங்கித் தொடர்ந்து, சவுலின் குமாரராகிய யோனத்தானையும் அபினதாபையும் மல்கிசூவாவையும் வெட்டிப்போட்டார்கள்.
3 சவுலுக்கு விரோதமாய் யுத்தம் பலத்தது; வில்வீரர் அவனைக்கண்டு நெருங்கினார்கள்; அப்பொழுது சவுல் வில்வீரருக்கு மிகவும் பயப்பட்டு,
4 தன் ஆயுததாரியை நோக்கி: அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து என்னை அவமானப்படுத்தாதபடிக்கு, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் குத்திப்போடு என்றான்; அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதினால் அப்படிச்செய்யமாட்டேன் என்றான். அப்பொழுது சவுல் பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்தான்.
5 சவுல் செத்துப்போனதை அவன் ஆயுததாரி கண்டபோது, அவனும் பட்டயத்தின்மேல் விழுந்து செத்துப்போனான்.
6 அப்படியே சவுலும், அவன் மூன்றுகுமாரரும், அவன் வீட்டு மனுஷர் அனைவரும்கூடச் செத்துப்போனார்கள்.
7 ஜனங்கள் முறிந்தோடினதையும், சவுலும் அவன் குமாரரும் செத்துப்போனதையும், பள்ளத்தாக்கிலுள்ள இஸ்ரவேலர் எல்லரும் கண்டபோது தங்கள் பட்டணங்களை விட்டு ஓடிப்போனார்கள்; அப்பொழுது பெலிஸ்தர் வந்து, அவைகளில் குடியிருந்தார்கள்
8 வெட்டுண்டவர்களின் வஸ்திரங்களை உரிந்துகொள்ளப் பெலிஸ்தர் மறுநாளில் வந்தபோது, அவர்கள் சவுலையும் அவன் குமாரரையும் கில்போவா மலையிலே விழுந்துகிடக்கக் கண்டு,
9 அவன் வஸ்திரங்களை உரிந்து, அவன் தலையையும் அவன் ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு, தங்கள் விக்கிரகங்களுக்கும் ஜனங்களுக்கும் அதைப் பிரசித்தப்படுத்தும்படி பெலிஸ்தருடைய தேசத்திலே சுற்றிலும் செய்தி அனுப்பி,
10 அவன் ஆயுதங்களைத் தங்கள் தேவர்களின் கோவிலிலே வைத்து, அவன் தலையைத் தாகோன் கோவிலிலே தூக்கிவைத்தார்கள்.
11 பெலிஸ்தர் சவுலுக்குச் செய்த எல்லாவற்றையுங் கீலேயாத் தேசத்து யாபேஸ் பட்டணத்தார் யாவரும் கேட்டபோது,
12 பராக்கிரமசாலிகள் எல்லாரும் எழுந்துபோய், சவுலின் உடலையும் அவன் குமாரரின் உடல்களையும் எடுத்து, யாபேசுக்குக் கொண்டுவந்து, அவர்கள் எலும்புகளை யாபேசிலிருக்கிற ஒரு கர்வாலிமரத்தின்கீழ் அடக்கம்பண்ணி, ஏழுநாள் உபவாசம்பண்ணினார்கள்.
13 அப்படியே சவுல் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல், கர்த்தருக்குச் செய்த தன் துரோகத்தினிமித்தமும், அவன் கர்த்தரைத் தேடாமல் அஞ்சனம் பார்க்கிறவர்களைக் கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தமும் செத்துப்போனான்.
14 அதற்காக அவர் அவனைக் கொன்று, ராஜ்யபாரத்தை ஈசாயின் குமாரனாகிய தாவீது வசமாகக் திருப்பினார்.


1 Now the Philistines fought against Israel; and the men of Israel fled before the Philistines, and fell slain on Mount Gilbo'a.
2 And the Philistines overtook Saul and his sons; and the Philistines slew Jonathan and Abin'adab and Mal'chishu'a, the sons of Saul.
3 The battle pressed hard upon Saul, and the archers found him; and he was wounded by the archers.
4 Then Saul said to his armor-bearer, "Draw your sword, and thrust me through with it, lest these uncircumcised come and make sport of me." But his armor-bearer would not; for he feared greatly. Therefore Saul took his own sword, and fell upon it.
5 And when his armor-bearer saw that Saul was dead, he also fell upon his sword, and died.
6 Thus Saul died; he and his three sons and all his house died together.
7 And when all the men of Israel who were in the valley saw that the army had fled and that Saul and his sons were dead, they forsook their cities and fled; and the Philistines came and dwelt in them.
8 On the morrow, when the Philistines came to strip the slain, they found Saul and his sons fallen on Mount Gilbo'a.
9 And they stripped him and took his head and his armor, and sent messengers throughout the land of the Philistines, to carry the good news to their idols and to the people.
10 And they put his armor in the temple of their gods, and fastened his head in the temple of Dagon.
11 But when all Ja'besh-gil'ead heard all that the Philistines had done to Saul,
12 all the valiant men arose, and took away the body of Saul and the bodies of his sons, and brought them to Jabesh. And they buried their bones under the oak in Jabesh, and fasted seven days.
13 So Saul died for his unfaithfulness; he was unfaithful to the LORD in that he did not keep the command of the LORD, and also consulted a medium, seeking guidance,
14 and did not seek guidance from the LORD. Therefore the LORD slew him, and turned the kingdom over to David the son of Jesse.

1 இஸ்ரவேலர் எல்லாரும் எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் கூடிவந்து: இதோ, நாங்கள் உம்முடைய எலும்பும் உம்முடைய மாம்சமுமானவர்கள்.
2 சவுல் இன்னும் ராஜாவாயிருக்கும்போதே, நீர் இஸ்ரவேலை நடத்திக்கொண்டுபோய் நடத்திக்கொண்டுவருவீர்; என் ஜனமாகிய இஸ்ரவேலை நீர் மேய்த்து, என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் தலைவனாயிருப்பீர் என்று உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்குச் சொல்லியும் இருக்கிறார் என்றார்கள்.
3 அப்படியே இஸ்ரவேலின் மூப்பரெல்லாரும் எப்ரோனிலே ராஜாவினிடத்தில் வந்தார்கள்; தாவீது எப்ரோனிலே கர்த்தருக்கு முன்பாக அவர்களோடு உடன்படிக்கை பண்ணிக்கொண்டபின்பு, கர்த்தர் சாமுவேலைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே அவர்கள் தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள்.
4 பின்பு தாவீது இஸ்ரவேல் அனைத்தோடுங்கூட எபூசாகிய எருசலேமுக்குப் போனான்; எபூசியர் அத்தேசத்தின் குடிகளாயிருந்தார்கள்.
5 அப்பொழுது எபூசின் குடிகள் தாவீதை நோக்கி: நீ இதற்குள் பிரவேசிப்பதில்லை என்றார்கள்; ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று.
6 எபூசியரை முறிய அடிக்கிறதில் எவன் முந்தினவனாயிருக்கிறானோ, அவன் தலைவனும் சேனாபதியுமாயிருப்பானென்று தாவீது சொல்லியிருந்தான்; செருயாவின் குமாரனாகிய யோவாப் முந்தி ஏறித் தலைவனானான்.
7 தாவீது அந்தக் கோட்டையில் வாசம்பண்ணினபடியினால், அது தாவீதின் நகரம் என்னப்பட்டது.
8 பிற்பாடு அவன் நகரத்தை மில்லோ தொடங்கிச் சுற்றிலும் கட்டினான்; யோவாப் நகரத்தின் மற்ற இடங்களைப் பழுதுபார்த்தான்.
9 தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான்; சேனைகளுடைய கர்த்தர் அவனோடேகூட இருந்தார்.
10 கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் சொன்ன வார்த்தையின்படியே, தாவீதை ராஜாவாக்கும்படி அவன் வசமாயிருந்து ராஜ்யபாரம்பண்ணுகிற அவனிடத்திலும், சகல இஸ்ரவேலரிடத்திலும், வீரதத்துவத்தைப் பாராட்டின பிரதான பராக்கிரமசாலிகளும்,
11 தாவீதுக்கு இருந்த அந்தப் பராக்கிரமசாலிகளின் இலக்கமுமாவது: அக்மோனியின் குமாரனாகிய யாஷோபியாம் என்னும் சேர்வைக்காரரின் தலைவன்; இவன் முந்நூறுபேர்களின்மேல் தன் ஈட்டியை ஓங்கி அவர்களை ஒருமிக்கக்கொன்றுபோட்டான்.
12 இவனுக்கு இரண்டாவது அகோயின் குமாரனாகிய தோதோவின் மகன் எலெயாசார்; இவன் மூன்று பராக்கிரமசாலிகளில் ஒருவன்.
13 பெலிஸ்தர் பாஸ்தம்மீமிலிருக்கிற வாற்கோதுமை நிறைந்த வயல்நிலத்தில் யுத்தத்திற்குக் கூடிவந்தபோது ஜனம் பெலிஸ்தரைக் கண்டு ஓடினபோதும் இவன் தாவீதோடே அங்கே இருந்தான்.
14 அப்பொழுது அவர்கள் அந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றிப் பெலிஸ்தரை மடங்கடித்தார்கள். அதினாலே கர்த்தர் பெரிய ரட்சிப்பை நடப்பித்தார்.
15 முப்பது தலைவரில் மூன்றுபேர் அதுல்லாம் என்னும் கன்மலைக் கெபியிலிருக்கிற தாவீதினிடத்தில் போயிருந்தார்கள்; பெலிஸ்தரின் பாளயம் ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் இறங்குகிறபோது,
16 தாவீது அரணான ஒரு இடத்திலிருந்தான்; அப்பொழுது பெலிஸ்தரின் தாணையம் பெத்லகேமில் இருந்தது.
17 தாவீது பெத்லகேமின் ஒலிமுகவாசலிலிருக்கிற கிணற்றின் தண்ணீர்மேல் ஆவல்கொண்டு, என் தாகத்திற்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான்.
18 அப்பொழுது அந்த மூன்றுபேர் பெலிஸ்தரின் பாளயத்திற்குள் துணிந்து புகுந்துபோய், பெத்லகேமின் ஒலிமுகவாசலிலிருக்கிற கிணற்றிலே தண்ணீர் மொண்டு தாவீதினிடத்தில் கொண்டுவந்தார்கள்; ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனதில்லாமல் அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிப்போட்டு:
19 நான் இதைச் செய்யாதபடிக்கு, என் தேவன் என்னைக் காத்துக்கொள்ளக்கடவர்; தங்கள் பிராணனை எண்ணாமல் போய் அதைக் கொண்டுவந்த இந்த மனுஷரின் ரத்தத்தைக் குடிப்பேனோ என்று சொல்லி அதைக் குடிக்கமாட்டேன் என்றான். இப்படி இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் செய்தார்கள்.
20 யோவாபின் சகோதரனாகிய அபிசாய் அந்த மூன்றுபேரில் பிரதானமானவன்; அவன் தன் ஈட்டியை ஓங்கி, முந்நூறுபேரை மடங்கடித்ததினால் இந்த மூன்றுபேரில் பேர்பெற்றவனானான்.
21 இந்த மூன்றுபேரில் அவன் மற்ற இரண்டுபேரிலும் மேன்மையுள்ளவனானதினால், அவர்களில் தலைவனானான்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கு அவன் சமானமானவனல்ல.
22 பராக்கிரமசாலியாகிய யோய்தாவின் குமாரனும், கப்சேயேல் ஊரானுமாகிய பெனாயாவும் செய்கைகளில் வல்லவனாயிருந்தான்; அவன் மோவாப் தேசத்தின் இரண்டு வலுமையான சிங்கங்களைக் கொன்றதுமல்லாமல் உறைந்த மழைபெய்த நாளில் அவன் ஒரு கெபிக்குள்ளே இறங்கிப்போய், ஒரு சிங்கத்தைக் கொன்றான்.
23 ஐந்துமுழ உயரமான ஒரு எகிப்தியனையும் அவன் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியன் கையில் நெய்கிறவர்களின் படைமரக் கனதியான ஒரு ஈட்டி, இருக்கையில், இவன் ஒரு தடியைப் பிடித்து, அவனிடத்தில் போய், அந்த எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப் பறித்து, அவன் ஈட்டியினாலே அவனைக் கொன்றுபோட்டான்.
24 இவைகளை யோய்தாவின் குமாரனான பெனாயா செய்தபடியினால், மூன்று பராக்கிரமசாலிகளுக்குள்ளே பேர்பெற்றவனாய் இருந்தான்.
25 முப்பதுபேரிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கும் இவன் சமானமானவனல்ல; அவனைத் தாவீது தன் மெய்க்காவலருக்குத் தலைவனாக வைத்தான்.
26 இராணுவத்திலிருந்த மற்றப் பராக்கிரமசாலிகள்: யோவாபின் தம்பி ஆசகேல், பெத்லகேம் ஊரானாகிய தோதோவின் குமாரன் எல்க்கானான்,
27 ஆரோதியனாகிய சம்மோத், பெலோனியனாகிய ஏலெஸ்,
28 தெக்கோவியனாகிய இக்கேசின் குமாரன் ஈரா, ஆனதோத்தியனாகிய அபியேசர்,
29 ஊசாத்தியனாகிய சிபெக்காய், அகோகியனாகிய ஈலாய்,
30 நெத்தோபாத்தியனாகிய மகராயி, நெத்தோபாத்தியனாகிய பானாவின் குமாரன் ஏலேத்,
31 பென்யமீன் புத்திரரின் கிபேயா ஊரானாகிய ரிபாயின் குமாரன் இத்தாயி, பிரத்தோனியனாகிய பெனாயா,
32 காகாஸ் நீரோடைத் தேசத்தானாகிய ஊராயி, அர்பாத்தியனாகிய அபியேல்,
33 பகரூமியனாகிய அஸ்மாவேத், சால்போனியனாகிய எலியாபா,
34 கீசோனியனாகிய ஆசேமின் குமாரர் ஆராரியனாகிய சாகியின் குமாரன் யோனத்தான்.
35 ஆராரியனாகிய சாக்காரின் குமாரன் அகியாம், ஊரின் குமாரன் எலிபால்,
36 மெகராத்தியனாகிய ஏப்பேர், பெலோனியனாகிய அகியா,
37 கர்மேலியனாகிய எஸ்ரோ, எஸ்பாயின் குமாரன் நாராயி,
38 நாத்தானின் சகோதரன் யோவேல், அகரியின் குமாரன் மிப்கார்,
39 அம்மோனியனாகிய சேலேக், செருயாவின் குமாரனாகிய யோவாபின் ஆயுததாரியான பெரோத்தியனாகிய நாராயி,
40 இத்தரியனாகிய ஈரா, இத்தரியனாகிய காரெப்,
41 ஏத்தியனாகிய உரியா, அக்லாயின் குமாரன் சாபாத்,
42 ரூபனியரின் தலைவனாகிய சீசாவின் குமாரன் அதினா என்னும் ரூபனியன்; அவனோடே முப்பதுபேர் இருந்தார்கள்.
43 மாகாவின் குமாரன் ஆனான், மிதினியனாகிய யோசபாத்,
44 அஸ்தரேத்தியனாகிய உசியா, ஆரோவேரியனாகிய ஓத்தாமின் குமாரர் சமாவும், யேகியேலும்,
45 சிம்ரியின் குமாரன் எதியாயேல், தித்சியனாகிய அவன் சகோதரன் யோகா,
46 மாகாவியரின் புத்திரன் எலியேல், எல்நாமின் குமாரர் எரிபாயும், யொசவியாவும், மோவாபியனான இத்மாவும்,
47 மெசோபாயா ஊராராகிய எலியேலும், ஓபேதும், யாசியேலுமே.


1 Then all Israel gathered together to David at Hebron, and said, "Behold, we are your bone and flesh.
2 In times past, even when Saul was king, it was you that led out and brought in Israel; and the LORD your God said to you, `You shall be shepherd of my people Israel, and you shall be prince over my people Israel.'"
3 So all the elders of Israel came to the king at Hebron; and David made a covenant with them at Hebron before the LORD, and they anointed David king over Israel, according to the word of the LORD by Samuel.
4 And David and all Israel went to Jerusalem, that is Jebus, where the Jeb'usites were, the inhabitants of the land.
5 The inhabitants of Jebus said to David, "You will not come in here." Nevertheless David took the stronghold of Zion, that is, the city of David.
6 David said, "Whoever shall smite the Jeb'usites first shall be chief and commander." And Jo'ab the son of Zeru'iah went up first, so he became chief.
7 And David dwelt in the stronghold; therefore it was called the city of David.
8 And he built the city round about from the Millo in complete circuit; and Jo'ab repaired the rest of the city.
9 And David became greater and greater, for the LORD of hosts was with him.
10 Now these are the chiefs of David's mighty men, who gave him strong support in his kingdom, together with all Israel, to make him king, according to the word of the LORD concerning Israel.
11 This is an account of David's mighty men: Jasho'be-am, a Hach'monite, was chief of the three; he wielded his spear against three hundred whom he slew at one time.
12 And next to him among the three mighty men was Elea'zar the son of Dodo, the Aho'hite.
13 He was with David at Pas-dam'mim when the Philistines were gathered there for battle. There was a plot of ground full of barley, and the men fled from the Philistines.
14 But he took his stand in the midst of the plot, and defended it, and slew the Philistines; and the LORD saved them by a great victory.
15 Three of the thirty chief men went down to the rock to David at the cave of Adullam, when the army of Philistines was encamped in the valley of Reph'aim.
16 David was then in the stronghold; and the garrison of the Philistines was then at Bethlehem.
17 And David said longingly, "O that some one would give me water to drink from the well of Bethlehem which is by the gate!"
18 Then the three mighty men broke through the camp of the Philistines, and drew water out of the well of Bethlehem which was by the gate, and took and brought it to David. But David would not drink of it; he poured it out to the LORD,
19 and said, "Far be it from me before my God that I should do this. Shall I drink the lifeblood of these men? For at the risk of their lives they brought it." Therefore he would not drink it. These things did the three mighty men.
20 Now Abi'shai, the brother of Jo'ab, was chief of the thirty. And he wielded his spear against three hundred men and slew them, and won a name beside the three.
21 He was the most renowned of the thirty, and became their commander; but he did not attain to the three.
22 And Benai'ah the son of Jehoi'ada was a valiant man of Kabzeel, a doer of great deeds; he smote two ariels of Moab. He also went down and slew a lion in a pit on a day when snow had fallen.
23 And he slew an Egyptian, a man of great stature, five cubits tall. The Egyptian had in his hand a spear like a weaver's beam; but Benai'ah went down to him with a staff, and snatched the spear out of the Egyptian's hand, and slew him with his own spear.
24 These things did Benai'ah the son of Jehoi'ada, and won a name beside the three mighty men.
25 He was renowned among the thirty, but he did not attain to the three. And David set him over his bodyguard.
26 The mighty men of the armies were As'ahel the brother of Jo'ab, Elha'nan the son of Dodo of Bethlehem,
27 Shammoth of Harod, Helez the Pel'onite,
28 Ira the son of Ikkesh of Teko'a, Abi-e'zer of An'athoth,
29 Sib'becai the Hu'shathite, I'lai the Aho'hite,
30 Ma'harai of Netoph'ah, Heled the son of Ba'anah of Netoph'ah,
31 Ithai the son of Ribai of Gib'e-ah of the Benjaminites, Benai'ah of Pira'thon,
32 Hurai of the brooks of Ga'ash, Abi'el the Ar'bathite,
33 Az'maveth of Baha'rum, Eli'ahba of Sha-al'bon,
34 Hashem the Gi'zonite, Jonathan the son of Shagee the Har'arite,
35 Ahi'am the son of Sachar the Har'arite, Eli'phal the son of Ur,
36 Hepher the Meche'rathite, Ahi'jah the Pel'onite,
37 Hezro of Carmel, Na'arai the son of Ezbai,
38 Jo'el the brother of Nathan, Mibhar the son of Hagri,
39 Zelek the Ammonite, Na'harai of Be-er'oth, the armor-bearer of Jo'ab the son of Zeru'iah,
40 Ira the Ithrite, Gareb the Ithrite,
41 Uri'ah the Hittite, Zabad the son of Ahlai,
42 Ad'ina the son of Shiza the Reubenite, a leader of the Reubenites, and thirty with him,
43 Hanan the son of Ma'acah, and Josh'aphat the Mithnite,
44 Uzzi'a the Ash'terathite, Shama and Je-i'el the sons of Hotham the Aro'erite,
45 Jedi'a-el the son of Shimri, and Joha his brother, the Tizite,
46 Eli'el the Ma'havite, and Jer'ibai, and Joshavi'ah, the sons of El'na-am, and Ithmah the Mo'abite,
47 Eli'el, and Obed, and Ja-asi'el the Mezo'ba-ite.

