ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.

~1 ஆதியாகமம் 1:1

1 துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,
2 கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
3 அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.
4 துன்மார்க்கரோ அப்படியிராமல் காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.
5 ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.
6 கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்.


1 Blessed is the man who walks not in the counsel of the wicked, nor stands in the way of sinners, nor sits in the seat of scoffers;
2 but his delight is in the law of the LORD, and on his law he meditates day and night.
3 He is like a tree planted by streams of water, that yields its fruit in its season, and its leaf does not wither. In all that he does, he prospers.
4 The wicked are not so, but are like chaff which the wind drives away.
5 Therefore the wicked will not stand in the judgment, nor sinners in the congregation of the righteous;
6 for the LORD knows the way of the righteous, but the way of the wicked will perish.

1 ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்?
2 கர்த்தருக்கு விரோதமாகவும் அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி:
3 அவர்கள் கட்டுகளை அறுத்து அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம் என்கிறார்கள்.
4 பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.
5 அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களோடே பேசி, தமது உக்கிரத்திலே அவர்களைக் கலங்கப்பண்ணுவார்.
6 நான் என்னுடைய பரிசுத்தபர்வதமாகிய சீயோன்மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன் என்றார்.
7 தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;
8 என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;
9 இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார்.
10 இப்போதும் ராஜாக்களே, உணர்வடையுங்கள் பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள்.
11 பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.
12 குமாரன் கோபங்கொள்ளாமலும் நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.


1 Why do the nations conspire, and the peoples plot in vain?
2 The kings of the earth set themselves, and the rulers take counsel together, against the LORD and his anointed, saying,
3 "Let us burst their bonds asunder, and cast their cords from us."
4 He who sits in the heavens laughs; the LORD has them in derision.
5 Then he will speak to them in his wrath, and terrify them in his fury, saying,
6 "I have set my king on Zion, my holy hill."
7 I will tell of the decree of the LORD: He said to me, "You are my son, today I have begotten you.
8 Ask of me, and I will make the nations your heritage, and the ends of the earth your possession.
9 You shall break them with a rod of iron, and dash them in pieces like a potter's vessel."
10 Now therefore, O kings, be wise; be warned, O rulers of the earth.
11 Serve the LORD with fear, with trembling
12 kiss his feet, lest he be angry, and you perish in the way; for his wrath is quickly kindled. Blessed are all who take refuge in him.

1 கர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர்.
2 தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லையென்று, என் ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள். (சேலா.)
3 ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும் என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.
4 நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார். (சேலா.)
5 நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்.
6 எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம்பேருக்கும் நான் பயப்படேன்.
7 கர்த்தாவே எழுந்தருளும்; என் தேவனே, என்னை இரட்சியும். நீர் என் பகைஞர் எல்லாரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கருடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர்.
8 இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக. (சேலா.)


0 A Psalm of David, when he fled from Absalom his son.
1 O LORD, how many are my foes! Many are rising against me;
2 many are saying of me, there is no help for him in God. [Selah]
3 But thou, O LORD, art a shield about me, my glory, and the lifter of my head.
4 I cry aloud to the LORD, and he answers me from his holy hill. [Selah]
5 I lie down and sleep; I wake again, for the LORD sustains me.
6 I am not afraid of ten thousands of people who have set themselves against me round about.
7 Arise, O LORD! Deliver me, O my God! For thou dost smite all my enemies on the cheek, thou dost break the teeth of the wicked.
8 Deliverance belongs to the LORD; thy blessing be upon thy people! [Selah]

1 என் நீதியின் தேவனே, நான் கூப்பிடுகையில் எனக்குச் செவிகொடும்; நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்; எனக்கு இரங்கி என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்.
2 மனுபுத்திரரே, எதுவரைக்கும் என் மகிமையை அவமானப்படுத்தி, வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள். (சேலா.)
3 பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்; நான் கர்த்தரை நோக்கிக்கூப்பிடுகையில் அவர் கேட்பார்.
4 நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா.)
5 நீதியின் பலிகளைச் செலுத்தி, கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருங்கள்.
6 எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்.
7 அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிறகாலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர்.
8 சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.


0 To the choirmaster: with stringed instruments. A Psalm of David.
1 Answer me when I call, O God of my right! Thou hast given me room when I was in distress. Be gracious to me, and hear my prayer.
2 O men, how long shall my honor suffer shame? How long will you love vain words, and seek after lies? [Selah]
3 But know that the LORD has set apart the godly for himself; the LORD hears when I call to him.
4 Be angry, but sin not; commune with your own hearts on your beds, and be silent. [Selah]
5 Offer right sacrifices, and put your trust in the LORD.
6 There are many who say, "O that we might see some good! Lift up the light of thy countenance upon us, O LORD!"
7 Thou hast put more joy in my heart than they have when their grain and wine abound.
8 In peace I will both lie down and sleep; for thou alone, O LORD, makest me dwell in safety.

1 கர்த்தாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும். என் தியானத்தைக் கவனியும்.
2 நான் உம்மிடத்தில் விண்ணப்பம்பண்ணுவேன்; என் ராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்.
3 கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்.
4 நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல, தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை.
5 வீம்புக்காரர் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்; அக்கிரமக்காரர் யாவரையும் வெறுக்கிறீர்.
6 பொய் பேசுகிறவர்களை அழிப்பீர், இரத்தப்பிரியனையும் சூதுள்ள மனுஷனையும் கர்த்தர் அருவருக்கிறார்.
7 நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்துக்குள் பிரவேசித்து, உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன்.
8 கர்த்தாவே, என் சத்துருக்களினிமித்தம் என்னை உம்முடைய நீதியிலே நடத்தி, எனக்குமுன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும்.
9 அவர்கள் வாயில் உண்மை இல்லை, அவர்கள் உள்ளம் கேடுபாடுள்ளது; அவர்கள் தொண்டை திறக்கப்பட்டபிரேதக்குழி; தங்கள் நாவினால் இச்சகம் பேசுகிறார்கள்.
10 தேவனே அவர்களைக் குற்றவாளிகளாகத் தீரும்; அவர்கள் தங்கள் ஆலோசனைகளாலேயே விழும்படிசெய்யும்; அவர்கள் துரோகங்களினுடைய திரட்சியினிமித்தம் அவர்களைத் தள்ளிவிடும்; உமக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினார்களே.
11 உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக.
12 கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்வீர்.


0 To the choirmaster: for the flutes. A Psalm of David.
1 Give ear to my words, O LORD; give heed to my groaning.
2 Hearken to the sound of my cry, my King and my God, for to thee do I pray.
3 O LORD, in the morning thou dost hear my voice; in the morning I prepare a sacrifice for thee, and watch.
4 For thou art not a God who delights in wickedness; evil may not sojourn with thee.
5 The boastful may not stand before thy eyes; thou hatest all evildoers.
6 Thou destroyest those who speak lies; the LORD abhors bloodthirsty and deceitful men.
7 But I through the abundance of thy steadfast love will enter thy house, I will worship toward thy holy temple in the fear of thee.
8 Lead me, O LORD, in thy righteousness because of my enemies; make thy way straight before me.
9 For there is no truth in their mouth; their heart is destruction, their throat is an open sepulchre, they flatter with their tongue.
10 Make them bear their guilt, O God; let them fall by their own counsels; because of their many transgressions cast them out, for they have rebelled against thee.
11 But let all who take refuge in thee rejoice, let them ever sing for joy; and do thou defend them, that those who love thy name may exult in thee.
12 For thou dost bless the righteous, O LORD; thou dost cover him with favor as with a shield.

1 கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும்.
2 என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே, நான் பெலனற்றுப்போனேன்; என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என் எலும்புகள் நடுங்குகிறது.
3 என் ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்.
4 திரும்பும் கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும்; உம்முடைய கிருபையினிமித்தம் என்னை இரட்சியும்.
5 மரணத்தில் உம்மை நினைவுகூர்வதில்லை. பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்?
6 என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன்.
7 துயரத்தினால் என் கண்கள் குழிவிழுந்துபோயிற்று; என் சத்துருக்கள் அனைவர்நிமித்தமும் மங்கிப்போயிற்று.
8 அக்கிரமக்காரரே, நீங்கள் எல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார்.
9 கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்; கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.
10 என் பகைஞர் எல்லாரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்; அவர்கள் பின்னாகத் திரும்பிச் சடிதியிலே வெட்கப்படுவார்கள்.


0 To the choirmaster: with stringed instruments; according to The Sheminith. A Psalm of David.
1 O LORD, rebuke me not in thy anger, nor chasten me in thy wrath.
2 Be gracious to me, O LORD, for I am languishing; O LORD, heal me, for my bones are troubled.
3 My soul also is sorely troubled. But thou, O LORD -- how long?
4 Turn, O LORD, save my life; deliver me for the sake of thy steadfast love.
5 For in death there is no remembrance of thee; in Sheol who can give thee praise?
6 I am weary with my moaning; every night I flood my bed with tears; I drench my couch with my weeping.
7 My eye wastes away because of grief, it grows weak because of all my foes.
8 Depart from me, all you workers of evil; for the LORD has heard the sound of my weeping.
9 The LORD has heard my supplication; the LORD accepts my prayer.
10 All my enemies shall be ashamed and sorely troubled; they shall turn back, and be put to shame in a moment.

1 என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லாருக்கும் என்னை விலக்கி இரட்சியும்.
2 சத்துரு சிங்கம்போல் என் ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய், விடுவிக்கிறவன் இல்லாமையால். அதைப் பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும்.
3 என் தேவனாகிய கர்த்தாவே, நான் இதைச் செய்ததும், என் கைகளில் நியாயக்கேடிருக்கிறதும்,
4 என்னோடே சமாதானமாயிருந்தவனுக்கு நான் தீமைசெய்ததும், காரணமில்லாமல் எனக்குச் சத்துருவானவனை நான் கொள்ளையிட்டதும் உண்டானால்,
5 பகைஞன் என் ஆத்துமாவைத் தொடர்ந்துபிடித்து, என் பிராணனைத் தரையிலே தள்ளி மிதித்து, என் மகிமையைத் தூளிலே தாழ்த்தக்கடவன்.(சேலா.)
6 கர்த்தாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து, என் சத்துருக்களுடைய மூர்க்கங்களினிமித்தம் உம்மை உயர்த்தி, எனக்காக விழித்துக்கொள்ளும்; நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே.
7 ஜனக்கூட்டம் உம்மைச் சூழ்ந்துகொள்ளும்; அவர்களுக்காகத் திரும்பவும் உன்னதத்திற்கு எழுந்தருளும்.
8 கர்த்தர் ஜனங்களுக்கு நியாயஞ்செய்வார்; கர்த்தாவே, என் நீதியின்படியும் என்னிலுள்ள உண்மையின்படியும் எனக்கு நியாயஞ்செய்யும்.
9 துன்மார்க்கனுடைய பொல்லாங்கை ஒழியப்பண்ணும்; நீதிமானை ஸ்திரப்படுத்துவீராக; நீதியுள்ளவராயிருக்கிற தேவரீர் இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறவர்.
10 செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் என்கேடகம் இருக்கிறது.
11 தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்.
12 அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கருக்காக்குவார்; அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.
13 அவனுக்கு மரணாயுதங்களை ஆயத்தம்பண்ணினார்; தம்முடைய அம்புகளை அக்கினி அம்புகளாக்கினார்.
14 இதோ, அவன் அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப்பெறுகிறான்.
15 குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியில் தானே விழுந்தான்.
16 அவன் தீவினை அவன் சிரசின்மேல் திரும்பும், அவன் கொடுமை அவன் உச்சந்தலையின்மேல் இறங்கும்.
17 நான் கர்த்தரை அவருடைய நீதியின்படி துதித்து, உன்னதமான கர்த்தருடைய நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவேன்.


0 A Shiggaion of David, which he sang to the LORD concerning Cush a Benjaminite.
1 O LORD my God, in thee do I take refuge; save me from all my pursuers, and deliver me,
2 lest like a lion they rend me, dragging me away, with none to rescue.
3 O LORD my God, if I have done this, if there is wrong in my hands,
4 if I have requited my friend with evil or plundered my enemy without cause,
5 let the enemy pursue me and overtake me, and let him trample my life to the ground, and lay my soul in the dust. [Selah]
6 Arise, O LORD, in thy anger, lift thyself up against the fury of my enemies; awake, O my God; thou hast appointed a judgment.
7 Let the assembly of the peoples be gathered about thee; and over it take thy seat on high.
8 The LORD judges the peoples; judge me, O LORD, according to my righteousness and according to the integrity that is in me.
9 O let the evil of the wicked come to an end, but establish thou the righteous, thou who triest the minds and hearts, thou righteous God.
10 My shield is with God, who saves the upright in heart.
11 God is a righteous judge, and a God who has indignation every day.
12 If a man does not repent, God will whet his sword; he has bent and strung his bow;
13 he has prepared his deadly weapons, making his arrows fiery shafts.
14 Behold, the wicked man conceives evil, and is pregnant with mischief, and brings forth lies.
15 He makes a pit, digging it out, and falls into the hole which he has made.
16 His mischief returns upon his own head, and on his own pate his violence descends.
17 I will give to the LORD the thanks due to his righteousness, and I will sing praise to the name of the LORD, the Most High.

1 எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது! உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர்.
2 பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்.
3 உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும், நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,
4 மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.
5 நீர் அவனை தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர்.
6 உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகைதந்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.
7 ஆடுமாடுகளெல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும்,
8 ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும், கடல்களில் சஞ்சரிக்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.
9 எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது.


0 To the choirmaster: according to The Gittith. A Psalm of David.
1 O LORD, our Lord, how majestic is thy name in all the earth! Thou whose glory above the heavens is chanted
2 by the mouth of babes and infants, thou hast founded a bulwark because of thy foes, to still the enemy and the avenger.
3 When I look at thy heavens, the work of thy fingers, the moon and the stars which thou hast established;
4 what is man that thou art mindful of him, and the son of man that thou dost care for him?
5 Yet thou hast made him little less than God, and dost crown him with glory and honor.
6 Thou hast given him dominion over the works of thy hands; thou hast put all things under his feet,
7 all sheep and oxen, and also the beasts of the field,
8 the birds of the air, and the fish of the sea, whatever passes along the paths of the sea.
9 O LORD, our Lord, how majestic is thy name in all the earth!

1 கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? ஆபத்து நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்?
2 துன்மார்க்கன் தன் பெருமையினால் சிறுமைப்பட்டவனைக் கடூரமாய்த் துன்பப்படுத்துகிறான்; அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள்.
3 துன்மார்க்கன் தன் உள்ளம் இச்சித்ததைப் பெற்றதினால் பெருமைபாராட்டி, பொருளை அபகரித்துத் தன்னைத்தான் போற்றி, கர்த்தரை அசட்டைபண்ணுகிறான்.
4 துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லையென்பதே.
5 அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் அவன் பார்வைக்கு எட்டாமல் மிகவும் உயரமாயிருக்கிறது; தன் எதிராளிகளெல்லார்மேலும் சீறுகிறான்.
6 நான் அசைக்கப்படுவதில்லை, தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு என்னை அணுகுவதில்லையென்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.
7 அவன் வாய் சபிப்பினாலும் கபடத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது; அவன் நாவின்கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு.
8 கிராமங்களின் ஒளிப்பிடங்களிலே பதிவிருந்து, மறைவிடங்களிலே குற்றமற்றவனைக் கொல்லுகிறான்; திக்கற்றவர்களைப் பிடிக்க அவன் கண்கள் நோக்கிக்கொண்டிருக்கிறது.
9 தன் கெபியிலிருக்கிற சிங்கத்தைப்போல மறைவில் பதிவிருக்கிறான்; ஏழையைப் பிடிக்கப் பதிவிருந்து, ஏழையைத் தன் வலைக்குள் இழுத்துப் பிடித்துக்கொள்ளுகிறான்.
10 திக்கற்றவர்கள் தன் பலவான்கள் கையில் விழும்படி அவன் பதுங்கிக்கிடக்கிறான்.
11 தேவன் அதை மறந்தார் என்றும், அவர் தம்முடைய முகத்தை மறைத்து ஒருக்காலும் அதைக் காணமாட்டார் என்றும், தன் இருதயத்திலே சொல்லிக்கொள்ளுகிறான்.
12 கர்த்தாவே, எழுந்தருளும்; தேவனே உம்முடைய கையை உயர்த்தும்; ஏழைகளை மறவாதேயும்.
13 துன்மார்க்கன் தேவனை அசட்டைபண்ணி: நீர் கேட்டு விசாரிப்பதில்லை என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்வானேன்.
14 அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும் குரோதத்தையும் கவனித்திருக்கிறீரே; நீர் பதிலளிப்பீர்; ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே.
15 துன்மார்க்கனும் பொல்லாதவனுமாயிருக்கிறவனுடைய புயத்தை முறித்துவிடும்; அவனுடைய ஆகாமியம் காணாமற்போகுமட்டும் அதைத் தேடி விசாரியும்.
16 கர்த்தர் சதாகாலங்களுக்கும் ராஜாவாயிருக்கிறார், புறஜாதியார் அவருடைய தேசத்திலிருந்து அழிந்துபோவார்கள்.
17 கர்த்தாவே, சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்; அவர்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவீர்.
18 மண்ணான மனுஷன் இனிப் பலவந்தஞ்செய்யத் தொடராதபடிக்கு, தேவரீர் திக்கற்ற பிள்ளைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதிசெய்ய உம்முடைய செவிகளைச் சாய்த்துக்கேட்டருளுவீர்.


0 To the choirmaster: according to Muth-labben. A Psalm of David.
1 I will give thanks to the LORD with my whole heart; I will tell of all thy wonderful deeds.
2 I will be glad and exult in thee, I will sing praise to thy name, O Most High.
3 When my enemies turned back, they stumbled and perished before thee.
4 For thou hast maintained my just cause; thou hast sat on the throne giving righteous judgment.
5 Thou hast rebuked the nations, thou hast destroyed the wicked; thou hast blotted out their name for ever and ever.
6 The enemy have vanished in everlasting ruins; their cities thou hast rooted out; the very memory of them has perished.
7 But the LORD sits enthroned for ever, he has established his throne for judgment;
8 and he judges the world with righteousness, he judges the peoples with equity.
9 The LORD is a stronghold for the oppressed, a stronghold in times of trouble.
10 And those who know thy name put their trust in thee, for thou, O LORD, hast not forsaken those who seek thee.
11 Sing praises to the LORD, who dwells in Zion! Tell among the peoples his deeds!
12 For he who avenges blood is mindful of them; he does not forget the cry of the afflicted.
13 Be gracious to me, O LORD! Behold what I suffer from those who hate me, O thou who liftest me up from the gates of death,
14 that I may recount all thy praises, that in the gates of the daughter of Zion I may rejoice in thy deliverance.
15 The nations have sunk in the pit which they made; in the net which they hid has their own foot been caught.
16 The LORD has made himself known, he has executed judgment; the wicked are snared in the work of their own hands. [Higgaion. Selah]
17 The wicked shall depart to Sheol, all the nations that forget God.
18 For the needy shall not always be forgotten, and the hope of the poor shall not perish for ever.
19 Arise, O LORD! Let not man prevail; let the nations be judged before thee!
20 Put them in fear, O LORD! Let the nations know that they are but men! [Selah]

1 கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? ஆபத்து நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்?
2 துன்மார்க்கன் தன் பெருமையினால் சிறுமைப்பட்டவனைக் கடூரமாய்த் துன்பப்படுத்துகிறான்; அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள்.
3 துன்மார்க்கன் தன் உள்ளம் இச்சித்ததைப் பெற்றதினால் பெருமைபாராட்டி, பொருளை அபகரித்துத் தன்னைத்தான் போற்றி, கர்த்தரை அசட்டைபண்ணுகிறான்.
4 துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லையென்பதே.
5 அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் அவன் பார்வைக்கு எட்டாமல் மிகவும் உயரமாயிருக்கிறது; தன் எதிராளிகளெல்லார்மேலும் சீறுகிறான்.
6 நான் அசைக்கப்படுவதில்லை, தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு என்னை அணுகுவதில்லையென்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.
7 அவன் வாய் சபிப்பினாலும் கபடத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது; அவன் நாவின்கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு.
8 கிராமங்களின் ஒளிப்பிடங்களிலே பதிவிருந்து, மறைவிடங்களிலே குற்றமற்றவனைக் கொல்லுகிறான்; திக்கற்றவர்களைப் பிடிக்க அவன் கண்கள் நோக்கிக்கொண்டிருக்கிறது.
9 தன் கெபியிலிருக்கிற சிங்கத்தைப்போல மறைவில் பதிவிருக்கிறான்; ஏழையைப் பிடிக்கப் பதிவிருந்து, ஏழையைத் தன் வலைக்குள் இழுத்துப் பிடித்துக்கொள்ளுகிறான்.
10 திக்கற்றவர்கள் தன் பலவான்கள் கையில் விழும்படி அவன் பதுங்கிக்கிடக்கிறான்.
11 தேவன் அதை மறந்தார் என்றும், அவர் தம்முடைய முகத்தை மறைத்து ஒருக்காலும் அதைக் காணமாட்டார் என்றும், தன் இருதயத்திலே சொல்லிக்கொள்ளுகிறான்.
12 கர்த்தாவே, எழுந்தருளும்; தேவனே உம்முடைய கையை உயர்த்தும்; ஏழைகளை மறவாதேயும்.
13 துன்மார்க்கன் தேவனை அசட்டைபண்ணி: நீர் கேட்டு விசாரிப்பதில்லை என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்வானேன்.
14 அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும் குரோதத்தையும் கவனித்திருக்கிறீரே; நீர் பதிலளிப்பீர்; ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே.
15 துன்மார்க்கனும் பொல்லாதவனுமாயிருக்கிறவனுடைய புயத்தை முறித்துவிடும்; அவனுடைய ஆகாமியம் காணாமற்போகுமட்டும் அதைத் தேடி விசாரியும்.
16 கர்த்தர் சதாகாலங்களுக்கும் ராஜாவாயிருக்கிறார், புறஜாதியார் அவருடைய தேசத்திலிருந்து அழிந்துபோவார்கள்.
17 கர்த்தாவே, சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்; அவர்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவீர்.
18 மண்ணான மனுஷன் இனிப் பலவந்தஞ்செய்யத் தொடராதபடிக்கு, தேவரீர் திக்கற்ற பிள்ளைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதிசெய்ய உம்முடைய செவிகளைச் சாய்த்துக்கேட்டருளுவீர்.


1 Why dost thou stand afar off, O LORD? Why dost thou hide thyself in times of trouble?
2 In arrogance the wicked hotly pursue the poor; let them be caught in the schemes which they have devised.
3 For the wicked boasts of the desires of his heart, and the man greedy for gain curses and renounces the LORD.
4 In the pride of his countenance the wicked does not seek him; all his thoughts are, "There is no God."
5 His ways prosper at all times; thy judgments are on high, out of his sight; as for all his foes, he puffs at them.
6 He thinks in his heart, "I shall not be moved; throughout all generations I shall not meet adversity."
7 His mouth is filled with cursing and deceit and oppression; under his tongue are mischief and iniquity.
8 He sits in ambush in the villages; in hiding places he murders the innocent. His eyes stealthily watch for the hapless,
9 he lurks in secret like a lion in his covert; he lurks that he may seize the poor, he seizes the poor when he draws him into his net.
10 The hapless is crushed, sinks down, and falls by his might.
11 He thinks in his heart, "God has forgotten, he has hidden his face, he will never see it."
12 Arise, O LORD; O God, lift up thy hand; forget not the afflicted.
13 Why does the wicked renounce God, and say in his heart, "Thou wilt not call to account"?
14 Thou dost see; yea, thou dost note trouble and vexation, that thou mayest take it into thy hands; the hapless commits himself to thee; thou hast been the helper of the fatherless.
15 Break thou the arm of the wicked and evildoer; seek out his wickedness till thou find none.
16 The LORD is king for ever and ever; the nations shall perish from his land.
17 O LORD, thou wilt hear the desire of the meek; thou wilt strengthen their heart, thou wilt incline thy ear
18 to do justice to the fatherless and the oppressed, so that man who is of the earth may strike terror no more.

1 நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன்; பின்னை ஏன் நீங்கள் என் ஆத்துமாவை நோக்கி: பட்சியைப்போல உன் மலைக்குப் பறந்துபோ என்று சொல்லுகிறீர்கள்.
2 இதோ துன்மார்க்கர் வில்லை வளைத்து, செம்மையான இருதயத்தார்மேல் அந்தகாரத்தில் எய்யும்படி தங்கள் அம்புகளை நாணிலே தொடுக்கிறார்கள்.
3 அஸ்திபாரங்களும் நிர்மூலமாகிறதே, நீதிமான் என்னசெய்வான்?
4 கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; கர்த்தருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது, அவருடைய கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கிறது; அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகிறது.
5 கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது.
6 துன்மார்க்கர்மேல் கண்ணிகளை வருஷிக்கப்பண்ணுவார்: அக்கினியும் கந்தகமும் கடுங்கோடைக் கொந்தளிப்பும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு.
7 கர்த்தர் நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்; அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது.


0 To the choirmaster. Of David.
1 In the LORD I take refuge; how can you say to me, "Flee like a bird to the mountains;
2 for lo, the wicked bend the bow, they have fitted their arrow to the string, to shoot in the dark at the upright in heart;
3 if the foundations are destroyed, what can the righteous do"?
4 The LORD is in his holy temple, the LORD's throne is in heaven; his eyes behold, his eyelids test, the children of men.
5 The LORD tests the righteous and the wicked, and his soul hates him that loves violence.
6 On the wicked he will rain coals of fire and brimstone; a scorching wind shall be the portion of their cup.
7 For the LORD is righteous, he loves righteous deeds; the upright shall behold his face.

1 இரட்சியும் கர்த்தாவே, பக்தியுள்ளவன் அற்றுப்போகிறான்; உண்மையுள்ளவர்கள் மனுபுத்திரரில் குறைந்திருக்கிறார்கள்.
2 அவரவர் தங்கள் தோழரோடே பொய்பேசுகிறார்கள்; இச்சக உதடுகளால் இருமனதாய்ப் பேசுகிறார்கள்.
3 இச்சகம்பேசுகிற எல்லா உதடுகளையும், பெருமைகளைப் பேசுகிற நாவையும் கர்த்தர் அறுத்துப்போடுவார்.
4 அவர்கள்: எங்கள் நாவுகளால் மேற்கொள்ளுவோம், எங்கள் உதடுகள் எங்களுடையது; யார் எங்களுக்கு ஆண்டவன் என்று சொல்லுகிறார்கள்.
5 ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, அவன்மேல் சீறுகிறவர்களுக்கு அவனைக் காத்துச் சுகமாயிருக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
6 கர்த்தருடைய சொற்கள் மண்குகையில் ஏழுதரம் உருக்கி புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது.
7 கர்த்தாவே, நீர் அவர்களைக் காப்பாற்றி, அவர்களை என்றைக்கும் இந்தச் சந்ததிக்கு விலக்கிக் காத்துக்கொள்ளுவீர்.
8 மனுபுத்திரரில் சண்டாளர் உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர் எங்கும் சுற்றித்திரிவார்கள்.


0 To the choirmaster: according to The Sheminith. A Psalm of David.
1 Help, LORD; for there is no longer any that is godly; for the faithful have vanished from among the sons of men.
2 Every one utters lies to his neighbor; with flattering lips and a double heart they speak.
3 May the LORD cut off all flattering lips, the tongue that makes great boasts,
4 those who say, "With our tongue we will prevail, our lips are with us; who is our master?"
5 "Because the poor are despoiled, because the needy groan, I will now arise," says the LORD; "I will place him in the safety for which he longs."
6 The promises of the LORD are promises that are pure, silver refined in a furnace on the ground, purified seven times.
7 Do thou, O LORD, protect us, guard us ever from this generation.
8 On every side the wicked prowl, as vileness is exalted among the sons of men.

1 கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?
2 என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனைபண்ணிக்கொண்டிருப்பேன். எதுவரைக்கும் என் சத்துரு என்மேல் தன்னை உயர்த்துவான்?
3 என் தேவனாகிய கர்த்தாவே நீர் நோக்கிப்பார்த்து, எனக்குச் செவிகொடுத்தருளும்; நான் மரணநித்திரை அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும்.
4 அவனை மேற்கொண்டேன் என்று என் பகைஞன் சொல்லாதபடிக்கும், நான் தள்ளாடுகிறதினால் என் சத்துருக்கள் களிகூராதபடிக்கும் இப்படிச்செய்தருளும்.
5 நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.
6 கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்.


0 To the choirmaster. A Psalm of David.
1 How long, O LORD? Wilt thou forget me for ever? How long wilt thou hide thy face from me?
2 How long must I bear pain in my soul, and have sorrow in my heart all the day? How long shall my enemy be exalted over me?
3 Consider and answer me, O LORD my God; lighten my eyes, lest I sleep the sleep of death;
4 lest my enemy say, "I have prevailed over him"; lest my foes rejoice because I am shaken.
5 But I have trusted in thy steadfast love; my heart shall rejoice in thy salvation.
6 I will sing to the LORD, because he has dealt bountifully with me.

1 தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்; நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை.
2 தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.
3 எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
4 அக்கிரமக்காரரில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ? அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே; அவர்கள் கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறதில்லை.
5 அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்; தேவன் நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறாரே.
6 சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமாயிருக்கிறார் என்று சொல்லி, நீங்கள் அவனுடைய ஆலோசனையை அலட்சியம்பண்ணினீர்கள்.
7 சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.


0 To the choirmaster. Of David.
1 The fool says in his heart, "There is no God." They are corrupt, they do abominable deeds, there is none that does good.
2 The LORD looks down from heaven upon the children of men, to see if there are any that act wisely, that seek after God.
3 They have all gone astray, they are all alike corrupt; there is none that does good, no, not one.
4 Have they no knowledge, all the evildoers who eat up my people as they eat bread, and do not call upon the LORD?
5 There they shall be in great terror, for God is with the generation of the righteous.
6 You would confound the plans of the poor, but the LORD is his refuge.
7 O that deliverance for Israel would come out of Zion! When the LORD restores the fortunes of his people, Jacob shall rejoice, Israel shall be glad.

1 கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணுவான்?
2 உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே.
3 அவன் தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்குசெய்யாமலும், தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.
4 ஆகாதவன் அவன் பார்வைக்குத் தீழ்ப்பானவன்; கர்த்தருக்குப் பயந்தவர்களையோ கனம்பண்ணுகிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான்.
5 தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.


0 A Psalm of David.
1 O LORD, who shall sojourn in thy tent? Who shall dwell on thy holy hill?
2 He who walks blamelessly, and does what is right, and speaks truth from his heart;
3 who does not slander with his tongue, and does no evil to his friend, nor takes up a reproach against his neighbor;
4 in whose eyes a reprobate is despised, but who honors those who fear the LORD; who swears to his own hurt and does not change;
5 who does not put out his money at interest, and does not take a bribe against the innocent. He who does these things shall never be moved.

1 தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன்.
2 என் நெஞ்சமே, நீ கர்த்தரை நோக்கி: தேவரீர், என் ஆண்டவராயிருக்கிறீர், என் செல்வம் உமக்கு வேண்டியதாயிராமல்,
3 பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என் முழுப் பிரியத்தையும், வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், அது வேண்டியதாயிருக்கிறது என்று சொன்னாய்.
4 அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்; அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன், அவர்கள் நாமங்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன்.
5 கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்.
6 நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு.
7 எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்; இராக்காலங்களிலும் என் உள்ளிந்திரியங்கள் என்னை உணர்த்தும்.
8 கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.
9 ஆகையால் என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்.
10 என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்.
11 ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.


0 A Miktam of David.
1 Preserve me, O God, for in thee I take refuge.
2 I say to the LORD, "Thou art my Lord; I have no good apart from thee."
3 As for the saints in the land, they are the noble, in whom is all my delight.
4 Those who choose another god multiply their sorrows; their libations of blood I will not pour out or take their names upon my lips.
5 The LORD is my chosen portion and my cup; thou holdest my lot.
6 The lines have fallen for me in pleasant places; yea, I have a goodly heritage.
7 I bless the LORD who gives me counsel; in the night also my heart instructs me.
8 I keep the LORD always before me; because he is at my right hand, I shall not be moved.
9 Therefore my heart is glad, and my soul rejoices; my body also dwells secure.
10 For thou dost not give me up to Sheol, or let thy godly one see the Pit.
11 Thou dost show me the path of life; in thy presence there is fulness of joy, in thy right hand are pleasures for evermore.

1 கர்த்தாவே, நியாயத்தைக் கேட்டருளும், என் கூப்பிடுதலைக் கவனியும்; கபடமில்லாத உதடுகளினின்று பிறக்கும் என் விண்ணப்பத்திற்குச் செவிகொடும்.
2 உம்முடைய சந்நிதியிலிருந்து என் நியாயம் வெளிப்படுவதாக; உம்முடைய கண்கள் நியாயமானவைகளை நோக்குவதாக.
3 நீர் என் இருதயத்தைப் பரிசோதித்து, இராக்காலத்திலே அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப்பார்த்தும் ஒன்றும் காணாதிருக்கிறீர்; என் வாய் மீறாதபடிக்குத் தீர்மானம் பண்ணினேன்.
4 மனுஷரின்செய்கைகளைக்குறித்து, நான் உம்முடைய உதடுகளின் வாக்கினாலே துஷ்டனுடைய பாதைகளுக்கு விலக்கமாய் என்னைக் காத்துக் கொள்ளுகிறேன்.
5 என் காலடிகள் வழுவாதபடிக்கு, என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும்.
6 தேவனே, நான் உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன், எனக்குச் செவிகொடுக்கிறீர்; என்னிடத்தில் உம்முடைய செவியைச் சாய்த்து, என் வார்த்தையைக் கேட்டருளும்.
7 உம்மை நம்புகிறவர்களை அவர்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களினின்று உமது வலதுகரத்தினால் தப்புவித்து இரட்சிக்கிறவரே! உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கப்பண்ணும்.
8 கண்மணியைப்போல என்னைக் காத்தருளும்.
9 என்னை ஒடுக்குகிற துன்மார்க்கருக்கும், என்னைச் சூழ்ந்துகொள்ளுகிற என் பிராணப்பகைஞருக்கும் மறைவாக, உம்முடைய செட்டைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும்.
10 அவர்கள் நிணந்துன்னியிருக்கிறார்கள், தங்கள் வாயினால் வீம்பு பேசுகிறார்கள்.
11 நாங்கள் செல்லும் பாதைகளில் இப்பொழுது எங்களை வளைந்துகொண்டார்கள்; எங்களைத் தரையிலே தள்ளும்படி அவர்கள் கண்கள் எங்களை நோக்கிக்கொண்டிருக்கிறது.
12 பீறுகிறதற்கு ஆவலுள்ள சிங்கத்துக்கும், மறைவிடங்களில் பதிவிருக்கிற பால சிங்கத்துக்கும் ஒப்பாயிருக்கிறார்கள்.
13 கர்த்தாவே, நீர் எழுந்திருந்து, அவனுக்கு எதிரிட்டு, அவனை மடங்கடியும்; கர்த்தாவே, என் ஆத்துமாவைத் துன்மார்க்கனுடைய கைக்கு உம்முடைய பட்டயத்தினால் தப்புவியும்.
14 மனுஷருடைய கைக்கும், இம்மையில் தங்கள் பங்கைப் பெற்றிருக்கிற உலகமக்களின் கைக்கும் உம்முடைய கரத்தினால் என்னைத் தப்புவியும்; அவர்கள் வயிற்றை உமது திரவியத்தினால் நிரப்புகிறீர்; அவர்கள் புத்திரபாக்கியத்தினால் திருப்தியடைந்து, தங்களுக்கு மீதியான பொருளைத் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள்.
15 நானோ நீதீயில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்; நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்.


0 A Prayer of David.
1 Hear a just cause, O LORD; attend to my cry! Give ear to my prayer from lips free of deceit!
2 From thee let my vindication come! Let thy eyes see the right!
3 If thou triest my heart, if thou visitest me by night, if thou testest me, thou wilt find no wickedness in me; my mouth does not transgress.
4 With regard to the works of men, by the word of thy lips I have avoided the ways of the violent.
5 My steps have held fast to thy paths, my feet have not slipped.
6 I call upon thee, for thou wilt answer me, O God; incline thy ear to me, hear my words.
7 Wondrously show thy steadfast love, O savior of those who seek refuge from their adversaries at thy right hand.
8 Keep me as the apple of the eye; hide me in the shadow of thy wings,
9 from the wicked who despoil me, my deadly enemies who surround me.
10 They close their hearts to pity; with their mouths they speak arrogantly.
11 They track me down; now they surround me; they set their eyes to cast me to the ground.
12 They are like a lion eager to tear, as a young lion lurking in ambush.
13 Arise, O LORD! confront them, overthrow them! Deliver my life from the wicked by thy sword,
14 from men by thy hand, O LORD, from men whose portion in life is of the world. May their belly be filled with what thou hast stored up for them; may their children have more than enough; may they leave something over to their babes.
15 As for me, I shall behold thy face in righteousness; when I awake, I shall be satisfied with beholding thy form.

1 என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்.
2 கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும் நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.
3 துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி இரட்சிக்கப்படுவேன்.
4 மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது; துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது.
5 பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.
6 எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று.
7 அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது, அவர் கோபங்கொண்டபடியால் பர்வதங்களின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது.
8 அவர் நாசியிலிருந்து புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து பட்சிக்கிற அக்கினி புறப்பட்டது; அதனால் தழல் மூண்டது.
9 வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது.
10 கேருபீன்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார்; காற்றின் செட்டைகளைக்கொண்டு பறந்தார்.
11 இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார்; கரும்புனல்களையும், ஆகாயத்துக் கார்மேகங்களையும் தம்மைச் சூழக் கூடாரமாக்கினார்.
12 அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் அவருடைய மேகங்கள் பறந்து விலகிற்று, கல்மழையும் நெருப்புத்தழலும் விழுந்தது.
13 கர்த்தர் வானங்களிலே குமுறினார், உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கப்பண்ணினார்; கல்மழையும் நெருப்புத்தழலும் விழுந்தது.
14 தம்முடைய அம்புகளை எய்து, அவர்களைச் சிதறடித்தார்; மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார்.
15 அப்பொழுது கர்த்தாவே, உம்முடைய கண்டிதத்தினாலும் உம்முடைய நாசியின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது.
16 உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்.
17 என்னிலும் அதிக பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார்.
18 என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தர் எனக்கு ஆதரவாயிருந்தார்.
19 அவர் விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்மேல் பிரியமாயிருந்தபடியால், என்னைத் தப்புவித்தார்.
20 கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதிலளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்.
21 கர்த்தருடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன்; நான் என் தேவனுக்குத் துரோகம்பண்ணினதில்லை.
22 அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; அவருடைய பிரமாணங்களை நான் தள்ளிப்போடவில்லை.
23 அவர் முன்பாக நான் மனவுண்மையாயிருந்து, என் துர்க்குணத்துக்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.
24 ஆகையால் கர்த்தர் என் நீதிக்கும், தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற என் கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாக எனக்குப் பலனளித்தார்.
25 தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்;
26 புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.
27 தேவரீர் சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிப்பீர்; மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர்.
28 தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்.
29 உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.
30 தேவனுடைய வழி உத்தமமானது: கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.
31 கர்த்தரேயல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றிக் கன்மலையும் யார்?
32 என்னைப் பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே.
33 அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என்னுடைய உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்.
34 வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.
35 உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது, உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.
36 என் கால்கள் வழுவாதபடிக்கு, நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்.
37 என் சத்துருக்களைப் பின்தொடர்ந்து அவர்களைப் பிடிப்பேன்; அவர்களை நிர்மூலமாக்கும் வரைக்கும் திரும்பேன்.
38 அவர்கள் எழுந்திருக்கமாட்டாதபடிக்கு, என் பாதங்களின்கீழ் விழத்தக்கதாக அவர்களை வெட்டினேன்.
39 யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி என்மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கப்பண்ணினீர்.
40 நான் என் பகைஞரைச் சங்கரிக்கும்படியாக, என் சத்துருக்களின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர்.
41 அவர்கள் கூப்பிடுகிறார்கள், அவர்களை இரட்சிப்பார் ஒருவருமில்லை; கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்களுக்கு அவர் உத்தரவு கொடுக்கிறதில்லை.
42 நான் அவர்களைக் காற்று முகத்திலே பறக்கிற தூளாக இடித்து, தெருக்களிலுள்ள சேற்றைப்போல் அவர்களை எறிந்துபோடுகிறேன்.
43 ஜனங்களின் சண்டைகளுக்கு நீர் என்னைத் தப்புவித்து, ஜாதிகளுக்கு என்னைத் தலைவனாக்குகிறீர்; நான் அறியாத ஜனங்கள் என்னைச் சேவிக்கிறார்கள்.
44 அவர்கள் என் சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்; அந்நியரும் எனக்கு இச்சகம்பேசி அடங்குகிறார்கள்.
45 அந்நியர் முனைவிழுந்துபோய், தங்கள் அரண்களிலிருந்து தத்தளிப்பாய்ப் புறப்படுகிறார்கள்.
46 கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் துதிக்கப்படுவாராக; என் இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக.
47 அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்கி ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனானவர்.
48 அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் என்னை நீர் உயர்த்தி கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர்.
49 இதினிமித்தம் கர்த்தாவே, ஜாதிகளுக்குள்ளே உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன்.
50 தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்.


0 To the choirmaster. A Psalm of David the servant of the LORD, who addressed the words of this song to the LORD on the day when the LORD delivered him from the hand of all his enemies, and from the hand of Saul. He said:
1 I love thee, O LORD, my strength.
2 The LORD is my rock, and my fortress, and my deliverer, my God, my rock, in whom I take refuge, my shield, and the horn of my salvation, my stronghold.
3 I call upon the LORD, who is worthy to be praised, and I am saved from my enemies.
4 The cords of death encompassed me, the torrents of perdition assailed me;
5 the cords of Sheol entangled me, the snares of death confronted me.
6 In my distress I called upon the LORD; to my God I cried for help. From his temple he heard my voice, and my cry to him reached his ears.
7 Then the earth reeled and rocked; the foundations also of the mountains trembled and quaked, because he was angry.
8 Smoke went up from his nostrils, and devouring fire from his mouth; glowing coals flamed forth from him.
9 He bowed the heavens, and came down; thick darkness was under his feet.
10 He rode on a cherub, and flew; he came swiftly upon the wings of the wind.
11 He made darkness his covering around him, his canopy thick clouds dark with water.
12 Out of the brightness before him there broke through his clouds hailstones and coals of fire.
13 The LORD also thundered in the heavens, and the Most High uttered his voice, hailstones and coals of fire.
14 And he sent out his arrows, and scattered them; he flashed forth lightnings, and routed them.
15 Then the channels of the sea were seen, and the foundations of the world were laid bare, at thy rebuke, O LORD, at the blast of the breath of thy nostrils.
16 He reached from on high, he took me, he drew me out of many waters.
17 He delivered me from my strong enemy, and from those who hated me; for they were too mighty for me.
18 They came upon me in the day of my calamity; but the LORD was my stay.
19 He brought me forth into a broad place; he delivered me, because he delighted in me.
20 The LORD rewarded me according to my righteousness; according to the cleanness of my hands he recompensed me.
21 For I have kept the ways of the LORD, and have not wickedly departed from my God.
22 For all his ordinances were before me, and his statutes I did not put away from me.
23 I was blameless before him, and I kept myself from guilt.
24 Therefore the LORD has recompensed me according to my righteousness, according to the cleanness of my hands in his sight.
25 With the loyal thou dost show thyself loyal; with the blameless man thou dost show thyself blameless;
26 with the pure thou dost show thyself pure; and with the crooked thou dost show thyself perverse.
27 For thou dost deliver a humble people; but the haughty eyes thou dost bring down.
28 Yea, thou dost light my lamp; the LORD my God lightens my darkness.
29 Yea, by thee I can crush a troop; and by my God I can leap over a wall.
30 This God -- his way is perfect; the promise of the LORD proves true; he is a shield for all those who take refuge in him.
31 For who is God, but the LORD? And who is a rock, except our God? --
32 the God who girded me with strength, and made my way safe.
33 He made my feet like hinds' feet, and set me secure on the heights.
34 He trains my hands for war, so that my arms can bend a bow of bronze.
35 Thou hast given me the shield of thy salvation, and thy right hand supported me, and thy help made me great.
36 Thou didst give a wide place for my steps under me, and my feet did not slip.
37 I pursued my enemies and overtook them; and did not turn back till they were consumed.
38 I thrust them through, so that they were not able to rise; they fell under my feet.
39 For thou didst gird me with strength for the battle; thou didst make my assailants sink under me.
40 Thou didst make my enemies turn their backs to me, and those who hated me I destroyed.
41 They cried for help, but there was none to save, they cried to the LORD, but he did not answer them.
42 I beat them fine as dust before the wind; I cast them out like the mire of the streets.
43 Thou didst deliver me from strife with the peoples; thou didst make me the head of the nations; people whom I had not known served me.
44 As soon as they heard of me they obeyed me; foreigners came cringing to me.
45 Foreigners lost heart, and came trembling out of their fastnesses.
46 The LORD lives; and blessed be my rock, and exalted be the God of my salvation,
47 the God who gave me vengeance and subdued peoples under me;
48 who delivered me from my enemies; yea, thou didst exalt me above my adversaries; thou didst deliver me from men of violence.
49 For this I will extol thee, O LORD, among the nations, and sing praises to thy name.
50 Great triumphs he gives to his king, and shows steadfast love to his anointed, to David and his descendants for ever.

1 வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.
2 பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது.
3 அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை.
4 ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறது; அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார்.
5 அது தன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போலிருந்து, பராக்கிரமசாலியைப்போல் தன் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருக்கிறது.
6 அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, அவைகளின் மறுமுனை வரைக்கும் சுற்றியோடுகிறது; அதின் காந்திக்கு மறைவானது ஒன்றுமில்லை.
7 கர்த்தருடைய வேதம் குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.
8 கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது.
9 கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது.
10 அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது.
11 அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு.
12 தன் பிழைகளை உணருகிறவன் யார்? மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.
13 துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும், அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும்; அப்பொழுது நான் உத்தமனாகி, பெரும்பாதகத்துக்கு நீங்கலாயிருப்பேன்.
14 என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.


0 To the choirmaster. A Psalm of David.
1 The heavens are telling the glory of God; and the firmament proclaims his handiwork.
2 Day to day pours forth speech, and night to night declares knowledge.
3 There is no speech, nor are there words; their voice is not heard;
4 yet their voice goes out through all the earth, and their words to the end of the world. In them he has set a tent for the sun,
5 which comes forth like a bridegroom leaving his chamber, and like a strong man runs its course with joy.
6 Its rising is from the end of the heavens, and its circuit to the end of them; and there is nothing hid from its heat.
7 The law of the LORD is perfect, reviving the soul; the testimony of the LORD is sure, making wise the simple;
8 the precepts of the LORD are right, rejoicing the heart; the commandment of the LORD is pure, enlightening the eyes;
9 the fear of the LORD is clean, enduring for ever; the ordinances of the LORD are true, and righteous altogether.
10 More to be desired are they than gold, even much fine gold; sweeter also than honey and drippings of the honeycomb.
11 Moreover by them is thy servant warned; in keeping them there is great reward.
12 But who can discern his errors? Clear thou me from hidden faults.
13 Keep back thy servant also from presumptuous sins; let them not have dominion over me! Then I shall be blameless, and innocent of great transgression.
14 Let the words of my mouth and the meditation of my heart be acceptable in thy sight, O LORD, my rock and my redeemer.

1 ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக; யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.
2 அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி சீயோனிலிருந்து உம்மை ஆதரிப்பாராக.
3 நீர் செலுத்தும் காணிக்கைகளையெல்லாம் அவர் நினைத்து, உமது சர்வாங்க தகனபலியைப் பிரியமாய் ஏற்றுக்கொள்வாராக. (சேலா.)
4 அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.
5 நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம்; உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக.
6 கர்த்தர் தாம் அபிஷேகம்பண்ணினவரை இரட்சிக்கிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; தமது வலதுகரம் செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து, தமது பரிசுத்த வானத்திலிருந்து அவருடைய ஜெபத்தைக் கேட்பார்.
7 சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.
8 அவர்கள் முறிந்து விழுந்தார்கள்; நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம்.
9 கர்த்தாவே, இரட்சியும்; நாங்கள் கூப்பிடுகிற நாளிலே ராஜா எங்களுக்குச் செவிகொடுப்பாராக.


0 To the choirmaster. A Psalm of David.
1 The LORD answer you in the day of trouble! The name of the God of Jacob protect you!
2 May he send you help from the sanctuary, and give you support from Zion!
3 May he remember all your offerings, and regard with favor your burnt sacrifices! [Selah]
4 May he grant you your heart's desire, and fulfil all your plans!
5 May we shout for joy over your victory, and in the name of our God set up our banners! May the LORD fulfil all your petitions!
6 Now I know that the LORD will help his anointed; he will answer him from his holy heaven with mighty victories by his right hand.
7 Some boast of chariots, and some of horses; but we boast of the name of the LORD our God.
8 They will collapse and fall; but we shall rise and stand upright.
9 Give victory to the king, O LORD; answer us when we call.

1 கர்த்தாவே, உம்முடைய வல்லமையிலே ராஜா மகிழ்ச்சியாயிருக்கிறார்; உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாய்க் களிகூருகிறார்!
2 அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாதிருக்கிறீர். (சேலா.)
3 உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து, அவர் சிரசில் பொற்கிரீடம் தரிப்பிக்கிறீர்.
4 அவர் உம்மிடத்தில் ஆயுசைக்கேட்டார்; நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள தீர்க்காயுசை அளித்தீர்.
5 உமது இரட்சிப்பினால் அவர் மகிமை பெரிதாயிருக்கிறது; மேன்மையையும் மகத்துவத்தையும் அவருக்கு அருளினீர்.
6 அவரை நித்திய ஆசீர்வாதங்களுள்ளவராக்குகிறீர்; அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர்.
7 ராஜா கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருக்கிறார்: உன்னதமானவருடைய தயவினால் அசைக்கப்படாதிருப்பார்.
8 உமது கை உமது சத்துருக்களெல்லாரையும் எட்டிப்பிடிக்கும்; உமதுவலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும்.
9 உமது கோபத்தின் காலத்திலே அவர்களை அக்கினிச் சூளையாக்கிப்போடுவீர்; கர்த்தர் தமது கோபத்திலே அவர்களை அழிப்பார்; அக்கினி அவர்களைப் பட்சிக்கும்.
10 அவர்கள் கனியை பூமியிலிராதபடி நீர் அழித்து, அவர்கள் சந்ததியை மனுபுத்திரரிலிராதபடி ஒழியப்பண்ணுவீர்.
11 அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பொல்லாங்கு நினைத்தார்கள்: தீவினையை எத்தனம்பண்ணினார்கள்; ஒன்றும் வாய்க்காமற்போயிற்று.
12 அவர்களை இலக்காக வைத்து, உம்முடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரே விடுகிறீர்.
13 கர்த்தாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்; அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடிக்கீர்த்தனம்பண்ணுவோம்.


0 To the choirmaster. A Psalm of David.
1 In thy strength the king rejoices, O LORD; and in thy help how greatly he exults!
2 Thou hast given him his heart's desire, and hast not withheld the request of his lips. [Selah]
3 For thou dost meet him with goodly blessings; thou dost set a crown of fine gold upon his head.
4 He asked life of thee; thou gavest it to him, length of days for ever and ever.
5 His glory is great through thy help; splendor and majesty thou dost bestow upon him.
6 Yea, thou dost make him most blessed for ever; thou dost make him glad with the joy of thy presence.
7 For the king trusts in the LORD; and through the steadfast love of the Most High he shall not be moved.
8 Your hand will find out all your enemies; your right hand will find out those who hate you.
9 You will make them as a blazing oven when you appear. The LORD will swallow them up in his wrath; and fire will consume them.
10 You will destroy their offspring from the earth, and their children from among the sons of men.
11 If they plan evil against you, if they devise mischief, they will not succeed.
12 For you will put them to flight; you will aim at their faces with your bows.
13 Be exalted, O LORD, in thy strength! We will sing and praise thy power.

1 என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?
2 என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், உத்தரவுகொடீர்; இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதலில்லை.
3 இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர்.
4 எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர்.
5 உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்; உம்மை நம்பி வெட்கப்பட்டுப்போகாதிருந்தார்கள்.
6 நானோ ஒரு புழு, மனுஷனல்ல; மனுஷரால் நிந்திக்கப்பட்டும் ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன்.
7 என்னைப் பார்க்கிறவர்களெல்லாரும் என்னைப் பரியாசம்பண்ணி, உதட்டைப் பிதுக்கி, தலையைத் துலுக்கி;
8 கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும்; இவன்மேல் பிரியமாயிருக்கிறாரே, இப்பொழுது இவனை மீட்டுவிடட்டும் என்கிறார்கள்.
9 நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர்; என் தாயின் முலைப்பாலை நான் உண்கையில் என்னை உம்முடையபேரில் நம்பிக்கையாயிருக்கப்பண்ணினீர்.
10 கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன்; நான் என் தாயின் வயிற்றில் இருந்ததுமுதல் நீர் என் தேவனாயிருக்கிறீர்.
11 என்னை விட்டுத் தூரமாகாதேயும்; ஆபத்து கிட்டியிருக்கிறது, சகாயரும் இல்லை.
12 அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பாசான் தேசத்துப் பலத்த எருதுகள் என்னை வளைந்துகொண்டது.
13 பீறி கெர்ச்சிக்கிற சிங்கத்தைப்போல், என்மேல் தங்கள் வாயைத்திறக்கிறார்கள்.
14 தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று.
15 என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூளிலே போடுகிறீர்.
16 நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள்.
17 என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
18 என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போடுகிறார்கள்.
19 ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரித்துக்கொள்ளும்.
20 என் ஆத்துமாவைப் பட்டயத்திற்கும், எனக்கு அருமையானதை நாய்களின் துஷ்டத்தனத்திற்கும் தப்புவியும்.
21 என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சியும்; நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது எனக்குச் செவிகொடுத்தருளினீர்.
22 உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன்.
23 கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள்; யாக்கோபின் சந்ததியாரே நீங்கள் எல்லாரும் அவரைக் கனம்பண்ணுங்கள்; இஸ்ரவேலின் வம்சத்தாரே நீங்கள் எல்லாரும் அவர்பேரில் பயபக்தியாயிருங்கள்,
24 உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும் தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.
25 மகா சபையிலே நான் உம்மைத் துதிப்பேன்; அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.
26 சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத்திருப்தியடைவார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள்; உங்கள் இருதயம் என்றென்றைக்கும் வாழும்.
27 பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும்.
28 ராஜ்யம் கர்த்தருடையது; அவர் ஜாதிகளை ஆளுகிறவர்.
29 பூமியின் செல்வவான்கள் யாவரும் புசித்துப்பணிந்துகொள்வார்கள்; புழுதியில் இறங்குகிறவர்கள் யாவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள். ஒருவனும் தன் ஆத்துமா அழியாதபடி அதைக் காக்கக் கூடாதே.
30 ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும்.
31 அவர்கள் வந்து: அவரே இவைகளைச் செய்தார் என்று பிறக்கப்போகிறவர்களுக்கு அவருடைய நீதியை அறிவிப்பார்கள்.


