ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.

~1 ஆதியாகமம் 1:1

1 அகலியாவின் குமாரனாகிய நெகேமியாவின் நடபடிகள்: இருபதாம் வருஷம் கிஸ்லேயு மாதத்தில் நான் சூசானென்னும் அரமனையில் இருக்கும்போது சம்பவித்தது என்னவென்றால்,
2 என் சகோதரரில் ஒருவனாகிய ஆனானியும், வேறே சில மனுஷரும் யூதாவிலிருந்து வந்தார்கள்; அவர்களிடத்தில் நான் சிறையிருப்பில் மீந்து தப்பின யூதரின் செய்தியையும், எருசலேமின் செய்தியையும் விசாரித்தேன்.
3 அதற்கு அவர்கள்: சிறையிருப்பில் மீந்திருக்கிறவர்கள் அந்தத் தேசத்திலே மகா தீங்கையும் நிந்தையையும் அநுபவிக்கிறார்கள்; எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது என்றார்கள்.
4 இந்த வார்த்தைகளைக் கேட்டபோது நான் உட்கார்ந்து அழுது, சிலநாளாய்த் துக்கித்து, உபவாசித்து, மன்றாடி, பரலோகத்தின் தேவனை நோக்கி:
5 பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே,
6 உமது அடியாராகிய இஸ்ரவேல் புத்திரருக்காக இன்று இரவும்பகலும் உமக்கு முன்பாக மன்றாடி, இஸ்ரவேல் புத்திரராகிய நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தைக்கேட்கிறதற்கு, உம்முடைய செவி கவனித்தும், உம்முடைய கண்கள் திறந்தும் இருப்பதாக; நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவஞ்செய்தோம்.
7 நாங்கள் உமக்கு முன்பாக மிகவும் கெட்டவர்களாய் நடந்தோம்; நீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக்கற்பித்த கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்ளாதேபோனோம்.
8 நீங்கள் கட்டளையை மீறினால், நான் உங்களை ஜாதிகளுக்குள்ளே சிதறடிப்பேன் என்றும்,
9 நீங்கள் என்னிடத்தில் திரும்பி, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், உங்களிலே தள்ளுண்டு போனவர்கள் வானத்தின் கடையாந்தரத்தில் இருந்தாலும், நான் அங்கேயிருந்து அவர்களைச் சேர்த்து, என் நாமம் விளங்கும்படி நான் தெரிந்துகொண்ட ஸ்தலத்துக்கு அவர்களைக் கொண்டுவருவேனேன்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தையை நினைத்தருளும்.
10 தேவரீர் உமது மகா வல்லமையினாலும், உமது பலத்த கரத்தினாலும், மீட்டுக்கொண்ட உமது அடியாரும் உமது ஜனங்களும் இவர்கள்தானே.
11 ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக; இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணி, இந்த மனுஷனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கப்பண்ணியருளும் என்று பிரார்த்தித்தேன். நான் ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனாயிருந்தேன்.


1 The words of Nehemi'ah the son of Hacali'ah. Now it happened in the month of Chislev, in the twentieth year, as I was in Susa the capital,
2 that Hana'ni, one of my brethren, came with certain men out of Judah; and I asked them concerning the Jews that survived, who had escaped exile, and concerning Jerusalem.
3 And they said to me, "The survivors there in the province who escaped exile are in great trouble and shame; the wall of Jerusalem is broken down, and its gates are destroyed by fire."
4 When I heard these words I sat down and wept, and mourned for days; and I continued fasting and praying before the God of heaven.
5 And I said, "O LORD God of heaven, the great and terrible God who keeps covenant and steadfast love with those who love him and keep his commandments;
6 let thy ear be attentive, and thy eyes open, to hear the prayer of thy servant which I now pray before thee day and night for the people of Israel thy servants, confessing the sins of the people of Israel, which we have sinned against thee. Yea, I and my father's house have sinned.
7 We have acted very corruptly against thee, and have not kept the commandments, the statutes, and the ordinances which thou didst command thy servant Moses.
8 Remember the word which thou didst command thy servant Moses, saying, `If you are unfaithful, I will scatter you among the peoples;
9 but if you return to me and keep my commandments and do them, though your dispersed be under the farthest skies, I will gather them thence and bring them to the place which I have chosen, to make my name dwell there.'
10 They are thy servants and thy people, whom thou hast redeemed by thy great power and by thy strong hand.
11 O Lord, let thy ear be attentive to the prayer of thy servant, and to the prayer of thy servants who delight to fear thy name; and give success to thy servant today, and grant him mercy in the sight of this man." Now I was cupbearer to the king.

1 அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் வருஷம் நிசான் மாதத்திலே, திராட்சரசம் ராஜாவுக்கு முன்பாக வைத்திருக்கையில், நான் அதை எடுத்து அவருக்குக் கொடுத்தேன்; நான் முன் ஒருபோதும் அவர் சமுகத்தில் துக்கமாயிருந்ததில்லை.
2 அப்பொழுது ராஜா என்னைப்பார்த்து: நீ துக்கமுகமாயிருக்கிறது என்ன? உனக்கு வியாதியில்லையே, இது மனதின் துக்கமே ஒழிய வேறொன்றும் அல்ல என்றார்; அப்பொழுது நான் மிகவும் பயந்து,
3 ராஜாவை நோக்கி: ராஜா என்றைக்கும் வாழ்க; என் பிதாக்களின் கல்லறைகள் இருக்கும் ஸ்தலமாகிய நகரம் பாழானதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கும்போது, நான் துக்கமுகத்தோடு இராதிருப்பது எப்படி என்றேன்.
4 அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ கேட்கிற காரியம் என்ன என்றார். அப்பொழுது நான்: பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி,
5 ராஜாவைப் பார்த்து: ராஜாவுக்குச் சித்தமாயிருந்து, அடியேனுக்கு உமது சமுகத்தில் தயை கிடைத்ததானால், என் பிதாக்களின் கல்லறைகளிலிருக்கும் பட்டணத்தைக் கட்டும்படி, யூதா தேசத்துக்கு நீர் என்னை அனுப்பவேண்டிக்கொள்ளுகிறேன் என்றேன்.
6 அப்பொழுது ராஜஸ்திரீயும் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். ராஜா என்னைப் பார்த்து: உன் பிரயாணம் எத்தனை நாள் செல்லும், நீ எப்பொழுது திரும்பிவருவாய் என்று கேட்டார். இவ்வளவுகாலம் செல்லுமென்று நான் ராஜாவுக்குச் சொன்னபோது, என்னை அனுப்ப அவருக்குச் சித்தமாயிற்று.
7 பின்னும் நான் ராஜாவைப் பார்த்து ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், நான் யூதாதேசத்துக்குப் போய்ச்சேருமட்டும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதிகள் என்னை வழிவிட்டனுப்பும்படிக்கு அவர்களுக்குக் கடிதங்கள் கொடுக்கும்படிக்கும்,
8 தேவாலயத்துக்கு இருக்கிற அரணின் கதவு வேலைக்கும், நகர அலங்கத்தின் வேலைக்கும், நான் தங்கப்போகிற வீட்டின் வேலைக்கும் வேண்டிய மரங்களை ராஜாவின் வனத்துக் காவலாளனாகிய ஆசாப் எனக்குக் கொடுக்கும்படிக்கும், அவனுக்கும் ஒரு கடிதம் கட்டளையிடப்படுவதாக என்றேன்; என் தேவனுடைய தயவுள்ள கரம் என்மேல் இருந்தபடியால், ராஜா அவைகளை எனக்குக் கட்டளையிட்டார்.
9 அப்படியே நான் நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதிகளிடத்துக்கு வந்து, ராஜாவின் கடிதங்களை அவர்களுக்குக் கொடுத்தேன்; ராஜா என்னோடேகூட இராணுவச் சேர்வைக்காரரையும், குதிரைவீரரையும் அனுப்பியிருந்தார்.
10 இதை ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும் கேட்டபோது, இஸ்ரவேல் புத்திரரின் நன்மையை விசாரிக்க ஒருவன் வந்தான் என்பது அவர்களுக்கு மிகவும் விசனமாயிருந்தது.
11 நான் எருசலேமுக்கு வந்து, அங்கே மூன்றுநாள் இருந்தபின்பு,
12 நான் சில மனுஷரைக் கூட்டிக்கொண்டு, ராத்திரியில் எழுந்து நகர சோதனை செய்தேன்; ஆனாலும் எருசலேமுக்காகச் செய்யும்படி என் தேவன் என் மனதிலே வைத்ததை நான் ஒருவருக்கும் அறிவிக்கவில்லை; நான் ஏறிப்போன மிருகமேயல்லாமல் வேறொரு மிருகமும் என்னோடிருந்ததில்லை.
13 நான் அன்று ராத்திரி பள்ளத்தாக்கின் வாசல்வழியாய்ப் புறப்பட்டு, வலுசர்ப்பத் துரவைக் கடந்து, குப்பைமேட்டு வாசலுக்கு வந்து, எருசலேமில் இடிந்துபோன அலங்கத்தையும், அக்கினியால் சுட்டெரிக்கப்பட்ட அதின் வாசல்களையும் பார்வையிட்டேன்.
14 அவ்விடத்தை விட்டு ஊருணி வாசலண்டைக்கும், ராஜாவின் குளத்தண்டைக்கும் போனேன்; நான் ஏறியிருந்த மிருகம் அங்கே நடந்துபோகிறதற்கு வழியில்லாதிருந்தது.
15 அன்று ராத்திரியிலேயே நான் ஆற்றோரமாய்ப் போய், அலங்கத்தைப் பார்வையிட்டுத் திரும்பி, பள்ளத்தாக்கின் வாசல்வழியாய் வந்துவிட்டேன்.
16 நான் போனதும், நான் செய்ததும் அதிகாரிகள் ஒருவருக்கும் தெரியாது; அதுவரையிலும் நான் யூதருக்காகிலும், ஆசாரியர்கள் பெரியவர்கள் அதிகாரிகளுக்காகிலும், வேலைசெய்கிற மற்றவர்களுக்காகிலும் ஒன்றும் அறிவிக்கவில்லை.
17 பின்பு நான் அவர்களை நோக்கி: எருசலேம் பாழாயிருக்கிறதையும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டுக்கிடக்கிறதையும், நாம் இருக்கிற சிறுமையையும் பார்க்கிறீர்களே; நாம் இனி நிந்தைக்குள்ளாயிராதபடிக்கு, எருசலேமின் அலங்கத்தைக் கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி,
18 என் தேவனுடைய கரம் என்மேல் நன்மையாக இருக்கிறதையும், ராஜா என்னோடே சொன்ன வார்த்தைகளையும் அவர்களுக்கு அறிவித்தேன்; அப்பொழுது அவர்கள்: எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி, அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள்.
19 ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும், அரபியனான கேஷேமும் இதைக் கேட்டபோது, எங்களைப் பரியாசம்பண்ணி, எங்களை நிந்தித்து: நீங்கள் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீங்கள் ராஜாவுக்கு விரோதமாகக் கலகம்பண்ணப்போகிறீர்களோ என்றார்கள்.
20 அதற்கு நான் மறுமொழியாக: பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்குக் காரியத்தைக் கைகூடிவரப்பண்ணுவார்; அவருடைய ஊழியக்காரராகிய நாங்கள் எழுந்து கட்டுவோம்; உங்களுக்கோவென்றால் எருசலேமிலே பங்குமில்லை பாத்தியமுமில்லை; உங்கள் பேர் விளங்க ஒன்றும் இல்லையென்று அவர்களுடனே சொன்னேன்.


1 In the month of Nisan, in the twentieth year of King Ar-ta-xerx'es, when wine was before him, I took up the wine and gave it to the king. Now I had not been sad in his presence.
2 And the king said to me, "Why is your face sad, seeing you are not sick? This is nothing else but sadness of the heart." Then I was very much afraid.
3 I said to the king, "Let the king live for ever! Why should not my face be sad, when the city, the place of my fathers' sepulchres, lies waste, and its gates have been destroyed by fire?"
4 Then the king said to me, "For what do you make request?" So I prayed to the God of heaven.
5 And I said to the king, "If it pleases the king, and if your servant has found favor in your sight, that you send me to Judah, to the city of my fathers' sepulchres, that I may rebuild it."
6 And the king said to me (the queen sitting beside him), "How long will you be gone, and when will you return?" So it pleased the king to send me; and I set him a time.
7 And I said to the king, "If it pleases the king, let letters be given me to the governors of the province Beyond the River, that they may let me pass through until I come to Judah;
8 and a letter to Asaph, the keeper of the king's forest, that he may give me timber to make beams for the gates of the fortress of the temple, and for the wall of the city, and for the house which I shall occupy." And the king granted me what I asked, for the good hand of my God was upon me.
9 Then I came to the governors of the province Beyond the River, and gave them the king's letters. Now the king had sent with me officers of the army and horsemen.
10 But when Sanbal'lat the Hor'onite and Tobi'ah the servant, the Ammonite, heard this, it displeased them greatly that some one had come to seek the welfare of the children of Israel.
11 So I came to Jerusalem and was there three days.
12 Then I arose in the night, I and a few men with me; and I told no one what my God had put into my heart to do for Jerusalem. There was no beast with me but the beast on which I rode.
13 I went out by night by the Valley Gate to the Jackal's Well and to the Dung Gate, and I inspected the walls of Jerusalem which were broken down and its gates which had been destroyed by fire.
14 Then I went on to the Fountain Gate and to the King's Pool; but there was no place for the beast that was under me to pass.
15 Then I went up in the night by the valley and inspected the wall; and I turned back and entered by the Valley Gate, and so returned.
16 And the officials did not know where I had gone or what I was doing; and I had not yet told the Jews, the priests, the nobles, the officials, and the rest that were to do the work.
17 Then I said to them, "You see the trouble we are in, how Jerusalem lies in ruins with its gates burned. Come, let us build the wall of Jerusalem, that we may no longer suffer disgrace."
18 And I told them of the hand of my God which had been upon me for good, and also of the words which the king had spoken to me. And they said, "Let us rise up and build." So they strengthened their hands for the good work.
19 But when Sanbal'lat the Hor'onite and Tobi'ah the servant, the Ammonite, and Geshem the Arab heard of it, they derided us and despised us and said, "What is this thing that you are doing? Are you rebelling against the king?"
20 Then I replied to them, "The God of heaven will make us prosper, and we his servants will arise and build; but you have no portion or right or memorial in Jerusalem."

1 அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய எலியாசீபும், அவன் சகோதரராகிய ஆசாரியர்களும் எழுந்து ஆட்டுவாசலைக் கட்டினார்கள்; அதைக் கட்டி, அவர்கள் பிரதிஷ்டைபண்ணி, அதின் கதவுகளை வைத்து, மேயா என்கிற கொம்மை முதல் அனானெயேலின் கொம்மைமட்டும் கட்டிப் பிரதிஷ்டைபண்ணினார்கள்.
2 அவன் அருகே எரிகோவின் மனுஷர் கட்டினார்கள், அவர்கள் அருகே இம்ரியின் குமாரனாகிய சக்கூர் கட்டினான்.
3 மீன்வாசலை அசெனாவின் குமாரர் கட்டினார்கள்; அதற்கு உத்தரம்பாவி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டார்கள்.
4 அவர்கள் அருகே கோசின் குமாரனாகிய உரியாவின் மகன் மெரெமோத் பழுதுபார்த்துக் கட்டினான்; அவர்கள் அருகே மெஷேசாபெயேலின் குமாரனாகிய பெரகியாவின் மகன் மெசுல்லாம் பழுதுபார்த்துக் கட்டினான்; அவர்கள் அருகே பானாவின் குமாரனாகிய சாதோக் பழுதுபார்த்துக் கட்டினான்.
5 அவர்கள் அருகே தெக்கோவா ஊரார் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்களுடைய பிரபுக்களோ, தங்கள் ஆண்டவருடைய வேலைக்குத் தங்கள் கழுத்தைக் கொடுக்கவில்லை.
6 பழைய வாசலைப் பசெயாசின் குமாரனாகிய யோய்தாவும், பேசோதியாவின் குமாரனாகிய மெசுல்லாமும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்கள் அதற்கு உத்தரம்பாவி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டார்கள்.
7 அவர்கள் அருகே கிபியோன் மிஸ்பா ஊர்களின் மனுஷரான மெலதீயா என்னும் கிபியோனியனும் யாதோன் என்னும் மெரொனோத்தியனும், நதிக்கு இப்புறத்திலிருக்கிற அதிபதியின் சமஸ்தானமட்டும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
8 அவர்கள் அருகே தட்டாரில் ஒருவனாகிய அராயாவின் குமாரன் ஊசியேல் பழுதுபார்த்துக் கட்டினான்; அவன் அருகே தைலக்காரரில் ஒருவன் குமாரனாகிய அனனியா பழுதுபார்த்துக்கட்டினான்; அதுமுதற்கொண்டு அகலமான மதில் மட்டும் எருசலேம் இடிக்காமல் விட்டிருந்தது.
9 அவர்கள் அருகே எருசலேம் பட்டணத்தின் பாதிக்குப் பிரபுவாகிய ஊரின் குமாரன் ரெப்பாயா பழுதுபார்த்துக் கட்டினான்.
10 அவர்கள் அருகே அருமாப்பின் குமாரன் யெதாயா தன் வீட்டுக்கு எதிரானதைப் பழுதுபார்த்துக் கட்டினான்; அவன் அருகே ஆசாப்நெயாவின் குமாரன் அத்தூஸ் பழுதுபார்த்துக் கட்டினான்.
11 மற்றப் பங்கையும், சூளைகளின் கொம்மையையும், ஆரீமின் குமாரன் மல்கிஜாவும், பாகாத்மோவாபின் குமாரன் அசூபும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
12 அவன் அருகே எருசலேம் பட்டணத்தின் மறுபாதிக்குப் பிரபுவாகிய அலோகேசின் குமாரன் சல்லுூமும், அவன் குமாரத்திகளும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
13 பள்ளத்தாக்கின் வாசலை ஆனூனும், சானோவாகின் குடிகளும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்கள் அதைக் கட்டி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டு, குப்பைமேட்டு வாசல்மட்டாக அலங்கத்தில் ஆயிரம் முழம் கட்டினார்கள்.
14 குப்பைமேட்டு வாசலைப் பெத்கேரேமின் மகாணத்துப் பிரபுவாகிய ரெக்காவின் குமாரன் மல்கியா பழுதுபார்த்து அதைக் கட்டி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டான்.
15 ஊருணிவாசலை மிஸ்பாவின் மாகாணத்துப் பிரபுவாகிய கொல்லோசேயின் குமாரன் சல்லுூம் பழுதுபார்த்து, அதைக் கட்டி மச்சுப்பாவி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டு, ராஜாவின் சிங்காரத் தோட்டத்தண்டையிலிருக்கிற சீலோவாவின் குளத்து மதிலையும், தாவீதின் நகரத்திலிருந்து இறங்குகிற படிகள் மட்டாக இருக்கிறதையும் கட்டினான்.
16 அவனுக்குப் பின்னாகப் பெத்சூர் மாகாணத்தின் பாதிக்குப் பிரபுவாகிய அஸ்பூகின் குமாரன் நெகேமியா தாவீதின் கல்லறைகளுக்கு எதிரான இடமட்டாகவும், வெட்டப்பட்ட குளமட்டாகவும், பராக்கிரமசாலிகளின் வீடுமட்டாகவும் இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
17 அவனுக்குப் பின்னாக லேவியரில் பானியின் குமாரன் ரேகூமும், அவன் அருகே கேகிலா மாகாணத்தில் தன்னுடைய பாதிப்பங்குக்குப் பிரபுவாகிய அசபியாவும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
18 அவனுக்குப் பின்னாக அவனுடைய சகோதரரில் கேகிலா மாகாணத்து மறுபாதிக்குப் பிரபுவாகிய எனாதாதின் குமாரன் பாபாயி பழுதுபார்த்துக் கட்டினான்.
19 அவன் அருகே மிஸ்பாவின் பிரபுவாகிய யெசுவாவின் குமாரன் ஏசர் என்பவன் மதிலின் கோடியிலே ஆயுதசாலையின் படிகளுக்கு எதிரேயிருக்கிற வேறொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
20 அவனுக்குப் பின்னாகச் சாபாயின் குமாரன் பாரூக் அந்தக் கோடி துவக்கிப் பிரதான ஆசாரியனாகிய எலியாசீபின் வாசற்படிமட்டும் இருக்கிற பின்னொரு பங்கை வெகு ஜாக்கிரதையோடே பழுதுபார்த்துக் கட்டினான்.
21 அவனுக்குப் பின்னாகக் கோசின் குமாரனாகிய உரியாவின் மகன் மெரெமோத் எலியாசீபின் வீட்டு வாசற்படி துவக்கி அவனுடைய வீட்டின் கடைக்கோடிமட்டும் இருக்கிற பின்னொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
22 அவனுக்குப் பின்னாகச் சமனான பூமியில் வாசமாயிருக்கிற ஆசாரியர்கள் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
23 அவர்களுக்குப் பின்னாக பென்யமீனும், அசூபும் தங்கள் வீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்களுக்குப் பின்னாக அனனியாவின் குமாரனாகிய மாசேயாவின் மகன் அசரியா தன் வீட்டின் அருகே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
24 அவனுக்குப் பின்னாக எனாதாதின் குமாரன் பின்னூவி அசரியாவின் வீடு துவக்கி அலங்கத்துக் கோடி வளைவுவரைக்கும் இருக்கிற வேறொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
25 ஊசாயின் குமாரன் பாலால் வளைவுக்கு எதிரேயும், காவல் வீட்டின் முற்றத்துக்கடுத்த ராஜாவின் உயரமான அரமனைக்கு வெளிப்புறமாயிருக்கிற கொம்மைக்கு எதிரேயும் இருக்கிறதைக் கட்டினான்; அவனுக்குப் பின்னாகப் பாரோஷின் குமாரன் பெதாயாவும்,
26 ஓபேலிலே குடியிருக்கிற நிதனீமியரைச் சேர்ந்த மனிதரும் கிழக்கேயிருக்கிற தண்ணீர் வாசலுக்கு வெளிப்புறமான கொம்மைக்கு எதிரேயிருக்கிற இடமட்டும் கட்டினார்கள்.
27 அவர்களுக்குப் பின்னாகத் தெக்கோவா ஊரார் வெளிப்புறமான பெரிய கொம்மைக்கு எதிரே ஓபேலின் மதில்மட்டும் இருக்கிற பின்னொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
28 குதிரைவாசல் முதற்கொண்டு ஆசாரியர்கள் அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
29 அவர்களுக்குப் பின்னாக இம்மேரின் குமாரன் சாதோக் தன் வீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்; அவனுக்குப் பின்னாகக் கிழக்கு வாசலைக் காக்கிற செக்கனியாவின் குமாரன் செமாயா பழுதுபார்த்துக் கட்டினான்.
30 அவனுக்குப் பின்னாகச் செல்மீயாவின் குமாரன் அனனியாவும், சாலாபின் ஆறாவது குமாரனாகிய ஆனூனும், வேறொரு பங்கைப் பழுதுபார்த்துக்கட்டினார்கள்; அவர்களுக்குப் பின்னாகப் பெரகியாவின் குமாரன் மெசுல்லாம், தன் அறைவீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
31 அவனுக்குப் பின்னாகத் தட்டானின் குமாரன் மல்கியா மிப்காத் என்னும் வாசலுக்கு எதிரே நிதனீமியரும் மளிகைக்காரரும் குடியிருக்கிற ஸ்தலமுதல் கோடியின் மேல்வீடுமட்டாகவும் இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
32 கோடியின் மேல்வீட்டுக்கும் ஆட்டுவாசலுக்கும் நடுவே இருக்கிறதைத் தட்டாரும் மளிகைக்காரரும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.