1 தாவீது கீசின் குமாரனாகிய சவுலினிமித்தம் இன்னும் மறைவாயிருக்கையில், சிக்லாகிலிருக்கிற அவனிடத்திற்கு வந்து,
2 யுத்தத்திற்கு ஒத்தாசை செய்த வில்வீரரும், கவண்கல் எறிகிறதற்கும் வில்லினால் அம்பு எய்கிறதற்கும் வலது இடது கைவாட்டமான பராக்கிரமசாலிகளான மற்ற மனுஷருமாவன: சவுலின் சகோதரராகிய பென்யமீன் கோத்திரத்தில்,
3 கிபேயா ஊரானாகிய சேமாவின் குமாரர் அகியேசர் என்னும் தலைவனும், யோவாசும், அஸ்மாவேத்தின் குமாரராகிய எசியேலும், பேலேத்தும், பெராக்கா, ஆனதோத்தியனான ஏகூ என்பவர்களும்,
4 முப்பதுபேரில் பராக்கிரமனும் முப்பதுபேருக்குப் பெரியவனுமான இஸ்மாயா என்னும் கிபியோனியனும், எரேமியா, யகாசியேல், யோகனான், கெதேரூரானான யோசபாத்,
5 எலுசாயி, எரிமோத், பிகலியா, செமரியா, அருப்பியனான செப்பத்தியா,
6 எல்க்கானா, எஷியா, அசாரியேல், யொவேசேர், யசொபெயாம் என்னும் கோரேகியரும்,
7 யொவேலா, செபதியா என்னும் கேதோர் ஊரானான ஏரோகாமின் குமாரருமே.
8 காத்தியரில் பரிசையும் ஈட்டியும் பிடித்து, சிங்கமுகம் போன்ற முகமும், மலைகளிலிருக்கிற வெளிமான் வேகம்போன்ற வேகமுமுள்ளவர்களாயிருந்து, யுத்தசேவகரான பராக்கிரமசாலிகள் சிலரும் வனாந்தரத்திலுள்ள அரணான இடத்தில் இருக்கிற தாவீது பட்சமாய்ச் சேர்ந்தார்கள்.
9 யாரென்றால், எத்சேர் என்னும் தலைவன், அவனுக்கு இரண்டாவது ஒபதியா; மூன்றாவது எலியாப்,
10 நாலாவது மிஸ்மன்னா, ஐந்தாவது எரேமியா,
11 ஆறாவது அத்தாயி, ஏழாவது எலியேல்,
12 எட்டாவது யோகனான், ஒன்பதாவது எல்சபாத்,
13 பத்தாவது எரேமியா, பதினோரவது மக்பன்னாயி;
14 காத் புத்திரரான இவர்கள் இராணுவத்தலைவராயிருந்தார்கள்; அவர்களில் சிறியவன் நூறுபேருக்கும் பெரியவன் ஆயிரம்பேருக்கும் சேர்வைக்காரராயிருந்தார்கள்.
15 யோர்தான் கரைபுரண்டுபோயிருக்கிற முதலாம் மாதத்தில் அதைக் கடந்து, கிழக்கேயும் மேற்கேயும் பள்ளத்தாக்குகளில் இருக்கிற யாவரையும் துரத்திவிட்டவர்கள் இவர்களே.
16 பின்னும் பென்யமீன் புத்திரரிலும் யூதாபுத்திரரிலும் சிலர் அரணான ஸ்தலத்தில் இருக்கிற தாவீதினிடத்தில் வந்தார்கள்.
17 தாவீது புறப்பட்டு, அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், அவர்களுக்கு உத்தரவுகொடுத்து: நீங்கள் எனக்கு உதவிசெய்ய சமாதானமாய் என்னிடத்தில் வந்தீர்களானால், என் இருதயம் உங்களோடு இசைந்திருக்கும்; என் கைகளில் கொடுமை இல்லாதிருக்க, என்னை என் சத்துருக்களுக்குக் காட்டிக்கொடுக்க வந்தீர்களேயாகில், நம்முடைய பிதாக்களின் தேவன் அதைப் பார்த்துக் கண்டிப்பாராக என்றான்.
18 அப்பொழுது அதிபதிகளுக்குத் தலைவனான அமாசாயின்மேல் ஆவி இறங்கினதினால், அவன்: தாவீதே, நாங்கள் உம்முடையவர்கள்; ஈசாயின் குமாரனே உமது பட்சமாயிருப்போம்; உமக்குச் சமாதானம், சமாதானம்; உமக்கு உதவிசெய்கிறவர்களுக்கும் சமாதானம்; உம்முடைய தேவன் உமக்குத் துணை நிற்கிறார் என்றான்; அப்பொழுது தாவீது அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களைத் தண்டுக்குத் தலைவராக்கினான்.
19 சவுலின்மேல் யுத்தம்பண்ணப்போகிற பெலிஸ்தருடனேகூடத் தாவீது வருகிறபோது, மனாசேயிலும் சிலர் அவன் பட்சமாய்ச் சேர்ந்தார்கள்; பெலிஸ்தரின் பிரபுக்கள் யோசனைபண்ணி, அவன் நம்முடைய தலைகளுக்கு மோசமாய்த் தன் ஆண்டவனாகிய சவுலின் பட்சமாய்ப் போவான் என்று அவனை அனுப்பிவிட்டார்கள்: அதனால் அவர்கள் இவர்களுக்கு உதவிசெய்யவில்லை.
20 அப்படியே அவன் சிக்லாகுக்குத் திரும்பிப்போகையில், மனாசேயில் அத்னாக், யோசபாத், எதியாவேல், மிகாயேல், யோசபாத், எலிகூ, சில்த்தாயி என்னும் மனாசே கோத்திரத்தாரின் ஆயிரத்துச் சேர்வைக்காரர் அவன் பட்சமாய் வந்தார்கள்.
21 அந்தத் தண்டுக்கு விரோதமாய் இவர்கள் தாவீதுக்கு உதவிசெய்தார்கள்; இவர்களெல்லாரும் பராக்கிரமசாலிகளும் இராணுவத்தில் சேர்வைக்காரருமாயிருந்தார்கள்.
22 அக்காலத்திலே நாளுக்குநாள் தாவீதுக்கு உதவிசெய்யும் மனுஷர் அவனிடத்தில் வந்து சேர்ந்தபடியால், அவர்கள் தேவசேனையைப்போல மகா சேனையானார்கள்.
23 கர்த்தருடைய வாக்கின்படியே, சவுலின் ராஜ்யபாரத்தைத் தாவீதினிடமாய்த் திருப்ப, எப்ரோனிலிருக்கிற அவனிடத்துக்கு வந்த யுத்த சன்னத்தரான தலைவரின் இலக்கமாவன:
24 யூதாபுத்திரரில் பரிசையும் ஈட்டியும் பிடித்து, யுத்தசன்னத்தரானவர்கள் ஆறாயிரத்து எண்ணூறுபேர்.
25 சிமியோன் புத்திரரில் பராக்கிரமசாலிகளாகிய யுத்தவீரர் ஏழாயிரத்து நூறுபேர்.
26 லேவி புத்திரரில் நாலாயிரத்து அறுநூறுபேர்.
27 ஆரோன் சந்ததியாரின் அதிபதியாகிய யோயதாவும், அவனோடிருந்த மூவாயிரத்து; எழுநூறுபேரும்,
28 பராக்கிரமசாலியான சாதோக் என்னும் வாலிபனும், அவன் தகப்பன் வம்சத்தாரான இருபத்திரண்டு தலைவருமே.
29 பென்யமீன் புத்திரரான சவுலின் சகோதரரில் மூவாயிரம்பேர்; அதுவரைக்கும் அவர்களில் மிச்சமானவர்கள் சவுலின் குடும்பத்தைக் காப்பாற்றப் பார்த்தார்கள்.
30 எப்பிராயீம் புத்திரரில் தங்கள் பிதாக்களின் வம்சத்தில் பேர் பெற்ற மனுஷரான பராக்கிரமசாலிகள் இருபதினாயிரத்து எண்ணூறுபேர்.
31 மனாசேயின் பாதிக்கோத்திரத்தில் தாவீதை ராஜாவாக்குகிறதற்கு வரும்படி, பேர்பேராகக் குறிக்கப்பட்டவர்கள் பதினெண்ணாயிரம்பேர்.
32 இசக்கார் புத்திரரில், இஸ்ரவேலர் செய்யவேண்டியது இன்னதென்று அறிந்து காலாகாலங்களுக்குத் தகுந்த யோசனை சொல்லத்தக்க தலைவர்கள் இருநூறுபேரும், இவர்கள் வாக்குக்குச் செவிகொடுத்த இவர்களுடைய எல்லாச் சகோதரருமே.
33 செபுலோன் புத்திரரில் சகலவித யுத்த ஆயுதங்களாலும் யுத்தம் செய்கிறதற்கும், தங்கள் அணியைக் காத்துநிற்கிறதற்கும் பழகி, வஞ்சனைசெய்யாமல் யுத்தத்திற்குப் போகத்தக்கவர்கள் ஐம்பதினாயிரம்பேர்.
34 நப்தலி புத்திரரில் ஆயிரம் தலைவர்கள் பரிசையும் ஈட்டியும் பிடித்த அவர்களோடேகூட இருந்தவர்கள் முப்பத்தேழாயிரம்பேர்.
35 தாண் புத்திரரில் யுத்தத்திற்குத் தேறினவர்கள் இருபத்து எண்ணாயிரத்து அறுநூறுபேர்.
36 ஆசேர் புத்திரரில் யுத்தத்திற்குத் தேறினவர்களாய் சேவகம்பண்ணப்போகத்தக்கவர்கள் நாற்பதினாயிரம்பேர்.
37 யோர்தானுக்கு அக்கரையான ரூபனியரிலும், காத்தியரிலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரிலும், யுத்தம்பண்ண சகலவித ஆயுதங்களையும் தரித்தவர்கள் நூற்றிருபதினாயிரம்பேர்.
38 தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்குகிறதற்கு, இந்த யுத்தமனுஷர் எல்லாரும் அணி அணியாய் வைக்கப்பட்டவர்களாக, உத்தம இருதயத்தோடே எப்ரோனுக்கு வந்தார்கள்; இஸ்ரவேலில் மற்ற யாவரும் தாவீதை ராஜாவாக்குகிறதற்கு ஒருமனப்பட்டிருந்தார்கள்.
39 அவர்கள் அங்கே தாவீதோடேகூட மூன்றுநாள் இருந்து, போஜனபானம்பண்ணினார்கள்; அவர்கள் சகோதரர் அவர்களுக்காகச் சகலத்தையும் ஆயத்தம்பண்ணியிருந்தார்கள்.
40 இசக்கார், செபுலோன், நப்தலியின் எல்லைமட்டும் அவர்களுக்குச் சமீபமாயிருந்தவர்களும், கழுதைகள்மேலும் ஒட்டகங்கள்மேலும் கோவேறு கழுதைகள்மேலும் மாடுகள்மேலும், தின்பண்டங்களாகிய மா, அத்திப்பழ அடைகள், வற்றலான திராட்சப்பழங்கள், திராட்சரசம், எண்ணெய் ஆடுமாடுகள் ஆகிய இவைகளை வேண்டிய மட்டும் ஏற்றிக்கொண்டுவந்தார்கள்; இஸ்ரவேலிலே மகிழ்ச்சியுண்டாயிற்று.


1 Now these are the men who came to David at Ziklag, while he could not move about freely because of Saul the son of Kish; and they were among the mighty men who helped him in war.
2 They were bowmen, and could shoot arrows and sling stones with either the right or the left hand; they were Benjaminites, Saul's kinsmen.
3 The chief was Ahi-e'zer, then Jo'ash, both sons of Shema'ah of Gib'e-ah; also Je'zi-el and Pelet the sons of Az'maveth; Ber'acah, Jehu of An'athoth,
4 Ishma'iah of Gibeon, a mighty man among the thirty and a leader over the thirty; Jeremiah, Jaha'ziel, Joha'nan, Joz'abad of Gede'rah,
5 Elu'zai, Jer'imoth, Beali'ah, Shemari'ah, Shephati'ah the Har'uphite;
6 Elka'nah, Isshi'ah, Az'arel, Jo-e'zer, and Jasho'be-am, the Ko'rahites;
7 and Joe'lah and Zebadi'ah, the sons of Jero'ham of Gedor.
8 From the Gadites there went over to David at the stronghold in the wilderness mighty and experienced warriors, expert with shield and spear, whose faces were like the faces of lions, and who were swift as gazelles upon the mountains:
9 Ezer the chief, Obadi'ah second, Eli'ab third,
10 Mishman'nah fourth, Jeremiah fifth,
11 Attai sixth, Eli'el seventh,
12 Joha'nan eighth, Elza'bad ninth,
13 Jeremiah tenth, Mach'bannai eleventh.
14 These Gadites were officers of the army, the lesser over a hundred and the greater over a thousand.
15 These are the men who crossed the Jordan in the first month, when it was overflowing all its banks, and put to flight all those in the valleys, to the east and to the west.
16 And some of the men of Benjamin and Judah came to the stronghold to David.
17 David went out to meet them and said to them, "If you have come to me in friendship to help me, my heart will be knit to you; but if to betray me to my adversaries, although there is no wrong in my hands, then may the God of our fathers see and rebuke you."
18 Then the Spirit came upon Ama'sai, chief of the thirty, and he said, "We are yours, O David; and with you, O son of Jesse! Peace, peace to you, and peace to your helpers! For your God helps you." Then David received them, and made them officers of his troops.
19 Some of the men of Manas'seh deserted to David when he came with the Philistines for the battle against Saul. (Yet he did not help them, for the rulers of the Philistines took counsel and sent him away, saying, "At peril to our heads he will desert to his master Saul.")
20 As he went to Ziklag these men of Manas'seh deserted to him: Adnah, Joz'abad, Jedi'a-el, Michael, Joz'abad, Eli'hu, and Zil'lethai, chiefs of thousands in Manas'seh.
21 They helped David against the band of raiders; for they were all mighty men of valor, and were commanders in the army.
22 For from day to day men kept coming to David to help him, until there was a great army, like an army of God.
23 These are the numbers of the divisions of the armed troops, who came to David in Hebron, to turn the kingdom of Saul over to him, according to the word of the LORD.
24 The men of Judah bearing shield and spear were six thousand eight hundred armed troops.
25 Of the Simeonites, mighty men of valor for war, seven thousand one hundred.
26 Of the Levites four thousand six hundred.
27 The prince Jehoi'ada, of the house of Aaron, and with him three thousand seven hundred.
28 Zadok, a young man mighty in valor, and twenty-two commanders from his own father's house.
29 Of the Benjaminites, the kinsmen of Saul, three thousand, of whom the majority had hitherto kept their allegiance to the house of Saul.
30 Of the E'phraimites twenty thousand eight hundred, mighty men of valor, famous men in their fathers' houses.
31 Of the half-tribe of Manas'seh eighteen thousand, who were expressly named to come and make David king.
32 Of Is'sachar men who had understanding of the times, to know what Israel ought to do, two hundred chiefs, and all their kinsmen under their command.
33 Of Zeb'ulun fifty thousand seasoned troops, equipped for battle with all the weapons of war, to help David with singleness of purpose.
34 Of Naph'tali a thousand commanders with whom were thirty-seven thousand men armed with shield and spear.
35 Of the Danites twenty-eight thousand six hundred men equipped for battle.
36 Of Asher forty thousand seasoned troops ready for battle.
37 Of the Reubenites and Gadites and the half-tribe of Manas'seh from beyond the Jordan, one hundred and twenty thousand men armed with all the weapons of war.
38 All these, men of war, arrayed in battle order, came to Hebron with full intent to make David king over all Israel; likewise all the rest of Israel were of a single mind to make David king.
39 And they were there with David for three days, eating and drinking, for their brethren had made preparation for them.
40 And also their neighbors, from as far as Is'sachar and Zeb'ulun and Naph'tali, came bringing food on asses and on camels and on mules and on oxen, abundant provisions of meal, cakes of figs, clusters of raisins, and wine and oil, oxen and sheep, for there was joy in Israel.

1 தாவீது ஆயிரம்பேருக்குத் தலைவரோடும் நூறுபேருக்குத் தலைவரோடும் சகல அதிபதிகளோடும் ஆலோசனைபண்ணி,
2 இஸ்ரவேல் சபையையெல்லாம் நோக்கி: உங்களுக்குச் சம்மதியும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சித்தமுமாயிருந்தால், இஸ்ரவேலின் தேசங்களிலெல்லாம் இருக்கிற நம்முடைய மற்றச் சகோதரரும், அவர்களோடே தங்கள் வெளிநிலங்களில் இருக்கிற ஆசாரியரும் லேவியரும் நம்மோடே கூடும்படிக்கு நாம் சீக்கிரமாய் அவர்களிடத்துக்கு ஆளனுப்பி,
3 நமது தேவனுடைய பெட்டியைத் திரும்ப நம்மிடத்துக்குக் கொண்டுவருவோமாக; சவுலின் நாட்களில் அதைத் தேடாதேபோனோம் என்றான்.
4 இந்தக் காரியம் சகல ஜனத்தின் பார்வைக்கும் செம்மையாயிருந்தபடியால், சபையார் எல்லாரும் அப்படியே செய்வோம் என்றார்கள்.
5 அப்படியே தேவனுடைய பெட்டியைக் கீரியாத்யாரீமிலிருந்து கொண்டுவரும்படி, தாவீது எகிப்தைச்சேர்ந்த சீகோர் நதிதுவக்கி ஆமாத்தின் எல்லைமட்டுமுள்ள இஸ்ரவேலையெல்லாங்கூட்டி,
6 கேருபீன்களின் நடுவே வாசம்பண்ணுகிற கர்த்தராகிய தேவனுடைய நாமம் தொழுதுகொள்ளப்படுகிற அவருடைய பெட்டியை யூதாவிலிருக்கிற கீரியாத்யாரீமுக்கடுத்த பாலாவிலிருந்து கொண்டுவரும்படிக்கு, அவனும் இஸ்ரவேலர் அனைவரும் அவ்விடத்திற்குப்போனார்கள்.
7 அவர்கள் தேவனுடைய பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து ஒரு புதுரதத்தின்மேல் ஏற்றிக்கொண்டு வந்தார்கள்; ஊசாவும் அகியோவும் ரதத்தை நடத்தினார்கள்.
8 தாவீதும் சகல இஸ்ரவேலரும் தங்கள் முழுப் பலத்தோடும் தேவனுக்குமுன்பாகச் சுரமண்டலங்களையும் தம்புருகளையும் மேளங்களையும் கைத்தாளங்களையும் பூரிகைகளையும் சேவித்து மகிழ்ச்சியாய் ஆடிப்பாடினார்கள்.
9 அவர்கள் கீதோனின் களமட்டும்வந்தபோது, மாடுகள் இடறினபடியினால், ஊசா பெட்டியைப் பிடிக்கத் தன் கையை நீட்டினான்.
10 அப்பொழுது கர்த்தர் ஊசாவின்மேல் கோபம் மூண்டவராகி, அவன் தன்கையை பெட்டியண்டைக்கு நீட்டினதினிமித்தம் அவனை அடித்தார்; அங்கே அவன் தேவசமுகத்தில் செத்தான்.
11 அப்பொழுது கர்த்தர் ஊசாவை அடித்ததினிமித்தம் தாவீது விசனப்பட்டு, அந்த ஸ்தலத்திற்கு இந்நாள்மட்டும் வழங்கிவருகிற பேரேஸ்ஊசா என்னும் பேரிட்டு,
12 அன்றையதினம் தேவனுக்குப்பயந்து: தேவனுடைய பெட்டியை நான் என்னிடத்துக்குக் கொண்டுவருவது எப்படியென்று சொல்லி,
13 பெட்டியைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்திலே கொண்டுவராமல், அதைக் கித்தியனாகிய ஓபேத்ஏதோமின்வீட்டிலே சேர்த்தான்.
14 தேவனுடைய பெட்டி ஓபேத்ஏதோமின் வீட்டிலே அவனிடத்தில் மூன்றுமாதம் இருக்கையில், கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்.


1 David consulted with the commanders of thousands and of hundreds, with every leader.
2 And David said to all the assembly of Israel, "If it seems good to you, and if it is the will of the LORD our God, let us send abroad to our brethren who remain in all the land of Israel, and with them to the priests and Levites in the cities that have pasture lands, that they may come together to us.
3 Then let us bring again the ark of our God to us; for we neglected it in the days of Saul."
4 All the assembly agreed to do so, for the thing was right in the eyes of all the people.
5 So David assembled all Israel from the Shihor of Egypt to the entrance of Hamath, to bring the ark of God from Kir'iath-je'arim.
6 And David and all Israel went up to Ba'alah, that is, to Kir'iath-je'arim which belongs to Judah, to bring up from there the ark of God, which is called by the name of the LORD who sits enthroned above the cherubim.
7 And they carried the ark of God upon a new cart, from the house of Abin'adab, and Uzzah and Ahi'o were driving the cart.
8 And David and all Israel were making merry before God with all their might, with song and lyres and harps and tambourines and cymbals and trumpets.
9 And when they came to the threshing floor of Chidon, Uzzah put out his hand to hold the ark, for the oxen stumbled.
10 And the anger of the LORD was kindled against Uzzah; and he smote him because he put forth his hand to the ark; and he died there before God.
11 And David was angry because the LORD had broken forth upon Uzzah; and that place is called Pe'rez-uz'za to this day.
12 And David was afraid of God that day; and he said, "How can I bring the ark of God home to me?"
13 So David did not take the ark home into the city of David, but took it aside to the house of O'bed-e'dom the Gittite.
14 And the ark of God remained with the household of O'bed-e'dom in his house three months; and the LORD blessed the household of O'bed-e'dom and all that he had.

1 தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதினிடத்தில் ஸ்தானாபதிகளையும், அவனுக்கு ஒரு வீட்டைக் கட்டுகிறதற்குக் கேதுருமரங்களையும், தச்சரையும், கல்தச்சரையும் அனுப்பினான்.
2 கர்த்தர் தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகத் திடப்படுத்தி, இஸ்ரவேலென்னும் தம்முடைய ஜனத்தினிமித்தம் தன்னுடைய ராஜ்யத்தை மிகவும் உயர்த்தினார் என்று தாவீது அறிந்துகொண்டான்.
3 எருசலேமிலே தாவீது பின்னும் அநேக ஸ்திரீகளை விவாகம்பண்ணி, பின்னும் குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
4 எருசலேமிலே அவனுக்குப் பிறந்த குமாரரின் நாமங்களாவன: சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன்,
5 இப்கார், எலிசூவா, எல்பெலேத்,
6 நோகா, நெப்பேக், யப்பியா,
7 எலிஷாமா, பெலியாதா, எலிப்பெலேத் என்பவைகள்.
8 தாவீது சமஸ்த இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக அபிஷேகம்பண்ணப்பட்டதைப் பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தர் எல்லாரும் தாவீதைத் தேடும்படி வந்தார்கள்; அதை தாவீது கேட்டபோது அவர்களுக்கு விரோதமாகப் புறப்பட்டான்.
9 பெலிஸ்தர் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள்.
10 பெலிஸ்தருக்கு விரோதமாகப் போகலாமா, அவர்களை என் கையில் ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது தேவனைக் கேட்டபோது, கர்த்தர் போ, அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.
11 அவர்கள் பாகால்பிராசீமுக்கு வந்தபோது, தாவீது அங்கே அவர்களை முறியடித்து தண்ணீர்கள் உடைந்தோடுகிறதுபோல, தேவன் என் கையினால் என் சத்துருக்களை உடைந்தோடப்பண்ணினாரென்றான்; அதினிமித்தம் அந்த ஸ்தலத்திற்குப் பாகால்பிராசீம் என்னும் பேரிட்டார்கள்.
12 அங்கே அவர்கள் தங்கள் தெய்வங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; தாவீது கற்பித்தபடி அவைகள் அக்கினியாலே சுட்டெரிக்கப்பட்டன.
13 பெலிஸ்தர் மறுபடியும் வந்து அந்தப் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள்.
14 அப்பொழுது தாவீது திரும்ப தேவனிடத்தில் விசாரித்ததற்கு, தேவன் நீ அவர்களுக்குப் பின்னாலே போகாமல், அவர்களுக்குப் பக்கமாய்ச் சுற்றி, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிரேயிருந்து, அவர்கள்மேல் பாய்ந்து,
15 முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, யுத்தத்திற்குப் புறப்படு; பெலிஸ்தரின் பாளயத்தை முறிய அடிக்க தேவன் உனக்கு முன்னே புறப்பட்டிருப்பார் என்றார்.
16 தேவன் தனக்குக் கற்பித்தபடியே தாவீது செய்தபோது, பெலிஸ்தரின் இராணுவத்தைக் கிபியோன் துவக்கிக் காசேர்மட்டும் முறிய அடித்தார்கள்.
17 அப்படியே தாவீதின் கீர்த்தி சகல தேசங்களிலும் பிரசித்தமாகி, அவனுக்குப் பயப்படுகிற பயத்தைக் கர்த்தர் சகல ஜாதிகளின்மேலும் வரப்பண்ணினார்.


1 And Hiram king of Tyre sent messengers to David, and cedar trees, also masons and carpenters to build a house for him.
2 And David perceived that the LORD had established him king over Israel, and that his kingdom was highly exalted for the sake of his people Israel.
3 And David took more wives in Jerusalem, and David begot more sons and daughters.
4 These are the names of the children whom he had in Jerusalem: Shammu'a, Shobab, Nathan, Solomon,
5 Ibhar, Eli'shu-a, El'pelet,
6 Nogah, Nepheg, Japhi'a,
7 Eli'shama, Beeli'ada, and Eliph'elet.
8 When the Philistines heard that David had been anointed king over all Israel, all the Philistines went up in search of David; and David heard of it and went out against them.
9 Now the Philistines had come and made a raid in the valley of Reph'aim.
10 And David inquired of God, "Shall I go up against the Philistines? Wilt thou give them into my hand?" And the LORD said to him, "Go up, and I will give them into your hand."
11 And he went up to Ba'al-pera'zim, and David defeated them there; and David said, "God has broken through my enemies by my hand, like a bursting flood." Therefore the name of that place is called Ba'al-pera'zim.
12 And they left their gods there, and David gave command, and they were burned.
13 And the Philistines yet again made a raid in the valley.
14 And when David again inquired of God, God said to him, "You shall not go up after them; go around and come upon them opposite the balsam trees.
15 And when you hear the sound of marching in the tops of the balsam trees, then go out to battle; for God has gone out before you to smite the army of the Philistines."
16 And David did as God commanded him, and they smote the Philistine army from Gibeon to Gezer.
17 And the fame of David went out into all lands, and the LORD brought the fear of him upon all nations.