0 To the choirmaster: according to The Hind of the Dawn. A Psalm of David.
1 My God, my God, why hast thou forsaken me? Why art thou so far from helping me, from the words of my groaning?
2 O my God, I cry by day, but thou dost not answer; and by night, but find no rest.
3 Yet thou art holy, enthroned on the praises of Israel.
4 In thee our fathers trusted; they trusted, and thou didst deliver them.
5 To thee they cried, and were saved; in thee they trusted, and were not disappointed.
6 But I am a worm, and no man; scorned by men, and despised by the people.
7 All who see me mock at me, they make mouths at me, they wag their heads;
8 "He committed his cause to the LORD; let him deliver him, let him rescue him, for he delights in him!"
9 Yet thou art he who took me from the womb; thou didst keep me safe upon my mother's breasts.
10 Upon thee was I cast from my birth, and since my mother bore me thou hast been my God.
11 Be not far from me, for trouble is near and there is none to help.
12 Many bulls encompass me, strong bulls of Bashan surround me;
13 they open wide their mouths at me, like a ravening and roaring lion.
14 I am poured out like water, and all my bones are out of joint; my heart is like wax, it is melted within my breast;
15 my strength is dried up like a potsherd, and my tongue cleaves to my jaws; thou dost lay me in the dust of death.
16 Yea, dogs are round about me; a company of evildoers encircle me; they have pierced my hands and feet --
17 I can count all my bones -- they stare and gloat over me;
18 they divide my garments among them, and for my raiment they cast lots.
19 But thou, O LORD, be not far off! O thou my help, hasten to my aid!
20 Deliver my soul from the sword, my life from the power of the dog!
21 Save me from the mouth of the lion, my afflicted soul from the horns of the wild oxen!
22 I will tell of thy name to my brethren; in the midst of the congregation I will praise thee:
23 You who fear the LORD, praise him! all you sons of Jacob, glorify him, and stand in awe of him, all you sons of Israel!
24 For he has not despised or abhorred the affliction of the afflicted; and he has not hid his face from him, but has heard, when he cried to him.
25 From thee comes my praise in the great congregation; my vows I will pay before those who fear him.
26 The afflicted shall eat and be satisfied; those who seek him shall praise the LORD! May your hearts live for ever!
27 All the ends of the earth shall remember and turn to the LORD; and all the families of the nations shall worship before him.
28 For dominion belongs to the LORD, and he rules over the nations.
29 Yea, to him shall all the proud of the earth bow down; before him shall bow all who go down to the dust, and he who cannot keep himself alive.
30 Posterity shall serve him; men shall tell of the Lord to the coming generation,
31 and proclaim his deliverance to a people yet unborn, that he has wrought it.

1 கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்.
2 அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்.
3 அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
4 நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
5 என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
6 என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.


0 A Psalm of David.
1 The LORD is my shepherd, I shall not want;
2 he makes me lie down in green pastures. He leads me beside still waters;
3 he restores my soul. He leads me in paths of righteousness for his name's sake.
4 Even though I walk through the valley of the shadow of death, I fear no evil; for thou art with me; thy rod and thy staff, they comfort me.
5 Thou preparest a table before me in the presence of my enemies; thou anointest my head with oil, my cup overflows.
6 Surely goodness and mercy shall follow me all the days of my life; and I shall dwell in the house of the LORD for ever.

1 பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது.
2 அவரே அதைக் கடல்களுக்குமேலாக அஸ்திபாரப்படுத்தி, அதை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தார்.
3 யார் கர்த்தருடைய பர்வதத்திலே ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்?
4 கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே.
5 அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், என் இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான்.
6 இதுவே அவரைத் தேடி விசாரித்து, அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி. (சேலா.)
7 வாசல்களே உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.
8 யார் இந்த மகிமையின் ராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமமுமுள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமமுள்ள கர்த்தராமே.
9 வாசல்களே உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே உயருங்கள், மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.
10 யார் இந்த மகிமையின் ராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே மகிமையின் ராஜா. (சேலா.)


0 A Psalm of David.
1 The earth is the LORD's and the fulness thereof, the world and those who dwell therein;
2 for he has founded it upon the seas, and established it upon the rivers.
3 Who shall ascend the hill of the LORD? And who shall stand in his holy place?
4 He who has clean hands and a pure heart, who does not lift up his soul to what is false, and does not swear deceitfully.
5 He will receive blessing from the LORD, and vindication from the God of his salvation.
6 Such is the generation of those who seek him, who seek the face of the God of Jacob. [Selah]
7 Lift up your heads, O gates! and be lifted up, O ancient doors! that the King of glory may come in.
8 Who is the King of glory? The LORD, strong and mighty, the LORD, mighty in battle!
9 Lift up your heads, O gates! and be lifted up, O ancient doors! that the King of glory may come in.
10 Who is this King of glory? The LORD of hosts, he is the King of glory! [Selah]

1 கர்த்தாவே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
2 என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவிடாதேயும்.
3 உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; முகாந்தரமில்லாமல் துரோகம்பண்ணுகிறவர்கள் வெட்கப்பட்டுப் போவார்களாக.
4 கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்.
5 உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள் முழுதும் காத்திருக்கிறேன்.
6 கர்த்தாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய காருணியங்களையும் நினைத்தருளும், அவைகள் அநாதிகாலமுதல் இருக்கிறதே.
7 என் இளவயதின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினையாதிரும்; கர்த்தாவே, உம்முடைய தயவினிமித்தம் என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும்.
8 கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்.
9 சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்.
10 கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவைகள்.
11 கர்த்தாவே, என் அக்கிரமம் பெரிது; உம்முடைய நாமத்தினிமித்தம் அதை மன்னித்தருளும்.
12 கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்.
13 அவன் ஆத்துமா நன்மையில் தங்கும்; அவன் சந்ததி பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளும்.
14 கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்.
15 என் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக் கொண்டிருக்கிறது; அவரே என் கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார்.
16 என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; நான் தனித்தவனும் சிறுமைப்படுகிறவனுமாயிருக்கிறேன்.
17 என் இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கிறது; என் இடுக்கண்களுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்.
18 என் துன்பத்தையும் என் வருத்தத்தையும் பார்த்து, என் பாவங்களையெல்லாம் மன்னித்தருளும்.
19 என் சத்துருக்களைப் பாரும்; அவர்கள் பெருகியிருந்து, உக்கிரபகையாய் என்னைப் பகைக்கிறார்கள்.
20 என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; உம்மை நம்பியிருக்கிறேன்.
21 உத்தமமும் நேர்மையும் என்னைக்காக்கக்கடவது; நான் உமக்குக் காத்திருக்கிறேன்.
22 தேவனே, இஸ்ரவேலை அவனுடைய எல்லா இக்கட்டுகளுக்கும் நீங்கலாக்கி மீட்டுவிடும்.


0 A Psalm of David.
1 To thee, O LORD, I lift up my soul.
2 O my God, in thee I trust, let me not be put to shame; let not my enemies exult over me.
3 Yea, let none that wait for thee be put to shame; let them be ashamed who are wantonly treacherous.
4 Make me to know thy ways, O LORD; teach me thy paths.
5 Lead me in thy truth, and teach me, for thou art the God of my salvation; for thee I wait all the day long.
6 Be mindful of thy mercy, O LORD, and of thy steadfast love, for they have been from of old.
7 Remember not the sins of my youth, or my transgressions; according to thy steadfast love remember me, for thy goodness' sake, O LORD!
8 Good and upright is the LORD; therefore he instructs sinners in the way.
9 He leads the humble in what is right, and teaches the humble his way.
10 All the paths of the LORD are steadfast love and faithfulness, for those who keep his covenant and his testimonies.
11 For thy name's sake, O LORD, pardon my guilt, for it is great.
12 Who is the man that fears the LORD? Him will he instruct in the way that he should choose.
13 He himself shall abide in prosperity, and his children shall possess the land.
14 The friendship of the LORD is for those who fear him, and he makes known to them his covenant.
15 My eyes are ever toward the LORD, for he will pluck my feet out of the net.
16 Turn thou to me, and be gracious to me; for I am lonely and afflicted.
17 Relieve the troubles of my heart, and bring me out of my distresses.
18 Consider my affliction and my trouble, and forgive all my sins.
19 Consider how many are my foes, and with what violent hatred they hate me.
20 Oh guard my life, and deliver me; let me not be put to shame, for I take refuge in thee.
21 May integrity and uprightness preserve me, for I wait for thee.
22 Redeem Israel, O God, out of all his troubles.

1 கர்த்தாவே, என்னை நியாயம்விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் கர்த்தரை, நம்பியிருக்கிறேன். ஆகையால் நான் தள்ளாடுவதில்லை.
2 கர்த்தாவே, என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்; என் உள்ளிந்திரியங்களையும் என் இருதயத்தையும் புடமிட்டுப்பாரும்.
3 உம்முடைய கிருபை என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; உம்முடைய சத்தியத்திலே நடந்துகொள்ளுகிறேன்.
4 வீணரோடே நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை.
5 பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; துன்மார்க்கரோடே உட்காரேன்.
6 கர்த்தாவே, நான் துதியின் சத்தத்தைத் தொனிக்கப்பண்ணி, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக,
7 நான் குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவி, உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன்.
8 கர்த்தாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமை தங்கிய ஸ்தானத்தையும் வாஞ்சிக்கிறேன்.
9 என் ஆத்துமாவைப் பாவிகளோடும், என் ஜீவனை இரத்தப்பிரியரோடுங்கூட வாரிக்கொள்ளாதேயும்.
10 அவர்கள் கைகளிலே தீவினையிருக்கிறது; அவர்கள் வலதுகை பரிதானங்களால் நிறைந்திருக்கிறது.
11 நானோ என் உத்தமத்திலே நடப்பேன்; என்னை மீட்டுக்கொண்டு என்மேல் இரக்கமாயிரும்.
12 என் கால் செம்மையான இடத்திலே நிற்கிறது; சபைகளிலே நான் கர்த்தரைத் துதிப்பேன்.


0 A Psalm of David.
1 Vindicate me, O LORD, for I have walked in my integrity, and I have trusted in the LORD without wavering.
2 Prove me, O LORD, and try me; test my heart and my mind.
3 For thy steadfast love is before my eyes, and I walk in faithfulness to thee.
4 I do not sit with false men, nor do I consort with dissemblers;
5 I hate the company of evildoers, and I will not sit with the wicked.
6 I wash my hands in innocence, and go about thy altar, O LORD,
7 singing aloud a song of thanksgiving, and telling all thy wondrous deeds.
8 O LORD, I love the habitation of thy house, and the place where thy glory dwells.
9 Sweep me not away with sinners, nor my life with bloodthirsty men,
10 men in whose hands are evil devices, and whose right hands are full of bribes.
11 But as for me, I walk in my integrity; redeem me, and be gracious to me.
12 My foot stands on level ground; in the great congregation I will bless the LORD.

1 கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்?
2 என் சத்துருக்களும் என் பகைஞருமாகிய பொல்லாதவர்கள் என் மாம்சத்தைப் பட்சிக்க என்னை நெருக்குகையில் அவர்களே இடறிவிழுந்தார்கள்.
3 எனக்கு விரோதமாக ஒரு பாளயமிறங்கினாலும், என் இருதயம் பயப்படாது; என்மேல் யுத்தம் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாயிருப்பேன்.
4 கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.
5 தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.
6 இப்பொழுது என் தலை என்னைச் சுற்றிலும் இருக்கிற என் சத்துருக்களுக்கு மேலாக உயர்த்தப்படும்; அதினிமித்தம் அவருடைய கூடாரத்திலே நான் ஆனந்த பலிகளையிட்டு, கர்த்தரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
7 கர்த்தாவே, நான் கூப்பிடுகிற சத்தத்தை நீர் கேட்டு, எனக்கு இரங்கி எனக்கு உத்தரவு அருளிச்செய்யும்.
8 என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று.
9 உமது முகத்தை எனக்கு மறையாதேயும்; நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப்போடாதேயும்; நீரே எனக்குச் சகாயர்; என் இரட்சிப்பின் தேவனே, என்னை நெகிழவிடாமலும் என்னைக் கைவிடாமலும் இரும்.
10 என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.
11 கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதித்து, என் எதிராளிகளினிமித்தம் செவ்வையான பாதையில் என்னை நடத்தும்.
12 என் சத்துருக்களின் இஷ்டத்துக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்; பொய்ச்சாட்சிகளும் ஆக்கிரமித்துச் சீறுகிறவர்களும் எனக்கு விரோதமாய் எழும்பியிருக்கிறார்கள்.
13 நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன்.
14 கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.


0 A Psalm of David.
1 The LORD is my light and my salvation; whom shall I fear? The LORD is the stronghold of my life; of whom shall I be afraid?
2 When evildoers assail me, uttering slanders against me, my adversaries and foes, they shall stumble and fall.
3 Though a host encamp against me, my heart shall not fear; though war arise against me, yet I will be confident.
4 One thing have I asked of the LORD, that will I seek after; that I may dwell in the house of the LORD all the days of my life, to behold the beauty of the LORD, and to inquire in his temple.
5 For he will hide me in his shelter in the day of trouble; he will conceal me under the cover of his tent, he will set me high upon a rock.
6 And now my head shall be lifted up above my enemies round about me; and I will offer in his tent sacrifices with shouts of joy; I will sing and make melody to the LORD.
7 Hear, O LORD, when I cry aloud, be gracious to me and answer me!
8 Thou hast said, "Seek ye my face." My heart says to thee, "Thy face, LORD, do I seek."
9 Hide not thy face from me. Turn not thy servant away in anger, thou who hast been my help. Cast me not off, forsake me not, O God of my salvation!
10 For my father and my mother have forsaken me, but the LORD will take me up.
11 Teach me thy way, O LORD; and lead me on a level path because of my enemies.
12 Give me not up to the will of my adversaries; for false witnesses have risen against me, and they breathe out violence.
13 I believe that I shall see the goodness of the LORD in the land of the living!
14 Wait for the LORD; be strong, and let your heart take courage; yea, wait for the LORD!

1 என் கன்மலையாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேளாதவர்போல மவுனமாயிராதேயும், நீர் மவுனமாயிருந்தால் நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்.
2 நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு உம்முடைய பரிசுத்த சந்நிதிக்கு நேராகக் கையெடுக்கையில், என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும்.
3 அயலானுக்குச் சமாதான வாழ்த்துதலைச் சொல்லியும், தங்கள் இருதயங்களில் பொல்லாப்பை வைத்திருக்கிற துன்மார்க்கரோடும் அக்கிரமக்காரரோடும் என்னை வாரிக்கொள்ளாதேயும்.
4 அவர்களுடைய கிரியைகளுக்கும் அவர்களுடைய நடத்தைகளின் பொல்லாங்குக்கும் தக்கதாக அவர்களுக்குச் செய்யும்; அவர்கள் செய்கைகளின் செய்கைக்குத்தக்கதாக அவர்களுக்கு அளியும், அவர்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டும்.
5 அவர்கள் கர்த்தருடைய செய்கைகளையும் அவர் கரத்தின் கிரியைகளையும் கவனியாதபடியால், அவர்களை இடித்துப்போடுவார், அவர்களைக் கட்டமாட்டார்.
6 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார்.
7 கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம், அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன், ஆகையால் என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன்.
8 கர்த்தர் அவர்களுடைய பெலன்; அவரே தாம் அபிஷேகம்பண்ணினவனுக்கு அரணான அடைக்கலமானவர்.
9 தேவரீர் உமது ஜனத்தை இரட்சித்து, உமது சுதந்தரத்தை ஆசீர்வதியும்; அவர்களைப் போஷித்து, அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தியருளும்.


0 A Psalm of David.
1 To thee, O LORD, I call; my rock, be not deaf to me, lest, if thou be silent to me, I become like those who go down to the Pit.
2 Hear the voice of my supplication, as I cry to thee for help, as I lift up my hands toward thy most holy sanctuary.
3 Take me not off with the wicked, with those who are workers of evil, who speak peace with their neighbors, while mischief is in their hearts.
4 Requite them according to their work, and according to the evil of their deeds; requite them according to the work of their hands; render them their due reward.
5 Because they do not regard the works of the LORD, or the work of his hands, he will break them down and build them up no more.
6 Blessed be the LORD! for he has heard the voice of my supplications.
7 The LORD is my strength and my shield; in him my heart trusts; so I am helped, and my heart exults, and with my song I give thanks to him.
8 The LORD is the strength of his people, he is the saving refuge of his anointed.
9 O save thy people, and bless thy heritage; be thou their shepherd, and carry them for ever.

1 பலவான்களின் புத்திரரே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச்செலுத்துங்கள்.
2 கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.
3 கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின்மேல் தொனிக்கிறது; மகிமையுள்ள தேவன் ழுழங்குகிறார்; கர்த்தர் திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார்.
4 கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது; கர்த்தருடைய சத்தம் மகத்துவமுள்ளது.
5 கர்த்தருடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது; கர்த்தர் லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார்.
6 அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும் சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளப்பண்ணுகிறார்.
7 கர்த்தருடைய சத்தம் அக்கினிஜுவாலைகளைப் பிளக்கும்.
8 கர்த்தருடைய சத்தம் வனாந்தரத்தை அதிரப்பண்ணும்; கர்த்தர் காதேஸ் வனாந்தரத்தை அதிரப்பண்ணுகிறார்.
9 கர்த்தருடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து, காடுகளை வெளியாக்கும்; அவருடைய ஆலயத்திலுள்ள யாவரும் அவருடைய மகிமையைப் பிரஸ்தாபிக்கிறார்கள்.
10 கர்த்தர் ஜலப்பிரவாகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறார்; கர்த்தர் என்றென்றைக்கும் ராஜாவாக வீற்றிருக்கிறார்.
11 கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.


0 A Psalm of David.
1 Ascribe to the LORD, O heavenly beings, ascribe to the LORD glory and strength.
2 Ascribe to the LORD the glory of his name; worship the LORD in holy array.
3 The voice of the LORD is upon the waters; the God of glory thunders, the LORD, upon many waters.
4 The voice of the LORD is powerful, the voice of the LORD is full of majesty.
5 The voice of the LORD breaks the cedars, the LORD breaks the cedars of Lebanon.
6 He makes Lebanon to skip like a calf, and Si'rion like a young wild ox.
7 The voice of the LORD flashes forth flames of fire.
8 The voice of the LORD shakes the wilderness, the LORD shakes the wilderness of Kadesh.
9 The voice of the LORD makes the oaks to whirl, and strips the forests bare; and in his temple all cry, "Glory!"
10 The LORD sits enthroned over the flood; the LORD sits enthroned as king for ever.
11 May the LORD give strength to his people! May the LORD bless his people with peace!

1 கர்த்தாவே, என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவொட்டாமல், நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால், நான் உம்மைப் போற்றுவேன்.
2 என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர்.
3 கர்த்தாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணி, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடே காத்தீர்.
4 கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.
5 அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடியவாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.
6 நான் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லையென்று என் வாழ்விலே சொன்னேன்.
7 கர்த்தாவே, உம்முடைய தயவினால் நீர் என் பர்வதத்தைத் திடமாய் நிற்கப்பண்ணியிருந்தீர்; உமது முகத்தை நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன்.
8 நான் குழியில் இறங்குகையில் என் இரத்தத்தால் என்ன லாபமுண்டு? புழுதி உம்மைத் துதித்து, உமது சத்தியத்தை அறிவிக்குமோ?
9 கர்த்தாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து என்மேல் இரக்கமாயிரும்; கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராயிரும் என்று சொல்லி;
10 கர்த்தாவே, உம்மை நோக்கிக்கூப்பிட்டேன்; கர்த்தரை நோக்கிக் கெஞ்சினேன்.
11 என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர்.
12 என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்.


0 A Psalm of David. A Song at the dedication of the Temple.
1 I will extol thee, O LORD, for thou hast drawn me up, and hast not let my foes rejoice over me.
2 O LORD my God, I cried to thee for help, and thou hast healed me.
3 O LORD, thou hast brought up my soul from Sheol, restored me to life from among those gone down to the Pit.
4 Sing praises to the LORD, O you his saints, and give thanks to his holy name.
5 For his anger is but for a moment, and his favor is for a lifetime. Weeping may tarry for the night, but joy comes with the morning.
6 As for me, I said in my prosperity, "I shall never be moved."
7 By thy favor, O LORD, thou hadst established me as a strong mountain; thou didst hide thy face, I was dismayed.
8 To thee, O LORD, I cried; and to the LORD I made supplication:
9 "What profit is there in my death, if I go down to the Pit? Will the dust praise thee? Will it tell of thy faithfulness?
10 Hear, O LORD, and be gracious to me! O LORD, be thou my helper!"
11 Thou hast turned for me my mourning into dancing; thou hast loosed my sackcloth and girded me with gladness,
12 that my soul may praise thee and not be silent. O LORD my God, I will give thanks to thee for ever.

1 கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருக்காலும் வெட்கமடையாதபடி செய்யும்; உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும்.
2 உமது செவியை எனக்குச் சாய்த்து, சீக்கிரமாய் என்னைத் தப்புவியும்; நீர் எனக்குப் பலத்த துருகமும் எனக்கு அடைக்கலமான அரணுமாயிரும்.
3 என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, என்னை நடத்தியருளும்.
4 அவர்கள் எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; தேவரீரே எனக்கு அரண்.
5 உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்; சத்தியபரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர்.
6 வீண்மாயைகளைப் பற்றிக்கொள்ளுகிறவர்களை நான் வெறுத்து, கர்த்தரையே நம்பியிருக்கிறேன்.
7 உமது கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்; நீர் என் உபத்திரவத்தைப் பார்த்து, என் ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறீர்.
8 சத்துருவின் கையில் என்னை ஒப்புக்கொடாமல், என் பாதங்களை விசாலத்திலே நிறுத்தினீர்.
9 எனக்கு இரங்கும் கர்த்தாவே, நான் நெருக்கப்படுகிறேன்; துக்கத்தினால் என் கண்ணும் என் ஆத்துமாவும் என் வயிறுங்கூடக் கருகிப்போயிற்று.
10 என் பிராணன் சஞ்சலத்தினாலும், என் வருஷங்கள் தவிப்பினாலும் கழிந்துபோயிற்று; என் அக்கிரமத்தினாலே என் பெலன் குறைந்து, என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.
11 என் சத்துருக்களாகிய யாவர் நிமித்தமும், நான் என் அயலாருக்கு நிந்தையும், எனக்கு அறிமுகமானவர்களுக்கு அருக்களிப்புமானேன்; வீதியிலே என்னைக் கண்டவர்கள் எனக்கு விலகி ஓடிப்போனார்கள்.
12 செத்தவனைப்போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; உடைந்தபாத்திரத்தைப் போலானேன்.
13 அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன்; எனக்கு விரோதமாக அவர்கள் ஏகமாய் ஆலோசனைபண்ணுகிறதினால் திகில் என்னைச் சூழ்ந்துகொண்டது; என் பிராணனை வாங்கத்தேடுகிறார்கள்.
14 நானோ, கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நீரே என் தேவன் என்று சொன்னேன்.
15 என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது; என் சத்துருக்களின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும்.
16 நீர் உமது முகத்தை உமது ஊழியக்காரன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உமது கிருபையினாலே என்னை இரட்சியும்.
17 கர்த்தாவே, உம்மை நோக்கிக்கூப்பிட்டேன்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; துன்மார்க்கர் வெட்கப்பட்டுப் பாதாளத்தில் மவுனமாயிருக்கட்டும்.
18 நீதிமானுக்கு விரோதமாய்ப் பெருமையோடும் இகழ்ச்சியோடும் கடினமாய்ப் பேசுகிற பொய் உதடுகள் கட்டப்பட்டுப்போவதாக.
19 உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டுபண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!
20 மனுஷருடைய அகங்காரத்துக்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து, நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி, உமது கூடாரத்திலே ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறீர்.
21 கர்த்தர் அரணான நகரத்தில் எனக்குத் தமது கிருபையை அதிசயமாய் விளங்கப்பண்ணினபடியால், அவருக்கு ஸ்தோத்திரம்.
22 உம்முடைய கண்களுக்கு முன்பாக இராதபடிக்கு வெட்டுண்டேன் என்று நான் என் மனக்கலக்கத்திலே சொன்னேன்; ஆனாலும் நான் உம்மைநோக்கிக் கூப்பிட்டபோது, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர்.
23 கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்புகூருங்கள்; உண்மையானவனைக் கர்த்தர் தற்காத்து, இடும்புசெய்கிறவனுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார்.
24 கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்.


0 To the choirmaster. A Psalm of David.
1 In thee, O LORD, do I seek refuge; let me never be put to shame; in thy righteousness deliver me!
2 Incline thy ear to me, rescue me speedily! Be thou a rock of refuge for me, a strong fortress to save me!
3 Yea, thou art my rock and my fortress; for thy name's sake lead me and guide me,
4 take me out of the net which is hidden for me, for thou art my refuge.
5 Into thy hand I commit my spirit; thou hast redeemed me, O LORD, faithful God.
6 Thou hatest those who pay regard to vain idols; but I trust in the LORD.
7 I will rejoice and be glad for thy steadfast love, because thou hast seen my affliction, thou hast taken heed of my adversities,
8 and hast not delivered me into the hand of the enemy; thou hast set my feet in a broad place.
9 Be gracious to me, O LORD, for I am in distress; my eye is wasted from grief, my soul and my body also.
10 For my life is spent with sorrow, and my years with sighing; my strength fails because of my misery, and my bones waste away.
11 I am the scorn of all my adversaries, a horror to my neighbors, an object of dread to my acquaintances; those who see me in the street flee from me.
12 I have passed out of mind like one who is dead; I have become like a broken vessel.
13 Yea, I hear the whispering of many -- terror on every side! -- as they scheme together against me, as they plot to take my life.
14 But I trust in thee, O LORD, I say, "Thou art my God."
15 My times are in thy hand; deliver me from the hand of my enemies and persecutors!
16 Let thy face shine on thy servant; save me in thy steadfast love!
17 Let me not be put to shame, O LORD, for I call on thee; let the wicked be put to shame, let them go dumbfounded to Sheol.
18 Let the lying lips be dumb, which speak insolently against the righteous in pride and contempt.
19 O how abundant is thy goodness, which thou hast laid up for those who fear thee, and wrought for those who take refuge in thee, in the sight of the sons of men!
20 In the covert of thy presence thou hidest them from the plots of men; thou holdest them safe under thy shelter from the strife of tongues.
21 Blessed be the LORD, for he has wondrously shown his steadfast love to me when I was beset as in a besieged city.
22 I had said in my alarm, "I am driven far from thy sight." But thou didst hear my supplications, when I cried to thee for help.
23 Love the LORD, all you his saints! The LORD preserves the faithful, but abundantly requites him who acts haughtily.
24 Be strong, and let your heart take courage, all you who wait for the LORD!

1 எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ அவன் பாக்கியவான்.
2 எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான்.
3 நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.
4 இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால் என் சரீரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று. (சேலா.)
5 நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்.(சேலா.)
6 இதற்காகச் சகாயங்கிடைக்குங் காலத்தில் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பஞ்செய்வான்; அப்பொழுது மிகுந்த ஜலப்பிரவாகம் வந்தாலும் அது அவனை அணுகாது.
7 நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர். (சேலா.)
8 நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.
9 வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, உன் கிட்டச் சேராத புத்தியில்லாக் குதிரையைப்போலவும் கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம்.
10 துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும்.
11 நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; செம்மையான இருதயமுள்ளவர்களே, நீங்கள் எல்லாரும் ஆனந்த முழக்கமிடுங்கள்.


0 A Psalm of David. A Maskil.
1 Blessed is he whose transgression is forgiven, whose sin is covered.
2 Blessed is the man to whom the LORD imputes no iniquity, and in whose spirit there is no deceit.
3 When I declared not my sin, my body wasted away through my groaning all day long.
4 For day and night thy hand was heavy upon me; my strength was dried up as by the heat of summer. [Selah]
5 I acknowledged my sin to thee, and I did not hide my iniquity; I said, "I will confess my transgressions to the LORD"; then thou didst forgive the guilt of my sin. [Selah]
6 Therefore let every one who is godly offer prayer to thee; at a time of distress, in the rush of great waters, they shall not reach him.
7 Thou art a hiding place for me, thou preservest me from trouble; thou dost encompass me with deliverance. [Selah]
8 I will instruct you and teach you the way you should go; I will counsel you with my eye upon you.
9 Be not like a horse or a mule, without understanding, which must be curbed with bit and bridle, else it will not keep with you.
10 Many are the pangs of the wicked; but steadfast love surrounds him who trusts in the LORD.
11 Be glad in the LORD, and rejoice, O righteous, and shout for joy, all you upright in heart!

1 நீதிமான்களே, கர்த்தருக்குள் களிகூருங்கள்; துதிசெய்வது செம்மையானவர்களுக்குத் தகும்.
2 சுரமண்டலத்தினால் கர்த்தரைத் துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்.
3 அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; ஆனந்த சத்தத்தோடே வாத்தியங்களை நேர்த்தியாய் வாசியுங்கள்.
4 கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது.
5 அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி கர்த்தருடைய காருணியத்தினால் நிறைந்திருக்கிறது.
6 கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும் அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது.
7 அவர் சமுத்திர ஜலங்களைக் குவியலாகச் சேர்த்து, ஆழமான ஜலங்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார்.
8 பூமியெல்லாம் கர்த்தருக்குப் பயப்படுவதாக; உலகத்திலுள்ள குடிகளெல்லாம் அவருக்கு அஞ்சியிருப்பதாக.
9 அவர் சொல்ல ஆகும் அவர் கட்டளையிட நிற்கும்.
10 கர்த்தர் ஜாதிகளின் ஆலோசனையை விருதாவாக்கி, ஜனங்களுடைய நினைவுகளை அவமாக்குகிறார்.
11 கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.
12 கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது.
13 கர்த்தர் வானத்திலிருந்து நோக்கிப் பார்த்து, எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார்.
14 தாம் வாசமாயிருக்கிற ஸ்தானத்திலிருந்து பூமியின் குடிகள் எல்லார்மேலும் கண்ணோக்கமாயிருக்கிறார்.
15 அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார்.
16 எந்த ராஜாவும் தன் சேனையின்மிகுதியால் இரட்சிக்கப்படான்; சவுரியவானும் தன் பலத்தின் மிகுதியால் தப்பான்.
17 இரட்சிக்கிறதற்குக் குதிரை விருதா; அது தன் மிகுந்த வீரியத்தால் தப்புவியாது.
18 தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;
19 பஞ்சத்தில் அவர்களை உயிரோடேகாக்கவும், கர்த்தருடைய கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது.
20 நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.
21 அவருடைய பரிசுத்த நாமத்தை நாம் நம்பியிருக்கிறபடியால், நம்முடைய இருதயம் அவருக்குள் களிகூரும்.
22 கர்த்தாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக.


1 Rejoice in the LORD, O you righteous! Praise befits the upright.
2 Praise the LORD with the lyre, make melody to him with the harp of ten strings!
3 Sing to him a new song, play skilfully on the strings, with loud shouts.
4 For the word of the LORD is upright; and all his work is done in faithfulness.
5 He loves righteousness and justice; the earth is full of the steadfast love of the LORD.
6 By the word of the LORD the heavens were made, and all their host by the breath of his mouth.
7 He gathered the waters of the sea as in a bottle; he put the deeps in storehouses.
8 Let all the earth fear the LORD, let all the inhabitants of the world stand in awe of him!
9 For he spoke, and it came to be; he commanded, and it stood forth.
10 The LORD brings the counsel of the nations to nought; he frustrates the plans of the peoples.
11 The counsel of the LORD stands for ever, the thoughts of his heart to all generations.
12 Blessed is the nation whose God is the LORD, the people whom he has chosen as his heritage!
13 The LORD looks down from heaven, he sees all the sons of men;
14 from where he sits enthroned he looks forth on all the inhabitants of the earth,
15 he who fashions the hearts of them all, and observes all their deeds.
16 A king is not saved by his great army; a warrior is not delivered by his great strength.
17 The war horse is a vain hope for victory, and by its great might it cannot save.
18 Behold, the eye of the LORD is on those who fear him, on those who hope in his steadfast love,
19 that he may deliver their soul from death, and keep them alive in famine.
20 Our soul waits for the LORD; he is our help and shield.
21 Yea, our heart is glad in him, because we trust in his holy name.
22 Let thy steadfast love, O LORD, be upon us, even as we hope in thee.

1 கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.
2 கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மைபாராட்டும்; சிறுமைப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள்.
3 என்னோடேகூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக.
4 நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.
5 அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை.
6 இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்.
7 கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்.
8 கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
9 கர்த்தருடைய பரிசுத்தவான்களே அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை.
10 சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.
11 பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்.
12 நன்மையைக் காணும்படி, ஜீவனை விரும்பி, நீடித்த நாட்களை அபேட்சிக்கிற மனுஷன் யார்?
13 உன் நாவைப் பொல்லாப்புக்கும், உன் உதடுகளைக் கபட்டுவசனிப்புக்கும் விலக்கிக் காத்துக்கொள்.
14 தீமையை விட்டு விலகி, நன்மைசெய்; சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள்.
15 கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.
16 தீமைசெய்கிறவர்களுடைய பேரைப் பூமியில் இராமல் அற்றுப்போகப்பண்ண கர்த்தருடைய முகம் அவர்களுக்கு விரோதமாயிருக்கிறது.
17 நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்.
18 நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.
19 நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.
20 அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்; அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை.
21 தீமை துன்மார்க்கனைக் கொல்லும்; நீதிமானைப் பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள்.
22 கர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது.


0 A Psalm of David, when he feigned madness before Abimelech, so that he drove him out, and he went away.
1 I will bless the LORD at all times; his praise shall continually be in my mouth.
2 My soul makes its boast in the LORD; let the afflicted hear and be glad.
3 O magnify the LORD with me, and let us exalt his name together!
4 I sought the LORD, and he answered me, and delivered me from all my fears.
5 Look to him, and be radiant; so your faces shall never be ashamed.
6 This poor man cried, and the LORD heard him, and saved him out of all his troubles.
7 The angel of the LORD encamps around those who fear him, and delivers them.
8 O taste and see that the LORD is good! Happy is the man who takes refuge in him!
9 O fear the LORD, you his saints, for those who fear him have no want!
10 The young lions suffer want and hunger; but those who seek the LORD lack no good thing.
11 Come, O sons, listen to me, I will teach you the fear of the LORD.
12 What man is there who desires life, and covets many days, that he may enjoy good?
13 Keep your tongue from evil, and your lips from speaking deceit.
14 Depart from evil, and do good; seek peace, and pursue it.
15 The eyes of the LORD are toward the righteous, and his ears toward their cry.
16 The face of the LORD is against evildoers, to cut off the remembrance of them from the earth.
17 When the righteous cry for help, the LORD hears, and delivers them out of all their troubles.
18 The LORD is near to the brokenhearted, and saves the crushed in spirit.
19 Many are the afflictions of the righteous; but the LORD delivers him out of them all.
20 He keeps all his bones; not one of them is broken.
21 Evil shall slay the wicked; and those who hate the righteous will be condemned.
22 The LORD redeems the life of his servants; none of those who take refuge in him will be condemned.

1 கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும்.
2 நீர் கேடகத்தையும் பரிசையையும் பிடித்து, எனக்கு ஒத்தாசையாக எழுந்து நில்லும்.
3 என்னைத் துன்பப்படுத்துகிறவர்களோடு எதிர்த்துநின்று, ஈட்டியையோங்கி அவர்களை மறித்து: நான் உன் இரட்சிப்பு என்று என் ஆத்துமாவுக்குச் சொல்லும்.
4 என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கப்பட்டுக் கலங்குவார்களாக; எனக்குத் தீங்குசெய்ய நினைக்கிறவர்கள் நாணமடைவார்களாக.
5 அவர்கள் காற்றுமுகத்தில் பறக்கும் பதரைப்போலாவார்களாக; கர்த்தருடைய தூதன் அவர்களைத் துரத்துவானாக.
6 அவர்களுடைய வழி இருளும் சறுக்கலுமாயிருப்பதாக; கர்த்தருடைய தூதன் அவர்களைப் பின்தொடருவானாக.
7 முகாந்தரமில்லாமல் எனக்காகத் தங்கள் வலையைக் குழியில் ஒளித்து வைத்தார்கள்; முகாந்தரமில்லாமல் என் ஆத்துமாவுக்குப் படுகுழி வெட்டினார்கள்.
8 அவன் நினையாத அழிவு அவனுக்கு வரவும், அவன் மறைவாய் வைத்த வலை அவனையே பிடிக்கவுங்கடவது; அவனே அந்தக் குழியில் விழுந்து அழிவானாக.
9 என் ஆத்துமா கர்த்தரில் களிகூர்ந்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும்.
10 சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கும், சிறுமையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிற உமக்கொப்பானவர் யார் கர்த்தாவே, என்று என் எலும்புகளெல்லாம் சொல்லும்.
11 கொடுமையான சாட்சிகள் எழும்பி, நான் அறியாததை என்னிடத்தில் கேட்கிறார்கள்.
12 நான் செய்த நன்மைக்குப் பதிலாகத் தீமைசெய்கிறார்கள்; என் ஆத்துமா திக்கற்றுப்போகப் பார்க்கிறார்கள்.
13 அவர்கள் வியாதியாயிருந்தபோது இரட்டு என் உடுப்பாயிருந்தது; நான் உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரப்படுத்தினேன்; என் ஜெபமும் என் மடியிலே திரும்பவந்தது.
14 நான் அவனை என் சிநேகிதனாகவும் சகோதரனாகவும் பாவித்து நடந்துகொண்டேன்; தாய்க்காகத் துக்கிக்கிறவனைப்போல் துக்கவஸ்திரம் தரித்துத் தலைகவிழ்ந்து நடந்தேன்.
15 ஆனாலும் எனக்கு ஆபத்துண்டானபோது அவர்கள் சந்தோஷப்பட்டுக் கூட்டங்கூடினார்கள்; நீசரும் நான் அறியாதவர்களும் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, ஓயாமல் என்னை நிந்தித்தார்கள்.
16 அப்பத்திற்காக இச்சகம்பேசுகிற பரியாசக்காரரோடே சேர்ந்துகொண்டு என்பேரில் பற்கடிக்கிறார்கள்.
17 ஆண்டவரே, எதுவரைக்கும் இதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்? என் ஆத்துமாவை அழிவுக்கும், எனக்கு அருமையானதைச் சிங்கக்குட்டிகளுக்கும் தப்புவியும்.
18 மகா சபையிலே உம்மைத் துதிப்பேன், திரளான ஜனங்களுக்குள்ளே உம்மைப் புகழுவேன்.
19 வீணாய் எனக்குச் சத்துருக்களானவர்கள் என்னிமித்தம் சந்தோஷியாமலும், முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் கண் சிமிட்டாமலும் இருப்பார்களாக.
20 அவர்கள் சமாதானமாய்ப் பேசாமல், தேசத்திலே அமைதலாயிருக்கிறவர்களுக்கு விரோதமாய் வஞ்சகமான காரியங்களைக் கருதுகிறார்கள்.
21 எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாய்த் திறந்து, ஆ ஆ, ஆ ஆ, எங்கள் கண் கண்டது என்கிறார்கள்.
22 கர்த்தாவே, நீர் இதைக் கண்டீர், மவுனமாயிராதேயும்; ஆண்டவரே எனக்குத் தூரமாகாதேயும்.
23 என் தேவனே, என் ஆண்டவரே எனக்கு நியாயஞ்செய்யவும் என் வழக்கைத் தீர்க்கவும் விழித்துக்கொண்டு எழுந்தருளும்.
24 என் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நீதியின்படி என்னை நியாயம்விசாரியும், என்னைக்குறித்து அவர்களை மகிழவொட்டாதிரும்.
25 அவர்கள் தங்கள் இருதயத்திலே: ஆ ஆ, இதுவே நாங்கள் விரும்பினது என்று சொல்லாதபடிக்கும், அவனை விழுங்கிவிட்டோம் என்று பேசாதபடிக்கும் செய்யும்.
26 எனக்கு நேரிட்ட ஆபத்துக்காகச் சந்தோஷிக்கிறவர்கள் ஏகமாய் வெட்கி நாணி, எனக்கு விரோதமாய்ப் பெருமை பாராட்டுகிறவர்கள் வெட்கத்தாலும் இலச்சையாலும் மூடப்படக்கடவர்கள்.
27 என் நீதிவிளங்க விரும்புகிறவர்கள் கெம்பீரித்து மகிழ்ந்து, தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமையுண்டாவதாக என்று எப்போதும் சொல்லக்கடவர்கள்.
28 என் நாவு உமது நீதியையும், நாள்முழுதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும்.


0 A Psalm of David.
1 Contend, O LORD, with those who contend with me; fight against those who fight against me!
2 Take hold of shield and buckler, and rise for my help!
3 Draw the spear and javelin against my pursuers! Say to my soul, "I am your deliverance!"
4 Let them be put to shame and dishonor who seek after my life! Let them be turned back and confounded who devise evil against me!
5 Let them be like chaff before the wind, with the angel of the LORD driving them on!
6 Let their way be dark and slippery, with the angel of the LORD pursuing them!
7 For without cause they hid their net for me; without cause they dug a pit for my life.
8 Let ruin come upon them unawares! And let the net which they hid ensnare them; let them fall therein to ruin!
9 Then my soul shall rejoice in the LORD, exulting in his deliverance.
10 All my bones shall say, "O LORD, who is like thee, thou who deliverest the weak from him who is too strong for him, the weak and needy from him who despoils him?"
11 Malicious witnesses rise up; they ask me of things that I know not.
12 They requite me evil for good; my soul is forlorn.
13 But I, when they were sick -- I wore sackcloth, I afflicted myself with fasting. I prayed with head bowed on my bosom,
14 as though I grieved for my friend or my brother; I went about as one who laments his mother, bowed down and in mourning.
15 But at my stumbling they gathered in glee, they gathered together against me; cripples whom I knew not slandered me without ceasing;
16 they impiously mocked more and more, gnashing at me with their teeth.
17 How long, O LORD, wilt thou look on? Rescue me from their ravages, my life from the lions!
18 Then I will thank thee in the great congregation; in the mighty throng I will praise thee.
19 Let not those rejoice over me who are wrongfully my foes, and let not those wink the eye who hate me without cause.
20 For they do not speak peace, but against those who are quiet in the land they conceive words of deceit.
21 They open wide their mouths against me; they say, "Aha, Aha! our eyes have seen it!"
22 Thou hast seen, O LORD; be not silent! O Lord, be not far from me!
23 Bestir thyself, and awake for my right, for my cause, my God and my Lord!
24 Vindicate me, O LORD, my God, according to thy righteousness; and let them not rejoice over me!
25 Let them not say to themselves, "Aha, we have our heart's desire!" Let them not say, "We have swallowed him up."
26 Let them be put to shame and confusion altogether who rejoice at my calamity! Let them be clothed with shame and dishonor who magnify themselves against me!
27 Let those who desire my vindication shout for joy and be glad, and say evermore, "Great is the LORD, who delights in the welfare of his servant!"
28 Then my tongue shall tell of thy righteousness and of thy praise all the day long.

1 துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்; அவன் கண்களுக்குமுன் தெய்வபயம் இல்லை.
2 அவன் தன் அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படுமளவும், தன்பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே இச்சகம் பேசுகிறான்.
3 அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது; புத்தியாய் நடந்துகொள்வதையும் நன்மைசெய்வதையும் விட்டுவிட்டான்.
4 அவன் தன் படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து, நல்லதல்லாத வழியிலே நிலைத்து, பொல்லாப்பை வெறுக்காதிருக்கிறான்.
5 கர்த்தாவே, உமது கிருபை வானங்களில் விளங்குகிறது; உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிறது.
6 உமது நீதி மகத்தான பர்வதங்கள்போலவும், உமது நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது; கர்த்தாவே, மனுஷரையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.
7 தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்.
8 உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்.
9 ஜீவஊற்று உம்மிடத்தில் இருக்கிறது; உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்.
10 உம்மை அறிந்தவர்கள்மேல் உமது கிருபையையும், செம்மையான இருதயமுள்ளவர்கள்மேல் உமது நீதியையும் பாராட்டியருளும்.
11 பெருமைக்காரரின் கால் என்மேல்வராமலும், துன்மார்க்கருடைய கை என்னைப் பறக்கடியாமலும் இருப்பதாக.
12 அதோ அக்கிரமக்காரர் விழுந்தார்கள்; எழுந்திருக்கமாட்டாமல் தள்ளுண்டுபோனார்கள்.


0 To the choirmaster. A Psalm of David, the servant of the LORD.
1 Transgression speaks to the wicked deep in his heart; there is no fear of God before his eyes.
2 For he flatters himself in his own eyes that his iniquity cannot be found out and hated.
3 The words of his mouth are mischief and deceit; he has ceased to act wisely and do good.
4 He plots mischief while on his bed; he sets himself in a way that is not good; he spurns not evil.
5 Thy steadfast love, O LORD, extends to the heavens, thy faithfulness to the clouds.
6 Thy righteousness is like the mountains of God, thy judgments are like the great deep; man and beast thou savest, O LORD.
7 How precious is thy steadfast love, O God! The children of men take refuge in the shadow of thy wings.
8 They feast on the abundance of thy house, and thou givest them drink from the river of thy delights.
9 For with thee is the fountain of life; in thy light do we see light.
10 O continue thy steadfast love to those who know thee, and thy salvation to the upright of heart!
11 Let not the foot of arrogance come upon me, nor the hand of the wicked drive me away.
12 There the evildoers lie prostrate, they are thrust down, unable to rise.

1 பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடுசெய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே.
2 அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண்டைப்போல் வாடிப்போவார்கள்.
3 கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்.
4 கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.
5 உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.
6 உன் நீதியை வெளிச்சத்தைப்போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கப்பண்ணுவார்.
7 கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன்மேலும் தீவினைகளைச் செய்கிற மனுஷன்மேலும் எரிச்சலாகாதே.
8 கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு, பொல்லாப்புச்செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்.
9 பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
10 இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை.
11 சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.
12 துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாய்த் தீங்கு நினைத்து, அவன்பேரில் பற்கடிக்கிறான்.
13 ஆண்டவர் அவனைப்பார்த்து நகைக்கிறார்; அவனுடைய நாள் வருகிறதென்று காண்கிறார்.
14 சிறுமையும் எளிமையுமானவனை மடிவிக்கவும், செம்மை மார்க்கத்தாரை விழப்பண்ணவும், துன்மார்க்கர் பட்டயத்தை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள்.
15 ஆனாலும் அவர்கள் பட்டயம் அவர்களுடைய இருதயத்திற்குள் உருவிப்போம்; அவர்கள் வில்லுகள் முறியும்.
16 அநேக துன்மார்க்கருக்குள்ள செல்வத்திரட்சியைப்பார்க்கிலும், நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது.
17 துன்மார்க்கருடைய புயங்கள் முறியும்; நீதிமான்களையோ கர்த்தர் தாங்குகிறார்.
18 உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும்.
19 அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து, பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள்.
20 துன்மார்க்கரோ அழிந்துபோவார்கள், கர்த்தருடைய சத்துருக்கள் ஆட்டுக்குட்டிகளின் நிணத்தைப்போல் புகைந்துபோவார்கள், அவர்கள் புகையாய்ப் புகைந்துபோவார்கள்.
21 துன்மார்க்கன் கடன்வாங்கிச் செலுத்தாமற்போகிறான்; நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான்.
22 அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்; அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுப்புண்டுபோவார்கள்.
23 நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்.
24 அவன் விழுந்தாலும் தள்ளுண்டுபோவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்.
25 நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன், ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை.
26 அவன் நித்தம் இரங்கிக் கடன்கொடுக்கிறான், அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும்.
27 தீமையை விட்டு விலகி, நன்மைசெய்; என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய்.
28 கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர், அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்; துன்மார்க்கருடைய சந்ததியோ அறுப்புண்டுபோம்.
29 நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.
30 நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைத்து, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும்.
31 அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை.
32 துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, அவனைக் கொல்ல வகைதேடுகிறான்.
33 கர்த்தரோ அவனை இவன் கையில் விடுவதில்லை; அவன் நியாயம் விசாரிக்கப்படுகையில், அவனை ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பதுமில்லை.
34 நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய்.
35 கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன், அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான்.
36 ஆனாலும் அவன் ஒழிந்துபோனான்: பாருங்கள், அவன் இல்லை; அவனைத் தேடினேன், அவன் காணப்படவில்லை.
37 நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம்.
38 அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்; அறுப்புண்டுபோவதே துன்மார்க்கரின் முடிவு.
39 நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம்.
40 கர்த்தர் அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களை விடுவிப்பார்; அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால், அவர்களைத் துன்மார்க்கருடைய கைக்குத் தப்புவித்து இரட்சிப்பார்.


0 A Psalm of David.
1 Fret not yourself because of the wicked, be not envious of wrongdoers!
2 For they will soon fade like the grass, and wither like the green herb.
3 Trust in the LORD, and do good; so you will dwell in the land, and enjoy security.
4 Take delight in the LORD, and he will give you the desires of your heart.
5 Commit your way to the LORD; trust in him, and he will act.
6 He will bring forth your vindication as the light, and your right as the noonday.
7 Be still before the LORD, and wait patiently for him; fret not yourself over him who prospers in his way, over the man who carries out evil devices!
8 Refrain from anger, and forsake wrath! Fret not yourself; it tends only to evil.
9 For the wicked shall be cut off; but those who wait for the LORD shall possess the land.
10 Yet a little while, and the wicked will be no more; though you look well at his place, he will not be there.
11 But the meek shall possess the land, and delight themselves in abundant prosperity.
12 The wicked plots against the righteous, and gnashes his teeth at him;
13 but the LORD laughs at the wicked, for he sees that his day is coming.
14 The wicked draw the sword and bend their bows, to bring down the poor and needy, to slay those who walk uprightly;
15 their sword shall enter their own heart, and their bows shall be broken.
16 Better is a little that the righteous has than the abundance of many wicked.
17 For the arms of the wicked shall be broken; but the LORD upholds the righteous.
18 The LORD knows the days of the blameless, and their heritage will abide for ever;
19 they are not put to shame in evil times, in the days of famine they have abundance.
20 But the wicked perish; the enemies of the LORD are like the glory of the pastures, they vanish -- like smoke they vanish away.
21 The wicked borrows, and cannot pay back, but the righteous is generous and gives;
22 for those blessed by the LORD shall possess the land, but those cursed by him shall be cut off.
23 The steps of a man are from the LORD, and he establishes him in whose way he delights;
24 though he fall, he shall not be cast headlong, for the LORD is the stay of his hand.
25 I have been young, and now am old; yet I have not seen the righteous forsaken or his children begging bread.
26 He is ever giving liberally and lending, and his children become a blessing.
27 Depart from evil, and do good; so shall you abide for ever.
28 For the LORD loves justice; he will not forsake his saints. The righteous shall be preserved for ever, but the children of the wicked shall be cut off.
29 The righteous shall possess the land, and dwell upon it for ever.
30 The mouth of the righteous utters wisdom, and his tongue speaks justice.
31 The law of his God is in his heart; his steps do not slip.
32 The wicked watches the righteous, and seeks to slay him.
33 The LORD will not abandon him to his power, or let him be condemned when he is brought to trial.
34 Wait for the LORD, and keep to his way, and he will exalt you to possess the land; you will look on the destruction of the wicked.
35 I have seen a wicked man overbearing, and towering like a cedar of Lebanon.
36 Again I passed by, and, lo, he was no more; though I sought him, he could not be found.
37 Mark the blameless man, and behold the upright, for there is posterity for the man of peace.
38 But transgressors shall be altogether destroyed; the posterity of the wicked shall be cut off.
39 The salvation of the righteous is from the LORD; he is their refuge in the time of trouble.
40 The LORD helps them and delivers them; he delivers them from the wicked, and saves them, because they take refuge in him.

1 கர்த்தாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ளாதேயும்; உம்முடைய உக்கிரத்தில் என்னைத் தண்டியாதேயும்.
2 உம்முடைய அம்புகள் எனக்குள்ளே தைத்திருக்கிறது; உமது கை என்னை இருத்துகிறது.
3 உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை; என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை.
4 என் அக்கிரமங்கள் என் தலைக்குமேலாகப் பெருகிற்று, அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கக் கூடாத பாரமாயிற்று.
5 என் மதிகேட்டினிமித்தம் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.
6 நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள்முழுதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்.
7 என் குடல்கள் எரிபந்தமாய் எரிகிறது, என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை.
8 நான் பெலனற்றுப்போய், மிகவும் நொறுக்கப்பட்டேன்; என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன்.
9 ஆண்டவரே, என் ஏங்கலெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; என் தவிப்பு உமக்கு மறைவாயிருக்கவில்லை.
10 என் உள்ளம் குழம்பி அலைகிறது; என் பெலன் என்னை விட்டு விலகி, என் கண்களின் ஒளி முதலாய் இல்லாமற்போயிற்று.
11 என் சிநேகிதரும் என் தோழரும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்; என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள்.
12 என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; எனக்குப் பொல்லாங்கு தேடுகிறவர்கள் கேடானவைகளைப்பேசி, நாள்முழுதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள்.
13 நானோ செவிடனைப்போலக் கேளாதவனாகவும், ஊமையனைப்போல வாய்திறவாதவனாகவும் இருக்கிறேன்.
14 காதுகேளாதவனும், தன் வாயில் மறு உத்தரவுகளில்லாதவனுமாயிருக்கிற மனுஷனைப்போலானேன்.
15 கர்த்தாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; என் தேவனாகிய ஆண்டவரே, நீர் மறு உத்தரவு அருளினீர்.
16 அவர்கள் என்னிமித்தம் சந்தோஷப்படாதபடிக்கு இப்படிச்சொன்னேன்; என் கால் தவறும்போது என்மேல் பெருமைபாராட்டுவார்களே.
17 நான் தடுமாறி விழ ஏதுவாயிருக்கிறேன்; என் துக்கம் எப்பொழுதும் என் முன்பாக இருக்கிறது.
18 என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு, என் பாவத்தினிமித்தம் விசாரப்படுகிறேன்.
19 என் சத்துருக்கள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள்; முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் பெருகியிருக்கிறார்கள்.
20 நான் நன்மையைப் பின்பற்றுகிறபடியால், நன்மைக்குத் தீமை செய்கிறவர்கள் என்னை விரோதிக்கிறார்கள்.
21 கர்த்தாவே, என்னைக் கைவிடாதேயும்; என் தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்.
22 என் இரட்சிப்பாகிய ஆண்டவரே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும்.