1 Then Eli'ashib the high priest rose up with his brethren the priests and they built the Sheep Gate. They consecrated it and set its doors; they consecrated it as far as the Tower of the Hundred, as far as the Tower of Hanan'el.
2 And next to him the men of Jericho built. And next to them Zaccur the son of Imri built.
3 And the sons of Hassena'ah built the Fish Gate; they laid its beams and set its doors, its bolts, and its bars.
4 And next to them Mer'emoth the son of Uri'ah, son of Hakkoz repaired. And next to them Meshul'lam the son of Berechi'ah, son of Meshez'abel repaired. And next to them Zadok the son of Ba'ana repaired.
5 And next to them the Teko'ites repaired; but their nobles did not put their necks to the work of their Lord.
6 And Joi'ada the son of Pase'ah and Meshul'lam the son of Besodei'ah repaired the Old Gate; they laid its beams and set its doors, its bolts, and its bars.
7 And next to them repaired Melati'ah the Gib'eonite and Jadon the Mero'nothite, the men of Gibeon and of Mizpah, who were under the jurisdiction of the governor of the province Beyond the River.
8 Next to them Uz'ziel the son of Harhai'ah, goldsmiths, repaired. Next to him Hanani'ah, one of the perfumers, repaired; and they restored Jerusalem as far as the Broad Wall.
9 Next to them Rephai'ah the son of Hur, ruler of half the district of Jerusalem, repaired.
10 Next to them Jedai'ah the son of Haru'maph repaired opposite his house; and next to him Hattush the son of Hashabnei'ah repaired.
11 Malchi'jah the son of Harim and Hasshub the son of Pa'hath-mo'ab repaired another section and the Tower of the Ovens.
12 Next to him Shallum the son of Hallo'hesh, ruler of half the district of Jerusalem, repaired, he and his daughters.
13 Hanun and the inhabitants of Zano'ah repaired the Valley Gate; they rebuilt it and set its doors, its bolts, and its bars, and repaired a thousand cubits of the wall, as far as the Dung Gate.
14 Malchi'jah the son of Rechab, ruler of the district of Beth-hacche'rem, repaired the Dung Gate; he rebuilt it and set its doors, its bolts, and its bars.
15 And Shallum the son of Colho'zeh, ruler of the district of Mizpah, repaired the Fountain Gate; he rebuilt it and covered it and set its doors, its bolts, and its bars; and he built the wall of the Pool of Shelah of the king's garden, as far as the stairs that go down from the City of David.
16 After him Nehemi'ah the son of Azbuk, ruler of half the district of Beth-zur, repaired to a point opposite the sepulchres of David, to the artificial pool, and to the house of the mighty men.
17 After him the Levites repaired: Rehum the son of Bani; next to him Hashabi'ah, ruler of half the district of Kei'lah, repaired for his district.
18 After him their brethren repaired: Bav'vai the son of Hen'adad, ruler of half the district of Kei'lah;
19 next to him Ezer the son of Jeshua, ruler of Mizpah, repaired another section opposite the ascent to the armory at the Angle.
20 After him Baruch the son of Zab'bai repaired another section from the Angle to the door of the house of Eli'ashib the high priest.
21 After him Mer'emoth the son of Uri'ah, son of Hakkoz repaired another section from the door of the house of Eli'ashib to the end of the house of Eli'ashib.
22 After him the priests, the men of the Plain, repaired.
23 After them Benjamin and Hasshub repaired opposite their house. After them Azari'ah the son of Ma-asei'ah, son of Anani'ah repaired beside his own house.
24 After him Bin'nui the son of Hen'adad repaired another section, from the house of Azari'ah to the Angle
25 and to the corner. Palal the son of Uzai repaired opposite the Angle and the tower projecting from the upper house of the king at the court of the guard. After him Pedai'ah the son of Parosh
26 and the temple servants living on Ophel repaired to a point opposite the Water Gate on the east and the projecting tower.
27 After him the Teko'ites repaired another section opposite the great projecting tower as far as the wall of Ophel.
28 Above the Horse Gate the priests repaired, each one opposite his own house.
29 After them Zadok the son of Immer repaired opposite his own house. After him Shemai'ah the son of Shecani'ah, the keeper of the East Gate, repaired.
30 After him Hanani'ah the son of Shelemi'ah and Hanun the sixth son of Zalaph repaired another section. After him Meshul'lam the son of Berechi'ah repaired opposite his chamber.
31 After him Malchi'jah, one of the goldsmiths, repaired as far as the house of the temple servants and of the merchants, opposite the Muster Gate, and to the upper chamber of the corner.
32 And between the upper chamber of the corner and the Sheep Gate the goldsmiths and the merchants repaired.

1 நாங்கள் அலங்கத்தைக் கட்டுகிற செய்தியைச் சன்பல்லாத் கேட்டபோது, அவன் கோபித்து, எரிச்சலடைந்து, யூதரைச் சக்கந்தம்பண்ணி:
2 அந்த அற்பமான யூதர் செய்கிறது என்ன, அவர்களுக்கு இடங்கொடுக்கப்படுமோ, பலியிடுவார்களோ, ஒருநாளிலே முடித்துப்போடுவார்களோ, சுட்டெரித்துப் போடப்பட்டு மண்மேடுகளான கற்களுக்கு உயிர் கொடுப்பார்களோ, என்று தன் சகோதரருக்கும் சமாரியாவின் சேனைக்கும் முன்பாகச் சொன்னான்.
3 அப்பொழுது அம்மோனியனாகிய தொபியா அவன் பக்கத்தில் நின்று: அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல் மதில் இடிந்துபோகும் என்றான்.
4 எங்கள் தேவனே, நாங்கள் அவமதிக்கப்படுகிறதைக் கேட்டு, அவர்கள் நிந்திக்கிற நிந்தையை அவர்கள் தலையின்மேல் திருப்பி, அவர்களைச் சிறையிருப்பின் தேசத்திலே சூறைக்கு ஒப்புக்கொடும்.
5 அவர்கள் அக்கிரமத்தை மூடிப்போடாதேயும்; அவர்கள் பாவம் உமக்கு முன்பாகக் கொலைக்கப்படாதிருப்பதாக; கட்டுகிறவர்களுக்கு மனமடிவுண்டாகப் பேசினார்களே.
6 நாங்கள் அலங்கத்தைக் கட்டிவந்தோம்; அலங்கமெல்லாம் பாதிமட்டும் ஒன்றாய் இணைந்து உயர்ந்தது; ஜனங்கள் வேலைசெய்கிறதற்கு ஆவலாயிருந்தார்கள்.
7 எருசலேமின் அலங்கத்தைக் கட்டுகிற வேலை வளர்ந்தேறுகிறது என்றும் இடிக்கப்பட்ட இடங்கள் அடைபட்டுவருகிறது என்றும் சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியரும், அம்மோனியரும், அஸ்தோத்தியரும் கேட்டபோது, அவர்கள் மிகவும் எரிச்சலாகி,
8 எருசலேமின்மேல் யுத்தம்பண்ண எல்லாரும் ஏகமாய் வரவும் வேலையைத் தடுக்கவும் கட்டுப்பாடு பண்ணினார்கள்.
9 ஆனாலும் நாங்கள் எங்கள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி, அவர்கள் நிமித்தம் இரவும்பகலும் ஜாமங்காக்கிறவர்களை வைத்தோம்.
10 அப்பொழுது யூதா மனிதர்: சுமைகாரரின் பெலன் குறைந்துபோகிறது, மண்மேடு மிச்சமாயிருக்கிறது; நாங்கள் அலங்கத்தைக் கட்டக் கூடாது என்றார்கள்.
11 எங்கள் சத்துருக்களோவென்றால்: நாங்கள் அவர்கள் நடுவே வந்து, அவர்களைக் கொன்றுபோடுமட்டும், அவர்கள் அதை அறியாமலும் பாராமலும் இருக்கவேண்டும்; இவ்விதமாய் அந்த வேலையை ஓயப்பண்ணுவோம் என்றார்கள்.
12 அதை அவர்களண்டையிலே குடியிருக்கிற யூதரும், பல இடங்களிலுமிருந்து எங்களிடத்துக்கு வந்து, பத்துவிசை எங்களுக்குச் சொன்னார்கள்.
13 அப்பொழுது நான் அலங்கத்துக்குப் பின்னாக இருக்கிற பள்ளமான இடங்களிலும் மேடுகளிலும் பட்டயங்களையும், ஈட்டிகளையும் வில்லுகளையும் பிடித்திருக்கிற ஜனங்களைக் குடும்பங் குடும்பமாக நிறுத்தினேன்.
14 அதை நான் பார்த்து எழும்பி, பிரபுக்களையும் அதிகாரிகளையும் மற்ற ஜனங்களையும் நோக்கி: அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; நீங்கள் மகத்துவமும் பயங்கரமுமான ஆண்டவரை நினைத்து, உங்கள் சகோதரருக்காகவும், உங்கள் குமாரருக்காகவும், உங்கள் குமாரத்திகளுக்காகவும், உங்கள் மனைவிகளுக்காகவும், உங்கள் வீடுகளுக்காகவும் யுத்தம்பண்ணுங்கள் என்றேன்.
15 எங்களுக்குச் செய்தி தெரியவந்ததென்றும், தேவன் அவர்கள் ஆலோசனையை அபத்தமாக்கினாரென்றும், எங்கள் பகைஞர் கேட்டபோது, நாங்கள் எல்லோரும் அவரவர் தங்கள் வேலையைச் செய்ய அலங்கத்துக்குத் திரும்பினோம்.
16 அன்று முதற்கொண்டு என் வேலைக்காரரில் பாதிப்பேர் வேலைசெய்தார்கள், பாதிப்பேர் ஈட்டிகளையும் பரிசைகளையும் வில்லுகளையும் கவசங்களையும் பிடித்து நின்றார்கள்; அதிகாரிகள் யூதா வம்சத்தார் எல்லாருக்கும் பின்னாக நின்றார்கள்.
17 அலங்கத்திலே கட்டுகிறவர்களும், சுமைசுமக்கிறவர்களும், சுமையேற்றுகிறவர்களும், அவரவர் ஒரு கையினாலே வேலைசெய்து, மறுகையினாலே ஆயுதம் தரித்திருந்தார்கள்.
18 கட்டுகிறவர்கள் அவரவர் தங்கள் பட்டயத்தைத் தங்கள் இடுப்பிலே கட்டிக்கொண்டவர்களாய் வேலைசெய்தார்கள்; எக்காளம் ஊதுகிறவன் என்னண்டையிலே நின்றான்.
19 நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் மற்ற ஜனங்களையும் நோக்கி: வேலை பெரிதும் விஸ்தாரமுமாயிருக்கிறது; நாம் அலங்கத்தின்மேல் சிதறப்பட்டு ஒருவருக்கு ஒருவர் தூரமாயிருக்கிறோம்.
20 நீங்கள் எவ்விடத்திலே எக்காளச் சத்தத்தைக் கேட்கிறீர்களோ அவ்விடத்திலே வந்து, எங்களோடே கூடுங்கள்; நம்முடைய தேவன் நமக்காக யுத்தம்பண்ணுவார் என்றேன்.
21 இப்படியே நாங்கள் வேலைசெய்துகொண்டிருந்தோம்; அவர்களிலே பாதிப்பேர் கிழக்கு வெளுக்கும் நேரமுதல் நட்சத்திரங்கள் காணுமட்டும் ஈட்டிகளைப் பிடித்திருந்தார்கள்.
22 அக்காலத்திலே நான் ஜனங்களைப் பார்த்து: இராமாறு நமக்குக் காவலுக்கும் பகல்மாறு வேலைக்கும் உதவ, அவரவர் தங்கள் வேலைக்காரரோடுங்கூட எருசலேமுக்குள்ளே இராத்தங்கக்கடவர்கள் என்று சொல்லி,
23 நானாகிலும், என் சகோதரராகிலும், என் வேலைக்காரராகிலும், என்னைப் பின்பற்றி காவல்காக்கிற சேவகராகிலும் எங்கள் வஸ்திரங்களைக் களைந்துபோடாதிருந்தோம்; அவரவருக்கு ஆயுதமும் தண்ணீரும் இருந்தது.


1 Now when Sanbal'lat heard that we were building the wall, he was angry and greatly enraged, and he ridiculed the Jews.
2 And he said in the presence of his brethren and of the army of Sama'ria, "What are these feeble Jews doing? Will they restore things? Will they sacrifice? Will they finish up in a day? Will they revive the stones out of the heaps of rubbish, and burned ones at that?"
3 Tobi'ah the Ammonite was by him, and he said, "Yes, what they are building -- if a fox goes up on it he will break down their stone wall!
4 Hear, O our God, for we are despised; turn back their taunt upon their own heads, and give them up to be plundered in a land where they are captives.
5 Do not cover their guilt, and let not their sin be blotted out from thy sight; for they have provoked thee to anger before the builders.
6 So we built the wall; and all the wall was joined together to half its height. For the people had a mind to work.
7 But when Sanbal'lat and Tobi'ah and the Arabs and the Ammonites and the Ash'dodites heard that the repairing of the walls of Jerusalem was going forward and that the breaches were beginning to be closed, they were very angry;
8 and they all plotted together to come and fight against Jerusalem and to cause confusion in it.
9 And we prayed to our God, and set a guard as a protection against them day and night.
10 But Judah said, "The strength of the burden-bearers is failing, and there is much rubbish; we are not able to work on the wall."
11 And our enemies said, "They will not know or see till we come into the midst of them and kill them and stop the work."
12 When the Jews who lived by them came they said to us ten times, "From all the places where they live they will come up against us."
13 So in the lowest parts of the space behind the wall, in open places, I stationed the people according to their families, with their swords, their spears, and their bows.
14 And I looked, and arose, and said to the nobles and to the officials and to the rest of the people, "Do not be afraid of them. Remember the Lord, who is great and terrible, and fight for your brethren, your sons, your daughters, your wives, and your homes."
15 When our enemies heard that it was known to us and that God had frustrated their plan, we all returned to the wall, each to his work.
16 From that day on, half of my servants worked on construction, and half held the spears, shields, bows, and coats of mail; and the leaders stood behind all the house of Judah,
17 who were building on the wall. Those who carried burdens were laden in such a way that each with one hand labored on the work and with the other held his weapon.
18 And each of the builders had his sword girded at his side while he built. The man who sounded the trumpet was beside me.
19 And I said to the nobles and to the officials and to the rest of the people, "The work is great and widely spread, and we are separated on the wall, far from one another.
20 In the place where you hear the sound of the trumpet, rally to us there. Our God will fight for us."
21 So we labored at the work, and half of them held the spears from the break of dawn till the stars came out.
22 I also said to the people at that time, "Let every man and his servant pass the night within Jerusalem, that they may be a guard for us by night and may labor by day."
23 So neither I nor my brethren nor my servants nor the men of the guard who followed me, none of us took off our clothes; each kept his weapon in his hand.