1 அவன் தனக்குத் தாவீதின் நகரத்தில் வீடுகளை உண்டாக்கி, தேவனுடைய பெட்டிக்கு ஒரு ஸ்தலத்தை ஆயத்தப்படுத்தி, அதற்கு ஒரு கூடாரத்தைப்போட்டான்.
2 பிற்பாடு தாவீது: லேவியர் ஒழிய, வேறொருவரும் தேவனுடைய பெட்டியை எடுக்கலாகாது; தேவனுடைய பெட்டியை எடுக்கவும், என்றைக்கும் அவருக்குப் பணிவிடைசெய்யவும், அவர்களை கர்த்தர் தெரிந்துகொண்டார் என்றான்.
3 அப்படி கர்த்தருடைய பெட்டிக்குத் தான் ஆயத்தப்படுத்தின அதின் ஸ்தலத்திற்கு அதைக் கொண்டுவரும்படி தாவீது இஸ்ரவேலையெல்லாம் எருசலேமிலே கூடிவரச்செய்தான்.
4 ஆரோனின் புத்திரரையும்,
5 லேவியராகிய கோகாத் புத்திரரில் பிரபுவாகிய ஊரியேலையும் அவன் சகோதரராகிய நூற்றிருபதுபேரையும்,
6 மெராரியின் புத்திரரில் பிரபுவாகிய அசாயாவையும், அவன் சகோதரராகிய இருநூற்றிருபதுபேரையும்,
7 கெர்சோன் புத்திரரில் பிரபுவாகிய யோவேலையும், அவன் சகோதரராகிய நூற்றுமுப்பதுபேரையும்,
8 எலிசாப்பான் புத்திரரில் பிரபுவாகிய செமாயாவையும், அவன் சகோதரராகிய இருநூறுபேரையும்,
9 எப்ரோன் புத்திரரில் பிரபுவாகிய, எலியேலையும், அவன் சகோதரராகிய எண்பதுபேரையும்,
10 ஊசியேல் புத்திரரில் பிரபுவாகிய அம்மினதாபையும், அவன் சகோதரராகிய நூற்றுப்பன்னிரண்டுபேரையும் தாவீது கூடிவரப்பண்ணினான்.
11 பின்பு தாவீது ஆசாரியராகிய சாதோக்கையும், அபியத்தாரையும், லேவியராகிய ஊரியேல், அசாயா, யோவேல், செமாயா, எலியேல், அம்மினதாப் என்பவர்களையும் அழைத்து,
12 அவர்களை நோக்கி: லேவியரில் நீங்கள் பிதாக்களுடைய சந்ததிகளின் தலைவர், நீங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் பெட்டியை அதற்கு நான் ஆயத்தம்பண்ணின ஸ்தலத்திற்குக் கொண்டுவரும்படி, உங்களையும் உங்கள் சகோதரரையும் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்.
13 முதலில் நீங்கள் அதைச் சுமக்காதபடியினாலும், நாம் நம்முடைய தேவனாகிய கர்த்தரை நியாயமானபடியே தேடாதேபோனபடியினாலும், அவர் நமக்குள்ளே அடிவிழப்பண்ணினார் என்றான்.
14 அப்படியே ஆசாரியரும் லேவியரும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் பெட்டியைக் கொண்டுவரத் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டார்கள்.
15 பின்பு லேவி புத்திரர் கர்த்தருடைய வார்த்தையின்படியே, மோசே கற்பித்தபிரகாரம் தேவனுடைய பெட்டியை அதின் தண்டுகளினாலே தங்கள் தோள்மேல் எடுத்துக்கொண்டுவந்தார்கள்.
16 தாவீது லேவியரின் பிரபுக்களை நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரராகிய பாடகரைத் தம்புரு சுரமண்டலம் கைத்தாளம் முதலிய கீதவாத்தியங்கள் முழங்க தங்கள் சத்தத்தை உயர்த்தி, சந்தோஷமுண்டாகப் பாடும்படி நிறுத்தவேண்டுமென்று சொன்னான்.
17 அப்படியே லேவியர் யோவேலின் குமாரனாகிய ஏமானையும், அவன் சகோதரரில் பெரகியாவின் குமாரனாகிய ஆசாப்பையும், மெராரியின் புத்திரரான தங்கள் சகோதரரில் குஷாயாவின் குமாரனாகிய ஏத்தானையும்,
18 இவர்களோடுங்கூட இரண்டாவது வரிசையாகத் தங்கள் சகோதரராகிய சகரியா, பேன், யாசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், பெனாயா, மாசெயா, மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஒபேத்ஏதோம், ஏயெல் என்னும் வாசல் காவலாளரையும் நிறுத்தினார்கள்.
19 பாடகராகிய ஏமானும், ஆசாப்பும், ஏத்தானும், பஞ்சலோகக் கைத்தாளங்களைத் தொனிக்கப்பண்ணிப் பாடினார்கள்.
20 சகரியா, ஆசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், மாசெயா, பெனாயா என்பவர்கள் அல்மோத் என்னும் இசையில் பாடி, தம்புருகளை வாசித்தார்கள்.
21 மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத்ஏதோம், ஏயெல், அசசியா என்பவர்கள் செமனீத் என்னும் இசையில் பாடி, சுரமண்டலங்களை நேர்த்தியாய் வாசித்தார்கள்.
22 லேவியருக்குள்ளே கெனானியா என்பவன் சங்கீதத்தலைவனாயிருந்தான்; அவன் நிபுணனானபடியால், கீதவித்தையைப் படிப்பித்தான்.
23 பெரகியாவும் எல்க்கானாவும் பெட்டிக்கு முன்பாகக் காவல்காத்துவந்தார்கள்.
24 செபனியா, யோசபாத், நெதனெயேல், அமாசாயி, சகரியா, பெனாயா, எலியேசர் என்னும் ஆசாரியர் தேவனுடைய பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊதினார்கள்; ஓபேத் ஏதோமும், எகியாவும் பெட்டிக்கு வாசல் காவலாளராயிருந்தார்கள்.
25 இப்படித் தாவீதும், இஸ்ரவேலின் மூப்பரும், ஆயிரத்துச் சேர்வைக்காரரும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து மகிழ்ச்சியோடே கொண்டுவரப்போனார்கள்.
26 கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியைச் சுமக்கிற லேவியருக்கு தேவன் அநுக்கிரகம்பண்ணினபடியால், அவர்கள் ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டார்கள்.
27 தாவீதும், பெட்டியைச் சுமக்கிற சகல லேவியரும், பாடகரும், பாடகரின் வேலையை விசாரிக்கிற தலைவனாகிய கெனானியாவும், மெல்லிய புடவையான சால்வைகளைத் தரித்திருந்தார்கள்; தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்திருந்தான்.
28 அப்படியே இஸ்ரவேலனைத்தும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கெம்பீரத்தோடும், எக்காளங்கள் பூரிகைகள் கைத்தாளங்களின் தொனியோடும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற சத்தத்தோடும் கொண்டுவந்தார்கள்.
29 கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி தாவீதின் நகரமட்டும் வந்தபோது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் பலகணிவழியாய்ப் பார்த்து, தாவீதுராஜா ஆடிப்பாடி வருகிறதைக் கண்டு, அவனைத் தன் இருதயத்திலே அவமதித்தாள்.


1 David built houses for himself in the city of David; and he prepared a place for the ark of God, and pitched a tent for it.
2 Then David said, "No one but the Levites may carry the ark of God, for the LORD chose them to carry the ark of the LORD and to minister to him for ever."
3 And David assembled all Israel at Jerusalem, to bring up the ark of the LORD to its place, which he had prepared for it.
4 And David gathered together the sons of Aaron and the Levites:
5 of the sons of Kohath, Uri'el the chief, with a hundred and twenty of his brethren;
6 of the sons of Merar'i, Asai'ah the chief, with two hundred and twenty of his brethren;
7 of the sons of Gershom, Jo'el the chief, with a hundred and thirty of his brethren;
8 of the sons of Eli-za'phan, Shemai'ah the chief, with two hundred of his brethren;
9 of the sons of Hebron, Eli'el the chief, with eighty of his brethren;
10 of the sons of Uz'ziel, Ammin'adab the chief, with a hundred and twelve of his brethren.
11 Then David summoned the priests Zadok and Abi'athar, and the Levites Uri'el, Asai'ah, Jo'el, Shemai'ah, Eli'el, and Ammin'adab,
12 and said to them, "You are the heads of the fathers' houses of the Levites; sanctify yourselves, you and your brethren, so that you may bring up the ark of the LORD, the God of Israel, to the place that I have prepared for it.
13 Because you did not carry it the first time, the LORD our God broke forth upon us, because we did not care for it in the way that is ordained."
14 So the priests and the Levites sanctified themselves to bring up the ark of the LORD, the God of Israel.
15 And the Levites carried the ark of God upon their shoulders with the poles, as Moses had commanded according to the word of the LORD.
16 David also commanded the chiefs of the Levites to appoint their brethren as the singers who should play loudly on musical instruments, on harps and lyres and cymbals, to raise sounds of joy.
17 So the Levites appointed Heman the son of Jo'el; and of his brethren Asaph the son of Berechi'ah; and of the sons of Merar'i, their brethren, Ethan the son of Kusha'iah;
18 and with them their brethren of the second order, Zechari'ah, Ja-a'ziel, Shemi'ramoth, Jehi'el, Unni, Eli'ab, Benai'ah, Ma-asei'ah, Mattithi'ah, Eliph'elehu, and Miknei'ah, and the gatekeepers O'bed-e'dom and Je-i'el.
19 The singers, Heman, Asaph, and Ethan, were to sound bronze cymbals;
20 Zechari'ah, A'zi-el, Shemi'ramoth, Jehi'el, Unni, Eli'ab, Ma-asei'ah, and Benai'ah were to play harps according to Al'amoth;
21 but Mattithi'ah, Eliph'elehu, Miknei'ah, O'bed-e'dom, Je-i'el, and Azazi'ah were to lead with lyres according to the Shem'inith.
22 Chenani'ah, leader of the Levites in music, should direct the music, for he understood it.
23 Berechi'ah and Elka'nah were to be gatekeepers for the ark.
24 Shebani'ah, Josh'aphat, Nethan'el, Ama'sai, Zechari'ah, Benai'ah, and Elie'zer, the priests, should blow the trumpets before the ark of God. O'bed-e'dom and Jehi'ah also were to be gatekeepers for the ark.
25 So David and the elders of Israel, and the commanders of thousands, went to bring up the ark of the covenant of the LORD from the house of O'bed-e'dom with rejoicing.
26 And because God helped the Levites who were carrying the ark of the covenant of the LORD, they sacrificed seven bulls and seven rams.
27 David was clothed with a robe of fine linen, as also were all the Levites who were carrying the ark, and the singers, and Chenani'ah the leader of the music of the singers; and David wore a linen ephod.
28 So all Israel brought up the ark of the covenant of the LORD with shouting, to the sound of the horn, trumpets, and cymbals, and made loud music on harps and lyres.
29 And as the ark of the covenant of the LORD came to the city of David, Michal the daughter of Saul looked out of the window, and saw King David dancing and making merry; and she despised him in her heart.

1 அவர்கள் தேவனுடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்தபோது, தாவீது அதற்குப் போட்ட கூடாரத்தின் நடுவே அவர்கள் அதை வைத்து, தேவனுடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினார்கள்.
2 தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தித் தீர்ந்தபின்பு, அவன் ஜனத்தைக் கர்த்தருடைய நாமத்திலே ஆசிர்வதித்து,
3 புருஷர் தொடங்கி ஸ்திரீகள்மட்டும், இஸ்ரவேலராகிய அனைவருக்கும் அவரவருக்கு ஒவ்வொரு அப்பத்தையும் ஒவ்வொரு இறைச்சித் துண்டையும், ஒவ்வொருபடி திராட்சரசத்தையும் பங்கிட்டுக் கொடுத்தான்.
4 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைப் பிரஸ்தாபம்பண்ணித் துதித்துப் புகழுகிறதற்கு கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகச் சேவிக்கத்தக்க லேவியரில் சிலரை நியமித்தான்.
5 அவர்களில் ஆசாப் தலைவனும், சகரியா அவனுக்கு இரண்டாவதுமாயிருந்தான்; ஏயெல், செமிரமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா, ஓபேத்ஏதோம், ஏயெல் என்பவர்கள் தம்புரு சுரமண்டலம் என்னும் கீதவாத்தியங்களை வாசிக்கவும், ஆசாப் கைத்தாளங்களைக் கொட்டவும்,
6 பெனாயா, யாகாசியேல் என்னும் ஆசாரியர் எப்போதும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊதவும் நியமிக்கப்பட்டார்கள்.
7 அப்படி ஆரம்பித்த அந்நாளிலேதானே கர்த்தருக்குத் துதியாகப் பாடும்படி தாவீது ஆசாப்பிடத்திலும் அவன் சகோதரரிடத்திலும் கொடுத்த சங்கீதமாவது:
8 கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.
9 அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணி அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.
10 அவருடைய பரிசுத்த நாமத்தைக்குறித்து மேன்மைபாராட்டுங்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.
11 கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்.
12 அவருடைய தாசனாகிய இஸ்ரவேலின் சந்ததியே! அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் புத்திரரே!
13 அவர் செய்த அதிசயங்களையும் அற்புதங்களையும், அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள்.
14 அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர்; அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும்.
15 ஆயிரந்தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வாக்கையும், ஆபிரகாமோடே அவர் பண்ணின உடன்படிக்கையையும்,
16 அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருங்கள்.
17 அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், இஸ்ரவேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி:
18 உங்கள் சுதந்தரபாகமாக கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.
19 அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத்தொகைக்குட்பட்ட சொற்பஜனங்களும் பரதேசிகளுமாயிருந்தார்கள்.
20 அவர்கள் ஒரு ஜனத்தை விட்டு மறு ஜனத்தண்டைக்கும், ஒரு ராஜ்யத்தை விட்டு மறு தேசத்தாரண்டைக்கும் போனார்கள்.
21 அவர்களை யொடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்கள் நிமித்தம் ராஜாக்களை கடிந்துகொண்டு:
22 நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்குசெய்யாமலும் இருங்கள் என்றார்.
23 பூமியின் சகல குடிகளே, கர்த்தரைப்பாடி, நாளுக்குநாள் அவருடைய ரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள்.
24 ஜாதிகளுக்குள்ளும் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச்சொல்லுங்கள்.
25 கர்த்தர் பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.
26 சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர்.
27 மகிமையும் கனமும் அவர் சமுகத்தில் இருக்கிறது; வல்லமையும் மகிழ்ச்சியும் அவர் ஸ்தலத்தில் இருக்கிறது.
28 ஜனங்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.
29 கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய சந்நிதியில் பிரவேசியுங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.
30 பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்; அவர் பூச்சக்கரத்தை அசையாதபடிக்கு உறுதிப்படுத்துகிறவர்.
31 வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பதாக; கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லப்படுவதாக.
32 சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்கி, நாடும் அதிலுள்ள யாவும் களிகூருவதாக.
33 அப்பொழுது கர்த்தருக்கு முன்பாகக் காட்டுவிருட்சங்களும் கெம்பீரிக்கும்; அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்.
34 கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
35 எங்கள் ரட்சிப்பின் தேவனே, நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப் போற்றி, உம்மைத் துதிக்கிறதினால் மேன்மைபாராட்டும்படிக்கு, எங்களை ரட்சித்து, எங்களைச் சேர்த்துக்கொண்டு, ஜாதிகளுக்கு எங்களை நீங்கலாக்கியருளுமென்று சொல்லுங்கள்.
36 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக, அதற்கு ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லிக் கர்த்தரைத் துதித்தார்கள்.
37 பின்பு பெட்டிக்கு முன்பாக நித்தம் அன்றாடக முறையாய்ச் சேவிக்கும்படி, அவன் அங்கே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக ஆசாப்பையும், அவன் சகோதரரையும், ஓபேத்ஏதோமையும், அவர்களுடைய சகோதரராகிய அறுபத்தெட்டுப்பேரையும் வைத்து,
38 எதித்தூனின் குமாரனாகிய இந்த ஓபேத்ஏதோமையும் ஓசாவையும் வாசல்காக்கிறவர்களாக வைத்தான்.
39 கிபியோனிலுள்ள மேட்டின் மேலிருக்கிற கர்த்தருடைய வாசஸ்தலத்திற்கு முன்பாக இருக்கிற சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனங்களை நித்தமும், அந்திசந்தியில் கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியெல்லாம் கர்த்தருக்குச் செலுத்துவதற்காக,
40 அங்கே அவன் ஆசாரியனாகிய சாதோக்கையும், அவன் சகோதரராகிய ஆசாரியரையும் வைத்து,
41 இவர்களோடுங்கூட ஏமானையும், எதித்தூனையும், பேர்பேராகக் குறித்துத் தெரிந்துகொள்ளப்பட்ட மற்றச் சிலரையும் கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைத் துதிக்கவும்,
42 பூரிகைகளையும் கைத்தாளங்களையும் தேவனைப் பாடுகிறதற்குரிய கீதவாத்தியங்களையும் தொனிக்கச்செய்யவும் அவர்களுடன் ஏமானையும் எதித்தூனையும் வைத்து, எதித்தூனின் குமாரரை வாசல்காக்கிறவர்களாகக் கட்டளையிட்டான்.
43 பின்பு ஜனங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் வீட்டிற்குப் போனார்கள்; தாவீதும் தன் வீட்டாரை ஆசீர்வதிக்கத்திரும்பினான்.


1 And they brought the ark of God, and set it inside the tent which David had pitched for it; and they offered burnt offerings and peace offerings before God.
2 And when David had finished offering the burnt offerings and the peace offerings, he blessed the people in the name of the LORD,
3 and distributed to all Israel, both men and women, to each a loaf of bread, a portion of meat, and a cake of raisins.
4 Moreover he appointed certain of the Levites as ministers before the ark of the LORD, to invoke, to thank, and to praise the LORD, the God of Israel.
5 Asaph was the chief, and second to him were Zechari'ah, Je-i'el, Shemi'ramoth, Jehi'el, Mattithi'ah, Eli'ab, Benai'ah, O'bed-e'dom, and Je-i'el, who were to play harps and lyres; Asaph was to sound the cymbals,
6 and Benai'ah and Jaha'ziel the priests were to blow trumpets continually, before the ark of the covenant of God.
7 Then on that day David first appointed that thanksgiving be sung to the LORD by Asaph and his brethren.
8 O give thanks to the LORD, call on his name, make known his deeds among the peoples!
9 Sing to him, sing praises to him, tell of all his wonderful works!
10 Glory in his holy name; let the hearts of those who seek the LORD rejoice!
11 Seek the LORD and his strength, seek his presence continually!
12 Remember the wonderful works that he has done, the wonders he wrought, the judgments he uttered,
13 O offspring of Abraham his servant, sons of Jacob, his chosen ones!
14 He is the LORD our God; his judgments are in all the earth.
15 He is mindful of his covenant for ever, of the word that he commanded, for a thousand generations,
16 the covenant which he made with Abraham, his sworn promise to Isaac,
17 which he confirmed as a statute to Jacob, as an everlasting covenant to Israel,
18 saying, "To you I will give the land of Canaan, as your portion for an inheritance."
19 When they were few in number, and of little account, and sojourners in it,
20 wandering from nation to nation, from one kingdom to another people,
21 he allowed no one to oppress them; he rebuked kings on their account,
22 saying, "Touch not my anointed ones, do my prophets no harm!"
23 Sing to the Lord, all the earth! Tell of his salvation from day to day.
24 Declare his glory among the nations, his marvelous works among all the peoples!
25 For great is the LORD, and greatly to be praised, and he is to be held in awe above all gods.
26 For all the gods of the peoples are idols; but the LORD made the heavens.
27 Honor and majesty are before him; strength and joy are in his place.
28 Ascribe to the LORD, O families of the peoples, ascribe to the LORD glory and strength!
29 Ascribe to the LORD the glory due his name; bring an offering, and come before him! Worship the LORD in holy array;
30 tremble before him, all the earth; yea, the world stands firm, never to be moved.
31 Let the heavens be glad, and let the earth rejoice, and let them say among the nations, "The LORD reigns!"
32 Let the sea roar, and all that fills it, let the field exult, and everything in it!
33 Then shall the trees of the wood sing for joy before the LORD, for he comes to judge the earth.
34 O give thanks to the LORD, for he is good; for his steadfast love endures for ever!
35 Say also: "Deliver us, O God of our salvation, and gather and save us from among the nations, that we may give thanks to thy holy name, and glory in thy praise.
36 Blessed be the LORD, the God of Israel, from everlasting to everlasting!" Then all the people said "Amen!" and praised the LORD.
37 So David left Asaph and his brethren there before the ark of the covenant of the LORD to minister continually before the ark as each day required,
38 and also O'bed-e'dom and his sixty-eight brethren; while O'bed-e'dom, the son of Jedu'thun, and Hosah were to be gatekeepers.
39 And he left Zadok the priest and his brethren the priests before the tabernacle of the LORD in the high place that was at Gibeon,
40 to offer burnt offerings to the LORD upon the altar of burnt offering continually morning and evening, according to all that is written in the law of the LORD which he commanded Israel.
41 With them were Heman and Jedu'thun, and the rest of those chosen and expressly named to give thanks to the LORD, for his steadfast love endures for ever.
42 Heman and Jedu'thun had trumpets and cymbals for the music and instruments for sacred song. The sons of Jedu'thun were appointed to the gate.
43 Then all the people departed each to his house, and David went home to bless his household.

1 தாவீது தன் வீட்டிலே வாசமாயிருக்கிறபோது, அவன் தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், நான் கேதுருமரவீட்டிலே வாசம்பண்ணுகிறேன்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியோ திரைகளின்கீழ் இருக்கிறது என்றான்.
2 அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: உம்முடைய இருதயத்தில் இருக்கிறதையெல்லாம் செய்யும்; தேவன் உம்மோடு இருக்கிறார் என்றான்.
3 அன்று ராத்திரியிலே, தேவனுடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, அவர்:
4 நீ போய், என் தாசனாகிய தாவீதை நோக்கி: கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் வாசமாயிருக்க நீ எனக்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்.
5 நான் இஸ்ரவேலை வரப்பண்ணின நாள்முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் நான் ஒரு ஆலயத்திலே வாசம்பண்ணாமல், ஒரு கூடாரத்திலிருந்து மறு கூடாரத்துக்கும், ஒரு வாசஸ்தலத்திலிருந்து மறு வாசஸ்தலத்துக்கும் போனேன்.
6 நான் சகல இஸ்ரவேலோடும் உலாவி வந்த எவ்விடத்திலாகிலும், நான் என் ஜனத்தை மேய்க்கக் கற்பித்த இஸ்ரவேலின் நியாயாதிபதிகளில் யாதொருவனை நோக்கி: நீங்கள் எனக்குக் கேதுருமரத்தால் செய்யப்பட்ட ஆலயத்தைக் கட்டாதிருக்கிறது என்ன என்று யாதொரு வார்த்தை சொன்னது உண்டோ?
7 இப்போதும், நீ என் தாசனாகிய தாவீதை நோக்கி: சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை ஆட்டுமந்தையை விட்டு எடுத்து,
8 நீ போன இடமெல்லாம் உன்னோடே இருந்து, உன் சத்துருக்களையெல்லாம் உனக்கு முன்பாக நிர்மூலமாக்கி, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த நாமத்தை உனக்கு உண்டாக்கினேன்.
9 நான் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு ஒரு இடத்தையும் ஏற்படுத்தி, அவர்கள் தங்கள் ஸ்தானத்திலே குடியிருக்கவும், இனி அவர்கள் அலையாமலும், முன்போலும், நான் என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளைக் கட்டளையிட்ட நாள்முதல் நடந்ததுபோலும், நியாயக்கேட்டின் மக்களால் இனிச் சிறுமைப்படாமலும் இருக்கவும் அவர்களை நாட்டினேன்.
10 உன் சத்துருக்களையெல்லாம் கீழ்ப்படுத்தினேன். இப்போதும் கர்த்தர் உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவார் என்பதை உனக்கு அறிவிக்கிறேன்.
11 நீ உன் பிதாக்களிடத்திலே போக, உன் நாட்கள் நிறைவேறும்போது, நான் உனக்குப்பின்பு உன் புத்திரரில் ஒருவனாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன்.
12 அவன் எனக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்.
13 நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்; உனக்கு முன் இருந்தவனை விட்டு என் கிருபையை நான் விலகப்பண்ணினதுபோல, அவனை விட்டு விலகப்பண்ணாமல்,
14 அவனை என் ஆலயத்திலும் என் ராஜ்யத்திலும் என்றென்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்; அவனுடைய ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும் என்று சொல் என்றார்.
15 நாத்தான் இந்த எல்லா வார்த்தைகளின்படியும் இந்த எல்லாத் தரிசனத்தின்படியும் தாவீதுக்குச் சொன்னான்.
16 அப்பொழுது தாவீதுராஜா உட்பிரவேசித்து, கர்த்தருடைய சமுகத்திலிருந்து: தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்?
17 தேவனே, இது இன்னும் உம்முடைய பார்வைக்குக் கொஞ்சக்காரியமாயிருக்கிறது என்று தேவனான கர்த்தராயிருக்கிற நீர் உமது அடியானுடைய வீட்டைக்குறித்து வெகுதூரமாயிருக்கும் காலத்துச் செய்தியையும் சொல்லி, என்னை மகா மேன்மையான சந்ததியின் மனுஷனாகப் பார்த்தீர்.
18 உமது அடியானுக்கு உண்டாகும் கனத்தைப்பற்றி, தாவீது அப்புறம் உம்மோடே சொல்வது என்ன? தேவரீர் உமது அடியானை அறிவீர்.
19 கர்த்தாவே, உமது அடியானின் நிமித்தமும், உமது இருதயத்தின்படியும், இந்தப் பெரிய காரியங்களையெல்லாம் அறியப்பண்ணும்படிக்கு, இந்தப் பெரிய காரியத்தையெல்லாம் செய்தீர்.
20 கர்த்தாவே, நாங்கள் எங்கள் காதுகளால் கேட்ட எல்லாவற்றின்படியும் தேவரீருக்கு நிகரானவர் இல்லை; உம்மைத்தவிர வேறே தேவனும் இல்லை.
21 உமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கு நிகரான ஜனமும் உண்டோ? பூலோகத்தில் இந்த ஒரே ஜாதியை தேவனாகிய நீர் உமக்கு ஜனமாக மீட்கும்படி, பயங்கரமான பெரிய காரியங்களினால் உமக்குக் கீர்த்தியை உண்டாக்கி, நீர் எகிப்திற்கு நீங்கலாக்கி மீட்ட உமது ஜனத்திற்குமுன்பாக ஜாதிகளைத் துரத்தி,
22 உமது ஜனமாகிய இஸ்ரவேலர் என்றைக்கும் உமது ஜனமாயிருப்பதற்கு அவர்களை நிலைப்படுத்தி, கர்த்தராகிய நீர்தாமே அவர்களுக்கு தேவனானீர்.
23 இப்போதும் கர்த்தாவே, தேவரீர் அடியானையும் அவன் வீட்டையும் குறித்துச் சொன்ன வார்த்தை என்றென்றைக்கும் நிலைவரப்பட்டிருப்பதாக; தேவரீர் சொன்னபடியே செய்தருளும்.
24 ஆம், அது நிலைவரப்பட்டிருக்கவும், இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் இஸ்ரவேலுக்கு தேவன் என்றும் உமது அடியானாகிய தாவீதின் வீடு உமக்கு முன்பாக, திடமானதென்றும் சொல்லப்படுவதினால், உமது நாமம் என்றைக்கும் மகிமைப்படவும்கடவது.
25 உனக்கு வீடு கட்டுவேன் என்று என் தேவனாகிய நீர் உமது அடியான் செவிகேட்க வெளிப்படுத்தினீர்; ஆகையால் உமக்கு முன்பாக விண்ணப்பம்பண்ண, அடியானுக்கு மனத்தைரியம் கிடைத்தது.
26 இப்போதும் கர்த்தாவே, நீரே தேவன்; நீர் உமது அடியானைக்குறித்து இந்த நல்ல விசேஷத்தைச் சொன்னீர்.
27 இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படிக்கு, அதை ஆசிர்வதித்தருளினீர்; கர்த்தராகிய தேவரீர் அதை ஆர்வதித்தபடியினால், அது என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் என்றான்.