0 A Psalm of David, for the memorial offering.
1 O LORD, rebuke me not in thy anger, nor chasten me in thy wrath!
2 For thy arrows have sunk into me, and thy hand has come down on me.
3 There is no soundness in my flesh because of thy indignation; there is no health in my bones because of my sin.
4 For my iniquities have gone over my head; they weigh like a burden too heavy for me.
5 My wounds grow foul and fester because of my foolishness,
6 I am utterly bowed down and prostrate; all the day I go about mourning.
7 For my loins are filled with burning, and there is no soundness in my flesh.
8 I am utterly spent and crushed; I groan because of the tumult of my heart.
9 Lord, all my longing is known to thee, my sighing is not hidden from thee.
10 My heart throbs, my strength fails me; and the light of my eyes -- it also has gone from me.
11 My friends and companions stand aloof from my plague, and my kinsmen stand afar off.
12 Those who seek my life lay their snares, those who seek my hurt speak of ruin, and meditate treachery all the day long.
13 But I am like a deaf man, I do not hear, like a dumb man who does not open his mouth.
14 Yea, I am like a man who does not hear, and in whose mouth are no rebukes.
15 But for thee, O LORD, do I wait; it is thou, O LORD my God, who wilt answer.
16 For I pray, "Only let them not rejoice over me, who boast against me when my foot slips!"
17 For I am ready to fall, and my pain is ever with me.
18 I confess my iniquity, I am sorry for my sin.
19 Those who are my foes without cause are mighty, and many are those who hate me wrongfully.
20 Those who render me evil for good are my adversaries because I follow after good.
21 Do not forsake me, O LORD! O my God, be not far from me!
22 Make haste to help me, O Lord, my salvation!

1 என் நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு நான் என் வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்குமட்டும் என் வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன்.
2 நான் மவுனமாகி, ஊமையனாயிருந்தேன், நலமானதையும் பேசாமல் அமர்ந்திருந்தேன்; ஆனாலும் என் துக்கம் அதிகரித்தது;
3 என் இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது; நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது; அப்பொழுது என் நாவினால் விண்ணப்பம்செய்தேன்.
4 கர்த்தாவே, நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும்.
5 இதோ, என் நாட்களை நாலுவிரற்கடையளவாக்கினீர்; என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாததுபோலிருக்கிறது; எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா.)
6 வேஷமாகவே மனுஷன் திரிகிறான்; விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்; ஆஸ்தியைச் சேர்க்கிறான். யார் அதை வாரிக்கொள்ளுவான் என்று அறியான்.
7 இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என் நம்பிக்கை.
8 என் மீறுதல்கள் எல்லாவற்றிலுமிருந்து என்னை விடுதலையாக்கும், மூடனுடைய நிந்தனைக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்.
9 நீரே இதைச் செய்தீர் என்று நான் வாயைத் திறவாமல் மவுனமாயிருந்தேன்.
10 என்னிலிருந்து உம்முடைய வாதையை எடுத்துப்போடும்; உமதுகரத்தின் அடிகளால் நான் சோர்ந்துபோனேன்.
11 அக்கிரமத்தினிமித்தம் நீர் மனுஷனைக் கடிந்துகொண்டு தண்டிக்கிறபோது அவன் வடிவைப் பொட்டரிப்பைப்போல் அழியப்பண்ணுகிறீர்; நிச்சயமாக எந்த மனுஷனும் மாயையே.(சேலா.)
12 கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேட்டு, என் கூப்பிடுதலுக்குச் செவிகொடும்; என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும்; என் பிதாக்களெல்லாரையும்போல நானும் உமக்குமுன்பாக அந்நியனும் பரதேசியுமாயிருக்கிறேன்.
13 நான் இனி இராமற்போகுமுன்னே தேறுதலடையும்படி என்னிடத்தில் பொறுமையாயிரும்.


0 To the choirmaster: to Jeduthun. A Psalm of David.
1 I said, "I will guard my ways, that I may not sin with my tongue; I will bridle my mouth, so long as the wicked are in my presence."
2 I was dumb and silent, I held my peace to no avail; my distress grew worse,
3 my heart became hot within me. As I mused, the fire burned; then I spoke with my tongue:
4 "LORD, let me know my end, and what is the measure of my days; let me know how fleeting my life is!
5 Behold, thou hast made my days a few handbreadths, and my lifetime is as nothing in thy sight. Surely every man stands as a mere breath! [Selah]
6 Surely man goes about as a shadow! Surely for nought are they in turmoil; man heaps up, and knows not who will gather!
7 "And now, Lord, for what do I wait? My hope is in thee.
8 Deliver me from all my transgressions. Make me not the scorn of the fool!
9 I am dumb, I do not open my mouth; for it is thou who hast done it.
10 Remove thy stroke from me; I am spent by the blows of thy hand.
11 When thou dost chasten man with rebukes for sin, thou dost consume like a moth what is dear to him; surely every man is a mere breath! [Selah]
12 "Hear my prayer, O LORD, and give ear to my cry; hold not thy peace at my tears! For I am thy passing guest, a sojourner, like all my fathers.
13 Look away from me, that I may know gladness, before I depart and be no more!"

1 கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்.
2 பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி,
3 நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள்.
4 அகங்காரிகளையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் நோக்காமல் கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்.
5 என் தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்கள் நிமித்தஞ்செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது; ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச்சொல்லிமுடியாது; நான் அவைகளைச் சொல்லி அறிவிக்கவேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்.
6 பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பாமல், என் செவிகளைத் திறந்தீர்; சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரணபலியையும் நீர் கேட்கவில்லை.
7 அப்பொழுது நான்: இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது;
8 என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன்.
9 மகா சபையிலே நீதியைப் பிரசங்கித்தேன்; என் உதடுகளை மூடேன், கர்த்தாவே, நீர் அதை அறிவீர்.
10 உம்முடைய நீதியை நான் என் இருதயத்திற்குள் மறைத்துவைக்கவில்லை; உமது சத்தியத்தையும் உமது இரட்சிப்பையும் சொல்லியிருக்கிறேன்; உமது கிருபையையும் உமது உண்மையையும் மகா சபைக்கு அறிவியாதபடிக்கு நான் ஒளித்துவைக்கவில்லை.
11 கர்த்தாவே, உம்முடைய இரக்கங்களை எனக்குக் கிடையாமற் போகப்பண்ணாதேயும்; உமது கிருபையும் உமது உண்மையும் எப்பொழுதும் என்னைக் காக்கக்கடவது.
12 எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் என்னைச் சூழ்ந்துகொண்டது, என் அக்கிரமங்கள் என்னைத் தொடர்ந்துபிடித்தது, நான் நிமிர்ந்துபார்க்கக் கூடாதிருக்கிறது, அவைகள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறது, என் இருதயம் சோர்ந்துபோகிறது.
13 கர்த்தாவே, என்னை விடுவித்தருளும்; கர்த்தாவே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரியும்.
14 என் பிராணனை அழிக்கத் தேடுகிறவர்கள் ஏகமாய் வெட்கி நாணி, எனக்குத் தீங்குசெய்ய விரும்புகிறவர்கள் பின்னிட்டு இலச்சையடைவார்களாக.
15 என்பேரில் ஆ ஆ! ஆ ஆ! என்று சொல்லுகிறவர்கள், தங்கள் வெட்கத்தின் பலனையடைந்து, கைவிடப்படுவார்களாக.
16 உம்மைத் தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உம்முடைய இரட்சிப்பை விரும்புகிறவர்கள் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக.
17 நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்; தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்; என் தேவனே, தாமதியாதேயும்.


0 To the choirmaster. A Psalm of David.
1 I waited patiently for the LORD; he inclined to me and heard my cry.
2 He drew me up from the desolate pit, out of the miry bog, and set my feet upon a rock, making my steps secure.
3 He put a new song in my mouth, a song of praise to our God. Many will see and fear, and put their trust in the LORD.
4 Blessed is the man who makes the LORD his trust, who does not turn to the proud, to those who go astray after false gods!
5 Thou hast multiplied, O LORD my God, thy wondrous deeds and thy thoughts toward us; none can compare with thee! Were I to proclaim and tell of them, they would be more than can be numbered.
6 Sacrifice and offering thou dost not desire; but thou hast given me an open ear. Burnt offering and sin offering thou hast not required.
7 Then I said, "Lo, I come; in the roll of the book it is written of me;
8 I delight to do thy will, O my God; thy law is within my heart."
9 I have told the glad news of deliverance in the great congregation; lo, I have not restrained my lips, as thou knowest, O LORD.
10 I have not hid thy saving help within my heart, I have spoken of thy faithfulness and thy salvation; I have not concealed thy steadfast love and thy faithfulness from the great congregation.
11 Do not thou, O LORD, withhold thy mercy from me, let thy steadfast love and thy faithfulness ever preserve me!
12 For evils have encompassed me without number; my iniquities have overtaken me, till I cannot see; they are more than the hairs of my head; my heart fails me.
13 Be pleased, O LORD, to deliver me! O LORD, make haste to help me!
14 Let them be put to shame and confusion altogether who seek to snatch away my life; let them be turned back and brought to dishonor who desire my hurt!
15 Let them be appalled because of their shame who say to me, "Aha, Aha!"
16 But may all who seek thee rejoice and be glad in thee; may those who love thy salvation say continually, "Great is the LORD!"
17 As for me, I am poor and needy; but the Lord takes thought for me. Thou art my help and my deliverer; do not tarry, O my God!

1 சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்.
2 கர்த்தர் அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடே வைப்பார்; பூமியில் அவன் பாக்கியவானாயிருப்பான்; அவன் சத்துருக்களின் இஷ்டத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடீர்.
3 படுக்கையின்மேல் வியாதியாய்க்கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர்.
4 கர்த்தாவே, என்மேல் இரக்கமாயிரும்; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன், என் ஆத்துமாவைக் குணமாக்கும் என்று நான் சொன்னேன்.
5 அவன் எப்பொழுது சாவான், அவன் பேர் எப்பொழுது அழியும்? என்று என் சத்துருக்கள் எனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறார்கள்.
6 ஒருவன் என்னைப் பார்க்கவந்தால் வஞ்சனையாய்ப் பேசுகிறான்; அவன் தன் இருதயத்தில் அக்கிரமத்தைச் சேகரித்துக்கொண்டு, தெருவிலேபோய், அதைத் தூற்றுகிறான்.
7 என் பகைஞரெல்லாரும் என்மேலே ஏகமாய் முணுமுணுத்து, எனக்கு விரோதமாயிருந்து எனக்குப் பொல்லாங்கு நினைத்து,
8 தீராவியாதி அவனைப் பிடித்துக்கொண்டது; படுக்கையில் கிடக்கிற அவன் இனி எழுந்திருப்பதில்லை என்கிறார்கள்.
9 என் பிராணசிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.
10 கர்த்தாவே, நீர் எனக்கு இரங்கி, நான் அவர்களுக்குச் சரிக்கட்ட என்னை எழுந்திருக்கப்பண்ணும்.
11 என் சத்துரு என்மேல் ஜெயங்கொள்ளாததினால், நீர் என்மேல் பிரியமாயிருக்கிறீரென்று அறிவேன்.
12 நீர் என் உத்தமத்திலே என்னைத்தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர்.
13 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஆமென், ஆமென்.


0 To the choirmaster. A Psalm of David.
1 Blessed is he who considers the poor! The LORD delivers him in the day of trouble;
2 the LORD protects him and keeps him alive; he is called blessed in the land; thou dost not give him up to the will of his enemies.
3 The LORD sustains him on his sickbed; in his illness thou healest all his infirmities.
4 As for me, I said, "O LORD, be gracious to me; heal me, for I have sinned against thee!"
5 My enemies say of me in malice: "When will he die, and his name perish?"
6 And when one comes to see me, he utters empty words, while his heart gathers mischief; when he goes out, he tells it abroad.
7 All who hate me whisper together about me; they imagine the worst for me.
8 They say, "A deadly thing has fastened upon him; he will not rise again from where he lies."
9 Even my bosom friend in whom I trusted, who ate of my bread, has lifted his heel against me.
10 But do thou, O LORD, be gracious to me, and raise me up, that I may requite them!
11 By this I know that thou art pleased with me, in that my enemy has not triumphed over me.
12 But thou hast upheld me because of my integrity, and set me in thy presence for ever.
13 Blessed be the LORD, the God of Israel, from everlasting to everlasting! Amen and Amen.

1 மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.
2 என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்?
3 உன் தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் என்னிடத்தில் சொல்லுகிறபடியால், இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று.
4 முன்னே நான் பண்டிகையை ஆசரிக்கிற ஜனங்களோடே கூடநடந்து, கூட்டத்தின் களிப்பும் துதியுமான சத்தத்தோடே தேவாலயத்திற்குப் போய்வருவேனே; இவைகளை நான் நினைக்கும்போது என் உள்ளம் எனக்குள்ளே உருகுகிறது.
5 என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன்.
6 என் தேவனே, என் ஆத்துமா எனக்குள் கலங்குகிறது; ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலையிலுமிருந்து உம்மை நினைக்கிறேன்.
7 உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது; உமது அலைகளும் திரைகளும் எல்லாம் என்மேல் புரண்டுபோகிறது.
8 ஆகிலும் கர்த்தர் பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்; இராக்காலத்திலே அவரைப் பாடும்பாட்டு என் வாயிலிருக்கிறது; என் ஜீவனுடைய தேவனை நோக்கி விண்ணப்ஞ்செய்கிறேன்.
9 நான் என் கன்மலையாகிய தேவனை நோக்கி: ஏன் என்னை மறந்தீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும் என்று சொல்லுகிறேன்.
10 உன் தேவன் எங்கே என்று என் சத்துருக்கள் நாள்தோறும் என்னோடே சொல்லி, என்னை நிந்திப்பது என் எலும்புகளை உருவக்குத்துகிறதுபோல் இருக்கிறது.
11 என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.


0 To the choirmaster. A Maskil of the Sons of Korah.
1 As a hart longs for flowing streams, so longs my soul for thee, O God.
2 My soul thirsts for God, for the living God. When shall I come and behold the face of God?
3 My tears have been my food day and night, while men say to me continually, "Where is your God?"
4 These things I remember, as I pour out my soul: how I went with the throng, and led them in procession to the house of God, with glad shouts and songs of thanksgiving, a multitude keeping festival.
5 Why are you cast down, O my soul, and why are you disquieted within me? Hope in God; for I shall again praise him, my help
6 and my God. My soul is cast down within me, therefore I remember thee from the land of Jordan and of Hermon, from Mount Mizar.
7 Deep calls to deep at the thunder of thy cataracts; all thy waves and thy billows have gone over me.
8 By day the LORD commands his steadfast love; and at night his song is with me, a prayer to the God of my life.
9 I say to God, my rock: "Why hast thou forgotten me? Why go I mourning because of the oppression of the enemy?"
10 As with a deadly wound in my body, my adversaries taunt me, while they say to me continually, "Where is your God?"
11 Why are you cast down, O my soul, and why are you disquieted within me? Hope in God; for I shall again praise him, my help and my God.

1 தேவனே, நீர் என் நியாயத்தை விசாரித்து, பக்தியில்லாத ஜாதியாரோடு எனக்காக வழக்காடி, சூதும் அநியாயமுமான மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்.
2 என் அரணாகிய தேவன் நீர்; ஏன் என்னைத் தள்ளிவிடுகிறீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும்?
3 உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டுபோவதாக.
4 அப்பொழுது நான் தேவனுடைய பீடத்தண்டைக்கும், எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிற தேவனிடத்திற்கும் பிரவேசிப்பேன். தேவனே, என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் துதிப்பேன்.
5 என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.


1 Vindicate me, O God, and defend my cause against an ungodly people; from deceitful and unjust men deliver me!
2 For thou art the God in whom I take refuge; why hast thou cast me off? Why go I mourning because of the oppression of the enemy?
3 Oh send out thy light and thy truth; let them lead me, let them bring me to thy holy hill and to thy dwelling!
4 Then I will go to the altar of God, to God my exceeding joy; and I will praise thee with the lyre, O God, my God.
5 Why are you cast down, O my soul, and why are you disquieted within me? Hope in God; for I shall again praise him, my help and my God.

1 தேவனே, எங்கள் பிதாக்களுடைய நாட்களாகிய பூர்வநாட்களில் நீர் நடப்பித்த கிரியைகளை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்; அவைகளை எங்கள் காதுகளால் கேட்டோம்.
2 தேவரீர் உம்முடைய கையினாலே ஜாதிகளைத் துரத்தி, இவர்களை நாட்டி; ஜனங்களைத் துன்பப்படுத்தி, இவர்களைப் பரவப்பண்ணினீர்.
3 அவர்கள் தங்கள் பட்டயத்தால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை; அவர்கள் புயமும் அவர்களை இரட்சிக்கவில்லை; நீர் அவர்கள்மேல் பிரியமாயிருந்தபடியால், உம்முடைய வலதுகரமும், உம்முடைய புயமும், உம்முடைய முகத்தின் பிரகாசமும் அவர்களை இரட்சித்தது.
4 தேவனே, நீர் என் ராஜா, யாக்கோபுக்கு இரட்சிப்பைக் கட்டளையிடும்.
5 உம்மாலே எங்கள் சத்துருக்களைக் கீழே விழத்தாக்கி எங்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை உம்முடைய நாமத்தினால் மிதிப்போம்.
6 என் வில்லை நான் நம்பேன். என் பட்டயம் என்னை இரட்சிப்பதில்லை.
7 நீரே எங்கள் சத்துருக்களினின்று எங்களை இரட்சித்து, எங்களைப் பகைக்கிறவர்களை அகப்படுத்தினீர்.
8 தேவனுக்குள் நித்தம் மேன்மை பாராட்டுவோம்; உமது நாமத்தை என்றென்றைக்கும் துதிப்போம்.(சேலா.)
9 நீர் எங்களைத் தள்ளிவிட்டு, நாணப்பண்ணுகிறீர்; எங்கள் சேனைகளுடனே செல்லாதிருக்கிறீர்.
10 சத்துருவுக்கு நாங்கள் இடைந்து பின்னிட்டுத் திரும்பிப்போகப் பண்ணுகிறீர்; எங்கள் பகைஞர் தங்களுக்கென்று எங்களைக் கொள்ளையிடுகிறார்கள்.
11 நீர் எங்களை ஆடுகளைப்போல இரையாக ஒப்புக்கொடுத்து, ஜாதிகளுக்குள்ளே எங்களைச் சிதறடிக்கிறீர்.
12 நீர் உம்முடைய ஜனங்களை இலவசமாக விற்கிறீர்; அவர்கள் கிரயத்தினால் உமக்கு லாபமில்லையே.
13 எங்கள் அயலாருக்கு எங்களை நிந்தையாகவும், எங்கள் சுற்றுப்புறத்தாருக்குப் பரியாசமும் சக்கந்தமுமாகவும் வைக்கிறீர்.
14 நாங்கள் ஜாதிகளுக்குள்ளே பழமொழியாயிருக்கவும் ஜனங்கள் எங்களைக்குறித்துத் தலைதுலுக்கவும் செய்கிறீர்.
15 நிந்தித்துத் தூஷிக்கிறவனுடைய சத்தத்தினிமித்தமும், சத்துருவினிமித்தமும், பழிவாங்குகிறவனிமித்தமும்,
16 என் இலச்சை நித்தம் எனக்கு முன்பாக இருக்கிறது; என் முகத்தின் வெட்கம் என்னை மூடுகிறது.
17 இவையெல்லாம் எங்கள்மேல் வந்திருந்தும், உம்மை நாங்கள் மறக்கவும் இல்லை. உம்முடைய உடன்படிக்கைக்குத் துரோகம்பண்ணவும் இல்லை.
18 நீர் எங்களை வலுசர்ப்பங்களுள்ள இடத்திலே நொறுக்கி, மரண இருளினாலே எங்களை மூடியிருந்தும்,
19 எங்கள் இருதயம் பின்வாங்கவுமில்லை, எங்கள் காலடி உம்முடைய பாதையை விட்டு விலகவும் இல்லை.
20 நாங்கள் எங்கள் தேவனுடைய நாமத்தை மறந்து, அந்நியதேவனை நோக்கிக் கையெடுத்திருந்தோமானால்,
21 தேவன் அதை ஆராய்ந்து, விசாரியாதிருப்பாரோ? இருதயத்தின் அந்தரங்ககளை அவர் அறிந்திருக்கிறாரே.
22 உமது நிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம்; அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம்.
23 ஆண்டவரே, விழித்துக்கொள்ளும்; ஏன் நித்திரை பண்ணுகிறீர்? எழுந்தருளும், எங்களை என்றைக்கும் தள்ளிவிடாதிரும்.
24 ஏன் உம்முடைய முகத்தை மறைத்து, எங்கள் சிறுமையையும் எங்கள் நெருக்கத்தையும் மறந்துவிடுகிறீர்?
25 எங்கள் ஆத்துமா புழுதிமட்டும் தாழ்ந்திருக்கிறது; எங்கள் வயிறு தரையோடு ஒட்டியிருக்கிறது.
26 எங்களுக்கு ஒத்தாசையாக எழுந்தருளும்; உம்முடைய கிருபையினிமித்தம் எங்களை மீட்டுவிடும்.


0 To the choirmaster. A Maskil of the Sons of Korah.
1 We have heard with our ears, O God, our fathers have told us, what deeds thou didst perform in their days, in the days of old:
2 thou with thy own hand didst drive out the nations, but them thou didst plant; thou didst afflict the peoples, but them thou didst set free;
3 for not by their own sword did they win the land, nor did their own arm give them victory; but thy right hand, and thy arm, and the light of thy countenance; for thou didst delight in them.
4 Thou art my King and my God, who ordainest victories for Jacob.
5 Through thee we push down our foes; through thy name we tread down our assailants.
6 For not in my bow do I trust, nor can my sword save me.
7 But thou hast saved us from our foes, and hast put to confusion those who hate us.
8 In God we have boasted continually, and we will give thanks to thy name for ever. [Selah]
9 Yet thou hast cast us off and abased us, and hast not gone out with our armies.
10 Thou hast made us turn back from the foe; and our enemies have gotten spoil.
11 Thou hast made us like sheep for slaughter, and hast scattered us among the nations.
12 Thou hast sold thy people for a trifle, demanding no high price for them.
13 Thou hast made us the taunt of our neighbors, the derision and scorn of those about us.
14 Thou hast made us a byword among the nations, a laughingstock among the peoples.
15 All day long my disgrace is before me, and shame has covered my face,
16 at the words of the taunters and revilers, at the sight of the enemy and the avenger.
17 All this has come upon us, though we have not forgotten thee, or been false to thy covenant.
18 Our heart has not turned back, nor have our steps departed from thy way,
19 that thou shouldst have broken us in the place of jackals, and covered us with deep darkness.
20 If we had forgotten the name of our God, or spread forth our hands to a strange god,
21 would not God discover this? For he knows the secrets of the heart.
22 Nay, for thy sake we are slain all the day long, and accounted as sheep for the slaughter.
23 Rouse thyself! Why sleepest thou, O Lord? Awake! Do not cast us off for ever!
24 Why dost thou hide thy face? Why dost thou forget our affliction and oppression?
25 For our soul is bowed down to the dust; our body cleaves to the ground.
26 Rise up, come to our help! Deliver us for the sake of thy steadfast love!

1 என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி.
2 எல்லா மனுபுத்திரரிலும் நீர் மகா சவுந்தரியமுள்ளவர்; உம்முடைய உதடுகளில் அருள் பொழிகிறது; ஆகையால் தேவன் உம்மை என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கிறார்.
3 சவுரியவானே, உமது மகிமையும் உமது மகத்துவமுமாகிய உம்முடைய பட்டயத்தை நீர் உம்முடைய அரையிலே கட்டிக்கொண்டு,
4 சத்தியத்தினிமித்தமும், நீதியுடன் கூடிய சாந்தத்தினிமித்தமும், உமது மகத்துவத்திலே ஜெயமாக ஏறிவாரும்; உமது வலதுகரம் பயங்கரமானவைகளை உமக்கு விளங்கப்பண்ணும்.
5 உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள், அவைகள் ராஜாவுடைய சத்துருக்களின் இருதயத்திற்குள் பாயும்; ஜனசதளங்கள் உமக்குக் கீழே விழுவார்கள்.
6 தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உமது ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.
7 நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமதுதோழரைப் பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார்.
8 தந்தத்தினால் செய்த அரமனைகளிலிருந்து புறப்படுகையில், நீர் மகிழும்படி உமது வஸ்திரங்களெல்லாம் வெள்ளைப்போளம் சந்தனம் இலவங்கம் இவைகளின் வாசனை பொருந்தியதாயிருக்கிறது.
9 உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் குமாரத்திகளுண்டு ராஜஸ்திரீ ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாய் உமது வலதுபாரிசத்தில் நிற்கிறாள்.
10 குமாரத்தியே கேள், நீ உன் செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள்; உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.
11 அப்பொழுது ராஜா உன் அழகில் பிரியப்படுவார்; அவர் உன் ஆண்டவர். ஆகையால் அவரைப் பணிந்துகொள்.
12 தீரு குமாரத்தி காணிக்கை கொண்டுவருவாள்; ஜனங்களில் ஐசுவரியவான்களும் உன் தயவை நாடி வணங்குவார்கள்.
13 ராஜகுமாரத்தி உள்ளாக பூரண மகிமையுள்ளவள்; அவள் உடை பொற்சரிகையாயிருக்கிறது.
14 சித்திரத்தையலாடை தரித்தவளாய், ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டு வரப்படுவாள்; அவள் பின்னாலே செல்லும் அவளுடைய தோழிகளாகிய கன்னிகைகள் உம்மிடத்தில் கூட்டிக்கொண்டுவரப்படுவார்கள்.
15 அவர்கள் மகிழ்ச்சியோடும் களிப்போடும் வந்து ராஜ அரமனைக்குள் பிரவேசிப்பார்கள்.
16 உமது பிதாக்களுக்குப் பதிலாக உமது குமாரர் இருப்பார்கள்; அவர்களைப் பூமியெங்கும் பிரபுக்களாக வைப்பீர்.
17 உமது நாமத்தை எல்லாத் தலைமுறைகளிலும் பிரஸ்தாபப்படுத்துவேன், இதினிமித்தம் ஜனங்கள் உம்மை என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் துதிப்பார்கள்.


0 To the choirmaster: according to Lilies. A Maskil of the Sons of Korah a love song.
1 My heart overflows with a goodly theme; I address my verses to the king; my tongue is like the pen of a ready scribe.
2 You are the fairest of the sons of men; grace is poured upon your lips; therefore God has blessed you for ever.
3 Gird your sword upon your thigh, O mighty one, in your glory and majesty!
4 In your majesty ride forth victoriously for the cause of truth and to defend the right; let your right hand teach you dread deeds!
5 Your arrows are sharp in the heart of the king's enemies; the peoples fall under you.
6 Your divine throne endures for ever and ever. Your royal scepter is a scepter of equity;
7 you love righteousness and hate wickedness. Therefore God, your God, has anointed you with the oil of gladness above your fellows;
8 your robes are all fragrant with myrrh and aloes and cassia. From ivory palaces stringed instruments make you glad;
9 daughters of kings are among your ladies of honor; at your right hand stands the queen in gold of Ophir.
10 Hear, O daughter, consider, and incline your ear; forget your people and your father's house;
11 and the king will desire your beauty. Since he is your lord, bow to him;
12 the people of Tyre will sue your favor with gifts, the richest of the people
13 with all kinds of wealth. The princess is decked in her chamber with gold-woven robes;
14 in many-colored robes she is led to the king, with her virgin companions, her escort, in her train.
15 With joy and gladness they are led along as they enter the palace of the king.
16 Instead of your fathers shall be your sons; you will make them princes in all the earth.
17 I will cause your name to be celebrated in all generations; therefore the peoples will praise you for ever and ever.

1 தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமுமான துணையுமானவர்.
2 ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும்,
3 அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம். (சேலா.)
4 ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும்,
5 தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம்பண்ணுவார்.
6 ஜாதிகள் கொந்தளித்தது, ராஜ்யங்கள் தத்தளித்தது; அவர் தமது சத்தத்தை முழங்கப்பண்ணினார், பூமி உருகிப்போயிற்று.
7 சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா.)
8 பூமியிலே பாழ்க்கடிப்புகளை நடப்பிக்கிற கர்த்தருடைய செய்கைகளை வந்து பாருங்கள்.
9 அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.
10 நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.
11 சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா.)


0 To the choirmaster. A Psalm of the Sons of Korah. According to Alamoth. A Song.
1 God is our refuge and strength, a very present help in trouble.
2 Therefore we will not fear though the earth should change, though the mountains shake in the heart of the sea;
3 though its waters roar and foam, though the mountains tremble with its tumult. [Selah]
4 There is a river whose streams make glad the city of God, the holy habitation of the Most High.
5 God is in the midst of her, she shall not be moved; God will help her right early.
6 The nations rage, the kingdoms totter; he utters his voice, the earth melts.
7 The LORD of hosts is with us; the God of Jacob is our refuge. [Selah]
8 Come, behold the works of the LORD, how he has wrought desolations in the earth.
9 He makes wars cease to the end of the earth; he breaks the bow, and shatters the spear, he burns the chariots with fire!
10 "Be still, and know that I am God. I am exalted among the nations, I am exalted in the earth!"
11 The LORD of hosts is with us; the God of Jacob is our refuge. [Selah]

1 சகல ஜனங்களே, கைகொட்டி தேவனுக்கு முன்பாகக் கெம்பீர சத்தமாய் ஆர்ப்பரியுங்கள்.
2 உன்னதமானவராகிய கர்த்தர் பயங்கரமானவரும், பூமியின்மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாயிருக்கிறார்.
3 ஜனங்களை நமக்கு வசப்படுத்தி, ஜாதிகளை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார்.
4 தமக்குப் பிரியமான யாக்கோபின் சிறப்பான தேசத்தை நமக்குச் சுதந்தரமாகத் தெரிந்தளிப்பார். (சேலா.)
5 தேவன் ஆர்ப்பரிப்போடும், கர்த்தர் எக்காள சத்தத்தோடும் உயர எழுந்தருளினார்.
6 தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்; நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்.
7 தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள்.
8 தேவன் ஜாதிகள்மேல் அரசாளுகிறார்; தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறார்.
9 ஜனங்களின் பிரபுக்கள் ஆபிரகாமின் தேவனுடைய ஜனங்களாகச் சேர்க்கப்படுகிறார்கள்; பூமியின் கேடகங்கள் தேவனுடையவைகள்; அவர் மகா உன்னதமானவர்.


0 To the choirmaster. A Psalm of the Sons of Korah.
1 Clap your hands, all peoples! Shout to God with loud songs of joy!
2 For the LORD, the Most High, is terrible, a great king over all the earth.
3 He subdued peoples under us, and nations under our feet.
4 He chose our heritage for us, the pride of Jacob whom he loves. [Selah]
5 God has gone up with a shout, the LORD with the sound of a trumpet.
6 Sing praises to God, sing praises! Sing praises to our King, sing praises!
7 For God is the king of all the earth; sing praises with a psalm!
8 God reigns over the nations; God sits on his holy throne.
9 The princes of the peoples gather as the people of the God of Abraham. For the shields of the earth belong to God; he is highly exalted!

1 கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.
2 வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம்.
3 அதின் அரமனைகளில் தேவன் உயர்ந்த அடைக்கலமாக அறியப்பட்டிருக்கிறார்.
4 இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஏகமாய்க் கடந்துவந்தார்கள்.
5 அவர்கள் அதைக் கண்டபோது பிரமித்துக் கலங்கி விரைந்தோடினார்கள்.
6 அங்கே நடுக்கங்கண்டு, பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயைப்போல வேதனைப்பட்டார்கள்.
7 கீழ்காற்றினால் தர்ஷீசின் கப்பல்களை நீர் உடைக்கிறீர்.
8 நாம் கேள்விப்பட்டபடியே நமது தேவனுடைய நகரமாகிய சேனைகளுடைய கர்த்தரின் நகரத்திலே கண்டோம்; தேவன் அதை என்றென்றைக்கும் ஸ்திரப்படுத்துவார். (சேலா.)
9 தேவனே, உமது ஆலயத்தின் நடுவிலே, உமது கிருபையைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்.
10 தேவனே, உமது நாமம் விளங்குகிறதுபோல உமது புகழ்ச்சியும் பூமியின் கடையாந்தரங்கள் பரியந்தமும் விளங்குகிறது; உமது வலதுகரம் நீதியால் நிறைந்திருக்கிறது.
11 உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் சீயோன் பர்வதம் மகிழ்வதாக, யூதாவின் குமாரத்திகள் களிகூருவார்களாக.
12 சீயோனைச் சுற்றி உலாவி அதின் கொத்தளங்களை எண்ணுங்கள்.
13 பின்வரும் சந்ததிக்கு நீங்கள் விவரிப்பதற்காக, அதின் அலங்கத்தைக் கவனித்து, அதின் அரமனைகளை உற்றுப்பாருங்கள்.
14 இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.


0 A Song. A Psalm of the Sons of Korah.
1 Great is the LORD and greatly to be praised in the city of our God! His holy mountain,
2 beautiful in elevation, is the joy of all the earth, Mount Zion, in the far north, the city of the great King.
3 Within her citadels God has shown himself a sure defense.
4 For lo, the kings assembled, they came on together.
5 As soon as they saw it, they were astounded, they were in panic, they took to flight;
6 trembling took hold of them there, anguish as of a woman in travail.
7 By the east wind thou didst shatter the ships of Tarshish.
8 As we have heard, so have we seen in the city of the LORD of hosts, in the city of our God, which God establishes for ever. [Selah]
9 We have thought on thy steadfast love, O God, in the midst of thy temple.
10 As thy name, O God, so thy praise reaches to the ends of the earth. Thy right hand is filled with victory;
11 let Mount Zion be glad! Let the daughters of Judah rejoice because of thy judgments!
12 Walk about Zion, go round about her, number her towers,
13 consider well her ramparts, go through her citadels; that you may tell the next generation
14 that this is God, our God for ever and ever. He will be our guide for ever.

1 ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள்.
2 பூமியின் குடிகளே, சிறியோரும் பெரியோரும் ஐசுவரியவான்களும் எளியவர்களுமாகிய நீங்கள் எல்லாரும் ஏகமாய்ச் செவிகொடுங்கள்.
3 என் வாய் ஞானத்தைப் பேசும்; என் இருதயம் உணர்வைத் தியானிக்கும்.
4 என் செவியை உவமைமொழிக்குச் சாய்த்து, என் மறைபொருளைச் சுரமண்டலத்தின்மேல் வெளிப்படுத்துவேன்.
5 என்னைத் தொடருகிறவர்களுடைய அக்கிரமம் என்னைச் சூழ்ந்துகொள்ளுந் தீங்குநாட்களில் நான் பயப்படவேண்டியதென்ன?
6 தங்கள் செல்வத்தை நம்பி தங்கள் திரளான ஐசுவரியத்தினால் பெருமைபாராட்டுகிற,
7 ஒருவனாவது தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி,
8 எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங் கூடாதே.
9 அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாயிருக்கிறது; அது ஒருபோதும் முடியாது.
10 ஞானிகளும் மரித்து, அஞ்ஞானிகளும் நிர்மூடரும் ஏகமாய் அழிந்து, தங்கள் ஆஸ்தியை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான்.
11 தங்கள் வீடுகள் நித்தியகாலமாகவும், தங்கள் வாசஸ்தலங்கள் தலைமுறை தலைமுறையாகவும் இருக்குமென்பது அவர்கள் உள்ளத்தின் அபிப்பிராயம், அவர்கள் தங்கள் நாமங்களைத் தங்கள் நிலங்களுக்குத் தரிக்கிறார்கள்.
12 ஆகிலும் கனம்பொருந்தியவனாயிருக்கிற மனுஷன் நிலைத்திருக்கிறதில்லை; அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.
13 இதுதான் அவர்கள் வழி; இதுதான் அவர்கள் பைத்தியம்; ஆகிலும் அவர்கள் சந்ததியார் அவர்கள் சொல்லை மெச்சிக்கொள்ளுகிறார்கள்.(சேலா.)
14 ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களை மேய்ந்துபோடும்; செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; அவர்கள் தங்கள் வாசஸ்தலத்தில் நிலைத்திருக்கக் கூடாதபடி அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும்.
15 ஆனாலும் தேவன் என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா.)
16 ஒருவன் ஐசுவரியவானாகி, அவன் வீட்டின் மகிமை பெருகும்போது, நீ பயப்படாதே.
17 அவன் மரிக்கும்போது ஒன்றும் கொண்டுபோவதில்லை; அவன் மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதுமில்லை.
18 அவன் உயிரோடிருக்கையில் தன் ஆத்துமாவை வாழ்த்தினாலும்: நீ உனக்கு நன்மையை நாடினாய் என்று மனுஷர் அவனைப் புகழந்தாலும்,
19 அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத தன் பிதாக்களின் சந்ததியைச் சேருவான்.
20 கனம் பொருந்தினவனாயிருந்தும் அறிவில்லாத மனுஷன் அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.


0 To the choirmaster. A Psalm of the Sons of Korah.
1 Hear this, all peoples! Give ear, all inhabitants of the world,
2 both low and high, rich and poor together!
3 My mouth shall speak wisdom; the meditation of my heart shall be understanding.
4 I will incline my ear to a proverb; I will solve my riddle to the music of the lyre.
5 Why should I fear in times of trouble, when the iniquity of my persecutors surrounds me,
6 men who trust in their wealth and boast of the abundance of their riches?
7 Truly no man can ransom himself, or give to God the price of his life,
8 for the ransom of his life is costly, and can never suffice,
9 that he should continue to live on for ever, and never see the Pit.
10 Yea, he shall see that even the wise die, the fool and the stupid alike must perish and leave their wealth to others.
11 Their graves are their homes for ever, their dwelling places to all generations, though they named lands their own.
12 Man cannot abide in his pomp, he is like the beasts that perish.
13 This is the fate of those who have foolish confidence, the end of those who are pleased with their portion. [Selah]
14 Like sheep they are appointed for Sheol; Death shall be their shepherd; straight to the grave they descend, and their form shall waste away; Sheol shall be their home.
15 But God will ransom my soul from the power of Sheol, for he will receive me. [Selah]
16 Be not afraid when one becomes rich, when the glory of his house increases.
17 For when he dies he will carry nothing away; his glory will not go down after him.
18 Though, while he lives, he counts himself happy, and though a man gets praise when he does well for himself,
19 he will go to the generation of his fathers, who will never more see the light.
20 Man cannot abide in his pomp, he is like the beasts that perish.

1 வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் வசனித்து, சூரியன் உதிக்குந் திசைதொடங்கி அது அஸ்தமிக்குந் திசைவரைக்குமுள்ள பூமியைக் கூப்பிடுகிறார்.
2 பூரணவடிவுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார்.
3 நம்முடைய தேவன் வருவார், மவுனமாயிரார், அவருக்கு முன் அக்கினி பட்சிக்கும்; அவரைச் சுற்றிலும் மகா புசல் கொந்தளிப்பாயிருக்கும்.
4 அவர் தம்முடைய ஜனத்தை நியாயந்தீர்க்க உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார்.
5 பலியினாலே என்னோடே உடன்படிக்கை பண்ணின என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார்.
6 வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும்; தேவனே நியாயாதிபதி.(சேலா.)
7 என் ஜனமே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே, உனக்கு விரோதமாய்ச் சாட்சியிடுவேன்; நானே தேவன், உன் தேவனாயிருக்கிறேன்.
8 உன் பலிகளினிமித்தம் உன்னைக் கடிந்துகொள்ளேன்; உன் தகனபலிகள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது.
9 உன் வீட்டிலிருந்து காளைகளையும், உன் தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக்கொள்வதில்லை.
10 சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்.
11 மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள்.
12 நான் பசியாயிருந்தால் உனக்குச் சொல்லேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே.
13 நான் எருதுகளின் மாம்சம் புசித்து, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ?
14 நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி;
15 ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.
16 தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என் பிரமாணங்களை எடுத்துரைக்கவும், என் உடன்படிக்கையை உன் வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு.
17 சிட்சையை நீ பகைத்து, என் வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய்.
18 நீ திருடனைக் காணும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்; விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு.
19 உன் வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய், உன் நாவு சற்பனையைப் பிணைக்கிறது.
20 நீ உட்கார்ந்து உன் சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, உன் தாயின் மகனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய்.
21 இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாயிருந்தேன், உன்னைப்போல் நானும் இருப்பேன் என்று நினைவுகொண்டாய்; ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு, அவைகளை உன் கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன்.
22 தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை.
23 ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.


0 A Psalm of Asaph.
1 The Mighty One, God the LORD, speaks and summons the earth from the rising of the sun to its setting.
2 Out of Zion, the perfection of beauty, God shines forth.
3 Our God comes, he does not keep silence, before him is a devouring fire, round about him a mighty tempest.
4 He calls to the heavens above and to the earth, that he may judge his people:
5 "Gather to me my faithful ones, who made a covenant with me by sacrifice!"
6 The heavens declare his righteousness, for God himself is judge! [Selah]
7 "Hear, O my people, and I will speak, O Israel, I will testify against you. I am God, your God.
8 I do not reprove you for your sacrifices; your burnt offerings are continually before me.
9 I will accept no bull from your house, nor he-goat from your folds.
10 For every beast of the forest is mine, the cattle on a thousand hills.
11 I know all the birds of the air, and all that moves in the field is mine.
12 "If I were hungry, I would not tell you; for the world and all that is in it is mine.
13 Do I eat the flesh of bulls, or drink the blood of goats?
14 Offer to God a sacrifice of thanksgiving, and pay your vows to the Most High;
15 and call upon me in the day of trouble; I will deliver you, and you shall glorify me."
16 But to the wicked God says: "What right have you to recite my statutes, or take my covenant on your lips?
17 For you hate discipline, and you cast my words behind you.
18 If you see a thief, you are a friend of his; and you keep company with adulterers.
19 "You give your mouth free rein for evil, and your tongue frames deceit.
20 You sit and speak against your brother; you slander your own mother's son.
21 These things you have done and I have been silent; you thought that I was one like yourself. But now I rebuke you, and lay the charge before you.
22 "Mark this, then, you who forget God, lest I rend, and there be none to deliver!
23 He who brings thanksgiving as his sacrifice honors me; to him who orders his way aright I will show the salvation of God!"

1 தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.
2 என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்.
3 என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது.
4 தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்; நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன்.
5 இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.
6 இதோ, உள்ளத்தில் உண்மையாயிருக்க விரும்புகிறீர்; அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்.
7 நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்.
8 நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும்.
9 என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.
10 தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.
11 உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.
12 உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்,
13 அப்பொழுது பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள்.
14 தேவனே, என்னை இரட்சிக்குந் தேவனே, இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; அப்பொழுது என் நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாய்ப் பாடும்.
15 ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.
16 பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல.
17 தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.
18 சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மைசெய்யும்: எருசலேமின் மதில்களைக் கட்டுவீராக.
19 அப்பொழுது தகனபலியும் சர்வாங்க தகனபலியுமாகிய நீதியின்பலிகளில் பிரியப்படுவீர்; அப்பொழுது உமது பீடத்தின்மேல் காளைகளைப் பலியிடுவார்கள்.


0 To the choirmaster. A Psalm of David, when Nathan the prophet came to him, after he had gone in to Bathsheba.
1 Have mercy on me, O God, according to thy steadfast love; according to thy abundant mercy blot out my transgressions.
2 Wash me thoroughly from my iniquity, and cleanse me from my sin!
3 For I know my transgressions, and my sin is ever before me.
4 Against thee, thee only, have I sinned, and done that which is evil in thy sight, so that thou art justified in thy sentence and blameless in thy judgment.
5 Behold, I was brought forth in iniquity, and in sin did my mother conceive me.
6 Behold, thou desirest truth in the inward being; therefore teach me wisdom in my secret heart.
7 Purge me with hyssop, and I shall be clean; wash me, and I shall be whiter than snow.
8 Fill me with joy and gladness; let the bones which thou hast broken rejoice.
9 Hide thy face from my sins, and blot out all my iniquities.
10 Create in me a clean heart, O God, and put a new and right spirit within me.
11 Cast me not away from thy presence, and take not thy holy Spirit from me.
12 Restore to me the joy of thy salvation, and uphold me with a willing spirit.
13 Then I will teach transgressors thy ways, and sinners will return to thee.
14 Deliver me from bloodguiltiness, O God, thou God of my salvation, and my tongue will sing aloud of thy deliverance.
15 O Lord, open thou my lips, and my mouth shall show forth thy praise.
16 For thou hast no delight in sacrifice; were I to give a burnt offering, thou wouldst not be pleased.
17 The sacrifice acceptable to God is a broken spirit; a broken and contrite heart, O God, thou wilt not despise.
18 Do good to Zion in thy good pleasure; rebuild the walls of Jerusalem,
19 then wilt thou delight in right sacrifices, in burnt offerings and whole burnt offerings; then bulls will be offered on thy altar.

1 பலவானே, பொல்லாப்பில் ஏன் பெருமைபாராட்டுகிறாய்? தேவனுடைய கிருபை எந்நாளுமுள்ளது.
2 நீ கேடுகளைச் செய்ய எத்தனம்பண்ணுகிறாய், கபடுசெய்யும் உன் நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது.
3 நன்மையைப்பார்க்கிலும் தீமையையும், யதார்த்தம் பேசுகிறதைப்பார்க்கிலும் பொய்யையும் விரும்புகிறாய். (சேலா.)
4 கபடமுள்ள நாவே, சங்கரிக்கும் சகல வார்த்தைகளையும் நீ விரும்புகிறாய்.
5 தேவன் உன்னை என்றென்றைக்கும் இராதபடி அழித்துப்போடுவார்; அவர் உன்னைப் பிடித்து, உன் வாசஸ்தலத்திலிருந்து பிடுங்கி, நீ ஜீவனுள்ள தேசத்தில் இராதபடிக்கு உன்னை நிர்மூலமாக்குவார். (சேலா.)
6 நீதிமான்கள் அதைக் கண்டு பயந்து அவனைப்பார்த்து நகைத்து:
7 இதோ, தேவனைத் தன் பெலனாக எண்ணாமல், தன் செல்வப்பெருக்கத்தை நம்பி தன் தீவினையில் பலத்துக்கொண்ட மனுஷன் இவன்தான் என்பார்கள்.
8 நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன். தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்.
9 நீரே இதைச் செய்தீர் என்று உம்மை என்றென்றைக்கும் துதித்து உமது நாமத்திற்குக் காத்திருப்பேன்; உம்முடைய பரிசுத்தவான்களுக்கு முன்பாக அது நலமாயிருக்கிறது.


0 To the choirmaster. A Maskil of David, when Doeg, the Edomite, came and told Saul, "David has come to the house of Ahimelech."
1 Why do you boast, O mighty man, of mischief done against the godly? All the day
2 you are plotting destruction. Your tongue is like a sharp razor, you worker of treachery.
3 You love evil more than good, and lying more than speaking the truth. [Selah]
4 You love all words that devour, O deceitful tongue.
5 But God will break you down for ever; he will snatch and tear you from your tent; he will uproot you from the land of the living. [Selah]
6 The righteous shall see, and fear, and shall laugh at him, saying,
7 "See the man who would not make God his refuge, but trusted in the abundance of his riches, and sought refuge in his wealth!"
8 But I am like a green olive tree in the house of God. I trust in the steadfast love of God for ever and ever.
9 I will thank thee for ever, because thou hast done it. I will proclaim thy name, for it is good, in the presence of the godly.

1 தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
2 தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.
3 அவர்கள் எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவனில்லை, ஒருவனாகிலும் இல்லை.
4 அக்கிரமக்காரருக்கு அறிவு இல்லையா? அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல் என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே; அவர்கள் தேவனைத் தொழுதுகொள்ளுகிறதில்லை.
5 உனக்கு விரோதமாய்ப் பாளயமிறங்கினவனுடைய எலும்புகளை தேவன் சிதறப்பண்ணினபடியால், பயமில்லாத இடத்தில் மிகவும் பயந்தார்கள்; தேவன் அவர்களை வெறுத்தபடியினால் நீ அவர்களை வெட்கப்படுத்தினாய்.
6 சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக, தேவன் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும் இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.


0 To the choirmaster: according to Mahalath. A Maskil of David.
1 The fool says in his heart, "There is no God." They are corrupt, doing abominable iniquity; there is none that does good.
2 God looks down from heaven upon the sons of men to see if there are any that are wise, that seek after God.
3 They have all fallen away; they are all alike depraved; there is none that does good, no, not one.
4 Have those who work evil no understanding, who eat up my people as they eat bread, and do not call upon God?
5 There they are, in great terror, in terror such as has not been! For God will scatter the bones of the ungodly; they will be put to shame, for God has rejected them.
6 O that deliverance for Israel would come from Zion! When God restores the fortunes of his people, Jacob will rejoice and Israel be glad.

1 தேவனே, உமது நாமத்தினிமித்தம் என்னை இரட்சித்து உமது வல்லமையினால் எனக்கு நியாயஞ்செய்யும்.
2 தேவனே, என் விண்ணப்பத்தைக்கேட்டு, என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடும்.
3 அந்நியர் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள்; கொடியர் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள்; தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி நோக்கார்கள். (சேலா.)
4 இதோ, தேவன் எனக்குச் சகாயர்; ஆண்டவர் என் ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடே இருக்கிறார்.
5 அவர் என் சத்துருக்களுக்குத் தீமைக்குத் தீமையைச் சரிக்கட்டுவார், உமது சத்தியத்தினிமித்தம் அவர்களை நிர்மூலமாக்கும்.
6 உற்சாகத்துடன் நான் உமக்குப்பலியிடுவேன்; கர்த்தாவே, உமது நாமத்தைத் துதிப்பேன், அது நலமானது.
7 அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார்; என் கண் என் சத்துருக்களில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது.


0 To the choirmaster: with stringed instruments. A Maskil of David, when the Ziphites went and told Saul, "David is in hiding among us."
1 Save me, O God, by thy name, and vindicate me by thy might.
2 Hear my prayer, O God; give ear to the words of my mouth.
3 For insolent men have risen against me, ruthless men seek my life; they do not set God before them. [Selah]
4 Behold, God is my helper; the Lord is the upholder of my life.
5 He will requite my enemies with evil; in thy faithfulness put an end to them.
6 With a freewill offering I will sacrifice to thee; I will give thanks to thy name, O LORD, for it is good.
7 For thou hast delivered me from every trouble, and my eye has looked in triumph on my enemies.

1 தேவனே, என் ஜெபத்தைக் கேட்டருளும்; என் விண்ணப்பத்திற்கு மறைந்திராதேயும்.
2 எனக்குச் செவிகொடுத்து, உத்தரவு அருளிச்செய்யும் சத்துருவினுடைய கூக்குரலினிமித்தமும், துன்மார்க்கர் செய்யும் இடுக்கத்தினிமித்தமும் என் தியானத்தில் முறையிடுகிறேன்.
3 அவர்கள் என்மேல் பழிசாட்டி, குரோதங்கொண்டு, என்னைப் பகைக்கிறார்கள்.
4 என் இருதயம் எனக்குள் வியாகுலப்படுகிறது; மரணத்திகில் என்மேல் விழுந்தது.
5 பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது; அருக்களிப்பு என்னை மூடிற்று.
6 அப்பொழுது நான்: ஆ, எனக்குப் புறாவைப்போல் சிறகுகள் இருந்தால், நான் பறந்துபோய் இளைப்பாறுவேன்.
7 நான் தூரத்தில் அலைந்து திரிந்து வனாந்தரத்தில் தங்கியிருப்பேன். (சேலா.)
8 பெருங்காற்றுக்கும் புசலுக்கும் தப்பத் தீவிரித்துக்கொள்ளுவேன் என்றேன்.
9 ஆண்டவரே, அவர்களை அழித்து, அவர்கள் பாஷையைப் பிரிந்துபோகப்பண்ணும்; கொடுமையையும் சண்டையையும் நகரத்திலே கண்டேன்;
10 அவைகள் இரவும் பகலும் அதின் மதில்கள்மேல் சுற்றித்திரிகிறது; அக்கிரமமும் வாதையும் அதின் நடுவில் இருக்கிறது;
11 கேடுபாடுகள் அதின் நடுவிலிருக்கிறது; கொடுமையும் கபடும் அதின் வீதியை விட்டு விலகிப்போகிறதில்லை.
12 என்னை நிந்தித்தவன் சத்துரு அல்ல, அப்படியிருந்தால் சகிப்பேன்; எனக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டினவன் என் பகைஞன் அல்ல, அப்படியிருந்தால் அவனுக்கு மறைந்திருப்பேன்.
13 எனக்குச் சமமான மனுஷனும், என் வழிகாட்டியும், என் தோழனுமாகிய நீயே அவன்.
14 நாம் ஒருமித்து, இன்பமான ஆலோசனைபண்ணி, கூட்டத்தோடே தேவாலயத்துக்குப் போனோம்.
15 மரணம் அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக; அவர்கள் உயிரோடே பாதாளத்தில் இறங்குவார்களாக; அவர்கள் வாசஸ்தலங்களிலும் அவர்கள் உள்ளத்திலும் பொல்லாங்கு இருக்கிறது.
16 நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; கர்த்தர் என்னை இரட்சிப்பார்.
17 அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம்பண்ணி முறையிடுவேன்; அவர் என் சத்தத்தைக் கேட்பார்.
18 திரளான கூட்டமாய்க் கூடி என்னோடு எதிர்த்தார்கள்; அவரே எனக்கு நேரிட்ட போரை நீக்கி, என் ஆத்துமாவைச் சமாதானத்துடன் மீட்டுவிட்டார்.
19 ஆதிமுதலாய் வீற்றிருக்கிற தேவன் கேட்டு, அவர்களுக்குப் பதிலளிப்பார்; அவர்களுக்கு மாறுதல்கள் நேரிடாததினால், அவர்கள் தேவனுக்குப் பயப்படாமற்போகிறார்கள். (சேலா.)
20 அவன் தன்னோடே சமாதானமாயிருந்தவர்களுக்கு விரோதமாய் தன் கையை நீட்டி, தன் உடன்படிக்கையை மீறி நடந்தான்.
21 அவன் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள், அவன் இருதயமோ யுத்தம்; அவன் வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள், ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள்.
22 கர்த்தர்மேல் உன் பாரத்தைவைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.
23 தேவனே, நீர் அவர்களை அழிவின் குழியில் இறங்கப்பண்ணுவீர்; இரத்தப்பிரியரும் சூதுள்ள மனுஷரும் தங்கள் ஆயுளின் நாட்களில் பாதிவரையிலாகிலும் பிழைத்திருக்கமாட்டார்கள்; நானோ உம்மை நம்பியிருக்கிறேன்.