1 ஜனங்களுக்குள் அநேகரும் அவர்களுடைய ஸ்திரீகளும் யூதராகிய தங்கள் சகோதரர்மேல் முறையிடுகிற பெரிய கூக்குரலுண்டாயிற்று.
2 அதென்னவென்றால், அவர்களில் சிலர் நாங்கள் எங்கள் குமாரரோடும் எங்கள் குமாரத்திகளோடும் அநேகரானபடியினால், சாப்பிட்டுப் பிழைக்கும்படிக்கு நாங்கள் தானியத்தைக் கடனாக வாங்கினோம் என்றார்கள்.
3 வேறு சிலர் எங்கள் நிலங்களையும் எங்கள் திராட்சத்தோட்டங்களையும் எங்கள் வீடுகளையும் நாங்கள் அடைமானமாக வைத்து, இந்தப் பஞ்சத்திலே தானியம் வாங்கினோம் என்றார்கள்.
4 இன்னும் சிலர் ராஜாவுக்குத் தீர்வைசெலுத்த, நாங்கள் எங்கள் நிலங்கள்மேலும் எங்கள் திராட்சத்தோட்டங்கள்மேலும், பணத்தைக் கடனாக வாங்கினோம் என்றும்;
5 எங்கள் உடலும் எங்கள் சகோதரர் உடலும் சரி; எங்கள் பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளும் சரி; ஆனாலும், இதோ நாங்கள் எங்கள் குமாரரையும் எங்கள் குமாரத்திகளையும் அடிமைத்தனத்திற்கு உட்படுத்தவேண்டியதாயிருக்கிறது; அப்படியே எங்கள் குமாரத்திகளில் சிலர் அடிமைப்பட்டுமிருக்கிறார்கள்; அவர்களை மீட்க எங்களுக்கு நிர்வாகமில்லை; எங்கள் நிலங்களும் எங்கள் திராட்சத்தோட்டங்களும் வேறே மனிதர் கைவசமாயிற்று என்றார்கள்.
6 அவர்கள் கூக்குரலையும், இந்தவார்த்தைகளையும் நான் கேட்டபோது, மிகவும் கோபங்கொண்டு,
7 என் மனதிலே ஆலோசனைபண்ணி, பிற்பாடு பிரபுக்களையும் அதிகாரிகளையும் கடிந்துகொண்டு: நீங்கள் அவரவர் தங்கள் சகோதரர்மேல் ஏன் வட்டி சுமத்துகிறீர்கள் என்று சொல்லி, அவர்களுக்கு விரோதமாக ஒரு பெரிய சபைகூடிவரச்செய்து,
8 அவர்களை நோக்கி: புறஜாதியாருக்கு விற்கப்பட்ட யூதராகிய எங்கள் சகோதரரை நாங்கள் எங்கள் சக்திக்குத்தக்கதாய் மீட்டிருக்கையில், நீங்கள் திரும்ப உங்கள் சகோதரரை விற்கலாமா? இவர்கள் நமக்கு விலைப்பட்டுப்போகலாமா என்றேன்; அப்பொழுது அவர்கள் மறு உத்தரவு சொல்ல இடமில்லாமல் மவுனமாயிருந்தார்கள்.
9 பின்னும் நான் அவர்களை நோக்கி: நீங்கள் செய்கிற காரியம் நல்லதல்ல; நம்முடைய பகைஞராகிய புறஜாதியார் நிந்திக்கிறதினிமித்தம் நீங்கள் நம்முடைய தேவனுக்குப் பயந்து நடக்கவேண்டாமா?
10 நானும் என் சகோதரரும் என் வேலைக்காரரும் இவ்விதமாகவா அவர்களுக்குப் பணமும் தானியமும் கடன்கொடுத்திருக்கிறோம்? இந்த வட்டியை விட்டுவிடுவோமாக.
11 நீங்கள் இன்றைக்கு அவர்கள் நிலங்களையும், அவர்கள் திராட்சத்தோட்டங்களையும், அவர்கள் ஒலிவத்தோப்புகளையும், அவர்கள் வீடுகளையும், நீங்கள் பணத்திலும் தானியத்திலும் திராட்சரசத்திலும் எண்ணெயிலும் நூற்றுக்கொன்று வீதமாக அவர்களிடத்தில் தண்டிவருகிற வட்டியையும், அவர்களுக்குத் திரும்பக்கொடுத்துவிடுங்கள் என்றேன்.
12 அதற்கு அவர்கள் நாங்கள் அதைத் திரும்பக் கொடுத்துவிட்டு, இனி அப்படி அவர்களிடத்தில் கேட்கமாட்டோம்; நீர் சொல்லுகிறபடியே செய்வோம் என்றார்கள்; அப்பொழுது நான் ஆசாரியர்களை அழைத்து, அவர்கள் இந்த வார்த்தையின்படி செய்ய அவர்களை ஆணையிடுவித்துக்கொண்டேன்.
13 நான் என் வஸ்திரத்தை உதறிப்போட்டு, இப்படி இந்த வார்த்தையை நிறைவேற்றாத எந்த மனிதனையும் அவன் வீட்டிலும் அவன் சம்பாத்தியத்திலும் இருந்து தேவன் உதறிப்போடக்கடவர்; இந்தப்பிரகாரமாக அவன் உதறிப்போடப்பட்டு, வெறுமையாய்ப் போவானாக என்றேன்; அதற்குச் சபையார் எல்லாரும் ஆமென் என்று சொல்லி கர்த்தரைத் துதித்தார்கள்; பின்பு ஜனங்கள் இந்த வார்த்தையின்படியே செய்தார்கள்.
14 நான் யூதாதேசத்திலே அதிபதியாயிருக்கும்படி ராஜாவாகிய அர்தசஷ்டா எனக்குக் கற்பித்த நாளாகிய அவருடைய இருபதாம் வருஷம் தொடங்கி, அவருடைய முப்பத்திரண்டாம் வருஷம் வரைக்கும் இருந்த பன்னிரண்டு வருஷகாலமாய், நானும் என் சகோதரரும் அதிபதிகள் வாங்குகிற படியை வாங்கிச் சாப்பிடவில்லை.
15 எனக்கு முன்னிருந்த அதிபதிகள் ஜனங்களுக்குப் பாரமாயிருந்து, அவர்கள் கையிலே அப்பமும் திராட்சரசமும் வாங்கினதும் அல்லாமல், நாற்பதுசேக்கல் வெள்ளியும் வாங்கிவந்தார்கள்; அவர்கள் வேலைக்காரர் முதலாய் ஜனங்கள்மேல் அதிகாரம் செலுத்தினார்கள்; நானோ தேவனுக்குப் பயந்ததினால் இப்படிச் செய்யவில்லை.
16 ஒரு வயலையாவது நாங்கள் கொள்ளவில்லை; அந்த அலங்கத்தின் வேலையிலே முயன்று நின்றேன்; என் வேலைக்காரரனைவரும் கூட்டமாய் அந்த வேலைக்குக் கூடிவந்தார்கள்.
17 யூதரும் மூப்பருமான நூற்றைம்பதுபேரும், எங்களைச் சுற்றிலுமிருக்கிற புறஜாதிகளிடத்திலிருந்து எங்களிடத்திற்கு வந்தவர்களும் என் பந்தியில் சாப்பிட்டார்கள்.
18 நாளொன்றுக்கு ஒரு காளையும், முதல் தரமான ஆறு ஆடும் சமைக்கப்பட்டது; பட்சிகளும் சமைக்கப்பட்டது; பத்துநாளைக்கு ஒருதரம் நானாவிதத் திராட்சரசமும் செலவழிந்தது. இப்படியெல்லாம் இருந்தபோதும், இந்த ஜனங்கள் பட்டபாடு கடினமாயிருந்தபடியால், அதிபதிகள் வாங்குகிற படியை நான் வாங்கவில்லை.
19 என் தேவனே, நான் இந்த ஜனத்துக்காகச் செய்த எல்லாவற்றின்படியும் எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்.


1 Now there arose a great outcry of the people and of their wives against their Jewish brethren.
2 For there were those who said, "With our sons and our daughters, we are many; let us get grain, that we may eat and keep alive."
3 There were also those who said, "We are mortgaging our fields, our vineyards, and our houses to get grain because of the famine."
4 And there were those who said, "We have borrowed money for the king's tax upon our fields and our vineyards.
5 Now our flesh is as the flesh of our brethren, our children are as their children; yet we are forcing our sons and our daughters to be slaves, and some of our daughters have already been enslaved; but it is not in our power to help it, for other men have our fields and our vineyards."
6 I was very angry when I heard their outcry and these words.
7 I took counsel with myself, and I brought charges against the nobles and the officials. I said to them, "You are exacting interest, each from his brother." And I held a great assembly against them,
8 and said to them, "We, as far as we are able, have bought back our Jewish brethren who have been sold to the nations; but you even sell your brethren that they may be sold to us!" They were silent, and could not find a word to say.
9 So I said, "The thing that you are doing is not good. Ought you not to walk in the fear of our God to prevent the taunts of the nations our enemies?
10 Moreover I and my brethren and my servants are lending them money and grain. Let us leave off this interest.
11 Return to them this very day their fields, their vineyards, their olive orchards, and their houses, and the hundredth of money, grain, wine, and oil which you have been exacting of them."
12 Then they said, "We will restore these and require nothing from them. We will do as you say." And I called the priests, and took an oath of them to do as they had promised.
13 I also shook out my lap and said, "So may God shake out every man from his house and from his labor who does not perform this promise. So may he be shaken out and emptied." And all the assembly said "Amen" and praised the LORD. And the people did as they had promised.
14 Moreover from the time that I was appointed to be their governor in the land of Judah, from the twentieth year to the thirty-second year of Ar-ta-xerx'es the king, twelve years, neither I nor my brethren ate the food allowance of the governor.
15 The former governors who were before me laid heavy burdens upon the people, and took from them food and wine, besides forty shekels of silver. Even their servants lorded it over the people. But I did not do so, because of the fear of God.
16 I also held to the work on this wall, and acquired no land; and all my servants were gathered there for the work.
17 Moreover there were at my table a hundred and fifty men, Jews and officials, besides those who came to us from the nations which were about us.
18 Now that which was prepared for one day was one ox and six choice sheep; fowls likewise were prepared for me, and every ten days skins of wine in abundance; yet with all this I did not demand the food allowance of the governor, because the servitude was heavy upon this people.
19 Remember for my good, O my God, all that I have done for this people.

1 நான் அலங்கத்தைக் கட்டிமுடித்ததையும், இனி அதிலே திறப்பு ஒன்றுமில்லை என்பதையும், சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியனான கேஷேமும் எங்களுக்குண்டாயிருந்த மற்றப் பகைஞரும் கேள்விப்பட்டபோது,
2 நான் வாசல்களுக்கு இன்னும் கதவுபோடாதிருக்கையில், சன்பல்லாத்தும், கேஷேமும் ஆள் அனுப்பி: நாம் ஓனோ பள்ளத்தாக்கில் இருக்கிற கிராமங்கள் ஒன்றில் ஒருவரையொருவர் கண்டு பேசுவோம் வாரும் என்று கூப்பிட்டார்கள்; அவர்களோவென்றால், எனக்குப் பொல்லாப்புச் செய்ய நினைத்தார்கள்.
3 அப்பொழுது நான் அவர்களிடத்திற்கு ஆட்களை அனுப்பி: நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரக் கூடாது, நான் அந்த வேலையைவிட்டு உங்களிடத்திற்கு வருகிறதினால் அது மினக்கட்டுப்போவானேன் என்று சொல்லச்சொன்னேன்.
4 அவர்கள் இந்தப்பிரகாரமாக நாலுதரம் எனக்குச் சொல்லியனுப்பினார்கள்; நானும் இந்தப்பிரகாரமாகவே அவர்களுக்கு மறுமொழி அனுப்பினேன்.
5 ஐந்தாந்தரமும் சன்பல்லாத்து அந்தப் பிரகாரமாகவே தன் வேலைக்காரனையும், அவன் கையிலே முத்திரைபோடாத ஒரு கடிதத்தையும் எனக்கு அனுப்பினான்.
6 அதிலே: நீரும் யூதரும் கலகம்பண்ண நினைக்கிறீர்கள் என்றும், அதற்காக நீர் அலங்கத்தைக் கட்டுகிறீர் என்றும், இவ்விதமாக நீர் அவர்களுக்கு ராஜாவாகப் போகிறீர் என்றும்,
7 யூதாவிலே ஒரு ராஜா இருக்கிறார் என்று உம்மைக்குறித்து எருசலேமிலே கூறுகிற தீர்க்கதரிசிகளையும் சம்பாதித்தீரென்றும் புறஜாதிகளுக்குள்ளே பிரஸ்தாபமாயிருக்கிறது, கஷ்மூமுவும் அப்படிச் சொல்லுகிறான்; இப்போதும் அந்தச் செய்தி ராஜாவுக்கு எட்டுமே; ஆகையால் நாம் ஒருவரோடொருவர் ஆலோசனைபண்ணுகிறதற்காக நீர் வரவேண்டும் என்று எழுதியிருந்தது.
8 அதற்கு நான் நீர் சொல்லுகிற அந்தக் காரியங்களில் ஒன்றும் நடக்கவில்லை; அவைகள் உம்முடைய மனோராஜ்யமே ஒழிய வேறல்ல என்று சொல்லியனுப்பினேன்.
9 அந்த வேலை நடந்தேறாதபடிக்கு எங்கள் கை சலித்துப்போம் என்று சொல்லி, அவர்கள் எல்லாரும் எங்களைப் பயமுறுத்தப்பார்த்தார்கள். ஆதலால் தேவனே நீர் என் கைகளைத் திடப்படுத்தியருளும்,
10 மெகதாபெயேலின் குமாரனாகிய தெலாயாவின் மகன் செமாயா தன் வீட்டிலே அடைக்கப்பட்டிருக்கும்போது, நான் அவனிடத்தில் போனேன்; அப்பொழுது அவன் நாம் இருவருமாய் தேவனுடைய வீடாகிய ஆலயத்துக்குள்ளே போய் தேவாலயத்தின் கதவுகளைப் பூட்டுவோம் வாரும்; உம்மைக் கொன்றுபோட வருவார்கள், இரவிலே உம்மைக் கொன்றுபோட வருவார்கள் என்றான்.
11 அதற்கு நான்; என்னைப்போன்ற மனிதன் ஓடிப்போவானோ? என்னைப்போன்றவன் உயிர்பிழைக்கும்படி தேவாலயத்திலே போய்ப் பதுங்குவானோ? நான் போவதில்லை என்றேன்.
12 தேவன் அவனை அனுப்பவில்லையென்றும், தொபியாவும் சன்பல்லாத்தும் அவனுக்குக் கூலிகொடுத்ததினால், அவன் எனக்கு விரோதமாய் அந்தத் தீர்க்கதரிசனத்தைச் சொன்னான் என்றும் அறிந்துகொண்டேன்.
13 நான் பயந்து அப்படிச் செய்து பாவங்கட்டிக்கொள்ளுகிறதற்கும், என்னை நிந்திக்கத்தக்க அபகீர்த்திக்கு முகாந்தரம் உண்டாக்குகிறதற்கும் அவனுக்குக் கைக்கூலி கொடுத்திருந்தார்கள்.
14 என் தேவனே, தொபியாவும் சன்பல்லாத்தும் செய்த இந்தச் செய்கைகளுக்குத்தக்கதாக நீர் அவர்களையும், நொவதியாள் என்னும் தீர்க்கதரிசியானவளையும், எனக்குப் பயமுண்டாக்கப்பார்த்த மற்றத் தீர்க்கதரிசிகளையும் நினைத்துக்கொள்ளும்.
15 அப்படியே அலங்கமானது ஐம்பத்திரண்டு நாளைக்குள்ளே கட்டப்பட்டு, எலுூல் மாதம் இருபத்தைந்தாந்தேதியிலே முடிந்தது.
16 எங்கள் பகைஞர் எல்லாரும் அதைக் கேட்டபோதும், எங்கள் சுற்றுப்புறத்தாராகிய புறஜாதியான அனைவரும் கண்டபோதும், மிகவும் முனையற்றுப்போய், இந்தக் கிரியை எங்கள் தேவனால் கைகூடி வந்ததென்று அறிந்தார்கள்.
17 அந்த நாட்களில் யூதாவிலுள்ள பெரிய மனிதரிடத்திலிருந்து தொபியாவுக்குப் போகிறதும், தொபியாவினிடத்திலிருந்து அவர்களுக்கு வருகிறதுமான கடிதங்கள் அநேகமாயிருந்தது.
18 அவன் ஆராகின் குமாரனாகிய செகனியாவுக்கு மருமகனாயிருந்ததுமல்லாமல், அவன் குமாரனாகிய யோகனான் பெரகியாவின் குமாரனாகிய மெசுல்லாமின் குமாரத்தியை விவாகம்பண்ணியிருந்தபடியாலும், யூதாவில் அநேகர் அவனுக்கு ஆணையிட்டுக் கொடுத்திருந்தார்கள்.
19 அவன் செய்யும் நன்மைகளையும் அவர்கள் எனக்கு முன்பாக விவரித்து, என் வார்த்தைகளை அவனுக்குக் கொண்டுபோவார்கள்; தொபியா எனக்குப் பயமுண்டாகக் கடிதங்களை அனுப்புவான்.


1 Now when it was reported to Sanbal'lat and Tobi'ah and to Geshem the Arab and to the rest of our enemies that I had built the wall and that there was no breach left in it (although up to that time I had not set up the doors in the gates),
2 Sanbal'lat and Geshem sent to me, saying, "Come and let us meet together in one of the villages in the plain of Ono." But they intended to do me harm.
3 And I sent messengers to them, saying, "I am doing a great work and I cannot come down. Why should the work stop while I leave it and come down to you?"
4 And they sent to me four times in this way and I answered them in the same manner.
5 In the same way Sanbal'lat for the fifth time sent his servant to me with an open letter in his hand.
6 In it was written, "It is reported among the nations, and Geshem also says it, that you and the Jews intend to rebel; that is why you are building the wall; and you wish to become their king, according to this report.
7 And you have also set up prophets to proclaim concerning you in Jerusalem, `There is a king in Judah.' And now it will be reported to the king according to these words. So now come, and let us take counsel together."
8 Then I sent to him, saying, "No such things as you say have been done, for you are inventing them out of your own mind."
9 For they all wanted to frighten us, thinking, "Their hands will drop from the work, and it will not be done." But now, O God, strengthen thou my hands.
10 Now when I went into the house of Shemai'ah the son of Delai'ah, son of Mehet'abel, who was shut up, he said, "Let us meet together in the house of God, within the temple, and let us close the doors of the temple; for they are coming to kill you, at night they are coming to kill you."
11 But I said, "Should such a man as I flee? And what man such as I could go into the temple and live? I will not go in."
12 And I understood, and saw that God had not sent him, but he had pronounced the prophecy against me because Tobi'ah and Sanbal'lat had hired him.
13 For this purpose he was hired, that I should be afraid and act in this way and sin, and so they could give me an evil name, in order to taunt me.
14 Remember Tobi'ah and Sanbal'lat, O my God, according to these things that they did, and also the prophetess No-adi'ah and the rest of the prophets who wanted to make me afraid.
15 So the wall was finished on the twenty-fifth day of the month Elul, in fifty-two days.
16 And when all our enemies heard of it, all the nations round about us were afraid and fell greatly in their own esteem; for they perceived that this work had been accomplished with the help of our God.
17 Moreover in those days the nobles of Judah sent many letters to Tobi'ah, and Tobi'ah's letters came to them.
18 For many in Judah were bound by oath to him, because he was the son-in-law of Shecani'ah the son of Arah: and his son Jehoha'nan had taken the daughter of Meshul'lam the son of Berechi'ah as his wife.
19 Also they spoke of his good deeds in my presence, and reported my words to him. And Tobi'ah sent letters to make me afraid.