1 Now when David dwelt in his house, David said to Nathan the prophet, "Behold, I dwell in a house of cedar, but the ark of the covenant of the LORD is under a tent."
2 And Nathan said to David, "Do all that is in your heart, for God is with you."
3 But that same night the word of the LORD came to Nathan,
4 "Go and tell my servant David, `Thus says the LORD: You shall not build me a house to dwell in.
5 For I have not dwelt in a house since the day I led up Israel to this day, but I have gone from tent to tent and from dwelling to dwelling.
6 In all places where I have moved with all Israel, did I speak a word with any of the judges of Israel, whom I commanded to shepherd my people, saying, "Why have you not built me a house of cedar?"'
7 Now therefore thus shall you say to my servant David, `Thus says the LORD of hosts, I took you from the pasture, from following the sheep, that you should be prince over my people Israel;
8 and I have been with you wherever you went, and have cut off all your enemies from before you; and I will make for you a name, like the name of the great ones of the earth.
9 And I will appoint a place for my people Israel, and will plant them, that they may dwell in their own place, and be disturbed no more; and violent men shall waste them no more, as formerly,
10 from the time that I appointed judges over my people Israel; and I will subdue all your enemies. Moreover I declare to you that the LORD will build you a house.
11 When your days are fulfilled to go to be with your fathers, I will raise up your offspring after you, one of your own sons, and I will establish his kingdom.
12 He shall build a house for me, and I will establish his throne for ever.
13 I will be his father, and he shall be my son; I will not take my steadfast love from him, as I took it from him who was before you,
14 but I will confirm him in my house and in my kingdom for ever and his throne shall be established for ever.'"
15 In accordance with all these words, and in accordance with all this vision, Nathan spoke to David.
16 Then King David went in and sat before the LORD, and said, "Who am I, O LORD God, and what is my house, that thou hast brought me thus far?
17 And this was a small thing in thy eyes, O God; thou hast also spoken of thy servant's house for a great while to come, and hast shown me future generations, O LORD God!
18 And what more can David say to thee for honoring thy servant? For thou knowest thy servant.
19 For thy servant's sake, O LORD, and according to thy own heart, thou hast wrought all this greatness, in making known all these great things.
20 There is none like thee, O LORD, and there is no God besides thee, according to all that we have heard with our ears.
21 What other nation on earth is like thy people Israel, whom God went to redeem to be his people, making for thyself a name for great and terrible things, in driving out nations before thy people whom thou didst redeem from Egypt?
22 And thou didst make thy people Israel to be thy people for ever; and thou, O LORD, didst become their God.
23 And now, O LORD, let the word which thou hast spoken concerning thy servant and concerning his house be established for ever, and do as thou hast spoken;
24 and thy name will be established and magnified for ever, saying, `The LORD of hosts, the God of Israel, is Israel's God,' and the house of thy servant David will be established before thee.
25 For thou, my God, hast revealed to thy servant that thou wilt build a house for him; therefore thy servant has found courage to pray before thee.
26 And now, O LORD, thou art God, and thou hast promised this good thing to thy servant;
27 now therefore may it please thee to bless the house of thy servant, that it may continue for ever before thee; for what thou, O LORD, hast blessed is blessed for ever."

1 இதற்குப்பின்பு, தாவீது பெலிஸ்தரை முறிய அடித்து, அவர்களைக் கீழ்ப்படுத்தி, காத்பட்டணத்தையும் அதின் கிராமங்களையும் பெலிஸ்தரின் கையிலிருந்து பிடித்துக்கொண்டான்.
2 அவன் மோவாபியரையும் முறியடித்ததினால், மோவாபியர் தாவீதைச் சேவித்து அவனுக்குக் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்.
3 சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசர் ஐபிராத் நதியண்டையில் தன் இராணுவத்தை நிறுத்தப்போகிறபோது, தாவீது அவனையும் ஆமாத்தின் கிட்டே முறிய அடித்தான்.
4 அவனுக்கு இருந்த ஆயிரம் இரதங்களையும் ஆயிரம் குதிரைவீரரையும் பதினாயிரம் காலாட்களையும் பிடித்து, இரதங்களில் நூறு இரதங்களையும் வைத்துக்கொண்டு, மற்றவைகளையெல்லாம் துண்டாடிப்போட்டான்.
5 சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசருக்கு உதவிசெய்ய தமஸ்குபட்டணத்தாராகிய சீரியர் வந்தார்கள்; தாவீது சீரியரில் இருபத்தீராயிரம்பேரை வெட்டிப்போட்டு,
6 தமஸ்குவுக்கடுத்த சீரியாவிலே தாணையங்களை வைத்தான்; சீரியர் தாவீதைச் சேவித்து அவனுக்குக் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்; தாவீது போன இடத்திலெல்லாம் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்.
7 ஆதாரேசரின் சேவகருக்கு இருந்த பொன் பரிசைகளைத் தாவீது எடுத்து, அவைகளை எருசலேமுக்குக் கொண்டுவந்தான்.
8 ஆதாரேசரின் பட்டணங்களாகிய திப்காத்திலும் கூனிலுமிருந்து தாவீது வெகு திரளான வெண்கலத்தையும் எடுத்துக்கொண்டுவந்தான்; அதினாலே சாலொமோன் வெண்கலக் கடல்தொட்டியையும் தூண்களையும் வெண்கலத் தட்டுமுட்டுகளையும் உண்டாக்கினான்.
9 தாவீது சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசரின் இராணுவத்தையெல்லாம் முறிய அடித்த செய்தியை ஆமாத்தின் ராஜாவாகிய தோயூ கேட்டபோது,
10 அவன் தாவீது ராஜாவின் சுகசெய்தியை விசாரிக்கவும், அவன் ஆதாரேசரோடு யுத்தம்பண்ணி, அவனை முறிய அடித்ததற்காக அவனுக்கு வினவுதல் சொல்லவும், தன் குமாரனாகிய அதோராமையும், பொன்னும் வெள்ளியும் வெண்கலமுமான சகலவிதத் தட்டுமுட்டுகளையும், அவனிடத்துக்கு அனுப்பினான்; ஆதாரேசர் தோயூவின்மேல் யுத்தம்பண்ணுகிறவனாயிருந்தான்.
11 அந்தத் தட்டுமுட்டுகளையும், தான் ஏதோமியர், மோவாபியர், அம்மோன் புத்திரர், பெலிஸ்தர், அமலேக்கியர் என்னும் சகல ஜாதிகளின் கையிலும் வாங்கின வெள்ளியையும், பொன்னையும்கூடத் தாவீதுராஜா கர்த்தருக்குப் பரிசுத்தமென்று நேர்ந்துகொண்டான்.
12 செருயாவின் குமாரன் அபிசாயி உப்புப் பள்ளத்தாக்கிலே பதினெண்ணாயிரம் ஏதோமியரை முறிய அடித்தான்.
13 ஆகையால் தாவீது ஏதோமிலே தாணையம் போட்டான்; ஏதோமியர் எல்லாரும் அவனைச் சேவிக்கிறவர்களானார்கள்; தாவீது போன இடத்திலெல்லாம் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்.
14 தாவீது இஸ்ரவேலையெல்லாம் ஆண்டு, தன்னுடைய ஜனத்திற்கெல்லாம் நியாயமும் நீதியும் செய்தான்.
15 செருயாவின் குமாரன் யோவாப் இராணுவத்தலைவனாயிருந்தான்; ஆகிலுூதின் குமாரனாகிய யோசபாத் மந்திரியாயிருந்தான்.
16 அகிதூபின் குமாரன் சாதோக்கும், அபியத்தாரின் குமாரன் அபிமெலேக்கும் ஆசாரியராயிருந்தார்கள்; சவிஷா சம்பிரதியாயிருந்தான்.
17 யோய்தாவின் குமாரன் பெனாயா கிரேத்தியருக்கும் பிலேத்தியருக்கும் தலைவனாயிருந்தான்; தாவீதின் புத்திரர் ராஜாவினிடத்தில் பிரதானிகளாயிருந்தார்கள்.


1 After this David defeated the Philistines and subdued them, and he took Gath and its villages out of the hand of the Philistines.
2 And he defeated Moab, and the Mo'abites became servants to David and brought tribute.
3 David also defeated Hadade'zer king of Zobah, toward Hamath, as he went to set up his monument at the river Euphra'tes.
4 And David took from him a thousand chariots, seven thousand horsemen, and twenty thousand foot soldiers; and David hamstrung all the chariot horses, but left enough for a hundred chariots.
5 And when the Syrians of Damascus came to help Hadade'zer king of Zobah, David slew twenty-two thousand men of the Syrians.
6 Then David put garrisons in Syria of Damascus; and the Syrians became servants to David, and brought tribute. And the LORD gave victory to David wherever he went.
7 And David took the shields of gold which were carried by the servants of Hadade'zer, and brought them to Jerusalem.
8 And from Tibhath and from Cun, cities of Hadade'zer, David took very much bronze; with it Solomon made the bronze sea and the pillars and the vessels of bronze.
9 When To'u king of Hamath heard that David had defeated the whole army of Hadade'zer, king of Zobah,
10 he sent his son Hador'am to King David, to greet him, and to congratulate him because he had fought against Hadade'zer and defeated him; for Hadade'zer had often been at war with To'u. And he sent all sorts of articles of gold, of silver, and of bronze;
11 these also King David dedicated to the LORD, together with the silver and gold which he had carried off from all the nations, from Edom, Moab, the Ammonites, the Philistines, and Am'alek.
12 And Abi'shai, the son of Zeru'iah, slew eighteen thousand E'domites in the Valley of Salt.
13 And he put garrisons in Edom; and all the E'domites became David's servants. And the LORD gave victory to David wherever he went.
14 So David reigned over all Israel; and he administered justice and equity to all his people.
15 And Jo'ab the son of Zeru'iah was over the army; and Jehosh'aphat the son of Ahi'lud was recorder;
16 and Zadok the son of Ahi'tub and Ahim'elech the son of Abi'athar were priests; and Shavsha was secretary;
17 and Benai'ah the son of Jehoi'ada was over the Cher'ethites and the Pel'ethites; and David's sons were the chief officials in the service of the king.

1 அதன்பின்பு, அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய நாகாஸ் மரித்து, அவன் குமாரன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
2 அப்பொழுது தாவீது: ஆனூனின் தகப்பனாகிய நாகாஸ் எனக்குத் தயவுசெய்ததுபோல, நானும் அவன் குமாரனாகிய இவனுக்குத் தயவுசெய்வேன் என்று சொல்லி, அவன் தகப்பனுக்காக அவனுக்கு ஆறுதல்சொல்ல ஸ்தானாபதிகளை அனுப்பினான்; தாவீதின் ஊழியக்காரர் ஆனூனுக்கு ஆறுதல் சொல்ல அம்மோன் புத்திரரின் தேசத்திலே வந்தபோது,
3 அம்மோன் புத்திரரின் பிரபுக்கள் ஆனூனைப் பார்த்து: தாவீது ஆறுதல் சொல்லுகிறவர்களை உம்மிடத்தில் அனுப்பினது, உம்முடைய தகப்பனைக் கனம்பண்ணுகிறதாய் உமக்குத் தோன்றுகிறதோ? தேசத்தை ஆராயவும், அதைக் கவிழ்த்துப்போடவும், உளவுபார்க்கவும் அல்லவோ, அவன் ஊழியக்காரர் உம்மிடத்தில் வந்தார்கள் என்று சொன்னார்கள்.
4 அப்பொழுது ஆனூன்: தாவீதின் ஊழியக்காரரைப் பிடித்து, அவர்கள் தாடியைச் சிரைத்து, அவர்களுடைய வஸ்திரங்களை இருப்பிடமட்டும் வைத்துவிட்டு, மற்றப் பாதியைக் கத்தரித்துப்போட்டு, அவர்களை அனுப்பிவிட்டான்.
5 அந்த மனுஷர் வருகையில், அவர்கள் செய்தி தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது அந்த மனுஷர் மிகவும் வெட்கப்பட்டபடியினால், அவர்களுக்கு எதிராக ராஜா ஆட்களை அனுப்பி: உங்கள் தாடி வளருமட்டும் நீங்கள் எரிகோவிலிருந்து பிற்பாடு வாருங்கள் என்று சொல்லச்சொன்னான்.
6 அம்மோன் புத்திரர் தாங்கள் தாவீதுக்கு அருவருப்பானதைக் கண்டபோது, ஆனூனும் அம்மோன் புத்திரரும் மெசொப்பொத்தாமியாவிலும் மாக்கா சோபா என்னும் சீரியரின் தேசத்திலுமிருந்து தங்களுக்கு இரதங்களும் குதிரைவீரரும் கூலிக்கு வரும்படி ஆயிரம்தாலந்து வெள்ளி அனுப்பி,
7 முப்பத்தீராயிரம் இரதங்களையும், மாக்காவின் ராஜாவையும், அவன் ஜனத்தையும் கூலிப்படையாக அழைப்பித்தான்; இவர்கள் வந்து, மேதேபாவுக்கு முன்புறத்திலே பாளயமிறங்கினார்கள்; அம்மோன் புத்திரரும் தங்கள் பட்டணங்களிலிருந்து கூடிக்கொண்டு யுத்தம்பண்ண வந்தார்கள்.
8 அதைத் தாவீது கேட்டபோது, யோவாபையும் பலசாலிகளின் இராணுவம் முழுவதையும் அனுப்பினான்.
9 அம்மோன் புத்திரர் புறப்பட்டுவந்து, பட்டணத்து வாசலண்டையில் அணிவகுத்தார்கள்; வந்த ராஜாக்கள் தனித்து வெளியிலே போருக்கு ஆயத்தமாய் நின்றார்கள்.
10 யுத்த இராணுவங்களின் முகப்புத் தனக்கு முன்னும் பின்னும் இருக்கிறதை யோவாப் கண்டு, அவன் இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட அனைவரிலும் ஒரு பங்கைப் பிரித்தெடுத்து, அதைச் சீரியருக்கு எதிராக நிறுத்தி,
11 மற்ற ஜனத்தை அம்மோன் புத்திரருக்கு எதிராகப் போருக்கு ஆயத்தப்படுத்தி, தன் சகோதரனாகிய அபிசாயிக்கு ஒப்புவித்து, அவனை நோக்கி:
12 என்னைப்பார்க்கிலும் சீரியர் பலங்கொண்டால் நீ எனக்குத் துணைநில்; உன்னைப்பார்க்கிலும் அம்மோன் புத்திரர் பலங்கொண்டால் நான் உனக்குத் துணைநிற்பேன்.
13 தைரியமாயிரு; நாம் நம்முடைய ஜனத்திற்காகவும், நமது தேவனுடைய பட்டணங்களுக்காகவும் திடன்கொண்டிருக்கக்கடவோம்; கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்.
14 பின்பு யோவாபும் அவனோடிருந்த ஜனமும் சீரியரோடு யுத்தம்பண்ணச் சேர்ந்தார்கள்; அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்.
15 சீரியர் முறிந்தோடுகிறதை அம்மோன் புத்திரர் கண்டபோது, அவர்களும் அவன் சகோதரனாகிய அபிசாயிக்கு முன்பாக முறிந்தோடிப் பட்டணத்திற்கு உட்பட்டார்கள்; யோவாப் திரும்ப எருசலேமுக்கு வந்தான்.
16 தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டதைக் கண்டபோது, அவர்கள் நதிக்கு அப்புறத்திலிருக்கிற சீரியரை வரவழைத்தார்கள்; ஆதாரேசரின் படைத்தலைவனாகிய சோப்பாக் அவர்களுக்கு முன்னாலே நடந்துபோனான்.
17 அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் இஸ்ரவேலையெல்லாம் கூட்டிக்கொண்டு, யோர்தானைக் கடந்து, அவர்களுக்குச் சமீபமாய் வந்தபோது, அவர்களுக்கு எதிராக இராணுவங்களை நிறுத்தினார்கள்; தாவீது சீரியருக்கு எதிராக இராணுவங்களைப் போருக்கு ஆயத்தப்படுத்தினபின் அவனோடு யுத்தம்பண்ணினார்கள்
18 சீரியர் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்; தாவீது சீரியரில் ஏழாயிரம் இரதங்களின் மனுஷரையும், நாற்பதினாயிரம் காலாட்களையும் கொன்று, படைத்தலைவனாகிய சோப்பாக்கையும் கொன்றான்.
19 தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாகமுறிய அடிக்கப்பட்டதை ஆதாரேசரின் சேவகர் கண்டபோது அவர்கள் தாவீதோடே சமாதானம்பண்ணி, அவனைச் சேவித்தார்கள்; அப்புறம் அம்மோன் புத்திரருக்கு உதவிசெய்ய சீரியர் மனதில்லாதிருந்தார்கள்.


1 Now after this Nahash the king of the Ammonites died, and his son reigned in his stead.
2 And David said, "I will deal loyally with Hanun the son of Nahash, for his father dealt loyally with me." So David sent messengers to console him concerning his father. And David's servants came to Hanun in the land of the Ammonites, to console him.
3 But the princes of the Ammonites said to Hanun, "Do you think, because David has sent comforters to you, that he is honoring your father? Have not his servants come to you to search and to overthrow and to spy out the land?"
4 So Hanun took David's servants, and shaved them, and cut off their garments in the middle, at their hips, and sent them away;
5 and they departed. When David was told concerning the men, he sent to meet them, for the men were greatly ashamed. And the king said, "Remain at Jericho until your beards have grown, and then return."
6 When the Ammonites saw that they had made themselves odious to David, Hanun and the Ammonites sent a thousand talents of silver to hire chariots and horsemen from Mesopota'mia, from Aram-ma'acah, and from Zobah.
7 They hired thirty-two thousand chariots and the king of Ma'acah with his army, who came and encamped before Med'eba. And the Ammonites were mustered from their cities and came to battle.
8 When David heard of it, he sent Jo'ab and all the army of the mighty men.
9 And the Ammonites came out and drew up in battle array at the entrance of the city, and the kings who had come were by themselves in the open country.
10 When Jo'ab saw that the battle was set against him both in front and in the rear, he chose some of the picked men of Israel, and arrayed them against the Syrians;
11 the rest of his men he put in the charge of Abi'shai his brother, and they were arrayed against the Ammonites.
12 And he said, "If the Syrians are too strong for me, then you shall help me; but if the Ammonites are too strong for you, then I will help you.
13 Be of good courage, and let us play the man for our people, and for the cities of our God; and may the LORD do what seems good to him."
14 So Jo'ab and the people who were with him drew near before the Syrians for battle; and they fled before him.
15 And when the Ammonites saw that the Syrians fled, they likewise fled before Abi'shai, Jo'ab's brother, and entered the city. Then Jo'ab came to Jerusalem.
16 But when the Syrians saw that they had been defeated by Israel, they sent messengers and brought out the Syrians who were beyond the Euphra'tes, with Shophach the commander of the army of Hadade'zer at their head.
17 And when it was told David, he gathered all Israel together, and crossed the Jordan, and came to them, and drew up his forces against them. And when David set the battle in array against the Syrians, they fought with him.
18 And the Syrians fled before Israel; and David slew of the Syrians the men of seven thousand chariots, and forty thousand foot soldiers, and killed also Shophach the commander of their army.
19 And when the servants of Hadade'zer saw that they had been defeated by Israel, they made peace with David, and became subject to him. So the Syrians were not willing to help the Ammonites any more.

1 மறுவருஷம், ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படும் காலம் வந்தபோது, யோவாப் இராணுவபலத்தைக் கூட்டிக்கொண்டுபோய், அம்மோன் புத்திரரின்தேசத்தைப் பாழ்க்கடித்து ரப்பாவுக்குவந்து அதை முற்றிக்கைபோட்டான்; தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான்; யோவாப் ரப்பாவை அடித்துச் சங்கரித்தான்.
2 தாவீது வந்து, அவர்கள் ராஜாவுடைய தலையின்மேல் இருந்த கிரீடத்தை எடுத்துக்கொண்டான்; அது ஒரு தாலந்து நிறையும் ரத்தினங்கள் பதித்ததுமாயிருந்தது; அது தாவீதின்தலையில் வைக்கப்பட்டது; பட்டணத்திலிருந்து ஏராளமான கொள்ளையையும் கொண்டுபோனான்.
3 பின்பு அதிலிருந்த ஜனங்களை அவன் வெளியே கொண்டுபோய், அவர்களை வாள்களுக்கும், இருப்புப்பாரைகளுக்கும், கோடரிகளுக்கும் உட்படுத்தி; இப்படி அம்மோன் புத்திரரின் பட்டணங்களுக்கெல்லாம் தாவீது செய்து, எல்லா ஜனத்தோடுங்கூட எருசலேமுக்குத் திரும்பினான்.
4 அதற்குப்பின்பு கேசேரிலே பெலிஸ்தரோடு யுத்தம் உண்டாயிற்று; அப்பொழுது ஊசாத்தியனாகிய சிபெக்காய் இராட்சத புத்திரரில் ஒருவனான சிப்பாயி என்பவனைக் கொன்றான்; அதினால் அவர்கள் வசப்படுத்தப்பட்டார்கள்.
5 திரும்பப் பெலிஸ்தரோடு யுத்தமுண்டாகிறபோது, யாவீரின் குமாரனாகிய எல்க்கானான் காத்தூரானாகிய கோலியாத்தின் சகோதரனான லாகேமியைக் கொன்றான்; அவன் ஈட்டித் தாங்கு நெய்கிறவர்களின் படைமரம் அவ்வளவு பெரிதாயிருந்தது.
6 மறுபடியும் ஒரு யுத்தம் காத்திலே நடந்தபோது, அங்கே நெட்டையனான ஒரு மனுஷன் இருந்தான்; அவனுக்கு அவ்வாறு விரலாக இருபத்துநாலு விரல்கள் இருந்தது, அவனும் இராட்சத சந்ததியாயிருந்து,
7 இஸ்ரவேலை நிந்தித்தான்; தாவீதின் சகோதரனாகிய சிமேயாவின் குமாரன் யோனத்தான் அவனைக் கொன்றான்.
8 காத்தூரிலிருந்த இராட்சதனுக்குப் பிறந்த இவர்கள் தாவீதின் கையினாலும் அவன் சேவகரின் கையினாலும் மடிந்தார்கள்.


1 In the spring of the year, the time when kings go forth to battle, Jo'ab led out the army, and ravaged the country of the Ammonites, and came and besieged Rabbah. But David remained at Jerusalem. And Jo'ab smote Rabbah, and overthrew it.
2 And David took the crown of their king from his head; he found that it weighed a talent of gold, and in it was a precious stone; and it was placed on David's head. And he brought forth the spoil of the city, a very great amount.
3 And he brought forth the people who were in it, and set them to labor with saws and iron picks and axes; and thus David did to all the cities of the Ammonites. Then David and all the people returned to Jerusalem.
4 And after this there arose war with the Philistines at Gezer; then Sib'becai the Hu'shathite slew Sip'pai, who was one of the descendants of the giants; and the Philistines were subdued.
5 And there was again war with the Philistines; and Elha'nan the son of Ja'ir slew Lahmi the brother of Goliath the Gittite, the shaft of whose spear was like a weaver's beam.
6 And there was again war at Gath, where there was a man of great stature, who had six fingers on each hand, and six toes on each foot, twenty-four in number; and he also was descended from the giants.
7 And when he taunted Israel, Jonathan the son of Shim'e-a, David's brother, slew him.
8 These were descended from the giants in Gath; and they fell by the hand of David and by the hand of his servants.