0 To the choirmaster: with stringed instruments. A Maskil of David.
1 Give ear to my prayer, O God; and hide not thyself from my supplication!
2 Attend to me, and answer me; I am overcome by my trouble. I am distraught
3 by the noise of the enemy, because of the oppression of the wicked. For they bring trouble upon me, and in anger they cherish enmity against me.
4 My heart is in anguish within me, the terrors of death have fallen upon me.
5 Fear and trembling come upon me, and horror overwhelms me.
6 And I say, "O that I had wings like a dove! I would fly away and be at rest;
7 yea, I would wander afar, I would lodge in the wilderness, [Selah]
8 I would haste to find me a shelter from the raging wind and tempest."
9 Destroy their plans, O Lord, confuse their tongues; for I see violence and strife in the city.
10 Day and night they go around it on its walls; and mischief and trouble are within it,
11 ruin is in its midst; oppression and fraud do not depart from its market place.
12 It is not an enemy who taunts me -- then I could bear it; it is not an adversary who deals insolently with me -- then I could hide from him.
13 But it is you, my equal, my companion, my familiar friend.
14 We used to hold sweet converse together; within God's house we walked in fellowship.
15 Let death come upon them; let them go down to Sheol alive; let them go away in terror into their graves.
16 But I call upon God; and the LORD will save me.
17 Evening and morning and at noon I utter my complaint and moan, and he will hear my voice.
18 He will deliver my soul in safety from the battle that I wage, for many are arrayed against me.
19 God will give ear, and humble them, he who is enthroned from of old; because they keep no law, and do not fear God. [Selah]
20 My companion stretched out his hand against his friends, he violated his covenant.
21 His speech was smoother than butter, yet war was in his heart; his words were softer than oil, yet they were drawn swords.
22 Cast your burden on the LORD, and he will sustain you; he will never permit the righteous to be moved.
23 But thou, O God, wilt cast them down into the lowest pit; men of blood and treachery shall not live out half their days. But I will trust in thee.

1 தேவனே, எனக்கு இரங்கும்; மனுஷன் என்னை விழுங்கப்பார்க்கிறான், நாள்தோறும் போர்செய்து என்னை ஒடுக்குகிறான்.
2 என் சத்துருக்கள் நாள்தோறும் என்னை விழுங்கப்பார்க்கிறார்கள்: உன்னதமானவரே, எனக்கு விரோதமாய் அகங்கரித்துப் போர் செய்கிறவர்கள் அநேகர்.
3 நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்.
4 தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?
5 நித்தமும் என் வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்; எனக்குத் தீங்குசெய்வதே அவர்கள் முழு எண்ணமாயிருக்கிறது.
6 அவர்கள் ஏகமாய்க் கூடி, பதிவிருக்கிறார்கள்; என் பிராணனை வாங்க விரும்பி, என் காலடிகளைத் தொடர்ந்து வருகிறார்கள்.
7 அவர்கள் தங்கள் அக்கிரமத்தினால் தப்புவார்களோ? தேவனே, கோபங்கொண்டு ஜனங்களைக் கீழே தள்ளும்.
8 என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர் ; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ எழுதியிருக்கிறது?
9 நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என் சத்துருக்கள் பின்னிட்டுத் திரும்புவார்கள்; தேவன் என் பட்சத்தில் இருக்கிறார் என்பதை அறிவேன்.
10 தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; கர்த்தரை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்.
11 தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்?
12 தேவனே, நான் உமக்குப் பண்ணின பொருத்தனைகள் என்மேல் இருக்கிறது; உமக்கு ஸ்தோத்திரங்களைச் செலுத்துவேன்.
13 நான் தேவனுக்கு முன்பாக ஜீவனுள்ளோருடைய வெளிச்சத்திலே நடக்கும்படி, நீர் என் ஆத்துமாவை மரணத்துக்கும் என் கால்களை இடறலுக்கும் தப்புவியாதிருப்பீரோ?


0 To the choirmaster: according to The Dove on Far-off Terebinths. A Miktam of David, when the Philistines seized him in Gath.
1 Be gracious to me, O God, for men trample upon me; all day long foemen oppress me;
2 my enemies trample upon me all day long, for many fight against me proudly.
3 When I am afraid, I put my trust in thee.
4 In God, whose word I praise, in God I trust without a fear. What can flesh do to me?
5 All day long they seek to injure my cause; all their thoughts are against me for evil.
6 They band themselves together, they lurk, they watch my steps. As they have waited for my life,
7 so recompense them for their crime; in wrath cast down the peoples, O God!
8 Thou hast kept count of my tossings; put thou my tears in thy bottle! Are they not in thy book?
9 Then my enemies will be turned back in the day when I call. This I know, that God is for me.
10 In God, whose word I praise, in the LORD, whose word I praise,
11 in God I trust without a fear. What can man do to me?
12 My vows to thee I must perform, O God; I will render thank offerings to thee.
13 For thou hast delivered my soul from death, yea, my feet from falling, that I may walk before God in the light of life.

1 எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்.
2 எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்.
3 என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை நிந்திக்கையில், அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னை இரட்சிப்பார். (சேலா.) தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார்
4 என் ஆத்துமா சிங்கங்களின் நடுவிலிருக்கிறது; தீயை இறைக்கிற மனுபுத்திரருக்குள்ளே கிடக்கிறேன்; அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது.
5 தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.
6 என் கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள்; என் ஆத்துமா தொய்ந்துபோயிற்று; எனக்கு முன்பாகக் குழியை வெட்டி, அதின் நடுவிலே விழுந்தார்கள். (சேலா.)
7 என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக்கீர்த்தனம்பண்ணுவேன்.
8 என் மகிமையே, விழி; வீணையே சுரமண்டலமே, விழியுங்கள்; அதிகாலையில் விழித்துக்கொள்வேன்.
9 ஆண்டவரே, ஜனங்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
10 உமது கிருபை வானபரியந்தமும், உமது சத்தியம் மேகமண்டலங்கள்பரியந்தமும் எட்டுகிறது.
11 தேவனே, வானங்களுக்குமேலாக உயர்ந்தருளும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.


0 To the choirmaster: according to Do Not Destroy. A Miktam of David, when he fled from Saul, in the cave.
1 Be merdiful to me, O God, be merciful to me, for in thee my soul takes refuge; in the shadow of thy wings I will take refuge, till the storms of destruction pass by.
2 I cry to God Most High, to God who fulfils his purpose for me.
3 He will send from heaven and save me, he will put to shame those who trample upon me. [Selah] God will send forth his steadfast love and his faithfulness!
4 I lie in the midst of lions that greedily devour the sons of men; their teeth are spears and arrows, their tongues sharp swords.
5 Be exalted, O God, above the heavens! Let thy glory be over all the earth!
6 They set a net for my steps; my soul was bowed down. They dug a pit in my way, but they have fallen into it themselves. [Selah]
7 My heart is steadfast, O God, my heart is steadfast! I will sing and make melody!
8 Awake, my soul! Awake, O harp and lyre! I will awake the dawn!
9 I will give thanks to thee, O Lord, among the peoples; I will sing praises to thee among the nations.
10 For thy steadfast love is great to the heavens, thy faithfulness to the clouds.
11 Be exalted, O God, above the heavens! Let thy glory be over all the earth!

1 மவுனமாயிருக்கிறவர்களே, நீங்கள் மெய்யாய் நீதியைப் பேசுவீர்களோ? மனுபுத்திரரே, நியாயமாய்த் தீர்ப்புசெய்வீர்களோ?
2 மனதார நியாயக்கேடு செய்கிறீர்கள்; பூமியிலே உங்கள் கைகளின் கொடுமையை நிறுத்துக் கொடுக்கிறீர்கள்.
3 துன்மார்க்கர் கர்ப்பத்தில் உற்பவித்ததுமுதல் பேதலிக்கிறார்கள்; தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் பொய் சொல்லி வழிதப்பிப் போகிறார்கள்.
4 சர்ப்பத்தின் விஷத்திற்கு ஒப்பான விஷம் அவர்களில் இருக்கிறது.
5 பாம்பாட்டிகள் விநோதமாய் ஊதினாலும் அவர்கள் ஊதும் சத்தத்திற்குச் செவிகொடாதபடிக்குத் தன்காதை அடைக்கிற செவிட்டு விரியனைப்போல் இருக்கிறார்கள்.
6 தேவனே, அவர்கள் வாயிலுள்ள பற்களைத் தகர்த்துப்போடும்; கர்த்தாவே, பாலசிங்கங்களின் கடைவாய்ப்பற்களை நொறுக்கிப்போடும்.
7 கடந்தோடுகிற தண்ணீரைப்போல அவர்கள் கழிந்துபோகட்டும்; அவன் தன் அம்புகளைத் தொடுக்கும்போது அவைகள் சின்னபின்னமாய்ப் போகக்கடவது.
8 கரைந்துபோகிற நத்தையைப்போல் ஒழிந்துபோவார்களாக; ஸ்திரீயின் முதிராப் பிண்டத்தைப்போல் சூரியனைக் காணாதிருப்பார்களாக.
9 முள் நெருப்பினால் உங்கள் பானைகளில் சூடேறுமுன்னே பச்சையானதையும் எரிந்துபோனதையும் அவர் சுழல்காற்றினால் அடித்துக்கொண்டுபோவார்.
10 பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்; அவன் தன் பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான்.
11 அப்பொழுது, மெய்யாய் நீதிமானுக்குப் பலன் உண்டென்றும், மெய்யாய் பூமியிலே நியாயஞ்செய்கிற தேவன் உண்டென்றும் மனுஷன் சொல்லுவான்.


0 To the choirmaster: according to Do Not Destroy. A Miktam of David.
1 Do you indeed decree what is right, you gods? Do you judge the sons of men uprightly?
2 Nay, in your hearts you devise wrongs; your hands deal out violence on earth.
3 The wicked go astray from the womb, they err from their birth, speaking lies.
4 They have venom like the venom of a serpent, like the deaf adder that stops its ear,
5 so that it does not hear the voice of charmers or of the cunning enchanter.
6 O God, break the teeth in their mouths; tear out the fangs of the young lions, O LORD!
7 Let them vanish like water that runs away; like grass let them be trodden down and wither.
8 Let them be like the snail which dissolves into slime, like the untimely birth that never sees the sun.
9 Sooner than your pots can feel the heat of thorns, whether green or ablaze, may he sweep them away!
10 The righteous will rejoice when he sees the vengeance; he will bathe his feet in the blood of the wicked.
11 Men will say, "Surely there is a reward for the righteous; surely there is a God who judges on earth."

1 என் தேவனே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும்; என்மேல் எழும்புகிறவர்களுக்கு என்னை விலக்கி உயர்ந்த அடைக்கலத்திலே வையும்.
2 அக்கிரமக்காரருக்கு என்னைத் தப்புவித்து, இரத்தப்பிரியரான மனுஷருக்கு என்னை விலக்கி இரட்சியும்.
3 இதோ, என் பிராணனுக்குப் பதிவிருக்கிறார்கள்; கர்த்தாவே, என்னிடத்தில் மீறுதலும் பாவமும் இல்லாதிருந்தும், பலவான்கள் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடுகிறார்கள்.
4 என்னிடத்தில் அக்கிரமம் இல்லாதிருந்தும், ஓடித்திரிந்து யுத்தத்துக்கு ஆயத்தமாகிறார்கள், எனக்குத் துணைசெய்ய விழித்து என்னை நோக்கிப் பாரும்.
5 சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலின் தேவனே, நீர் சகல ஜாதிகளையும் விசாரிக்க விழித்தெழும்பும்; வஞ்சகமாய்த் துரோகஞ்செய்கிற ஒருவருக்கும் தயை செய்யாதேயும். (சேலா.)
6 அவர்கள் சாயங்காலத்தில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள்.
7 இதோ, தங்கள் வார்த்தைகளைக் கக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளில் பட்டயங்கள் இருக்கிறது, கேட்கிறவன் யார் என்கிறார்கள்.
8 ஆனாலும் கர்த்தாவே, நீர் அவர்களைப் பார்த்து நகைப்பீர்; புறஜாதிகள் யாவரையும் இகழுவீர்.
9 அவன் வல்லமையை நான் கண்டு உமக்குக் காத்திருப்பேன்; தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம்.
10 என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார்; தேவன் என் சத்துருக்களுக்கு வரும் நீதிசரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார்.
11 அவர்களைக் கொன்றுபோடாதேயும், என் ஜனங்கள் மறந்துபோவார்களே; எங்கள் கேடகமாகிய ஆண்டவரே, உமது வல்லமையினால் அவர்களைச் சிதறடித்து, அவர்களைத் தாழ்த்திப்போடும்.
12 அவர்கள் உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாயிருக்கிறது; அவர்கள் இட்ட சாபமும் சொல்லிய பொய்யும் ஆகிய இவைகளினிமித்தம் தங்கள் பெருமையில் அகப்படுவார்களாக.
13 தேவன் பூமியின் எல்லைவரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிறவரென்று அவர்கள் அறியும்பொருட்டு, அவர்களை உம்முடைய உக்கிரத்திலே நிர்மூலமாக்கும்; இனி இராதபடிக்கு அவர்களை நிர்மூலமாக்கும். (சேலா.)
14 அவர்கள் சாயங்காலத்தில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள்.
15 அவர்கள் உணவுக்காக அலைந்துதிரிந்து திருப்தியடையாமல், முறுமுறுத்துக்கொண்டிருப்பார்கள்.
16 நானோ உம்முடைய வல்லமையைப் பாடி காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.
17 என் பெலனே, உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்; தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமும், கிருபையுள்ள என் தேவனுமாயிருக்கிறார்.


0 To the choirmaster: according to Do Not Destroy. A Miktam of David, when Saul sent men to watch his house in order to kill him.
1 Deliver me from my enemies, O my God, protect me from those who rise up against me,
2 deliver me from those who work evil, and save me from bloodthirsty men.
3 For, lo, they lie in wait for my life; fierce men band themselves against me. For no transgression or sin of mine, O LORD,
4 for no fault of mine, they run and make ready. Rouse thyself, come to my help, and see!
5 Thou, LORD God of hosts, art God of Israel. Awake to punish all the nations; spare none of those who treacherously plot evil. [Selah]
6 Each evening they come back, howling like dogs and prowling about the city.
7 There they are, bellowing with their mouths, and snarling with their lips -- for "Who," they think, "will hear us?"
8 But thou, O LORD, dost laugh at them; thou dost hold all the nations in derision.
9 O my Strength, I will sing praises to thee; for thou, O God, art my fortress.
10 My God in his steadfast love will meet me; my God will let me look in triumph on my enemies.
11 Slay them not, lest my people forget; make them totter by thy power, and bring them down, O Lord, our shield!
12 For the sin of their mouths, the words of their lips, let them be trapped in their pride. For the cursing and lies which they utter,
13 consume them in wrath, consume them till they are no more, that men may know that God rules over Jacob to the ends of the earth. [Selah]
14 Each evening they come back, howling like dogs and prowling about the city.
15 They roam about for food, and growl if they do not get their fill.
16 But I will sing of thy might; I will sing aloud of thy steadfast love in the morning. For thou hast been to me a fortress and a refuge in the day of my distress.
17 O my Strength, I will sing praises to thee, for thou, O God, art my fortress, the God who shows me steadfast love.

1 தேவனே நீர் எங்களைக் கைவிட்டீர், எங்களைச் சிதறடித்தீர், எங்கள்மேல் கோபமாயிருந்தீர்; மறுபடியும் எங்களிடமாய்த் திரும்பியருளும்.
2 பூமியை அதிரப்பண்ணி, அதை வெடிப்பாக்கினீர்; அதின் வெடிப்புகளைப் பொருந்தப்பண்ணும்; அது அசைகின்றது.
3 உம்முடைய ஜனங்களுக்குக் கடினமான காரியத்தைக் காண்பித்தீர்; தத்தளிப்பின் மதுபானத்தை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்.
4 சத்தியத்தினிமித்தம் ஏற்றும்படியாக, உமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு கொடியைக் கொடுத்தீர். (சேலா.)
5 உமது பிரியர் விடுவிக்கப்படும்படி, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எனக்குச் செவிகொடுத்தருளும்.
6 தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு விளம்பினார், ஆகையால் களிகூருவேன்; சீகேமைப் பங்கிட்டு சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன்.
7 கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது, எப்பிராயீம் என் தலையின் பெலன், யூதா என் நியாயப்பிரமாணிகன்.
8 மோவாப் என் பாதபாத்திரம், ஏதோமின்மேல் என் பாதரட்சையை எறிந்துபோடுவேன்; பெலிஸ்தியாவே, என்னிமித்தம் ஆர்ப்பரித்துக்கொள்.
9 அரணான பட்டணத்திற்கு என்னை நடத்திக்கொண்டுபோகிறவர் யார்? ஏதோம் மட்டும் எனக்கு வழிகாட்டுகிறவர் யார்?
10 எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீர் அல்லவோ? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீரல்லவோ?
11 இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனுஷனுடைய உதவி விருதா.
12 தேவனாலே பராக்கிரமம் செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்.


0 To the choirmaster: according to Shushan Eduth. A Miktam of David; for instruction; when he strove with Aram-naharaim and with Aram-zobah, and when Joab on his return killed twelve thousand of Edom in the Valley of Salt.
1 O God, thou hast rejected us, broken our defenses; thou hast been angry; oh, restore us.
2 Thou hast made the land to quake, thou hast rent it open; repair its breaches, for it totters.
3 Thou hast made thy people suffer hard things; thou hast given us wine to drink that made us reel.
4 Thou hast set up a banner for those who fear thee, to rally to it from the bow. [Selah]
5 That thy beloved may be delivered, give victory by thy right hand and answer us!
6 God has spoken in his sanctuary: "With exultation I will divide up Shechem and portion out the Vale of Succoth.
7 Gilead is mine; Manas'seh is mine; E'phraim is my helmet; Judah is my scepter.
8 Moab is my washbasin; upon Edom I cast my shoe; over Philistia I shout in triumph."
9 Who will bring me to the fortified city? Who will lead me to Edom?
10 Hast thou not rejected us, O God? Thou dost not go forth, O God, with our armies.
11 O grant us help against the foe, for vain is the help of man!
12 With God we shall do valiantly; it is he who will tread down our foes.

1 தேவனே, என் கூப்பிடுதலைக்கேட்டு, என் விண்ணப்பத்தைக் கவனியும்.
2 என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்.
3 நீர் எனக்கு அடைக்கலமும், சத்துருவுக்கு எதிரே பெலத்த துருகமுமாயிருந்தீர்.
4 நான் உம்முடைய கூடாரத்தில் சதாகாலமும் தங்குவேன்; உமது செட்டைகளின் மறைவிலே வந்து அடைவேன். (சேலா.)
5 தேவனே நீர் என் பொருத்தனைகளைக் கேட்டீர்; உமது நாமத்திற்குப் பயப்படுகிறவர்களின் சுதந்தரத்தை எனக்குத் தந்தீர்.
6 ராஜாவின் நாட்களோடே நாட்களைக் கூட்டுவீர்; அவர் வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.
7 அவர் தேவனுக்கு முன்பாக என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்; தயையும் உண்மையும் அவரைக் காக்கக் கட்டளையிடும்.
8 இப்படியே தினமும் என் பொருத்தனைகளை நான் செலுத்தும்படியாக, உமது நாமத்தை என்றைக்கும் கீர்த்தனம்பண்ணுவேன்.


0 To the choirmaster: with stringed instruments. A Psalm of David.
1 Hear my cry, O God, listen to my prayer;
2 from the end of the earth I call to thee, when my heart is faint. Lead thou me to the rock that is higher than I;
3 for thou art my refuge, a strong tower against the enemy.
4 Let me dwell in thy tent for ever! Oh to be safe under the shelter of thy wings! [Selah]
5 For thou, O God, hast heard my vows, thou hast given me the heritage of those who fear thy name.
6 Prolong the life of the king; may his years endure to all generations!
7 May he be enthroned for ever before God; bid steadfast love and faithfulness watch over him!
8 So will I ever sing praises to thy name, as I pay my vows day after day.

1 தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது; அவரால் என் இரட்சிப்பு வரும்.
2 அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை.
3 நீங்கள் எதுவரைக்கும் ஒரு மனுஷனுக்குத் தீங்குசெய்ய நினைப்பீர்கள், நீங்கள் அனைவரும் சங்கரிக்கப்படுவீர்கள், சாய்ந்த மதிலுக்கும் இடிந்த சுவருக்கும் ஒப்பாவீர்கள்.
4 அவனுடைய மேன்மையிலிருந்து அவனைத் தள்ளும்படிக்கே அவர்கள் ஆலோசனைபண்ணி, அபத்தம்பேச விரும்புகிறார்கள்; தங்கள் வாயினால் ஆசீர்வதித்து, தங்கள் உள்ளத்தில் சபிக்கிறார்கள். (சேலா.)
5 என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும்.
6 அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அசைக்கப்படுவதில்லை.
7 என் இரட்சிப்பும், என் மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; பெலனான என் கன்மலையும் என் அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது.
8 ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார். (சேலா.)
9 கீழ்மக்கள் மாயையும், மேன்மக்கள் பொய்யுமாமே; தராசிலே வைக்கப்பட்டால் அவர்களெல்லாரும் மாயையிலும் லேசானவர்கள்.
10 கொடுமையை நம்பாதிருங்கள், கொள்ளையினால் பெருமை பாராட்டாதிருங்கள்; ஐசுவரியம் விருத்தியானால் இருதயத்தை அதின்மேல் வைக்காதேயுங்கள்.
11 தேவன் ஒருதரம் விளம்பினார், இரண்டுதரம் கேட்டிருக்கிறேன்; வல்லமை தேவனுடையது என்பதே.
12 கிருபையும் உம்முடையது, ஆண்டவரே! தேவரீர் அவனவன் செய்கைக்குத் தக்கதாகப் பலனளிக்கிறீர்.


0 To the choirmaster: according to Jeduthun. A Psalm of David.
1 For God alone my soul waits in silence; from him comes my salvation.
2 He only is my rock and my salvation, my fortress; I shall not be greatly moved.
3 How long will you set upon a man to shatter him, all of you, like a leaning wall, a tottering fence?
4 They only plan to thrust him down from his eminence. They take pleasure in falsehood. They bless with their mouths, but inwardly they curse. [Selah]
5 For God alone my soul waits in silence, for my hope is from him.
6 He only is my rock and my salvation, my fortress; I shall not be shaken.
7 On God rests my deliverance and my honor; my mighty rock, my refuge is God.
8 Trust in him at all times, O people; pour out your heart before him; God is a refuge for us. [Selah]
9 Men of low estate are but a breath, men of high estate are a delusion; in the balances they go up; they are together lighter than a breath.
10 Put no confidence in extortion, set no vain hopes on robbery; if riches increase, set not your heart on them.
11 Once God has spoken; twice have I heard this: that power belongs to God;
12 and that to thee, O Lord, belongs steadfast love. For thou dost requite a man according to his work.

1 தேவனே, நீர் என்னுடைய தேவன், அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.
2 இப்படியே பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப்பார்க்க ஆசையாயிருந்து உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன்.
3 ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும்.
4 என் ஜீவனுள்ளமட்டும் நான் உம்மைத் துதித்து, உமது நாமத்தைச் சொல்லிக் கையெடுப்பேன்.
5 நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என் ஆத்துமா திருப்தியாகும்; என் வாய் ஆனந்தக்களிப்புள்ள உதடுகளால் உம்மைப் போற்றும்.
6 என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்.
7 நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன்.
8 என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது.
9 என் பிராணனை அழிக்கத் தேடுகிறவர்களோ, பூமியின் தாழ்விடங்களில் இறங்குவார்கள்.
10 அவர்கள் பட்டயத்தால், விழுவார்கள்; நரிகளுக்கு இரையாவார்கள்.
11 ராஜாவோ தேவனில் களிகூருவார்; அவர்பேரில் சத்தியம்பண்ணுகிறவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள்; பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும்.


0 A Psalm of David, when he was in the Wilderness of Judah.
1 O God, thou art my God, I seek thee, my soul thirsts for thee; my flesh faints for thee, as in a dry and weary land where no water is.
2 So I have looked upon thee in the sanctuary, beholding thy power and glory.
3 Because thy steadfast love is better than life, my lips will praise thee.
4 So I will bless thee as long as I live; I will lift up my hands and call on thy name.
5 My soul is feasted as with marrow and fat, and my mouth praises thee with joyful lips,
6 when I think of thee upon my bed, and meditate on thee in the watches of the night;
7 for thou hast been my help, and in the shadow of thy wings I sing for joy.
8 My soul clings to thee; thy right hand upholds me.
9 But those who seek to destroy my life shall go down into the depths of the earth;
10 they shall be given over to the power of the sword, they shall be prey for jackals.
11 But the king shall rejoice in God; all who swear by him shall glory; for the mouths of liars will be stopped.

1 தேவனே, என் விண்ணப்பத்தில் என் சத்தத்தைக் கேட்டருளும்; சத்துருவால் வரும் பயத்தை நீக்கி, என் பிராணனைக் காத்தருளும்.
2 துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கும் அக்கிரமக்காரருடைய கலகத்துக்கும் என்னை விலக்கி மறைத்தருளும்.
3 அவர்கள் தங்கள் நாவைப் பட்டயத்தைப்போல் கூர்மையாக்கி,
4 மறைவுகளில் உத்தமன்மேல் எய்யும்பொருட்டுக் கசப்பான வார்த்தைகளாகிய தங்கள் அம்புகளை நாணேற்றுகிறார்கள்; சற்றும் பயமின்றிச் சடிதியில் அவன்மேல் எய்கிறார்கள்.
5 அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, மறைவான கண்ணிகளை வைக்க ஆலோசனைபண்ணி, அவைகளைக் காண்பவன் யார் என்கிறார்கள்.
6 அவர்கள் நியாயக்கேடுகளை ஆய்ந்துதேடி, தந்திரமான யோசனை நிறைவேறும்படி பிரயத்தனம்பண்ணுகிறார்கள்: அவர்களில் ஒவ்வொருவருடைய உட்கருத்தும் இருதயமும் ஆழமாயிருக்கிறது.
7 ஆனாலும் தேவன் அவர்கள்மேல் அம்புகளை எய்வார், சடிதியாய் அவர்கள் காயப்படுவார்கள்.
8 அவர்கள் தள்ளப்பட்டு, கீழேவிழும்படி அவர்கள் நாவுகளே அவர்களைக் கெடுக்கும்; அவர்களைக் காண்கிற யாவரும் ஓடிப்போவார்கள்.
9 எல்லா மனுஷரும் பயந்து, தேவனுடைய செயலை அறிவித்து, அவர் கிரியையை உணர்ந்துகொள்வார்கள்.
10 நீதிமான் கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான்; செம்மையான இருதயமுள்ளவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள்.


0 To the choirmaster. A Psalm of David.
1 Hear my voice, O God, in my complaint; preserve my life from dread of the enemy,
2 hide me from the secret plots of the wicked, from the scheming of evildoers,
3 who whet their tongues like swords, who aim bitter words like arrows,
4 shooting from ambush at the blameless, shooting at him suddenly and without fear.
5 They hold fast to their evil purpose; they talk of laying snares secretly, thinking, "Who can see us?
6 Who can search out our crimes? We have thought out a cunningly conceived plot." For the inward mind and heart of a man are deep!
7 But God will shoot his arrow at them; they will be wounded suddenly.
8 Because of their tongue he will bring them to ruin; all who see them will wag their heads.
9 Then all men will fear; they will tell what God has wrought, and ponder what he has done.
10 Let the righteous rejoice in the LORD, and take refuge in him! Let all the upright in heart glory!

1 தேவனே சீயோனில் உமக்காகத் துதியானது அமைந்து காத்திருக்கிறது; பொருத்தனை உமக்குச் செலுத்தப்படும்.
2 ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்.
3 அக்கிரம விஷயங்கள் என்மேல் மிஞ்சி வல்லமைகொண்டது; தேவரீரோ எங்கள் மீறுதல்களை நிவிர்த்தியாக்குகிறீர்.
4 உம்முடைய பிராகாரங்களில் வாசமாயிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்; உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம்.
5 பூமியின் கடையாந்தரங்களிலும் தூரமான சமுத்திரங்களிலுமுள்ளவர்கள் எல்லாரும் நம்பும் நம்பிக்கையாயிருக்கிற எங்கள் இரட்சிப்பின் தேவனே, நீர் பயங்கரமான காரியங்களைச் செய்கிறதினால் எங்களுக்கு நீதியுள்ள உத்தரவு அருளுகிறீர்.
6 வல்லமையை இடைகட்டிக்கொண்டு, உம்முடைய பலத்தினால் பர்வதங்களை உறுதிப்படுத்தி,
7 சமுத்திரங்களின் மும்முரத்தையும் அவைகளுடைய அலைகளின் இரைச்சலையும், ஜனங்களின் அமளியையும் அமர்த்துகிறீர்.
8 கடையாந்தர இடங்களில் குடியிருக்கிறவர்களும் உம்முடைய அடையாளங்களினிமித்தம் பயப்படுகிறார்கள்; காலையையும் மாலையையும் களிகூரப்பண்ணுகிறீர்.
9 தேவரீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; தண்ணீர் நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர்; இப்படி நீர் அதைத் திருத்தி, அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறீர்.
10 அதின் வரப்புகள் தணியத்தக்கதாய் அதின் படைச்சால்களுக்குத் தண்ணீர் இறைத்து, அதை மழைகளால் கரையப்பண்ணி, அதின் பயிரை ஆசீர்வதிக்கிறீர்.
11 வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது.
12 வனாந்தர தாபரங்களிலும் பொழிகிறது; மேடுகள் சுற்றிலும் பூரிப்பாயிருக்கிறது.
13 மேய்ச்சலுள்ள வெளிகளில் ஆடுகள் நிறைந்திருக்கிறது; பள்ளத்தாக்குகள் தானியத்தால் மூடியிருக்கிறது; அவைகள் கெம்பீரித்துப் பாடுகிறது.


0 To the choirmaster. A Psalm of David. A Song.
1 Praise is due to thee, O God, in Zion; and to thee shall vows be performed,
2 O thou who hearest prayer! To thee shall all flesh come
3 on account of sins. When our transgressions prevail over us, thou dost forgive them.
4 Blessed is he whom thou dost choose and bring near, to dwell in thy courts! We shall be satisfied with the goodness of thy house, thy holy temple!
5 By dread deeds thou dost answer us with deliverance, O God of our salvation, who art the hope of all the ends of the earth, and of the farthest seas;
6 who by thy strength hast established the mountains, being girded with might;
7 who dost still the roaring of the seas, the roaring of their waves, the tumult of the peoples;
8 so that those who dwell at earth's farthest bounds are afraid at thy signs; thou makest the outgoings of the morning and the evening to shout for joy.
9 Thou visitest the earth and waterest it, thou greatly enrichest it; the river of God is full of water; thou providest their grain, for so thou hast prepared it.
10 Thou waterest its furrows abundantly, settling its ridges, softening it with showers, and blessing its growth.
11 Thou crownest the year with thy bounty; the tracks of thy chariot drip with fatness.
12 The pastures of the wilderness drip, the hills gird themselves with joy,
13 the meadows clothe themselves with flocks, the valleys deck themselves with grain, they shout and sing together for joy.

1 பூமியின் குடிகளே, நீங்கள் எல்லாரும் தேவனுக்கு முன்பாகக் கெம்பீராய்ப் பாடுங்கள்.
2 அவர் நாமத்தின் மகத்துவத்தைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய துதியின் மகிமையைக் கொண்டாடுங்கள்.
3 தேவனை நோக்கி: உமது கிரியைகளில் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறீர்; உமது மகத்துவமான வல்லமையினிமித்தம் உம்முடைய சத்துருக்கள் உமக்கு இச்சகம்பேசி அடங்குவார்கள்.
4 பூமியின்மீதெங்கும் உம்மைப்பணிந்துகொண்டு உம்மைத் துதித்துப்பாடுவார்கள்; அவர்கள் உம்முடைய நாமத்தைத் துதித்துப் பாடுவார்கள் என்று சொல்லுங்கள். (சேலா.)
5 தேவனுடைய செய்கைகளை வந்துபாருங்கள், அவர் மனுபுத்திரரிடத்தில் நடப்பிக்குங் கிரியையில் பயங்கரமானவர்.
6 கடலை உலர்ந்த தரையாக மாற்றினார்; ஆற்றைக் கால்நடையாய்க் கடந்தார்கள்; அங்கே அவரில் களிகூர்ந்தோம்.
7 அவர் தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; அவருடைய கண்கள் ஜாதிகள்மேல் நோக்கமாயிருக்கிறது; துரோகிகள் தங்களை உயர்த்தாதிருப்பார்களாக.(சேலா.)
8 ஜனங்களே நம்முடைய தேவனை ஸ்தோத்திரித்து, அவரைத் துதிக்குஞ்சத்தத்தைக் கேட்கப்பண்ணுங்கள்.
9 அவர் நம்முடைய கால்களைத் தள்ளாடவொட்டாமல், நம்முடைய ஆத்துமாவை உயிரோடே வைக்கிறார்.
10 தேவனே, எங்களைச் சோதித்தீர்; வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர்.
11 எங்களை வலையில் அகப்படுத்தி, எங்கள் இடுப்புகளின்மேல் வருத்தமான பாரத்தை ஏற்றினீர்,
12 மனுஷரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகப்பண்ணினீர்; தீயையும் தண்ணீரையும் கடந்துவந்தோம்; செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்.
13 சர்வாங்க தகனபலிகளோடே உமது ஆலயத்திற்குள் பிரவேசிப்பேன்;
14 என் இக்கட்டில் நான் என் உதடுகளைத் திறந்து, என் வாயினால் சொல்லிய என் பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன்.
15 ஆட்டுக்கடாக்களின் நிணப்புகையுடனே கொழுமையானவைகளை உமக்குத் தகனபலியாக இடுவேன்; காளைகளையும் செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன். (சேலா.)
16 தேவனுக்குப் பயந்தவர்களே, நீங்கள் எல்லாரும் வந்து கேளுங்கள்; அவர் என் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன்.
17 அவரை நோக்கி என் வாயினால் கூப்பிட்டேன், என் நாவினால் அவர் புகழப்பட்டார்.
18 என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்.
19 மெய்யாய் தேவன் எனக்குச்செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்.
20 என் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.


0 To the choirmaster. A Song. A Psalm.
1 Make a joyful noise to God, all the earth;
2 sing the glory of his name; give to him glorious praise!
3 Say to God, "How terrible are thy deeds! So great is thy power that thy enemies cringe before thee.
4 All the earth worships thee; they sing praises to thee, sing praises to thy name." [Selah]
5 Come and see what God has done: he is terrible in his deeds among men.
6 He turned the sea into dry land; men passed through the river on foot. There did we rejoice in him,
7 who rules by his might for ever, whose eyes keep watch on the nations -- let not the rebellious exalt themselves. [Selah]
8 Bless our God, O peoples, let the sound of his praise be heard,
9 who has kept us among the living, and has not let our feet slip.
10 For thou, O God, hast tested us; thou hast tried us as silver is tried.
11 Thou didst bring us into the net; thou didst lay affliction on our loins;
12 thou didst let men ride over our heads; we went through fire and through water; yet thou hast brought us forth to a spacious place.
13 I will come into thy house with burnt offerings; I will pay thee my vows,
14 that which my lips uttered and my mouth promised when I was in trouble.
15 I will offer to thee burnt offerings of fatlings, with the smoke of the sacrifice of rams; I will make an offering of bulls and goats. [Selah]
16 Come and hear, all you who fear God, and I will tell what he has done for me.
17 I cried aloud to him, and he was extolled with my tongue.
18 If I had cherished iniquity in my heart, the Lord would not have listened.
19 But truly God has listened; he has given heed to the voice of my prayer.
20 Blessed be God, because he has not rejected my prayer or removed his steadfast love from me!

1 தேவனே, பூமியில் உம்முடைய வழியும், எல்லா ஜாதிகளுக்குள்ளும் உம்முடைய இரட்சணியமும் விளங்கும்படியாய்,
2 தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும். (சேலா.)
3 தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக.
4 தேவரீர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள ஜாதிகளை நடத்துவீர்; ஆதலால் ஜாதிகள் சந்தோஷித்து, கெம்பீரத்தோடே மகிழக்கடவர்கள்.(சேலா.)
5 தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக, சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக.
6 பூமி தன் பலனைத் தரும், தேவனாகிய எங்கள் தேவனே எங்களை ஆசீர்வதிப்பார்.
7 தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்; பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும்.


0 To the choirmaster: with stringed instruments. A Psalm. A Song.
1 May God be gracious to us and bless us and make his face to shine upon us, [Selah]
2 that thy way may be known upon earth, thy saving power among all nations.
3 Let the peoples praise thee, O God; let all the peoples praise thee!
4 Let the nations be glad and sing for joy, for thou dost judge the peoples with equity and guide the nations upon earth. [Selah]
5 Let the peoples praise thee, O God; let all the peoples praise thee!
6 The earth has yielded its increase; God, our God, has blessed us.
7 God has blessed us; let all the ends of the earth fear him!

1 தேவன் எழுந்தருளுவார், அவருடைய சத்துருக்கள் சிதறுண்டு, அவரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு முன்பாக ஓடிப்போவார்கள்.
2 புகை பறக்கடிக்கப்படுவதுபோல அவர்களைப் பறக்கடிப்பீர்; மெழுகு அக்கினிக்குமுன் உருகுவதுபோல துன்மார்க்கர் தேவனுக்குமுன் அழிவார்கள்.
3 நீதிமான்களோ தேவனுக்குமுன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து, ஆனந்த சந்தோஷமடைவார்கள்.
4 தேவனைப்பாடி, அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; வனாந்தரங்களில் ஏறிவருகிறவருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருடைய நாமம் யேகோவா, அவருக்கு முன்பாகக் களிகூருங்கள்.
5 தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார்.
6 தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார்; துரோகிகளோ வறண்ட பூமியில் தங்குவார்கள்.
7 தேவனே, நீர் உம்முடைய ஜனங்களுக்கு முன்னே சென்று அவாந்தரவெளியிலே நடந்துவருகையில்,(சேலா.)
8 பூமி அதிர்ந்தது; தேவனாகிய உமக்கு முன்பாக வானமும் பொழிந்தது; இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற தேவனுக்கு முன்பாகவே இந்தச் சீனாய் மலையும் அசைந்தது.
9 தேவனே, சம்பூரண மழையைப் பெய்யப்பண்ணினீர்; இளைத்துப்போன உமது சுதந்தரத்தைத் திடப்படுத்தினீர்.
10 உம்முடைய மந்தை அதிலே தங்கியிருந்தது; தேவனே உம்முடைய தயையினாலே ஏழைகளைப் பராமரிக்கிறீர்.
11 ஆண்டவர் வசனம் தந்தார்; அதைப் பிரசித்தப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி.
12 சேனைகளின் ராஜாக்கள் தத்தளித்து ஓடினார்கள்; வீட்டிலிருந்த ஸ்திரீயானவள் கொள்ளைப்பொருளைப் பங்கிட்டாள்.
13 நீங்கள் அடுப்பினடியில் கிடந்தவர்களாயிருந்தாலும், வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட புறாச்சிறகுகள்போலவும், பசும்பொன் நிறமாகிய அதின் இறகுகளின் சாயலாகவும் இருப்பீர்கள்.
14 சர்வவல்லவர் அதில் ராஜாக்களைச் சிதறடித்தபோது, அது சல்மோன் மலையின் உறைந்த மழைபோல் வெண்மையாயிற்று.
15 தேவபர்வதம் பாசான் பர்வதம் போலிருக்கிறது; பாசான் பர்வதம் உயர்ந்த சிகரங்களுள்ளது.
16 உயர்ந்த சிகரமுள்ள பர்வதங்களே, ஏன் துள்ளுகிறீர்கள்; இந்தப் பர்வதத்தில் வாசமாயிருக்க தேவன் விரும்பினார்; ஆம், கர்த்தர் இதிலே என்றென்றைக்கும் வாசமாயிருப்பார்.
17 தேவனுடைய இரதங்கள் பதினாயிரங்களும், ஆயிரமாயிரங்களுமாயிருக்கிறது, ஆண்டவர் பரிசுத்த ஸ்தலமான சீனாயிலிருந்தவண்னாமாய் அவைகளுக்குள் இருக்கிறார்.
18 தேவரீர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோனீர்; தேவனாகிய கர்த்தர் மனுஷருக்குள் வாசம்பண்ணும்பொருட்டு, துரோகிகளாகிய மனுஷர்களுக்காகவும் வரங்களைப் பெற்றுக்கொண்டீர்.
19 எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.)
20 நம்முடைய தேவன் இரட்சிப்பை அருளும் தேவனாயிருக்கிறார்; ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு.
21 மெய்யாகவே தேவன் தம்முடைய சத்துருக்களின் சிரசையும், தன் அக்கிரமங்களில் துணிந்து நடக்கிறவனுடைய மயிருள்ள உச்சந்தலையையும் உடைப்பார்.
22 உன் கால்கள் சத்துருக்களின் இரத்தத்தில் பதியும்படியாகவும், உன் நாய்களின் நாவு அதை நக்கும்படியாகவும்,
23 என்னுடைய ஜனத்தைப் பாசானிலிருந்து திரும்ப அழைத்துவருவேன்; அதைச் சமுத்திர ஆழங்களிலிருந்தும் திரும்ப அழைத்துவருவேன் என்று ஆண்டவர் சொன்னார்.
24 தேவனே உம்முடைய நடைகளைக் கண்டார்கள்; என் தேவனும் என் ராஜாவும் பரிசுத்த ஸ்தலத்திலே நடந்துவருகிற நடைகளையே கண்டார்கள்.
25 முன்னாகப் பாடுகிறவர்களும் பின்னாக வீணைகளை வாசிக்கிறவர்களும், சுற்றிலும் தம்புரு வாசிக்கிற கன்னிகைகளும் நடந்தார்கள்.
26 இஸ்ரவேலின் ஊற்றிலிருந்து தோன்றினவர்களே, சபைகளின் நடுவே ஆண்டவராகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.
27 அங்கே அவர்களை ஆளுகிற சின்ன பென்யமீனும், யூதாவின் பிரபுக்களும் அவர்கள் கூட்டமும், செபுலோனின் பிரபுக்களும், நப்தலியின் பிரபுக்களும் உண்டு.
28 உன் தேவன் உனக்குப் பலத்தைக் கட்டளையிட்டார்; தேவனே நீர் எங்கள்நிமித்தம் உண்டுபண்ணினதைத் திடப்படுத்தும்.
29 எருசலேமிலுள்ள உம்முடைய ஆலயத்தினிமித்தம், ராஜாக்கள் உமக்குக் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்.
30 நாணலிலுள்ள மிருககூட்டத்தையும், ஜனங்களாகிய கன்றுகளோடுகூட ரிஷப கூட்டத்தையும் அதட்டும்; ஒவ்வொருவனும் வெள்ளிப்பணங்களைக் கொண்டுவந்து பணிந்துகொள்ளுவான்; யுத்தங்களில் பிரியப்படுகிற ஜனங்களைச் சிதறடிப்பார்.
31 பிரபுக்கள் எகிப்திலிருந்து வருவார்கள்; எத்தியோப்பியா தேவனை நோக்கி கையெடுக்கத் தீவிரிக்கும்.
32 பூமியின் ராஜ்யங்களே, தேவனைப் பாடி, ஆண்டவரைக் கீர்த்தனம் பண்ணுங்கள். (சேலா.)
33 ஆதிமுதலாயிருக்கிற வானாதி வானங்களின்மேல் எழுந்தருளியிருக்கிறவரைப் பாடுங்கள், இதோ, தமது சத்தத்தைப் பலத்த சத்தமாய் முழங்கப்பண்ணுகிறார்.
34 தேவனுடைய வல்லமையைப் பிரசித்தப்படுத்துங்கள்; அவருடைய மகிமை இஸ்ரவேலின்மேலும், அவருடைய வல்லமை மேகமண்டலங்களிலும் உள்ளது,
35 தேவனே, உமது பரிசுத்த ஸ்தலங்களிலிருந்து பயங்கரமாய் விளங்குகிறீர்; இஸ்ரவேலின் தேவன் தம்முடைய ஜனங்களுக்குப் பெலனையும் சத்துவத்தையும் அருளுகிறவர்; தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.


0 To the choirmaster. A Psalm of David. A Song.
1 Let God arise, let his enemies be scattered; let those who hate him flee before him!
2 As smoke is driven away, so drive them away; as wax melts before fire, let the wicked perish before God!
3 But let the righteous be joyful; let them exult before God; let them be jubilant with joy!
4 Sing to God, sing praises to his name; lift up a song to him who rides upon the clouds; his name is the LORD, exult before him!
5 Father of the fatherless and protector of widows is God in his holy habitation.
6 God gives the desolate a home to dwell in; he leads out the prisoners to prosperity; but the rebellious dwell in a parched land.
7 O God, when thou didst go forth before thy people, when thou didst march through the wilderness, [Selah]
8 the earth quaked, the heavens poured down rain, at the presence of God; yon Sinai quaked at the presence of God, the God of Israel.
9 Rain in abundance, O God, thou didst shed abroad; thou didst restore thy heritage as it languished;
10 thy flock found a dwelling in it; in thy goodness, O God, thou didst provide for the needy.
11 The Lord gives the command; great is the host of those who bore the tidings:
12 "The kings of the armies, they flee, they flee!" The women at home divide the spoil,
13 though they stay among the sheepfolds -- the wings of a dove covered with silver, its pinions with green gold.
14 When the Almighty scattered kings there, snow fell on Zalmon.
15 O mighty mountain, mountain of Bashan; O many-peaked mountain, mountain of Bashan!
16 Why look you with envy, O many-peaked mountain, at the mount which God desired for his abode, yea, where the LORD will dwell for ever?
17 With mighty chariotry, twice ten thousand, thousands upon thousands, the Lord came from Sinai into the holy place.
18 Thou didst ascend the high mount, leading captives in thy train, and receiving gifts among men, even among the rebellious, that the LORD God may dwell there.
19 Blessed be the Lord, who daily bears us up; God is our salvation. [Selah]
20 Our God is a God of salvation; and to GOD, the Lord, belongs escape from death.
21 But God will shatter the heads of his enemies, the hairy crown of him who walks in his guilty ways.
22 The Lord said, "I will bring them back from Bashan, I will bring them back from the depths of the sea,
23 that you may bathe your feet in blood, that the tongues of your dogs may have their portion from the foe."
24 Thy solemn processions are seen, O God, the processions of my God, my King, into the sanctuary --
25 the singers in front, the minstrels last, between them maidens playing timbrels:
26 "Bless God in the great congregation, the LORD, O you who are of Israel's fountain!"
27 There is Benjamin, the least of them, in the lead, the princes of Judah in their throng, the princes of Zeb'ulun, the princes of Naph'tali.
28 Summon thy might, O God; show thy strength, O God, thou who hast wrought for us.
29 Because of thy temple at Jerusalem kings bear gifts to thee.
30 Rebuke the beasts that dwell among the reeds, the herd of bulls with the calves of the peoples. Trample under foot those who lust after tribute; scatter the peoples who delight in war.
31 Let bronze be brought from Egypt; let Ethiopia hasten to stretch out her hands to God.
32 Sing to God, O kingdoms of the earth; sing praises to the Lord, [Selah]
33 to him who rides in the heavens, the ancient heavens; lo, he sends forth his voice, his mighty voice.
34 Ascribe power to God, whose majesty is over Israel, and his power is in the skies.
35 Terrible is God in his sanctuary, the God of Israel, he gives power and strength to his people. Blessed be God!

1 தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமாமட்டும் பெருகிவருகிறது.
2 ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன், நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன்; வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது.
3 நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று.
4 நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள் பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடுக்கவேண்டியதாயிற்று.
5 தேவனே, நீர் என் புத்தியீனத்தை அறிந்திருக்கிறீர்; என் குற்றங்கள் உமக்கு மறைந்திருக்கவில்லை.
6 சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரே, உமக்காகக் காத்திருக்கிறவர்கள் என்னிமித்தம் வெட்கப்பட்டுப்போகாதிருப்பார்களாக; இஸ்ரவேலின் தேவனே, உம்மைத் தேடுகிறவர்கள் என்னிமித்தம் நாணமடையாதிருப்பார்களாக.
7 உமதுநிமித்தம் நிந்தையைச் சகித்தேன்; இலச்சை என் முகத்தை மூடிற்று.
8 என் சகோதரருக்கு வேற்று மனுஷனும், என் தாயின் பிள்ளைகளுக்கு அந்நியனுமானேன்.
9 உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் படசித்தது; உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது.
10 என் ஆத்துமா வாடும்படி உபவாசித்து அழுதேன்; அதுவும் எனக்கு நிந்தையாய் முடிந்தது.
11 இரட்டை என் உடுப்பாக்கினேன்; அப்பொழுதும் அவர்களுக்கு பழமொழியானேன்.
12 வாசலில் உட்கார்ந்திருக்கிறவர்கள் எனக்கு விரோதமாய்ப் பேசுகிறார்கள்; மதுபானம்பண்ணுகிறவர்களின் பாடலானேன்.
13 ஆனாலும் கர்த்தாவே, அநுக்கிரக காலத்திலே உம்மை நோக்கி விண்ணப்பஞ் செய்கிறேன்; தேவனே உமது மிகுந்த கிருபையினாலும் உமது இரட்சிப்பின் சத்தியத்தினாலும் எனக்குச் செவிகொடுத்தருளும்.
14 நான் அமிழ்ந்திப்போகாதபடிக்குச் சேற்றினின்று என்னைத் தூக்கிவிடும்; என்னைப் பகைக்கிறவர்களினின்றும் நிலையாத ஜலத்தினின்றும் நான் நீங்கும்படி செய்யும்.
15 ஜலப்பிரவாகங்கள் என்மேல் புரளாமலும், ஆழம் என்னை விழுங்காமலும், பாதாளம் என்மேல் தன் வாயை அடைத்துக்கொள்ளாமலும் இருப்பதாக.
16 கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும், உம்முடைய தயை நலமாயிருக்கிறது; உமது உருக்கமான இரக்கங்களின்படி என்னைக் கடாட்சித்தருளும்.
17 உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்; நான் வியாகுலப்படுகிறேன், எனக்குத் தீவிரமாய்ச் செவிகொடுத்தருளும்.
18 நீர் என் ஆத்துமாவினிடத்தில் வந்து அதை விடுதலைபண்ணும்; என் சத்துருக்களினிமித்தம் என்னை மீட்டுவிடும்.
19 தேவரீர் என் நிந்தையையும் என் வெட்கத்தையும் என் அவமானத்தையும் அறிந்திருக்கிறீர்; என் சத்துருக்கள் எல்லாரும் உமக்கு முன்பாக இருக்கிறார்கள்.
20 நிந்தை என் இருதயத்தைப் பிளந்தது; நான் மிகவும் வேதனைப்படுகிறேன்; எனக்காக பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன் ஒருவனும் இல்லை; தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தேன், ஒருவனையும் காணேன்.
21 என் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள்.
22 அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும், அவர்களுடைய செல்வம் அவர்களுக்கு வலையுமாயிருக்கக்கடவது.
23 அவர்களுடைய கண்கள் காணாதபடி அந்தகாரப்படக்கடவது; அவர்கள் இடுப்புகளை எப்போதும் தள்ளாடப்பண்ணும்.
24 உம்முடைய உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றும்; உம்முடைய கோபாக்கினி அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக.
25 அவர்கள் வாசஸ்தலம் பாழாகக்கடவது; அவர்களுடைய கூடாரங்களில் குடியில்லாமற்போவதாக.
26 தேவரீர் அடித்தவனை அவர்கள் துன்பப்படுத்தி, நீர் காயப்படுத்தினவர்களை நோகப் பேசுகிறார்களே.
27 அக்கிரமத்தின்மேல் அக்கிரமத்தை அவர்கள்மேல் சுமத்தும், அவர்கள் உமது நீதிக்கு வந்தெட்டாதிருப்பார்களாக.
28 ஜீவபுஸ்தகத்திலிருந்து அவர்கள்பேர் கிறுக்கப்பட்டுப்போவதாக; நீதிமான்கள் பேரோடே அவர்கள் பேர் எழுதப்படாதிருப்பதாக.
29 நானோ சிறுமையும் துயரமுமுள்ளவன்; தேவனே, உம்முடைய இரட்சிப்பு எனக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.
30 தேவனுடைய நாமத்தைப் பாட்டினால் துதித்து, அவரை ஸ்தோத்திரத்தினால் மகிமைப்படுத்துவேன்.
31 கொம்பும் விரிகுளம்புமுள்ள காளையெருதைப்பார்க்கிலும், இதுவே கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும்.
32 சாந்தகுணமுள்ளவர்கள் இதைக்கண்டு சந்தோஷப்படுவார்கள்; தேவனைத் தேடுகிறவர்களே, உங்கள் இருதயம் வாழும்.
33 கர்த்தர் எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார், கட்டுண்ட தம்முடையவர்களை அவர் புறக்கணியார்.
34 வானமும் பூமியும் சமுத்திரங்களும் அவைகளில் சஞ்சரிக்கிற யாவும் அவரைத் துதிக்கக்கடவது.
35 தேவன் சீயோனை இரட்சித்து, யூதாவின் பட்டணங்களைக் கட்டுவார்; அப்பொழுது அங்கே குடியிருந்து அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
36 அவருடைய ஊழியக்காரரின் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்; அவருடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் அதில் வாசமாயிருப்பார்கள்.


0 To the choirmaster: according to Lilies. A Psalm of David.
1 Save me, O God! For the waters have come up to my neck.
2 I sink in deep mire, where there is no foothold; I have come into deep waters, and the flood sweeps over me.
3 I am weary with my crying; my throat is parched. My eyes grow dim with waiting for my God.
4 More in number than the hairs of my head are those who hate me without cause; mighty are those who would destroy me, those who attack me with lies. What I did not steal must I now restore?
5 O God, thou knowest my folly; the wrongs I have done are not hidden from thee.
6 Let not those who hope in thee be put to shame through me, O Lord GOD of hosts; let not those who seek thee be brought to dishonor through me, O God of Israel.
7 For it is for thy sake that I have borne reproach, that shame has covered my face.
8 I have become a stranger to my brethren, an alien to my mother's sons.
9 For zeal for thy house has consumed me, and the insults of those who insult thee have fallen on me.
10 When I humbled my soul with fasting, it became my reproach.
11 When I made sackcloth my clothing, I became a byword to them.
12 I am the talk of those who sit in the gate, and the drunkards make songs about me.
13 But as for me, my prayer is to thee, O LORD. At an acceptable time, O God, in the abundance of thy steadfast love answer me. With thy faithful help
14 rescue me from sinking in the mire; let me be delivered from my enemies and from the deep waters.
15 Let not the flood sweep over me, or the deep swallow me up, or the pit close its mouth over me.
16 Answer me, O LORD, for thy steadfast love is good; according to thy abundant mercy, turn to me.
17 Hide not thy face from thy servant; for I am in distress, make haste to answer me.
18 Draw near to me, redeem me, set me free because of my enemies!
19 Thou knowest my reproach, and my shame and my dishonor; my foes are all known to thee.
20 Insults have broken my heart, so that I am in despair. I looked for pity, but there was none; and for comforters, but I found none.
21 They gave me poison for food, and for my thirst they gave me vinegar to drink.
22 Let their own table before them become a snare; let their sacrificial feasts be a trap.
23 Let their eyes be darkened, so that they cannot see; and make their loins tremble continually.
24 Pour out thy indignation upon them, and let thy burning anger overtake them.
25 May their camp be a desolation, let no one dwell in their tents.
26 For they persecute him whom thou hast smitten, and him whom thou hast wounded, they afflict still more.
27 Add to them punishment upon punishment; may they have no acquittal from thee.
28 Let them be blotted out of the book of the living; let them not be enrolled among the righteous.
29 But I am afflicted and in pain; let thy salvation, O God, set me on high!
30 I will praise the name of God with a song; I will magnify him with thanksgiving.
31 This will please the LORD more than an ox or a bull with horns and hoofs.
32 Let the oppressed see it and be glad; you who seek God, let your hearts revive.
33 For the LORD hears the needy, and does not despise his own that are in bonds.
34 Let heaven and earth praise him, the seas and everything that moves therein.
35 For God will save Zion and rebuild the cities of Judah; and his servants shall dwell there and possess it;
36 the children of his servants shall inherit it, and those who love his name shall dwell in it.