1 அலங்கம் கட்டிமுடிந்து, கதவுகள் போடப்பட்டு, வாசல் காவலாளரையும் பாடகரையும், லேவியரையும் ஏற்படுத்தினபின்பு,
2 நான் என் சகோதரனாகிய ஆனானியையும், அநேகரைப்பார்க்கிலும் உண்மையுள்ளவனும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்த அரமனைத்தலைவனாகிய அனனியாவையும், எருசலேமின் காவல்விசாரணைக்கு ஏற்படுத்தினேன்.
3 அவர்களை நோக்கி: வெயில் ஏறுமட்டும் எருசலேமின் வாசல்கள் திறக்கப்படவேண்டாம், நீங்கள் நிற்கும்போதே கதவுகளைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டு, எருசலேமின் குடிகளில் காவலாளர் அவரவர் தங்கள் காவலிலே, அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிராக நிறுத்தப்படவேண்டும் என்றேன்.
4 பட்டணம் விஸ்தாரமும் பெரிதுமாயிருந்தது, அதற்குள்ளே ஜனங்கள் கொஞ்சமாயிருந்தார்கள், வீடுகளும் கட்டப்படவில்லை.
5 அப்பொழுது வம்ச அட்டவணைகளைப் பார்க்கிறதற்கு, நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் ஜனங்களையும் கூடிவரச்செய்ய, என் தேவன் என் மனதிலே ஒரு எண்ணத்தை உண்டாக்கினார்; முந்தி வந்தவர்களின் வம்ச அட்டவணைப் புஸ்தகம் அப்பொழுது எனக்கு அகப்பட்டது; அதிலே எழுதியிருக்க நான் கண்டது என்னவென்றால்,
6 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போனவர்களும், சிறையிருப்பிலிருந்து செருபாபேலோடும், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாயி, நெகூம், பானா என்பவர்களோடுங்கூட வந்து,
7 எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பித் தங்கள் தங்கள் பட்டணங்களிலே குடியிறங்கினவர்களுமான இந்தத் தேசத்தின் புத்திரராகிய இஸ்ரவேல் ஜனங்களான மனிதரின் தொகையாவது:
8 பாரோஷின் புத்திரர் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர்.
9 செபத்தியாவின் புத்திரர் முந்நூற்று எழுபத்திரண்டுபேர்.
10 ஆராகின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர்.
11 யெசுவா யோவாப் என்பவர்களின் சந்ததிக்குள்ளிருந்த பாகாத்மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பதினெட்டுப்பேர்.
12 ஏலாமின் புத்திரர் ஆயிரத்திருநூற்று ஐம்பத்துநாலுபேர்.
13 சத்தூவின் புத்திரர் எண்ணூற்று நாற்பத்தைந்துபேர்.
14 சக்காயின் புத்திரர் எழுநூற்று அறுபதுபேர்.
15 பின்னூவின் புத்திரர் அறுநூற்று நாற்பத்தெட்டுப்பேர்.
16 பெபாயின் புத்திரர் அறுநூற்று இருபத்தெட்டுப்பேர்.
17 அஸ்காதின் புத்திரர் இரண்டாயிரத்து முந்நூற்று இருபத்திரண்டுபேர்.
18 அதோனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தேழுபேர்.
19 பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து அறுபத்தேழுபேர்.
20 ஆதீனின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்தைந்துபேர்.
21 எசேக்கியாவின் சந்ததியான ஆதேரின் புத்திரர் தொண்ணூற்று எட்டுப்பேர்.
22 ஆசூமின் புத்திரர் முந்நூற்று இருபத்தெட்டுப்பேர்.
23 பேசாயின் புத்திரர் முந்நூற்று இருபத்துநாலுபேர்.
24 ஆரீப்பின் புத்திரர் நூற்றுப்பன்னிரண்டுபேர்.
25 கிபியோனின் புத்திரர் தொண்ணூற்று ஐந்துபேர்.
26 பெத்லகேம் ஊராரும், நெத்தோபா ஊராரும் நூற்று எண்பத்தெட்டுப்பேர்.
27 ஆனதோத்தூர் மனிதர் நூற்று இருபத்தெட்டுப்பேர்.
28 பெத்அஸ்மாவேத் ஊரார் நாற்பத்திரண்டுபேர்.
29 கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் ஊர்களின் மனிதர் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர்.
30 ராமா, காபா ஊர்களின் மனிதர் அறுநூற்று இருபத்தொருபேர்.
31 மிக்மாஸ் ஊரார் நூற்று இருபத்திரண்டுபேர்.
32 பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர் நூற்று இருபத்துமூன்றுபேர்.
33 வேறொரு நேபோ ஊரார் ஐம்பத்திரண்டுபேர்.
34 மற்றொரு ஏலாம் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்துநாலுபேர்.
35 ஆரீம் புத்திரர் முந்நூற்று இருபதுபேர்.
36 எரிகோ புத்திரர் முந்நூற்று நாற்பத்தைந்துபேர்.
37 லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் புத்திரர் எழுநூற்று இருபத்தொருபேர்.
38 செனாகா புத்திரர் மூவாயிரத்துத் தொளாயிரத்து முப்பதுபேர்.
39 ஆசாரியரானவர்கள்: யெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின் புத்திரர் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர்.
40 இம்மேரின் புத்திரர் ஆயிரத்து ஐம்பத்திரண்டுபேர்.
41 பஸ்கூரின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழுபேர்.
42 ஆரீமின் புத்திரர் ஆயிரத்துப் பதினேழுபேர்.
43 லேவியரானவர்கள்: ஒதியாவின் புத்திரருக்குள்ளே கத்மியேலின் குமாரனாகிய யெசுவாவின் புத்திரர் எழுபத்துநாலுபேர்.
44 பாடகரானவர்கள்: ஆசாபின் புத்திரர் நூற்று நாற்பத்தெட்டுப்பேர்.
45 வாசல் காவலாளரானவர்கள்; சல்லூமின் புத்திரர் அதேரின் புத்திரர், தல்மோனின் புத்திரர், அக்கூபின் புத்திரர், அதிதாவின் புத்திரர், சோபாயின் புத்திரர், ஆக நூற்று முப்பத்தெட்டுப்பேர்.
46 நிதனீமியரானவர்கள்: சீகாவின்புத்திரர், அசுபாவின் புத்திரர், தபாகோத்தின் புத்திரர்,
47 கேரோசின் புத்திரர், சீயாவின் புத்திரர், பாதோனின் புத்திரர்,
48 லெபானாவின் புத்திரர், அகாபாவின் புத்திரர், சல்மாயின் புத்திரர்,
49 ஆனானின் புத்திரர், கித்தேலின் புத்திரர், காகாரின் புத்திரர்,
50 ராயாகின் புத்திரர், ரேத்சீனின் புத்திரர், நெகோதாவின் புத்திரர்,
51 காசாமின் புத்திரர், ஊசாவின் புத்திரர், பாசெயாகின் புத்திரர்,
52 பேசாயின் புத்திரர், மெயுநீமின் புத்திரர், நெபிஷசீமின் புத்திரர்,
53 பக்பூக்கின் புத்திரர், அகுபாவின் புத்திரர், அர்கூரின் புத்திரர்,
54 பஸ்லீதின் புத்திரர், மெகிதாவின் புத்திரர், அர்ஷாவின் புத்திரர்,
55 பர்கோசின் புத்திரர், சிசெராவின் புத்திரர், தாமாவின் புத்திரர்,
56 நெத்சியாகின் புத்திரர், அதிபாவின் புத்திரர்,
57 சாலொமோனுடைய வேலைக்காரரின் புத்திரரானவர்கள்: சோதாயின் புத்திரர், சொபெரேத்தின் புத்திரர், பெரிதாவின் புத்திரர்,
58 யாலாவின் புத்திரர், தர்கோனின் புத்திரர், கித்தேலின் புத்திரர்,
59 செபத்தியாவின் புத்திரர், அத்தீலின் புத்திரர், பொகெரேத் செபாயிமிலுள்ள புத்திரர், ஆமோனின் புத்திரர்.
60 நிதனிமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் ஏகத்துக்கு முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.
61 தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலும் இருந்துவந்தும், தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வோத்தரத்தையும் சொல்லமாட்டாமல் இருந்தவர்கள்:
62 தெலாயாவின் புத்திரர், தொபியாவின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், ஆக அறுநூற்று நாற்பத்திரண்டுபேர்.
63 ஆசாரியர்களில் அபாயாவின் புத்திரர், கோசின் புத்திரர், கிலேயாத்தியனான பர்சில்லாயின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணி, அவர்கள் வம்ச நாமம் தரிக்கப்பட்ட பர்சில்லாயின் புத்திரர்.
64 இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய் ஆசாரிய ஊழியத்துக்கு விலக்கமானவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.
65 ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்புமட்டும், அவர்கள் மகா பரிசுத்தமானதிலே புசிக்கத்தகாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.
66 சபையார் எல்லாரும் ஏகத்துக்கு நாற்பத்தீராயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.
67 அவர்களைத்தவிர ஏழாயிரத்துமுந்நூற்று முப்பத்தேழுபேரான அவர்களுடைய வேலைக்காரரும், வேலைக்காரிகளும் இருநூற்று நாற்பத்தைந்து பாடகரும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.
68 அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு, அவர்கள் கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து.
69 ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து, கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது.
70 வம்சத்தலைவரில் சிலர் வேலைக்கென்று கொடுத்ததாவது: திர்ஷாதா ஆயிரம் தங்கக்காசையும், ஐம்பது கலங்களையும், ஐந்நூற்று முப்பது ஆசாரிய வஸ்திரங்களையும் பொக்கிஷத்துக்குக் கொடுத்தான்.
71 வம்சத்தலைவரில் சிலர் வேலையின் பொக்கிஷத்துக்கு இருபதினாயிரம் தங்கக்காசையும், இரண்டாயிரத்து இருநூறு ராத்தல் வெள்ளியையும் கொடுத்தார்கள்.
72 மற்ற ஜனங்கள் இருபதினாயிரம் தங்கக்காசையும், இரண்டாயிரம் ராத்தல் வெள்ளியையும், அறுபத்தேழு ஆசாரிய வஸ்திரங்களையும் கொடுத்தார்கள்.
73 ஆசாரியரும், லேவியரும், வாசல் காவலாளரும், பாடகரும், ஜனங்களில் சிலரும், நிதனீமியரும், இஸ்ரவேலர் அனைவரும் தங்கள் தங்கள் பட்டணங்களில் குடியேறினார்கள்; ஏழாம் மாதமானபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் பட்டணங்களில் இருந்தார்கள்.


1 Now when the wall had been built and I had set up the doors, and the gatekeepers, the singers, and the Levites had been appointed,
2 I gave my brother Hana'ni and Hanani'ah the governor of the castle charge over Jerusalem, for he was a more faithful and God-fearing man than many.
3 And I said to them, "Let not the gates of Jerusalem be opened until the sun is hot; and while they are still standing guard let them shut and bar the doors. Appoint guards from among the inhabitants of Jerusalem, each to his station and each opposite his own house."
4 The city was wide and large, but the people within it were few and no houses had been built.
5 Then God put it into my mind to assemble the nobles and the officials and the people to be enrolled by genealogy. And I found the book of the genealogy of those who came up at the first, and I found written in it:
6 These were the people of the province who came up out of the captivity of those exiles whom Nebuchadnez'zar the king of Babylon had carried into exile; they returned to Jerusalem and Judah, each to his town.
7 They came with Zerub'babel, Jeshua, Nehemi'ah, Azari'ah, Raami'ah, Naham'ani, Mor'decai, Bilshan, Mis'pereth, Bigva'i, Nehum, Ba'anah. The number of the men of the people of Israel:
8 the sons of Parosh, two thousand a hundred and seventy-two.
9 The sons of Shephati'ah, three hundred and seventy-two.
10 The sons of Arah, six hundred and fifty-two.
11 The sons of Pa'hath-mo'ab, namely the sons of Jeshua and Jo'ab, two thousand eight hundred and eighteen.
12 The sons of Elam, a thousand two hundred and fifty-four.
13 The sons of Zattu, eight hundred and forty-five.
14 The sons of Zac'cai, seven hundred and sixty.
15 The sons of Bin'nui, six hundred and forty-eight.
16 The sons of Be'bai, six hundred and twenty-eight.
17 The sons of Azgad, two thousand three hundred and twenty-two.
18 The sons of Adoni'kam, six hundred and sixty-seven.
19 The sons of Bigva'i, two thousand and sixty-seven.
20 The sons of Adin, six hundred and fifty-five.
21 The sons of Ater, namely of Hezeki'ah, ninety-eight.
22 The sons of Hashum, three hundred and twenty-eight.
23 The sons of Be'zai, three hundred and twenty-four.
24 The sons of Hariph, a hundred and twelve.
25 The sons of Gibeon, ninety-five.
26 The men of Bethlehem and Neto'phah, a hundred and eighty-eight.
27 The men of An'athoth, a hundred and twenty-eight.
28 The men of Beth-az'maveth, forty-two.
29 The men of Kir'iath-je'arim, Chephi'rah, and Be-er'oth, seven hundred and forty-three.
30 The men of Ramah and Geba, six hundred and twenty-one.
31 The men of Michmas, a hundred and twenty-two.
32 The men of Bethel and Ai, a hundred and twenty-three.
33 The men of the other Nebo, fifty-two.
34 The sons of the other Elam, a thousand two hundred and fifty-four.
35 The sons of Harim, three hundred and twenty.
36 The sons of Jericho, three hundred and forty-five.
37 The sons of Lod, Hadid, and Ono, seven hundred and twenty-one.
38 The sons of Sena'ah, three thousand nine hundred and thirty.
39 The priests: the sons of Jedai'ah, namely the house of Jeshua, nine hundred and seventy-three.
40 The sons of Immer, a thousand and fifty-two.
41 The sons of Pashhur, a thousand two hundred and forty-seven.
42 The sons of Harim, a thousand and seventeen.
43 The Levites: the sons of Jeshua, namely of Kad'mi-el of the sons of Ho'devah, seventy-four.
44 The singers: the sons of Asaph, a hundred and forty-eight.
45 The gatekeepers: the sons of Shallum, the sons of Ater, the sons of Talmon, the sons of Akkub, the sons of Hati'ta, the sons of Sho'bai, a hundred and thirty-eight.
46 The temple servants: the sons of Ziha, the sons of Hasu'pha, the sons of Tabba'oth,
47 the sons of Keros, the sons of Si'a, the sons of Padon,
48 the sons of Leba'na, the sons of Hag'aba, the sons of Shalmai,
49 the sons of Hanan, the sons of Giddel, the sons of Gahar,
50 the sons of Re-ai'ah, the sons of Rezin, the sons of Neko'da,
51 the sons of Gazzam, the sons of Uzza, the sons of Pase'ah,
52 the sons of Besai, the sons of Me-u'nim, the sons of Nephush'esim,
53 the sons of Bakbuk, the sons of Haku'pha, the sons of Harhur,
54 the sons of Bazlith, the sons of Mehi'da, the sons of Harsha,
55 the sons of Barkos, the sons of Sis'era, the sons of Temah,
56 the sons of Nezi'ah, the sons of Hati'pha.
57 The sons of Solomon's servants: the sons of So'tai, the sons of So'phereth, the sons of Peri'da,
58 the sons of Ja'ala, the sons of Darkon, the sons of Giddel,
59 the sons of Shephati'ah, the sons of Hattil, the sons of Po'chereth-hazzeba'im, the sons of Amon.
60 All the temple servants and the sons of Solomon's servants were three hundred and ninety-two.
61 The following were those who came up from Tel-me'lah, Tel-har'sha, Cherub, Addon, and Immer, but they could not prove their fathers' houses nor their descent, whether they belonged to Israel:
62 the sons of Delai'ah, the sons of Tobi'ah, the sons of Neko'da, six hundred and forty-two.
63 Also, of the priests: the sons of Hobai'ah, the sons of Hakkoz, the sons of Barzil'lai (who had taken a wife of the daughters of Barzil'lai the Gileadite and was called by their name).
64 These sought their registration among those enrolled in the genealogies, but it was not found there, so they were excluded from the priesthood as unclean;
65 the governor told them that they were not to partake of the most holy food, until a priest with Urim and Thummim should arise.
66 The whole assembly together was forty-two thousand three hundred and sixty,
67 besides their menservants and maidservants, of whom there were seven thousand three hundred and thirty-seven; and they had two hundred and forty-five singers, male and female.
68 Their horses were seven hundred and thirty-six, their mules two hundred and forty-five,
69 their camels four hundred and thirty-five, and their asses six thousand seven hundred and twenty.
70 Now some of the heads of fathers' houses gave to the work. The governor gave to the treasury a thousand darics of gold, fifty basins, five hundred and thirty priests' garments.
71 And some of the heads of fathers' houses gave into the treasury of the work twenty thousand darics of gold and two thousand two hundred minas of silver.
72 And what the rest of the people gave was twenty thousand darics of gold, two thousand minas of silver, and sixty-seven priests' garments.
73 So the priests, the Levites, the gatekeepers, the singers, some of the people, the temple servants, and all Israel, lived in their towns. And when the seventh month had come, the children of Israel were in their towns.

1 ஜனங்கள் எல்லாரும் தண்ணீர்வாசலுக்கு முன்னான வீதியிலே ஒருமனப்பட்டுக் கூடி, கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கொண்டுவரவேண்டுமென்று வேதபாரகனாகிய எஸ்றாவுக்குச் சொன்னார்கள்.
2 அப்படியே ஏழாம் மாதம் முதல்தேதியில் ஆசாரியனாகிய எஸ்றா நியாயப்பிரமாணத்தைப் புருஷரும் ஸ்திரீகளும், கேட்டு அறியத்தக்க அனைவருமாகிய சபைக்கு முன்பாகக் கொண்டுவந்து,
3 தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதிக்கு எதிரேயிருந்து காலமேதொடங்கி மத்தியானமட்டும் புருஷருக்கும் ஸ்திரீகளுக்கும், கேட்டு அறியத்தக்க மற்றவர்களுக்கும் முன்பாக அதை வாசித்தான்; சகல ஜனங்களும் நியாயப்பிரமாண புஸ்தகத்திற்குக் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள்.
4 வேதபாரகனாகிய எஸ்றா அதற்கென்று மரத்தால் செய்யப்பட்ட ஒரு பிரசங்கபீடத்தின்மேல் நின்றான்; அவனண்டையில் அவனுக்கு வலதுபக்கமாக மத்தித்தியாவும், செமாவும், அனாயாவும், உரியாவும், இல்க்கியாவும் மாசெயாவும், அவனுக்கு இடதுபக்கமாகப் பெதாயாவும், மீசவேலும், மல்கியாவும், அசூமும், அஸ்பதானாவும், சகரியாவும், மெசுல்லாமும் நின்றார்கள்.
5 எஸ்றா சகல ஜனங்களுக்கும் உயரநின்று, சகல ஜனங்களும் காணப் புஸ்தகத்தைத் திறந்தான்; அவன் அதைத்திறந்தபோது, ஜனங்கள் எல்லாரும் எழுந்துநின்றார்கள்.
6 அப்பொழுது எஸ்றா மகத்துவமுள்ள தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரித்தான்; ஜனங்களெல்லாரும் தங்கள் கைகளைக் குவித்து, அதற்கு மறுமொழியாக, ஆமென் ஆமென் என்று சொல்லி, குனிந்து, முகங்குப்புறவிழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள்.
7 யெசுவா, பானி, செரெபியா, யாமின், அக்கூப், சபெதாயி, ஒதியா, மாசெயா கேலிதா, அசரியா, யோசபாத், ஆனான், பெலாயா என்பவர்களும், லேவியரும், நியாயப்பிரமாணத்தை ஜனங்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்; ஜனங்கள் தங்கள் நிலையிலே நின்றார்கள்.
8 அவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை தீர்க்கமாக வாசித்து, அர்த்தஞ்சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்.
9 ஜனங்கள் எல்லாரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, அழுதபடியால் திர்ஷாதா என்னப்பட்ட நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும், ஜனங்களுக்கு விளக்கிக்காட்டின லேவியரும் சகல ஜனங்களையும் நோக்கி: இந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான நாள்; நீங்கள் துக்கப்படவும் அழவும் வேண்டாம் என்றார்கள்.
10 பின்னும் அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய்க் கொழுமையானதைப் புசித்து, மதுரமானதைக் குடித்து, ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள்; இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான்.
11 லேவியரும் ஜனங்களையெல்லாம் அமர்த்தி: அழாதிருங்கள், இந்த நாள் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம் என்றார்கள்.
12 அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட வார்த்தைகளை உணர்ந்துகொண்டபடியால், புசித்துக் குடிக்கவும், பங்குகளை அனுப்பவும், மிகுந்த சந்தோஷம் கொண்டாடவும் போனார்கள்.
13 மறுநாளில் ஜனத்தின் சகல வம்சத்தலைவரும், ஆசாரியரும், லேவியரும், நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை அறிந்துகொள்ளவேண்டும் என்று வேதபாரகனாகிய எஸ்றாவினிடத்தில் கூடி வந்தார்கள்.
14 அப்பொழுது நியாயப்பிரமாணத்திலே, இஸ்ரவேல் புத்திரர் ஏழாம் மாதத்தின் பண்டிகையிலே கூடாரங்களில் குடியிருக்கவேண்டும் என்று கர்த்தர் மோசேயைக்கொண்டு கற்பித்த காரியம் எழுதியிருக்கிறதைக் கண்டார்கள்.
15 ஆகையால் எழுதியிருக்கிறபடி கூடாரங்களைப் போடும்படிக்கு நீங்கள் மலைகளுக்குப் புறப்பட்டுப்போய் ஒலிவக்கிளைகளையும், காட்டு ஒலிவக்கிளைகளையும், மிருதுச் செடிகளின் கிளைகளையும் பேரீச்ச மட்டைகளையும், அடர்ந்தமரக்கிளைகளையும் கொண்டுவாருங்களென்று தங்களுடைய சகல பட்டணங்களிலும், எருசலேமிலும் கூறிப் பிரசித்தப்படுத்தினார்கள்.
16 அப்படியே ஜனங்கள் வெளியேபோய் அவைகளைக் கொண்டுவந்து, அவரவர் தங்கள் வீடுகள்மேலும், தங்கள் முற்றங்களிலும், தேவனுடைய ஆலயப்பிராகாரங்களிலும், தண்ணீர்வாசல் வீதியிலும், எப்பிராயீம் வாசல் வீதியிலும் தங்களுக்குக் கூடாரங்களை போட்டார்கள்.
17 இந்தப்பிரகாரமாகச் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்களின் சபையார் எல்லாரும் கூடாரங்களைப்போட்டு, கூடாரங்களில் குடியிருந்தார்கள்; இப்படியே நூனின் குமாரனாகிய யோசுவாவின் நாட்கள்முதல் அந்நாள்மட்டும் இஸ்ரவேல் புத்திரர் செய்யாதிருந்து இப்பொழுது செய்தபடியால், மிகுந்த சந்தோஷமுண்டாயிருந்தது.
18 முதலாம் நாள் தொடங்கிக் கடைசிநாள்மட்டும், தினம்தினம் தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகம் வாசிக்கப்பட்டது; ஏழுநாள் பண்டிகையை ஆசரித்தார்கள்; எட்டாம்நாளோவெனில், முறைமையின்படியே விசேஷித்த ஆசரிப்பு நாளாயிருந்தது.