1 சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது.
2 அப்படியே தாவீது யோவாபையும், ஜனத்தின் சேர்வைக்காரரையும் நோக்கி: நீங்கள் போய், பெயெர்செபாதொடங்கித் தாண்மட்டும் இருக்கிற இஸ்ரவேலை எண்ணி, அவர்கள் இலக்கத்தை நான் அறியும்படிக்கு, என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்.
3 அப்பொழுது யோவாப் கர்த்தருடைய ஜனங்கள் இப்போது இருக்கிறதைப்பார்க்கிலும் நூறத்தனையாய் அவர் வர்த்திக்கப்பண்ணுவாராக; ஆனாலும் ராஜாவாகிய என் ஆண்டவனே, அவர்களெல்லாரும் என் ஆண்டவனின் சேவகரல்லவா? என் ஆண்டவன் இதை விசாரிப்பானேன்? இஸ்ரவேலின்மேல் குற்றமுண்டாக இது நடக்கவேண்டியது என்ன என்றான்.
4 யோவாப் அப்படிச் சொல்லியும், ராஜாவின் வார்த்தை மேலிட்டபடியினால், யோவாப் புறப்பட்டு, இஸ்ரவேல் எங்கும் சுற்றித்திரிந்து எருசலேமுக்கு வந்து,
5 ஜனத்தை இலக்கம்பார்த்து, தொகையைத் தாவீதிடத்தில் கொடுத்தான்; இஸ்ரவேலிலெல்லாம் பட்டயம் உருவத்தக்கவர்கள் பதினொருலட்சம்பேரும், யூதாவில் பட்டயம் உருவத்தக்கவர்கள் நாலுலட்சத்து எழுபதினாயிரம்பேரும் இருந்தார்கள்.
6 ஆனாலும் ராஜாவின் வார்த்தை யோவாபுக்கு அருவருப்பாயிருந்தபடியினால், லேவி பென்யமீன் கோத்திங்களிலுள்ளவர்களை அவர்களுடைய இலக்கத்திற்குட்பட எண்ணாதேபோனான்.
7 இந்தக் காரியம் தேவனுடைய பார்வைக்கு ஆகாததானபடியினால் அவர் இஸ்ரவேலை வாதித்தார்.
8 தாவீது தேவனை நோக்கி: நான் இந்தக் காரியத்தைச் செய்ததினால் மிகவும் பாவஞ்செய்தேன்; இப்போதும் உம்முடைய அடியேனின் அக்கிரமத்தை நீக்கிவிடும்; வெகு புத்தியீனமாய்ச் செய்தேன் என்றான்.
9 அப்பொழுது கர்த்தர், தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்துடனே பேசி,
10 நீ தாவீதினிடத்தில் போய் மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள்; அதை நான் உனக்குச்செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
11 அப்படியே காத் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி:
12 மூன்று வருஷத்துப் பஞ்சமோ? அல்லது உன் பகைஞரின் பட்டயம் உன்னைப் பின்தொடர நீ உன் சத்துருக்களுக்கு முன்பாக முறிந்தோடிப்போகச் செய்யும் மூன்று மாதச் சங்காரமோ? அல்லது மூன்றுநாள் கர்த்தருடைய தூதன் இஸ்ரவேலுடைய எல்லையெங்கும் சங்காரம் உண்டாகும்படி தேசத்தில் நிற்கும் கர்த்தருடைய பட்டயமாகிய கொள்ளை நோயோ? இவைகளில் ஒன்றைத் தெரிந்துகொள் என்று கர்த்தர் உரைக்கிறார். இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறுஉத்தரவு கொண்டுபோகவேண்டும் என்பதை யோசித்துப்பாரும் என்றான்.
13 அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன்; இப்போது நான் கர்த்தருடைய கையிலே விழுவேனாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கை
14 ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலிலே கொள்ளைநோயை வரப்பண்ணினார், அதினால் இஸ்ரவேலில் எழுபதினாயிரம்பேர் மடிந்தார்கள்.
15 எருசலேமையும் அழிக்க தேவன் ஒரு தூதனை அனுப்பினான்; ஆனாலும் ஒருவன் அழிக்கையில் கர்த்தர் பார்த்து, அந்தத் தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு, சங்கரிக்கிற தூதனை நோக்கி: போதும்; இப்போது உன் கையை நிறுத்து என்றார்; கர்த்தருடைய தூதன் எபூசியனாகிய ஒர்னானின் களத்தண்டையிலே நின்றான்.
16 தாவீது தன் கண்களை ஏறெடுத்து, பூமிக்கும் வானத்திற்கும் நடுவே நிற்கிற கர்த்தருடைய தூதன் உருவின பட்டயத்தைத் தன் கையில் பிடித்து, அதை எருசலேமின்மேல் நீட்டியிருக்கக் கண்டான்; அப்பொழுது தாவீதும் மூப்பர்களும் இரட்டுப் போர்த்துக்கொண்டு முகங்குப்புற விழுந்தார்கள்.
17 தாவீது தேவனை நோக்கி: ஜனத்தை எண்ணச் சொன்னவன் நான் அல்லவோ? நான்தான் பாவஞ்செய்தேன்; பொல்லாப்பு நடப்பித்தேன்; இந்த ஆடுகள் என்ன செய்தது? என் தேவனாகிய கர்த்தாவே, வாதிக்கும்படி உம்முடைய கரம் உம்முடைய ஜனத்திற்கு விரோதமாயிராமல், எனக்கும் என் தகப்பன் வீட்டிற்கும் விரோதமாயிருப்பதாக என்றான்.
18 அப்பொழுது எபூசியனாகிய ஒர்னானின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும்படி, தாவீது அங்கே போகவேண்டுமென்று தாவீதுக்குச் சொல் என்று கர்த்தருடைய தூதன் காத்துக்குக் கட்டளையிட்டான்.
19 அப்படியே தாவீது கர்த்தரின் நாமத்திலே காத் சொன்ன வார்த்தையின்படியே போனான்.
20 ஒர்னான் திரும்பிப்பார்த்தான்; அவனும் அவனோடிருக்கிற அவனுடைய நாலு குமாரரும் அந்த தேவதூதனைக் கண்டு ஒளித்துக்கொண்டார்கள்; ஒர்னான் போரடித்துக்கொண்டிருந்தான்.
21 தாவீது ஒர்னானிடத்தில் வந்தபோது ஒர்னான் கவனித்துத் தாவீதைப் பார்த்து, அவன் களத்திலிருந்து புறப்பட்டுவந்து, தரைமட்டும் குனிந்து தாவீதை வணங்கினான்.
22 அப்பொழுது தாவீது ஒர்னானை நோக்கி: இந்தக் களத்தின் நிலத்திலே நான் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படிக்கு அதை எனக்குக் கொடு; வாதை ஜனத்தைவிட்டு நிறுத்தப்பட, எனக்கு அதைப் பெறும் விலைக்குக் கொடு என்றான்.
23 ஒர்னான் தாவீதை நோக்கி: ராஜாவாகிய என் ஆண்டவன் அதை வாங்கிக்கொண்டு, தம்முடைய பார்வைக்கு நலமானபடி செய்வாராக; இதோ, சர்வாங்கதகனங்களுக்கு மாடுகளும், விறகுக்குப் போரடிக்கிற உருளைகளும், போஜனபலிக்குக் கோதுமையும் ஆகிய யாவையும் கொடுக்கிறேன் என்றான்.
24 அதற்குத் தாவீதுராஜா ஒர்னானை நோக்கி: அப்படியல்ல, நான் உன்னுடையதை இலவசமாய் வாங்கி, கர்த்தருக்குச் சர்வாங்க தகனத்தைப் பலியிடாமல், அதை பெறும் விலைக்கு வாங்குவேன் என்று சொல்லி,
25 தாவீது அந்த நிலத்திற்கு அறுநூறு சேக்கல் நிறைபொன்னை ஒர்னானுக்குக்குக் கொடுத்து,
26 அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தி, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்; அப்பொழுது அவர் வானத்திலிருந்து சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் இறங்கின அக்கினியில் அவனுக்கு மறுஉத்தரவு கொடுத்ததுமல்லாமல்,
27 தேவதூதன் தன்னுடைய பட்டயத்தை உறையிலே திரும்பப் போடவேண்டும் என்று கர்த்தர் அவனுக்குச் சொன்னார்.
28 எபூசியனாகிய ஒர்னானின் களத்திலே கர்த்தர் தனக்கு உத்தரவு அருளினதைத் தாவீது அக்காலத்திலே, கண்டு அங்கேதானே பலியிட்டான்.
29 மோசே வனாந்தரத்தில் உண்டாக்கின கர்த்தருடைய வாசஸ்தலமும் சர்வாங்க தகனபலிபீடமும் அக்காலத்திலே கிபியோனின் மேட்டில் இருந்தது.
30 தாவீது கர்த்தருடைய தூதனின் பட்டயத்திற்குப் பயந்திருந்தபடியால், அவன் தேவசந்நிதியில் போய் விசாரிக்கக் கூடாதிருந்தது.


1 Satan stood up against Israel, and incited David to number Israel.
2 So David said to Jo'ab and the commanders of the army, "Go, number Israel, from Beer-sheba to Dan, and bring me a report, that I may know their number."
3 But Jo'ab said, "May the LORD add to his people a hundred times as many as they are! Are they not, my lord the king, all of them my lord's servants? Why then should my lord require this? Why should he bring guilt upon Israel?"
4 But the king's word prevailed against Jo'ab. So Jo'ab departed and went throughout all Israel, and came back to Jerusalem.
5 And Jo'ab gave the sum of the numbering of the people to David. In all Israel there were one million one hundred thousand men who drew the sword, and in Judah four hundred and seventy thousand who drew the sword.
6 But he did not include Levi and Benjamin in the numbering, for the king's command was abhorrent to Jo'ab.
7 But God was displeased with this thing, and he smote Israel.
8 And David said to God, "I have sinned greatly in that I have done this thing. But now, I pray thee, take away the iniquity of thy servant; for I have done very foolishly."
9 And the LORD spoke to Gad, David's seer, saying,
10 "Go and say to David, `Thus says the LORD, Three things I offer you; choose one of them, that I may do it to you.'"
11 So Gad came to David and said to him, "Thus says the LORD, `Take which you will:
12 either three years of famine; or three months of devastation by your foes, while the sword of your enemies overtakes you; or else three days of the sword of the LORD, pestilence upon the land, and the angel of the LORD destroying throughout all the territory of Israel.' Now decide what answer I shall return to him who sent me."
13 Then David said to Gad, "I am in great distress; let me fall into the hand of the LORD, for his mercy is very great; but let me not fall into the hand of man."
14 So the LORD sent a pestilence upon Israel; and there fell seventy thousand men of Israel.
15 And God sent the angel to Jerusalem to destroy it; but when he was about to destroy it, the LORD saw, and he repented of the evil; and he said to the destroying angel, "It is enough; now stay your hand." And the angel of the LORD was standing by the threshing floor of Ornan the Jeb'usite.
16 And David lifted his eyes and saw the angel of the LORD standing between earth and heaven, and in his hand a drawn sword stretched out over Jerusalem. Then David and the elders, clothed in sackcloth, fell upon their faces.
17 And David said to God, "Was it not I who gave command to number the people? It is I who have sinned and done very wickedly. But these sheep, what have they done? Let thy hand, I pray thee, O LORD my God, be against me and against my father's house; but let not the plague be upon thy people."
18 Then the angel of the LORD commanded Gad to say to David that David should go up and rear an altar to the LORD on the threshing floor of Ornan the Jeb'usite.
19 So David went up at Gad's word, which he had spoken in the name of the LORD.
20 Now Ornan was threshing wheat; he turned and saw the angel, and his four sons who were with him hid themselves.
21 As David came to Ornan, Ornan looked and saw David and went forth from the threshing floor, and did obeisance to David with his face to the ground.
22 And David said to Ornan, "Give me the site of the threshing floor that I may build on it an altar to the LORD -- give it to me at its full price -- that the plague may be averted from the people."
23 Then Ornan said to David, "Take it; and let my lord the king do what seems good to him; see, I give the oxen for burnt offerings, and the threshing sledges for the wood, and the wheat for a cereal offering. I give it all."
24 But King David said to Ornan, "No, but I will buy it for the full price; I will not take for the LORD what is yours, nor offer burnt offerings which cost me nothing."
25 So David paid Ornan six hundred shekels of gold by weight for the site.
26 And David built there an altar to the LORD and presented burnt offerings and peace offerings, and called upon the LORD, and he answered him with fire from heaven upon the altar of burnt offering.
27 Then the LORD commanded the angel; and he put his sword back into its sheath.
28 At that time, when David saw that the LORD had answered him at the threshing floor of Ornan the Jeb'usite, he made his sacrifices there.
29 For the tabernacle of the LORD, which Moses had made in the wilderness, and the altar of burnt offering were at that time in the high place at Gibeon;
30 but David could not go before it to inquire of God, for he was afraid of the sword of the angel of the LORD.

1 அப்பொழுது தாவீது: தேவனாகிய கர்த்தருடைய ஆலயம் இருக்கும் ஸ்தலம் இதுவே; இஸ்ரவேல் பலியிடும் சர்வாங்கதகனபலிபீடம் இருக்கும் ஸ்தலமும் இதுவே என்றான்.
2 பின்பு தாவீது இஸ்ரவேல் தேசத்திலிருக்கிற அந்நியஜாதியாரைக் கூடிவரச்செய்து, தேவனுடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கான கல்லுகளை வெட்டிப் பணிப்படுத்தும் கல்தச்சரை ஏற்படுத்தினான்.
3 தாவீது வாசல்களின் கதவுகளுக்கு வேண்டிய ஆணிகளுக்கும் கீல்களுக்கும் மிகுதியான இரும்பையும், நிறுத்து முடியாத ஏராளமான வெண்கலத்தையும்,
4 எண்ணிறந்த கேதுருமரங்களையும் சம்பாதித்தான்; சீதோனியரும் தீரியரும் தாவீதுக்குத் திரளான கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள்.
5 தாவீது: என் குமாரனாகிய சாலொமோன் வாலிபனும் இளைஞனுமாயிருக்கிறான்; கர்த்தருக்குக் கட்டப்படும் ஆலயம் சகல தேசங்களிலும் கீர்த்தியும் மகிமையும் உடையதாய் விளங்கும்படி மகா பெரியதாயிருக்கவேண்டும்; ஆகையால் அதற்காக வேண்டியவைகளை இப்பொழுதே சேகரம்பண்ணவேண்டும் என்று சொல்லி, தாவீது தன் மரணத்திற்கு முன்னே திரளாய்ச் சவதரித்துவைத்தான்.
6 அவன் தன் குமாரனாகிய சாலொமோனை அழைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுகிறதற்காக அவனுக்கு கட்டளைகொடுத்து,
7 சாலொமோனை நோக்கி: என் குமாரனே, நான் என் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட என் இருதயத்தில் நினைத்திருந்தேன்.
8 ஆனாலும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி: நீ திரளான இரத்தத்தைச் சிந்தி, பெரிய யுத்தங்களைப் பண்ணினாய்; என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்; எனக்கு முன்பாக மிகுதியான இரத்தத்தைத் தரையிலே சிந்தப்பண்ணினாய்.
9 இதோ, உனக்குப் பிறக்கப்போகிற குமாரன் அமைதியுள்ள புருஷனாயிருப்பான்; சுற்றிலுமிருக்கும் அவன் சத்துருக்களையெல்லாம் விலக்கி அவனை அமர்ந்திருக்கச் செய்வேன்; ஆகையால் அவன்பேர் சாலொமோன் என்னப்படும், அவன் நாட்களில் இஸ்ரவேலின்மேல் சமாதானத்தையும் அமரிக்கையையும் அருளுவான்.
10 அவன் என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் எனக்குக் குமாரனாயிருப்பான், நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன்; இஸ்ரவேலை ஆளும் அவனுடைய ராஜாங்கத்தின் சிங்காசனத்தை என்றென்றைக்கும் நிலைப்படுத்துவேன் என்றார்.
11 இப்போதும் என் குமாரனே, நீ பாக்கியவானாயிருந்து, கர்த்தர் உன்னைக் குறித்துச் சொன்னபடியே உன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தைக் கட்டும்படி, அவர் உன்னுடனேகூட இருப்பாராக.
12 கர்த்தர் உனக்கு ஞானத்தையும் உணர்வையும் அருளிச்செய்து, உன் தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு, இஸ்ரவேலை ஆளும்படி உனக்குக் கட்டளையிடுவாராக.
13 கர்த்தர் இஸ்ரவேலுக்காக மோசேக்குக் கற்பித்த நியமங்களையும் நியாயங்களையும் செய்ய நீ கவனமாயிருந்தால் பாக்கியவானாயிருப்பாய்; நீ பலங்கொண்டு தைரியமாயிரு, பயப்படாமலும் கலங்காமலும் இரு.
14 இதோ, நான் என் சிறுமையிலே கர்த்தருடைய ஆலயத்திற்காக ஒரு லட்சம் தாலந்து பொன்னையும், பத்துலட்சம் தாலந்து வெள்ளியையும் நிறுத்து முடியாத திரளான வெண்கலத்தையும் இரும்பையும் சவதரித்தும், மரங்களையும் கற்களையும் சவதரித்தும் வைத்தேன், நீ இன்னும் அவைகளுக்கு அதிகமாய்ச் சவதரிப்பாய்.
15 வேலைசெய்யத்தக்க திரளான சிற்பாசாரிகளும், தச்சரும் கல்தச்சரும் எந்த வேலையிலும் நிபுணரானவர்களும் உன்னோடிருக்கிறார்கள்.
16 பொன்னுக்கும், வெள்ளிக்கும், வெண்கலத்துக்கும், இரும்புக்கும் கணக்கில்லை; நீ எழும்பிக் காரியத்தை நடப்பி; கர்த்தர் உன்னோடே இருப்பாராக என்றான்.
17 தன் குமாரனாகிய சாலொமோனுக்கு உதவிசெய்ய, தாவீது இஸ்ரவேலின் பிரபுக்கள் அனைவருக்கும் கற்பித்துச் சொன்னது.
18 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடிருந்து நான்கு திசையிலும் உங்களுக்கு இளைப்பாறுதலைத் தந்தார் அல்லவா? தேசத்தின் குடிகளை என் கையில் ஒப்புக்கொடுத்தார்; கர்த்தருக்கு முன்பாகவும், அவருடைய ஜனத்திற்கு முன்பாகவும் தேசம் கீழ்ப்பட்டிருக்கிறது.
19 இப்போதும் நீங்கள் உங்கள் இருதயத்தையும், உங்கள் ஆத்துமத்தையும், உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுகிறதற்கு நேராக்கி, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும் தேவனுடைய பரிசுத்தப் பணிமுட்டுகளையும், கர்த்தருடைய நாமத்திற்குக் கட்டப்படும் அந்த ஆலயத்திற்குள் கொண்டுபோகும்படிக்கு நீங்கள் எழும்பி, தேவனாகிய கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டுங்கள் என்றான்.


1 Then David said, "Here shall be the house of the LORD God and here the altar of burnt offering for Israel."
2 David commanded to gather together the aliens who were in the land of Israel, and he set stonecutters to prepare dressed stones for building the house of God.
3 David also provided great stores of iron for nails for the doors of the gates and for clamps, as well as bronze in quantities beyond weighing,
4 and cedar timbers without number; for the Sido'nians and Tyrians brought great quantities of cedar to David.
5 For David said, "Solomon my son is young and inexperienced, and the house that is to be built for the LORD must be exceedingly magnificent, of fame and glory throughout all lands; I will therefore make preparation for it." So David provided materials in great quantity before his death.
6 Then he called for Solomon his son, and charged him to build a house for the LORD, the God of Israel.
7 David said to Solomon, "My son, I had it in my heart to build a house to the name of the LORD my God.
8 But the word of the LORD came to me, saying, `You have shed much blood and have waged great wars; you shall not build a house to my name, because you have shed so much blood before me upon the earth.
9 Behold, a son shall be born to you; he shall be a man of peace. I will give him peace from all his enemies round about; for his name shall be Solomon, and I will give peace and quiet to Israel in his days.
10 He shall build a house for my name. He shall be my son, and I will be his father, and I will establish his royal throne in Israel for ever.'
11 Now, my son, the LORD be with you, so that you may succeed in building the house of the LORD your God, as he has spoken concerning you.
12 Only, may the LORD grant you discretion and understanding, that when he gives you charge over Israel you may keep the law of the LORD your God.
13 Then you will prosper if you are careful to observe the statutes and the ordinances which the LORD commanded Moses for Israel. Be strong, and of good courage. Fear not; be not dismayed.
14 With great pains I have provided for the house of the LORD a hundred thousand talents of gold, a million talents of silver, and bronze and iron beyond weighing, for there is so much of it; timber and stone too I have provided. To these you must add.
15 You have an abundance of workmen: stonecutters, masons, carpenters, and all kinds of craftsmen without number, skilled in working
16 gold, silver, bronze, and iron. Arise and be doing! The LORD be with you!"
17 David also commanded all the leaders of Israel to help Solomon his son, saying,
18 "Is not the LORD your God with you? And has he not given you peace on every side? For he has delivered the inhabitants of the land into my hand; and the land is subdued before the LORD and his people.
19 Now set your mind and heart to seek the LORD your God. Arise and build the sanctuary of the LORD God, so that the ark of the covenant of the LORD and the holy vessels of God may be brought into a house built for the name of the LORD."