1 தேவனே, என்னை விடுவியும் கர்த்தாவே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும்.
2 என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கி நாணுவார்களாக; எனக்குத் தீங்குவரும்படி விரும்புகிறவர்கள் பின்னிட்டுத் திரும்பி இலச்சையடைவார்களாக.
3 ஆ ஆ, ஆ ஆ, என்பவர்கள் தாங்கள் அடையும் வெட்கத்தினால் பின்னிட்டுப்போவார்களாக.
4 உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உமது இரட்சிப்பில் பிரியப்படுகிறவர்கள் தேவனுக்கு மகிமையுண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக.
5 நானோ சிறுமையும் எளிமையுமானவன்; தேவனே, என்னிடத்தில் தீவிரமாய் வாரும்: நீரே என் துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், கர்த்தாவே, தாமதியாதேயும்.


0 To the choirmaster. A Psalm of David, for the memorial offering.
1 Be pleased, O God, to deliver me! O LORD, make haste to help me!
2 Let them be put to shame and confusion who seek my life! Let them be turned back and brought to dishonor who desire my hurt!
3 Let them be appalled because of their shame who say, "Aha, Aha!"
4 May all who seek thee rejoice and be glad in thee! May those who love thy salvation say evermore, "God is great!"
5 But I am poor and needy; hasten to me, O God! Thou art my help and my deliverer; O LORD, do not tarry!

1 கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கமடையாதபடி செய்யும்.
2 உமது நீதியினிமித்தம் என்னை விடுவித்து, என்னைக் காத்தருளும்; உமது செவியை எனக்குச் சாய்த்து, என்னை இரட்சியும்.
3 நான் எப்பொழுதும் வந்தடையத்தக்கக் கன்மலையாயிரும்; என்னை இரட்சிப்பதற்குக் கட்டளையிட்டீரே; நீரே என் கன்மலையும் என் கோட்டையுமாய் இருக்கிறீர்.
4 என் தேவனே, துன்மார்க்கனுடைய கைக்கும், நியாயக்கேடும் கொடுமையுமுள்ளவனுடைய கைக்கும் என்னைத் தப்புவியும்.
5 கர்த்தராகிய ஆண்டவரே, நீரே என் நோக்கமும், என் சிறுவயது தொடங்கி என் நம்பிக்கையுமாயிருக்கிறீர்.
6 நான் கர்ப்பத்தில் உற்பவித்ததுமுதல் உம்மால் ஆதரிக்கப்பட்டேன்; என் தாயின் வயிற்றிலிருந்து என்னை எடுத்தவர் நீரே; உம்மையே நான் எப்பொழுதும் துதிப்பேன்.
7 அநேகருக்கு நான் ஒரு புதுமை போலானேன்; நீரோ எனக்குப் பலத்த அடைக்கலமாயிருக்கிறீர்.
8 என் வாய் உமது துதியினாலும், நாள்தோறும் உமது மகத்துவத்தினாலும் நிறைந்திருப்பதாக.
9 முதிர்ந்தவயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்.
10 என் சத்துருக்கள் எனக்கு விரோதமாய்ப் பேசி, என் ஆத்துமாவுக்குக் காத்திருக்கிறவர்கள் ஏகமாய் ஆலோசனைபண்ணி:
11 தேவன் அவனைக் கைவிட்டார், அவனைத் தொடர்ந்து பிடியுங்கள்; அவனை விடுவிப்பார் இல்லை என்கிறார்கள்.
12 தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்; என் தேவனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரியும்.
13 என் ஆத்துமாவை விரோதிக்கிறவர்கள் வெட்கி அழியவும், எனக்குப் பொல்லாப்புத் தேடுகிறவர்கள் நிந்தையாலும் இலச்சையாலும் மூடப்படவுங்கடவர்கள்.
14 நானோ எப்பொழுதும் நம்பிக்கைகொண்டிருந்து, மேன்மேலும் உம்மைத் துதிப்பேன்.
15 என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் உமது இரட்சிப்பையும் சொல்லும்; அவைகளின் தொகையை நான் அறியேன்.
16 கர்த்தராகிய ஆண்டவருடைய வல்லமையை முன்னிட்டு நடப்பேன்; உம்முடைய நீதியைப்பற்றியே மேன்மைபாராட்டுவேன்.
17 தேவனே, என் சிறுவயதுமுதல் எனக்குப் போதித்துவந்தீர், இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்துவந்தேன்.
18 இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக.
19 தேவனே, உம்முடைய நீதி உன்னதமானது, பெரிதானவைகளை நீர் செய்தீர்; தேவனே, உமக்கு நிகரானவர் யார்?
20 அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறப்பண்ணுவீர்.
21 என் மேன்மையைப் பெருகப்பண்ணி, என்னை மறுபடியும் தேற்றுவீர்.
22 என் தேவனே, நான் வீணையைக்கொண்டு உம்மையும் உம்முடைய சத்தியத்தையும் துதிப்பேன்; இஸ்ரவேலின் பரிசுத்தரே, சுரமண்டலத்தைக்கொண்டு உம்மைப் பாடுவேன்.
23 நான் பாடும்போது என் உதடும், நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழும்.
24 எனக்குப் பொல்லாப்பைத் தேடுகிறவர்கள் வெட்கி இலச்சையடைந்தபடியால், நாள்தோறும் என் நாவு உமது நீதியைக் கொண்டாடும்.


1 In thee, O LORD, do I take refuge; let me never be put to shame!
2 In thy righteousness deliver me and rescue me; incline thy ear to me, and save me!
3 Be thou to me a rock of refuge, a strong fortress, to save me, for thou art my rock and my fortress.
4 Rescue me, O my God, from the hand of the wicked, from the grasp of the unjust and cruel man.
5 For thou, O Lord, art my hope, my trust, O LORD, from my youth.
6 Upon thee I have leaned from my birth; thou art he who took me from my mother's womb. My praise is continually of thee.
7 I have been as a portent to many; but thou art my strong refuge.
8 My mouth is filled with thy praise, and with thy glory all the day.
9 Do not cast me off in the time of old age; forsake me not when my strength is spent.
10 For my enemies speak concerning me, those who watch for my life consult together,
11 and say, "God has forsaken him; pursue and seize him, for there is none to deliver him."
12 O God, be not far from me; O my God, make haste to help me!
13 May my accusers be put to shame and consumed; with scorn and disgrace may they be covered who seek my hurt.
14 But I will hope continually, and will praise thee yet more and more.
15 My mouth will tell of thy righteous acts, of thy deeds of salvation all the day, for their number is past my knowledge.
16 With the mighty deeds of the Lord GOD I will come, I will praise thy righteousness, thine alone.
17 O God, from my youth thou hast taught me, and I still proclaim thy wondrous deeds.
18 So even to old age and gray hairs, O God, do not forsake me, till I proclaim thy might to all the generations to come. Thy power
19 and thy righteousness, O God, reach the high heavens. Thou who hast done great things, O God, who is like thee?
20 Thou who hast made me see many sore troubles wilt revive me again; from the depths of the earth thou wilt bring me up again.
21 Thou wilt increase my honor, and comfort me again.
22 I will also praise thee with the harp for thy faithfulness, O my God; I will sing praises to thee with the lyre, O Holy One of Israel.
23 My lips will shout for joy, when I sing praises to thee; my soul also, which thou hast rescued.
24 And my tongue will talk of thy righteous help all the day long, for they have been put to shame and disgraced who sought to do me hurt.

1 தேவனே, ராஜாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புகளையும் ராஜாவின் குமாரனுக்கு உம்முடைய நீதியையும் கொடுத்தருளும்.
2 அவர் உம்முடைய ஜனங்களை நீதியோடும், உம்முடைய ஏழைகளை நியாயத்தோடும் விசாரிப்பார்.
3 பர்வதங்கள் ஜனத்திற்குச் சமாதானத்தைத் தரும், மேடுகள் நீதியின் விளைவோடிருக்கும்.
4 ஜனத்தில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார்.
5 சூரியனும் சந்திரனும் உள்ளமட்டும், அவர்கள் உமக்குத் தலைமுறை தலைமுறையாகப் பயந்திருப்பார்கள்.
6 புல்லறுப்புண்ட வெளியின் மேல் பெய்யும் மழையைப்போலவும், பூமியை நனைக்கும் தூறலைப்போலவும் இறங்குவார்.
7 அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும்.
8 சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார்.
9 வனாந்தரத்தார் அவருக்கு முன்பாகக் குனிந்து வணங்குவார்கள்; அவருடைய சத்துருக்கள் மண்ணை நக்குவார்கள்.
10 தர்ஷீசின் ராஜாக்களும் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்; ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள்.
11 சகல ராஜாக்களும் அவரைப்பணிந்து கொள்வார்கள்; சகல ஜாதிகளும் அவரைச் சேவிப்பார்கள்.
12 கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்.
13 பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார்.
14 அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கும்.
15 அவர் பிழைத்திருப்பார், ஷேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும்; அவர்நிமித்தம் இடைவிடாமல் ஜெபம்பண்ணப்படும், எந்நாளும் ஸ்தோத்திரிக்கப்படுவார்.
16 பூமியிலே மலைகளின் உச்சிகளில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும்; அதின் விளைவு லீபனோனைப்போல அசையும்; பூமியின் புல்லைப்போல நகரத்தார் செழித்தோங்குவார்கள்.
17 அவருடைய நாமம் என்றென்றைக்கும் இருக்கும்; சூரியனுள்ளமட்டும் அவருடைய நாமம் சந்தான பரம்பரையாய் நிலைக்கும்; மனுஷர் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், எல்லா ஜாதிகளும் அவரைப் பாக்கியமுடையவர் என்று வாழ்த்துவார்கள்.
18 இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; அவரே அதிசயங்களைச் செய்கிறவர்.
19 அவருடைய மகிமை பொருந்திய நாமத்துக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக; பூமிமுழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக. ஆமென், ஆமென்.
20 ஈசாயின் புத்திரனாகிய தாவீதின் விண்ணப்பங்கள் முடிந்தது.


0 A Psalm of Solomon.
1 Give the king thy justice, O God, and thy righteousness to the royal son!
2 May he judge thy people with righteousness, and thy poor with justice!
3 Let the mountains bear prosperity for the people, and the hills, in righteousness!
4 May he defend the cause of the poor of the people, give deliverance to the needy, and crush the oppressor!
5 May he live while the sun endures, and as long as the moon, throughout all generations!
6 May he be like rain that falls on the mown grass, like showers that water the earth!
7 In his days may righteousness flourish, and peace abound, till the moon be no more!
8 May he have dominion from sea to sea, and from the River to the ends of the earth!
9 May his foes bow down before him, and his enemies lick the dust!
10 May the kings of Tarshish and of the isles render him tribute, may the kings of Sheba and Seba bring gifts!
11 May all kings fall down before him, all nations serve him!
12 For he delivers the needy when he calls, the poor and him who has no helper.
13 He has pity on the weak and the needy, and saves the lives of the needy.
14 From oppression and violence he redeems their life; and precious is their blood in his sight.
15 Long may he live, may gold of Sheba be given to him! May prayer be made for him continually, and blessings invoked for him all the day!
16 May there be abundance of grain in the land; on the tops of the mountains may it wave; may its fruit be like Lebanon; and may men blossom forth from the cities like the grass of the field!
17 May his name endure for ever, his fame continue as long as the sun! May men bless themselves by him, all nations call him blessed!
18 Blessed be the LORD, the God of Israel, who alone does wondrous things.
19 Blessed be his glorious name for ever; may his glory fill the whole earth! Amen and Amen!
20 The prayers of David, the son of Jesse, are ended.

1 சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்கு தேவன் நல்லவராகவே இருக்கிறார்.
2 ஆனாலும் என் கால்கள் தள்ளாடுதலுக்கும், என் அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பிற்று.
3 துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமைகொண்டேன்.
4 மரணபரியந்தம் அவர்களுக்கு இடுக்கண்களில்லை; அவர்களுடைய பெலன் உறுதியாயிருக்கிறது.
5 நரர் படும் வருத்தத்தில் அகப்படார்கள்; மனுஷர் அடையும் உபாதியை அடையார்கள்.
6 ஆகையால் பெருமை சரப்பணியைப்போல் அவர்களைச் சுற்றிக்கொள்ளும், கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும்.
7 அவர்கள் கண்கள் கொழுப்பினால் எடுப்பாய்ப் பார்க்கிறது; அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாய் நடந்தேறுகிறது.
8 அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாய்க் கொடுமை பேசுகிறார்கள்; இறுமாப்பாய்ப் பேசுகிறார்கள்.
9 தங்கள் வாய் வானமட்டும் எட்டப்பேசுகிறார்கள்; அவர்கள் நாவு பூமியெங்கும் உலாவுகிறது.
10 ஆகையால் அவருடைய ஜனங்கள் இந்த வழியாகவே திரும்புகிறார்கள்; தண்ணீர்கள் அவர்களுக்குப் பரிபூரணமாய்ச் சுரந்துவரும்.
11 தேவனுக்கு அது எப்படித் தெரியும்? உன்னதமானவருக்கு அதைப்பற்றி அறிவு உண்டோ? என்று சொல்லுகிறார்கள்.
12 இதோ, இவர்கள் துன்மார்க்கர்; இவர்கள் என்றும் சுகஜீவிகளாயிருந்து, ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறார்கள்.
13 நான் விருதாவாகவே என் இருதயத்தைச் சுத்தம்பண்ணி, குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவினேன்.
14 நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும், காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன்.
15 இவ்விதமாய்ப் பேசுவேன் என்று நான் சொன்னேனானால். இதோ, உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவேன்.
16 இதை அறியும்படிக்கு யோசித்துப்பார்த்தேன்; நான் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து,
17 அவர்கள் முடிவைக் கவனித்து உணருமளவும், அது என் பார்வைக்கு விசனமாயிருந்தது.
18 நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீர்.
19 அவர்கள் ஒரு நிமிஷத்தில் எவ்வளவு பாழாய்ப்போகிறார்கள்! பயங்கரங்களால் அழிந்து நிர்மூலமாகிறார்கள்.
20 நித்திரை தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவரே, நீர் விழிக்கும்போது, அவர்கள் வேஷத்தை இகழுவீர்.
21 இப்படியாக என் மனம் கசந்தது, என் உள்ளிந்திரியங்களிலே குத்துண்டேன்.
22 நான் காரியம் அறியாத மூடனானேன்; உமக்கு முன்பாக மிருகம்போலிருந்தேன்.
23 ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர்.
24 உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.
25 பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.
26 என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்.
27 இதோ, உம்மைவிட்டுத் தூரமாய்ப்போகிறவர்கள் நாசமடைவார்கள்; உம்மைவிட்டுச் சோரம்போகிற அனைவரையும் சங்கரிப்பீர்.
28 எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்; நான் உமது கிரியைகளையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.


0 A Psalm of Asaph.
1 Truly God is good to the upright, to those who are pure in heart.
2 But as for me, my feet had almost stumbled, my steps had well nigh slipped.
3 For I was envious of the arrogant, when I saw the prosperity of the wicked.
4 For they have no pangs; their bodies are sound and sleek.
5 They are not in trouble as other men are; they are not stricken like other men.
6 Therefore pride is their necklace; violence covers them as a garment.
7 Their eyes swell out with fatness, their hearts overflow with follies.
8 They scoff and speak with malice; loftily they threaten oppression.
9 They set their mouths against the heavens, and their tongue struts through the earth.
10 Therefore the people turn and praise them; and find no fault in them.
11 And they say, "How can God know? Is there knowledge in the Most High?"
12 Behold, these are the wicked; always at ease, they increase in riches.
13 All in vain have I kept my heart clean and washed my hands in innocence.
14 For all the day long I have been stricken, and chastened every morning.
15 If I had said, "I will speak thus," I would have been untrue to the generation of thy children.
16 But when I thought how to understand this, it seemed to me a wearisome task,
17 until I went into the sanctuary of God; then I perceived their end.
18 Truly thou dost set them in slippery places; thou dost make them fall to ruin.
19 How they are destroyed in a moment, swept away utterly by terrors!
20 They are like a dream when one awakes, on awaking you despise their phantoms.
21 When my soul was embittered, when I was pricked in heart,
22 I was stupid and ignorant, I was like a beast toward thee.
23 Nevertheless I am continually with thee; thou dost hold my right hand.
24 Thou dost guide me with thy counsel, and afterward thou wilt receive me to glory.
25 Whom have I in heaven but thee? And there is nothing upon earth that I desire besides thee.
26 My flesh and my heart may fail, but God is the strength of my heart and my portion for ever.
27 For lo, those who are far from thee shall perish; thou dost put an end to those who are false to thee.
28 But for me it is good to be near God; I have made the Lord GOD my refuge, that I may tell of all thy works.

1 தேவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் தள்ளிவிடுகிறீர்? உமது மேய்ச்சலின் ஆடுகள்மேல் உமது கோபம் ஏன் புகைகிறது?
2 நீர் பூர்வகாலத்தில் சம்பாதித்த உமது சபையையும், நீர் மீட்டுக்கொண்ட உமது சுதந்தரமான கோத்திரத்தையும், நீர் வாசமாயிருந்த சீயோன் பர்வதத்தையும் நினைத்தருளும்.
3 நெடுங்காலமாகப் பாழாய்க்கிடக்கிற ஸ்தலங்களில் உம்முடைய பாதங்களை எழுந்தருளப்பண்ணும்; பரிசுத்த ஸ்தலத்திலே சத்துரு அனைத்தையும் கெடுத்துப்போட்டான்.
4 உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஆலயங்களுக்குள்ளே கெர்ச்சித்து, தங்கள் கொடிகளை அடையாளங்களாக நாட்டுகிறார்கள்.
5 கோடரிகளை ஓங்கிச் சோலையிலே மரங்களை வெட்டுகிறவன் பேர்பெற்றவனானான்.
6 இப்பொழுதோ அவர்கள் அதின் சித்திரவேலைகள் முழுவதையும் வாச்சிகளாலும் சம்மட்டிகளாலும் தகர்த்துப்போடுகிறார்கள்.
7 உமது பரிசுத்த ஸ்தலத்தை அக்கினிக்கு இரையாக்கி உமது நாமத்தின் வாசஸ்தலத்தைத் தரைமட்டும் இடித்து, அசுத்தப்படுத்தினார்கள்.
8 அவர்களை ஏகமாய் நிர்த்தூளியாக்குவோம் என்று தங்கள் இருதயத்தில் சொல்லி, தேசத்திலுள்ள ஆலயங்களையெல்லாம் சுட்டெரித்துப்போட்டார்கள்.
9 எங்களுக்கு இருந்த அடையாளங்களைக் காணோம்; தீர்க்கதரிசியும் இல்லை; இது எதுவரைக்கும் என்று அறிகிறவனும் எங்களிடத்தில் இல்லை.
10 தேவனே, எதுவரைக்கும் சத்துரு நிந்திப்பான்? பகைவன் உமது நாமத்தை எப்பொழுதும் தூஷிப்பானோ?
11 உமது வலதுகரத்தை ஏன் முடக்கிக்கொள்ளுகிறீர்; அதை உமது மடியிலிருந்து எடுத்து ஓங்கி நிர்மூலமாக்கும்.
12 பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற தேவன் பூர்வகாலமுதல் என்னுடைய ராஜா.
13 தேவரீர் உமது வல்லமையினால், சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து, ஜலத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தலைகளை உடைத்தீர்.
14 தேவரீர் முதலைகளின் தலைகளை நெருக்கிப்போட்டு, அதை வனாந்தரத்து ஜனங்களுக்கு உணவாகக் கொடுத்தீர்.
15 ஊற்றையும் ஆற்றையும் பிளந்துவிட்டீர்; மகா நதிகளையும் வற்றிப்போகப்பண்ணினீர்.
16 பகலும் உம்முடையது, இரவும் உம்முடையது; தேவரீர் ஒளியையும் சூரியனையும் படைத்தீர்.
17 பூமியின் எல்லைகளையெல்லாம் திட்டம்பண்ணினீர்; கோடைகாலத்தையும் மாரிகாலத்தையும் உண்டாக்கினீர்.
18 கர்த்தாவே, சத்துரு உம்மை நிந்தித்ததையும், மதியீன ஜனங்கள் உமது நாமத்தைத் தூஷித்ததையும் நினைத்துக்கொள்ளும்.
19 உமது காட்டுப்புறாவின் ஆத்துமாவைத் துஷ்டருடைய கூட்டத்திற்கு ஒப்புக்கொடாதேயும்; உமது ஏழைகளின் கூட்டத்தை என்றைக்கும் மறவாதேயும்.
20 உம்முடைய உடன்படிக்கையை நினைத்தருளும்; பூமியின் இருளான இடங்கள் கொடுமையுள்ள குடியிருப்புகளால் நிறைந்திருக்கிறதே.
21 துன்பப்பட்டவன் வெட்கத்தோடே திரும்பவிடாதிரும்; சிறுமையும் எளிமையுமானவன் உமது நாமத்தைத் துதிக்கும்படி செய்யும்.
22 தேவனே எழுந்தருளும், உமக்காக நீரே வழக்காடும்; மதியீனனாலே நாடோறும் உமக்கு வரும் நிந்தையை நினைத்துக்கொள்ளும்.
23 உம்முடைய சத்துருக்களின் ஆரவாரத்தை மறவாதேயும்; உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களின் அமளி எப்பொழுதும் அதிகரிக்கிறது.


0 A Maskil of Asaph.
1 O God, why dost thou cast us off for ever? Why does thy anger smoke against the sheep of thy pasture?
2 Remember thy congregation, which thou hast gotten of old, which thou hast redeemed to be the tribe of thy heritage! Remember Mount Zion, where thou hast dwelt.
3 Direct thy steps to the perpetual ruins; the enemy has destroyed everything in the sanctuary!
4 Thy foes have roared in the midst of thy holy place; they set up their own signs for signs.
5 At the upper entrance they hacked the wooden trellis with axes.
6 And then all its carved wood they broke down with hatchets and hammers.
7 They set thy sanctuary on fire; to the ground they desecrated the dwelling place of thy name.
8 They said to themselves, "We will utterly subdue them"; they burned all the meeting places of God in the land.
9 We do not see our signs; there is no longer any prophet, and there is none among us who knows how long.
10 How long, O God, is the foe to scoff? Is the enemy to revile thy name for ever?
11 Why dost thou hold back thy hand, why dost thou keep thy right hand in thy bosom?
12 Yet God my King is from of old, working salvation in the midst of the earth.
13 Thou didst divide the sea by thy might; thou didst break the heads of the dragons on the waters.
14 Thou didst crush the heads of Leviathan, thou didst give him as food for the creatures of the wilderness.
15 Thou didst cleave open springs and brooks; thou didst dry up ever-flowing streams.
16 Thine is the day, thine also the night; thou hast established the luminaries and the sun.
17 Thou hast fixed all the bounds of the earth; thou hast made summer and winter.
18 Remember this, O LORD, how the enemy scoffs, and an impious people reviles thy name.
19 Do not deliver the soul of thy dove to the wild beasts; do not forget the life of thy poor for ever.
20 Have regard for thy covenant; for the dark places of the land are full of the habitations of violence.
21 Let not the downtrodden be put to shame; let the poor and needy praise thy name.
22 Arise, O God, plead thy cause; remember how the impious scoff at thee all the day!
23 Do not forget the clamor of thy foes, the uproar of thy adversaries which goes up continually!

1 உம்மைத் துதிக்கிறோம், தேவனே, உம்மைத் துதிக்கிறோம்; உமது நாமம் சமீபமாயிருக்கிறதென்று உமது அதிசயமான கிரியைகள் அறிவிக்கிறது.
2 நியமிக்கப்பட்ட காலத்திலே, யதார்த்தமாய் நியாயந்தீர்ப்பேன்.
3 பூமியானது அதின் எல்லாக் குடிகளோடும் கரைந்துபோகிறது; அதின் தூண்களை நான் நிலைநிறுத்துகிறேன். (சேலா.)
4 வீம்புக்காரரை நோக்கி, வீம்புபேசாதேயுங்கள் என்றும்; துன்மார்க்கரை நோக்கி, கொம்பை உயர்த்தாதிருங்கள் என்றும் சொன்னேன்.
5 உங்கள் கொம்பை உயரமாய் உயர்த்தாதிருங்கள், இறுமாப்புள்ள கழுத்துடையவர்களாய்ப் பேசாதிருங்கள்.
6 கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தர திசையிலுமிருந்து ஜெயம் வராது.
7 தேவனே நியாயாதிபதி; ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார்.
8 கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் கர்த்தருடைய கையிலிருக்கிறது, அதிலிருந்து வார்க்கிறார்; பூமியிலுள்ள துன்மார்க்கர் அனைவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள்.
9 நானோ என்றென்றைக்கும் இதை அறிவித்து, யாக்கோபின் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
10 துன்மார்க்கருடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுவேன்; நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும்.


0 To the choirmaster: according to Do Not Destroy. A Psalm of Asaph. A Song.
1 We give thanks to thee, O God; we give thanks; we call on thy name and recount thy wondrous deeds.
2 At the set time which I appoint I will judge with equity.
3 When the earth totters, and all its inhabitants, it is I who keep steady its pillars. [Selah]
4 I say to the boastful, "Do not boast," and to the wicked, "Do not lift up your horn;
5 do not lift up your horn on high, or speak with insolent neck."
6 For not from the east or from the west and not from the wilderness comes lifting up;
7 but it is God who executes judgment, putting down one and lifting up another.
8 For in the hand of the LORD there is a cup, with foaming wine, well mixed; and he will pour a draught from it, and all the wicked of the earth shall drain it down to the dregs.
9 But I will rejoice for ever, I will sing praises to the God of Jacob.
10 All the horns of the wicked he will cut off, but the horns of the righteous shall be exalted.

1 யூதாவில் தேவன் அறியப்பட்டவர்; இஸ்ரவேலில் அவருடைய நாமம் பெரியது.
2 சாலேமில் அவருடைய கூடாரமும், சீயோனில் அவருடைய வாசஸ்தலமும் இருக்கிறது.
3 அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும், கேடகத்தையும், பட்டயத்தையும், யுத்தத்தையும் முறித்தார். (சேலா.)
4 மகத்துவமுள்ளவரே, கொள்ளையுள்ள பர்வதங்களைப்பார்க்கிலும் நீர் பிரகாசமுள்ளவர்.
5 தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு, நித்திரையடைந்து அசர்ந்தார்கள்; வல்லமையுள்ள எல்லா மனுஷருடைய கைகளும் அவர்களுக்கு உதவாமற்போயிற்று.
6 யாக்கோபின் தேவனே, உம்முடைய கண்டிதத்தினால் இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது.
7 நீர், நீரே, பயங்கரமானவர்; உமது கோபம் மூளும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்?
8 நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும் தேவரீர் எழுந்தருளினபோது,
9 வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கப்பண்ணினீர்; பூமி பயந்து அமர்ந்தது. (சேலா.)
10 மனுஷனுடைய கோபம் உமது மகிமையை விளங்கப்பண்ணும்; மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர்.
11 பொருத்தனைபண்ணி அதை உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நிறைவேற்றுங்கள்; அவரைச் சூழ்ந்திருக்கிற அனைவரும் பயங்கரமானவருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவரக்கடவர்கள்.
12 பிரபுக்களின் ஆவியை அடக்குவார்; பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர்.


0 To the choirmaster: with stringed instruments. A Psalm of Asaph. A Song.
1 In Judah God is known, his name is great in Israel.
2 His abode has been established in Salem, his dwelling place in Zion.
3 There he broke the flashing arrows, the shield, the sword, and the weapons of war. [Selah]
4 Glorious art thou, more majestic than the everlasting mountains.
5 The stouthearted were stripped of their spoil; they sank into sleep; all the men of war were unable to use their hands.
6 At thy rebuke, O God of Jacob, both rider and horse lay stunned.
7 But thou, terrible art thou! Who can stand before thee when once thy anger is roused?
8 From the heavens thou didst utter judgment; the earth feared and was still,
9 when God arose to establish judgment to save all the oppressed of the earth. [Selah]
10 Surely the wrath of men shall praise thee; the residue of wrath thou wilt gird upon thee.
11 Make your vows to the LORD your God, and perform them; let all around him bring gifts to him who is to be feared,
12 who cuts off the spirit of princes, who is terrible to the kings of the earth.

1 நான் தேவனை நோக்கி என் சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன், என் சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன், அவர் எனக்குச் செவிகொடுத்தார்.
2 என் ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்; இரவிலும் என் கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது; என் ஆத்துமா ஆறுதலடையாமற்போயிற்று.
3 நான் தேவனை நினைத்தபோது அலறினேன்; நான் தியானிக்கும்போது என் ஆவிதொய்ந்துபோயிற்று. (சேலா.)
4 நான் தூங்காதபடி என் கண்ணிமைகளைப் பிடித்திருக்கிறீர்; நான் பேசமாட்டாதபடி சஞ்சலப்படுகிறேன்.
5 பூர்வநாட்களையும், ஆதிகாலத்து வருஷங்களையும் சிந்திக்கிறேன்.
6 இராக்காலத்தில் என் சங்கீதத்தை நான் நினைத்து, என் இருதயத்தோடே சம்பாஷித்துக்கொள்ளுகிறேன்; என் ஆவி ஆராய்ச்சிசெய்தது.
7 ஆண்டவர் நித்தியகாலமாய்த் தள்ளிவிடுவாரோ? இனி ஒருபோதும் தயைசெய்யாதிருப்பாரோ?
8 அவருடைய கிருபை முற்றிலும் அற்றுப்போயிற்றோ? வாக்குத்தத்தமானது தலைமுறை தலைமுறைக்கும் ஒழிந்துபோயிற்றோ?
9 தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ? கோபத்தினாலே தமது உருக்கமான இரக்கங்களை அடைத்துக்கொண்டாரோ? என்றேன். (சேலா.)
10 அப்பொழுது நான்: இது என் பலவீனம்; ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருஷங்களை நினைவுகூருவேன்.
11 கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய பூர்வகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்;
12 உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன்.
13 தேவனே, உமது வழி பரிசுத்தஸ்தலத்திலுள்ளது; நம்முடைய தேவனைப்போலப் பெரிய தேவன் யார்?
14 அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே, ஜனங்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணினீர்.
15 யாக்கோபு யோசேப்பு என்பவர்களின் புத்திரராகிய உம்முடைய ஜனங்களை, உமது புயத்தினாலே மீட்டுக்கொண்டீர். (சேலா.)
16 ஜலங்கள் உம்மைக் கண்டது, தேவனே ஜலங்கள் உம்மைக் கண்டு தத்தளித்தது; ஆழங்களும் கலங்கினது.
17 மேகங்கள் ஜலங்களைப் பொழிந்தது; ஆகாயமண்டலங்கள் முழக்கமிட்டது; உம்முடைய அம்புகளும் தெறிப்புண்டு பறந்தது.
18 உம்முடைய குமுறலின் சத்தம் சுழல்காற்றில் முழங்கினது; மின்னல்கள் பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது; பூமி குலுங்கி அதிர்ந்தது.
19 உமது வழி கடலிலும், உமதுபாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது; உமது காலடிகள் தெரியப்படாமற்போயிற்று.
20 மோசே ஆரோன் என்பவர்களின் கையால், உமது ஜனங்களை ஒரு ஆட்டுமந்தையைப்போல வழிநடத்தினீர்.


0 To the choirmaster: according to Jeduthun. A Psalm of Asaph.
1 I cry aloud to God, aloud to God, that he may hear me.
2 In the day of my trouble I seek the Lord; in the night my hand is stretched out without wearying; my soul refuses to be comforted.
3 I think of God, and I moan; I meditate, and my spirit faints. [Selah]
4 Thou dost hold my eyelids from closing; I am so troubled that I cannot speak.
5 I consider the days of old, I remember the years long ago.
6 I commune with my heart in the night; I meditate and search my spirit:
7 "Will the Lord spurn for ever, and never again be favorable?
8 Has his steadfast love for ever ceased? Are his promises at an end for all time?
9 Has God forgotten to be gracious? Has he in anger shut up his compassion?" [Selah]
10 And I say, "It is my grief that the right hand of the Most High has changed."
11 I will call to mind the deeds of the LORD; yea, I will remember thy wonders of old.
12 I will meditate on all thy work, and muse on thy mighty deeds.
13 Thy way, O God, is holy. What god is great like our God?
14 Thou art the God who workest wonders, who hast manifested thy might among the peoples.
15 Thou didst with thy arm redeem thy people, the sons of Jacob and Joseph. [Selah]
16 When the waters saw thee, O God, when the waters saw thee, they were afraid, yea, the deep trembled.
17 The clouds poured out water; the skies gave forth thunder; thy arrows flashed on every side.
18 The crash of thy thunder was in the whirlwind; thy lightnings lighted up the world; the earth trembled and shook.
19 Thy way was through the sea, thy path through the great waters; yet thy footprints were unseen.
20 Thou didst lead thy people like a flock by the hand of Moses and Aaron.

1 என் ஜனங்களே என் உபதேசத்தைக் கேளுங்கள்; என் வாயின் வசனங்களுக்கு உங்கள் செவிகளைச் சாயுங்கள்.
2 என் வாயை உவமைகளால் திறப்பேன்; பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன்.
3 அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம், எங்கள் பிதாக்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள்.
4 பின்வரும் சந்ததியான பிள்ளைக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம்.
5 அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி இஸ்ரவேலிலே வேதத்தை ஸ்தாபித்து அவைகளைத் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்டார்.
6 இனிப் பிறக்கும் பிள்ளைகளாகிய பின்சந்ததியார் அதை அறிந்துகொண்டு, அவர்கள் எழும்பித் தங்கள் பிள்ளைகளுக்கு அவைகளைச் சொல்லும்படிக்கும்;
7 தேவன்மேல் அவர்கள் தங்கள் நம்பிக்கையை வைத்து தேவனுடைய செயல்களை மறவாமல் அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்படிக்கும்;
8 இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும், தேவனை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளாமலும் இருந்த முரட்டாட்டமும் கலகமுமுள்ள சந்ததியாகிய தங்கள் பிதாக்களுக்கு அவர்கள் ஒப்பாகாதபடிக்கும், இவைகளைக் கட்டளையிட்டார்.
9 ஆயுதமணிந்த வில்வீரரான எப்பிராயீம் புத்திரர் யுத்தநாளிலே முதுகுகாட்டினார்கள்.
10 அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமலும் அவருடைய கட்டளைகளின்படி நடக்கச் சம்மதியாமலும்,
11 அவருடைய செயல்களையும் அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள்.
12 அவர்களுடைய பிதாக்களுக்குமுன்பாக, எகிப்துதேசத்துச் சோவான் வெளியிலே, அவர் அதிசயமானவைகளைச் செய்தார்.
13 கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கப்பண்ணி, ஜலத்தைக் குவியலாக நிற்கும்படி செய்தார்.
14 பகலிலே மேகத்தினாலும் இராமுழுதும் அக்கினி வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார்.
15 வனாந்தரத்திலே கன்மலைகளைப் பிளந்து, மகா ஆழங்களிலிருந்து தண்ணீரை அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தார்.
16 கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படப்பண்ணி, தண்ணீரை நதிபோல ஓடிவரும்படி செய்தார்.
17 என்றாலும், அவர்கள் பின்னும் அவருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, வறண்ட வெளியிலே உன்னதமானவருக்குக் கோபம்மூட்டினார்கள்.
18 தங்கள் இச்சைக்கேற்ற போஜனத்தைக் கேட்டு, தங்கள் இருதயத்தில் தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.
19 அவர்கள் தேவனுக்கு விரோதமாய்ப் பேசி: தேவன் வனாந்தரத்திலே போஜனபந்தியை ஆயத்தப்படுத்தக்கூடுமோ?
20 இதோ அவர் கன்மலையை அடித்ததினால் தண்ணீர் புறப்பட்டு நதிகளாய்ப் புரண்டுவந்தது; அவர் அப்பத்தையும் கொடுக்கக்கூடுமோ? தம்முடைய ஜனத்திற்கு மாம்சத்தையும் ஆயத்தப்படுத்துவாரோ? என்றார்கள்.
21 ஆகையால் கர்த்தர் அதைக்கேட்டுக் கோபங்கொண்டார்; அவர்கள் தேவனை விசுவாசியாமலும், அவருடைய இரட்சிப்பை நம்பாமலும் போனதினால்,
22 யாக்கோபுக்கு விரோதமாய் அக்கினி பற்றியெரிந்தது; இஸ்ரவேலுக்கு விரோதமாய்க் கோபம்மூண்டது.
23 அவர் உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டு, வானத்தின் கதவுகளைத் திறந்து,
24 மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாக வருஷிக்கப்பண்ணி, வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.
25 தூதர்களின் அப்பத்தை மனுஷன் சாப்பிட்டான்; அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாய் அனுப்பினார்.
26 ஆகாசத்திலே கீழ்காற்றை வரப்பண்ணி, தம்முடைய வல்லமையினால் தென்றலையும் வீசச்செய்து,
27 மாம்சத்தைத் தூளத்தனையாயும், சிறகுள்ள பறவைகளைக் கடற்கரை மணலத்தனையாயும் வருஷிக்கப்பண்ணி,
28 அவைகளை அவர்கள் பாளயத்தின் நடுவிலும், அவர்கள் கூடாரங்களைச் சுற்றிலும் இறங்கப்பண்ணினார்.
29 அவர்கள் புசித்துத் திருப்தியடைந்தார்கள்; அவர்கள் இச்சித்ததை அவர்களுக்குக் கொடுத்தார்.
30 அவர்கள் தங்கள் இச்சையை வெறுக்கவில்லை; அவர்களுடைய போஜனம் அவர்கள் வாயில் இருக்கும்போதே,
31 தேவகோபம் அவர்கள்மேல் எழும்பி, அவர்களில் கொழுத்தவர்களைச் சங்கரித்து, இஸ்ரவேலில் விசேஷித்தவர்களை மடியப்பண்ணிற்று.
32 இவையெல்லாம் நடந்தும், அவர் செய்த அதிசயங்களை அவர்கள் நம்பாமல், பின்னும் பாவஞ்செய்தார்கள்.
33 ஆதலால் அவர்கள் நாட்களை விருதாவிலும், அவர்கள் வருஷங்களைப் பயங்கரத்திலும் கழியப்பண்ணினார்.
34 அவர்களை அவர் கொல்லும்போது அவரைக்குறித்து விசாரித்து, அவர்கள் திரும்பிவந்து தேவனை அதிகாலமே தேடி;
35 தேவன் தங்கள் கன்மலையென்றும், உன்னதமான தேவன் தங்கள் மீட்பர் என்றும், நினைவுகூர்ந்தார்கள்.
36 ஆனாலும் அவர்கள் தங்கள் வாயினால் அவருக்கு இச்சகம்பேசி, தங்கள் நாவினால் அவரிடத்தில் பொய்சொன்னார்கள்.
37 அவர்கள் இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை; அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் உண்மையாயிருக்கவில்லை.
38 அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராய் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்; அவர் தமது உக்கிரம் முழுவதையும் எழுப்பாமல், அநேகந்தரம் தமது கோபத்தை விலக்கிவிட்டார்.
39 அவர்கள் மாம்சமென்றும் திரும்பிவராமல் அகலுகிற காற்றென்றும் நினைவுகூர்ந்தார்.
40 எத்தனைதரமோ வனாந்தரத்திலே அவருக்குக் கோபம் மூட்டி, அவாந்தரவெளியிலே அவரை விசனப்படுத்தினார்கள்.
41 அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சை பார்த்து, இஸ்ரவேலின் பரிசுத்தரை மட்டுப்படுத்தினார்கள்.
42 அவருடைய கரத்தையும், அவர் தங்களைச் சத்துருவுக்கு விலக்கி மீட்ட நாளையும் நினையாமற்போனார்கள்.
43 அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும், சோவான் வெளியிலே தம்முடைய அற்புதங்களையும் செய்தார்.
44 அவர்களுடைய நதிகளை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய ஆறுகளிலுள்ள ஜலத்தைக் குடிக்கக் கூடாதபடி செய்தார்.
45 அவர்களை அழிக்கும்படி வண்டுஜாதிகளையும், அவர்களைக் கெடுக்கும்படி தவளைகளையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.
46 அவர்களுடைய விளைச்சலைப் புழுக்களுக்கும் அவர்களுடைய பிரயாசத்தின் பலனை வெட்டுக்கிளிகளுக்கும் கொடுத்தார்.
47 கல்மழையினால் அவர்களுடைய திராட்சச்செடிகளையும், ஆலாங்கட்டியினால் அவர்களுடைய அத்திமரங்களையும் அழித்து,
48 அவர்களுடைய மிருகஜீவன்களைக் கல்மழைக்கும, அவர்களுடைய ஆடுமாடுகளை இடிகளுக்கும் ஒப்புக்கொடுத்தார்.
49 தமது உக்கிரமான கோபத்தையும், மூர்க்கத்தையும் சினத்தையும், உபத்திரவத்தையும், தீங்குசெய்யும் தூதர்களையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.
50 அவர் தம்முடைய கோபத்துக்கு வழிதிறந்து, அவர்கள் ஆத்துமாவை மரணத்துக்கு விலக்கிக் காவாமல் அவர்கள் ஜீவனைக் கொள்ளைநோய்க்கு ஒப்புக்கொடுத்தார்.
51 எகிப்திலே தலைச்சன்கள் அனைத்தையும், காமின் கூடாரங்களிலே அவர்களுடைய பெலனில் முதற்பலனான யாவையும் அழித்து;
52 தம்முடைய ஜனங்களை ஆடுகளைப்போல் புறப்படப்பண்ணி, அவர்களை வனாந்தரத்திலே மந்தையைப்போல் கூட்டிக்கொண்டுபோய்;
53 அவர்கள் பயப்படாதபடிக்கு அவர்களைப் பத்திரமாய் வழிநடத்தினார்; அவர்கள் சத்துருக்களைக் கடல்மூடிப்போட்டது.
54 அவர்களைத் தமது பரிசுத்த ஸ்தலத்தின் எல்லைவரைக்கும், தமது வலதுகரம் சம்பாதித்த இந்தப் பர்வதமட்டுக்கும் அழைத்துக்கொண்டுவந்து,
55 அவர்கள் முகத்திற்கு முன்பாக ஜாதிகளைத் துரத்திவிட்டு, தேசத்தை நூல்போட்டுப் பங்கிட்டு, அவர்களுடைய கூடாரங்களில் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குடியேற்றினார்.
56 ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சைபார்த்து, அவருக்குக் கோபம் மூட்டி, அவருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளாமற்போய்,
57 தங்கள் பிதாக்களைப்போல வழிவிலகி, துரோகம்பண்ணி, மோசம்போக்கும் வில்லைப்போல் துவண்டு,
58 தங்கள் மேடைகளினால் அவருக்குக் கோபம் மூட்டி, தங்கள் விக்கிரகங்களினால் எரிச்சல் உண்டாக்கினார்கள்.
59 தேவன் அதைக் கேட்டு உக்கிரமாகி இஸ்ரவேலை மிகவும் வெறுத்து,
60 தாம் மனுஷருக்குள்ளே போட்ட கூடாரமாகிய சீலோவிலுள்ள வாசஸ்தலத்தை விட்டுவிலகி,
61 தமது பலத்தைச் சிறையிருப்புக்கும், தமது மகிமையைச் சத்துருவின் கைக்கும் ஒப்புக்கொடுத்து,
62 தமது ஜனத்தைப் பட்டயத்துக்கு இரையாக்கி, தமது சுதந்தரத்தின்மேல் கோபங்கொண்டார்.
63 அவர்கள் வாலிபரை அக்கினி பட்சித்தது, அவர்கள் கன்னியாஸ்திரீகள் வாழ்க்கைப்படாதிருந்தார்கள்.
64 அவர்களுடைய ஆசாரியர்கள் பட்டயத்தால் விழுந்தார்கள், அவர்களுடைய விதவைகள் அழவில்லை.
65 அப்பொழுது ஆண்டவர் நித்திரை தெளிந்தவனைப்போலவும் திராட்சரசத்தால் கெம்பீரிக்கிற பராக்கிரமசாலியைப்போலவும் விழித்து,
66 தம்முடைய சத்துருக்களைப் பின்புறமாக அடித்து, அவர்களுக்கு நித்திய நிந்தையை வரப்பண்ணினார்.
67 அவர் யோசேப்பின் கூடாரத்தைப் புறக்கணித்தார்; எப்பிராயீம் கோத்திரத்தை அவர் தெரிந்துகொள்ளாமல்,
68 யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் பர்வதத்தையும் தெரிந்துகொண்டார்.
69 தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மலைகளைப்போலவும், என்றைக்கும் நிற்கும்படி தாம் அஸ்திபாரப்படுத்தின பூமியைப்போலவும் கட்டினார்.
70 தம்முடைய தாசனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, ஆட்டுத்தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார்.
71 கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை, தம்முடைய ஜனமாகிய யாக்கோபையும் தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக, அழைத்துக்கொண்டுவந்தார்.
72 இவன் அவர்களைத் தன் இருதயத்தின் உண்மையின்படியே மேய்த்து, தன் கைகளின் திறமையினால் அவர்களை நடத்தினான்.


0 A Maskil of Asaph.
1 Give ear, O my people, to my teaching; incline your ears to the words of my mouth!
2 I will open my mouth in a parable; I will utter dark sayings from of old,
3 things that we have heard and known, that our fathers have told us.
4 We will not hide them from their children, but tell to the coming generation the glorious deeds of the LORD, and his might, and the wonders which he has wrought.
5 He established a testimony in Jacob, and appointed a law in Israel, which he commanded our fathers to teach to their children;
6 that the next generation might know them, the children yet unborn, and arise and tell them to their children,
7 so that they should set their hope in God, and not forget the works of God, but keep his commandments;
8 and that they should not be like their fathers, a stubborn and rebellious generation, a generation whose heart was not steadfast, whose spirit was not faithful to God.
9 The E'phraimites, armed with the bow, turned back on the day of battle.
10 They did not keep God's covenant, but refused to walk according to his law.
11 They forgot what he had done, and the miracles that he had shown them.
12 In the sight of their fathers he wrought marvels in the land of Egypt, in the fields of Zo'an.
13 He divided the sea and let them pass through it, and made the waters stand like a heap.
14 In the daytime he led them with a cloud, and all the night with a fiery light.
15 He cleft rocks in the wilderness, and gave them drink abundantly as from the deep.
16 He made streams come out of the rock, and caused waters to flow down like rivers.
17 Yet they sinned still more against him, rebelling against the Most High in the desert.
18 They tested God in their heart by demanding the food they craved.
19 They spoke against God, saying, "Can God spread a table in the wilderness?
20 He smote the rock so that water gushed out and streams overflowed. Can he also give bread, or provide meat for his people?"
21 Therefore, when the LORD heard, he was full of wrath; a fire was kindled against Jacob, his anger mounted against Israel;
22 because they had no faith in God, and did not trust his saving power.
23 Yet he commanded the skies above, and opened the doors of heaven;
24 and he rained down upon them manna to eat, and gave them the grain of heaven.
25 Man ate of the bread of the angels; he sent them food in abundance.
26 He caused the east wind to blow in the heavens, and by his power he led out the south wind;
27 he rained flesh upon them like dust, winged birds like the sand of the seas;
28 he let them fall in the midst of their camp, all around their habitations.
29 And they ate and were well filled, for he gave them what they craved.
30 But before they had sated their craving, while the food was still in their mouths,
31 the anger of God rose against them and he slew the strongest of them, and laid low the picked men of Israel.
32 In spite of all this they still sinned; despite his wonders they did not believe.
33 So he made their days vanish like a breath, and their years in terror.
34 When he slew them, they sought for him; they repented and sought God earnestly.
35 They remembered that God was their rock, the Most High God their redeemer.
36 But they flattered him with their mouths; they lied to him with their tongues.
37 Their heart was not steadfast toward him; they were not true to his covenant.
38 Yet he, being compassionate, forgave their iniquity, and did not destroy them; he restrained his anger often, and did not stir up all his wrath.
39 He remembered that they were but flesh, a wind that passes and comes not again.
40 How often they rebelled against him in the wilderness and grieved him in the desert!
41 They tested him again and again, and provoked the Holy One of Israel.
42 They did not keep in mind his power, or the day when he redeemed them from the foe;
43 when he wrought his signs in Egypt, and his miracles in the fields of Zo'an.
44 He turned their rivers to blood, so that they could not drink of their streams.
45 He sent among them swarms of flies, which devoured them, and frogs, which destroyed them.
46 He gave their crops to the caterpillar, and the fruit of their labor to the locust.
47 He destroyed their vines with hail, and their sycamores with frost.
48 He gave over their cattle to the hail, and their flocks to thunderbolts.
49 He let loose on them his fierce anger, wrath, indignation, and distress, a company of destroying angels.
50 He made a path for his anger; he did not spare them from death, but gave their lives over to the plague.
51 He smote all the first-born in Egypt, the first issue of their strength in the tents of Ham.
52 Then he led forth his people like sheep, and guided them in the wilderness like a flock.
53 He led them in safety, so that they were not afraid; but the sea overwhelmed their enemies.
54 And he brought them to his holy land, to the mountain which his right hand had won.
55 He drove out nations before them; he apportioned them for a possession and settled the tribes of Israel in their tents.
56 Yet they tested and rebelled against the Most High God, and did not observe his testimonies,
57 but turned away and acted treacherously like their fathers; they twisted like a deceitful bow.
58 For they provoked him to anger with their high places; they moved him to jealousy with their graven images.
59 When God heard, he was full of wrath, and he utterly rejected Israel.
60 He forsook his dwelling at Shiloh, the tent where he dwelt among men,
61 and delivered his power to captivity, his glory to the hand of the foe.
62 He gave his people over to the sword, and vented his wrath on his heritage.
63 Fire devoured their young men, and their maidens had no marriage song.
64 Their priests fell by the sword, and their widows made no lamentation.
65 Then the Lord awoke as from sleep, like a strong man shouting because of wine.
66 And he put his adversaries to rout; he put them to everlasting shame.
67 He rejected the tent of Joseph, he did not choose the tribe of E'phraim;
68 but he chose the tribe of Judah, Mount Zion, which he loves.
69 He built his sanctuary like the high heavens, like the earth, which he has founded for ever.
70 He chose David his servant, and took him from the sheepfolds;
71 from tending the ewes that had young he brought him to be the shepherd of Jacob his people, of Israel his inheritance.
72 With upright heart he tended them, and guided them with skilful hand.

1 தேவனே, புறஜாதியார் உமது சுதந்தரத்தில் வந்து, உமது பரிசுத்த ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி, எருசலேமை மண்மேடுகளாக்கினார்கள்.
2 உமது ஊழியக்காரரின் பிரேதங்களை ஆகாயத்துப் பறவைகளுக்கும் உமது பரிசுத்தவான்களின் மாம்சத்தைப் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகக் கொடுத்தார்கள்.
3 எருசலேமைச் சுற்றிலும் அவர்களுடைய இரத்தத்தை தண்ணீரைப்போலச் சிந்தினார்கள்; அவர்களை அடக்கம்பண்ணுவாருமில்லை.
4 எங்கள் அயலாருக்கு நிந்தையும், எங்கள் சுற்றுப்புறத்தாருக்குப் பரியாசமும் சக்கந்தமுமானோம்.
5 எதுவரைக்கும் கர்த்தாவே! நீரென்றக்கும் கோபமாயிருப்பீரோ? உம்முடைய எரிச்சல் அக்கினியைப்போல் எரியுமோ?
6 உம்மை அறியாத ஜாதிகள் உமது நாமத்தைத் தொழுதுகொள்ளாத ராஜ்யங்கள்மேலும் உம்முடைய உக்கிரத்தை ஊற்றிவிடும்.
7 அவர்கள் யாக்கோபைப் பட்சித்து, அவன் குடியிருப்பைப் பாழாக்கினார்களே.
8 பூர்வகாலத்து அக்கிரமங்களை எங்களுக்கு விரோதமாக நினையாதேயும்; உம்முடைய இரக்கங்கள் சீக்கிரமாய் எங்களுக்கு நேரிடுவதாக; நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டுப்போனோம்.
9 எங்களை இரட்சிக்கும் தேவனே, நீர் உமது நாமத்தின் மகிமையினிமித்தம் எங்களுக்கு உதவிசெய்து உமது நாமத்தினிமித்தம் எங்களை விடுவித்து, எங்கள் பாவங்களை நிவிர்த்தியாக்கும்.
10 அவர்களுடைய தேவன் எங்கே என்று புறஜாதிகள் சொல்வானேன்? உமது ஊழியக்காரருடைய சிந்துண்ட இரத்தத்தின் பழிவாங்குதல் ஜாதிகளுக்குள்ளே எங்கள் கண்களுக்கு முன்பாக விளங்கும்படி செய்யும்.
11 கட்டுண்டவனுடைய பெருமூச்சு உமக்கு முன்பாக வரட்டும், கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை உமது புயபலத்தினால் உயிரோடே காத்தருளும்.
12 ஆண்டவரே எங்கள் அயலார் உம்மை நிந்தித்த நிந்தையை, ஏழத்தனையாக அவர்கள் மடியிலே திரும்பப்பண்ணும்.
13 அப்பொழுது, உம்முடைய ஜனங்களும் உம்முடைய மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நாங்கள் உம்மை என்றென்றைக்கும் புகழுவோம்; தலைமுறை தலைமுறையாக உமது துதியைச் சொல்லிவருவோம்.


0 A Psalm of Asaph.
1 O God, the heathen have come into thy inheritance; they have defiled thy holy temple; they have laid Jerusalem in ruins.
2 They have given the bodies of thy servants to the birds of the air for food, the flesh of thy saints to the beasts of the earth.
3 They have poured out their blood like water round about Jerusalem, and there was none to bury them.
4 We have become a taunt to our neighbors, mocked and derided by those round about us.
5 How long, O LORD? Wilt thou be angry for ever? Will thy jealous wrath burn like fire?
6 Pour out thy anger on the nations that do not know thee, and on the kingdoms that do not call on thy name!
7 For they have devoured Jacob, and laid waste his habitation.
8 Do not remember against us the iniquities of our forefathers; let thy compassion come speedily to meet us, for we are brought very low.
9 Help us, O God of our salvation, for the glory of thy name; deliver us, and forgive our sins, for thy name's sake!
10 Why should the nations say, "Where is their God?" Let the avenging of the outpoured blood of thy servants be known among the nations before our eyes!
11 Let the groans of the prisoners come before thee; according to thy great power preserve those doomed to die!
12 Return sevenfold into the bosom of our neighbors the taunts with which they have taunted thee, O Lord!
13 Then we thy people, the flock of thy pasture, will give thanks to thee for ever; from generation to generation we will recount thy praise.