1 And all the people gathered as one man into the square before the Water Gate; and they told Ezra the scribe to bring the book of the law of Moses which the LORD had given to Israel.
2 And Ezra the priest brought the law before the assembly, both men and women and all who could hear with understanding, on the first day of the seventh month.
3 And he read from it facing the square before the Water Gate from early morning until midday, in the presence of the men and the women and those who could understand; and the ears of all the people were attentive to the book of the law.
4 And Ezra the scribe stood on a wooden pulpit which they had made for the purpose; and beside him stood Mattithi'ah, Shema, Anai'ah, Uri'ah, Hilki'ah, and Ma-asei'ah on his right hand; and Pedai'ah, Mish'a-el, Malchi'jah, Hashum, Hash-bad'danah, Zechari'ah, and Meshul'lam on his left hand.
5 And Ezra opened the book in the sight of all the people, for he was above all the people; and when he opened it all the people stood.
6 And Ezra blessed the LORD, the great God; and all the people answered, "Amen, Amen," lifting up their hands; and they bowed their heads and worshiped the LORD with their faces to the ground.
7 Also Jesh'ua, Bani, Sherebi'ah, Jamin, Akkub, Shab'bethai, Hodi'ah, Ma-asei'ah, Keli'ta, Azari'ah, Jo'zabad, Hanan, Pelai'ah, the Levites, helped the people to understand the law, while the people remained in their places.
8 And they read from the book, from the law of God, clearly; and they gave the sense, so that the people understood the reading.
9 And Nehemi'ah, who was the governor, and Ezra the priest and scribe, and the Levites who taught the people said to all the people, "This day is holy to the LORD your God; do not mourn or weep." For all the people wept when they heard the words of the law.
10 Then he said to them, "Go your way, eat the fat and drink sweet wine and send portions to him for whom nothing is prepared; for this day is holy to our Lord; and do not be grieved, for the joy of the LORD is your strength."
11 So the Levites stilled all the people, saying, "Be quiet, for this day is holy; do not be grieved."
12 And all the people went their way to eat and drink and to send portions and to make great rejoicing, because they had understood the words that were declared to them.
13 On the second day the heads of fathers' houses of all the people, with the priests and the Levites, came together to Ezra the scribe in order to study the words of the law.
14 And they found it written in the law that the LORD had commanded by Moses that the people of Israel should dwell in booths during the feast of the seventh month,
15 and that they should publish and proclaim in all their towns and in Jerusalem, "Go out to the hills and bring branches of olive, wild olive, myrtle, palm, and other leafy trees to make booths, as it is written."
16 So the people went out and brought them and made booths for themselves, each on his roof, and in their courts and in the courts of the house of God, and in the square at the Water Gate and in the square at the Gate of E'phraim.
17 And all the assembly of those who had returned from the captivity made booths and dwelt in the booths; for from the days of Jeshua the son of Nun to that day the people of Israel had not done so. And there was very great rejoicing.
18 And day by day, from the first day to the last day, he read from the book of the law of God. They kept the feast seven days; and on the eighth day there was a solemn assembly, according to the ordinance.

1 அந்த மாதம் இருபத்துநாலாந்தேதியிலே இஸ்ரவேல் புத்திரர் உபவாசம்பண்ணி, இரட்டுடுத்தி, தங்கள்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டவர்களாய்க் கூடிவந்தார்கள்.
2 இஸ்ரவேல் சந்ததியார் மறு ஜாதியாரையெல்லொம் விட்டுப்பிரிந்து வந்து நின்று தங்கள் பாவங்களையும் தங்கள் பிதாக்களின் அக்கிரமங்களையும் அறிக்கையிட்டார்கள்.
3 அவர்கள் எழுந்திருந்து, தங்கள் நிலையில் நின்றார்கள்; அப்பொழுது ஒரு ஜாமமட்டும் அவர்களுடைய தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணப் புஸ்தகம் வாசிக்கப்பட்டது; பின்பு ஒரு ஜாமமட்டும் அவர்கள் பாவ அறிக்கை பண்ணி, தங்கள் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள்.
4 யெசுவா, பானி கத்மியேல் செப்பனியா, புன்னி, செரெபியா பானி, கெனானி என்பவர்கள் லேவியருடையபடிகளின்மேல் நின்று தங்கள் தேவனாகிய கர்த்தரை நோக்கி மகா சத்தமாய் ஓலமிட்டார்கள்.
5 பின்பு லேவியரான யெசுவா, கத்மியேல், பானி, ஆசாப்நெயா, செரெபியா, ஒதியா, செபனியா, பெத்தகியா என்பவர்கள் ஜனங்களைப் பார்த்து: நீங்கள் எழுந்திருந்து, அநாதியாய் என்றென்றைக்குமிருக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் என்று சொல்லி, கர்த்தரை நோக்கி: எந்த ஸ்துதி ஸ்தோத்திரத்துக்கும் மேலான உம்முடைய மகிமையுள்ள நாமத்துக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.
6 நீர் ஒருவரே கர்த்தர்; நீர் வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகளுடைய சர்வ சேனைகளையும் பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், சமுத்திரங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்; அவைகளையெல்லாம் நீர் காப்பாற்றுகிறீர்; வானசேனைகள் உம்மைப் பணிந்துகொள்ளுகிறது.
7 ஆபிராமைத் தெரிந்துகொண்டு, அவனை ஊர் என்னும் கல்தேயரின் பட்டணத்திலிருந்து புறப்படப்பண்ணி, அவனுக்கு ஆபிரகாம் என்னும் பேரிட்ட தேவனாகிய கர்த்தர் நீர்.
8 அவன் இருதயத்தை உமக்கு முன்பாக உண்மையுள்ளதாகக்கண்டு, கானானியர் ஏத்தியர், எமோரியர், பெரிசியர், எபூசியர், கிர்காசியருடைய தேசத்தை அவன் சந்ததிக்குக் கொடுக்கும்படி, அவனோடு உடன்படிக்கைபண்ணி, உம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றினீர்; நீர் நீதியுள்ளவர்.
9 எகிப்திலே எங்கள் பிதாக்கள் அநுபவித்த சிறுமையை நீர் கண்டு, சிவந்த சமுத்திரத்தில் அவர்கள் கூப்பிடுதலைக்கேட்டீர்.
10 பார்வோனிடத்திலும், அவனுடைய எல்லா ஊழியக்காரரிடத்திலும், அவன் தேசத்தின் சகல ஜனத்தினிடத்திலும், அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்தீர்; அவர்கள் உமது ஜனங்களை அகந்தையாய் நடத்தினார்கள் என்பதை அறிந்திருந்தீர்; இப்படியே இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி உமக்குக் கீர்த்தியை உண்டாக்கினீர்.
11 நீர் அவர்களுக்கு முன்பாகச் சமுத்திரத்தைப் பிரித்ததினால், கடலின் நடுவாகக் கால்நனையாமல் நடந்தார்கள்; வலுவான தண்ணீர்களிலே கல்லைப்போடுகிறதுபோல, அவர்களைத் தொடர்ந்தவர்களை ஆழங்களிலே போட்டுவிட்டீர்.
12 நீர் பகலிலே மேகஸ்தம்பத்தினாலும் அவர்கள் நடக்கவேண்டிய வழியை அவர்களுக்கு வெளிச்சமாக்க இரவிலே அக்கினி ஸ்தம்பத்தினாலும், அவர்களை வழிநடத்தினீர்.
13 நீர் சீனாய் மலையிலிறங்கி வானத்திலிருந்து அவர்களோடே பேசி, அவர்களுக்குச் செம்மையான நீதிநியாயங்களையும், நல்ல கட்டளைகளும் கற்பனைகளுமாகிய உண்மையான பிரமாணங்களையும் கொடுத்தீர்.
14 உமது பரிசுத்த ஓய்வுநாளை அவர்களுக்குத் தெரியப்படுத்தி, உமது தாசனாகிய மோசேயைக்கொண்டு, அவர்களுக்குக் கற்பனைகளையும், கட்டளைகளையும் நியாயப்பிரமாணங்களையும் கற்பித்தீர்.
15 அவர்கள் பசிக்கு வானத்திலிருந்து அப்பம் கொடுத்து, அவர்கள் தாகத்துக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, நீர் அவர்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளப் பிரவேசியுங்கள் என்று அவர்களுக்குச் சொன்னீர்.
16 எங்கள் பிதாக்களாகிய அவர்களோ அகங்காரமாய் நடந்து, தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, உம்முடைய கற்பனைகளுக்குச் செவிகொடாதேபோனார்கள்.
17 அவர்கள் செவிகொடுக்க மனதில்லாமலும், அவர்களிடத்திலே நீர் செய்த உம்முடைய அற்புதங்களை நினையாமலும் போய், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, தங்கள் அடிமைத்தனத்துக்குத் திரும்பும்படிக்கு அவர்கள் கலகம்பண்ணி, ஒரு தலைவனை ஏற்படுத்தினார்கள்; ஆகிலும் வெகுவாய் மன்னிக்கிறவரும் இரக்கமும் மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மகா கிருபையுமுள்ளவருமான தேவனாகிய நீர் அவர்களைக் கைவிடவில்லை.
18 அவர்கள் வார்ப்பிக்கப்பட்ட ஒரு கன்றுக்குட்டியைத் தங்களுக்கு உண்டாக்கி: இது உன்னை எகிப்திலிருந்து கொண்டுவந்த உன் தெய்வம் என்று சொல்லி, கோபமூட்டத்தக்க பெரிய அக்கிரமங்களைச் செய்திருந்தாலும்,
19 நீர் உம்முடைய மிகுந்த மன உருக்கத்தின்படியே, அவர்களை வனாந்தரத்திலே கைவிடவில்லை; அவர்களை வழிநடத்தப் பகலிலே மேகஸ்தம்பமும், அவர்களுக்கு வெளிச்சத்தையும் அவர்கள் நடக்கவேண்டிய வழியையும் காட்ட இரவிலே அக்கினி ஸ்தம்பமும், அவர்களை விட்டு விலகவில்லை.
20 அவர்களுக்கு அறிவை உணர்த்த உம்முடைய நல்ல ஆவியைக் கட்டளையிட்டீர், அவர்கள் வாய்க்கு உம்முடைய மன்னாவை அருளி, அவர்கள் தாகத்துக்குத் தண்ணீரைக் கொடுத்தீர்.
21 இப்படி நாற்பது வருஷமாக வனாந்தரத்தில் அவர்களுக்கு ஒன்றும் குறைவுபடாதபடிக்கு அவர்களைப் பராமரித்துவந்தீர்; அவர்கள் வஸ்திரங்கள் பழமையாய்ப்போகவுமில்லை, அவர்கள் கால்கள் வீங்கவுமில்லை.
22 அவர்களுக்கு ராஜ்யங்களையும் ஜனங்களையும் ஒப்புக்கொடுத்து, அவைகளை எல்லை எல்லையாக அவர்களுக்குப் பங்கிட்டீர்; எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் தேசத்தையும் பாசானின் ராஜாவாகிய ஓகின் தேசத்தையும் கட்டிக்கொண்டார்கள்.
23 அவர்கள் பிள்ளைகளை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, சுதந்தரித்துக்கொள்ளும்படி நீர் அவர்கள் பிதாக்களுக்குச் சொன்ன தேசத்திலே அவர்களை அழைத்து வந்தீர்.
24 அப்படியே பிள்ளைகள் உட்பிரவேசித்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டார்கள்; நீர் அவர்களுக்கு முன்பாகத் தேசத்தின் குடிகளாகிய கானானியரைத் தாழ்த்தி, அவர்களையும் அவர்கள் ராஜாக்களையும், தேசத்தின் ஜனங்களையும், தங்கள் இஷ்டப்படி செய்ய, அவர்கள் கையிலே ஒப்புக்கொடுத்தீர்.
25 அவர்கள் அரணான பட்டணங்களையும், செழுமையான பூமியையும் கட்டிக்கொண்டு, சகலவித உடமைகள் நிறைந்த வீடுகளையும், வெட்டப்பட்ட துரவுகளையும் ஏராளமான திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும், கனிகொடுக்கும் விருட்சங்களையும் சுதந்தரித்துக்கொண்டு புசித்துத் திருப்தியாகிக் கொழுத்து, உம்முடைய பெரிய தயையினால் செல்வமாய் வாழ்ந்தார்கள்.
26 ஆனாலும் அவர்கள் கீழ்ப்படியாதவர்களாகி உமக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உம்முடைய நியாயப்பிரமாணத்தை தங்களுக்குப் புறம்பே எறிந்துவிட்டு, தங்களை உம்மிடத்தில் திருப்பும்படி அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்ட உம்முடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோட்டு, கோபமூட்டுகிற பெரிய அக்கிரமங்களைச் செய்தார்கள்.
27 ஆகையால் அவர்களை நெருக்குகிற அவர்கள் சத்துருக்களின் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தீர்; அவர்கள் நெருக்கம் அநுபவிக்கிற காலத்தில் அவர்கள் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறபோதோ, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு உம்முடைய மிகுந்த இரக்கத்தினால் அவர்களை அவர்கள் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கிவிடுகிற இரட்சகர்களை அவர்களுக்குக் கொடுத்தீர்.
28 அவர்களுக்கு இளைப்பாறுதல் உண்டானபோதோ, உமக்கு முன்பாக மறுபடியும் பொல்லாப்புச் செய்யத்தொடங்கினார்கள்; ஆகையால் அவர்கள் சத்துருக்கள் அவர்களை ஆளும்படிக்கு அவர்கள் கையிலே ஒப்புவித்தீர்; அவர்கள் மனந்திரும்பி உம்மை நோக்கிக் கூப்பிட்டபோதோ, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, அவர்களை உம்முடைய இரக்கங்களின்படியே அநேகந்தரம், விடுதலையாக்கிவிட்டீர்.
29 அவர்களை உம்முடைய நியாயப்பிரமாணத்துக்குத் திருப்ப அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டீர்; ஆனாலும் அவர்கள் அகங்காரங் கொண்டு, உம்முடைய கற்பனைகளுக்குச் செவிகொடாமல், கீழ்ப்படிந்து நடக்கிற மனுஷன் செய்து பிழைக்கிற உம்முடைய நீதி நியாயங்களுக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, தங்கள் தோளை முரண்டுத்தனமாய் விலக்கி, செவிகொடாமல், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்திக்கொண்டார்கள்.
30 நீர் அநேக வருஷமாக அவர்கள்மேல் பொறுமையாயிருந்து, உம்முடைய ஆவியினால் பேசின உம்முடைய தீர்க்கதரிசிகளைக்கொண்டு அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டாலும், அவர்கள் செவிகொடாதபடியினாலே, அவர்களை அந்நிய தேசஜனங்களின் கையில் ஒப்புக்கொடுத்தீர்.
31 ஆகிலும் உம்முடைய மிகுந்த இரக்கங்களின்படியே, அவர்களை நிர்மூலமாக்காமலும் அவர்களைக் கைவிடாமலும் இருந்தீர்; நீர் கிருபையும் இரக்கமுமுள்ள தேவன்.
32 இப்பொழுதும் உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற வல்லமையும் பயங்கரமுமுள்ள மகா தேவனாகிய எங்கள் தேவனே, அசீரியா ராஜாக்களின் நாட்கள் முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் எங்களுக்கும் எங்கள் ராஜாக்களுக்கும், எங்கள் பிரபுக்களுக்கும், எங்கள் ஆசாரியர்களுக்கும் எங்கள் தீர்க்கதரிசிகளுக்கும், எங்கள் பிதாக்களுக்கும் உம்முடைய ஜனங்கள் அனைவருக்கும் நேரிட்ட சகல வருத்தமும் உமக்கு முன்பாக அற்பமாய்க் காணப்படாதிருப்பதாக.
33 எங்களுக்கு நேரிடப்பண்ணின எல்லாவற்றிலும் நீர் நீதியுள்ளவர்; நீர் உண்மையாய் நடப்பித்தீர்; நாங்களோ ஆகாமியம் பண்ணினோம்.
34 எங்கள் ராஜாக்களும், எங்கள் பிரபுக்களும், எங்கள் ஆசாரியர்களும் எங்கள் பிதாக்களும் உம்முடைய நியாயப்பிரமாணத்தின்படி செய்யாமலும், உம்முடைய கற்பனைகளையும் நீர் அவர்களைக் கடிந்துகொண்ட உம்முடைய சாட்சிகளையும் கவனியாமலும்போனார்கள்.
35 அவர்கள் தங்கள் ராஜ்யத்திலும், நீர் அவர்களுக்குக் கொடுத்த உம்முடைய பெரிய தயையிலும், நீர் அவர்களுக்கு முன்பாகத் திறந்துவைத்த விசாலமும் செழிப்புமான தேசத்திலும் உமக்கு ஊழியஞ்செய்யாமலும், தங்கள் துர்க்கருமங்களை விட்டுத் திரும்பாமலும் போனார்கள்.
36 இதோ, இன்றையதினம் நாங்கள் அடிமைகளாயிருக்கிறோம், இதோ பலனையும் நன்மையையும் அனுபவிக்கும்படி நீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த இந்தத் தேசத்தில்தானே நாங்கள் அடிமைகளாயிருக்கிறோம்.
37 அதின் வருமானம் எங்கள் பாவங்களினிமித்தம் நீர் எங்கள்மேல் வைத்த ராஜாக்களுக்குத் திரளாகப்போகிறது; அவர்கள் தங்களுக்கு இஷ்டமானபடியே எங்கள் சரீரங்களையும் எங்கள் மிருக ஜீவன்களையும் ஆளுகிறார்கள்; நாங்கள் மகா இக்கட்டில் அகப்பட்டிருக்கிறோம்.
38 இவையெல்லாம் இப்படி இருக்கிறபடியால் நாங்கள் உறுதியான உடன்படிக்கைபண்ணி அதை எழுதிவைக்கிறோம்; எங்கள் பிரபுக்களும் எங்கள் லேவியரும், எங்கள் ஆசாரியரும் அதற்கு முத்திரைபோடுவார்கள் என்றார்கள்.