1 தாவீது கிழவனும் பூரண வயதுள்ளவனுமானபோது, தன் குமாரனாகிய சாலொமோனை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்கினான்.
2 இஸ்ரவேலின் எல்லாப் பிரபுக்களையும், ஆசாரியரையும், லேவியரையும் கூடிவரும்படி செய்தான்.
3 அப்பொழுது முப்பது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட லேவியர் பேர்பேராக எண்ணப்பட்டார்கள், தலைதலையாக எண்ணப்பட்ட அவர்களுடைய இலக்கம் முப்பத்தெண்ணாயிரம்.
4 அவர்களில் இருபத்துநாலாயிரம்பேர் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்களும், ஆறாயிரம்பேர் தலைவரும் மணியகாரருமாயிருக்கவேண்டும் என்றும்,
5 நாலாயிரம்பேர் வாசல் காக்கிறவர்களாயிருக்கவேண்டும் என்றும், துதிசெய்கிறதற்குத் தான் பண்ணுவித்த கீதவாத்தியங்களால் நாலாயிரம்பேர் கர்த்தரைத் துதிக்கிறவர்களாயிருக்கவேண்டும் என்றும் தாவீது சொல்லி,
6 அவர்களை லேவியின் குமாரராகிய கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்களுடைய வகுப்புகளின்படி வகுத்தான்.
7 கெர்சோனியரில், லாதானும், சிமேயும் இருந்தார்கள்.
8 லாதானின் குமாரர், யெகியேல், சேத்தாம், யோவேல் என்னும் மூன்றுபேர்; இவர்களில் முந்தினவன் தலைமையாயிருந்தான்.
9 சிமேயின் குமாரர், செலோமித், ஆசியேல், ஆரான் என்னும் மூன்றுபேர்; இவர்கள் லாதான் வம்சப் பிதாக்களில் தலைமையாயிருந்தார்கள்.
10 யாகாத், சீனா, எயூஷ், பெரீயா என்னும் நாலுபேரும் சிமேயின் குமாரராயிருந்தார்கள்.
11 யாகாத் தலைமையாயிருந்தான்; சீனா இரண்டாம் குமாரனாயிருந்தான்; எயூஷுக்கும் பெரீயாவுக்கும் அநேகம் குமாரர் இராதபடியினால், அவர்கள் பிதாக்களின் குடும்பத்தாரில் ஒரே வம்சமாக எண்ணப்பட்டார்கள்.
12 கோகாத்தின் குமாரர் அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்னும் நாலுபேர்.
13 அம்ராமின் குமாரர், ஆரோன், மோசே என்பவர்கள்; ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்தத்திற்குப் பரிசுத்தமான ஸ்தலத்தை என்றைக்கும் பரிசுத்தமாய்க் காக்கிறதற்கும், என்றைக்கும் கர்த்தருக்கு முன்பாக தூபங்காட்டுகிறதற்கும், அவருக்கு ஆராதனை செய்கிறதற்கும், அவர் நாமத்திலே ஆசீர்வாதம் கொடுக்கிறதற்கும் பிரித்துவைக்கப்பட்டார்கள்.
14 தேவனுடைய மனுஷனாகிய மோசேயின் குமாரரோவெனில், லேவிகோத்திரத்தாருக்குள் எண்ணப்பட்டார்கள்.
15 மோசேயின் குமாரர், கெர்சோம், எலியேசர் என்பவர்கள்.
16 கெர்சோமின் குமாரரில் செபுவேல் தலைமையாயிருந்தான்.
17 எலியேசருடைய குமாரரில் ரெகபியா என்னும் அவன் குமாரன் தலைமையாயிருந்தான்: எலியேசருக்கு வேறே குமாரர் இல்லை, ரெகபியாவின் குமாரர் அநேகராயிருந்தார்கள்.
18 இத்சேரின் குமாரரில் செலோமித் தலைமையாயிருந்தான்.
19 எப்ரோனின் குமாரரில் எரியா என்பவன் தலைமையாயிருந்தான்; இரண்டாவது அமரியா, மூன்றாவது யாகாசியேல் நாலாவது எக்காமியாம்.
20 ஊசியேலின் குமாரரில் மீகா என்பவன் தலைமையாயிருந்தான்; இரண்டாவது இஷியா.
21 மெராரியின் குமாரர், மகேலி, மூசி என்பவர்கள்; மகேலியின் குமாரர், எலெயாசார், கீஸ் என்பவர்கள்.
22 எலெயாசார் மரிக்கிறபோது, அவனுக்குக் குமாரத்திகளே அல்லாமல் குமாரர் இல்லை; கீசின் குமாரராகிய இவர்களுடைய சகோதரர் இவர்களை விவாகம்பண்ணினார்கள்.
23 மூசியின் குமாரர், மகலி, ஏதேர், எரேமோக் என்னும் மூன்றுபேர்.
24 தங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே, பிதாக்களில் தலைமையாயிருந்த லேவி புத்திரரின் பேர்டாப்பின்படியே, தலைதலையாக எண்ணப்பட்ட இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட இவர்களுடைய சந்ததியார் கர்த்தருடைய ஆலயத்துப் பணிவிடையைச் செய்தார்கள்.
25 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தை இளைப்பாறியிருக்கப்பண்ணினார்; அவர் என்றென்றைக்கும் எருசலேமில் வாசம்பண்ணுவாரென்றும்,
26 இனி லேவியர் வாசஸ்தலத்தையாகிலும் அதின் ஊழியத்திற்கடுத்த அதின் பணிமுட்டுகளில் எதையாகிலும் சுமக்கத்தேவையில்லை என்றும்,
27 தாவீது அவர்களைக் குறித்துச்சொன்ன கடைசி வார்த்தைகளின்படியே, லேவி புத்திரரில் தொகைக்குட்பட்டவர்கள் இருபதுவயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்களாயிருந்தார்கள்.
28 அவர்கள் ஆரோனுடைய குமாரரின் கீழ்க் கர்த்தருடைய ஆலயத்தின் ஊழியமாய் நின்று, பிராகாரங்களையும், அறைகளையும், சகல பரிசுத்த பணிமுட்டுகளின் சுத்திகரிப்பையும், தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்கடுத்த வேலையையும் விசாரிப்பதும்,
29 சமுகத்தப்பங்களையும், போஜனபலிக்கு மெல்லிய மாவையும், புளிப்பில்லாத அதிரசங்களையும், சட்டிகளிலே செய்கிறதையும் சுடுகிறதையும், திட்டமான சகல நிறையையும் அளவையும் விசாரிப்பதும்,
30 நாள்தோறும் காலையிலும் மாலையிலும் கர்த்தரைப் போற்றித் துதித்து, ஓய்வுநாட்களிலும், அமாவாசைகளிலும், பண்டிகைகளிலும், கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகள் செலுத்தப்படுகிற சகல வேளைகளிலும்,
31 இலக்கத்திற்குள்ளான அவர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்டபடியே, எப்பொழுதும் அந்தப் பிரகாரமாய்ச் செய்ய, கர்த்தருக்கு முன்பாக நிற்பதும்,
32 ஆசரிப்புக் கூடாரத்தின் காவலையும் பரிசுத்த ஸ்தலத்தின் காவலையும் தங்கள் சகோதரராகிய ஆரோனுடைய குமாரரின் காவலையும் காப்பதும், கர்த்தருடைய ஆலயத்தின் பணிவிடையைச் செய்வதும் அவர்கள் வேலையாயிருந்தது.


1 When David was old and full of days, he made Solomon his son king over Israel.
2 David assembled all the leaders of Israel and the priests and the Levites.
3 The Levites, thirty years old and upward, were numbered, and the total was thirty-eight thousand men.
4 "Twenty-four thousand of these," David said, "shall have charge of the work in the house of the LORD, six thousand shall be officers and judges,
5 four thousand gatekeepers, and four thousand shall offer praises to the LORD with the instruments which I have made for praise."
6 And David organized them in divisions corresponding to the sons of Levi: Gershom, Kohath, and Merar'i.
7 The sons of Gersham were Ladan and Shim'e-i.
8 The sons of Ladan: Jehi'el the chief, and Zetham, and Jo'el, three.
9 The sons of Shim'e-i: Shelo'moth, Ha'zi-el, and Haran, three. These were the heads of the fathers' houses of Ladan.
10 And the sons of Shim'e-i: Jahath, Zina, and Je'ush, and Beri'ah. These four were the sons of Shim'e-i.
11 Jahath was the chief, and Zizah the second; but Je'ush and Beri'ah had not many sons, therefore they became a father's house in one reckoning.
12 The sons of Kohath: Amram, Izhar, Hebron, and Uz'ziel, four.
13 The sons of Amram: Aaron and Moses. Aaron was set apart to consecrate the most holy things, that he and his sons for ever should burn incense before the LORD, and minister to him and pronounce blessings in his name for ever.
14 But the sons of Moses the man of God were named among the tribe of Levi.
15 The sons of Moses: Gershom and Elie'zer.
16 The sons of Gershom: Sheb'uel the chief.
17 The sons of Elie'zer: Rehabi'ah the chief; Elie'zer had no other sons, but the sons of Rehabi'ah were very many.
18 The sons of Izhar: Shelo'mith the chief.
19 The sons of Hebron: Jeri'ah the chief, Amari'ah the second, Jaha'ziel the third, and Jekame'am the fourth.
20 The sons of Uz'ziel: Micah the chief and Isshi'ah the second.
21 The sons of Merar'i: Mahli and Mushi. The sons of Mahli: Elea'zar and Kish.
22 Elea'zar died having no sons, but only daughters; their kinsmen, the sons of Kish, married them.
23 The sons of Mushi: Mahli, Eder, and Jer'emoth, three.
24 These were the sons of Levi by their fathers' houses, the heads of fathers' houses as they were registered according to the number of the names of the individuals from twenty years old and upward who were to do the work for the service of the house of the LORD.
25 For David said, "The LORD, the God of Israel, has given peace to his people; and he dwells in Jerusalem for ever.
26 And so the Levites no longer need to carry the tabernacle or any of the things for its service" --
27 for by the last words of David these were the number of the Levites from twenty years old and upward --
28 "but their duty shall be to assist the sons of Aaron for the service of the house of the LORD, having the care of the courts and the chambers, the cleansing of all that is holy, and any work for the service of the house of God;
29 to assist also with the showbread, the flour for the cereal offering, the wafers of unleavened bread, the baked offering, the offering mixed with oil, and all measures of quantity or size.
30 And they shall stand every morning, thanking and praising the LORD, and likewise at evening,
31 and whenever burnt offerings are offered to the LORD on sabbaths, new moons, and feast days, according to the number required of them, continually before the LORD.
32 Thus they shall keep charge of the tent of meeting and the sanctuary, and shall attend the sons of Aaron, their brethren, for the service of the house of the LORD."

1 ஆரோன் புத்திரரின் வகுப்புகளாவன: ஆரோனின் குமாரர், நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள்.
2 நாதாபும் அபியூவும் குமாரர் இல்லாமல் தங்கள் தகப்பனுக்கு முன்னே மரித்தபடியினால், எலெயாசாரும் இத்தாமாரும் ஆசாரிய ஊழியம் செய்தார்கள்.
3 தாவீது சாதோக்கைக்கொண்டு எலெயாசாரின் புத்திரரையும், அகிமெலேக்கைக்கொண்டு இத்தாமாரின் புத்திரரையும் அவர்கள் செய்யவேண்டிய ஊழியத்துக்கு முறைப்படி அவர்களை வகுத்தான்.
4 அவர்களை வகுக்கிறபோது, இத்தாமாரின் புத்திரரைப்பார்க்கிலும் எலெயாசாரின் புத்திரருக்குள்ளே தலைமையானவர்கள் அதிகமானபேர் காணப்பட்டபடியினால், எலெயாசாரின் புத்திரரில் பதினாறுபேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்துக்கும், இத்தாமாரின் புத்திரரில் எட்டுப்பேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்துக்கும் தலைமையாக வைக்கப்பட்டார்கள்.
5 எலெயாசாரின் புத்திரரிலும் இத்தாமாரின் புத்திரரிலும், பரிசுத்த ஸ்தலத்துக்கும், தேவனுக்கு அடுத்த காரியங்களில் பிரபுக்களாயிருக்கும்படிக்கும், இவர்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம்பண்ணாமல் சீட்டுப்போட்டு அவர்களை வகுத்தார்கள்.
6 லேவியரில் சம்பிரதியாகிய செமாயா என்னும் நெதனெயேலின் குமாரன், ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் ஆசாரியனாகிய சாதோக்குக்கும் அபியத்தாரின் குமாரனாகிய அகிமெலேக்குக்கும் ஆசாரியரும் லேவியருமான பிதாக்களின் தலைவருக்கும் முன்பாக அவர்கள் நாமங்களை எழுதினான்; ஒரு பிதாவின் வீட்டுச் சீட்டு எலெயாசாருக்கு விழுந்தது; பின்பு அந்தப்படியே இத்தாமாருக்கும் விழுந்தது.
7 முதலாவது சீட்டு யோயாரிபின் பேர்வழிக்கும், இரண்டாவது யெதாயாவின் பேர்வழிக்கும்,
8 மூன்றாவது ஆரிமின் பேர்வழிக்கும், நான்காவது செயோரீமின் பேர்வழிக்கும்,
9 ஐந்தாவது மல்கியாவின் பேர்வழிக்கும், ஆறாவது மியாமீனின் பேர்வழிக்கும்,
10 ஏழாவது அக்கோத்சின் பேர்வழிக்கும், எட்டாவது அபியாவின் பேர்வழிக்கும்,
11 ஒன்பதாவது யெசுவாவின் பேர்வழிக்கும், பத்தாவது செக்கனியாவின் பேர்வழிக்கும்,
12 பதினோராவது எலியாசீபின் பேர்வழிக்கும், பன்னிரண்டாவது யாக்கீமின்பேர்வழிக்கும்,
13 பதின்மூன்றாவது உப்பாவின் பேர்வழிக்கும், பதினான்காவது எசெபெயாபின் பேர்வழிக்கும்,
14 பதினைந்தாவது பில்காவின் பேர்வழிக்கும், பதினாறாவது இம்மேரின் பேர்வழிக்கும்,
15 பதினேழாவது ஏசீரின் பேர்வழிக்கும், பதினெட்டாவது அப்சேசின் பேர்வழிக்கும்,
16 பத்தொன்பதாவது பெத்தகியாவின் பேர்வழிக்கும், இருபதாவது எகெசெக்கியேலின் பேர்வழிக்கும்,
17 இருபத்தோராவது யாகினின் பேர்வழிக்கும், இருபத்திரண்டாவது காமுவேலின் பேர்வழிக்கும்,
18 இருபத்துமூன்றாவது தெலாயாவின் பேர்வழிக்கும், இருபத்துநான்காவது மாசியாவின் பேர்வழிக்கும் விழுந்தது.
19 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்கள் தகப்பனாகிய ஆரோனுக்குக் கற்பித்தபடியே, அவர்கள் அவனுடைய கட்டளையின்பிரகாரம், தங்கள் முறைவரிசைகளில் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கும் அவர்களுடைய ஊழியத்திற்காகப் பண்ணப்பட்ட வகுப்புகள் இவைகளே.
20 லேவியின் மற்றப் புத்திரருக்குள்ளே இருக்கிற அம்ராமின் புத்திரரில் சூபவேலும், சூபவேலின் குமாரரில் எகேதியாவும்,
21 ரெகபியாவின் குமாரரில் மூத்தவனாகிய இஷியாவும்,
22 இத்சாரியரில் செலெமோத்தும், செலெமோத்தின் குமாரரில் யாகாத்தும்,
23 எப்ரோனின் குமாரரில் மூத்தவனாகிய எரியாவும், இரண்டாம் குமாரனாகிய அம்ரியாவும், மூன்றாம் குமாரனாகிய யாகாசியேலும், நான்காம் குமாரனாகிய எக்காமியாமும்,
24 ஊசியேலின் குமாரரில் மீகாவும், மீகாவின் குமாரரில் சாமீரும்,
25 மீகாவின் சகோதரனாகிய இஷியாவும், இஷியாவின குமாரரில் சகரியாவும்,
26 மெராரியின் குமாரராகிய மகேலிமூசி என்பவர்களும், யாசியாவின் குமாரனாகிய பேனோவும்,
27 மெராரியின் குமாரனாகிய யாசியாவின் குமாரரான பேனோ, ரோகாம், சக்கூர், இப்ரி என்பவர்களும்,
28 மகேலியின் குமாரரில் புத்திரனில்லாத எலெயாசாரும்,
29 கீசின் புத்திரரில் யெராமியேலும்,
30 மூசியின் குமாரரான மகேலி, ஏதேர் எரிமோத் என்பவர்களுமாகிய இவர்கள் தங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே லேவியரின் புத்திரரானவர்கள்.
31 இவர்களும் ராஜாவாகிய தாவீதுக்கும் சாதோக்குக்கும் அகிமெலேக்குக்கும் ஆசாரியரிலும் லேவியரிலும் பிதாக்களாயிருக்கிற தலைவருக்கும் முன்பாக, தங்கள் சகோதரராகிய ஆரோனின் புத்திரர் செய்ததுபோல, தங்களிலிருக்கிற பிதாக்களான தலைவருக்கும், அவர்களுடைய சிறிய சகோதரருக்கும், சரிசமானமாய்ச் சீட்டுப்போட்டுக்கொண்டார்கள்.


1 The divisions of the sons of Aaron were these. The sons of Aaron: Nadab, Abi'hu, Elea'zar, and Ith'amar.
2 But Nadab and Abi'hu died before their father, and had no children, so Elea'zar and Ith'amar became the priests.
3 With the help of Zadok of the sons of Elea'zar, and Ahim'elech of the sons of Ith'amar, David organized them according to the appointed duties in their service.
4 Since more chief men were found among the sons of Elea'zar than among the sons of Ith'amar, they organized them under sixteen heads of fathers' houses of the sons of Elea'zar, and eight of the sons of Ith'amar.
5 They organized them by lot, all alike, for there were officers of the sanctuary and officers of God among both the sons of Elea'zar and the sons of Ith'amar.
6 And the scribe Shemai'ah the son of Nethan'el, a Levite, recorded them in the presence of the king, and the princes, and Zadok the priest, and Ahim'elech the son of Abi'athar, and the heads of the fathers' houses of the priests and of the Levites; one father's house being chosen for Elea'zar and one chosen for Ith'amar.
7 The first lot fell to Jehoi'arib, the second to Jedai'ah,
8 the third to Harim, the fourth to Se-o'rim,
9 the fifth to Malchi'jah, the sixth to Mij'amin,
10 the seventh to Hakkoz, the eighth to Abi'jah,
11 the ninth to Jeshua, the tenth to Shecani'ah,
12 the eleventh to Eli'ashib, the twelfth to Jakim,
13 the thirteenth to Huppah, the fourteenth to Jesheb'e-ab,
14 the fifteenth to Bilgah, the sixteenth to Immer,
15 the seventeenth to Hezir, the eighteenth to Hap'pizzez,
16 the nineteenth to Pethahi'ah, the twentieth to Jehez'kel,
17 the twenty-first to Jachin, the twenty-second to Gamul,
18 the twenty-third to Delai'ah, the twenty-fourth to Ma-azi'ah.
19 These had as their appointed duty in their service to come into the house of the LORD according to the procedure established for them by Aaron their father, as the LORD God of Israel had commanded him.
20 And of the rest of the sons of Levi: of the sons of Amram, Shu'ba-el; of the sons of Shu'ba-el, Jehde'iah.
21 Of Rehabi'ah: of the sons of Rehabi'ah, Isshi'ah the chief.
22 Of the Iz'harites, Shelo'moth; of the sons of Shelo'moth, Jahath.
23 The sons of Hebron: Jeri'ah the chief, Amari'ah the second, Jaha'ziel the third, Jekame'am the fourth.
24 The sons of Uz'ziel, Micah; of the sons of Micah, Shamir.
25 The brother of Micah, Isshi'ah; of the sons of Isshi'ah, Zechari'ah.
26 The sons of Merar'i: Mahli and Mushi. The sons of Ja-azi'ah: Beno.
27 The sons of Merar'i: of Ja-azi'ah, Beno, Shoham, Zaccur, and Ibri.
28 Of Mahli: Elea'zar, who had no sons.
29 Of Kish, the sons of Kish: Jerah'meel.
30 The sons of Mushi: Mahli, Eder, and Jer'imoth. These were the sons of the Levites according to their fathers' houses.
31 These also, the head of each father's house and his younger brother alike, cast lots, just as their brethren the sons of Aaron, in the presence of King David, Zadok, Ahim'elech, and the heads of fathers' houses of the priests and of the Levites.

1 மேலும் சுரமண்டலங்களாலும் தம்புருகளாலும் கைத்தாளங்களாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் குமாரரில் சிலரை, தாவீதும் தேவாலயச் சேனைகளின் பிரபுக்களும் ஊழியத்திற்கென்று பிரித்துவைத்தார்கள்; தங்கள் ஊழியத்தின் கிரியைக்குக் குறித்துவைக்கப்பட்ட மனுஷர்களின் தொகையாவது:
2 ராஜாவுடைய கட்டளைப்பிரமாணமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப்பின் வசத்திலிருக்கிற, ஆசாப்பின் குமாரரில் சக்கூர், யோசேப்பு, நெதானியா, அஷாரேலா என்பவர்களும்,
3 கர்த்தரைப் போற்றித் துதித்துத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தங்கள் தகப்பனாகிய எதுத்தூனின் வசத்திலே சுரமண்டலங்களை வாசிக்க, எதுத்தூனின் குமாரராகிய கெதலியா, சேரீ, எஷாயா, அஷபியா, மத்தித்தியா என்னும் ஆறுபேரும்,
4 கொம்பைத் தொனிக்கப்பண்ண, தேவவிஷயத்தில் ராஜாவுக்கு ஞானதிருஷ்டியுள்ள புருஷனாகிய ஏமானின் குமாரரான புக்கியா, மத்தனியா, ஊசியேல், செபுவேல், எரிமோத், அனனியா, அனானி, எலியாத்தா, கிதல்தி, ரொமந்தியேசர், யோஸ்பெகாஷா, மலோத்தி, ஒத்திர், மகாசியோத் என்பவர்களுமே.
5 இவர்களெல்லாரும் ஏமானின் குமாரராயிருந்தார்கள்; தேவன் ஏமானுக்குப் பதினாலு குமாரரையும் மூன்று குமாரத்திகளையும் கொடுத்தார்.
6 இவர்கள் அனைவரும் ராஜாவுடைய கட்டளைப்பிரமாணமாய்க் கர்த்தருடைய ஆலயத்தில் தாளங்கள் தம்புருகள் சுரமண்டலங்களாகிய கீதவாத்தியம் வாசிக்க, தேவனுடைய ஆலயத்தின் ஊழியமாக அவரவர் தங்கள் தங்கள் தகப்பன்மாராகிய ஆசாப் எதுத்தூன், ஏமான் என்பவர்கள் வசத்தில் இருந்தார்கள்.
7 கர்த்தரைப் பாடும் பாட்டுகளைக் கற்றுக்கொண்டு, நிபுணரான தங்கள் சகோதரரோடுங்கூட அவர்கள் இலக்கத்திற்கு இருநூற்றெண்பத்தெட்டுப்பேராயிருந்தார்கள்.
8 அவர்களில் சிறியவனும் பெரியவனும், ஆசானும் மாணாக்கனும், சரிசமானமாய் முறைவரிசைக்காகச் சீட்டுப்போட்டுக்கொண்டார்கள்.
9 முதலாவது சீட்டு ஆசாப் வம்சமான யோசேப்பின் பேர்வழிக்கும், இரண்டாவது கெதலியா, அவன் சகோதரர், அவன் குமாரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
10 மூன்றாவது சக்கூர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் வழிக்கும்,
11 நான்காவது இஸ்ரி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் வழிக்கும்,
12 ஐந்தாவது நெத்தனியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
13 ஆறாவது புக்கியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
14 ஏழாவது எசரேலோ, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர்வழிக்கும்,
15 எட்டாவது எஷாயா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
16 ஒன்பதாவது மத்தனீயா, அவன் குமாரர், அவன் சகோதரர் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
17 பத்தாவது சிமேயா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
18 பதினோராவது அசாரியேல், அவன்குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
19 பன்னிரண்டாவது அஷாபியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
20 பதின்மூன்றாவது சுபவேல், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
21 பதினான்காவது மத்தித்தியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,
22 பதினைந்தாவது எரேமோத், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,
23 பதினாறாவது அனனியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,
24 பதினேழாவது யோஸ்பேக்காஷா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
25 பதினெட்டாவது ஆனானி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,
26 பத்தொன்பதாவது, மலோத்தி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,
27 இருபதாவது எலியாத்தா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
28 இருபத்தோராவது ஒத்திர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,
29 இருபத்திரண்டாவது கிதல்தி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,
30 இருபத்துமூன்றாவது மகாசியோத், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,
31 இருபத்துநான்காவது ரொமந்தியேசர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும் விழுந்தது.


1 David and the chiefs of the service also set apart for the service certain of the sons of Asaph, and of Heman, and of Jedu'thun, who should prophesy with lyres, with harps, and with cymbals. The list of those who did the work and of their duties was:
2 Of the sons of Asaph: Zaccur, Joseph, Nethani'ah, and Ashare'lah, sons of Asaph, under the direction of Asaph, who prophesied under the direction of the king.
3 Of Jedu'thun, the sons of Jedu'thun: Gedali'ah, Zeri, Jeshai'ah, Shim'e-i, Hashabi'ah, and Mattithi'ah, six, under the direction of their father Jedu'thun, who prophesied with the lyre in thanksgiving and praise to the LORD.
4 Of Heman, the sons of Heman: Bukki'ah, Mattani'ah, Uz'ziel, Shebu'el, and Jer'imoth, Hanani'ah, Hana'ni, Eli'athah, Giddal'ti, and Romam'ti-e'zer, Joshbekash'ah, Mallo'thi, Hothir, Maha'zi-oth.
5 All these were the sons of Heman the king's seer, according to the promise of God to exalt him; for God had given Heman fourteen sons and three daughters.
6 They were all under the direction of their father in the music in the house of the LORD with cymbals, harps, and lyres for the service of the house of God. Asaph, Jedu'thun, and Heman were under the order of the king.
7 The number of them along with their brethren, who were trained in singing to the LORD, all who were skilful, was two hundred and eighty-eight.
8 And they cast lots for their duties, small and great, teacher and pupil alike.
9 The first lot fell for Asaph to Joseph; the second to Gedali'ah, to him and his brethren and his sons, twelve;
10 the third to Zaccur, his sons and his brethren, twelve;
11 the fourth to Izri, his sons and his brethren, twelve;
12 the fifth to Nethani'ah, his sons and his brethren, twelve;
13 the sixth to Bukki'ah, his sons and his brethren, twelve;
14 the seventh to Jeshare'lah, his sons and his brethren, twelve;
15 the eighth to Jeshai'ah, his sons and his brethren, twelve;
16 the ninth to Mattani'ah, his sons and his brethren, twelve;
17 the tenth to Shim'e-i, his sons and his brethren, twelve;
18 the eleventh to Az'arel, his sons and his brethren, twelve;
19 the twelfth to Hashabi'ah, his sons and his brethren, twelve;
20 to the thirteenth, Shu'ba-el, his sons and his brethren, twelve;
21 to the fourteenth, Mattithi'ah, his sons and his brethren, twelve;
22 to the fifteenth, to Jer'emoth, his sons and his brethren, twelve;
23 to the sixteenth, to Hanani'ah, his sons and his brethren, twelve;
24 to the seventeenth, to Joshbekash'ah, his sons and his brethren, twelve;
25 to the eighteenth, to Hana'ni, his sons and his brethren, twelve;
26 to the nineteenth, to Mallo'thi, his sons and his brethren, twelve;
27 to the twentieth, to Eli'athah, his sons and his brethren, twelve;
28 to the twenty-first, to Hothir, his sons and his brethren, twelve;
29 to the twenty-second, to Giddal'ti, his sons and his brethren, twelve;
30 to the twenty-third, to Maha'zi-oth, his sons and his brethren, twelve;
31 to the twenty-fourth, to Romam'ti-e'zer, his sons and his brethren, twelve.