1 இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல நடத்துகிறவரே, செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் வாசம்பண்ணுகிறவரே, பிரகாசியும்.
2 எப்பிராயீம் பென்யமீன் மனாசே என்பவர்களுக்கு முன்பாக, நீர் உமது வல்லமையை எழுப்பி, எங்களை இரட்சிக்க வந்தருளும்.
3 தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.
4 சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உமது ஜனத்தின் விண்ணப்பத்துக்கு விரோதமாய் நீர் எதுவரைக்கும் கோபங்கொள்வீர்.
5 கண்ணீராகிய அப்பத்தை அவர்களுக்கு போஜனமாகவும், மிகுதியான கண்ணீரையே அவர்களுக்குப் பானமாகவும் கொடுத்தீர்.
6 எங்கள் அயலாருக்கு எங்களை வழக்காக வைக்கிறீர்; எங்கள் சத்துருக்கள் எங்களைப் பரியாசம்பண்ணுகிறார்கள்.
7 சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.
8 நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சக்கொடியைக் கொண்டுவந்து, ஜாதிகளைத் துரத்திவிட்டு அதை நாட்டினீர்.
9 அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினீர்; அது வேரூன்றி, தேசமெங்கும் படர்ந்தது.
10 அதின் நிழலால் மலைகளும் அதின் கிளைகளால் திவ்வியமான கேதுருக்களும் மூடப்பட்டது.
11 அது தன் கொடிகளைச் சமுத்திரமட்டாகவும், தன் கிளைகளை நதிமட்டாகவும் படரவிட்டது.
12 இப்பொழுதோ வழிநடக்கிற யாவரும் அதைப் பறிக்கும்படியாக அதின் அடைப்புகளை ஏன் தகர்த்துப்போட்டீர்?
13 காட்டுப்பன்றி அதை உழுதுபோடுகிறது, வெளியின் மிருகங்கள் அதை மேய்ந்துபோடுகிறது.
14 சேனைகளின் தேவனே திரும்பிவாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து, இந்தத் திராட்சச்செடியை விசாரித்தருளும்;
15 உம்முடைய வலதுகரம் நாட்டின கொடியையும், உமக்கு நீர் திடப்படுத்தின கிளையையும் கடாட்சித்தருளும்.
16 அது அக்கினியால் சுடப்பட்டும் வெட்டுண்டும் போயிற்று; உம்முடைய முகத்தின் பயமுறுத்தலால் அழிந்துபோகிறார்கள்.
17 உமது கரம் உமது வலதுபாரிசத்துப் புருஷன்மீதிலும், உமக்கு நீர் திடப்படுத்தின மனுஷகுமாரன் மீதிலும் இருப்பதாக.
18 அப்பொழுது உம்மைவிட்டுப் பின்வாங்கமாட்டோம்; எங்களை உயிர்ப்பியும், அப்பொழுது உமது நாமத்தைத் தொழுதுகொள்ளுவோம்.
19 சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும்; உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.


0 To the choirmaster: according to Lilies. A Testimony of Asaph. A Psalm.
1 Give ear, O Shepherd of Israel, thou who leadest Joseph like a flock! Thou who art enthroned upon the cherubim, shine forth
2 before E'phraim and Benjamin and Manas'seh! Stir up thy might, and come to save us!
3 Restore us, O God; let thy face shine, that we may be saved!
4 O LORD God of hosts, how long wilt thou be angry with thy people's prayers?
5 Thou hast fed them with the bread of tears, and given them tears to drink in full measure.
6 Thou dost make us the scorn of our neighbors; and our enemies laugh among themselves.
7 Restore us, O God of hosts; let thy face shine, that we may be saved!
8 Thou didst bring a vine out of Egypt; thou didst drive out the nations and plant it.
9 Thou didst clear the ground for it; it took deep root and filled the land.
10 The mountains were covered with its shade, the mighty cedars with its branches;
11 it sent out its branches to the sea, and its shoots to the River.
12 Why then hast thou broken down its walls, so that all who pass along the way pluck its fruit?
13 The boar from the forest ravages it, and all that move in the field feed on it.
14 Turn again, O God of hosts! Look down from heaven, and see; have regard for this vine,
15 the stock which thy right hand planted.
16 They have burned it with fire, they have cut it down; may they perish at the rebuke of thy countenance!
17 But let thy hand be upon the man of thy right hand, the son of man whom thou hast made strong for thyself!
18 Then we will never turn back from thee; give us life, and we will call on thy name!
19 Restore us, O LORD God of hosts! let thy face shine, that we may be saved!

1 நம்முடைய பெலனாகிய தேவனைக் கெம்பீரமாய்ப் பாடி, யாக்கோபின் தேவனைக்குறித்து ஆர்ப்பரியுங்கள்.
2 தம்புரு வாசித்து, வீணையையும் இனிய ஓசையான சுரமண்டலத்தையும் எடுத்து, சங்கீதம் பாடுங்கள்.
3 மாதப்பிறப்பிலும், நியமித்தகாலத்திலும், நம்முடைய பண்டிகைநாட்களிலும், எக்காளம் ஊதுங்கள்.
4 இது இஸ்ரவேலுக்குப் பிரமாணமும் யாக்கோபின் தேவன் விதித்த நியாயமுமாயிருக்கிறது.
5 நாம் அறியாத பாஷையைக் கேட்ட எகிப்துதேசத்தைவிட்டுப் புறப்படுகையில், இதை யோசேப்பிலே சாட்சியாக ஏற்படுத்தினார்.
6 அவன் தோளைச் சுமைக்கு விலக்கினேன்; அவன் கைகள் கூடைக்கு நீங்கலாக்கப்பட்டது.
7 நெருக்கத்திலே நீ கூப்பிட்டாய், நான் உன்னைத் தப்புவித்தேன்; இடிமுழக்கம் உண்டாகும் மறைவிடத்திலிருந்து உனக்கு உத்தரவு அருளினேன்; மேரிபாவின் தண்ணீர்களிடத்தில் உன்னைச் சோதித்து அறிந்தேன். (சேலா.)
8 என் ஜனமே கேள், உனக்குச் சாட்சியிட்டுச் சொல்லுவேன்; இஸ்ரவேலே, நீ எனக்குச் செவிகொடுத்தால் நலமாயிருக்கும்.
9 உனக்குள் வேறு தேவன் உண்டாயிருக்கவேண்டாம்; அந்நிய தேவனை நீ நமஸ்கரிக்கவும் வேண்டாம்.
10 உன்னை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே; உன் வாயை விரிவாய்த் திற, நான் அதை நிரப்புவேன்.
11 என் ஜனமோ என் சத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை, இஸ்ரவேல் என்னை விரும்பவில்லை.
12 ஆகையால் அவர்களை அவர்கள் இருதயத்தின் கடினத்திற்கு விட்டுவிட்டேன்; தங்கள் யோசனைகளின்படி நடந்தார்கள்.
13 ஆ, என் ஜனம் எனக்குச் செவிகொடுத்து இஸ்ரவேல் என் வழிகளில் நடந்தால் நலமாயிருக்கும்!
14 நான் சீக்கிரத்தில் அவர்கள் எதிராளிகளைத் தாழ்த்தி, என் கையை அவர்கள் சத்துருக்களுக்கு விரோதமாகத் திருப்புவேன்.
15 அப்பொழுது கர்த்தரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்களுடைய காலம் என்றென்றைக்கும் இருக்கும்.
16 உச்சிதமான கோதுமையினால் அவர்களைப் போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்.


0 To the choirmaster: according to The Gittith. A Psalm of Asaph.
1 Sing aloud to God our strength; shout for joy to the God of Jacob!
2 Raise a song, sound the timbrel, the sweet lyre with the harp.
3 Blow the trumpet at the new moon, at the full moon, on our feast day.
4 For it is a statute for Israel, an ordinance of the God of Jacob.
5 He made it a decree in Joseph, when he went out over the land of Egypt. I hear a voice I had not known:
6 "I relieved your shoulder of the burden; your hands were freed from the basket.
7 In distress you called, and I delivered you; I answered you in the secret place of thunder; I tested you at the waters of Mer'ibah. [Selah]
8 Hear, O my people, while I admonish you! O Israel, if you would but listen to me!
9 There shall be no strange god among you; you shall not bow down to a foreign god.
10 I am the LORD your God, who brought you up out of the land of Egypt. Open your mouth wide, and I will fill it.
11 "But my people did not listen to my voice; Israel would have none of me.
12 So I gave them over to their stubborn hearts, to follow their own counsels.
13 O that my people would listen to me, that Israel would walk in my ways!
14 I would soon subdue their enemies, and turn my hand against their foes.
15 Those who hate the LORD would cringe toward him, and their fate would last for ever.
16 I would feed you with the finest of the wheat, and with honey from the rock I would satisfy you."

1 தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.
2 எதுவரைக்கும் நீங்கள் அநியாயத்தீர்ப்புச்செய்து, துன்மார்க்கருக்கு முகதாட்சிணியம் பண்ணுவீர்கள். (சேலா.)
3 ஏழைக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள்.
4 பலவீனனையும் எளியவனையும் விடுவித்து துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.
5 அறியாமலும் உணராமலுமிருக்கிறார்கள், அந்தகாரத்திலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது.
6 நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.
7 ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள்.
8 தேவனே எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்; நீரே சகல ஜாதிகளையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர்.


0 A Psalm of Asaph.
1 God has taken his place in the divine council; in the midst of the gods he holds judgment:
2 "How long will you judge unjustly and show partiality to the wicked? [Selah]
3 Give justice to the weak and the fatherless; maintain the right of the afflicted and the destitute.
4 Rescue the weak and the needy; deliver them from the hand of the wicked."
5 They have neither knowledge nor understanding, they walk about in darkness; all the foundations of the earth are shaken.
6 I say, "You are gods, sons of the Most High, all of you;
7 nevertheless, you shall die like men, and fall like any prince."
8 Arise, O God, judge the earth; for to thee belong all the nations!

1 தேவனே மவுனமாயிராதேயும், பேசாமலிராதேயும்; தேவனே சும்மாயிராதேயும்.
2 இதோ உம்முடைய சத்துருக்கள் கொந்தளித்து, உம்முடைய பகைஞர் தலையெடுக்கிறார்கள்.
3 உமது ஜனத்துக்கு விரோதமாக உபாய தந்திரங்களை யோசித்து, உமது மறைவிலிருக்கிறவர்களுக்கு விரோதமாக ஆலோசனைபண்ணுகிறார்கள்.
4 அவர்கள் இனி ஒரு ஜாதியாராயிராமலும், இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள்.
5 இப்படி, ஏதோமின் கூடாரத்தாரும், இஸ்மவேலரும், மோவாபியரும், ஆகாரியரும்,
6 கேபாலரும், அம்மோனியரும், அமலேக்கியரும், தீருவின் குடிகளோடுகூடிய பெலிஸ்தரும்,
7 ஏகமனநிர்ணயமாய் ஆலோசனைசெய்து, உமக்கு விரோதமாய் ஒப்பந்தம்பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
8 அசீரியரும் அவர்களோடேகூடக் கலந்து, லோத்தின் புத்திரருக்குப் புயபலமானார்கள். (சேலா.)
9 மீதியானியருக்குச் செய்ததுபோலவும், கீசோன் என்னும் ஆற்றண்டை எந்தோரிலே அழிக்கப்பட்டு,
10 நிலத்துக்கு எருவாய்ப்போன சிசெரா, யாபீன் என்பவர்களுக்குச் செய்ததுபோலவும், அவர்களுக்குச் செய்யும்.
11 அவர்களையும் அவர்கள் அதிபதிகளையும் ஓரேபுக்கும் சேபுக்கும், அவர்கள் பிரபுக்களையெல்லாம் சேபாவுக்கும் சல்முனாவுக்கும் சமமாக்கும்.
12 தேவனுடைய வாசஸ்தலங்களை எங்களுக்குச் சுதந்தரமாக நாங்கள் கட்டிக்கொள்வோம் என்று சொல்லுகிறார்களே.
13 என் தேவனே, அவர்களைச் சுழல்காற்றின் புழுதிக்கும், காற்றுமுகத்தில் பறக்கும் துரும்புக்கும் சமமாக்கும்.
14 நெருப்பு காட்டைக் கொளுத்துவதுபோலவும் அக்கினி ஜுவாலைகள் மலைகளை எரிப்பதுபோலவும்,
15 நீர் உமது புசலினாலே அவர்களைத் தொடர்ந்து, உமது பெருங்காற்றிலே அவர்களைக் கலங்கப்பண்ணும்.
16 கர்த்தாவே, அவர்கள் உமது நாமத்தைத் தேடும்படிக்கு, அவர்கள் முகங்களை அவமானத்தாலே மூடும்.
17 யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி,
18 அவர்கள் என்றைக்கும் வெட்கிக்கலங்கி, நாணமடைந்து அழிந்துபோவார்களாக.


0 A Song. A Psalm of Asaph.
1 O God, do not keep silence; do not hold thy peace or be still, O God!
2 For lo, thy enemies are in tumult; those who hate thee have raised their heads.
3 They lay crafty plans against thy people; they consult together against thy protected ones.
4 They say, "Come, let us wipe them out as a nation; let the name of Israel be remembered no more!"
5 Yea, they conspire with one accord; against thee they make a covenant --
6 the tents of Edom and the Ish'maelites, Moab and the Hagrites,
7 Gebal and Ammon and Am'alek, Philistia with the inhabitants of Tyre;
8 Assyria also has joined them; they are the strong arm of the children of Lot. [Selah]
9 Do to them as thou didst to Mid'ian, as to Sis'era and Jabin at the river Kishon,
10 who were destroyed at En-dor, who became dung for the ground.
11 Make their nobles like Oreb and Zeeb, all their princes like Zebah and Zalmun'na,
12 who said, "Let us take possession for ourselves of the pastures of God."
13 O my God, make them like whirling dust, like chaff before the wind.
14 As fire consumes the forest, as the flame sets the mountains ablaze,
15 so do thou pursue them with thy tempest and terrify them with thy hurricane!
16 Fill their faces with shame, that they may seek thy name, O LORD.
17 Let them be put to shame and dismayed for ever; let them perish in disgrace.
18 Let them know that thou alone, whose name is the LORD, art the Most High over all the earth.

1 சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்!
2 என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.
3 என் ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் கர்த்தாவே, உம்முடைய பீடங்களண்டையில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே.
4 உம்முடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள். (சேலா.)
5 உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும் தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்.
6 அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக்கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும்.
7 அவர்கள் பலத்தின்மேல் பலமடைந்து சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்.
8 சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, என் விண்ணப்பத்தை கேளும்; யாக்கோபின் தேவனே, செவிகொடும். (சேலா.)
9 எங்கள் கேடகமாகிய தேவனே, கண்ணோக்கமாயிரும்; நீர் அபிஷேகம்பண்ணினவரின் முகத்தைப் பாரும்.
10 ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப்பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்.
11 தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.
12 சேனைகளின் கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிற மனுஷன் பாக்கியவான்.


0 To the choirmaster: according to The Gittith. A Psalm of the Sons of Korah.
1 How lovely is thy dwelling place, O LORD of hosts!
2 My soul longs, yea, faints for the courts of the LORD; my heart and flesh sing for joy to the living God.
3 Even the sparrow finds a home, and the swallow a nest for herself, where she may lay her young, at thy altars, O LORD of hosts, my King and my God.
4 Blessed are those who dwell in thy house, ever singing thy praise! [Selah]
5 Blessed are the men whose strength is in thee, in whose heart are the highways to Zion.
6 As they go through the valley of Baca they make it a place of springs; the early rain also covers it with pools.
7 They go from strength to strength; the God of gods will be seen in Zion.
8 O LORD God of hosts, hear my prayer; give ear, O God of Jacob! [Selah]
9 Behold our shield, O God; look upon the face of thine anointed!
10 For a day in thy courts is better than a thousand elsewhere. I would rather be a doorkeeper in the house of my God than dwell in the tents of wickedness.
11 For the LORD God is a sun and shield; he bestows favor and honor. No good thing does the LORD withhold from those who walk uprightly.
12 O LORD of hosts, blessed is the man who trusts in thee!

1 கர்த்தாவே, உமது தேசத்தின்மேல் பிரியம் வைத்து, யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினீர்.
2 உமது ஜனத்தின் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினீர்.(சேலா.)
3 உமது உக்கிரத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு, உமது கோபத்தின் எரிச்சலைவிட்டுத் திரும்பினீர்.
4 எங்கள் இரட்சிப்பின் தேவனே, நீர் எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், எங்கள்மேலுள்ள உமது கோபத்தை ஆறப்பண்ணும்.
5 என்றைக்கும் எங்கள்மேல் கோபமாயிருப்பீரோ? தலைமுறை தலைமுறையாக உமது கோபத்தை நீடித்திருக்கப்பண்ணுவீரோ?
6 உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி நீர் எங்களைத் திரும்ப உயிர்ப்பிக்கமாட்டீரோ?
7 கர்த்தாவே, உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து, உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளிச்செய்யும்.
8 கர்த்தராகிய தேவன் விளம்புவதைக் கேட்பேன்; அவர் தம்முடைய ஜனங்களுக்கும் தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார்; அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாதிருப்பார்களாக.
9 நம்முடைய தேசத்தில் மகிமை வாசமாயிருக்கும்படி, அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது.
10 கிருபையும் சத்தியமும் ஒன்றயொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும்.
11 சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும், நீதி வானத்திலிருந்து தாழப்பார்க்கும்.
12 கர்த்தர் நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும்.
13 நீதி அவருக்கு முன்னாகச் சென்று, அவருடைய அடிச்சுவடுகளின் வழியிலே நம்மை நிறுத்தும்.


0 To the choirmaster. A Psalm of the Sons of Korah.
1 LORD, thou wast favorable to thy land; thou didst restore the fortunes of Jacob.
2 Thou didst forgive the iniquity of thy people; thou didst pardon all their sin. [Selah]
3 Thou didst withdraw all thy wrath; thou didst turn from thy hot anger.
4 Restore us again, O God of our salvation, and put away thy indignation toward us!
5 Wilt thou be angry with us for ever? Wilt thou prolong thy anger to all generations?
6 Wilt thou not revive us again, that thy people may rejoice in thee?
7 Show us thy steadfast love, O LORD, and grant us thy salvation.
8 Let me hear what God the LORD will speak, for he will speak peace to his people, to his saints, to those who turn to him in their hearts.
9 Surely his salvation is at hand for those who fear him, that glory may dwell in our land.
10 Steadfast love and faithfulness will meet; righteousness and peace will kiss each other.
11 Faithfulness will spring up from the ground, and righteousness will look down from the sky.
12 Yea, the LORD will give what is good, and our land will yield its increase.
13 Righteousness will go before him, and make his footsteps a way.

1 கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்து, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; நான் சிறுமையும் எளிமையுமானவன்.
2 என் ஆத்துமாவைக் காத்தருளும், நான் பக்தியுள்ளவன்; என் தேவனே உம்மை நம்பியிருக்கிற உமது அடியேனை நீர் இரட்சியும்.
3 ஆண்டவரே, எனக்கு இரங்கும், நாடோறும் உம்மை நோக்கிக்கூப்பிடுகிறேன்.
4 உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்; ஆண்டவரே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
5 ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.
6 கர்த்தாவே, என் ஜெபத்திற்குச் செவிகொடுத்து, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கவனியும்.
7 நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; நீர் என்னைக் கேட்டருளுவீர்.
8 ஆண்டவரே, தேவர்களுக்குள்ளே உமக்கு நிகருமில்லை; உம்முடைய கிரியைகளுக்கு ஒப்புமில்லை.
9 ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா ஜாதிகளும் வந்து, உமக்கு முன்பாகப் பணிந்து, உமது நாமத்தை மகிமைப்படுத்துவார்கள்.
10 தேவரீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிறீர்; நீர் ஒருவரே தேவன்.
11 கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்.
12 என் தேவனாகிய ஆண்டவரே, உம்மை என் முழு இருதயத்தோடும் துதித்து, உமது நாமத்தை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன்.
13 நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்.
14 தேவனே அகங்காரிகள் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள். கொடுமைக்காரராகிய கூட்டத்தார் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள், உம்மைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி நோக்காதிருக்கிறார்கள்.
15 ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும் இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன்.
16 என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; உமது வல்லமையை உமது அடியானுக்கு அருளி உமது அடியாளின் குமாரனை இரட்சியும்.
17 கர்த்தாவே, நீர் எனக்குத் துணைசெய்து என்னைத் தேற்றுகிறதை என் பகைஞர் கண்டு வெட்கப்படும்படிக்கு, எனக்கு அநுகூலமாக ஒரு அடையாளத்தை காண்பித்தருளும்.


0 A Prayer of David.
1 Incline thy ear, O LORD, and answer me, for I am poor and needy.
2 Preserve my life, for I am godly; save thy servant who trusts in thee. Thou art my God;
3 be gracious to me, O Lord, for to thee do I cry all the day.
4 Gladden the soul of thy servant, for to thee, O Lord, do I lift up my soul.
5 For thou, O Lord, art good and forgiving, abounding in steadfast love to all who call on thee.
6 Give ear, O LORD, to my prayer; hearken to my cry of supplication.
7 In the day of my trouble I call on thee, for thou dost answer me.
8 There is none like thee among the gods, O Lord, nor are there any works like thine.
9 All the nations thou hast made shall come and bow down before thee, O Lord, and shall glorify thy name.
10 For thou art great and doest wondrous things, thou alone art God.
11 Teach me thy way, O LORD, that I may walk in thy truth; unite my heart to fear thy name.
12 I give thanks to thee, O Lord my God, with my whole heart, and I will glorify thy name for ever.
13 For great is thy steadfast love toward me; thou hast delivered my soul from the depths of Sheol.
14 O God, insolent men have risen up against me; a band of ruthless men seek my life, and they do not set thee before them.
15 But thou, O Lord, art a God merciful and gracious, slow to anger and abounding in steadfast love and faithfulness.
16 Turn to me and take pity on me; give thy strength to thy servant, and save the son of thy handmaid.
17 Show me a sign of thy favor, that those who hate me may see and be put to shame because thou, LORD, hast helped me and comforted me.

1 அவர் அஸ்திபாரம் பரிசுத்த பர்வதங்களில் இருக்கிறது.
2 கர்த்தர் யாக்கோபின் வாசஸ்தலங்களெல்லாவற்றைப்பார்க்கிலும் சீயோனின் வாசல்களில் பிரியமாயிருக்கிறார்.
3 தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் வசனிக்கப்படும். (சேலா.)
4 என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்; இதோ பெலிஸ்தியரிலும் தீரியரிலும், எத்தியோப்பியரிலுங் கூட, இன்னான் அங்கே பிறந்தானென்றும்;
5 சீயோனைக்குறித்து இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; உன்னதமானவர்தாமே அதை ஸ்திரப்படுத்துவார்.
6 கர்த்தர் ஜனங்களைப் பேரெழுதும்போது, இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைத் தொகையிடுவார். (சேலா.)
7 எங்கள் ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது என்று பாடுவாரும் ஆடுவாரும் ஏகமாய்ச் சொல்லுவார்கள்.


0 A Psalm of the Sons of Korah. A Song.
1 On the holy mount stands the city he founded;
2 the LORD loves the gates of Zion more than all the dwelling places of Jacob.
3 Glorious things are spoken of you, O city of God. [Selah]
4 Among those who know me I mention Rahab and Babylon; behold, Philistia and Tyre, with Ethiopia -- "This one was born there," they say.
5 And of Zion it shall be said, "This one and that one were born in her"; for the Most High himself will establish her.
6 The LORD records as he registers the peoples, "This one was born there." [Selah]
7 Singers and dancers alike say, "All my springs are in you."

1 என் இரட்சிப்பின் தேவனாகிய கர்த்தாவே, இரவும் பகலும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
2 என் விண்ணப்பம் உமது சமுகத்தில் வருவதாக; என் கூப்பிடுதலுக்கு உமது செவியைச் சாய்த்தருளும்.
3 என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என் ஜீவன் பாதாளத்திற்குச் சமீபமாய் வந்திருக்கிறது.
4 நான் குழியில் இறங்குகிறவர்களோடு எண்ணப்பட்டு, பெலனற்ற மனுஷனைப் போலானேன்.
5 மரித்தவர்களில் ஒருவனைப்போல் நெகிழப்பட்டிருக்கிறேன்; நீர் இனி ஒருபோதும் நினையாதபடி, உமது கையால் அறுப்புண்டுபோய்ப் பிரேதக்குழிகளிலே கிடக்கிறவர்களைப் போலானேன்.
6 என்னைப் பாதாளக்குழியிலும் இருளிலும் ஆழங்களிலும் வைத்தீர்.
7 உம்முடைய கோபம் என்னை இருத்துகிறது; உம்முடைய அலைகளெல்லாவற்றினாலும் என்னை வருத்தப்படுத்துகிறீர். (சேலா.)
8 எனக்கு அறிமுகமானவர்களை எனக்குத் தூரமாக விலக்கி, அவர்களுக்கு என்னை அருவருப்பாக்கினார்; நான் வெளியே புறப்படக் கூடாதபடி அடைபட்டிருக்கிறேன்.
9 துக்கத்தினால் என் கண் தொய்ந்துபோயிற்று; கர்த்தாவே, அநுதினமும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டு, உமக்கு நேராக என் கைகளை விரிக்கிறேன்.
10 மரித்தவர்களுக்கு அதிசயங்களைச் செய்வீரோ? செத்துப்போன வீரர் எழுந்து உம்மைத் துதிப்பார்களோ? (சேலா.)
11 பிரேதக்குழியில் உமது கிருபையும் அழிவில் உமது உண்மையும் விவரிக்கப்படுமோ?
12 இருளில் உமது அதிசயங்களும், மறதியின் பூமியில் உமது நீதியும் அறியப்படுமோ?
13 நானோ, கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; காலையிலே என் விண்ணப்பம் உமக்கு முன்பாக வரும்.
14 கர்த்தாவே, ஏன் என் ஆத்துமாவைத் தள்ளிவிடுகிறீர்? ஏன் உமது முகத்தை எனக்கு மறைக்கிறீர்?
15 சிறுவயதுமுதல் நான் சிறுமைப்பட்டவனும் மாண்டுபோகிறவனுமாயிருக்கிறேன்; உம்மால் வரும் திகில்கள் என்மேல் சுமந்திருக்கிறது, நான் மனங்கலங்குகிறேன்.
16 உம்முடைய எரிச்சல்கள் என்மேல் புரண்டுபோகிறது; உம்முடைய பயங்கரங்கள் என்னை அதம்பண்ணுகிறது.
17 அவைகள் நாடோறும் தண்ணீரைப்போல் என்னைச் சூழ்ந்து, ஏகமாய் என்னை வளைந்துகொள்ளுகிறது.
18 சிநேகிதனையும் தோழனையும் எனக்குத் தூரமாக விலக்கினீர்; எனக்கு அறிமுகமானவர்கள் மறைந்துபோனார்கள்.


0 A Song. A Psalm of the Sons of Korah. To the choirmaster: according to Mahalath Leannoth. A Maskil of Heman the Ezrahite.
1 O LORD, my God, I call for help by day; I cry out in the night before thee.
2 Let my prayer come before thee, incline thy ear to my cry!
3 For my soul is full of troubles, and my life draws near to Sheol.
4 I am reckoned among those who go down to the Pit; I am a man who has no strength,
5 like one forsaken among the dead, like the slain that lie in the grave, like those whom thou dost remember no more, for they are cut off from thy hand.
6 Thou hast put me in the depths of the Pit, in the regions dark and deep.
7 Thy wrath lies heavy upon me, and thou dost overwhelm me with all thy waves. [Selah]
8 Thou hast caused my companions to shun me; thou hast made me a thing of horror to them. I am shut in so that I cannot escape;
9 my eye grows dim through sorrow. Every day I call upon thee, O LORD; I spread out my hands to thee.
10 Dost thou work wonders for the dead? Do the shades rise up to praise thee? [Selah]
11 Is thy steadfast love declared in the grave, or thy faithfulness in Abaddon?
12 Are thy wonders known in the darkness, or thy saving help in the land of forgetfulness?
13 But I, O LORD, cry to thee; in the morning my prayer comes before thee.
14 O LORD, why dost thou cast me off? Why dost thou hide thy face from me?
15 Afflicted and close to death from my youth up, I suffer thy terrors; I am helpless.
16 Thy wrath has swept over me; thy dread assaults destroy me.
17 They surround me like a flood all day long; they close in upon me together.
18 Thou hast caused lover and friend to shun me; my companions are in darkness.

1 கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என் வாயினால் அறிவிப்பேன்.
2 கிருபை என்றென்றைக்கும் ஸ்திரப்பட்டிருக்கும்; உமது உண்மையை வானங்களிலே ஸ்தாபிப்பீர் என்றேன்.
3 என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவனோடே உடன்படிக்கைபண்ணி என்தாசனாகிய தாவீதை நோக்கி:
4 என்றென்றைக்கும் உன் சந்ததியை நிலைப்படுத்தி, தலைமுறை தலைமுறையாக என் சிங்காசனத்தை ஸ்தாபிப்பேன் என்று ஆணையிட்டேன் என்றார். (சேலா.)
5 கர்த்தாவே, வானங்கள் உம்முடைய அதிசயங்களைத் துதிக்கும் பரிசுத்தவான்களின் சபையிலே உம்முடைய உண்மையும் விளங்கும்.
6 ஆகாயமண்டலத்தில் கர்த்தருக்கு நிகரானவர் யார்? பலவான்களின் புத்திரரில் கர்த்தருக்கு ஒப்பானவர் யார்?
7 தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர், தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் அஞ்சப்படத்தக்கவர்.
8 சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்மைப்போல் வல்லமையுள்ள கர்த்தர் யார்? உம்முடைய உண்மை உம்மைச் சூழ்ந்திருக்கிறது.
9 தேவரீர், சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிறவர்; அதின் அலைகள் எழும்பும்போது அவைகளை அடங்கப்பண்ணுகிறீர்.
10 நீர் ராகாபை வெட்டுண்ட ஒருவனைப்போல் ஒடுக்கினீர்; உமது வல்லமையான புயத்தினால் உம்முடைய சத்துருக்களைச் சிதறடித்தீர்.
11 வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது, பூலோகத்தையும் அதிலுள்ள யாவையும் நீரே அஸ்திபாரப்படுத்தினீர்.
12 வடக்கையும் தெற்கையும் நீர் உண்டாக்கினீர், தாபோரும் எர்மோனும் உம்முடைய நாமம் விளங்கக் கெம்பீரிக்கும்.
13 உமக்கு வல்லமையுள்ள புயமிருக்கிறது; உம்முடைய கரம் பராக்கிரமமுள்ளது; உம்முடைய வலதுகரம் உன்னதமானது.
14 நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும்.
15 கெம்பீரசத்தத்தை அறியும் ஜனங்கள் பாக்கியமுள்ளவர்கள்; கர்த்தாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள்.
16 அவர்கள் உம்முடைய நாமத்தில் நாடோறும் களிகூர்ந்து, உம்முடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள்.
17 நீரே அவர்கள் பலத்தின் மகிமையாயிருக்கிறீர்; உம்முடைய தயவினால் எங்கள் கொம்பு உயரும்.
18 கர்த்தரால் எங்கள் கேடகமும் இஸ்ரவேலின் பரிசுத்தரால் எங்களுடைய ராஜாவும் உண்டு.
19 அப்பொழுது நீர் உம்முடைய பக்தனுக்குத் தரிசனமாகி: சகாயஞ்செய்யத்தக்க சக்தியை ஒரு சவுரியவான்மேல் வைத்து, ஜனத்தில் தெரிந்துகொள்ளப்பட்டவனை உயர்த்தினேன்.
20 என் தாசனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம்பண்ணினேன்.
21 என் கை அவனோடே உறுதியாயிருக்கும்; என் புயம் அவனைப் பலப்படுத்தும்.
22 சத்துரு அவனை நெருக்குவதில்லை; நியாயக்கேட்டின் மகன் அவனை ஒடுக்குவதில்லை.
23 அவன் சத்துருக்களை அவனுக்குமுன்பாக மடங்கடித்து, அவனைப் பகைக்கிறவர்களை வெட்டுவேன்.
24 என் உண்மையும் என் கிருபையும் அவனோடிருக்கும், என் நாமத்தினால் அவன் கொம்பு உயரும்.
25 அவன் கையைச் சமுத்திரத்தின்மேலும், அவன் வலதுகரத்தை ஆறுகள்மேலும் ஆளும்படி வைப்பேன்.
26 அவன் என்னை நோக்கி: நீர் என் பிதா, என் தேவன், என் இரட்சிப்பின் கன்மலையென்று சொல்லுவான்.
27 நான் அவனை எனக்கு முதற்பேறானவனும், பூமியின் ராஜாக்களைப்பார்க்கிலும் மகா உயர்ந்தவனுமாக்குவேன்.
28 என் கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன்; என் உடன்படிக்கை, அவனுக்காக உறுதிப்படுத்தப்படும்.
29 அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைத்திருக்கவும், அவன் ராஜாசனம் வானங்களுள்ளமட்டும் நிலைநிற்கவும்செய்வேன்.
30 அவன் பிள்ளைகள் என் நியாயங்களின்படி நடவாமல் என் வேதத்தை விட்டு விலகி;
31 என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல் என் நியமங்களை மீறிநடந்தால்;
32 அவர்கள் மீறுதலை மிலாற்றினாலும், அவர்கள் அக்கிரமத்தை வாதைகளினாலும் தண்டிப்பேன்.
33 ஆனாலும் என் கிருபையை அவனைவிட்டு விலக்காமலும், என் உண்மையில் பிசகாமலும் இருப்பேன்.
34 என் உடன்படிக்கையை மீறாமலும், என் உதடுகள் விளம்பினதை மாற்றாமலும் இருப்பேன்.
35 ஒருவிசை என் பரிசுத்தத்தின்பேரில் ஆணையிட்டேன், தாவீதுக்கு நான் பொய்சொல்லேன்.
36 அவன் சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்; அவன் சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும்.
37 சந்திரனைப்போல அது என்றென்றைக்கும் உறுதியாயும், ஆகாயமண்டலத்துச் சாட்சியைப்போல் உண்மையாயும் இருக்கும் என்று விளம்பினீர். (சேலா.)
38 ஆனாலும் நீர் எங்களை வெறுத்துத் தள்ளிவிட்டீர், நீர் அபிஷேகம்பண்ணுவித்தவன்மேல் உக்கிரமானீர்.
39 உமது அடியானுடன் நீர் பண்ணின உடன்படிக்கையை ஒழித்துவிட்டு, அவன் கிரீடத்தைத் தரையிலேதள்ளி அவமானப்படுத்தினீர்.
40 அவன் மதில்களையெல்லாம் தகர்த்துப்போட்டு, அவன் அரணான ஸ்தலங்களைப் பாழாக்கினீர்.
41 வழிநடக்கிற யாவரும் அவனைக் கொள்ளையிடுகிறார்கள்; தன் அயலாருக்கு நிந்தையானான்.
42 அவன் சத்துருக்களின் வலதுகையை நீர் உயர்த்தி, அவன் விரோதிகள் யாவரும் சந்தோஷிக்கும்படிசெய்தீர்.
43 அவன் பட்டயத்தின் கருக்கை மழுக்கிப்போட்டு, அவனை யுத்தத்தில் நிற்காதபடி செய்தீர்.
44 அவன் மகிமையை அற்றுப்போகப்பண்ணி, அவன் சிங்காசனத்தைத் தரையிலே தள்ளினீர்.
45 அவன் வாலிபநாட்களைக் குறுக்கி, அவனை வெட்கத்தால் மூடினீர். (சேலா.)
46 எதுவரைக்கும், கர்த்தாவே! நீர் என்றென்றைக்கும் மறைந்திருப்பீரோ? உமது கோபம் அக்கினியைப்போல் எரியுமோ?
47 என் ஜீவன் எவ்வளவு நிலையற்றது என்பதை நினைத்தருளும்; மனுபுத்திரர் யாவரையும் வீணாகச் சிருஷ்டிக்க வேண்டியதென்ன?
48 மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யார்? தன் ஆத்துமாவைப் பாதாள வல்லடிக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா.)
49 ஆண்டவரே, நீர் தாவீதுக்கு உம்முடைய உண்மையைக்கொண்டு சத்தியம்பண்ணின உமது பூர்வ கிருபைகள் எங்கே?
50 ஆண்டவரே, உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஊழியக்காரரையும் நீர் அபிஷேகம்பண்ணினவனின் காலடிகளையும் நிந்திக்கிறபடியினால்,
51 கர்த்தாவே, உமது அடியார் சுமக்கும் நிந்தையையும், வலுமையான ஜனங்களெல்லாராலும் நான் என் மடியில் சுமக்கும் என் நிந்தையையும் நினைத்தருளும்.
52 கர்த்தருக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக. ஆமென், ஆமென்.


0 A Maskil of Ethan the Ezrahite.
1 I will sing of thy steadfast love, O LORD, for ever; with my mouth I will proclaim thy faithfulness to all generations.
2 For thy steadfast love was established for ever, thy faithfulness is firm as the heavens.
3 Thou hast said, "I have made a covenant with my chosen one, I have sworn to David my servant:
4 `I will establish your descendants for ever, and build your throne for all generations.'" [Selah]
5 Let the heavens praise thy wonders, O LORD, thy faithfulness in the assembly of the holy ones!
6 For who in the skies can be compared to the LORD? Who among the heavenly beings is like the LORD,
7 a God feared in the council of the holy ones, great and terrible above all that are round about him?
8 O LORD God of hosts, who is mighty as thou art, O LORD, with thy faithfulness round about thee?
9 Thou dost rule the raging of the sea; when its waves rise, thou stillest them.
10 Thou didst crush Rahab like a carcass, thou didst scatter thy enemies with thy mighty arm.
11 The heavens are thine, the earth also is thine; the world and all that is in it, thou hast founded them.
12 The north and the south, thou hast created them; Tabor and Hermon joyously praise thy name.
13 Thou hast a mighty arm; strong is thy hand, high thy right hand.
14 Righteousness and justice are the foundation of thy throne; steadfast love and faithfulness go before thee.
15 Blessed are the people who know the festal shout, who walk, O LORD, in the light of thy countenance,
16 who exult in thy name all the day, and extol thy righteousness.
17 For thou art the glory of their strength; by thy favor our horn is exalted.
18 For our shield belongs to the LORD, our king to the Holy One of Israel.
19 Of old thou didst speak in a vision to thy faithful one, and say: "I have set the crown upon one who is mighty, I have exalted one chosen from the people.
20 I have found David, my servant; with my holy oil I have anointed him;
21 so that my hand shall ever abide with him, my arm also shall strengthen him.
22 The enemy shall not outwit him, the wicked shall not humble him.
23 I will crush his foes before him and strike down those who hate him.
24 My faithfulness and my steadfast love shall be with him, and in my name shall his horn be exalted.
25 I will set his hand on the sea and his right hand on the rivers.
26 He shall cry to me, `Thou art my Father, my God, and the Rock of my salvation.'
27 And I will make him the first-born, the highest of the kings of the earth.
28 My steadfast love I will keep for him for ever, and my covenant will stand firm for him.
29 I will establish his line for ever and his throne as the days of the heavens.
30 If his children forsake my law and do not walk according to my ordinances,
31 if they violate my statutes and do not keep my commandments,
32 then I will punish their transgression with the rod and their iniquity with scourges;
33 but I will not remove from him my steadfast love, or be false to my faithfulness.
34 I will not violate my covenant, or alter the word that went forth from my lips.
35 Once for all I have sworn by my holiness; I will not lie to David.
36 His line shall endure for ever, his throne as long as the sun before me.
37 Like the moon it shall be established for ever; it shall stand firm while the skies endure." [Selah]
38 But now thou hast cast off and rejected, thou art full of wrath against thy anointed.
39 Thou hast renounced the covenant with thy servant; thou hast defiled his crown in the dust.
40 Thou hast breached all his walls; thou hast laid his strongholds in ruins.
41 All that pass by despoil him; he has become the scorn of his neighbors.
42 Thou hast exalted the right hand of his foes; thou hast made all his enemies rejoice.
43 Yea, thou hast turned back the edge of his sword, and thou hast not made him stand in battle.
44 Thou hast removed the scepter from his hand, and cast his throne to the ground.
45 Thou hast cut short the days of his youth; thou hast covered him with shame. [Selah]
46 How long, O LORD? Wilt thou hide thyself for ever? How long will thy wrath burn like fire?
47 Remember, O Lord, what the measure of life is, for what vanity thou hast created all the sons of men!
48 What man can live and never see death? Who can deliver his soul from the power of Sheol? [Selah]
49 Lord, where is thy steadfast love of old, which by thy faithfulness thou didst swear to David?
50 Remember, O Lord, how thy servant is scorned; how I bear in my bosom the insults of the peoples,
51 with which thy enemies taunt, O LORD, with which they mock the footsteps of thy anointed.
52 Blessed be the LORD for ever! Amen and Amen.

1 ஆண்டவரே, தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர்.
2 பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்.
3 நீர் மனுஷரை நிர்த்தூளியாக்கி மனுபுத்திரரே திரும்புங்கள் என்கிறீர்.
4 உமது பார்வைக்கு ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இராச்சாமம்போலவும் இருக்கிறது.
5 அவர்களை வெள்ளம்போல் வாரிக்கொண்டுபோகிறீர்; நித்திரைக்கு ஒத்திருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.
6 அது காலையிலே முளைத்துப் பூத்து, மாலையிலே அறுப்புண்டு உலர்ந்துபோம்.
7 நாங்கள் உமது கோபத்தினால் அழிந்து, உமது உக்கிரத்தினால் கலங்கிப்போகிறோம்.
8 எங்கள் அக்கிரமங்களை உமக்குமுன்பாகவும், எங்கள் அந்தரங்க பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர்.
9 எங்கள் நாட்களெல்லாம் உமது கோபத்தால் போய்விட்டது; ஒருகதையைப்போல் எங்கள் வருஷங்களைக் களைத்துப்போட்டோம்.
10 எங்கள் ஆயுசுநாட்கள் எழுபதுவருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமாமே; அது சீக்கிரமாய்க் கடந்துபோகிறது, நாங்களும் பறந்துபோகிறோம்.
11 உமது கோபத்தின் வல்லமையையும் உமக்குப் பயப்படத்தக்க விதமாயும் உமது உக்கிரத்தையும் அறிந்துகொள்ளுகிறவன் யார்?
12 நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.
13 கர்த்தாவே, திரும்பிவாரும், எதுவரைக்கும் கோபமாயிருப்பீர்? உமது அடியாருக்காகப் பரிதபியும்.
14 நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்.
15 தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும், எங்களை மகிழ்ச்சியாக்கும்.
16 உமது கிரியை உமது ஊழியக்காரருக்கும், உமது மகிமை அவர்கள் பிள்ளைகளுக்கும் விளங்குவதாக.
17 எங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள்மேல் இருப்பதாக; எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தும்; ஆம், எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தியருளும்.


0 A Prayer of Moses, the man of God.
1 LORD, thou hast been our dwelling place in all generations.
2 Before the mountains were brought forth, or ever thou hadst formed the earth and the world, from everlasting to everlasting thou art God.
3 Thou turnest man back to the dust, and sayest, "Turn back, O children of men!"
4 For a thousand years in thy sight are but as yesterday when it is past, or as a watch in the night.
5 Thou dost sweep men away; they are like a dream, like grass which is renewed in the morning:
6 in the morning it flourishes and is renewed; in the evening it fades and withers.
7 For we are consumed by thy anger; by thy wrath we are overwhelmed.
8 Thou hast set our iniquities before thee, our secret sins in the light of thy countenance.
9 For all our days pass away under thy wrath, our years come to an end like a sigh.
10 The years of our life are threescore and ten, or even by reason of strength fourscore; yet their span is but toil and trouble; they are soon gone, and we fly away.
11 Who considers the power of thy anger, and thy wrath according to the fear of thee?
12 So teach us to number our days that we may get a heart of wisdom.
13 Return, O LORD! How long? Have pity on thy servants!
14 Satisfy us in the morning with thy steadfast love, that we may rejoice and be glad all our days.
15 Make us glad as many days as thou hast afflicted us, and as many years as we have seen evil.
16 Let thy work be manifest to thy servants, and thy glorious power to their children.
17 Let the favor of the Lord our God be upon us, and establish thou the work of our hands upon us, yea, the work of our hands establish thou it.

1 உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.
2 நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.
3 அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார்.
4 அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்.
5 இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும்,
6 இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்.
7 உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது.
8 உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்கு வரும் பலனைக் காண்பாய்.
9 எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய்.
10 ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.
11 உன் வழிகளிலெல்லாம் உன்னைக்காக்கும்படி உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.
12 உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள்.
13 சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய்.
14 அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.
15 அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.
16 நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.


1 He who dwells in the shelter of the Most High, who abides in the shadow of the Almighty,
2 will say to the LORD, "My refuge and my fortress; my God, in whom I trust."
3 For he will deliver you from the snare of the fowler and from the deadly pestilence;
4 he will cover you with his pinions, and under his wings you will find refuge; his faithfulness is a shield and buckler.
5 You will not fear the terror of the night, nor the arrow that flies by day,
6 nor the pestilence that stalks in darkness, nor the destruction that wastes at noonday.
7 A thousand may fall at your side, ten thousand at your right hand; but it will not come near you.
8 You will only look with your eyes and see the recompense of the wicked.
9 Because you have made the LORD your refuge, the Most High your habitation,
10 no evil shall befall you, no scourge come near your tent.
11 For he will give his angels charge of you to guard you in all your ways.
12 On their hands they will bear you up, lest you dash your foot against a stone.
13 You will tread on the lion and the adder, the young lion and the serpent you will trample under foot.
14 Because he cleaves to me in love, I will deliver him; I will protect him, because he knows my name.
15 When he calls to me, I will answer him; I will be with him in trouble, I will rescue him and honor him.
16 With long life I will satisfy him, and show him my salvation.

1 கர்த்தரைத் துதிப்பதும், உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவதும்,
2 பத்துநரம்பு வீணையினாலும் தம்புருவினாலும், தியானத்தோடு வாசிக்கும் சுரமண்டலத்தினாலும்,
3 காலையிலே உமது கிருபையையும் இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாயிருக்கும்.
4 கர்த்தாவே, உமது செய்கைகளால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், உமது கரத்தின் கிரியைகளினிமித்தம் ஆனந்த சத்தமிடுவேன்.
5 கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு மகத்துவமானவைகள்! உமது யோசனைகள் மகா ஆழமானவைகள்.
6 மிருககுணமுள்ள மனுஷன் அதை அறியான், மூடன் அதை உணரான்.
7 துன்மார்க்கர் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர் யாவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்.
8 கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் உன்னதமானவராயிருக்கிறீர்.
9 கர்த்தாவே, உமது சத்துருக்கள் அழிவார்கள்; உமது சத்துருக்கள் அழிந்தேபோவார்கள்; சகல அக்கிரமக்காரரும் சிதறுண்டுபோவார்கள்.
10 என் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; புது எண்ணெயால் அபிஷேகம்பண்ணப்படுகிறேன்.
11 என் சத்துருக்களுக்கு நேரிடுவதை என் கண் காணும்; எனக்கு விரோதமாய் எழும்புகிற துன்மார்க்கருக்கு நேரிடுவதை என் காது கேட்கும்.
12 நீதிமான் பனையைப் போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.
13 கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள்.
14 கர்த்தர் உத்தமரென்றும், என் கன்மலையாகிய அவரிடத்தில் அநீதியில்லையென்றும், விளங்கப்பண்ணும்படி,
15 அவர்கள் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்.


0 A Psalm. A Song for the Sabbath.
1 It is good to give thanks to the LORD, to sing praises to thy name, O Most High;
2 to declare thy steadfast love in the morning, and thy faithfulness by night,
3 to the music of the lute and the harp, to the melody of the lyre.
4 For thou, O LORD, hast made me glad by thy work; at the works of thy hands I sing for joy.
5 How great are thy works, O LORD! Thy thoughts are very deep!
6 The dull man cannot know, the stupid cannot understand this:
7 that, though the wicked sprout like grass and all evildoers flourish, they are doomed to destruction for ever,
8 but thou, O LORD, art on high for ever.
9 For, lo, thy enemies, O LORD, for, lo, thy enemies shall perish; all evildoers shall be scattered.
10 But thou hast exalted my horn like that of the wild ox; thou hast poured over me fresh oil.
11 My eyes have seen the downfall of my enemies, my ears have heard the doom of my evil assailants.
12 The righteous flourish like the palm tree, and grow like a cedar in Lebanon.
13 They are planted in the house of the LORD, they flourish in the courts of our God.
14 They still bring forth fruit in old age, they are ever full of sap and green,
15 to show that the LORD is upright; he is my rock, and there is no unrighteousness in him.

1 கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார்; மகத்துவத்தை அணிந்துகொண்டிருக்கிறார்; கர்த்தர் பராக்கிரமத்தை அணிந்து, அவர் அதைக் கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்; ஆதலால் பூச்சக்கரம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது.
2 உமது சிங்காசனம் பூர்வமுதல் உறுதியானது; நீர் அநாதியாயிருக்கிறீர்.
3 கர்த்தாவே, நதிகள் எழும்பின; நதிகள் இரைச்சலிட்டு எழும்பின; நதிகள் அலைதிரண்டு எழும்பின.
4 திரளான தண்ணீர்களின் இரைச்சலைப்பார்க்கிலும், சமுத்திரத்தின் வலுமையான அலைகளைப்பார்க்கிலும், கர்த்தர் உன்னதத்திலே வல்லமையுள்ளவர்.
5 உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள்; கர்த்தாவே, பரிசுத்தமானது நித்தியநாளாக உமது ஆலயத்தின் அலங்காரமாயிருக்கிறது.


1 The LORD reigns; he is robed in majesty; the LORD is robed, he is girded with strength. Yea, the world is established; it shall never be moved;
2 thy throne is established from of old; thou art from everlasting.
3 The floods have lifted up, O LORD, the floods have lifted up their voice, the floods lift up their roaring.
4 Mightier than the thunders of many waters, mightier than the waves of the sea, the LORD on high is mighty!
5 Thy decrees are very sure; holiness befits thy house, O LORD, for evermore.

1 நீதியைச் சரிக்கட்டுகிற தேவனாகிய கர்த்தாவே, நீதியைச் சரிக்கட்டுகிற தேவனே, பிரகாசியும்.
2 பூமியின் நியாயாதிபதியே, நீர் எழுந்து பெருமைக்காரருக்குப் பதிலளியும்.
3 கர்த்தாவே, துன்மார்க்கர் எதுவரைக்கும் மகிழ்ந்து, துன்மார்க்கர் எதுவரைக்கும் களிகூர்ந்திருப்பார்கள்.
4 எதுவரைக்கும் அக்கிரமக்காரர் யாவரும் வாயாடி கடினமாய்ப் பேசி, பெருமைப் பாராட்டுவார்கள்?
5 கர்த்தாவே, அவர்கள் உமது ஜனத்தை நொறுக்கி, உமது சுதந்தரத்தை ஒடுக்குகிறார்கள்.
6 விதவையையும் பரதேசியையும் கொன்று, திக்கற்ற பிள்ளைகளைக் கொலை செய்து:
7 கர்த்தர் பாரார், யாக்கோபின் தேவன் கவனியார் என்று சொல்லுகிறார்கள்.
8 ஜனத்தில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்; மூடரே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்?
9 காதை உண்டாக்கினவர் கேளாரோ? கண்ணை உருவாக்கினவர் காணாரோ?
10 ஜாதிகளை தண்டிக்கிறவர் கடிந்துகொள்ளாரோ? மனுஷனுக்கு அறிவைப் போதிக்கிறவர் அறியாரோ?
11 மனுஷனுடைய யோசனைகள் வீணென்று கர்த்தர் அறிந்திருக்கிறார்.
12 கர்த்தாவே, துன்மார்க்கனுக்குக் குழிவெட்டப்படும்வரைக்கும், நீர் தீங்குநாட்களில் அமர்ந்திருக்கப்பண்ணி,
13 சிட்சித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான்.
14 கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார்.
15 நியாயம் நீதியினிடமாகத் திரும்பும்; செம்மையான இருதயத்தார் யாவரும் அதைப் பின்பற்றுவார்கள்.
16 துன்மார்க்கருக்கு விரோதமாய் என் பட்சத்தில் எழும்புகிறவன் யார்? அக்கிரமக்காரருக்கு விரோதமாய் என் பட்சத்தில் நிற்பவன் யார்?
17 கர்த்தர் எனக்குத் துணையாயிராவிட்டால், என் ஆத்துமா சீக்கிரமாய் மவுனத்தில் வாசம்பண்ணியிருக்கும்.
18 என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது.
19 என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.
20 தீமையைக் கட்டளையினால் பிறப்பிக்கிற கொடுங்கோலாசனம் உமக்கு இசைந்திருக்குமோ?
21 அவர்கள் நீதிமானுடைய ஆத்துமாவுக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, குற்றமில்லாத இரத்தத்தைக் குற்றப்படுத்துகிறார்கள்.
22 கர்த்தரோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார்.
23 அவர்களுடைய அக்கிரமத்தை அவர்கள்மேல் திருப்பி, அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களைச் சங்கரிப்பார்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் அவர்களைச் சங்கரிப்பார்.


1 O LORD, thou God of vengeance, thou God of vengeance, shine forth!
2 Rise up, O judge of the earth; render to the proud their deserts!
3 O LORD, how long shall the wicked, how long shall the wicked exult?
4 They pour out their arrogant words, they boast, all the evildoers.
5 They crush thy people, O LORD, and afflict thy heritage.
6 They slay the widow and the sojourner, and murder the fatherless;
7 and they say, "The LORD does not see; the God of Jacob does not perceive."
8 Understand, O dullest of the people! Fools, when will you be wise?
9 He who planted the ear, does he not hear? He who formed the eye, does he not see?
10 He who chastens the nations, does he not chastise? He who teaches men knowledge,
11 the LORD, knows the thoughts of man, that they are but a breath.
12 Blessed is the man whom thou dost chasten, O LORD, and whom thou dost teach out of thy law
13 to give him respite from days of trouble, until a pit is dug for the wicked.
14 For the LORD will not forsake his people; he will not abandon his heritage;
15 for justice will return to the righteous, and all the upright in heart will follow it.
16 Who rises up for me against the wicked? Who stands up for me against evildoers?
17 If the LORD had not been my help, my soul would soon have dwelt in the land of silence.
18 When I thought, "My foot slips," thy steadfast love, O LORD, held me up.
19 When the cares of my heart are many, thy consolations cheer my soul.
20 Can wicked rulers be allied with thee, who frame mischief by statute?
21 They band together against the life of the righteous, and condemn the innocent to death.
22 But the LORD has become my stronghold, and my God the rock of my refuge.
23 He will bring back on them their iniquity and wipe them out for their wickedness; the LORD our God will wipe them out.