1 Now on the twenty-fourth day of this month the people of Israel were assembled with fasting and in sackcloth, and with earth upon their heads.
2 And the Israelites separated themselves from all foreigners, and stood and confessed their sins and the iniquities of their fathers.
3 And they stood up in their place and read from the book of the law of the LORD their God for a fourth of the day; for another fourth of it they made confession and worshiped the LORD their God.
4 Upon the stairs of the Levites stood Jeshua, Bani, Kad'mi-el, Shebani'ah, Bunni, Sherebi'ah, Bani, and Chena'ni; and they cried with a loud voice to the LORD their God.
5 Then the Levites, Jeshua, Kad'mi-el, Bani, Hashabnei'ah, Sherebi'ah, Hodi'ah, Shebani'ah, and Pethahi'ah, said, "Stand up and bless the LORD your God from everlasting to everlasting. Blessed be thy glorious name which is exalted above all blessing and praise."
6 And Ezra said: "Thou art the LORD, thou alone; thou hast made heaven, the heaven of heavens, with all their host, the earth and all that is on it, the seas and all that is in them; and thou preservest all of them; and the host of heaven worships thee.
7 Thou art the LORD, the God who didst choose Abram and bring him forth out of Ur of the Chalde'ans and give him the name Abraham;
8 and thou didst find his heart faithful before thee, and didst make with him the covenant to give to his descendants the land of the Canaanite, the Hittite, the Amorite, the Per'izzite, the Jeb'usite, and the Gir'gashite; and thou hast fulfilled thy promise, for thou art righteous.
9 "And thou didst see the affliction of our fathers in Egypt and hear their cry at the Red Sea,
10 and didst perform signs and wonders against Pharaoh and all his servants and all the people of his land, for thou knewest that they acted insolently against our fathers; and thou didst get thee a name, as it is to this day.
11 And thou didst divide the sea before them, so that they went through the midst of the sea on dry land; and thou didst cast their pursuers into the depths, as a stone into mighty waters.
12 By a pillar of cloud thou didst lead them in the day, and by a pillar of fire in the night to light for them the way in which they should go.
13 Thou didst come down upon Mount Sinai, and speak with them from heaven and give them right ordinances and true laws, good statutes and commandments,
14 and thou didst make known to them thy holy sabbath and command them commandments and statutes and a law by Moses thy servant.
15 Thou didst give them bread from heaven for their hunger and bring forth water for them from the rock for their thirst, and thou didst tell them to go in to possess the land which thou hadst sworn to give them.
16 "But they and our fathers acted presumptuously and stiffened their neck and did not obey thy commandments;
17 they refused to obey, and were not mindful of the wonders which thou didst perform among them; but they stiffened their neck and appointed a leader to return to their bondage in Egypt. But thou art a God ready to forgive, gracious and merciful, slow to anger and abounding in steadfast love, and didst not forsake them.
18 Even when they had made for themselves a molten calf and said, `This is your God who brought you up out of Egypt,' and had committed great blasphemies,
19 thou in thy great mercies didst not forsake them in the wilderness; the pillar of cloud which led them in the way did not depart from them by day, nor the pillar of fire by night which lighted for them the way by which they should go.
20 Thou gavest thy good Spirit to instruct them, and didst not withhold thy manna from their mouth, and gavest them water for their thirst.
21 Forty years didst thou sustain them in the wilderness, and they lacked nothing; their clothes did not wear out and their feet did not swell.
22 And thou didst give them kingdoms and peoples, and didst allot to them every corner; so they took possession of the land of Sihon king of Heshbon and the land of Og king of Bashan.
23 Thou didst multiply their descendants as the stars of heaven, and thou didst bring them into the land which thou hadst told their fathers to enter and possess.
24 So the descendants went in and possessed the land, and thou didst subdue before them the inhabitants of the land, the Canaanites, and didst give them into their hands, with their kings and the peoples of the land, that they might do with them as they would.
25 And they captured fortified cities and a rich land, and took possession of houses full of all good things, cisterns hewn out, vineyards, olive orchards and fruit trees in abundance; so they ate, and were filled and became fat, and delighted themselves in thy great goodness.
26 "Nevertheless they were disobedient and rebelled against thee and cast thy law behind their back and killed thy prophets, who had warned them in order to turn them back to thee, and they committed great blasphemies.
27 Therefore thou didst give them into the hand of their enemies, who made them suffer; and in the time of their suffering they cried to thee and thou didst hear them from heaven; and according to thy great mercies thou didst give them saviors who saved them from the hand of their enemies.
28 But after they had rest they did evil again before thee, and thou didst abandon them to the hand of their enemies, so that they had dominion over them; yet when they turned and cried to thee thou didst hear from heaven, and many times thou didst deliver them according to thy mercies.
29 And thou didst warn them in order to turn them back to thy law. Yet they acted presumptuously and did not obey thy commandments, but sinned against thy ordinances, by the observance of which a man shall live, and turned a stubborn shoulder and stiffened their neck and would not obey.
30 Many years thou didst bear with them, and didst warn them by thy Spirit through thy prophets; yet they would not give ear. Therefore thou didst give them into the hand of the peoples of the lands.
31 Nevertheless in thy great mercies thou didst not make an end of them or forsake them; for thou art a gracious and merciful God.
32 "Now therefore, our God, the great and mighty and terrible God, who keepest covenant and steadfast love, let not all the hardship seem little to thee that has come upon us, upon our kings, our princes, our priests, our prophets, our fathers, and all thy people, since the time of the kings of Assyria until this day.
33 Yet thou hast been just in all that has come upon us, for thou hast dealt faithfully and we have acted wickedly;
34 our kings, our princes, our priests, and our fathers have not kept thy law or heeded thy commandments and thy warnings which thou didst give them.
35 They did not serve thee in their kingdom, and in thy great goodness which thou gavest them, and in the large and rich land which thou didst set before them; and they did not turn from their wicked works.
36 Behold, we are slaves this day; in the land that thou gavest to our fathers to enjoy its fruit and its good gifts, behold, we are slaves.
37 And its rich yield goes to the kings whom thou hast set over us because of our sins; they have power also over our bodies and over our cattle at their pleasure, and we are in great distress."
38 Because of all this we make a firm covenant and write it, and our princes, our Levites, and our priests set their seal to it.

1 முத்திரைபோட்டவர்கள் யாரென்றால்: அகலியாவின் குமாரனாகிய திர்ஷாதா என்னும் நெகேமியா, சிதேகியா,
2 செராயா, அசரியா, எரேமியா,
3 பஸ்கூர் அமரியா, மல்கிஜா,
4 அத்தூஸ், செபனியா, மல்லுூக்,
5 ஆரீம், மெரெமோத், ஒபதியா,
6 தானியேல், கிநேதோன், பாருக்,
7 மெசுல்லாம், அபியா, மீயாமின்,
8 மாசியா, பில்காய், செமாயா என்னும் ஆசாரியர்களும்,
9 லேவியராகிய அசனியாவின் குமாரன் யெசுவா, எனாதாதின் குமாரரில் ஒருவனாகிய பின்னூயி, கத்மியேல் என்பவர்களும்,
10 அவர்கள் சகோதரராகிய செபனியா, ஒதியா, கேலிதா, பெலாயா, ஆனான்,
11 மீகா, ரேகோப், அசபியா,
12 சக்கூர், செரெபியா, செபனியா,
13 ஒதியா, பானி, பெனினு என்பவர்களும்,
14 ஜனத்தின் தலைவராகிய பாரோஷ், பாகாத்மோவாப், ஏலாம், சத்தூ, பானி,
15 புன்னி, அஸ்காத், பெபாயி,
16 அதோனியா, பிக்வாய், ஆதின்,
17 ஆதேர், இஸ்கியா, அசூர்,
18 ஒதியா, ஆசூம், பெத்சாய்,
19 ஆரீப், ஆனதோத், நெபாய்,
20 மக்பியாஸ், மெசுல்லாம், ஏசீர்,
21 மெஷெசாபெயேல், சாதோக், யதுவா,
22 பெலத்தியா, ஆனான், ஆனாயா,
23 ஓசெயா, அனனியா, அசூப்,
24 அல்லோகேஸ், பிலகா, சோபேக்,
25 ரேகூம், அஷபனா, மாசெயா,
26 அகியா, கானான், ஆனான்,
27 மல்லுூக், ஆரிம், பானா என்பவர்களுமே.
28 ஜனங்களில் மற்றவர்களாகிய ஆசாரியரும், லேவியரும் வாசல் காவலாளரும், பாடகரும், நிதனீமியரும், தேசங்களின் ஜனங்களைவிட்டுப் பிரிந்து விலகி தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குத் திரும்பின அனைவரும் அவர்கள் மனைவிகளும், அவர்கள் குமாரரும் அவர்கள் குமாரத்திகளுமாகிய அறிவும் புத்தியும் உள்ளவர்களெல்லாரும்,
29 தங்களுக்குப் பெரியவர்களாகிய தங்கள் சகோதரரோடே கூடிக்கொண்டு: தேவனுடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு கொடுக்கப்பட்ட தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி நடந்துகொள்வோம் என்றும், எங்கள் ஆண்டவராகிய கர்த்தரின் கற்பனைகளையும் சகல நீதிநியாயங்களையும், கட்டளைகளையும் எல்லாம் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வோம் என்றும்,
30 நாங்கள் எங்கள் குமாரத்திகளை தேசத்தின் ஜனங்களுக்குக் கொடாமலும், எங்கள் குமாரருக்கு அவர்கள் குமாரத்திகளைக் கொள்ளாமலும் இருப்போம் என்றும்,
31 தேசத்தின் ஜனங்கள் ஓய்வுநாளிலே சரக்குகளையும், எந்தவிதத் தானியதவசத்தையும் விற்கிறதற்குக் கொண்டுவந்தால், நாங்கள் அதை ஓய்வுநாளிலும் பரிசுத்தநாளிலும் அவர்கள் கையில் கொள்ளாதிருப்போம் என்றும், நாங்கள் ஏழாம் வருஷத்தை விடுதலை வருஷமாக்கிச் சகல கடன்களையும் விட்டுவிடுவோம் என்றும் ஆணையிட்டுப் பிரமாணம்பண்ணினார்கள்.
32 மேலும்: நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக சமுகத்தப்பங்களுக்கும், நித்தியபோஜனபலிக்கும் ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் செலுத்தும் நித்திய சர்வாங்க தகனபலிகளுக்கும் பண்டிகைகளுக்கும், பிரதிஷ்டையான பொருள்களுக்கும், இஸ்ரவேலுக்காக பாவநிவிர்த்தி உண்டாக்கும் பலிகளுக்கும்,
33 எங்கள் தேவனுடைய ஆலயத்தின் சகல வேலைக்கும், வருஷந்தோறும் நாங்கள் சேக்கலில் மூன்றில் ஒரு பங்கைக் கொடுப்போம் என்கிற கடனை எங்கள்மேல் ஏற்றுக்கொண்டோம்.
34 நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே எங்கள் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் எரிகிறதற்காக, குறிக்கப்பட்ட காலங்களில் வருஷாவருஷம் எங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே, எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கு கொண்டுவரவேண்டிய விறகு காணிக்கைக்காகவும், ஆசாரியருக்கும், லேவியருக்கும், ஜனத்துக்கும் சீட்டுப்போட்டோம்.
35 நாங்கள் வருஷந்தோறும் எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கு எங்கள் தேசத்தின் முதற்பலனையும், சகலவித விருட்சங்களின் எல்லா முதற்கனிகளையும் கொண்டுவரவும்,
36 நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே, எங்கள் குமாரரில் முதற்பேறுகளையும், எங்கள் ஆடுமாடுகளாகிய மிருகஜீவன்களின் தலையீற்றுகளையும், எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கும் எங்கள் தேவனுடைய ஆலயத்திலே ஊழியஞ்செய்கிற ஆசாரியரிடத்துக்கும் கொண்டுவரவும்,
37 நாங்கள் எங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும் எங்கள் படைப்புகளையும், சகல மரங்களின் முந்தின பலனாகிய திராட்சப்பழரசத்தையும் எண்ணெயையும், எங்கள் தேவனுடைய ஆலயத்தின் அறைகளில் வைக்கும்படி ஆசாரியரிடத்துக்கும், எங்கள் நிலப்பயிர்களில் தசமபாகம் லேவியரிடத்திற்கும் கொண்டுவரவும், லேவியராகிய இவர்கள் எங்கள் வெள்ளாண்மையின் பட்டணங்களிலெல்லாம் தசமபாகம் சேர்க்கவும்,
38 லேவியர் தசமபாகம் சேர்க்கும்போது ஆரோனின் குமாரனாகிய ஒரு ஆசாரியன் லேவியரோடேகூட இருக்கவும், தசமபாகமாகிய அதிலே லேவியர் பத்தில் ஒரு பங்கை எங்கள் தேவனுடைய ஆலயத்திலுள்ள பொக்கிஷ அறைகளில் கொண்டுவரவும் திட்டம்பண்ணிக்கொண்டோம்.
39 பரிசுத்தஸ்தலத்தின் பணிமுட்டுகளும், ஊழியஞ்செய்கிற ஆசாரியரும் வாசல் காவலாளரும், பாடகரும் இருக்கிற அந்த அறைகளிலே இஸ்ரவேல் புத்திரரும் லேவிபுத்திரரும் தானியம் திராட்சரசம் எண்ணெய் என்பவைகளின் படைப்புகளைக் கொண்டுவரவேண்டியது; இவ்விதமாய் நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தைப் பராமரியாமல் விடுவதில்லையென்று திட்டம்பண்ணிக்கொண்டோம்.


1 Those who set their seal are Nehemi'ah the governor, the son of Hacali'ah, Zedeki'ah,
2 Serai'ah, Azari'ah, Jeremiah,
3 Pashhur, Amari'ah, Malchi'jah,
4 Hattush, Shebani'ah, Malluch,
5 Harim, Mer'emoth, Obadi'ah,
6 Daniel, Gin'nethon, Baruch,
7 Meshul'lam, Abi'jah, Mi'jamin,
8 Ma-azi'ah, Bil'gai, Shemai'ah; these are the priests.
9 And the Levites: Jeshua the son of Azani'ah, Bin'nui of the sons of Hen'adad, Kad'mi-el;
10 and their brethren, Shebani'ah, Hodi'ah, Keli'ta, Pelai'ah, Hanan,
11 Mica, Rehob, Hashabi'ah,
12 Zaccur, Sherebi'ah, Shebani'ah,
13 Hodi'ah, Bani, Beni'nu.
14 The chiefs of the people: Parosh, Pa'hath-mo'ab, Elam, Zattu, Bani,
15 Bunni, Azgad, Be'bai,
16 Adoni'jah, Bigva'i, Adin,
17 Ater, Hezeki'ah, Azzur,
18 Hodi'ah, Hashum, Be'zai,
19 Hariph, An'athoth, Ne'bai,
20 Mag'piash, Meshul'lam, Hezir,
21 Meshez'abel, Zadok, Jad'du-a,
22 Pelati'ah, Hanan, Anai'ah,
23 Hoshe'a, Hanani'ah, Hasshub,
24 Hallo'hesh, Pi'lha, Shobek,
25 Rehum, Hashab'nah, Ma-asei'ah,
26 Ahi'ah, Hanan, Anan,
27 Malluch, Harim, Ba'anah.
28 The rest of the people, the priests, the Levites, the gatekeepers, the singers, the temple servants, and all who have separated themselves from the peoples of the lands to the law of God, their wives, their sons, their daughters, all who have knowledge and understanding,
29 join with their brethren, their nobles, and enter into a curse and an oath to walk in God's law which was given by Moses the servant of God, and to observe and do all the commandments of the LORD our Lord and his ordinances and his statutes.
30 We will not give our daughters to the peoples of the land or take their daughters for our sons;
31 and if the peoples of the land bring in wares or any grain on the sabbath day to sell, we will not buy from them on the sabbath or on a holy day; and we will forego the crops of the seventh year and the exaction of every debt.
32 We also lay upon ourselves the obligation to charge ourselves yearly with the third part of a shekel for the service of the house of our God:
33 for the showbread, the continual cereal offering, the continual burnt offering, the sabbaths, the new moons, the appointed feasts, the holy things, and the sin offerings to make atonement for Israel, and for all the work of the house of our God.
34 We have likewise cast lots, the priests, the Levites, and the people, for the wood offering, to bring it into the house of our God, according to our fathers' houses, at times appointed, year by year, to burn upon the altar of the LORD our God, as it is written in the law.
35 We obligate ourselves to bring the first fruits of our ground and the first fruits of all fruit of every tree, year by year, to the house of the LORD;
36 also to bring to the house of our God, to the priests who minister in the house of our God, the first-born of our sons and of our cattle, as it is written in the law, and the firstlings of our herds and of our flocks;
37 and to bring the first of our coarse meal, and our contributions, the fruit of every tree, the wine and the oil, to the priests, to the chambers of the house of our God; and to bring to the Levites the tithes from our ground, for it is the Levites who collect the tithes in all our rural towns.
38 And the priest, the son of Aaron, shall be with the Levites when the Levites receive the tithes; and the Levites shall bring up the tithe of the tithes to the house of our God, to the chambers, to the storehouse.
39 For the people of Israel and the sons of Levi shall bring the contribution of grain, wine, and oil to the chambers, where are the vessels of the sanctuary, and the priests that minister, and the gatekeepers and the singers. We will not neglect the house of our God.

1 ஜனத்தின் அதிகாரிகள் எருசலேமிலே குடியிருந்தார்கள்; மற்ற ஜனங்கள், தங்களுக்குள்ளே பத்துப்பேரில் ஒருவனை எருசலேமென்னும் பரிசுத்த நகரத்திலும் ஒன்பதுபேரை மற்றப் பட்டணங்களிலும் குடியிருக்கப்பண்ணி, சீட்டுகளைப் போட்டார்கள்.
2 ஆனாலும் எருசலேமிலே குடியிருக்க மனப்பூர்வமாய்ச் சம்மதித்த மனுஷர்களையெல்லாம் ஜனங்கள் வாழ்த்தினார்கள்.
3 யூதாவின் பட்டணங்களில் இஸ்ரவேலரும் ஆசாரியரும், லேவியரும் நிதனீமியரும் சாலொமோனுடைய வேலைக்காரரின் புத்திரரும், அவரவர் தங்கள் பட்டணங்களிலுள்ள தங்கள் காணிபூமியிலே குடியிருந்தார்கள்; எருசலேமிலே குடியிருந்த நாடுகளின் தலைவர் யாரென்றால்:
4 எருசலேமிலே யூதா புத்திரரில் சிலரும், பென்யமீன் புத்திரரில் சிலரும் குடியிருந்தார்கள்; யூதா புத்திரரிலே பேரேசின் புத்திரருக்குள் ஒருவனான மகலாலெயேலின் குமாரனாகிய செபதியாவின் குமாரன் அமரியாவுக்குப் பிறந்த சகரியாவுக்குக் குமாரனான உசியாவின் மகன் அத்தாயாவும்,
5 சீலோனின் குமாரன் சகரியாவுக்குக் குமாரனாகிய யோயாரிபுக்குக் குமாரனான அதாயாவுக்குப் பிறந்த அசாயாவின் குமாரன் கொல்லோசேபெற்ற பாருக்கின் மகன் மாசெயாவுமே.
6 எருசலேமிலே குடியிருக்கிற பேரேசின் புத்திரரெல்லாரும் நானூற்று அறுபத்தெட்டுப் பராக்கிரமசாலிகளாயிருந்தார்கள்.
7 பென்யமீன் புத்திரரில் யாரென்றால் சல்லு என்பவன்; இவன் மெசுல்லாமுக்கும், இவன் யோவேலுக்கும், இவன் பெதாயாவுக்கும், இவன் கொலாயாவுக்கும், இவன் மாசெயாவுக்கும், இவன் இதியேலுக்கும், இவன் எசாயாவுக்கும் குமாரனானவன்.
8 அவனுக்குப்பின் கப்பாய், சல்லாய் முதலானவர்கள் தொளாயிரத்து இருபத்தெட்டுப்பேர்.
9 அவர்கள்மேல் விசாரிப்புக்காரனான சிக்ரியின் குமாரன் யோவேலும் பட்டணத்தின்மேல் இரண்டாவது விசாரிப்புக்காரனான செனுவாவின் குமாரன் யூதாவுமே.
10 ஆசாரியர்களில் யோயாரிபின் குமாரன் யெதாயா, யாகின் என்பவர்களும்,
11 அகிதூபின் குமாரன் மெராயோத்துக்குப் பிறந்த சாதோக்கின் குமாரன் மெசுல்லாம் பெற்ற இல்க்கியாவின் மகன் செராயா என்னும் தேவனுடைய ஆலயத்தின் விசாரணைக்கர்த்தனும்,
12 ஆலயத்திலே பணிவிடை செய்கிற அவர்கள் சகோதரராகிய எண்ணூற்று இருபத்திரண்டுபேரும், மல்கியாவின் குமாரன் பஸ்கூருக்கு மகனான சகரியாவின் குமாரன் அம்சிக்குப் பிறந்த பெல்லியாவின் குமாரன் எரோகாமுக்குப் பிறந்த அதாயாவும்,
13 பிதா வம்சத்தலைவனாகிய அவனுடைய சகோதரர் இருநூற்று நாற்பத்திரண்டுபேரும் இம்மேரின் குமாரன் மெசில்லேமோத்தின் மகனாகிய அகசாய்க்குப் பிறந்த அசரெயேலின் மகனான அமாசாயும்,
14 அவர்களுடைய சகோதரராகிய பராக்கிரமசாலிகள் நூற்று இருபத்தெட்டுப்பேருமே, இவர்கள்மேல் அகெதோலிமின் குமாரன் சப்தியேல் விசாரிப்புக்காரனாயிருந்தான்.
15 லேவியரிலே புன்னியின் குமாரன் சபியாவின் மகனாகிய அஸ்ரிக்காமின் குமாரனான அசூபின் மகன் செமாயாவும்,
16 தேவனுடைய ஆலயத்தின் வெளிவேலையை விசாரிக்கிற லேவியரின் தலைவரிலே சபெதாயும், யோசபாத்தும்,
17 ஆசாபின் குமாரன் சப்தியின் குமாரனாகிய மீகாவின் மகன் மத்தனியா ஜெபத்தில் ஸ்தோத்திரப்பாட்டைத் துவக்குகிற தலைவனும் அவன் சகோதரரில் இரண்டாவதான பக்பூக்கியா என்னும் ஒருவனும், எதுத்தூனின் குமாரன் காலாவின் மகனாகிய சமுவாவின் குமாரன் அப்தாவுமே.
18 பரிசுத்த பட்டணத்திலிருந்த லேவியர் எல்லாரும் இருநூற்று எண்பத்துநாலுபேர்.
19 வாசல் காவலாளர் அக்கூபும், தல்மோனும் வாசல்களில் காவல்காக்கிற அவர்கள் சகோதரரும் நூற்றுஎழுபத்திரண்டுபேர்.
20 மற்ற இஸ்ரவேலரும், ஆசாரியரும், லேவியரும் யூதாவின் சகல பட்டணங்களிலும், அவரவர் தங்கள் சுதந்தரத்திலிருந்தார்கள்.
21 நிதனீமியர் ஒபேலிலே குடியிருந்தார்கள்; அவர்கள்மேல் சீகாவும் கிஸ்பாவும் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.
22 எருசலேமிலிருக்கிற லேவியரின் விசாரிப்புக்காரன் மீகாவின் குமாரன் மத்தனியாவின் மகனாகிய அசபியாவுக்குப் பிறந்த பானியின் குமாரன் ஊசி என்பவன் தேவனுடைய ஆலயத்தின் ஊழியத்துக்கு நிற்கிற பாடகராகிய ஆசாபின் குமாரரில் ஒருவன்.
23 பாடகராகிய அவர்களுக்காக அன்றாடகப்படி கொடுக்கப்படும்படி ராஜாவினால் கட்டளையிடப்பட்டிருந்தது.
24 யூதாவின் குமாரனாகிய சேராக்கின் புத்திரரில் மெசசாபெயேலின் குமாரன் பெத்தகியா ஜனத்தின் காரியங்களுக்கெல்லாம் ராஜாவின் சமுகத்தில் நின்றான்.
25 தங்கள் நாட்டுப்புறங்களான கிராமங்களில் இருக்கிறவர்களுக்குள்ளே யூதாவின் புத்திரரில் சிலர் கீரியாத்அர்பாவிலும் அதின் கிராமங்களிலும், தீபோனிலும் அதின் கிராமங்களிலும், எகாப்செயேலிலும் அதின் கிராமங்களிலும்,
26 யெசுவாவிலும், மோலாதாகிலும், பெத்பெலேதிலும்,
27 ஆத்சார்சூகாவிலும், பெயெர்செபாவிலும், அதின் கிராமங்களிலும்,
28 சிக்லாகிலும், மேகோனாகிலும், அதின் கிராமங்களிலும்,
29 என்ரிம்மோனிலும், சாரேயாகிலும், யர்மூத்திலும்,
30 சானோவாலும், அதுல்லாமிலும் அவைகளின் கிராமங்களிலும், லாகீசிலும் அதின் நாட்டுப்புறங்களிலும், அசெக்காவிலும் அதின் கிராமங்களிலும், பெயெர்செபா தொடங்கி இன்னோமின் பள்ளத்தாக்குமட்டும் குடியேறினார்கள்.
31 கேபாவின் ஊராராயிருந்த பென்யமீன் புத்திரர், மிக்மாஸ், ஆயா, பெத்தேல் ஊர்களிலும் அதின் கிராமங்களிலும்,
32 ஆனதோத், நோப், அனனியா,
33 ஆத்சோர், ஆமா, கித்தாயிம்,
34 ஆதீத், செபோயிம், நெபலாத்,
35 லோத், ஓனோ என்னும் ஊர்களிலும், சிற்பாசாரிகளின் பள்ளத்தாக்கிலும் குடியிருந்தார்கள்.
36 லேவியரிலே சில வகுப்பார் யூதாவிலும், சிலர் பென்யமீனிலும் இருந்தார்கள்.