1 வாசல்காக்கிறவர்களின் வகுப்புகளாவன: கோராகியர் சந்ததியான ஆசாபின் புத்திரரிலே கோரேயின் குமாரன் மெஷெலேமியா என்பவன்,
2 மெஷெலேமியாவின் குமாரர், மூத்தவனாகிய சகரியாவும்,
3 எதியாயேல், செபதியா, யதனியேல், ஏலாம், யோகனான், எலியோனாய் என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் குமாரரும்;
4 ஒபேத் ஏதோமின் குமாரர், மூத்தவனாகிய செமாயாவும்,
5 யோசபாத், யோவாக், சாக்கார், நெனெயேல், அம்மியேல், இசக்கார், பெயுள்தாயி என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் எட்டாம் குமாரருமே, தேவன் அவனை ஆசீர்வதித்திருந்தார்.
6 அவன் குமாரனாகிய செமாயாவுக்கும் குமாரர் பிறந்து, அவர்கள் பராக்கிரமசாலிகளாயிருந்து, தங்கள் தகப்பன் குடும்பத்தாரை ஆண்டார்கள்.
7 செமாயாவுக்கு இருந்த குமாரர் ஒத்னியும், பலசாலிகளாகிய ரெப்பாயேல், ஓபேத், எல்சாபாத என்னும் அவன் சகோதரரும், எலிகூவும் செமகியாவுமே.
8 ஓபேத்ஏதோமின் புத்திரரும் அவர்கள் குமாரரும் அவர்கள் சகோதரருமாகிய ஊழியத்திற்குப் பலத்த பராக்கிரமசாலிகளான அவர்களெல்லாரும் அறுபத்திரண்டுபேர்.
9 மெஷெலேமியாவின் குமாரரும் சகோதரருமான பராக்கிரமசாலிகள் பதினெட்டுப்பேர்.
10 மெராரியின் புத்திரரில் ஓசா என்பவனுடைய குமாரர்கள்: சிம்ரி என்னும் தலைமையானவன்; இவன் மூத்தவனாயிராவிட்டாலும் இவன் தகப்பன் இவனைத் தலைவனாக வைத்தான்.
11 இல்க்கியா, தெபலியா, சகரியா என்னும் இரண்டாம், மூன்றாம் நான்காம் குமாரரானவர்கள்; ஓசாவின் குமாரரும் சகோதரரும் எல்லாம் பதின்மூன்றுபேர்.
12 காவல்காரரான தலைவரின் கீழ்த் தங்கள் சகோதரருக்கு ஒத்த முறையாய், கர்த்தருடைய ஆலயத்தில் வாசல்காக்கிறவர்களாய்ச் சேவிக்க இவர்கள் வகுக்கப்பட்டு,
13 தங்கள் பிதாக்களின் குடும்பத்தாராகிய சிறியவர்களும் பெரியவர்களுமாய் இன்ன வாசலுக்கு இன்னாரென்று சீட்டுப்போட்டுக்கொண்டார்கள்.
14 கீழ்ப்புறத்திற்குச் செலேமியாவுக்குச் சீட்டு விழுந்தது; விவேகமுள்ள யோசனைக்காரனாகிய சகரியா என்னும் அவன் குமாரனுக்குச் சீட்டுப் போட்டபோது, அவன் சீட்டு வடபுறத்திற்கென்று விழுந்தது.
15 ஓபேத்ஏதேமுக்குத் தென்புறத்திற்கும், அவன் குமாரருக்கு அசுப்பீம் வீட்டிற்கும்,
16 சூப்பீமுக்கும், ஓசாவுக்கும் மண்போட்டு உயர்த்தப்பட்ட வழியும் காவலுக்கு எதிர்காவலும் இருக்கிற மேற்புறமான வாசலுக்கும் சீட்டு விழுந்தது.
17 கிழக்கே லேவியரான ஆறுபேரும், வடக்கே பகலிலே நாலுபேரும், தெற்கே பகலிலே நாலுபேரும், அசுப்பீம் வீட்டண்டையில் இரண்டிரண்டுபேரும்.
18 வெளிப்புறமான வாசல் அண்டையில் மேற்கே இருக்கிற உயர்ந்த வழிக்கு நாலுபேரும், வெளிப்புறமான வழியிலே இரண்டுபேரும் வைக்கப்பட்டார்கள்.
19 கோராகின் புத்திரருக்குள்ளும், மெராரியின் புத்திரருக்குள்ளும், வாசல்காக்கிறவர்களின் வகுப்புகள் இவைகளே.
20 மற்ற லேவியரில் அகியா என்பவன் தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பிரதிஷ்டையாக்கப்படட பொருள்களின் பொக்கிஷங்களையும் விசாரிக்கிறவனாயிருந்தான்.
21 லாதானின் குமாரர் யாரென்றால் கெர்சோனியனான அவனுடைய குமாரரில் தலைமையான பிதாக்களாயிருந்த யெகியேலியும்,
22 யெகியேலியின் குமாரராகிய சேத்தாமும், அவன் சகோதரனாகிய யோவேலுமே; இவர்கள் கர்த்தருடைய ஆலயத்துப் பொக்கிஷங்களை விசாரிக்கிறவர்களாயிருந்தார்கள்.
23 அம்ராமியரிலும், இத்சேயாரியரிலும், எப்ரோனியரிலும், ஊசியேரியரிலும், சிலர், அப்படியே விசாரிக்கிறவர்களாயிருந்தார்கள்.
24 மோசேயின் குமாரனாகிய கெர்சோமின் சந்ததியான செபுவேல் பொக்கிஷப்பிரதானியாயிருந்தான்.
25 எலியேசர் மூலமாய் அவனுக்கு இருந்த சகோதரரானவர்கள், இவன் குமாரன் ரெகபியாவும், இவன் குமாரன் எஷாயாவும், இவன் குமாரன் யோராமும், இவன் குமாரன் சிக்கிரியும், இவன் குமாரன் செலோமித்துமே.
26 ராஜாவாகிய தாவீதும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளுமான பிதாக்களின் தலைவரும், சேனாதிபதிகளும் யுத்தத்தில் அகப்பட்ட கொள்ளைகளில் எடுத்து,
27 கர்த்தருடைய ஆலயத்தைப் பரிபாலிக்கும்படிக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்ட பொருள்களின் பொக்கிஷங்களையெல்லாம் அந்தச் செலோமித்தும் அவனுடைய சகோதரரும் விசாரித்தார்கள்.
28 ஞானதிருஷ்டிக்காரனாகிய சாமுவேலும், கீசின் குமாரனாகிய சவுலும், நேரின் குமாரனாகிய அப்னேரும், செருயாவின் குமாரராகிய யோவாபும், அவரவர் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்ட அனைத்தும் செலோமித்தின் கையின்கீழும் அவன் சகோதரர் கையின்கீழும் இருந்தது.
29 இத்சேயாரியரில் கெனானியாவும் அவன் குமாரரும் தேசகாரியங்களைப் பார்க்கும்படி வைக்கப்பட்டு, இஸ்ரவேலின்மேல் விசாரிப்புக்காரரும் மணியகாரருமாயிருந்தார்கள்.
30 எப்ரோனியரில் அசபியாவும் அவன் சகோதரருமாகிய ஆயிரத்து எழுநூறுபராக்கிரமசாலிகள் யோர்தானுக்கு இப்பாலே, மேற்கே இருக்கிற இஸ்ரவேலின் கர்த்தருடைய எல்லா ஊழியத்திற்கும் ராஜாவின் வேலைக்கும் வைக்கப்பட்டார்கள்.
31 எப்ரோனியரில் எரியாவும் இருந்தான்; அவன் தன் பிதாக்களின் வம்சங்களான எப்ரோனியரில் தலைமையானவன்; தாவீது அரசாண்ட நாற்பதாம் வருஷத்திலே அவர்கள் தேடப்பட்டபோது அவர்களுக்குள்ளே கீலேயாத்தேசத்து ஏசேரிலே பராக்கிரம வீரர் காணப்பட்டார்கள்.
32 பலசாலிகளாகிய அவனுடைய சகோதரர் இரண்டாயிரத்து எழுநூறு பிரதான தலைவராயிருந்தார்கள்; அவர்களைத் தாவீது ராஜா தேவனுக்கடுத்த சகல காரியத்திற்காகவும், ராஜாவின் காரியத்கிற்காகவும், ரூபனியர்மேலும், காதியர்மேலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தின்மேலும் வைத்தான்.


1 As for the divisions of the gatekeepers: of the Ko'rahites, Meshelemi'ah the son of Ko're, of the sons of Asaph.
2 And Meshelemi'ah had sons: Zechari'ah the first-born, Jedi'a-el the second, Zebadi'ah the third, Jath'ni-el the fourth,
3 Elam the fifth, Jehoha'nan the sixth, Eli-e-ho-e'nai the seventh.
4 And O'bed-e'dom had sons: Shemai'ah the first-born, Jehoz'abad the second, Jo'ah the third, Sachar the fourth, Nethan'el the fifth,
5 Am'mi-el the sixth, Is'sachar the seventh, Pe-ul'lethai the eighth; for God blessed him.
6 Also to his son Shemai'ah were sons born who were rulers in their fathers' houses, for they were men of great ability.
7 The sons of Shemai'ah: Othni, Reph'a-el, Obed, and Elza'bad, whose brethren were able men, Eli'hu and Semachi'ah.
8 All these were of the sons of O'bed-e'dom with their sons and brethren, able men qualified for the service; sixty-two of O'bed-e'dom.
9 And Meshelemi'ah had sons and brethren, able men, eighteen.
10 And Hosah, of the sons of Merar'i, had sons: Shimri the chief (for though he was not the first-born, his father made him chief),
11 Hilki'ah the second, Tebali'ah the third, Zechari'ah the fourth: all the sons and brethren of Hosah were thirteen.
12 These divisions of the gatekeepers, corresponding to their chief men, had duties, just as their brethren did, ministering in the house of the LORD;
13 and they cast lots by fathers' houses, small and great alike, for their gates.
14 The lot for the east fell to Shelemi'ah. They cast lots also for his son Zechari'ah, a shrewd counselor, and his lot came out for the north.
15 O'bed-e'dom's came out for the south, and to his sons was allotted the storehouse.
16 For Shuppim and Hosah it came out for the west, at the gate of Shal'lecheth on the road that goes up. Watch corresponded to watch.
17 On the east there were six each day, on the north four each day, on the south four each day, as well as two and two at the storehouse;
18 and for the parbar on the west there were four at the road and two at the parbar.
19 These were the divisions of the gatekeepers among the Ko'rahites and the sons of Merar'i.
20 And of the Levites, Ahi'jah had charge of the treasuries of the house of God and the treasuries of the dedicated gifts.
21 The sons of Ladan, the sons of the Gershonites belonging to Ladan, the heads of the fathers' houses belonging to Ladan the Gershonite: Jehi'eli.
22 The sons of Jehi'eli, Zetham and Jo'el his brother, were in charge of the treasuries of the house of the LORD.
23 Of the Am'ramites, the Iz'harites, the He'bronites, and the Uzzie'lites --
24 and Sheb'uel the son of Gershom, son of Moses, was chief officer in charge of the treasuries.
25 His brethren: from Elie'zer were his son Rehabi'ah, and his son Jeshai'ah, and his son Joram, and his son Zichri, and his son Shelo'moth.
26 This Shelo'moth and his brethren were in charge of all the treasuries of the dedicated gifts which David the king, and the heads of the fathers' houses, and the officers of the thousands and the hundreds, and the commanders of the army, had dedicated.
27 From spoil won in battles they dedicated gifts for the maintenance of the house of the LORD.
28 Also all that Samuel the seer, and Saul the son of Kish, and Abner the son of Ner, and Jo'ab the son of Zeru'iah had dedicated -- all dedicated gifts were in the care of Shelo'moth and his brethren.
29 Of the Iz'harites, Chenani'ah and his sons were appointed to outside duties for Israel, as officers and judges.
30 Of the He'bronites, Hashabi'ah and his brethren, one thousand seven hundred men of ability, had the oversight of Israel westward of the Jordan for all the work of the LORD and for the service of the king.
31 Of the He'bronites, Jeri'jah was chief of the He'bronites of whatever genealogy or fathers' houses. (In the fortieth year of David's reign search was made and men of great ability among them were found at Jazer in Gilead.)
32 King David appointed him and his brethren, two thousand seven hundred men of ability, heads of fathers' houses, to have the oversight of the Reubenites, the Gadites, and the half-tribe of the Manas'sites for everything pertaining to God and for the affairs of the king.

1 தங்கள் இலக்கத்தின்படி இருக்கிற இஸ்ரவேல் புத்திரருக்கு வம்சங்களின் தலைவரும், ஆரயித்துக்குச் சேர்வைக்காரரும், நூற்றிற்குச் சேர்வைக்காரரும், இவர்களுடைய தலைவரும் வைக்கப்பட்டிருந்தார்கள்; இவர்கள் வருஷத்திலுண்டான மாதங்களிலெல்லாம் மாதத்திற்கு மாதம் ராஜாவைச் சேவிக்கிறதற்கு வகுக்கப்பட்ட வரிசைகளின்படியெல்லாம் மாறிமாறி வருவார்கள்; ஒவ்வொரு வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
2 முதலாவது மாதத்துக்கு முதல் வகுப்பின்மேல் சப்தியேலின் குமாரன் யஷொபெயாம் இருந்தான்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
3 அவன் பேரேசின் சந்ததியாரில் சகல சேனாபதிகளின் தலைவனாயிருந்து முதல் மாதம் விசாரித்தான்.
4 இரண்டாவது மாதத்தின் வகுப்பின்மேல் அகோகியனான தோதாயி இருந்தான்; அவன் வகுப்பிலே மிக்லோத் தளகர்த்தனாயிருந்தான்; அவன் வகுப்பிலே இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
5 மூன்றாவது மாதத்தின் மூன்றாம் சேனாபதி யோய்தாவின் குமாரனாகிய பெனாயா என்னும் தலைமையான பிரதானி வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
6 இந்தப் பெனாயா அந்த முப்பது பராக்கிரமசாலிகளில் ஒருவனும் அந்த முப்பது பேர்களின் தலைவனுமாயிருந்தான்; அவனுடைய வகுப்பை அவன் குமாரனாகிய அமிசபாத் விசாரித்தான்.
7 நாலாவது மாதத்தின் நாலாம் சேனாபதி யோவாபின் சகோதரனாகிய ஆசகேலும், அவனுக்குப்பின்பு அவன் குமாரன் செப்தியாவுமே; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
8 ஐந்தாவது மாதத்தின் ஐந்தாம் சேனாபதி இஸ்ராகியனான சம்கூத் என்பவன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
9 ஆறாவது மாதத்தின் ஆறாம் சேனாபதி இக்கேசின் குமாரன் ஈரா என்னும் தெக்கோவியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
10 ஏழாவது மாத்தின் ஏழாம் சேனாபதி எப்பிராயீம் புத்திரரில் ஒருவனாகிய ஏலேஸ் என்னும் பெலோனியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
11 எட்டாவது மாதத்தின் எட்டாம் சேனாபதி சாரியரில் ஒருவனாகிய சிபெக்காயி என்னும் ஊஷாத்தியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
12 ஒன்பதாவது மாதத்தின் ஒன்பதாம் சேனாபதி பென்யமீனரில் அபியேசர் என்னும் ஆனதோத்தான்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
13 பத்தாவது மாதத்தின் பத்தாம் சேனாபதி சாரியரில் ஒருவனாகிய மக்ராயி என்னும் நெத்தோபாத்தியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
14 பதினோராவது மாதத்தின் பதினோராம் சேனாபதி எப்பிராயீம் புத்திரரில் பெனாயா என்னும் பிரத்தோனியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
15 பன்னிரண்டாவது மாதத்தின் பன்னிரண்டாம் சேனாபதி ஒத்னியேல் சந்ததியான எல்தாயி என்னும் நெத்தோபாத்தியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
16 இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவர்கள்; ரூபனியருக்குத் தலைவன் சிக்ரியின் குமாரன் எலியேசர்; சிமியோனியருக்கு மாக்காவின் குமாரன் செப்பத்தியா.
17 லேவியருக்கு கேமுவேலின் குமாரன் அஷாபியா; ஆரோன் சந்ததிக்குச் சாதோக்.
18 யூதாவுக்குத் தாவீதின் சகோதரரில் ஒருவனாகிய எலிகூ; இசக்காருக்கு மிகாவேலின் குமாரன் ஒம்ரி.
19 செபுலோனுக்கு ஒப்தியாவின் குமாரன் இஸ்மாயா; நப்தலிக்கு அஸ்ரியேலின் குமாரன் எரிமோத்.
20 எப்பிராயீம் புத்திரருக்கு அசசியாவின் குமாரன் ஓசெயா; மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்குப் பெதாயாவின் குமாரன் யோவேல்.
21 கிலேயாத்திலுள்ள மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்குச் சகரியாவின் குமாரன் இத்தோ; பென்யமீனுக்கு அப்னேரின் குமாரன் யாசியேல்.
22 தாணுக்கு எரோகாமின் குமாரன் அசாரியேல்; இவர்கள் இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவராயிருந்தார்கள்.
23 இஸ்ரவேலை வானத்தின் நட்சத்திரங்கள் அத்தனையாய்ப் பெருகப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லியிருந்தபடியால்; தாவீது இருபது வயதுமுதல் அதற்கு கீழ்ப்பட்டவர்களின் இலக்கத்தைத்தொகையேற்றவில்லை.
24 செருயாவின் குமாரன் யோவாப் எண்ணத்துவக்கியும் முடிக்காதேபோனான்; அதற்காக இஸ்ரவேலின்மேல் கடுங்கோபம் வந்தது; ஆதலால் அந்தத்தொகை தாவீது ராஜாவின் நாளாகமக்கணக்கிலே ஏறவில்லை.
25 ராஜாவுடைய பொக்கிஷங்களின்மேல் ஆதியேலின் குமாரன் அஸ்மாவேத்தும், பட்டணங்களிலும் கிராமங்களிலும் துருக்கங்களிலுமுள்ள நிலத்தின் வருமான பண்டகசாலைகளின்மேல் உசியாவின் குமாரன் யோனத்தானும்,
26 நிலத்தைப் பயிரிட வயல்வெளியின் வேலைசெய்கிறவர்களின்மேல் கேலுூப்பின்குமாரன் எஸ்ரியும்,
27 திராட்சத்தோட்டங்களின்மேல் ராமாத்தியனான சீமேயும், திராட்சத்தோட்டங்களின் வரத்தாகிய திராட்சரசம் வைக்கும் இடங்களின்மேல் சிப்மியனாகிய சப்தியும்,
28 பள்ளத்தாக்குகளிலுள்ள ஒலிவமரங்களின்மேலும் முசுக்கட்டை விருட்சங்கனின்மேலும் கெதேரியனான பால்கானானும், எண்ணெய்கிடங்குகளின்மேல் யோவாசும்,
29 சாரோனில் மேய்கிற மாடுகளின்மேல் சாரோனியனான சித்ராயும், பள்ளத்தாக்குகளிலுள்ள மாடுகளின்மேல் அத்லாயின் குமாரன் சாப்பாத்தும்,
30 ஒட்டகங்களின்மேல் இஸ்மவேலியனாகிய ஓபிலும், கழுதைகளின்மேல் மெரோனோத்தினாகிய எகெதியாவும்,
31 ஆடுகளின்மேல் ஆகாரியனான யாசிசும் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்; இவர்களெல்லாரும் தாவீது ராஜாவின்பொருள்களுக்கு விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.
32 தாவீதின் சிறிய தகப்பனாகிய யோனத்தான் என்னும் புத்தியும் படிப்புமுள்ள மனுஷன் ஆலோசனைக்காரனாயிருந்தன்; அக்மோனியின் குமாரன் யெகியேல் ராஜாவின் குமாரரோடிருந்தான்.
33 அகித்தோப்பேல் ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாயிருந்தான்; அர்கியனான ஊஷாயி ராஜாவின் தோழனாயிருந்தான்.
34 பெனாயாவின் குமாரன் யோய்தாவும் அபியத்தாரும் அகித்தோப்பேலுக் உதவியாயிருந்தார்கள்; யோவாப் ராஜாவின் படைத்தலைவனாயிருந்தான்.


1 This is the list of the people of Israel, the heads of fathers' houses, the commanders of thousands and hundreds, and their officers who served the king in all matters concerning the divisions that came and went, month after month throughout the year, each division numbering twenty-four thousand:
2 Jasho'beam the son of Zab'di-el was in charge of the first division in the first month; in his division were twenty-four thousand.
3 He was a descendant of Perez, and was chief of all the commanders of the army for the first month.
4 Dodai the Aho'hite was in charge of the division of the second month; in his division were twenty-four thousand.
5 The third commander, for the third month, was Benai'ah, the son of Jehoi'ada the priest, as chief; in his division were twenty-four thousand.
6 This is the Benai'ah who was a mighty man of the thirty and in command of the thirty; Ammiz'abad his son was in charge of his division.
7 As'ahel the brother of Jo'ab was fourth, for the fourth month, and his son Zebadi'ah after him; in his division were twenty-four thousand.
8 The fifth commander, for the fifth month, was Shamhuth, the Iz'rahite; in his division were twenty-four thousand.
9 Sixth, for the sixth month, was Ira, the son of Ikkesh the Teko'ite; in his division were twenty-four thousand.
10 Seventh, for the seventh month, was Helez the Pel'onite, of the sons of E'phraim; in his division were twenty-four thousand.
11 Eighth, for the eighth month, was Sib'becai the Hu'shathite, of the Ze'rahites; in his division were twenty-four thousand.
12 Ninth, for the ninth month, was Abi-e'zer of An'athoth, a Benjaminite; in his division were twenty-four thousand.
13 Tenth, for the tenth month, was Ma'harai of Netoph'ah, of the Ze'rahites; in his division were twenty-four thousand.
14 Eleventh, for the eleventh month, was Benai'ah of Pira'thon, of the sons of E'phraim; in his division were twenty-four thousand.
15 Twelfth, for the twelfth month, was Heldai the Netoph'athite, of Oth'ni-el; in his division were twenty-four thousand.
16 Over the tribes of Israel, for the Reubenites Elie'zer the son of Zichri was chief officer; for the Simeonites, Shephati'ah the son of Ma'acah;
17 for Levi, Hashabi'ah the son of Kem'uel; for Aaron, Zadok;
18 for Judah, Eli'hu, one of David's brothers; for Is'sachar, Omri the son of Michael;
19 for Zeb'ulun, Ishma'iah the son of Obadi'ah; for Naph'tali, Jer'emoth the son of Az'riel;
20 for the E'phraimites, Hoshe'a the son of Azazi'ah; for the half-tribe of Manas'seh, Jo'el the son of Pedai'ah;
21 for the half-tribe of Manas'seh in Gilead, Iddo the son of Zechari'ah; for Benjamin, Ja-a'si-el the son of Abner;
22 for Dan, Az'arel the son of Jero'ham. These were the leaders of the tribes of Israel.
23 David did not number those below twenty years of age, for the LORD had promised to make Israel as many as the stars of heaven.
24 Jo'ab the son of Zeru'iah began to number, but did not finish; yet wrath came upon Israel for this, and the number was not entered in the chronicles of King David.
25 Over the king's treasuries was Az'maveth the son of Ad'i-el; and over the treasuries in the country, in the cities, in the villages and in the towers, was Jonathan the son of Uzzi'ah;
26 and over those who did the work of the field for tilling the soil was Ezri the son of Chelub;
27 and over the vineyards was Shim'e-i the Ra'mathite; and over the produce of the vineyards for the wine cellars was Zabdi the Shiphmite.
28 Over the olive and sycamore trees in the Shephe'lah was Ba'al-ha'nan the Gede'rite; and over the stores of oil was Jo'ash.
29 Over the herds that pastured in Sharon was Shitrai the Shar'onite; over the herds in the valleys was Shaphat the son of Adlai.
30 Over the camels was Obil the Ish'maelite; and over the she-asses was Jehde'iah the Meron'othite. Over the flocks was Jaziz the Hagrite.
31 All these were stewards of King David's property.
32 Jonathan, David's uncle, was a counselor, being a man of understanding and a scribe; he and Jehi'el the son of Hach'moni attended the king's sons.
33 Ahith'ophel was the king's counselor, and Hushai the Archite was the king's friend.
34 Ahith'ophel was succeeded by Jehoi'ada the son of Benai'ah, and Abi'athar. Jo'ab was commander of the king's army.