1 கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடி, நம்முடைய இரட்சணியக் கன்மலையைச் சங்கீர்த்தனம் பண்ணக்கடவோம் வாருங்கள்.
2 துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து, சங்கீதங்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடக்கடவோம்.
3 கர்த்தரே மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார்.
4 பூமியின் ஆழங்கள் அவர் கையிலிருக்கிறது; பர்வதங்களின் உயரங்களும் அவருடையவைகள்.
5 சமுத்திரம் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; வெட்டாந்தரையையும் அவருடைய கரம் உருவாக்கிற்று.
6 நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்.
7 அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே.
8 இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனை நாளிலும் நடந்ததுபோல உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்.
9 அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சைபார்த்து என் கிரியையையும் கண்டார்கள்.
10 நாற்பது வருஷமாய் நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி,
11 என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று, என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன்.


1 O come, let us sing to the LORD; let us make a joyful noise to the rock of our salvation!
2 Let us come into his presence with thanksgiving; let us make a joyful noise to him with songs of praise!
3 For the LORD is a great God, and a great King above all gods.
4 In his hand are the depths of the earth; the heights of the mountains are his also.
5 The sea is his, for he made it; for his hands formed the dry land.
6 O come, let us worship and bow down, let us kneel before the LORD, our Maker!
7 For he is our God, and we are the people of his pasture, and the sheep of his hand. O that today you would hearken to his voice!
8 Harden not your hearts, as at Mer'ibah, as on the day at Massah in the wilderness,
9 when your fathers tested me, and put me to the proof, though they had seen my work.
10 For forty years I loathed that generation and said, "They are a people who err in heart, and they do not regard my ways."
11 Therefore I swore in my anger that they should not enter my rest.

1 கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள், பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைப் பாடுங்கள்.
2 கர்த்தரைப் பாடி, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரித்து, நாளுக்குநாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள்.
3 ஜாதிகளுக்குள் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள்.
4 கர்த்தர் பெரியவரும், மிகவும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.
5 சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர்.
6 மகிமையும் கனமும் அவர் சமுகத்தில் இருக்கிறது, வல்லமையும் மகத்துவமும் அவர் பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது.
7 ஜனங்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள், கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.
8 கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய பிராகாரங்களில் பிரவேசியுங்கள்.
9 பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்; பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்.
10 கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், ஆகையால் பூச்சக்கரம் அசையாதபடி உறுதிப்பட்டிருக்கும்; அவர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்ப்பார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லுங்கள்.
11 வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி, சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்குவதாக.
12 நாடும் அதிலுள்ள யாவும் களிகூருவதாக; அப்பொழுது கர்த்தருக்கு முன்பாக காட்டு விருட்சங்களெல்லாம் கெம்பீரிக்கும்.
13 அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்.


1 O sing to the LORD a new song; sing to the LORD, all the earth!
2 Sing to the LORD, bless his name; tell of his salvation from day to day.
3 Declare his glory among the nations, his marvelous works among all the peoples!
4 For great is the LORD, and greatly to be praised; he is to be feared above all gods.
5 For all the gods of the peoples are idols; but the LORD made the heavens.
6 Honor and majesty are before him; strength and beauty are in his sanctuary.
7 Ascribe to the LORD, O families of the peoples, ascribe to the LORD glory and strength!
8 Ascribe to the LORD the glory due his name; bring an offering, and come into his courts!
9 Worship the LORD in holy array; tremble before him, all the earth!
10 Say among the nations, "The LORD reigns! Yea, the world is established, it shall never be moved; he will judge the peoples with equity."
11 Let the heavens be glad, and let the earth rejoice; let the sea roar, and all that fills it;
12 let the field exult, and everything in it! Then shall all the trees of the wood sing for joy
13 before the LORD, for he comes, for he comes to judge the earth. He will judge the world with righteousness, and the peoples with his truth.

1 கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார்; பூமி பூரிப்பாகி திரளான தீவுகள் மகிழக்கடவது.
2 மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது; நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.
3 அக்கினி அவருக்கு முன்சென்று, சுற்றிலும் இருக்கிற அவருடைய சத்துருக்களைச் சுட்டெரிக்கிறது.
4 அவருடைய மின்னல்கள் பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது; பூமி அதைக் கண்டு அதிர்ந்தது.
5 கர்த்தரின் பிரசன்னத்தினால் பர்வதங்கள் மெழுகுபோல உருகிற்று, சர்வ பூமியினுடைய ஆண்டவரின் பிரசன்னத்தினாலேயே உருகிப்போயிற்று.
6 வானங்கள் அவருடைய நீதியை வெளிப்படுத்துகிறது, சகல ஜனங்களும் அவருடைய மகிமையைக் காண்கிறார்கள்.
7 சொரூபங்களை வணங்கி, விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற யாவரும் வெட்கப்பட்டுப் போவார்களாக; தேவர்களே, நீங்களெல்லாரும் அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
8 சீயோன் கேட்டு மகிழ்ந்தது; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் யூதாவின் குமாரத்திகள் களிகூர்ந்தார்கள்.
9 கர்த்தாவே, பூமி முழுவதுக்கும் நீர் உன்னதமானவர்; எல்லா தேவர்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர்.
10 கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்; அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்.
11 நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது.
12 நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.


1 The LORD reigns; let the earth rejoice; let the many coastlands be glad!
2 Clouds and thick darkness are round about him; righteousness and justice are the foundation of his throne.
3 Fire goes before him, and burns up his adversaries round about.
4 His lightnings lighten the world; the earth sees and trembles.
5 The mountains melt like wax before the LORD, before the Lord of all the earth.
6 The heavens proclaim his righteousness; and all the peoples behold his glory.
7 All worshipers of images are put to shame, who make their boast in worthless idols; all gods bow down before him.
8 Zion hears and is glad, and the daughters of Judah rejoice, because of thy judgments, O God.
9 For thou, O LORD, art most high over all the earth; thou art exalted far above all gods.
10 The LORD loves those who hate evil; he preserves the lives of his saints; he delivers them from the hand of the wicked.
11 Light dawns for the righteous, and joy for the upright in heart.
12 Rejoice in the LORD, O you righteous, and give thanks to his holy name!

1 கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலதுகரமும், அவருடைய பரிசுத்த புயமும், இரட்சிப்பை உண்டாக்கினது.
2 கர்த்தர் தமது இரட்சிப்பைப் பிரஸ்தாபமாக்கி, தமது நீதியை ஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக விளங்கப்பண்ணினார்.
3 அவர் இஸ்ரவேல் குடும்பத்துக்காகத் தமது கிருபையையும் உண்மையையும் நினைவுகூர்ந்தார்; பூமியின் எல்லைகளெல்லாம் நமது தேவனுடைய இரட்சிப்பைக் கண்டது.
4 பூமியின் குடிகளே, நீங்களெல்லாரும் கர்த்தரை நோக்கி ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டுக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.
5 சுரமண்டலத்தால் கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், சுரமண்டலத்தாலும் கீதசத்தத்தாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்.
6 கர்த்தராகிய ராஜாவின் சமுகத்தில் பூரிகைகளாலும் எக்காள சத்தத்தாலும் ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்.
7 சமுத்திரமும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதின் குடிகளும் முழங்குவதாக.
8 கர்த்தருக்கு முன்பாக ஆறுகள் கைகொட்டி பர்வதங்கள் ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடக்கடவது.
9 அவர் பூமியை நியாயந்தீர்க்கவருகிறார், பூலோகத்தை நீதியோடும் ஜனங்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார்.


0 A Psalm.
1 O sing to the LORD a new song, for he has done marvelous things! His right hand and his holy arm have gotten him victory.
2 The LORD has made known his victory, he has revealed his vindication in the sight of the nations.
3 He has remembered his steadfast love and faithfulness to the house of Israel. All the ends of the earth have seen the victory of our God.
4 Make a joyful noise to the LORD, all the earth; break forth into joyous song and sing praises!
5 Sing praises to the LORD with the lyre, with the lyre and the sound of melody!
6 With trumpets and the sound of the horn make a joyful noise before the King, the LORD!
7 Let the sea roar, and all that fills it; the world and those who dwell in it!
8 Let the floods clap their hands; let the hills sing for joy together
9 before the LORD, for he comes to judge the earth. He will judge the world with righteousness, and the peoples with equity.

1 கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், ஜனங்கள் தத்தளிப்பார்களாக; அவர் கேருபீன்களின் மத்தியில் வீற்றிருக்கிறார். பூமி அசைவதாக.
2 கர்த்தர் சீயோனில் பெரியவர், அவர் எல்லா ஜாதிகள்மேலும் உயர்ந்தவர்.
3 மகத்துவமும் பயங்கரமுமான உமது நாமத்தை அவர்கள் துதிப்பார்களாக; அது பரிசுத்தமுள்ளது.
4 ராஜாவின் வல்லமை நீதியில் பிரியப்படுகிறது, தேவரீர் நியாயத்தை நிலைநிறுத்துகிறீர்; நீர் யாக்கோபில் நியாயமும் நீதியும் செய்கிறீர்.
5 நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவர் பாதபடியிலே பணியுங்கள்; அவர் பரிசுத்தமுள்ளவர்.
6 அவருடைய ஆசாரியரில் மோசேயும், ஆரோனும், அவர் நாமத்தைப்பற்றிக் கூப்பிடுகிறவர்களில் சாமுவேலும், கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர் அவர்களுக்கு மறு உத்தரவு அருளினார்.
7 மேகஸ்தம்பத்திலிருந்து அவர்களோடே பேசினார்; அவர்கள் அவருடைய சாட்சிப்பிரமாணங்களையும் அவர் தங்களுக்குக் கொடுத்த கட்டளையையும் கைக்கொண்டார்கள்.
8 எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் அவர்களுக்கு உத்தரவு அருளினீர்; நீர் அவர்கள் கிரியைகளினிமித்தம் நீதி சரிக்கட்டினபோதிலும், அவர்களுக்கு, மன்னிக்கிற தேவனாயிருந்தீர்.
9 நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவருடைய பரிசுத்த பர்வதத்திற்கு நேராகப் பணியுங்கள்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் பரிசுத்தமுள்ளவர்.


1 The LORD reigns; let the peoples tremble! He sits enthroned upon the cherubim; let the earth quake!
2 The LORD is great in Zion; he is exalted over all the peoples.
3 Let them praise thy great and terrible name! Holy is he!
4 Mighty King, lover of justice, thou hast established equity; thou hast executed justice and righteousness in Jacob.
5 Extol the LORD our God; worship at his footstool! Holy is he!
6 Moses and Aaron were among his priests, Samuel also was among those who called on his name. They cried to the LORD, and he answered them.
7 He spoke to them in the pillar of cloud; they kept his testimonies, and the statutes that he gave them.
8 O LORD our God, thou didst answer them; thou wast a forgiving God to them, but an avenger of their wrongdoings.
9 Extol the LORD our God, and worship at his holy mountain; for the LORD our God is holy!

1 பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.
2 மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.
3 கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும் அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.
4 அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.
5 கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.


0 A Psalm for the thank offering.
1 Make a joyful noise to the LORD, all the lands!
2 Serve the LORD with gladness! Come into his presence with singing!
3 Know that the LORD is God! It is he that made us, and we are his; we are his people, and the sheep of his pasture.
4 Enter his gates with thanksgiving, and his courts with praise! Give thanks to him, bless his name!
5 For the LORD is good; his steadfast love endures for ever, and his faithfulness to all generations.

1 இரக்கத்தையும் நியாயத்தையும் குறித்துப் பாடுவேன்; கர்த்தாவே, உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
2 உத்தமமான வழியிலே விவேகமாய் நடப்பேன்; எப்பொழுது என்னிடத்தில் வருவீர்! என் வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன்.
3 தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன்; வழி விலகுகிறவர்களின் செய்கையை வெறுக்கிறேன்; அது என்னைப் பற்றாது.
4 மாறுபாடான இருதயம் என்னை விட்டு அகலவேண்டும்; பொல்லாதவனை அறியமாட்டேன்.
5 பிறனை இரகசியமாய் அவதூறுபண்ணுகிறவனைச் சங்கரிப்பேன்; மேட்டிமைக் கண்ணனையும் பெருநெஞ்சுள்ளவனையும் பொறுக்கமாட்டேன்.
6 தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடே வாசம்பண்ணும்படி என் கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கும்; உத்தமமான வழியில் நடக்கிறவன் என்னைச் சேவிப்பான்.
7 கபடுசெய்கிறவன் என் வீட்டுக்குள் இருப்பதில்லை; பொய்சொல்லுகிறவன் என் கண்முன் நிலைப்பதில்லை.
8 அக்கிரமக்காரர் ஒருவரும் கர்த்தருடைய நகரத்தில் இராதபடி வேர் அறுப்புண்டுபோக, தேசத்திலுள்ள அக்கிரமக்காரர் யாவரையும் அதிகாலமே சங்கரிப்பேன்.


0 A Psalm of David.
1 I will sing of loyalty and of justice; to thee, O LORD, I will sing.
2 I will give heed to the way that is blameless. Oh when wilt thou come to me? I will walk with integrity of heart within my house;
3 I will not set before my eyes anything that is base. I hate the work of those who fall away; it shall not cleave to me.
4 Perverseness of heart shall be far from me; I will know nothing of evil.
5 Him who slanders his neighbor secretly I will destroy. The man of haughty looks and arrogant heart I will not endure.
6 I will look with favor on the faithful in the land, that they may dwell with me; he who walks in the way that is blameless shall minister to me.
7 No man who practices deceit shall dwell in my house; no man who utters lies shall continue in my presence.
8 Morning by morning I will destroy all the wicked in the land, cutting off all the evildoers from the city of the LORD.

1 கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேளும், என் கூப்பிடுதல் உம்மிடத்தில் சேர்வதாக.
2 என் ஆபத்துநாளிலே உமது முகத்தை எனக்கு மறையாதேயும்; உமது செவியை என்னிடத்தில் சாயும்; நான் கூப்பிடுகிற நாளிலே எனக்குத் தீவிரமாய் உத்தரவு அருளிச்செய்யும்.
3 என் நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது; என் எலும்புகள் ஒரு கொள்ளியைப்போல எரியுண்டது.
4 என் இருதயம் புல்லைப்போல் வெட்டுண்டு உலர்ந்தது; என் போஜனத்தைப் புசிக்க மறந்தேன்.
5 என் பெருமூச்சின் சத்தத்தினால் என் எலும்புகள் என் மாம்சத்தோடு ஒட்டிக்கொள்ளுகிறது.
6 வனாந்தர நாரைக்கு ஒப்பானேன்; பாழான இடங்களில் தங்கும் ஆந்தையைப்போலானேன்.
7 நான் நித்திரையில்லாமல் வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப்போல் இருக்கிறேன்.
8 நாடோறும் என் சத்துருக்கள் என்னை நிந்திக்கிறார்கள்; என்மேல் மூர்க்க வெறிகொண்டவர்கள் எனக்கு விரோதமாய்ச் சாபம் இடுகிறார்கள்.
9 நீர் என்னை உயரத்தூக்கி, தாழத்தள்ளினீர், உமது சினத்திற்கும் கடுங்கோபத்திற்கும் உள்ளானேன்.
10 ஆதலால் நான் சாம்பலை அப்பமாகப் புசித்து, என் பானங்களைக் கண்ணீரோடே கலக்கிறேன்.
11 என் நாட்கள் சாய்ந்துபோகிற நிழலைப்போலிருக்கிறது; புல்லைப்போல் உலர்ந்துபோகிறேன்.
12 கர்த்தராகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய பேர் பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறையாக நிற்கும்.
13 தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்; அதற்குத் தயைசெய்யுங்காலமும், அதற்காகக் குறித்த நேரமும் வந்தது.
14 உம்முடைய ஊழியக்காரர் அதின் கல்லுகள்மேல் வாஞ்சைவைத்து அதின் மண்ணுக்குப் பரிதபிக்கிறார்கள்.
15 கர்த்தர் சீயோனைக் கட்டி தமது மகிமையில் வெளிப்படுவார்.
16 திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம்பண்ணாமல், அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார்.
17 அப்பொழுது ஜாதிகள் கர்த்தருடைய நாமத்துக்கும் பூமியிலுள்ள ராஜாக்களெல்லாரும் உம்முடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்.
18 பின்சந்ததிக்காக இது எழுதப்படும்; சிருஷ்டிக்கப்படும் ஜனம் கர்த்தரைத் துதிக்கும்.
19 கர்த்தர் கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கவும், கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும்,
20 தம்முடைய உயர்ந்த பரிசுத்தஸ்தலத்திலிருந்து பார்த்து, வானங்களிலிருந்து பூமியின்மேல் கண்ணோக்கமானார்.
21 கர்த்தருக்கு ஆராதனைசெய்ய ஜனங்களும் ராஜ்யங்களும் ஏகமாய்க் கூடிக்கொள்ளுகையில்,
22 சீயோனில் கர்த்தருடைய நாமத்தையும், எருசலேமில் அவருடைய துதியையும் பிரஸ்தாபப்படுத்துவார்கள்.
23 வழியிலே என் பெலனை அவர் ஒடுக்கி, என் நாட்களைக் குறுகப்பண்ணினார்.
24 அப்பொழுது நான்: தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாதேயும்; உம்முடைய வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.
25 நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியையாயிருக்கிறது.
26 அவைகள் அழிந்துபோம். நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போல் பழமையாய்ப்போம்; அவைகளை ஒரு சால்வையைப்போல் மாற்றுவீர், அப்பொழுது மாறிப்போம்.
27 நீரோ மாறாதவராயிருக்கிறீர்; உமது ஆண்டுகள் முடிந்துபோவதில்லை.
28 உமது அடியாரின் பிள்ளைகள் தாபரித்திருப்பார்கள்; அவர்கள் சந்ததி உமக்கு முன்பாக நிலைபெற்றிருக்கும் என்று சொன்னேன்.


0 A prayer of one afflicted, when he is faint and pours out his complaint before the LORD.
1 Hear my prayer, O LORD; let my cry come to thee!
2 Do not hide thy face from me in the day of my distress! Incline thy ear to me; answer me speedily in the day when I call!
3 For my days pass away like smoke, and my bones burn like a furnace.
4 My heart is smitten like grass, and withered; I forget to eat my bread.
5 Because of my loud groaning my bones cleave to my flesh.
6 I am like a vulture of the wilderness, like an owl of the waste places;
7 I lie awake, I am like a lonely bird on the housetop.
8 All the day my enemies taunt me, those who deride me use my name for a curse.
9 For I eat ashes like bread, and mingle tears with my drink,
10 because of thy indignation and anger; for thou hast taken me up and thrown me away.
11 My days are like an evening shadow; I wither away like grass.
12 But thou, O LORD, art enthroned for ever; thy name endures to all generations.
13 Thou wilt arise and have pity on Zion; it is the time to favor her; the appointed time has come.
14 For thy servants hold her stones dear, and have pity on her dust.
15 The nations will fear the name of the LORD, and all the kings of the earth thy glory.
16 For the LORD will build up Zion, he will appear in his glory;
17 he will regard the prayer of the destitute, and will not despise their supplication.
18 Let this be recorded for a generation to come, so that a people yet unborn may praise the LORD:
19 that he looked down from his holy height, from heaven the LORD looked at the earth,
20 to hear the groans of the prisoners, to set free those who were doomed to die;
21 that men may declare in Zion the name of the LORD, and in Jerusalem his praise,
22 when peoples gather together, and kingdoms, to worship the LORD.
23 He has broken my strength in mid-course; he has shortened my days.
24 "O my God," I say, "take me not hence in the midst of my days, thou whose years endure throughout all generations!"
25 Of old thou didst lay the foundation of the earth, and the heavens are the work of thy hands.
26 They will perish, but thou dost endure; they will all wear out like a garment. Thou changest them like raiment, and they pass away;
27 but thou art the same, and thy years have no end.
28 The children of thy servants shall dwell secure; their posterity shall be established before thee.

1 என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி.
2 என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.
3 அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி,
4 உன் பிராணனை அழிவுக்கு விலக்கிமீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,
5 நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயதுபோலாகிறது.
6 ஒடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார்.
7 அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது கிரியைகளை இஸ்ரவேல் புத்திரருக்கும் தெரியப்பண்ணினார்.
8 கர்த்தர் உருக்கமும், இரக்கமும் நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.
9 அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார்.
10 அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்.
11 பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது.
12 மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்.
13 தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.
14 நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.
15 மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது, வெளியின் புஷ்பத்தைப்போல பூக்கிறான்.
16 காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று, அது இருந்த இடமும் இனி அதை அறியாது.
17 கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது.
18 அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது.
19 கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அவருடைய ராஜரிகம் சர்வத்தையும் ஆளுகிறது.
20 கர்த்தருடைய வார்த்தையைக்கேட்டு, அவருடைய வசனத்தின்படி செய்கிற பலத்த சவுரியவான்களாகிய அவருடைய தூதர்களே, அவரை ஸ்தோத்திரியுங்கள்.
21 கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்து, அவர் பணிவிடைக்காரராயிருக்கிற அவருடைய சர்வசேனைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்.
22 கர்த்தர் ஆளுகிற எவ்விடங்களிலுமுள்ள அவருடைய சகல கிரியைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்; என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி.


0 A Psalm of David.
1 Bless the LORD, O my soul; and all that is within me, bless his holy name!
2 Bless the LORD, O my soul, and forget not all his benefits,
3 who forgives all your iniquity, who heals all your diseases,
4 who redeems your life from the Pit, who crowns you with steadfast love and mercy,
5 who satisfies you with good as long as you live so that your youth is renewed like the eagle's.
6 The LORD works vindication and justice for all who are oppressed.
7 He made known his ways to Moses, his acts to the people of Israel.
8 The LORD is merciful and gracious, slow to anger and abounding in steadfast love.
9 He will not always chide, nor will he keep his anger for ever.
10 He does not deal with us according to our sins, nor requite us according to our iniquities.
11 For as the heavens are high above the earth, so great is his steadfast love toward those who fear him;
12 as far as the east is from the west, so far does he remove our transgressions from us.
13 As a father pities his children, so the LORD pities those who fear him.
14 For he knows our frame; he remembers that we are dust.
15 As for man, his days are like grass; he flourishes like a flower of the field;
16 for the wind passes over it, and it is gone, and its place knows it no more.
17 But the steadfast love of the LORD is from everlasting to everlasting upon those who fear him, and his righteousness to children's children,
18 to those who keep his covenant and remember to do his commandments.
19 The LORD has established his throne in the heavens, and his kingdom rules over all.
20 Bless the LORD, O you his angels, you mighty ones who do his word, hearkening to the voice of his word!
21 Bless the LORD, all his hosts, his ministers that do his will!
22 Bless the LORD, all his works, in all places of his dominion. Bless the LORD, O my soul!

1 என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் தேவனாகிய கர்த்தாவே, நீர் மிகவும் பெரியவராயிருக்கிறீர்; மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்துகொண்டிருக்கிறீர்.
2 ஒளியை வஸ்திரமாகத் தரித்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர்.
3 தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மச்சுப்பாவி, மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய செட்டைகளின்மேல் செல்லுகிறார்.
4 தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினி ஜுவாலைகளாகவும் செய்கிறார்.
5 பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதை ஸ்தாபித்தார்.
6 அதை வஸ்திரத்தினால் மூடுவதுபோல ஆழத்தினால் மூடினீர்; பர்வதங்களின்மேல் தண்ணீர்கள் நின்றது.
7 அவைகள் உமது கண்டிதத்தால் விலகியோடி, உமது குமுறலின் சத்தத்தால் விரைந்துபோயிற்று.
8 அவைகள் மலைகளில் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, நீர் அவைகளுக்கு ஏற்படுத்தின இடத்தில் சென்றது.
9 அவைகள் திரும்பவும் வந்து பூமியை மூடிக்கொள்ளாதபடி கடவாதிருக்கும் எல்லையை அவைகளுக்கு ஏற்படுத்தினீர்.
10 அவர் பள்ளத்தாக்குகளில் ஊற்றுகளை வரவிடுகிறார், அவைகள் மலைகள் நடுவே ஓடுகிறது.
11 அவைகள் வெளியின் ஜீவன்களுக்கெல்லாம் தண்ணீர் கொடுக்கும்; அங்கே காட்டுக்கழுதைகள் தங்கள் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும்.
12 அவைகளின் ஓரமாய் ஆகாயத்துப்பறவைகள் சஞ்சரித்து, கிளைகள்மேலிருந்து பாடும்.
13 தம்முடைய மேல்வீடுகளிலிருந்து பர்வதங்களுக்குத் தண்ணீர் இறைக்கிறார்; உமது கிரியைகளின் பலனாலே பூமி திருப்தியாயிருக்கிறது.
14 பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி அவர் மிருகங்களுக்குப் புல்லையும் மனுஷருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார்.
15 மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சரசத்தையும், அவனுக்கு முகக்களையை உண்டுபண்ணும் எண்ணெயையும், மனுஷனுடைய இருதயத்தை ஆதரிக்கும் ஆகாரத்தையும் விளைவிக்கிறார்.
16 கர்த்தருடைய விருட்சங்களும், அவர் நாட்டின லீபனோனின் கேதுருக்களும் சாரத்தினால் நிறைந்திருக்கும்.
17 அங்கே குருவிகள் கூடுகட்டும்; தேவதாருவிருட்சங்கள் கொக்குகளின் குடியிருப்பு.
18 உயர்ந்த பர்வதங்கள் வரையாடுகளுக்கும் கன்மலைகள் குழிமுசல்களுக்கும் அடைக்கலம்.
19 சந்திரனைக் காலக்குறிப்புகளுக்காகப் படைத்தார்; சூரியன் தன் அஸ்தமனத்தை அறியும்.
20 நீர் இருளைக் கட்டளையிடுகிறீர், இராக்காலமாகும்; அதிலே சகல காட்டு ஜீவன்களும் நடமாடும்.
21 பாலசிங்கங்கள் இரைக்காக கெர்ச்சித்து, தேவனால் தங்களுக்கு ஆகாரம் கிடைக்கும்படித் தேடும்.
22 சூரியன் உதிக்கையில் அவைகள் ஒதுங்கி, தங்கள் தாபரங்களில் படுத்துக்கொள்ளும்.
23 அப்பொழுது மனுஷன் சாயங்காலமட்டும் தன் வேலைக்கும், தன்பண்ணைக்கும் புறப்படுகிறான்.
24 கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது.
25 பெரிதும் விஸ்தாரமுமான இந்தச் சமுத்திரமும் அப்படியே நிறைந்திருக்கிறது; அதிலே சஞ்சரிக்கும் சிறியவைகளும் பெரியவைகளுமான எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு.
26 அதிலே கப்பல்கள் ஓடும்; அதிலே விளையாடும்படி நீர் உண்டாக்கின திமிங்கிலங்களும் உண்டு.
27 ஏற்றவேளையில் ஆகாரத்தைத் தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும்.
28 நீர் கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும்; நீர் உம்முடைய கையைத்திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும்.
29 நீர் உமது முகத்தை மறைக்க திகைக்கும்; நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் மாண்டு தங்கள் மண்ணுக்குத் திரும்பும்.
30 நீர் உம்முடைய ஆவியை அனுப்பும்போது, அவைகள் சிருஷ்டிக்கப்படும்; நீர் பூமியின் ரூபத்தையும் புதிதாக்குகிறீர்.
31 கர்த்தருடைய மகிமை என்றென்றைக்கும் விளங்கும்; கர்த்தர் தம்முடைய கிரியைகளிலே மகிழுவார்.
32 அவர் பூமியை நோக்கிப்பார்க்க அது அதிரும்; அவர் பர்வதங்களைத்தொட அவைகள் புகையும்.
33 நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
34 நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும்; நான் கர்த்தருக்குள் மகிழுவேன்.
35 பாவிகள் பூமியிலிருந்து நிர்மூலமாகி, துன்மார்க்கர் இனி இராமற்போவார்கள். என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி, அல்லேலுூயா.


1 Bless the LORD, O my soul! O LORD my God, thou art very great! Thou art clothed with honor and majesty,
2 who coverest thyself with light as with a garment, who hast stretched out the heavens like a tent,
3 who hast laid the beams of thy chambers on the waters, who makest the clouds thy chariot, who ridest on the wings of the wind,
4 who makest the winds thy messengers, fire and flame thy ministers.
5 Thou didst set the earth on its foundations, so that it should never be shaken.
6 Thou didst cover it with the deep as with a garment; the waters stood above the mountains.
7 At thy rebuke they fled; at the sound of thy thunder they took to flight.
8 The mountains rose, the valleys sank down to the place which thou didst appoint for them.
9 Thou didst set a bound which they should not pass, so that they might not again cover the earth.
10 Thou makest springs gush forth in the valleys; they flow between the hills,
11 they give drink to every beast of the field; the wild asses quench their thirst.
12 By them the birds of the air have their habitation; they sing among the branches.
13 From thy lofty abode thou waterest the mountains; the earth is satisfied with the fruit of thy work.
14 Thou dost cause the grass to grow for the cattle, and plants for man to cultivate, that he may bring forth food from the earth,
15 and wine to gladden the heart of man, oil to make his face shine, and bread to strengthen man's heart.
16 The trees of the LORD are watered abundantly, the cedars of Lebanon which he planted.
17 In them the birds build their nests; the stork has her home in the fir trees.
18 The high mountains are for the wild goats; the rocks are a refuge for the badgers.
19 Thou hast made the moon to mark the seasons; the sun knows its time for setting.
20 Thou makest darkness, and it is night, when all the beasts of the forest creep forth.
21 The young lions roar for their prey, seeking their food from God.
22 When the sun rises, they get them away and lie down in their dens.
23 Man goes forth to his work and to his labor until the evening.
24 O LORD, how manifold are thy works! In wisdom hast thou made them all; the earth is full of thy creatures.
25 Yonder is the sea, great and wide, which teems with things innumerable, living things both small and great.
26 There go the ships, and Leviathan which thou didst form to sport in it.
27 These all look to thee, to give them their food in due season.
28 When thou givest to them, they gather it up; when thou openest thy hand, they are filled with good things.
29 When thou hidest thy face, they are dismayed; when thou takest away their breath, they die and return to their dust.
30 When thou sendest forth thy Spirit, they are created; and thou renewest the face of the ground.
31 May the glory of the LORD endure for ever, may the LORD rejoice in his works,
32 who looks on the earth and it trembles, who touches the mountains and they smoke!
33 I will sing to the LORD as long as I live; I will sing praise to my God while I have being.
34 May my meditation be pleasing to him, for I rejoice in the LORD.
35 Let sinners be consumed from the earth, and let the wicked be no more! Bless the LORD, O my soul! Praise the LORD!

1 கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள், அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.
2 அவரைப் பாடி அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.
3 அவருடைய பரிசுத்த நாமத்தைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.
4 கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்.
5 அவருடைய தாசனாகிய ஆபிரகாமின் சந்ததியே! அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் புத்திரரே!
6 அவர் செய்த அதிசயங்களையும் அவருடைய அற்புதங்களையும், அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள்.
7 அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர், அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும்.
8 ஆயிரந்தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வாக்கையும், ஆபிரகாமோடே அவர் பண்ணின உடன்படிக்கையையும்,
9 அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருக்கிறார்.
10 அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், இஸ்ரவேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி:
11 உங்கள் சுதந்தரபாகமான கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.
12 அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத் தொகைக்குட்பட்ட சொற்ப ஜனங்களும் பரதேசிகளுமாயிருந்தார்கள்.
13 அவர்கள் ஒரு ஜனத்தைவிட்டு மறு ஜனத்தண்டைக்கும், ஒரு ராஜ்யத்தைவிட்டு மறு தேசத்தாரண்டைக்கும் போனார்கள்.
14 அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்கள்நிமித்தம் ராஜாக்களைக் கடிந்து கொண்டு:
15 நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய ராஜாக்களுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார்.
16 அவர் தேசத்திலே பஞ்சத்தை வருவித்து, ஆகாரமென்னும் ஆதரவு கோலை முற்றிலும் முறித்தார்.
17 அவர்களுக்கு முன்னாலே ஒரு புருஷனை அனுப்பினார்; யோசேப்பு சிறையாக விற்கப்பட்டான்.
18 அவன் கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள், அவன் பிராணன் இரும்பில் அடைபட்டிருந்தது.
19 கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது.
20 ராஜா ஆள் அனுப்பி, அவனைக் கட்டவிழ்க்கச்சொன்னான்; ஜனங்களின் அதிபதி அவனை விடுதலைபண்ணினான்.
21 தன் பிரபுக்களை அவன் மனதின்படி கட்டவும், தன் மூப்பர்களை ஞானிகளாக்கவும்,
22 அவனைத் தன் வீட்டுக்கு ஆண்டவனும், தன் ஆஸ்திக்கெல்லாம் அதிபதியுமாக்கினான்.
23 அப்பொழுது இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்; யாக்கோபு காமின் தேசத்திலே பரதேசியாயிருந்தான்.
24 அவர் தம்முடைய ஜனங்களை மிகவும் பலுகப்பண்ணி, அவர்களுடைய சத்துருக்களைப்பார்க்கிலும் அவர்களைப் பலவான்களாக்கினார்.
25 தம்முடைய ஜனங்களைப் பகைக்கவும், தம்முடைய ஊழியக்காரரை வஞ்சனையாய் நடத்தவும், அவர்களுடைய இருதயத்தை மாற்றினார்.
26 தம்முடைய தாசனாகிய மோசேயையும் தாம் தெரிந்துகொண்ட ஆரோனையும் அனுப்பினார்.
27 இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும், காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள்.
28 அவர் இருளை அனுப்பி அந்தகாரத்தை உண்டாக்கினார்; அவருடைய வார்த்தைகளை எதிர்ப்பாரில்லை.
29 அவர்களுடைய தண்ணீர்களை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய மச்சங்களைச் சாகப்பண்ணினார்.
30 அவர்களுடைய தேசம் தவளைகளைத் திரளாய்ப் பிறப்பித்தது; அவர்களுடைய ராஜாக்களின் அறைவீடுகளிலும் அவைகள் வந்தது.
31 அவர் கட்டளையிட, அவர்களுடைய எல்லைகளில் எங்கும் வண்டுகளும் பேன்களும் வந்தது.
32 அவர்களுடைய மழைகளைக் கல்மழையாக்கி, அவர்களுடைய தேசத்திலே ஜுவாலிக்கிற அக்கினியை வரப்பண்ணினார்.
33 அவர்களுடைய திராட்சச் செடிகளையும் அத்திமரங்களையும் அழித்து, அவர்களுடைய எல்லைகளிலுள்ள மரங்களையும் முறித்தார்.
34 அவர் கட்டளையிட, எண்ணிமுடியாத வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் வந்து,
35 அவர்களுடைய தேசத்திலுள்ள சகல பூண்டுகளையும் அரித்து, அவர்களுடைய நிலத்தின் கனியைத் தின்றுபோட்டது.
36 அவர்களுடைய தேசத்திலே தலைச்சன்கள் அனைத்தையும், அவர்களுடைய பெலனில் முதற்பெலனான யாவரையும் சங்கரித்தார்.
37 அப்பொழுது அவர்களை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படப்பண்ணினார்; அவர்கள் கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை.
38 எகிப்தியர் அவர்களுக்குப் பயந்ததினால் அவர்கள் புறப்பட்டபோது மகிழ்ந்தார்கள்.
39 அவர் மேகத்தை மறைவுக்காக விரித்து, இரவை வெளிச்சமாக்குகிறதற்காக அக்கினியையும் தந்தார்.
40 கேட்டார்கள், அவர் காடைகளை வரப்பண்ணினார்; வான அப்பத்தினாலும் அவர்களைத் திருப்தியாக்கினார்.
41 கன்மலையைத் திறந்தார், தண்ணீர்கள் புறப்பட்டு வறண்ட வெளிகளில் ஆறாய் ஓடிற்று.
42 அவர் தம்முடைய பரிசுத்த வாக்குத்தத்தத்தையும், தம்முடைய தாசனாகிய ஆபிரகாமையும் நினைத்து,
43 தம்முடைய ஜனத்தைக் களிப்போடும் தாம் தெரிந்துகொண்டவர்களைக் கெம்பீர சத்தத்தோடும் புறப்படப்பண்ணினார்.
44 தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும், தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படிக்கும்,
45 அவர்களுக்குப் புறஜாதிகளுடைய தேசங்களைக் கொடுத்தார்; அந்நிய ஜனங்களுடைய பிரயாசத்தின்பலனைச் சுதந்தரித்துக்கொண்டார்கள். அல்லேலுூயா.


1 O give thanks to the LORD, call on his name, make known his deeds among the peoples!
2 Sing to him, sing praises to him, tell of all his wonderful works!
3 Glory in his holy name; let the hearts of those who seek the LORD rejoice!
4 Seek the LORD and his strength, seek his presence continually!
5 Remember the wonderful works that he has done, his miracles, and the judgments he uttered,
6 O offspring of Abraham his servant, sons of Jacob, his chosen ones!
7 He is the LORD our God; his judgments are in all the earth.
8 He is mindful of his covenant for ever, of the word that he commanded, for a thousand generations,
9 the covenant which he made with Abraham, his sworn promise to Isaac,
10 which he confirmed to Jacob as a statute, to Israel as an everlasting covenant,
11 saying, "To you I will give the land of Canaan as your portion for an inheritance."
12 When they were few in number, of little account, and sojourners in it,
13 wandering from nation to nation, from one kingdom to another people,
14 he allowed no one to oppress them; he rebuked kings on their account,
15 saying, "Touch not my anointed ones, do my prophets no harm!"
16 When he summoned a famine on the land, and broke every staff of bread,
17 he had sent a man ahead of them, Joseph, who was sold as a slave.
18 His feet were hurt with fetters, his neck was put in a collar of iron;
19 until what he had said came to pass the word of the LORD tested him.
20 The king sent and released him, the ruler of the peoples set him free;
21 he made him lord of his house, and ruler of all his possessions,
22 to instruct his princes at his pleasure, and to teach his elders wisdom.
23 Then Israel came to Egypt; Jacob sojourned in the land of Ham.
24 And the LORD made his people very fruitful, and made them stronger than their foes.
25 He turned their hearts to hate his people, to deal craftily with his servants.
26 He sent Moses his servant, and Aaron whom he had chosen.
27 They wrought his signs among them, and miracles in the land of Ham.
28 He sent darkness, and made the land dark; they rebelled against his words.
29 He turned their waters into blood, and caused their fish to die.
30 Their land swarmed with frogs, even in the chambers of their kings.
31 He spoke, and there came swarms of flies, and gnats throughout their country.
32 He gave them hail for rain, and lightning that flashed through their land.
33 He smote their vines and fig trees, and shattered the trees of their country.
34 He spoke, and the locusts came, and young locusts without number;
35 which devoured all the vegetation in their land, and ate up the fruit of their ground.
36 He smote all the first-born in their land, the first issue of all their strength.
37 Then he led forth Israel with silver and gold, and there was none among his tribes who stumbled.
38 Egypt was glad when they departed, for dread of them had fallen upon it.
39 He spread a cloud for a covering, and fire to give light by night.
40 They asked, and he brought quails, and gave them bread from heaven in abundance.
41 He opened the rock, and water gushed forth; it flowed through the desert like a river.
42 For he remembered his holy promise, and Abraham his servant.
43 So he led forth his people with joy, his chosen ones with singing.
44 And he gave them the lands of the nations; and they took possession of the fruit of the peoples' toil,
45 to the end that they should keep his statutes, and observe his laws. Praise the LORD!

1 அல்லேலுூயா, கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர். அவர் கிருபை என்றுமுள்ளது.
2 கர்த்தருடைய வல்லமையான செய்கைகளைச் சொல்லி, அவருடைய துதியையெல்லாம் பிரஸ்தாபப்படுத்தத்தக்கவன் யார்?
3 நியாயத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும், எக்காலத்திலும் நீதியைச்செய்கிறவர்களும் பாக்கியவான்கள்.
4 கர்த்தாவே, நீர் தெரிந்துகொண்டவர்களின் நன்மையை நான் கண்டு உம்முடைய ஜாதியின் மகிழ்ச்சியால் மகிழ்ந்து, உம்முடைய சுதந்தரத்தோடே மேன்மைபாராட்டும்படிக்கு,
5 உம்முடைய ஜனங்களுக்கு நீர் பாராட்டும் கிருபையின்படி என்னை நினைத்து, உம்முடைய இரட்சிப்பினால் என்னைச் சந்தித்தருளும்.
6 எங்கள் பிதாக்களோடுங்கூட நாங்களும் பாவஞ்செய்து அக்கிரமம் நடப்பித்து, ஆகாமியம்பண்ணினோம்.
7 எங்கள் பிதாக்கள் எகிப்திலே உம்முடைய அதிசயங்களை உணராமலும், உம்முடைய கிருபைகளின் திரட்சியை நினையாமலும் போய், சிவந்தசமுத்திர ஓரத்திலே கலகம்பண்ணினார்கள்.
8 ஆனாலும் அவர் தமது வல்லமையை வெளிப்படுத்தும்படி தம்முடைய நாமத்தினிமித்தம் அவர்களை இரட்சித்தார்.
9 அவர் சிவந்த சமுத்திரத்தை அதட்டினார், அது வற்றிப்போயிற்று; தரையில் நடக்கிறதுபோல அவர்களை ஆழங்களில் நடந்துபோகப்பண்ணினார்.
10 பகைஞன் கைக்கு அவர்களை விலக்கி இரட்சித்து, சத்துருவின் கைக்கு அவர்களை விலக்கி மீட்டார்.
11 அவர்கள் சத்துருக்களைத் தண்ணீர்கள் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனும் மீந்திருக்கவில்லை.
12 அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை விசுவாசித்து, அவருடைய துதியைப் பாடினார்கள்.
13 ஆனாலும் சீக்கிரமாய் அவருடைய கிரியைகளை மறந்தார்கள்; அவருடைய ஆலோசனைக்கு அவர்கள் காத்திராமல்,
14 வனாந்தரத்திலே இச்சையுள்ளவர்களாகி, அவாந்தரவெளியிலே தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.
15 அப்பொழுது அவர்கள் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்கள் ஆத்துமாக்களிலோ இளைப்பை அனுப்பினார்.
16 பாளயத்தில் அவர்கள் மோசேயின்மேலும், கர்த்தருடைய பரிசுத்தனாகிய ஆரோனின்மேலும் பொறாமைகொண்டார்கள்.
17 பூமி பிளந்து தாத்தானை விழுங்கி, அபிராமின் கூட்டத்தாரை மூடிப்போட்டது.
18 அவர்கள் கூட்டத்தில் அக்கினிபற்றியெரிந்தது; அக்கினி ஜுவாலை துன்மார்க்கரை எரித்துப்போட்டது.
19 அவர்கள் ஓரேபிலே ஒரு கன்றுக்குட்டியையுண்டாக்கி, வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தை நமஸ்கரித்தார்கள்.
20 தங்கள் மகிமையைப் புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள்.
21 எகிப்திலே பெரிய கிரியைகளையும், காமின் தேசத்திலே அதிசயங்களையும் சிவந்த சமுத்திரத்தண்டையிலே பயங்கரமானவைகளையும் செய்தவராகிய,
22 தங்கள் இரட்சகரான தேவனை மறந்தார்கள்.
23 ஆகையால், அவர்களை நாசம்பண்ணுவேன் என்றார்; அப்பொழுது அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட மோசே அவர்களை அவர் அழிக்காதபடிக்கு அவருடைய உக்கிரத்தை ஆற்றும்பொருட்டு, அவருக்கு முன்பாகத் திறப்பின் வாயிலே நின்றான்.
24 அவருடைய வார்த்தையை விசுவாசியாமல், இச்சிக்கப்படத்தக்க தேசத்தை அசட்டைபண்ணினார்கள்.
25 கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடாமல், தங்கள் கூடாரங்களில் முறுமுறுத்தார்கள்.
26 அப்பொழுது அவர்கள் வனாந்தரத்திலே மடியவும், அவர்கள் சந்ததி ஜாதிகளுக்குள்ளே அழியவும்,
27 அவர்கள் பற்பல தேசங்களிலே சிதறடிக்கப்படவும், அவர்களுக்கு விரோதமாகத் தம்முடைய கையை எடுத்தார்.
28 அவர்கள் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டு, ஜீவனில்லாதவைக்கு இட்ட பலிகளைப் புசித்து,
29 தங்கள் கிரியைகளினால் அவருக்குக் கோபம் மூட்டினார்கள்; ஆகையால் வாதை அவர்களுக்குள் புகுந்தது.
30 அப்பொழுது பினெகாஸ் எழுந்து நின்று நியாயஞ்செய்தான்; அதினால் வாதை நிறுத்தப்பட்டது.
31 அது தலைமுறை தலைமுறையாக என்றென்றைக்கும் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
32 மேரிபாவின் தண்ணீர்களிடத்திலும் அவருக்குக் கடுங்கோபம் மூட்டினார்கள்; அவர்கள் நிமித்தம் மோசேக்கும் பொல்லாப்பு நடந்தது.
33 அவர்கள் அவன் ஆவியை விசனப்படுத்தினதினாலே, தன் உதடுகளில் பதறிப்பேசினான்.
34 கர்த்தர் தங்களுக்குச் சொன்னபடி, அவர்கள் அந்த ஜனங்களை அழிக்கவில்லை.
35 ஜாதிகளுடனே கலந்து, அவர்கள் கிரியைகளைக் கற்று;
36 அவர்களுடைய விக்கிரகங்களைச் சேவித்தார்கள்; அவைகள் அவர்களுக்குக் கண்ணியாயிற்று.
37 அவர்கள் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் பிசாசுக்காகப் பலியிட்டார்கள்.
38 அவர்கள் கானான்தேசத்து விக்கிரகங்களுக்குப் பலியிட்டு, தங்கள் குமாரர் குமாரத்திகளுடைய குற்றமில்லாத இரத்தத்தை சிந்தினார்கள்; தேசம் இரத்தத்தால் தீட்டுப்பட்டது.
39 அவர்கள் தங்கள் கிரியைகளினால் அசுத்தமாகி தங்கள் செய்கைகளினால் சோரம்போனார்கள்.
40 அதினால் கர்த்தருடைய கோபம் தமது ஜனத்தின்மேல் மூண்டது; அவர் தமது சுதந்தரத்தை அருவருத்தார்.
41 அவர்களை ஜாதிகளுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களுடைய பகைஞர் அவர்களை ஆண்டார்கள்.
42 அவர்களுடைய சத்துருக்கள் அவர்களை ஒடுக்கினார்கள்; அவர்களுடைய கையின்கீழ்த் தாழ்த்தப்பட்டார்கள்.
43 அநேகந்தரம் அவர்களை விடுவித்தார்; அவர்களோ தங்கள் யோசனையினால் அவருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, தங்களுடைய அக்கிரமத்தினால் சிறுமைப்படுத்தப்பட்டார்கள்.
44 அவர்கள் கூப்பிடுதலை அவர் கேட்கும்போதோ, அவர்களுக்கு உண்டான இடுக்கத்தை அவர் கண்ணோக்கி,
45 அவர்களுக்காகத் தமது உடன்படிக்கையை நினைத்து, தமது மிகுந்த கிருபையின்படி மனஸ்தாபப்பட்டு,
46 அவர்களைச் சிறைபிடித்த யாவரும் அவர்களுக்கு இரங்கும்படி செய்தார்.
47 எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப்போற்றி, உம்மைத் துதிக்கிறதில் மேன்மைபாராட்டும்படி எங்களை இரட்சித்து, எங்களை ஜாதிகளிலிருந்து சேர்த்தருளும்.
48 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஜனங்களெல்லாரும்: ஆமென், அல்லேலுூயா என்பார்களாக.


1 Praise the LORD! O give thanks to the LORD, for he is good; for his steadfast love endures for ever!
2 Who can utter the mighty doings of the LORD, or show forth all his praise?
3 Blessed are they who observe justice, who do righteousness at all times!
4 Remember me, O LORD, when thou showest favor to thy people; help me when thou deliverest them;
5 that I may see the prosperity of thy chosen ones, that I may rejoice in the gladness of thy nation, that I may glory with thy heritage.
6 Both we and our fathers have sinned; we have committed iniquity, we have done wickedly.
7 Our fathers, when they were in Egypt, did not consider thy wonderful works; they did not remember the abundance of thy steadfast love, but rebelled against the Most High at the Red Sea.
8 Yet he saved them for his name's sake, that he might make known his mighty power.
9 He rebuked the Red Sea, and it became dry; and he led them through the deep as through a desert.
10 So he saved them from the hand of the foe, and delivered them from the power of the enemy.
11 And the waters covered their adversaries; not one of them was left.
12 Then they believed his words; they sang his praise.
13 But they soon forgot his works; they did not wait for his counsel.
14 But they had a wanton craving in the wilderness, and put God to the test in the desert;
15 he gave them what they asked, but sent a wasting disease among them.
16 When men in the camp were jealous of Moses and Aaron, the holy one of the LORD,
17 the earth opened and swallowed up Dathan, and covered the company of Abi'ram.
18 Fire also broke out in their company; the flame burned up the wicked.
19 They made a calf in Horeb and worshiped a molten image.
20 They exchanged the glory of God for the image of an ox that eats grass.
21 They forgot God, their Savior, who had done great things in Egypt,
22 wondrous works in the land of Ham, and terrible things by the Red Sea.
23 Therefore he said he would destroy them -- had not Moses, his chosen one, stood in the breach before him, to turn away his wrath from destroying them.
24 Then they despised the pleasant land, having no faith in his promise.
25 They murmured in their tents, and did not obey the voice of the LORD.
26 Therefore he raised his hand and swore to them that he would make them fall in the wilderness,
27 and would disperse their descendants among the nations, scattering them over the lands.
28 Then they attached themselves to the Ba'al of Pe'or, and ate sacrifices offered to the dead;
29 they provoked the LORD to anger with their doings, and a plague broke out among them.
30 Then Phin'ehas stood up and interposed, and the plague was stayed.
31 And that has been reckoned to him as righteousness from generation to generation for ever.
32 They angered him at the waters of Mer'ibah, and it went ill with Moses on their account;
33 for they made his spirit bitter, and he spoke words that were rash.
34 They did not destroy the peoples, as the LORD commanded them,
35 but they mingled with the nations and learned to do as they did.
36 They served their idols, which became a snare to them.
37 They sacrificed their sons and their daughters to the demons;
38 they poured out innocent blood, the blood of their sons and daughters, whom they sacrificed to the idols of Canaan; and the land was polluted with blood.
39 Thus they became unclean by their acts, and played the harlot in their doings.
40 Then the anger of the LORD was kindled against his people, and he abhorred his heritage;
41 he gave them into the hand of the nations, so that those who hated them ruled over them.
42 Their enemies oppressed them, and they were brought into subjection under their power.
43 Many times he delivered them, but they were rebellious in their purposes, and were brought low through their iniquity.
44 Nevertheless he regarded their distress, when he heard their cry.
45 He remembered for their sake his covenant, and relented according to the abundance of his steadfast love.
46 He caused them to be pitied by all those who held them captive.
47 Save us, O LORD our God, and gather us from among the nations, that we may give thanks to thy holy name and glory in thy praise.
48 Blessed be the LORD, the God of Israel, from everlasting to everlasting! And let all the people say, "Amen!" Praise the LORD!

1 கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது.
2 கர்த்தரால் சத்துருவின் கைக்கு நீங்கலாக்கி மீட்கப்பட்டு,
3 கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமுள்ள பல தேசங்களிலுமிருந்து சேர்க்கப்பட்டவர்கள், அப்படிச் சொல்லக்கடவர்கள்.
4 அவர்கள் தாபரிக்கும் ஊரைக் காணாமல், வனாந்தரத்திலே அவாந்தர வழியாய்,
5 பசியாகவும், தாகமாகவும், ஆத்துமா தொய்ந்ததாகவும் அலைந்து திரிந்தார்கள்.
6 தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள். அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை விடுவித்தார்.
7 தாபரிக்கும் ஊருக்குப்போய்ச்சேர, அவர்களைச் செவ்வையான வழியிலே நடத்தினார்.
8 தவனமுள்ள ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று,
9 அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.
10 தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உன்னதமானவருடைய ஆலோசனையை அசட்டைபண்ணினவர்கள்,
11 அந்தகாரத்திலும் மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து, ஒடுக்கத்திலும் இரும்பிலும் கட்டுண்டு கிடந்தார்கள்.
12 அவர்களுடைய இருதயத்தை அவர் வருத்தத்தால் தாழ்த்தினார்; சகாயரில்லாமல் விழுந்துபோனார்கள்.
13 தங்கள் ஆபத்திலே, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார்.
14 அந்தகாரத்திலும் மரணஇருளிலுமிருந்து அவர்களை வெளிப்படப்பண்ணி, அவர்கள் கட்டுகளை அறுத்தார்.
15 கர்த்தர் வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்தாரென்று,
16 அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.
17 நிர்மூடர் தங்கள் பாதகமார்க்கத்தாலும தங்கள் அக்கிரமங்களாலும் நோய்கொண்டு ஒடுங்கிப்போகிறார்கள்.
18 அவர்கள் ஆத்துமா சகல போஜனத்தையும் அரோசிக்கிறது, அவர்கள் மரணவாசல்கள் பரியந்தம் சமீபிக்கிறார்கள்.
19 தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சிக்கிறார்.
20 அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.
21 அவர்கள் கர்த்தரை அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து,
22 ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி, அவருடைய கிரியைகளை ஆனந்த சத்தத்தோடே விவரிப்பார்களாக.
23 கப்பலேறி கடல் யாத்திரைபண்ணி, திரளான தண்ணீர்களில் தொழில் செய்கிறார்களே.
24 அவர்கள் கர்த்தருடைய கிரியைகளையும் ஆழத்திலே அவருடைய அதிசயங்களையும் காண்கிறார்கள்.
25 அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி, அதின் அலைகளைக் கொந்தளிக்கப்பண்ணும்.
26 அவர்கள் ஆகாயத்தில் ஏறி, ஆழங்களில் இறங்குகிறார்கள், அவர்கள் ஆத்துமா கிலேசத்தினால் கரைந்துபோகிறது.
27 வெறித்தவனைப்போல் அலைந்து தடுமாறுகிறார்கள்; அவர்களுடைய ஞானமெல்லாம் முழுகிப்போகிறது.
28 அப்பொழுது தங்கள் ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்.
29 கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது.
30 அமைதலுண்டானதினிமித்தம அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; தாங்கள் நாடின துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார்.
31 அவர்கள் கர்த்தரை அவருடைய கிருபையினிமித்தமும் மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து,
32 ஜனங்களின் சபையிலே அவரை உயர்த்தி, மூப்பர்களின் சங்கத்திலே அவரைப் போற்றுவார்களாக.
33 அவர் ஆறுகளை அவாந்தர வெளியாகவும் நீரூற்றுகளை வறண்ட ஸ்தலமாகவும்,
34 குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் செழிப்பான தேசத்தை உவர்நிலமாகவும் மாற்றுகிறார்.
35 அவர் அவாந்தரவெளியைத் தண்ணீர்த்தடாகமாகவும், வறண்டநிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றி,
36 பசித்தவர்களை அங்கே குடியேற்றுகிறார்; அங்கே அவர்கள் குடியிருக்கும் நகரத்தைக் கட்டி,
37 வயல்களை உண்டாக்கி விதைத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டுகிறார்கள், அவைகள் வரத்துள்ள பலனைத் தரும்.
38 அவர்களை ஆசீர்வதிக்கிறார், மிகுதியும் பெருகுகிறார்கள்; அவர்களுடைய மிருகஜீவன்கள் குறையாதிருக்கப்பண்ணுகிறார்.
39 பின்பு அவர்கள் இடுக்கத்தினாலும், ஆபத்தினாலும், துயரத்தினாலும் குறைவுபட்டுத் தாழ்வடைகிறார்கள்.
40 அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரப்பண்ணி வழியில்லாத அவாந்தர வெளியிலே அவர்களைத் திரியச்செய்து,
41 எளியவனையோ சிறுமையினின்று எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து அவன் வம்சங்களை மந்தையைப்போலாக்குகிறார்.
42 உத்தமர்கள் அதைக்கண்டு மகிழுவார்கள், நியாயக்கேடெல்லாம் தன் வாயை மூடும்.
43 எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கக்கடவன்; ஞானவான்கள் கர்த்தருடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள்.