1 Now the leaders of the people lived in Jerusalem; and the rest of the people cast lots to bring one out of ten to live in Jerusalem the holy city, while nine tenths remained in the other towns.
2 And the people blessed all the men who willingly offered to live in Jerusalem.
3 These are the chiefs of the province who lived in Jerusalem; but in the towns of Judah every one lived on his property in their towns: Israel, the priests, the Levites, the temple servants, and the descendants of Solomon's servants.
4 And in Jerusalem lived certain of the sons of Judah and of the sons of Benjamin. Of the sons of Judah: Athai'ah the son of Uzzi'ah, son of Zechari'ah, son of Amari'ah, son of Shephati'ah, son of Mahal'alel, of the sons of Perez;
5 and Ma-asei'ah the son of Baruch, son of Col-ho'zeh, son of Hazai'ah, son of Adai'ah, son of Joi'arib, son of Zechari'ah, son of the Shi'lonite.
6 All the sons of Perez who lived in Jerusalem were four hundred and sixty-eight valiant men.
7 And these are the sons of Benjamin: Sallu the son of Meshul'lam, son of Jo'ed, son of Pedai'ah, son of Kolai'ah, son of Ma-asei'ah, son of I'thi-el, son of Jeshai'ah.
8 And after him Gabba'i, Salla'i, nine hundred and twenty-eight.
9 Jo'el the son of Zichri was their overseer; and Judah the son of Hassen'u-ah was second over the city.
10 Of the priests: Jedai'ah the son of Joi'arib, Jachin,
11 Serai'ah the son of Hilki'ah, son of Meshul'lam, son of Zadok, son of Merai'oth, son of Ahi'tub, ruler of the house of God,
12 and their brethren who did the work of the house, eight hundred and twenty-two; and Adai'ah the son of Jero'ham, son of Pelali'ah, son of Amzi, son of Zechari'ah, son of Pashhur, son of Malchi'jah,
13 and his brethren, heads of fathers' houses, two hundred and forty-two; and Amash'sai, the son of Az'arel, son of Ah'zai, son of Meshil'lemoth, son of Immer,
14 and their brethren, mighty men of valor, a hundred and twenty-eight; their overseer was Zab'diel the son of Haggedo'lim.
15 And of the Levites: Shemai'ah the son of Hasshub, son of Azri'kam, son of Hashabi'ah, son of Bunni;
16 and Shab'bethai and Jo'zabad, of the chiefs of the Levites, who were over the outside work of the house of God;
17 and Mattani'ah the son of Mica, son of Zabdi, son of Asaph, who was the leader to begin the thanksgiving in prayer, and Bakbuki'ah, the second among his brethren; and Abda the son of Sham'mua, son of Galal, son of Jedu'thun.
18 All the Levites in the holy city were two hundred and eighty-four.
19 The gatekeepers, Akkub, Talmon and their brethren, who kept watch at the gates, were a hundred and seventy-two.
20 And the rest of Israel, and of the priests and the Levites, were in all the towns of Judah, every one in his inheritance.
21 But the temple servants lived on Ophel; and Ziha and Gishpa were over the temple servants.
22 The overseer of the Levites in Jerusalem was Uzzi the son of Bani, son of Hashabi'ah, son of Mattani'ah, son of Mica, of the sons of Asaph, the singers, over the work of the house of God.
23 For there was a command from the king concerning them, and a settled provision for the singers, as every day required.
24 And Pethahi'ah the son of Meshez'abel, of the sons of Zerah the son of Judah, was at the king's hand in all matters concerning the people.
25 And as for the villages, with their fields, some of the people of Judah lived in Kir'iath-ar'ba and its villages, and in Dibon and its villages, and in Jekab'zeel and its villages,
26 and in Jeshua and in Mola'dah and Beth-pelet,
27 in Ha'zar-shu'al, in Beer-sheba and its villages,
28 in Ziklag, in Meco'nah and its villages,
29 in En-rim'mon, in Zorah, in Jarmuth,
30 Zano'ah, Adullam, and their villages, Lachish and its fields, and Aze'kah and its villages. So they encamped from Beer-sheba to the valley of Hinnom.
31 The people of Benjamin also lived from Geba onward, at Michmash, Ai'ja, Bethel and its villages,
32 An'athoth, Nob, Anani'ah,
33 Hazor, Ramah, Git'taim,
34 Hadid, Zebo'im, Nebal'lat,
35 Lod, and Ono, the valley of craftsmen.
36 And certain divisions of the Levites in Judah were joined to Benjamin.

1 செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலோடும் யெசுவாவோடும் வந்த ஆசாரியரும் லேவியரும் யாரென்றால்: செராயா எரேமியா, எஸ்றா,
2 அமரியா, மல்லூக், அத்தூஸ்,
3 செகனியா, ரெகூம், மெரெமோத்,
4 இத்தோ, கிநேதோ, அபியா,
5 மியாமின், மாதியா, பில்கா,
6 செமாயா, யோயாரிப், யெதாயா,
7 சல்லு, ஆமோக், இல்க்கியா, யெதாயா என்பவர்கள்; இவர்கள் யெசுவாவின் நாட்களில், ஆசாரியருக்கும் தங்கள் சகோதரருக்கும் தலைவராயிருந்தார்கள்.
8 லேவியர் யாரென்றால்: யெசுவா பின்னூயி, கத்மியேல், செரெபியா, யூதா, மத்தனியா என்பவர்கள்; இவனும் இவன் சகோதரரும் துதிசெய்தலை விசாரித்தார்கள்.
9 பக்புக்கியா, உன்னி என்கிற அவர்கள் சகோதரர் அவர்களுக்கு எதிரே காவல்காத்திருந்தார்கள்.
10 யெசுவா யொயகீமைப் பெற்றான், யொயகீம் எலியாசிபைப் பெற்றான், எலியாசிப் யொயதாவைப் பெற்றான்.
11 யொயதா யோனத்தானைப் பெற்றான், யோனத்தான் யதுவாவைப் பெற்றான்.
12 யொயகீமின் நாட்களிலே பிதா வம்சங்களின் தலைவரான ஆசாரியர்கள் யாரென்றால்: செராயாவின் சந்ததியில் மெராயா, எரேமியாவின் சந்ததியில் அனனியா,
13 எஸ்றாவின் சந்ததியில் மெசுல்லாம், அமரியாவின் சந்ததியில் யோகனான்,
14 மெலிகுவின் சந்ததியில் யோனத்தான், செபனியாவின் சந்ததியில் யோசேப்பு,
15 ஆரீமின் சந்ததியில் அத்னா, மெராயோதின் சந்ததியில் எல்காய்,
16 இத்தோவின் சந்ததியில் சகரியா, கிநெதோனின் சந்ததியில் மெசுல்லாம்,
17 அபியாவின் சந்ததியில் சிக்ரி, மினியாமீன்மொவதியா, என்பவர்களின் சந்ததியில் பில்தாய்,
18 பில்காவின் சந்ததியில் சம்முவா, செமாயாவின் சந்ததியில் யோனத்தான்.
19 யோயாரிபின் சந்ததியில் மத்தனா, யெதாயாவின் சந்ததியில் ஊசி,
20 சல்லாயின் சந்ததியில் கல்லாய், ஆமோக்கின் சந்ததியில் ஏபேர்,
21 இல்க்கியாவின் சந்ததியில் அசபியா, யெதாயாவின் சந்ததியில் நெதனெயேல் என்பவர்கள்.
22 எலியாசிபின் நாட்களில் யொயதா, யோகனான், யதுவா என்கிற லேவியர் பிதா வம்சங்களின் தலைவராக எழுதப்பட்டார்கள்; பெர்சியனாகிய தரியுவின் ராஜ்யபாரமட்டும் இருந்த ஆசாரியர்களும் அப்படியே எழுதப்பட்டார்கள்;
23 லேவி புத்திரராகிய பிதா வம்சங்களின் தலைவர் எலியாசிபின் குமாரனாகிய யோகனானின் நாட்கள்மட்டும் நாளாகமப் புஸ்தகத்தில் எழுதப்பட்டார்கள்.
24 லேவியரின் தலைவராகிய அசபியாவும், செரெபியாவும், கத்மியேலின் குமாரன் யெசுவாவும், அவர்களுக்கு எதிரே நிற்கிற அவர்கள் சகோதரரும், தேவனுடைய மனுஷனாகிய தாவீதினுடைய கற்பனையின்படியே துதிக்கவும், தோத்திரிக்கவும், ஒருவருக்கொருவர் எதிர்முகமாக முறைமுறையாயிருந்தார்கள்.
25 மத்தனியா, பக்புக்கியா, ஒபதியா, மெசுல்லாம், தல்மோன், அக்கூப் என்பவர்கள் வாசல்களிலிருக்கிற பொக்கிஷ அறைகளைக் காவல்காக்கிறவர்களாயிருந்தார்கள்.
26 யோத்சதாக்கின் குமாரனாகிய யெசுவாவின் குமாரன் யொயகீமின் நாட்களிலும், அதிபதியாகிய நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும் இருக்கிற நாட்களிலும் அவர்கள் இருந்தார்கள்.
27 எருசலேமின் அலங்கத்தைப் பிரதிஷ்டைபண்ணுகையில், துதியினாலும், பாடலினாலும் கைத்தாளம் தம்புரு சுரமண்டலம் முதலான கீதவாத்தியங்களினாலும், பிரதிஷ்டையை மகிழ்ச்சியோடே கொண்டாட எல்லா இடங்களிலும் இருக்கிற லேவியரை எருசலேமுக்கு வரும்படி தேடினார்கள்.
28 அப்படியே பாடகரின் புத்திரர் எருசலேமின் சுற்றுப்புறங்களான சமபூமியிலும், நெத்தோபாத்தியரின் கிராமங்களிலும்,
29 பெத்கில்காலிலும், கேபா, அஸ்மாவேத் ஊர்களின் நாட்டுப்புறங்களிலுமிருந்துவந்து கூடினார்கள்; பாடகர் எருசலேமைச் சுற்றிலும் தங்களுக்குக் கிராமங்களைக் கட்டியிருந்தார்கள்.
30 ஆசாரியரும் லேவியரும் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, ஜனத்தையும் பட்டணவாசல்களையும் அலங்கத்தையும் சுத்தம்பண்ணினார்கள்.
31 அப்பொழுது நான் யூதாவின் பிரபுக்களை அலங்கத்தின்மேல் ஏறப்பண்ணி, துதிசெய்து நடந்துபோகும்படி இரண்டு பெரிய கூட்டத்தாரை நிறுத்தினேன்; அவர்களில் ஒரு கூட்டத்தார் அலங்கத்தின்மேல் வலதுபுறமாகக் குப்பைமேட்டு வாசலுக்குப் போனார்கள்.
32 அவர்கள் பிறகாலே ஒசாயாவும், யூதாவின் பிரபுக்களில் பாதிப்பேரும்,
33 அசரியா, எஸ்றா, மெசுல்லாம்,
34 யூதா, பென்யமீன், செமாயா, எரேமியா என்பவர்களும்,
35 பூரிகைகளைப் பிடிக்கிற ஆசாரியரின் புத்திரரில் ஆசாப்பின் குமாரன் சக்கூரின் மகனாகிய மிகாயாவுக்குக் குமாரனான மத்தனியாவின் மகன் செமாயாவுக்குப் பிறந்த யோனத்தானின் குமாரன் சகரியாவும்,
36 தேவனுடைய மனுஷனாகிய தாவீதின் கீதவாத்தியங்களை வாசிக்கிற அவன் சகோதரரான செமாயா, அசரெயேல், மிலாலாய், கிலாலாய், மகாய், நெதனெயேல், யூதா, அனானி என்பவர்களும் போனார்கள்; வேதபாரகனாகிய எஸ்றா இவர்களுக்கு முன்பாக நடந்தான்.
37 அங்கேயிருந்து அவர்கள் தங்களுக்கு எதிரான ஊருணிவாசலுக்கு வந்தபோது, அலங்கத்தைப்பார்க்கிலும் உயரமான தாவீது நகரத்தின் படிகளில் ஏறி, தாவீது வீட்டின்மேலாகக் கிழக்கேயிருக்கிற தண்ணீர் வாசல்மட்டும் போனார்கள்.
38 துதிசெய்கிற இரண்டாம் கூட்டத்தார் எதிரேயிருக்கிற வழியாய் நடந்துபோனார்கள், அவர்கள் பிறகாலே நான் போனேன்; ஜனத்தில் பாதிப்பேர் அலங்கத்தின்மேல் சூளைகளின் கொம்மையைக்கடந்து, அகழ் மதில்மட்டும் நெடுகப்போய்,
39 எப்பிராயீம் வாசலையும் பழையவாசலையும், மீன் வாசலையும், அனானெயேலின் கொம்மையையும், மேயா என்கிற கொம்மையையும் கடந்து, ஆட்டுவாசல்மட்டும் புறப்பட்டுக் காவல்வீட்டுவாசலிலே நின்றார்கள்.
40 அதற்குப்பின்பு துதி செய்கிற இரண்டு கூட்டத்தாரும் தேவனுடைய ஆலயத்திலே வந்து நின்றார்கள்; நானும் என்னோடேகூட இருக்கிற தலைவரில் பாதிப்பேரும்,
41 பூரிகைகளைப் பிடிக்கிற எலியாக்கீம், மாசெயா, மினியாமீன், மிகாயா, எலியோனாய், சகரியா, அனானியா என்கிற ஆசாரியர்களும்,
42 மாசெயா, செமாயா, எலெயாசார், ஊசி, யோகனான், மல்கியா, ஏலாம், ஏசேர் என்பவர்களும் நின்றோம்; பாடகரும் அவர்கள் விசாரிப்புக்காரனாகிய யெஷரகியாவும சத்தமாய்ப் பாடினார்கள்.
43 அந்நாளிலே மிகுதியான பலிகளைச் செலுத்தி தேவன் தங்களுக்கு மகா சந்தோஷத்தை உண்டாக்கினதினால் மகிழ்ச்சியாயிருந்தார்கள்; ஸ்திரீகளும் பிள்ளைகளுங்கூடக் களிகூர்ந்தார்கள்; எருசலேமின் களிப்பு தூரத்திலே கேட்கப்பட்டது.
44 அன்றையதினம் பொக்கிஷங்களையும், படைப்புகளையும், முதல் கனிகளையும், தசமபாகங்களையும் வைக்கும் அறைகளின்மேல், ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் நியாயப்பிரமாணத்தின்படியே வரவேண்டிய பட்டணங்களுடைய நிலங்களின் பங்குகளை அவைகளில் சேர்க்கும்படிக்கு, சில மனுஷர் விசாரிப்புக்காரராக வைக்கப்பட்டார்கள்; ஊழியஞ்செய்து நிற்கிற ஆசாரியர்மேலும் லேவியர்மேலும் யூதா மனிதர் சந்தோஷமாயிருந்தார்கள்.
45 பாடகரும், வாசல் காவலாளரும், தாவீதும் அவன் குமாரனாகிய சாலொமோனும் கற்பித்தபடியே தங்கள் தேவனுடைய காவலையும், சுத்திகரிப்பின் காவலையும் காத்தார்கள்.
46 தாவீதும் ஆசாப்பும் இருந்த பூர்வநாட்களில் பாடகரின் தலைவரும் வைக்கப்பட்டு, தேவனுக்குத் துதியும் தோத்திரங்களும் செலுத்துகிற சங்கீதங்கள் திட்டம்பண்ணப்பட்டிருந்தது.
47 ஆகையால் செரூபாபேலின் நாட்களிலும், நெகேமியாவின் நாட்களிலும் இஸ்ரவேலர் எல்லாரும் பாடகருக்கும் வாசல் காவலாளருக்கும் அன்றாடகத் திட்டமாகிய பங்குகளைக் கொடுத்தார்கள்; அவர்கள் லேவியருக்கென்று பிரதிஷ்டைபண்ணிக் கொடுத்தார்கள்; லேவியர் ஆரோனின் புத்திரருக்கென்று அவர்கள் பங்கைப் பிரதிஷ்டைபண்ணிக் கொடுத்தார்கள்.