1 கோத்திரங்களின் தலைவரும், ராஜாவைச் சேவிக்கிற வகுப்புகளின் தலைவரும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளும் ராஜாவுக்கும் ராஜகுமாரருக்கும் உண்டான எல்லா ஆஸ்தியையும் மிருகஜீவன்களையும் விசாரிக்கிற தலைவருமாகிய இஸ்ரவேலின் சகல பிரபுக்களையும், பிரதானிகளையும், பலசாலிகளையும், சகல பராக்கிரமசாலிகளையும் தாவீது எருசலேமிலே கூடிவரச்செய்தான்.
2 அப்பொழுது ராஜாவாகிய தாவீது: எழுந்திருந்து காலுூன்றி நின்று: என் சகோதரரே, என் ஜனமே, நான் சொல்வதைக் கேளுங்கள்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியும் நமது தேவனுடைய பாதபடியும் தங்குவதற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட நான் என் மனதிலே நினைத்து, கட்டுகிறதற்கு ஆயத்தமும் பண்ணினேன்.
3 ஆனாலும் தேவன் நீ என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்; நீ யுத்த மனுஷனாயிருந்து, ரத்தத்தைச் சிந்தினாய் என்றார்.
4 இப்போதும் இஸ்ரவேல் அனைத்தின்மேலும் என்றைக்கும் ராஜாவாயிருக்க, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவன் தகப்பனுடைய வீட்டாரில் எல்லாம் என்னைத் தெரிந்துகொண்டார்; அவர் யூதாவையும் யூதாவின் வம்சத்தில் அவன் தகப்பன் குடும்பத்தையும் தலைமையாக தெரிந்துகொண்டு, என்னை எல்லா இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக்க, என் தகப்பனுடைய குமாரருக்குள் என்மேல் பிரியம் வைத்தார்.
5 கர்த்தர் எனக்கு அநேகம் குமாரரைத் தந்தருளினார்; ஆனாலும் இஸ்ரவேலை ஆளும் கர்த்தருடைய ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தின்மேல் உட்காருகிறதற்கு அவர் என்னுடைய எல்லாக் குமாரரிலும் என் குமாரனாகிய சாலொமோனைத் தெரிந்துகொண்டு,
6 அவர் என்னை நோக்கி: உன் குமாரனாகிய சாலொமோனே என் ஆலயத்தையும் என் பிரகாரங்களையும் கட்டக்கடவன்; அவனை எனக்குக் குமாரனாகத் தெரிந்துகொண்டேன்; நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன்.
7 இந்நாளில் நடக்கிறபடியே அவன் என் கற்பனைகளின்படியும் என் நியாயங்களின்படியும் செய்ய உறுதியாயிருப்பானானால், அவன் ராஜ்யபாரத்தை என்றென்றைக்கும் திடப்படுத்துவேன் என்றார்.
8 இப்போதும் நீங்கள் என்றென்றைக்கும் இந்த நல்ல தேசத்தைச் சுதந்தரமாய் அநுபவித்து, உங்களுக்குப்பிறகு அதை உங்கள் பிள்ளைகளுக்குச் சுதந்தமாய்ப் பின்வைக்கும்பொருட்டாக, நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் கைக்கொண்டு விசாரியுங்கள் என்று கர்த்தரின் சபையாகிய இஸ்ரவேல் அனைத்தின் கண்களுக்குமுன்பாகவும், நமது தேவனுடைய செவிகேட்கவும் உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
9 என் குமாரனாகிய சாலொமோனே, நீ உன் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்.
10 இப்போதும் எச்சரிக்கையாயிரு; பரிசுத்த ஸ்தலமாக ஒரு ஆலயத்தைக்கட்டுவதற்குக் கர்த்தர் உன்னைத் தெரிந்துகொண்டார்; நீ திடன்கொண்டு அதை நடப்பி என்று சொன்னான்.
11 தாவீது தன் குமாரனாகிய சாலொமோனுக்கு மண்டபமும், அதின் அறைகளும், அதின் பொக்கிஷசாலைகளும், அதின் மேல்வீடுகளும், அதின் உள்ளறைகளும், கிருபாசன ஸ்தானம் இருக்கவேண்டிய மாதிரியையும்,
12 ஆவியினால் தனக்குக் கட்டளையிடப்பட்டபடியெல்லாம் அவன் செய்யவேண்டிய கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களும், தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பரிசுத்தமாக நேர்ந்துகொள்ளப்பட்டவைகளின் பொக்கிஷங்களையும் வைக்கும் சகல சுற்றறைகளும் இருக்கவேண்டிய மாதிரியையும்,
13 ஆசாரியரையும் லேவியரையும் வரிசைகளாக வகுக்கிறதற்கும், கர்த்தருடைய ஆலயப்பணிவிடை வேலை அனைத்திற்கும், கர்த்தருடைய ஆலயத்து வேலையின் பணிமுட்டுகள் அனைத்திற்குமுரிய கட்டளையையும் கொடுத்தான்.
14 அவன் பற்பல வேலைக்கு வேண்டிய சகல பொற்பாத்திரங்களுக்காக நிறையின்படி பொன்னையும், பற்பல வேலைக்குவேண்டிய சகல வெள்ளிப்பாத்திரங்களுக்காக, நிறையின்படி வெள்ளியையும்,
15 பொன் விளக்குத்தண்டுகளுக்கும் அவைகளின் பொன் விளக்குகளுக்கும், ஒவ்வொரு விளக்குத்தண்டுக்கும் அதின் விளக்குகளுக்கும் நிறையின்படி வேண்டிய பொன்னையும், வெள்ளி விளக்குத்தண்டுகளில் ஒவ்வொரு விளக்குத்தண்டுக்கும் அதின் விளக்குகளுக்கும் நிறையின்படி வேண்டிய வெள்ளியையும்,
16 சமுகத்தப்பங்களை வைக்கும் ஒவ்வொரு மேஜைக்கும் நிறையின்படி வேண்டிய பொன்னையும், வெள்ளி மேைஐகளுக்கு வேண்டிய வெள்ளியையும்,
17 முள்குறடுகளுக்கும் கலங்களுக்கும் தட்டுகளுக்கும் வேண்டிய பசும்பொன்னையும், பொன் கிண்ணிகளில் ஒவ்வொரு கிண்ணிக்கும் நிறையின்படி வேண்டியதையும், வெள்ளிக்கிண்ணிகளில் ஒவ்வொரு கிண்ணிக்கும் நிறையின்படி வேண்டியதையும்,
18 தூபங்காட்டும் பீடத்திற்கு நிறையின்படி வேண்டிய புடமிடப்பட்ட பொன்னையும் கொடுத்து, செட்டைகளை விரித்துக் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியை மூடும் பொன் கேருபீன்களான வாகனத்தின் மாதிரியையும் கொடுத்து,
19 இந்த மாதிரியின்படி சகல வேலைகளும் எனக்குத் தெரியப்படுத்த, இவையெல்லாம் கர்த்தருடைய கரத்தினால் எனக்கு எழுதிக்கொடுக்கப்பட்டது என்றான்.
20 தாவீது தன் குமாரனாகிய சாலொமோனை நோக்கி: நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி; நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்; கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கடுத்த சகல கிரியைகளையும் நீ முடித்துத் தீருமட்டும், அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக் கைவிடவுமாட்டார்.
21 இதோ, தேவனுடைய ஆலயத்துவேலைக்கெல்லாம் ஆசாரியர் அவருடைய வகுப்புகள் இருக்கிறது; அந்த எல்லாக் கிரியைக்கும் சகலவித வேலையிலும் நிபுணரான மனப்பூர்வமுள்ள சகல மனுஷரும், உன் சொற்படியெல்லாம் கேட்கும் பிரபுக்களும், சகல ஜனங்களும் உன்னிடத்தில் இருக்கிறார்கள் என்றான்.


1 David assembled at Jerusalem all the officials of Israel, the officials of the tribes, the officers of the divisions that served the king, the commanders of thousands, the commanders of hundreds, the stewards of all the property and cattle of the king and his sons, together with the palace officials, the mighty men, and all the seasoned warriors.
2 Then King David rose to his feet and said: "Hear me, my brethren and my people. I had it in my heart to build a house of rest for the ark of the covenant of the LORD, and for the footstool of our God; and I made preparations for building.
3 But God said to me, `You may not build a house for my name, for you are a warrior and have shed blood.'
4 Yet the LORD God of Israel chose me from all my father's house to be king over Israel for ever; for he chose Judah as leader, and in the house of Judah my father's house, and among my father's sons he took pleasure in me to make me king over all Israel.
5 And of all my sons (for the LORD has given me many sons) he has chosen Solomon my son to sit upon the throne of the kingdom of the LORD over Israel.
6 He said to me, `It is Solomon your son who shall build my house and my courts, for I have chosen him to be my son, and I will be his father.
7 I will establish his kingdom for ever if he continues resolute in keeping my commandments and my ordinances, as he is today.'
8 Now therefore in the sight of all Israel, the assembly of the LORD, and in the hearing of our God, observe and seek out all the commandments of the LORD your God; that you may possess this good land, and leave it for an inheritance to your children after you for ever.
9 "And you, Solomon my son, know the God of your father, and serve him with a whole heart and with a willing mind; for the LORD searches all hearts, and understands every plan and thought. If you seek him, he will be found by you; but if you forsake him, he will cast you off for ever.
10 Take heed now, for the LORD has chosen you to build a house for the sanctuary; be strong, and do it."
11 Then David gave Solomon his son the plan of the vestibule of the temple, and of its houses, its treasuries, its upper rooms, and its inner chambers, and of the room for the mercy seat;
12 and the plan of all that he had in mind for the courts of the house of the LORD, all the surrounding chambers, the treasuries of the house of God, and the treasuries for dedicated gifts;
13 for the divisions of the priests and of the Levites, and all the work of the service in the house of the LORD; for all the vessels for the service in the house of the LORD,
14 the weight of gold for all golden vessels for each service, the weight of silver vessels for each service,
15 the weight of the golden lampstands and their lamps, the weight of gold for each lampstand and its lamps, the weight of silver for a lampstand and its lamps, according to the use of each lampstand in the service,
16 the weight of gold for each table for the showbread, the silver for the silver tables,
17 and pure gold for the forks, the basins, and the cups; for the golden bowls and the weight of each; for the silver bowls and the weight of each;
18 for the altar of incense made of refined gold, and its weight; also his plan for the golden chariot of the cherubim that spread their wings and covered the ark of the covenant of the LORD.
19 All this he made clear by the writing from the hand of the LORD concerning it, all the work to be done according to the plan.
20 Then David said to Solomon his son, "Be strong and of good courage, and do it. Fear not, be not dismayed; for the LORD God, even my God, is with you. He will not fail you or forsake you, until all the work for the service of the house of the LORD is finished.
21 And behold the divisions of the priests and the Levites for all the service of the house of God; and with you in all the work will be every willing man who has skill for any kind of service; also the officers and all the people will be wholly at your command."

1 பின்பு தாவீதுராஜா சபையார் எல்லாரையும் நோக்கி: தேவன் தெரிந்துகொண்ட என் குமாரனாகிய சாலொமோன் இன்னும் வாலிபனும் இளைஞனுமாயிருக்கிறான்; செய்யவேண்டிய வேலையோ பெரியது; அது ஒரு மனுஷனுக்கு அல்ல, தேவனாகிய கர்த்தருக்குக் கட்டும் அரமனை.
2 நான் என்னாலே இயன்றமட்டும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று பொன்வேலைக்குப் பொன்னையும், வெள்ளிவேலைக்கு வெள்ளியையும், வெண்கலவேலைக்கு வெண்கலத்தையும், இரும்புவேலைக்கு இரும்பையும், மரவேலைக்கு மரத்தையும், பதிக்கப்படத்தக்க காந்தியுள்ள கற்களையும், பலவருணக் கற்களையும், விலையேறப்பெற்ற சகலவித ரத்தினங்களையும், வெண்கற்பாளங்களையும், கோமேதக முதலிய கற்களையும் ஏராளமாகச் சவதரித்தேன்.
3 இன்னும் என் தேவனுடைய ஆலயத்தின்மேல் நான் வைத்திருக்கிற வாஞ்சையினால், பரிசுத்த ஆலயத்துக்காக நான் சவதரித்த அனைத்தையும் தவிர, எனக்குச் சொந்தமான பொன்னையும் வெள்ளியையும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று கொடுக்கிறேன்.
4 அறைகளின் சுவர்களை மூடுவதற்காகவும், பொன்வேலைக்குப் பொன்னும், வெள்ளிவேலைக்கு வெள்ளியும் உண்டாயிருக்கிறதற்காகவும், கம்மாளர் செய்யும்வேலை அனைத்திற்காகவும, ஓப்பீரின் தங்கமாகிய மூவாயிரம் தாலந்து தங்கத்தையும், சுத்த வெள்ளியாகிய ஏழாயிரம் தாலந்து வெள்ளியையும் கொடுக்கிறேன்.
5 இப்போதும் உங்களில் இன்றையதினம் கர்த்தருக்குத் தன் கைக்காணிக்கைகளைச் செலுத்த மனப்பூர்வமானவர்கள் யார் என்றான்.
6 அப்பொழுது வம்சங்களின் பிரபுக்களும், இஸ்ரவேல் கோத்திரங்களின் பிரபுக்களும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளும், ராஜாவின் வேலைக்காரராகிய பிரபுக்களும் மனப்பூர்வமாய்,
7 தேவனுடைய ஆலயத்து வேலைக்கு ஐயாயிரம் தாலந்து பொன்னையும், பதினாயிரம் தங்கக்காசையும், பதினாயிரம் தாலந்து வெள்ளியையும், பதினெண்ணாயிரம் தாலந்து வெண்கலத்தையும், லட்சம் தாலந்து இரும்பையும் கொடுத்தார்கள்.
8 யார் கையில் ரத்தினங்கள் இருந்ததோ, அவர்கள் அவைகளையும் கர்த்தருடைய ஆலயத்துப் பொக்கிஷத்திற்கென்று கெர்சோனியனான யெகியேலின் கையிலே கொடுத்தார்கள்.
9 இப்படி மனப்பூர்வமாய்க் கொடுத்ததற்காக ஜனங்கள் சந்தோஷப்பட்டார்கள்; உத்தம இருதயத்தோடே உற்சாகமாய்க் கர்த்தருக்குக் கொடுத்தார்கள்; தாவீது ராஜாவும் மிகவும் சந்தோஷப்பட்டான்.
10 ஆகையால் தாவீது சபை அனைத்தின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்திச் சொன்னது எங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, சதாகாலங்களிலும் தேவரீருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.
11 கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்; கர்த்தாவே, ராஜ்யமும் உம்முடையது; தேவரீர் எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறீர்.
12 ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்.
13 இப்போதும் எங்கள் தேவனே, நாங்கள் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, உமது மகிமையுள்ள நாமத்தைத் துதிக்கிறோம்.
14 இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்? எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்.
15 உமக்கு முன்பாக நாங்கள் எங்களுடைய பிதாக்கள் எல்லாரைப்போலும் அரதேசிகளும் பரதேசிகளுமாயிருக்கிறோம்; பூமியின்மேல் எங்கள் நாட்கள் ஒரு நிழலைப்போல இருக்கிறது; நிலைத்திருப்போம் என்னும் நம்பிக்கையில்லை.
16 எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய பரிசுத்த நாமத்திற்கென்று உமக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுகிறதற்கு, நாங்கள் சவதரித்திருக்கிற இந்தப்பொருள்கள் எல்லாம் உமது கரத்திலிருந்து வந்தது; எல்லாம் உம்முடையது.
17 என் தேவனே, நீர் இருதயத்தைச் சோதித்து, உத்தம குணத்தில் பிரியமாயிருக்கிறீர் என்பதை அறிவேன்; இவையெல்லாம் நான் உத்தம இருதயத்தோடே மனப்பூர்வமாய்க் கொடுத்தேன்; இப்பொழுது இங்கேயிருக்கிற உம்முடைய ஜனமும் உமக்கு மனப்பூர்வமாய்க் கொடுக்கிறதைக் கண்டு சந்தோஷித்தேன்.
18 ஆபிரகாம் ஈசாக்கு இஸ்ரவேல் என்னும் எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே, உமது ஜனத்தின் இருதயத்தில் உண்டான இந்தச் சிந்தையையும் நினைவையும் என்றைக்கும் காத்து, அவர்கள் இருதயத்தை உமக்கு நேராக்கியருளும்.
19 என் குமாரனாகிய சாலொமோன் உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய சாட்சிகளையும் உம்முடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்படிக்கும், இவைகள் எல்லாவற்றையும் செய்து, நான் ஆயத்தம்பண்ணின இந்த அரமனையைக்கட்டும்படிக்கும், அவனுக்கு உத்தம இருதயத்தைத் தந்தருளும் என்றான்.
20 அதின்பின்பு தாவீது சபை அனைத்தையும் நோக்கி: இப்போது உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் என்றான்; அப்பொழுது சபையார் எல்லாரும் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரித்து, தலை குனிந்து கர்த்தரையும் ராஜாவையும் பணிந்துகொண்டு,
21 கர்த்தருக்குப் பலியிட்டு, மறுநாளிலே சர்வாங்க தகனபலிகளாக ஆயிரம் காளைகளையும், ஆயிரம் ஆட்டுக்கடாக்களையும், ஆயிரம் ஆட்டுக்குட்டிகளையும், அவைகளுக்கடுத்த பானபலிகளையும் இஸ்ரவேல் அனைத்திற்காகவும் கர்த்தருக்குச் செலுத்தினார்கள்.
22 அவர்கள் அன்றையதினம் மிகுந்த சந்தோஷத்தோடு கர்த்தருக்கு முன்பாகப் போஜனபானம்பண்ணி, தாவீதின் குமாரனாகிய சாலொமோனை இரண்டாம்விசை ராஜாவாக்கி, கர்த்தருக்கு முன்பாக அவனை அதிபதியாகவும், சாதோக்கை ஆசாரியனாகவும் அபிஷேகம்பண்ணினார்கள்.
23 அப்படியே சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே, கர்த்தருடைய சிங்காசனத்தில் ராஜாவாய் வீற்றிருந்து பாக்கியசாலியாயிருந்தான்; இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்கள்.
24 சகல பிரபுக்களும் பராக்கிரமசாலிகளும் தாவீது ராஜாவினுடைய சகல குமாரருங்கூட ராஜாவாகிய சாலொமோனுக்கு அடங்கியிருந்தார்கள்.
25 இஸ்ரவேலர் எல்லாரும் காணக் கர்த்தர் சாலொமோனை மிகவும் பெரியவனாக்கி, அவனுக்கு முன்னே இஸ்ரவேலில் ராஜாவான ஒருவனுக்கும் இல்லாதிருந்த ராஜரிக மகத்துவத்தை அவனுக்குக் கட்டளையிட்டார்.
26 இவ்விதமாய் ஈசாயின் குமாரனாகிய தாவீது இஸ்ரவேல் அனைத்துக்கும் ராஜாவாயிருந்தான்.
27 அவன் இஸ்ரவேலை அரசாண்ட நாட்கள் நாற்பதுவருஷம்; எப்ரோனிலே ஏழுவருஷமும், எருசலேமிலே முப்பத்துமூன்று வருஷமும் ராஜாவாயிருந்தான்.
28 அவன் தீர்க்காயுசும் ஐசுவரியமும் மகிமையுமுள்ளவனாய் நல்ல முதிர்வயதிலே மரணமடைந்தபின், அவன் குமாரனாகிய சாலொமோன் அவன் ஸ்தானத்திலே அரசாண்டான்.
29 தாவீது ராஜாவினுடைய ஆதியோடந்தமான நடபடிகளும், அவன் அரசாண்ட விபரமும், அவனுடைய வல்லமையும், அவனுக்கும் இஸ்ரவேலுக்கும், அந்தந்த தேசங்களின் ராஜ்யங்கள் அனைத்துக்கும் நடந்த காலசம்பவங்களும்,
30 ஞானதிருஷ்டிக்காரனாகிய சாமுவேலின் பிரபந்தத்திலும், தீர்க்கதரிசியாகிய நாத்தானின் பிரபந்தத்திலும், ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தின் பிரபந்தத்திலும் எழுதியிருக்கிறது.


1 And David the king said to all the assembly, "Solomon my son, whom alone God has chosen, is young and inexperienced, and the work is great; for the palace will not be for man but for the LORD God.
2 So I have provided for the house of my God, so far as I was able, the gold for the things of gold, the silver for the things of silver, and the bronze for the things of bronze, the iron for the things of iron, and wood for the things of wood, besides great quantities of onyx and stones for setting, antimony, colored stones, all sorts of precious stones, and marble.
3 Moreover, in addition to all that I have provided for the holy house, I have a treasure of my own of gold and silver, and because of my devotion to the house of my God I give it to the house of my God:
4 three thousand talents of gold, of the gold of Ophir, and seven thousand talents of refined silver, for overlaying the walls of the house,
5 and for all the work to be done by craftsmen, gold for the things of gold and silver for the things of silver. Who then will offer willingly, consecrating himself today to the LORD?"
6 Then the heads of fathers' houses made their freewill offerings, as did also the leaders of the tribes, the commanders of thousands and of hundreds, and the officers over the king's work.
7 They gave for the service of the house of God five thousand talents and ten thousand darics of gold, ten thousand talents of silver, eighteen thousand talents of bronze, and a hundred thousand talents of iron.
8 And whoever had precious stones gave them to the treasury of the house of the LORD, in the care of Jehi'el the Gershonite.
9 Then the people rejoiced because these had given willingly, for with a whole heart they had offered freely to the LORD; David the king also rejoiced greatly.
10 Therefore David blessed the LORD in the presence of all the assembly; and David said: "Blessed art thou, O LORD, the God of Israel our father, for ever and ever.
11 Thine, O LORD, is the greatness, and the power, and the glory, and the victory, and the majesty; for all that is in the heavens and in the earth is thine; thine is the kingdom, O LORD, and thou art exalted as head above all.
12 Both riches and honor come from thee, and thou rulest over all. In thy hand are power and might; and in thy hand it is to make great and to give strength to all.
13 And now we thank thee, our God, and praise thy glorious name.
14 "But who am I, and what is my people, that we should be able thus to offer willingly? For all things come from thee, and of thy own have we given thee.
15 For we are strangers before thee, and sojourners, as all our fathers were; our days on the earth are like a shadow, and there is no abiding.
16 O LORD our God, all this abundance that we have provided for building thee a house for thy holy name comes from thy hand and is all thy own.
17 I know, my God, that thou triest the heart, and hast pleasure in uprightness; in the uprightness of my heart I have freely offered all these things, and now I have seen thy people, who are present here, offering freely and joyously to thee.
18 O LORD, the God of Abraham, Isaac, and Israel, our fathers, keep for ever such purposes and thoughts in the hearts of thy people, and direct their hearts toward thee.
19 Grant to Solomon my son that with a whole heart he may keep thy commandments, thy testimonies, and thy statutes, performing all, and that he may build the palace for which I have made provision."
20 Then David said to all the assembly, "Bless the LORD your God." And all the assembly blessed the LORD, the God of their fathers, and bowed their heads, and worshiped the LORD, and did obeisance to the king.
21 And they performed sacrifices to the LORD, and on the next day offered burnt offerings to the LORD, a thousand bulls, a thousand rams, and a thousand lambs, with their drink offerings, and sacrifices in abundance for all Israel;
22 and they ate and drank before the LORD on that day with great gladness. And they made Solomon the son of David king the second time, and they anointed him as prince for the LORD, and Zadok as priest.
23 Then Solomon sat on the throne of the LORD as king instead of David his father; and he prospered, and all Israel obeyed him.
24 All the leaders and the mighty men, and also all the sons of King David, pledged their allegiance to King Solomon.
25 And the LORD gave Solomon great repute in the sight of all Israel, and bestowed upon him such royal majesty as had not been on any king before him in Israel.
26 Thus David the son of Jesse reigned over all Israel.
27 The time that he reigned over Israel was forty years; he reigned seven years in Hebron, and thirty-three years in Jerusalem.
28 Then he died in a good old age, full of days, riches, and honor; and Solomon his son reigned in his stead.
29 Now the acts of King David, from first to last, are written in the Chronicles of Samuel the seer, and in the Chronicles of Nathan the prophet, and in the Chronicles of Gad the seer,
30 with accounts of all his rule and his might and of the circumstances that came upon him and upon Israel, and upon all the kingdoms of the countries.