1 These are the priests and the Levites who came up with Zerub'babel the son of She-al'ti-el, and Jeshua: Serai'ah, Jeremiah, Ezra,
2 Amari'ah, Malluch, Hattush,
3 Shecani'ah, Rehum, Mer'emoth,
4 Iddo, Gin'nethoi, Abi'jah,
5 Mi'jamin, Ma-adi'ah, Bilgah,
6 Shemai'ah, Joi'arib, Jedai'ah,
7 Sallu, Amok, Hilki'ah, Jedai'ah. These were the chiefs of the priests and of their brethren in the days of Jeshua.
8 And the Levites: Jeshua, Bin'nui, Kad'mi-el, Sherebi'ah, Judah, and Mattani'ah, who with his brethren was in charge of the songs of thanksgiving.
9 And Bakbuki'ah and Unno their brethren stood opposite them in the service.
10 And Jeshua was the father of Joi'akim, Joi'akim the father of Eli'ashib, Eli'ashib the father of Joi'ada,
11 Joi'ada the father of Jonathan, and Jonathan the father of Jad'du-a.
12 And in the days of Joi'akim were priests, heads of fathers' houses: of Serai'ah, Merai'ah; of Jeremiah, Hanani'ah;
13 of Ezra, Meshul'lam; of Amari'ah, Jehoha'nan;
14 of Mal'luchi, Jonathan; of Shebani'ah, Joseph;
15 of Harim, Adna; of Merai'oth, Hel'kai;
16 of Iddo, Zechari'ah; of Gin'nethon, Meshul'lam;
17 of Abi'jah, Zichri; of Mini'amin, of Moadi'ah, Pil'tai;
18 of Bilgah, Sham'mu-a; of Shemai'ah, Jehon'athan;
19 of Joi'arib, Matte'nai; of Jedai'ah, Uzzi;
20 of Sal'lai, Kal'lai; of Amok, Eber;
21 of Hilki'ah, Hashabi'ah; of Jedai'ah, Nethan'el.
22 As for the Levites, in the days of Eli'ashib, Joi'ada, Joha'nan, and Jad'du-a, there were recorded the heads of fathers' houses; also the priests until the reign of Darius the Persian.
23 The sons of Levi, heads of fathers' houses, were written in the Book of the Chronicles until the days of Joha'nan the son of Eli'ashib.
24 And the chiefs of the Levites: Hashabi'ah, Sherebi'ah, and Jeshua the son of Kad'mi-el, with their brethren over against them, to praise and to give thanks, according to the commandment of David the man of God, watch corresponding to watch.
25 Mattani'ah, Bakbuki'ah, Obadi'ah, Meshul'lam, Talmon, and Akkub were gatekeepers standing guard at the storehouses of the gates.
26 These were in the days of Joi'akim the son of Jeshua son of Jo'zadak, and in the days of Nehemi'ah the governor and of Ezra the priest the scribe.
27 And at the dedication of the wall of Jerusalem they sought the Levites in all their places, to bring them to Jerusalem to celebrate the dedication with gladness, with thanksgivings and with singing, with cymbals, harps, and lyres.
28 And the sons of the singers gathered together from the circuit round Jerusalem and from the villages of the Netoph'athites;
29 also from Beth-gilgal and from the region of Geba and Az'maveth; for the singers had built for themselves villages around Jerusalem.
30 And the priests and the Levites purified themselves; and they purified the people and the gates and the wall.
31 Then I brought up the princes of Judah upon the wall, and appointed two great companies which gave thanks and went in procession. One went to the right upon the wall to the Dung Gate;
32 and after them went Hoshai'ah and half of the princes of Judah,
33 and Azari'ah, Ezra, Meshul'lam,
34 Judah, Benjamin, Shemai'ah, and Jeremiah,
35 and certain of the priests' sons with trumpets: Zechari'ah the son of Jonathan, son of Shemai'ah, son of Mattani'ah, son of Micai'ah, son of Zaccur, son of Asaph;
36 and his kinsmen, Shemai'ah, Az'arel, Mil'alai, Gil'alai, Ma'ai, Nethan'el, Judah, and Hana'ni, with the musical instruments of David the man of God; and Ezra the scribe went before them.
37 At the Fountain Gate they went up straight before them by the stairs of the city of David, at the ascent of the wall, above the house of David, to the Water Gate on the east.
38 The other company of those who gave thanks went to the left, and I followed them with half of the people, upon the wall, above the Tower of the Ovens, to the Broad Wall,
39 and above the Gate of E'phraim, and by the Old Gate, and by the Fish Gate and the Tower of Hanan'el and the Tower of the Hundred, to the Sheep Gate; and they came to a halt at the Gate of the Guard.
40 So both companies of those who gave thanks stood in the house of God, and I and half of the officials with me;
41 and the priests Eli'akim, Ma-asei'ah, Mini'amin, Micai'ah, Eli-o-e'nai, Zechari'ah, and Hanani'ah, with trumpets;
42 and Ma-asei'ah, Shemai'ah, Elea'zar, Uzzi, Jehoha'nan, Malchi'jah, Elam, and Ezer. And the singers sang with Jezrahi'ah as their leader.
43 And they offered great sacrifices that day and rejoiced, for God had made them rejoice with great joy; the women and children also rejoiced. And the joy of Jerusalem was heard afar off.
44 On that day men were appointed over the chambers for the stores, the contributions, the first fruits, and the tithes, to gather into them the portions required by the law for the priests and for the Levites according to the fields of the towns; for Judah rejoiced over the priests and the Levites who ministered.
45 And they performed the service of their God and the service of purification, as did the singers and the gatekeepers, according to the command of David and his son Solomon.
46 For in the days of David and Asaph of old there was a chief of the singers, and there were songs of praise and thanksgiving to God.
47 And all Israel in the days of Zerub'babel and in the days of Nehemi'ah gave the daily portions for the singers and the gatekeepers; and they set apart that which was for the Levites; and the Levites set apart that which was for the sons of Aaron.

1 அன்றையதினம் ஜனங்கள் கேட்க மோசேயின் புஸ்தகத்தை வாசித்தார்கள்; அதிலே அம்மோனியரும் மோவாபியரும், இஸ்ரவேல் புத்திரருக்கு அப்பமும் தண்ணீரும் கொடுக்க எதிர்கொண்டுவராமல், அவர்களைச் சபிக்க அவர்களுக்கு விரோதமாய்ப் பிலேயாமைக் கூலிபொருந்திக்கொண்டபடியினால்,
2 அவர்கள் என்றைக்கும், அந்தச் சாபத்தை ஆசீர்வாதமாகத் திருப்பின எங்கள் தேவனுடைய சபைக்குட்படலாகாது என்று எழுதியிருக்கிறதாகக் காணப்பட்டது.
3 ஆகையால் அவர்கள் அந்தக் கட்டளையைக் கேட்டபோது, பல ஜாதியான ஜனங்களையெல்லாம் இஸ்ரவேலைவிட்டுப் பிரித்துவிட்டார்கள்.
4 இதற்குமுன்னே எங்கள் தேவனுடைய ஆலயத்தின் அறைகளை விசாரிக்க வைக்கப்பட்ட ஆசாரியனாகிய எலியாசிப் தொபியாவோடே சம்பந்தங்கலந்தவனாயிருந்து,
5 முற்காலத்தில் காணிக்கைகளும் சாம்பிராணியும், பணிமுட்டுகளும், லேவியருக்கும் பாடகருக்கும் வாசல்காவலருக்கும் கட்டளைபண்ணப்பட்ட தானியம் திராட்சரசம் எண்ணெய் என்பவைகளிலே தசமபாகமும், ஆசாரியரைச் சேருகிற படைப்பான காணிக்கைகளும் வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஒரு பெரிய அறையை அவனுக்கு ஆயத்தம்பண்ணியிருந்தான்.
6 இதெல்லாம் நடக்கும்போது நான் எருசலேமில் இல்லை; பாபிலோன் ராஜாவாகிய அர்தசஷ்டாவின் முப்பத்திரண்டாம் வருஷத்திலே நான் ராஜாவினிடத்திற்குப்போய், சில நாளுக்குப்பின்பு திரும்ப ராஜாவினிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு,
7 எருசலேமுக்கு வந்தேன்; அப்பொழுது எலியாசிப் தொபியாவுக்கு தேவனுடைய ஆலயத்துப் பிராகாரங்களில் ஒரு அறையை ஆயத்தம்பண்ணினதினால் செய்த பொல்லாப்பை அறிந்துகொண்டேன்.
8 அதினால் நான் மிகவும் மனமடிவாகி, தொபியாவின் வீட்டுத் தட்டுமுட்டுகளையெல்லாம் அந்த அறையிலிருந்து வெளியே எறிந்துவிட்டேன்.
9 பின்பு நான் அறைவீடுகளைச் சுத்திகரிக்கச்சொல்லி, தேவனுடைய ஆலயப்பணிமுட்டுகளையும் காணிக்கைகளையும் சாம்பிராணியையும் அங்கே திரும்பக்கொண்டுவந்து வைத்தேன்.
10 பின்னையும் லேவியருக்கு அவர்கள் பங்குகள் கொடுக்கப்படவில்லையென்பதையும், பணிவிடை செய்கிற லேவியரும் பாடகரும் அவரவர் தங்கள் வெளிநிலங்களுக்கு ஓடிப்போனார்கள் என்பதையும் நான் அறிந்துகொண்டேன்.
11 அப்பொழுது நான் தலைமையானவர்களோடே வழக்காடி, தேவனுடைய ஆலயம் கைவிடப்பட்டுப்போவானேன் என்று சொல்லி, அவர்களைச் சேர்த்து, அவரவர் நிலையில் அவர்களை வைத்தேன்.
12 அப்பொழுது யூதர் எல்லாரும் தானியம் திராட்சரசம் எண்ணெய் என்பவைகளில் தசமபாகத்தைப் பொக்கிஷ அறைகளில் கொண்டுவந்தார்கள்.
13 அப்பொழுது நான் ஆசாரியராகிய செலேமியாவையும் வேதபாரகனாகிய சாதோக்கையும் லேவியரில் பெதாயாவையும், இவர்களுக்குக் கைத்துணையாக மத்தனியாவின் குமாரன்சக்கூரின் மகனாகிய ஆனானையும் பொக்கிஷ அறைகளின்மேல் விசாரிப்புக்காரராக வைத்தேன்; அவர்கள் உண்மையுள்ளவர்களென்று எண்ணப்பட்டார்கள்; ஆகையால் தங்கள் சகோதரருக்குப் பங்கிடுகிற வேலை அவர்களுக்கு ஒப்புவிக்கப்பட்டது.
14 என் தேவனே, நான் என் தேவனுடைய ஆலயத்துக்காகவும் அதின் முறைமைகளுக்காகவும் செய்த நற்கிரியைகளைக் குலைத்துப்போடாமல், இந்தக் காரியத்திலே என்னை நினைத்தருளும்.
15 அந்த நாட்களில் நான் யூதாவிலே ஓய்வுநாளில் சிலர் ஆலைகளை மிதிக்கிறதையும், சிலர் ஆலைகளை தானியப் பொதிகளைக் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு வருகிறதையும் திராட்சரசம், திராட்சப்பழம், அத்திப்பழம் முதலானவைகளின் பற்பல சுமைகளை ஓய்வுநாளிலே எருசலேமுக்குக் கொண்டுவருகிறதையும் கண்டு, அவர்கள் தின்பண்டம் விற்கிற நாளைப்பற்றி அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டேன்.
16 மீனையும் சகலவித சரக்குகளையும் கொண்டுவந்து, ஓய்வுநாளிலே யூதா புத்திரருக்கும் எருசலேமில் இருக்கிறவர்களுக்கும் விற்கிற சில தீரியரும் உள்ளே குடியிருந்தார்கள்.
17 ஆகையால் நான் யூதாவின் பெரியவர்களைக் கடிந்துகொண்டு: நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிற இந்தப் பொல்லாத செய்கையென்ன?
18 உங்கள் பிதாக்கள் இப்படிச்செய்ததினாலல்லவா, நமது தேவன் நம்மேலும் இந்தநகரத்தின்மேலும் இந்தத்தீங்கையெல்லாம் வரப்பண்ணினார்; நீங்களோவென்றால் ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறதினால் இஸ்ரவேலின்மேலிருக்கிற உக்கிரத்தை அதிகரிக்கப்பண்ணுகிறீர்கள் என்று அவர்களுக்குச் சொன்னேன்.
19 ஆகையால் ஓய்வுநாளுக்குமுன்னே எருசலேமின் பட்டணவாசலில், மாலைமயங்கும்போது, கதவுகளைப்பூட்டவும், ஓய்வுநாள் முடியுமட்டும் அவைகளைத் திறவாதிருக்கவும் வேண்டுமென்று கட்டளையிட்டு, ஓய்வுநாளிலே ஒரு சுமையும் உள்ளே வராதபடிக்கு வாசலண்டையிலே என் வேலைக்காரரில் சிலரை நிறுத்தினேன்.
20 அதினால் வர்த்தகரும், சகலவித சரக்குகளை விற்கிறவர்களும், இரண்டொருதரம் எருசலேமுக்குப் புறம்பே இராத்தங்கினார்கள்.
21 அப்பொழுது நான் அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொன்டு, நீங்கள் அலங்கத்தண்டையிலே இராத்தங்குகிறது என்ன? நீங்கள் மறுபடியும் இப்படிச் செய்தால், உங்கள்மேல் கைபோடுவேன் என்று அவர்களோடே சொன்னேன்; அதுமுதல் அவர்கள் ஓய்வுநாளில் வராதிருந்தார்கள்.
22 ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படிக்கு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு வாசல்களைக் காக்க வாருங்களென்று லேவியருக்கும் சொன்னேன்என் தேவனே, இதைக்குறித்து நீர் என்னை நினைத்தருளி, உம்முடைய மிகுந்த கிருபையின்படி எனக்கு இரங்குவீராக.
23 அஸ்தோத், அம்மோன், மோவாப் ஜாதிகளான ஸ்திரீகளைச் சேர்த்துக்கொண்ட சில யூதரையும் அந்த நாட்களில் கண்டேன்.
24 அவர்கள் பிள்ளைகள் பேசின பேச்சில் பாதி அஸ்தோத் பாஷையாயிருந்தது; இவர்கள் அந்தந்த ஜாதிகளின் பாஷையைத் தவிர யூதபாஷையைத் திட்டமாய்ப் பேச அறியாதிருந்தார்கள்.
25 அவர்களையும் நான் கடிந்துகொண்டு அவர்கள்மேல் வரும் சாபத்தைக் கூறி அவர்களில் சிலரை அடித்து, மயிரைப் பிய்த்து: நீங்கள் உங்கள் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளில் ஒருவரையும் உங்கள் குமாரருக்காகிலும் உங்களுக்காகிலும் கொள்ளாமலும் இருக்கவேண்டுமென்று அவர்களை தேவன்மேல் ஆணையிடப்பண்ணி, நான் அவர்களை நோக்கி:
26 இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் இதினாலே பாவஞ்செய்தானல்லவா? அவனைப்போன்ற ராஜா அநேகம் ஜாதிகளுக்குள்ளே உண்டாயிருந்ததில்லை; அவன் தன் தேவனாலே சிநேகிக்கப்பட்டவனாயிருந்தான்; தேவன் அவனை இஸ்ரவேலனைத்தின்மேலும் ராஜாவாக வைத்தார்; அப்பபடிப்பட்டவனையும் மறுஜாதியான ஸ்திரீகள் பாவஞ்செய்யப்பண்ணினார்களே.
27 நீங்கள் மறுஜாதியான ஸ்திரீகளைச் சேர்த்துக்கொள்ளுகிறதினால், நம்முடைய தேவனுக்குத் துரோகிகளாகி, இந்தப் பெரிய பொல்லாப்பையெல்லாம் செய்யும்படி, உங்களுக்கு இடங்கொடுப்போமோ என்றேன்.
28 யொயதாவின் புத்திரரிலே பிரதான ஆசாரியனாகிய எலியாசிபினுடைய குமாரன் ஒருவன் ஓரோனியனான சன்பல்லாத்துக்கு மருமகனானான்; ஆகையால் அவனை என்னைவிட்டுத் துரத்தினேன்.
29 என் தேவனே, அவர்கள் ஆசாரிய ஊழியத்தையும், ஆசாரிய ஊழியத்துக்கும் லேவியருக்கும் இருக்கிற உடன்படிக்கையையும் தீட்டுப்படுத்தினார்களென்று அவர்களை நினைத்துக்கொள்ளும்.
30 இப்படியே நான் மறுஜாதியாரையெல்லாம் நீக்கி, ஆசாரியரையும் லேவியரையும் சுத்திகரித்து, அவரவரை அவர்கள் வேலையின் முறைகளில் நிறுத்தி,
31 குறிக்கப்பட்ட காலங்களில் செலுத்தப்படவேண்டிய விறகுகாணிக்கையையும் முதற்பலன்களையுங்குறித்துத் திட்டம்பண்ணினேன்என் தேவனே எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்.


1 On that day they read from the book of Moses in the hearing of the people; and in it was found written that no Ammonite or Moabite should ever enter the assembly of God;
2 for they did not meet the children of Israel with bread and water, but hired Balaam against them to curse them -- yet our God turned the curse into a blessing.
3 When the people heard the law, they separated from Israel all those of foreign descent.
4 Now before this, Eli'ashib the priest, who was appointed over the chambers of the house of our God, and who was connected with Tobi'ah,
5 prepared for Tobi'ah a large chamber where they had previously put the cereal offering, the frankincense, the vessels, and the tithes of grain, wine, and oil, which were given by commandment to the Levites, singers, and gatekeepers, and the contributions for the priests.
6 While this was taking place I was not in Jerusalem, for in the thirty-second year of Ar-ta-xerx'es king of Babylon I went to the king. And after some time I asked leave of the king
7 and came to Jerusalem, and I then discovered the evil that Eli'ashib had done for Tobi'ah, preparing for him a chamber in the courts of the house of God.
8 And I was very angry, and I threw all the household furniture of Tobi'ah out of the chamber.
9 Then I gave orders and they cleansed the chambers; and I brought back thither the vessels of the house of God, with the cereal offering and the frankincense.
10 I also found out that the portions of the Levites had not been given to them; so that the Levites and the singers, who did the work, had fled each to his field.
11 So I remonstrated with the officials and said, "Why is the house of God forsaken?" And I gathered them together and set them in their stations.
12 Then all Judah brought the tithe of the grain, wine, and oil into the storehouses.
13 And I appointed as treasurers over the storehouses Shelemi'ah the priest, Zadok the scribe, and Pedai'ah of the Levites, and as their assistant Hanan the son of Zaccur, son of Mattani'ah, for they were counted faithful; and their duty was to distribute to their brethren.
14 Remember me, O my God, concerning this, and wipe not out my good deeds that I have done for the house of my God and for his service.
15 In those days I saw in Judah men treading wine presses on the sabbath, and bringing in heaps of grain and loading them on asses; and also wine, grapes, figs, and all kinds of burdens, which they brought into Jerusalem on the sabbath day; and I warned them on the day when they sold food.
16 Men of Tyre also, who lived in the city, brought in fish and all kinds of wares and sold them on the sabbath to the people of Judah, and in Jerusalem.
17 Then I remonstrated with the nobles of Judah and said to them, "What is this evil thing which you are doing, profaning the sabbath day?
18 Did not your fathers act in this way, and did not our God bring all this evil on us and on this city? Yet you bring more wrath upon Israel by profaning the sabbath."
19 When it began to be dark at the gates of Jerusalem before the sabbath, I commanded that the doors should be shut and gave orders that they should not be opened until after the sabbath. And I set some of my servants over the gates, that no burden might be brought in on the sabbath day.
20 Then the merchants and sellers of all kinds of wares lodged outside Jerusalem once or twice.
21 But I warned them and said to them, "Why do you lodge before the wall? If you do so again I will lay hands on you." From that time on they did not come on the sabbath.
22 And I commanded the Levites that they should purify themselves and come and guard the gates, to keep the sabbath day holy. Remember this also in my favor, O my God, and spare me according to the greatness of thy steadfast love.
23 In those days also I saw the Jews who had married women of Ashdod, Ammon, and Moab;
24 and half of their children spoke the language of Ashdod, and they could not speak the language of Judah, but the language of each people.
25 And I contended with them and cursed them and beat some of them and pulled out their hair; and I made them take oath in the name of God, saying, "You shall not give your daughters to their sons, or take their daughters for your sons or for yourselves.
26 Did not Solomon king of Israel sin on account of such women? Among the many nations there was no king like him, and he was beloved by his God, and God made him king over all Israel; nevertheless foreign women made even him to sin.
27 Shall we then listen to you and do all this great evil and act treacherously against our God by marrying foreign women?"
28 And one of the sons of Jehoi'ada, the son of Eli'ashib the high priest, was the son-in-law of Sanbal'lat the Hor'onite; therefore I chased him from me.
29 Remember them, O my God, because they have defiled the priesthood and the covenant of the priesthood and the Levites.
30 Thus I cleansed them from everything foreign, and I established the duties of the priests and Levites, each in his work;
31 and I provided for the wood offering, at appointed times, and for the first fruits. Remember me, O my God, for good.