1 O give thanks to the LORD, for he is good; for his steadfast love endures for ever!
2 Let the redeemed of the LORD say so, whom he has redeemed from trouble
3 and gathered in from the lands, from the east and from the west, from the north and from the south.
4 Some wandered in desert wastes, finding no way to a city to dwell in;
5 hungry and thirsty, their soul fainted within them.
6 Then they cried to the LORD in their trouble, and he delivered them from their distress;
7 he led them by a straight way, till they reached a city to dwell in.
8 Let them thank the LORD for his steadfast love, for his wonderful works to the sons of men!
9 For he satisfies him who is thirsty, and the hungry he fills with good things.
10 Some sat in darkness and in gloom, prisoners in affliction and in irons,
11 for they had rebelled against the words of God, and spurned the counsel of the Most High.
12 Their hearts were bowed down with hard labor; they fell down, with none to help.
13 Then they cried to the LORD in their trouble, and he delivered them from their distress;
14 he brought them out of darkness and gloom, and broke their bonds asunder.
15 Let them thank the LORD for his steadfast love, for his wonderful works to the sons of men!
16 For he shatters the doors of bronze, and cuts in two the bars of iron.
17 Some were sick through their sinful ways, and because of their iniquities suffered affliction;
18 they loathed any kind of food, and they drew near to the gates of death.
19 Then they cried to the LORD in their trouble, and he delivered them from their distress;
20 he sent forth his word, and healed them, and delivered them from destruction.
21 Let them thank the LORD for his steadfast love, for his wonderful works to the sons of men!
22 And let them offer sacrifices of thanksgiving, and tell of his deeds in songs of joy!
23 Some went down to the sea in ships, doing business on the great waters;
24 they saw the deeds of the LORD, his wondrous works in the deep.
25 For he commanded, and raised the stormy wind, which lifted up the waves of the sea.
26 They mounted up to heaven, they went down to the depths; their courage melted away in their evil plight;
27 they reeled and staggered like drunken men, and were at their wits' end.
28 Then they cried to the LORD in their trouble, and he delivered them from their distress;
29 he made the storm be still, and the waves of the sea were hushed.
30 Then they were glad because they had quiet, and he brought them to their desired haven.
31 Let them thank the LORD for his steadfast love, for his wonderful works to the sons of men!
32 Let them extol him in the congregation of the people, and praise him in the assembly of the elders.
33 He turns rivers into a desert, springs of water into thirsty ground,
34 a fruitful land into a salty waste, because of the wickedness of its inhabitants.
35 He turns a desert into pools of water, a parched land into springs of water.
36 And there he lets the hungry dwell, and they establish a city to live in;
37 they sow fields, and plant vineyards, and get a fruitful yield.
38 By his blessing they multiply greatly; and he does not let their cattle decrease.
39 When they are diminished and brought low through oppression, trouble, and sorrow,
40 he pours contempt upon princes and makes them wander in trackless wastes;
41 but he raises up the needy out of affliction, and makes their families like flocks.
42 The upright see it and are glad; and all wickedness stops its mouth.
43 Whoever is wise, let him give heed to these things; let men consider the steadfast love of the LORD.

1 தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக் கீர்த்தனம்பண்ணுவேன், என் மகிமையும் பாடும்.
2 வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்; நான் அதிகாலையில் விழிப்பேன்.
3 கர்த்தாவே, ஜனங்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
4 உமது கிருபை வானங்களுக்குமேலாகவும் உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தமும் எட்டுகிறது.
5 தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக,
6 உமது பிரியர் விடுவிக்கப்படும் பொருட்டு, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எங்கள் ஜெபத்தைக்கேட்டருளும்.
7 தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு விளம்பினார், ஆகையால் களிகூருவேன்; சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன்.
8 கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது; எப்பிராயீம் என் தலையின் பெலன், யூதா என் நியாயப்பிரமாணிகன்.
9 மோவாப் என் பாதபாத்திரம்; ஏதோமின்மேல் என் பாதரட்சையை எறிவேன்; பெலிஸ்தியாவின் மேல் ஆர்ப்பரிப்பேன்.
10 அரணான பட்டணத்திற்கு என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்? ஏதோம்மட்டும் எனக்கு வழிகாட்டுகிறவன் யார்?
11 எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீரல்லவா? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீரல்லவா?
12 இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனுஷனுடைய உதவி விருதா?
13 தேவனாலே பராக்கிரமஞ்செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்.


0 A Song. A Psalm of David.
1 My heart is steadfast, O God, my heart is steadfast! I will sing and make melody! Awake, my soul!
2 Awake, O harp and lyre! I will awake the dawn!
3 I will give thanks to thee, O LORD, among the peoples, I will sing praises to thee among the nations.
4 For thy steadfast love is great above the heavens, thy faithfulness reaches to the clouds.
5 Be exalted, O God, above the heavens! Let thy glory be over all the earth!
6 That thy beloved may be delivered, give help by thy right hand, and answer me!
7 God has promised in his sanctuary: "With exultation I will divide up Shechem, and portion out the Vale of Succoth.
8 Gilead is mine; Manas'seh is mine; E'phraim is my helmet; Judah my scepter.
9 Moab is my washbasin; upon Edom I cast my shoe; over Philistia I shout in triumph."
10 Who will bring me to the fortified city? Who will lead me to Edom?
11 Hast thou not rejected us, O God? Thou dost not go forth, O God, with our armies.
12 O grant us help against the foe, for vain is the help of man!
13 With God we shall do valiantly; it is he who will tread down our foes.

1 நான் துதிக்கும் தேவனே, மவுனமாயிராதேயும்.
2 துன்மார்க்கனுடைய வாயும், கபட்டுவாயும், எனக்கு விரோதமாய்த் திறந்திருக்கிறது; கள்ள நாவினால் என்னோடே பேசுகிறார்கள்.
3 பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு முகாந்தரமில்லாமல் என்னோடே போர்செய்கிறார்கள்.
4 என் சிநேகத்துக்குப் பதிலாக என்னை விரோதிக்கிறார்கள், நானோ ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கிறேன்.
5 நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமைசெய்கிறார்கள், என் சிநேகத்துக்குப் பதிலாக என்னைப் பகைக்கிறார்கள்.
6 அவனுக்கு மேலாகத் துஷ்டனை ஏற்படுத்திவையும், சாத்தான் அவன் வலதுபக்கத்தில் நிற்பானாக.
7 அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாகக்கடவன்; அவன் ஜெபம் பாவமாகக்கடவது.
8 அவன் நாட்கள் கொஞ்சமாகக்கடவது; அவன் உத்தியோகத்தை வேறொருவன் பெறக்கடவன்.
9 அவன் பிள்ளைகள் திக்கற்றவர்களும், அவன் மனைவி விதவையுமாகக்கடவர்கள்.
10 அவன் பிள்ளைகள் அலைந்துதிரிந்து பிச்சையெடுத்து, தங்கள் பாழான வீடுகளிலிருந்து இரந்துண்ணக்கடவர்கள்.
11 கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்வானாக; அவன் பிரயாசத்தின் பலனை அந்நியர் பறித்துக்கொள்ளக்கடவர்கள்.
12 அவனுக்கு ஒருவரும் இரக்கங் காண்பியாமலும், அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்குத் தயவுசெய்யாமலும் போவார்களாக.
13 அவன் சந்ததியார் நிர்மூலமாகக்கடவர்கள், இரண்டாந்தலைமுறையில் அவர்கள் பேர் அற்றுப்போவதாக.
14 அவன் பிதாக்களின் அக்கிரமம் கர்த்தருக்கு முன்பாக நினைக்கப்படக்கடவது, அவன் தாயின் பாவம் நீங்காமலிருப்பதாக.
15 அவைகள் நித்தமும் கர்த்தருக்கு முன்பாக இருக்கக்கடவது; அவர்கள் பேர் பூமியிலிராமல் நிர்மூலமாவதாக.
16 அவன் தயைசெய்ய நினையாமல், சிறுமையும் எளிமையுமானவனைத் துன்பப்படுத்தி மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினானே.
17 சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்; அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், அது அவனுக்குத் தூரமாய் விலகிப்போம்.
18 சாபத்தை அவன் தனக்கு அங்கியாக உடுத்திக்கொண்டான்; அது அவன் உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், அவன் எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும்.
19 அது அவன் மூடிக்கொள்ளுகிற வஸ்திரமாகவும், நித்தமும் கட்டிக்கொள்ளுகிற கச்சையாகவும் இருப்பதாக.
20 இதுதான் என்னை விரோதிக்கிறவர்களுக்கும், என் ஆத்துமாவுக்கு விரோதமாய்த் தீங்கு பேசுகிறவர்களுக்கும் கர்த்தரால் வரும் பலன்.
21 ஆண்டவராகிய கர்த்தாவே, நீர் உமது நாமத்தினிமித்தம் என்னை ஆதரித்து, உமது கிருபை நலமானதினால், என்னை விடுவித்தருளும்.
22 நான் சிறுமையும் எளிமையுமானவன், என் இருதயம் எனக்குள் குத்துண்டிருக்கிறது.
23 சாயும் நிழலைப்போல் அகன்றுபோனேன்; வெட்டுக்கிளியைப்போல் பறக்கடிக்கப்படுகிறேன்.
24 உபவாசத்தினால் என் முழங்கால்கள் தளர்ச்சியடைகிறது; என் மாம்சம் புஷ்டியற்று உலர்ந்து போகிறது.
25 நான் அவர்களுக்கு நிந்தையானேன்; அவர்கள் என்னைப் பார்த்து தங்கள் தலையைத் துலுக்குகிறார்கள்.
26 என் தேவனாகிய கர்த்தாவே, எனக்குச் சகாயம்பண்ணும்; உமது கிருபையின்படி என்னை இரட்சியும்.
27 இது உமது கரம் என்றும், கர்த்தாவே, தேவரீர் இதைச் செய்தீர் என்றும் அவர்கள் அறிவார்களாக.
28 அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்; அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போவார்களாக, உமது அடியானோ மகிழக்கடவன்.
29 என் விரோதிகள் இலச்சையால் மூடப்பட்டு, தங்கள் வெட்கத்தைச் சால்வையைப்போல் தரித்துக்கொள்ளக்கடவர்கள்.
30 கர்த்தரை நான் என் வாயில் மிகவும் துதித்து, அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன்.
31 ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களினின்று எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்கும்படி அவர் அவன் வலதுபாரிசத்தில் நிற்பார்.


0 To the choirmaster. A Psalm of David.
1 Be not silent, O God of my praise!
2 For wicked and deceitful mouths are opened against me, speaking against me with lying tongues.
3 They beset me with words of hate, and attack me without cause.
4 In return for my love they accuse me, even as I make prayer for them.
5 So they reward me evil for good, and hatred for my love.
6 Appoint a wicked man against him; let an accuser bring him to trial.
7 When he is tried, let him come forth guilty; let his prayer be counted as sin!
8 May his days be few; may another seize his goods!
9 May his children be fatherless, and his wife a widow!
10 May his children wander about and beg; may they be driven out of the ruins they inhabit!
11 May the creditor seize all that he has; may strangers plunder the fruits of his toil!
12 Let there be none to extend kindness to him, nor any to pity his fatherless children!
13 May his posterity be cut off; may his name be blotted out in the second generation!
14 May the iniquity of his fathers be remembered before the LORD, and let not the sin of his mother be blotted out!
15 Let them be before the LORD continually; and may his memory be cut off from the earth!
16 For he did not remember to show kindness, but pursued the poor and needy and the brokenhearted to their death.
17 He loved to curse; let curses come on him! He did not like blessing; may it be far from him!
18 He clothed himself with cursing as his coat, may it soak into his body like water, like oil into his bones!
19 May it be like a garment which he wraps round him, like a belt with which he daily girds himself!
20 May this be the reward of my accusers from the LORD, of those who speak evil against my life!
21 But thou, O GOD my Lord, deal on my behalf for thy name's sake; because thy steadfast love is good, deliver me!
22 For I am poor and needy, and my heart is stricken within me.
23 I am gone, like a shadow at evening; I am shaken off like a locust.
24 My knees are weak through fasting; my body has become gaunt.
25 I am an object of scorn to my accusers; when they see me, they wag their heads.
26 Help me, O LORD my God! Save me according to thy steadfast love!
27 Let them know that this is thy hand; thou, O LORD, hast done it!
28 Let them curse, but do thou bless! Let my assailants be put to shame; may thy servant be glad!
29 May my accusers be clothed with dishonor; may they be wrapped in their own shame as in a mantle!
30 With my mouth I will give great thanks to the LORD; I will praise him in the midst of the throng.
31 For he stands at the right hand of the needy, to save him from those who condemn him to death.

1 கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்கு பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.
2 கர்த்தர் சீயோனிலிருந்து உமது வல்லமையின் செங்கோலை அனுப்புவார்; நீர் உம்முடைய சத்துருக்களின் நடுவே ஆளுகைசெய்யும்.
3 உமது பராக்கிரமத்தின் நாளிலே உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரமும் உள்ளவர்களாயிருப்பார்கள்; விடியற்காலத்துக் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமானமாய் உம்முடைய யெளவன ஜனம் உமக்குப் பிறக்கும்.
4 நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம் மாறாமலுமிருப்பார்.
5 உம்முடைய வலது பாரிசத்திலிருக்கிற ஆண்டவர், தமது கோபத்தின் நாளிலே ராஜாக்களை வெட்டுவார்.
6 அவர் ஜாதிகளுக்குள் நியாயந்தீர்ப்பார்; எல்லா இடங்களையும் பிரேதங்களால் நிரப்புவார்; விஸ்தாரமான தேசங்களின்மேல் தலைவர்களாகிறவர்களை நொறுக்கிப்போடுவார்.
7 வழியிலே அவர் நதியில் குடிப்பார், ஆகையால் அவர் தமது தலையை எடுப்பார்.


0 A Psalm of David.
1 The LORD says to my lord: "Sit at my right hand, till I make your enemies your footstool."
2 The LORD sends forth from Zion your mighty scepter. Rule in the midst of your foes!
3 Your people will offer themselves freely on the day you lead your host upon the holy mountains. From the womb of the morning like dew your youth will come to you.
4 The LORD has sworn and will not change his mind, "You are a priest for ever after the order of Melchiz'edek."
5 The Lord is at your right hand; he will shatter kings on the day of his wrath.
6 He will execute judgment among the nations, filling them with corpses; he will shatter chiefs over the wide earth.
7 He will drink from the brook by the way; therefore he will lift up his head.

1 அல்லேலுூயா, செம்மையானவர்களுடைய சங்கத்திலும் சபையிலும் கர்த்தரை முழு இருதயத்தோடும் துதிப்பேன்.
2 கர்த்தரின் செய்கைகள் பெரியவைகளும், அவைகளில் பிரியப்படுகிற எல்லாராலும் ஆராயப்படுகிறவைகளுமாயிருக்கிறது.
3 அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது, அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்.
4 அவர் தம்முடைய அதிசயமான கிரியைகளை நினைவுகூரும்படி செய்தார், கர்த்தர் இரக்கமும் மனஉருக்கமும் உள்ளவர்.
5 தமக்குப் பயந்தவர்களுக்கு ஆகாரம் கொடுத்தார்; தமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பார்.
6 ஜாதிகளின் சுதந்தரத்தைத் தமது ஜனங்களுக்குக் கொடுத்ததினால் தமது கிரியைகளின் பெலத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்.
7 அவருடைய கரத்தின் கிரியைகள் சத்தியமும் நியாயமுமானவைகள்; அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள்.
8 அவைகள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களுக்கும் உறுதியானவைகள், அவைகள் உண்மையும் செம்மையுமாய்ச் செய்யப்பட்டவைகள்.
9 அவர் தமது ஜனத்திற்கு மீட்பை அனுப்பி, தமது உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; அவருடைய நாமம் பரிசுத்தமும் பயங்கரமுமானது.
10 கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.


1 Prasie the LORD. I will give thanks to the LORD with my whole heart, in the company of the upright, in the congregation.
2 Great are the works of the LORD, studied by all who have pleasure in them.
3 Full of honor and majesty is his work, and his righteousness endures for ever.
4 He has caused his wonderful works to be remembered; the LORD is gracious and merciful.
5 He provides food for those who fear him; he is ever mindful of his covenant.
6 He has shown his people the power of his works, in giving them the heritage of the nations.
7 The works of his hands are faithful and just; all his precepts are trustworthy,
8 they are established for ever and ever, to be performed with faithfulness and uprightness.
9 He sent redemption to his people; he has commanded his covenant for ever. Holy and terrible is his name!
10 The fear of the LORD is the beginning of wisdom; a good understanding have all those who practice it. His praise endures for ever!

1 அல்லேலுூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
2 அவன் சந்ததி பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்.
3 ஆஸ்தியும் ஐசுவரியமும் அவன் வீட்டிலிருக்கும்; அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும்.
4 செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; அவன் இரக்கமும் மன உருக்கமும் நீதியுமுள்ளவன்.
5 இரங்கிக் கடன்கொடுத்து, தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற மனுஷன் பாக்கியவான்.
6 அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன்.
7 துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்.
8 அவன் இருதயம் உறுதியாயிருக்கும்; அவன் தன் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காணுமட்டும் பயப்படாதிருப்பான்.
9 வாரியிறைத்தான் ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.
10 துன்மார்க்கன் அதைக் கண்டு மனமடிவாகி, தன் பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; துன்மார்க்கருடைய ஆசை அழியும்.


1 Praise the LORD. Blessed is the man who fears the LORD, who greatly delights in his commandments!
2 His descendants will be mighty in the land; the generation of the upright will be blessed.
3 Wealth and riches are in his house; and his righteousness endures for ever.
4 Light rises in the darkness for the upright; the LORD is gracious, merciful, and righteous.
5 It is well with the man who deals generously and lends, who conducts his affairs with justice.
6 For the righteous will never be moved; he will be remembered for ever.
7 He is not afraid of evil tidings; his heart is firm, trusting in the LORD.
8 His heart is steady, he will not be afraid, until he sees his desire on his adversaries.
9 He has distributed freely, he has given to the poor; his righteousness endures for ever; his horn is exalted in honor.
10 The wicked man sees it and is angry; he gnashes his teeth and melts away; the desire of the wicked man comes to nought.

1 அல்லேலுூயா, கர்த்தருடைய ஊழியக்காரரே, துதியுங்கள்; கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்.
2 இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தருடைய நாமம் ஸ்தோத்திரிக்கப்படக்கடவது.
3 சூரியன் உதிக்கும் திசைதொடங்கி, அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.
4 கர்த்தர் எல்லா ஜாதிகள்மேலும் உயர்ந்தவர்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது.
5 உன்னதங்களில் வாசம்பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமானமானவர் யார்?
6 அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.
7 அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார், எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.
8 அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார்.
9 மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார். அல்லேலுூயா.


1 Praise the LORD! Praise, O servants of the LORD, praise the name of the LORD!
2 Blessed be the name of the LORD from this time forth and for evermore!
3 From the rising of the sun to its setting the name of the LORD is to be praised!
4 The LORD is high above all nations, and his glory above the heavens!
5 Who is like the LORD our God, who is seated on high,
6 who looks far down upon the heavens and the earth?
7 He raises the poor from the dust, and lifts the needy from the ash heap,
8 to make them sit with princes, with the princes of his people.
9 He gives the barren woman a home, making her the joyous mother of children. Praise the LORD!

1 இஸ்ரவேல் எகிப்திலும், யாக்கோபின் குடும்பம் அந்நிய பாஷைக்காரரான ஜனத்திலுமிருந்து புறப்பட்டபோது,
2 யூதா அவருக்குப் பரிசுத்தஸ்தானமும், இஸ்ரவேல் அவருக்கு ராஜ்யமுமாயிற்று.
3 கடல் கண்டு விலகி ஓடிற்று; யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது.
4 மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும் குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளினது.
5 கடலே, நீ விலகியோடுகிறதற்கும்; யோர்தானே, நீ பின்னிட்டுத் திரும்புகிறதற்கும்;
6 மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே, நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும், உங்களுக்கு என்ன வந்தது?
7 பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும், யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு.
8 அவர் கன்மலையைத் தண்ணீர்த்தடாகமாகவும், கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்.


1 When Israel went forth from Egypt, the house of Jacob from a people of strange language,
2 Judah became his sanctuary, Israel his dominion.
3 The sea looked and fled, Jordan turned back.
4 The mountains skipped like rams, the hills like lambs.
5 What ails you, O sea, that you flee? O Jordan, that you turn back?
6 O mountains, that you skip like rams? O hills, like lambs?
7 Tremble, O earth, at the presence of the LORD, at the presence of the God of Jacob,
8 who turns the rock into a pool of water, the flint into a spring of water.

1 எங்களுக்கு அல்ல, கர்த்தாவே எங்களுக்கு அல்ல, உமது கிருபையினிமித்தமும், உமது சத்தியத்தினிமித்தமும் உம்முடைய நாமத்திற்கே மகிமை வரப்பண்ணும்.
2 அவர்களுடைய தேவன் இப்பொழுது எங்கே என்று புறஜாதிகள் சொல்வானேன்.
3 நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார்.
4 அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.
5 அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
6 அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.
7 அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.
8 அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
9 இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.
10 ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.
11 கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.
12 கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார். அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.
13 கர்த்தருக்குப் பயப்படுகிற பெரியோரையும் சிறியோரையும் ஆசீர்வதிப்பார்.
14 கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார்.
15 வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தராலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
16 வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்.
17 மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள்.
18 நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். அல்லேலுூயா.


1 Not to us, O LORD, not to us, but to thy name give glory, for the sake of thy steadfast love and thy faithfulness!
2 Why should the nations say, "Where is their God?"
3 Our God is in the heavens; he does whatever he pleases.
4 Their idols are silver and gold, the work of men's hands.
5 They have mouths, but do not speak; eyes, but do not see.
6 They have ears, but do not hear; noses, but do not smell.
7 They have hands, but do not feel; feet, but do not walk; and they do not make a sound in their throat.
8 Those who make them are like them; so are all who trust in them.
9 O Israel, trust in the LORD! He is their help and their shield.
10 O house of Aaron, put your trust in the LORD! He is their help and their shield.
11 You who fear the LORD, trust in the LORD! He is their help and their shield.
12 The LORD has been mindful of us; he will bless us; he will bless the house of Israel; he will bless the house of Aaron;
13 he will bless those who fear the LORD, both small and great.
14 May the LORD give you increase, you and your children!
15 May you be blessed by the LORD, who made heaven and earth!
16 The heavens are the LORD's heavens, but the earth he has given to the sons of men.
17 The dead do not praise the LORD, nor do any that go down into silence.
18 But we will bless the LORD from this time forth and for evermore. Praise the LORD!

1 கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன்.
2 அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால், நான் உயிரோடிருக்குமளவும் அவரைத் தொழுதுகொள்ளுவேன்.
3 மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாள இடுக்கண்கள் என்னைப் பிடித்தது; இக்கட்டையும் சஞ்சலத்தையும் அடைந்தேன்.
4 அப்பொது நான் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு: கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியுமென்று கெஞ்சினேன்.
5 கர்த்தர் கிருபையும் நீதியுமுள்ளவர், நம்முடைய தேவன் மன உருக்கமானவர்.
6 கர்த்தர் கபடற்றவர்களைக் காக்கிறார்; நான் மெலிந்து போனேன், அவர் என்னை இரட்சித்தார்.
7 என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால், நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு.
8 என் ஆத்துமாவை மரணத்துக்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும் என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர்.
9 நான் கர்த்தருக்கு முன்பாக ஜீவனுள்ளோர் தேசத்திலே நடப்பேன்.
10 விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன்; நான் மிகுதியும் வருத்தப்பட்டேன்.
11 எந்த மனுஷனும் பொய்யன் என்று என் மனக்கலக்கத்திலே சொன்னேன்.
12 கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்.
13 இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.
14 நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களுக்கு முன்பாகவும் செலுத்துவேன்.
15 கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது.
16 கர்த்தாவே, நான் உமது அடியேன், நான் உமது அடியாளின் புத்திரனும் உமது ஊழியக்காரனுமாயிருக்கிறேன், என் கட்டுகளை அவிழ்த்துவிட்டீர்.
17 நான் உமக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்தி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.
18 நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும்,
19 கர்த்தருடைய ஆலயத்தின் பிராகரங்களிலும், எருசலேமே உன் நடுவிலும் நிறைவேற்றுவேன். அல்லேலுூயா.


1 I love the LORD, because he has heard my voice and my supplications.
2 Because he inclined his ear to me, therefore I will call on him as long as I live.
3 The snares of death encompassed me; the pangs of Sheol laid hold on me; I suffered distress and anguish.
4 Then I called on the name of the LORD: "O LORD, I beseech thee, save my life!"
5 Gracious is the LORD, and righteous; our God is merciful.
6 The LORD preserves the simple; when I was brought low, he saved me.
7 Return, O my soul, to your rest; for the LORD has dealt bountifully with you.
8 For thou hast delivered my soul from death, my eyes from tears, my feet from stumbling;
9 I walk before the LORD in the land of the living.
10 I kept my faith, even when I said, "I am greatly afflicted";
11 I said in my consternation, "Men are all a vain hope."
12 What shall I render to the LORD for all his bounty to me?
13 I will lift up the cup of salvation and call on the name of the LORD,
14 I will pay my vows to the LORD in the presence of all his people.
15 Precious in the sight of the LORD is the death of his saints.
16 O LORD, I am thy servant; I am thy servant, the son of thy handmaid. Thou hast loosed my bonds.
17 I will offer to thee the sacrifice of thanksgiving and call on the name of the LORD.
18 I will pay my vows to the LORD in the presence of all his people,
19 in the courts of the house of the LORD, in your midst, O Jerusalem. Praise the LORD!

1 ஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே எல்லாரும் அவரைப் போற்றுங்கள்.
2 அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது, கர்த்தரின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலுூயா.


1 Praise the LORD, all nations! Extol him, all peoples!
2 For great is his steadfast love toward us; and the faithfulness of the LORD endures for ever. Praise the LORD!

1 கர்த்தரைத் துதியுங்கள் அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
2 அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வதாக.
3 அவர் கிருபை என்றுமுள்ளதென்று ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக.
4 அவர் கிருபை என்றுமுள்ளதென்று, கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் சொல்வார்களாக.
5 நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்.
6 கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்?
7 எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன்.
8 மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.
9 பிரபுக்களை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.
10 எல்லா ஜாதியாரும் என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.
11 என்னைச் சுற்றிலும் வளைந்துகொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.
12 தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.
13 நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்; கர்த்தரோ எனக்கு உதவிசெய்தார்.
14 கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானார்; அவர் எனக்கு இரட்சிப்புமானார்.
15 நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீரசத்தமுண்டு; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.
16 கர்த்தரின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.
17 நான் சாவாமல், பிழைத்திருந்து கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன்.
18 கர்த்தர் என்னை வெகுவாய்த் தண்டித்தும், என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை.
19 நீதியின் வாசல்களைத் திறவுங்கள்; நான் அவைகளுக்குள் பிரவேசித்துக் கர்த்தரைத் துதிப்பேன்.
20 கர்த்தரின் வாசல் இதுவே; நீதிமான்கள் இதற்குள் பிரவேசிப்பார்கள்.
21 நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாயிருந்தபடியால் நான் உம்மைத் துதிப்பேன்.
22 வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.
23 அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது.
24 இது கர்த்தர் உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்.
25 கர்த்தாவே, இரட்சியும், கர்த்தாவே, காரியத்தை வாய்க்கப்பண்ணும்.
26 கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; கர்த்தருடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம்.
27 கர்த்தர் நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார்; பண்டிகைப்பலியைக் கொண்டுபோய் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள்.
28 நீர் என்தேவன், நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என் தேவன், நான் உம்மை உயர்த்துவேன்.
29 கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது.


1 O give thanks to the LORD, for he is good; his steadfast love endures for ever!
2 Let Israel say, "His steadfast love endures for ever."
3 Let the house of Aaron say, "His steadfast love endures for ever."
4 Let those who fear the LORD say, "His steadfast love endures for ever."
5 Out of my distress I called on the LORD; the LORD answered me and set me free.
6 With the LORD on my side I do not fear. What can man do to me?
7 The LORD is on my side to help me; I shall look in triumph on those who hate me.
8 It is better to take refuge in the LORD than to put confidence in man.
9 It is better to take refuge in the LORD than to put confidence in princes.
10 All nations surrounded me; in the name of the LORD I cut them off!
11 They surrounded me, surrounded me on every side; in the name of the LORD I cut them off!
12 They surrounded me like bees, they blazed like a fire of thorns; in the name of the LORD I cut them off!
13 I was pushed hard, so that I was falling, but the LORD helped me.
14 The LORD is my strength and my song; he has become my salvation.
15 Hark, glad songs of victory in the tents of the righteous: "The right hand of the LORD does valiantly,
16 the right hand of the LORD is exalted, the right hand of the LORD does valiantly!"
17 I shall not die, but I shall live, and recount the deeds of the LORD.
18 The LORD has chastened me sorely, but he has not given me over to death.
19 Open to me the gates of righteousness, that I may enter through them and give thanks to the LORD.
20 This is the gate of the LORD; the righteous shall enter through it.
21 I thank thee that thou hast answered me and hast become my salvation.
22 The stone which the builders rejected has become the head of the corner.
23 This is the LORD's doing; it is marvelous in our eyes.
24 This is the day which the LORD has made; let us rejoice and be glad in it.
25 Save us, we beseech thee, O LORD! O LORD, we beseech thee, give us success!
26 Blessed be he who enters in the name of the LORD! We bless you from the house of the LORD.
27 The LORD is God, and he has given us light. Bind the festal procession with branches, up to the horns of the altar!
28 Thou art my God, and I will give thanks to thee; thou art my God, I will extol thee.
29 O give thanks to the LORD, for he is good; for his steadfast love endures for ever!

1 கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்.
2 அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்.
3 அவர்கள் அநியாயம் செய்வதில்லை; அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்.
4 உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாய்க் கைக்கொள்ளும்படி நீர் கற்பித்தீர்.
5 உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி, என் நடைகள் ஸ்திரப்பட்டால் நலமாயிருக்கும்.
6 நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது வெட்கப்பட்டுப்போவதில்லை.
7 உம்முடைய நீதி நியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன்.
8 உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்; முற்றிலும் என்னைக் கைவிடாதேயும்.
9 வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்கிறதினால்தானே.
10 என் முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதப்பவிடாதேயும்.
11 நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.
12 கர்த்தாவே, நீர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும்.
13 உம்முடைய வாக்கின் நியாயத்தீர்ப்புகளையெல்லாம் என் உதடுகளால் விவரித்திருக்கிறேன்.
14 திரளான செல்வத்தில் களிகூருவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் களிகூருகிறேன்.
15 உமது கட்டளைகளைத் தியானித்து உமது வழிகளைக் கண்ணோக்குகிறேன்.
16 உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன்.
17 உமது அடியேனுக்கு அனுகூலமாயிரும்; அப்பொழுது நான் பிழைத்து, உமது வசனத்தைக் கைக்கொள்வேன்.
18 உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு என் கண்களைத் திறந்தருளும்.
19 பூமியிலே நான் பரதேசி; உமது கற்பனைகளை எனக்கு மறையாதேயும்.
20 உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எக்காலமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் தொய்ந்துபோகிறது.
21 உமது கற்பனைகளை விட்டு வழிவிலகின சபிக்கப்பட்ட அகங்காரிகளை நீர் கடிந்துகொள்ளுகிறீர்.
22 நிந்தையையும் அவமானத்தையும் என்னை விட்டகற்றும்; நான் உம்முடைய சாட்சிகளைக் கைக்கொள்ளுகிறேன்.
23 பிரபுக்களும் உட்கார்ந்து எனக்கு விரோதமாய்ப் பேசிக்கொள்ளுகிறார்கள்; உமது அடியேனோ பிரமாணங்களைத் தியானிக்கிறேன்.
24 உம்முடைய சாட்சிகள் எனக்கு இன்பமும், என் ஆலோசனைக்காரருமாயிருக்கிறது.
25 என் ஆத்துமா மண்ணோடே ஒட்டிக்கொண்டிருக்கிறது; உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும்.
26 என் வழிகளை நான் உமக்கு விவரித்துக் காட்டினபோது எனக்குச் செவிகொடுத்தீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
27 உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும் அப்பொழுது உமது அதிசயங்களைத் தியானிப்பேன்.
28 சஞ்சலத்தால் என் ஆத்துமா கரைந்துபோகிறது; உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும்.
29 பொய்வழியை என்னை விட்டுவிலக்கி, உம்முடைய வேதத்தை எனக்கு அருள்செய்யும்.
30 மெய்வழியை நான் தெரிந்துகொண்டு உம்முடைய நியாயங்களை எனக்கு முன்பாக நிறுத்தினேன்.
31 உமது சாட்சிகள்மேல் பற்றுதலாயிருக்கிறேன்; கர்த்தாவே, என்னை வெட்கத்திற்குட்படப்பண்ணாதேயும்.
32 நீர் என் இருதயத்தை விசாலமாக்கும்போது நான் உமது கற்பனைகளின் வழியாக ஓடுவேன்.
33 கர்த்தாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்; முடிவுபரியந்தம் நான் அதைக் காத்துக்கொள்ளுவேன்.
34 எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என் முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன்.
35 உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்; நான் அதில் பிரியமாயிருக்கிறேன்.
36 என் இருதயம் பொருளாசையைச் சாராமல், உமது சாட்சிகளைச் சாரும்படி செய்யும்.
37 மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்.
38 உமக்குப் பயப்படுகிறதற்கு ஏற்ற உமது வாக்கை உமது அடியேனுக்கு உறுதிப்படுத்தும்.
39 நான் அஞ்சுகிற நிந்தையை விலக்கியருளும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள்.
40 இதோ, உம்முடைய கட்டளைகளின்மேல் வாஞ்சையாயிருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும்.
41 கர்த்தாவே, உம்முடைய வாக்கின்படி, உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக.
42 அப்பொழுது என்னை நிந்திக்கிறவனுக்கு உத்தரவு சொல்லுவேன், உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன்.
43 சத்திய வசனம் முற்றிலும் என் வாயினின்று நீங்கவிடாதேயும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்குக் காத்திருக்கிறேன்.
44 நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன்.
45 நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால் விசாலத்திலே நடப்பேன்.
46 நான் உம்முடைய சாட்சிகளைக்குறித்து, ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன்.
47 நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளின்பேரில் மனமகிழ்ச்சியாயிருப்பேன்.
48 நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளுக்குக் கையெடுப்பேன். உமது பிரமாணங்களைத் தியானிப்பேன்.
49 நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும்.
50 அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது.
51 அகந்தைக்காரர் என்னை மிகவும், பரியாசம்பண்ணியும், நான் உமது வேதத்தைவிட்டு விலகினதில்லை.
52 கர்த்தாவே, ஆதிமுதலான உமதுநியாயத்தீர்ப்புகளை நான் நினைத்து என்னைத் தேற்றுகிறேன்.
53 உமது வேதத்தை விட்டு விலகுகிற துன்மார்க்கர்நிமித்தம் நடுக்கம் என்னைப் பிடித்தது.
54 நான் பரதேசியாய்த் தங்கும் வீட்டிலே உமது பிரமாணங்கள் எனக்குக் கீதங்களாயின.
55 கர்த்தாவே, இராக்காலத்திலும் உமது நாமத்தை நினைத்து, உமது வேதத்தைக் கைக்கொள்ளுகிறேன்.
56 நான் உமது கட்டளைகளைக் கைக்கொண்டபடியினால், இது எனக்குக் கிடைத்தது.
57 கர்த்தாவே, நீரே என் பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன்.
58 முழு இருதயத்தோடும் உம்முடைய தயவுக்காகக் கெஞ்சுகிறேன்; உமது வாக்கின்படி எனக்கு இரங்கும்.
59 என் வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, என் கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன்.
60 உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி நான் தாமதியாமல் தீவிரித்தேன்.
61 துன்மார்க்கரின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும் உம்முடைய வேதத்தை நான் மறக்கவில்லை.
62 உமது நீதியான நியாயத்தீர்ப்புகளினிமித்தம் உம்மைத் துதிக்கும்படி, பாதிராத்திரியில் எழுந்திருப்பேன்.
63 உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் தோழன்.
64 கர்த்தாவே, பூமி உமது கிருபையினால் நிறைந்திருக்கிறது; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
65 கர்த்தாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாய் நடத்தினீர்.
66 உத்தம நிதானிப்பையும் அறிவையும் எனக்குப் போதித்தருளும், உம்முடைய கற்பனைகளின்பேரில் விசுவாசமாயிருக்கிறேன்.
67 நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்.
68 தேவரீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாயிருக்கிறீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
69 அகங்காரிகள் எனக்கு விரோதமாய்ப் பொய்களைப் பிணைக்கிறார்கள்; நானோ முழு இருதயத்தோடும் உம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன்.
70 அவர்கள் இருதயம் நிணந்துன்னிக் கொழுத்திருக்கிறது; நானோ உம்முடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்.
71 நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.
72 அநேகமாயிரம் பொன் வெள்ளியைப் பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்.
73 உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கிற்று; உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும்.
74 நான் உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறபடியால், உமக்குப் பயந்தவர்கள் என்னைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்.
75 கர்த்தாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும் உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன்.
76 நீர் உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்கின்படி, உமது கிருபை என்னைத் தேற்றுவதாக.
77 நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைப்பதாக; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.
78 அகங்காரிகள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போவார்களாக; நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன்.
79 உமக்குப் பயந்து, உமது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் என்னண்டைக்குத் திரும்புவார்களாக.
80 நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, என் இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாயிருக்கக்கடவது.
81 உம்முடைய இரட்சிப்புக்கு என் ஆத்துமா தவிக்கிறது; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்.
82 எப்பொழுது என்னைĠύ தேற்றுவீர் என்று, உம்முடைய வாக்கின்மேல் நோக்கமாய் என் கண்கள் பூத்துப்போகிறது.
83 புகையிலுள்ள துருத்தியைப் போலானேன்; உமது பிரமாணங்களையோ மறவேன்.
84 உமது அடியேனுடைய நாட்கள் எம்மாத்திரம்? என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு நீர் எப்பொழுது நியாயத்தீர்ப்புச் செய்வீர்.
85 உம்முடைய வேதத்துக்கு விரோதமாய் அகங்காரிகள் எனக்குக் குழிகளை வெட்டினார்கள்.
86 உம்முடைய கற்பனைகளெல்லாம் உண்மையாயிருக்கிறது; அநியாயமாய் என்னைத் துன்பப்படுத்துகிறார்கள்; நீர் எனக்குச் சகாயம்பண்ணும்.
87 அவர்கள் என்னைப் பூமியிலிராமல் நீக்கிவிடச் சற்றே தப்பிற்று; ஆனாலும் நான் உமது கட்டளைகளை விட்டுவிடவில்லை.
88 உமது கிருபையின்படியே என்னை உயிர்ப்பியும்; அப்பொழுது நான் உம்முடைய வாக்கின் சாட்சியைக் காத்து நடப்பேன்.
89 கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது.
90 உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்; பூமியை உறுதிப்படுத்தினீர். அது நிலைத்திருக்கிறது.
91 உம்முடைய பிரமாணங்களை நிறைவேற்றும்படி அவைகள் இந்நாள்வரைக்கும் நிற்கிறது; சமஸ்தமும் உம்மைச் சேவிக்கும்.
92 உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்.
93 நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர்.
94 நான் உம்முடையவன், என்னை இரட்சியும்; உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறேன்.
95 துன்மார்க்கர் என்னை அழிக்கக் காத்திருக்கிறார்கள்; நான் உமது சாட்சிகளைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.
96 சகல சம்பூரணத்திற்கும் எல்லையைக் கண்டேன்; உம்முடைய கற்பனையோ மகா விஸ்தாரம்.
97 உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுதும் அது என் தியானம்.
98 நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு, என்னை என் சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது.
99 உம்முடைய சாட்சிகள் என் தியானமாயிருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்கள் எல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன்.
100 உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைப் பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறேன்.
101 உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிறேன்.
102 நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால், நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகேன்.
103 உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்.
104 உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.
105 உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
106 உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; அதை நிறைவேற்றுவேன்.
107 நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; கர்த்தாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும்.
108 கர்த்தாவே, என் வாயின் உற்சாகபலிகளை நீர் அங்கீகரித்து, உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும்.
109 என் பிராணன் எப்பொழுதும் என் கையில் இருக்கிறது; ஆனாலும் உம்முடைய வேதத்தை மறவேன்.
110 துன்மார்க்கர் எனக்குக் கண்ணிவைக்கிறார்கள்; ஆனாலும் நான் உம்முடைய கட்டளைகளை விட்டு வழி தவறேன்.
111 உம்முடைய சாட்சிகளை நித்திய சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், அவைகளே என் இருதயத்தின் மகிழ்ச்சி.
112 முடிவுபரியந்தம் இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என் இருதயத்தைச் சாய்த்தேன்.
113 வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன்.
114 என் மறைவிடமும் என் கேடகமும் நீரே; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்.
115 பொல்லாதவர்களே, என்னை விட்டு அகன்றுபோங்கள்; என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன்.
116 நான் பிழைத்திருப்பதற்கு உமது வார்த்தையின்படி என்னை ஆதரித்தருளும்; என் நம்பிக்கை விருதாவாய்ப்போக என்னை வெட்கத்திற்கு உட்படுத்தாதேயும்.
117 என்னை ஆதரித்தருளும்; அப்பொழுது நான் இரட்சிக்கப்பட்டு எக்காலமும் உம்முடைய பிரமாணங்களின்பேரில் நோக்கமாயிருப்பேன்.
118 உமது பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற யாவரையும் மிதித்துபோடுகிறீர்; அவர்களுடைய உபாயம் வெறும் பொய்யே.
119 பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரையும் களிம்பைப்போல அகற்றிவிடுகிறீர்; ஆகையால் உமது சாட்சிகளில் பிரியப்படுகிறேன்.
120 உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன்.
121 நியாயமும் நீதியும் செய்கிற என்னை ஒடுக்குகிறவர்களுக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்.
122 உமது அடியேனுக்கு நன்மையாகத் துணைநில்லும்; அகங்காரிகள் என்னை யொடுக்கவொட்டாதேயும்.
123 உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைக்கும் காத்திருக்கிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது.
124 உமது அடியேனை உமது கிருபையின்படியே நடத்தி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
125 நான் உமது அடியேன்; உம்முடைய சாட்சிகளை நான் அறியும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும்.
126 நீதியைச் செய்யக் கர்த்தருக்கு வேளைவந்தது; அவர்கள் உம்முடைய நியாயப்பிரமாணத்தை மீறினார்கள்.
127 ஆதலால் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாய் உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன்.
128 எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.
129 உம்முடைய சாட்சிகள் அதிசயமானவைகள்; ஆகையால் என் ஆத்துமா அவைகளைக் கைக்கொள்ளும்.
130 உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்.
131 உம்முடைய கற்பனைகளை நான் வாஞ்சிக்கிறபடியால், என் வாயை ஆவென்று திறந்து அவைகளுக்கு ஏங்குகிறேன்.
132 உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்களுக்கு வழங்கும் நியாயத்தின்படியே என்னை நோக்கிப்பார்த்து, எனக்கு இரங்கும்.
133 உம்முடைய வார்த்தையிலே என் காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆளவொட்டாதேயும்.
134 மனுஷர் செய்யும் இடுக்கத்துக்கு என்னை விலக்கி விடுவித்தருளும்; அப்பொழுது நான் உம்முடைய, கட்டளைகளைக் காத்துக்கொள்வேன்.
135 உமது அடியேன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
136 உம்முடைய வேதத்தை மனுஷர் காத்து நடவாதபடியால், என் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது.
137 கர்த்தாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்.
138 நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும் மகா உண்மையுமானவைகள்.
139 என் சத்துருக்கள் உம்முடைய வசனங்களை மறந்தபடியால் என் பக்திவைராக்கியம் என்னைப் பட்சிக்கிறது.
140 உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன்.
141 நான் சிறியவனும் அசட்டை பண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன்; ஆனாலும் உமது கட்டளைகளை மறவேன்.
142 உம்முடைய நீதி நித்திய நீதி, உம்முடைய வேதம் சத்தியம்.
143 இக்கட்டும் நெருக்கமும் என்னைப் பிடித்தது; ஆனாலும் உம்முடைய கற்பனைகள் என் மனமகிழ்ச்சி.
144 உம்முடைய சாட்சிகளின் நீதி என்றைக்கும் நிற்கும்; என்னை உணர்வுள்ளவனாக்கும், அப்பொழுது நான் பிழைத்திருப்பேன்.
145 முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்; உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்.
146 உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை இரட்சியும்; அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவேன்.
147 அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்.
148 உமது வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த ஜாமங்களுக்கு முன்னே என் கண்கள் விழித்துக்கொள்ளும்.
149 உம்முடைய கிருபையின்படி என் சத்தத்தைக் கேளும்; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தின்படி என்னை உயிர்ப்பியும்.
150 தீவினையைப் பின்பற்றுகிறவர்கள் சமீபிக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய வேதத்துக்குத் தூரமாயிருக்கிறார்கள்.
151 கர்த்தாவே, நீர் சமீபமாயிருக்கிறீர்; உமது கற்பனைகள் எல்லாம் உண்மை.
152 நீர் உம்முடைய சாட்சிகளை என்றென்றைக்கும் நிற்க ஸ்தாபித்தீர் என்பதை அவைகளால் நான் நெடுநாளாய் அறிந்திருக்கிறேன்.
153 என் உபத்திரவத்தைப்பார்த்து, என்னை விடுவியும், உமது வேதத்தை மறவேன்.
154 எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும், உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும்.
155 இரட்சிப்பு துன்மார்க்கருக்குத் தூரமாயிருக்கிறது, அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடார்கள்.
156 கர்த்தாவே, உம்முடைய இரக்கங்கள் மிகுதியாயிருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும்.
157 என்னைத் துன்பப்படுத்துகிறவர்களும் என்னை விரோதிக்கிறவர்களும் அநேகர்; ஆனாலும் உம்முடைய சாட்சிகளை விட்டு விலகேன்.
158 உமது வசனத்தைக் காத்துக் கொள்ளாத துரோகிகளை நான் கண்டபோது, எனக்கு அருவருப்பாயிருந்தது.
159 இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; கர்த்தாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்.
160 உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம்.
161 பிரபுக்கள் காரணமில்லாமல் என்னைத் துன்பப்படுத்தினார்கள்; ஆனாலும் என் இருதயம் உமது வசனத்திற்கே பயப்படுகிறது.
162 மிகுந்த கொள்ளையுடைமையைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல, நான் உமது வார்த்தையின்பேரில் மகிழுகிறேன்.
163 பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன்.
164 உமது நீதி நியாயங்களினிமித்தம், ஒருநாளில் ஏழுதரம் உம்மைத் துதிக்கிறேன்.
165 உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.
166 கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்கு நான் காத்திருந்து உம்முடைய கற்பனைகளின்படி செய்கிறேன்.
167 என் ஆத்துமா உமது சாட்சிகளைக் காக்கும்; அவைகளை நான் மிகவும் நேசிக்கிறேன்.
168 உமது கட்டளைகளையும் உமது சாட்சிகளையும் காத்து நடக்கிறேன்; என் வழிகளெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது.
169 கர்த்தாவே, என் கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக; உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும்.
170 என் விண்ணப்பம் உமது சந்நிதியில் வருவதாக; உமது வார்த்தையின்படி என்னை விடுவித்தருளும்.
171 உம்முடைய பிரமாணங்களை நீர் எனக்குப் போதிக்கும்போது, என் உதடுகள் உமது துதியைப் பிரஸ்தாபப்படுத்தும்.
172 உமது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள்; ஆதலால், என் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச்சொல்லும்.
173 நான் உம்முடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டபடியால், உமது கரம் எனக்குத் துணையாயிருப்பதாக.
174 கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாயிருக்கிறேன்; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.
175 என் ஆத்துமா பிழைத்திருந்து உம்மைத் துதிக்கக்கடவது; உமது நியாயத்தீர்ப்புகள் எனக்கு உதவியாயிருப்பதாக.
176 காணாமற்போன ஆட்டைப்போல வழிதப்பிப்போனேன்; உமது அடியேனைத் தேடுவீராக; உமது கற்பனைகளை நான் மறவேன்.


1 Blessed are those whose way is blameless, who walk in the law of the LORD!
2 Blessed are those who keep his testimonies, who seek him with their whole heart,
3 who also do no wrong, but walk in his ways!
4 Thou hast commanded thy precepts to be kept diligently.
5 O that my ways may be steadfast in keeping thy statutes!
6 Then I shall not be put to shame, having my eyes fixed on all thy commandments.
7 I will praise thee with an upright heart, when I learn thy righteous ordinances.
8 I will observe thy statutes; O forsake me not utterly!
9 How can a young man keep his way pure? By guarding it according to thy word.
10 With my whole heart I seek thee; let me not wander from thy commandments!
11 I have laid up thy word in my heart, that I might not sin against thee.
12 Blessed be thou, O LORD; teach me thy statutes!
13 With my lips I declare all the ordinances of thy mouth.
14 In the way of thy testimonies I delight as much as in all riches.
15 I will meditate on thy precepts, and fix my eyes on thy ways.
16 I will delight in thy statutes; I will not forget thy word.
17 Deal bountifully with thy servant, that I may live and observe thy word.
18 Open my eyes, that I may behold wondrous things out of thy law.
19 I am a sojourner on earth; hide not thy commandments from me!
20 My soul is consumed with longing for thy ordinances at all times.
21 Thou dost rebuke the insolent, accursed ones, who wander from thy commandments;
22 take away from me their scorn and contempt, for I have kept thy testimonies.
23 Even though princes sit plotting against me, thy servant will meditate on thy statutes.
24 Thy testimonies are my delight, they are my counselors.
25 My soul cleaves to the dust; revive me according to thy word!
26 When I told of my ways, thou didst answer me; teach me thy statutes!
27 Make me understand the way of thy precepts, and I will meditate on thy wondrous works.
28 My soul melts away for sorrow; strengthen me according to thy word!
29 Put false ways far from me; and graciously teach me thy law!
30 I have chosen the way of faithfulness, I set thy ordinances before me.
31 I cleave to thy testimonies, O LORD; let me not be put to shame!
32 I will run in the way of thy commandments when thou enlargest my understanding!
33 Teach me, O LORD, the way of thy statutes; and I will keep it to the end.
34 Give me understanding, that I may keep thy law and observe it with my whole heart.
35 Lead me in the path of thy commandments, for I delight in it.
36 Incline my heart to thy testimonies, and not to gain!
37 Turn my eyes from looking at vanities; and give me life in thy ways.
38 Confirm to thy servant thy promise, which is for those who fear thee.
39 Turn away the reproach which I dread; for thy ordinances are good.
40 Behold, I long for thy precepts; in thy righteousness give me life!
41 Let thy steadfast love come to me, O LORD, thy salvation according to thy promise;
42 then shall I have an answer for those who taunt me, for I trust in thy word.
43 And take not the word of truth utterly out of my mouth, for my hope is in thy ordinances.
44 I will keep thy law continually, for ever and ever;
45 and I shall walk at liberty, for I have sought thy precepts.
46 I will also speak of thy testimonies before kings, and shall not be put to shame;
47 for I find my delight in thy commandments, which I love.
48 I revere thy commandments, which I love, and I will meditate on thy statutes.
49 Remember thy word to thy servant, in which thou hast made me hope.
50 This is my comfort in my affliction that thy promise gives me life.
51 Godless men utterly deride me, but I do not turn away from thy law.
52 When I think of thy ordinances from of old, I take comfort, O LORD.
53 Hot indignation seizes me because of the wicked, who forsake thy law.
54 Thy statutes have been my songs in the house of my pilgrimage.
55 I remember thy name in the night, O LORD, and keep thy law.
56 This blessing has fallen to me, that I have kept thy precepts.
57 The LORD is my portion; I promise to keep thy words.
58 I entreat thy favor with all my heart; be gracious to me according to thy promise.
59 When I think of thy ways, I turn my feet to thy testimonies;
60 I hasten and do not delay to keep thy commandments.
61 Though the cords of the wicked ensnare me, I do not forget thy law.
62 At midnight I rise to praise thee, because of thy righteous ordinances.
63 I am a companion of all who fear thee, of those who keep thy precepts.
64 The earth, O LORD, is full of thy steadfast love; teach me thy statutes!
65 Thou hast dealt well with thy servant, O LORD, according to thy word.
66 Teach me good judgment and knowledge, for I believe in thy commandments.
67 Before I was afflicted I went astray; but now I keep thy word.
68 Thou art good and doest good; teach me thy statutes.
69 The godless besmear me with lies, but with my whole heart I keep thy precepts;
70 their heart is gross like fat, but I delight in thy law.
71 It is good for me that I was afflicted, that I might learn thy statutes.
72 The law of thy mouth is better to me than thousands of gold and silver pieces.
73 Thy hands have made and fashioned me; give me understanding that I may learn thy commandments.
74 Those who fear thee shall see me and rejoice, because I have hoped in thy word.
75 I know, O LORD, that thy judgments are right, and that in faithfulness thou hast afflicted me.
76 Let thy steadfast love be ready to comfort me according to thy promise to thy servant.
77 Let thy mercy come to me, that I may live; for thy law is my delight.
78 Let the godless be put to shame, because they have subverted me with guile; as for me, I will meditate on thy precepts.
79 Let those who fear thee turn to me, that they may know thy testimonies.
80 May my heart be blameless in thy statutes, that I may not be put to shame!
81 My soul languishes for thy salvation; I hope in thy word.
82 My eyes fail with watching for thy promise; I ask, "When wilt thou comfort me?"
83 For I have become like a wineskin in the smoke, yet I have not forgotten thy statutes.
84 How long must thy servant endure? When wilt thou judge those who persecute me?
85 Godless men have dug pitfalls for me, men who do not conform to thy law.
86 All thy commandments are sure; they persecute me with falsehood; help me!
87 They have almost made an end of me on earth; but I have not forsaken thy precepts.
88 In thy steadfast love spare my life, that I may keep the testimonies of thy mouth.
89 For ever, O LORD, thy word is firmly fixed in the heavens.
90 Thy faithfulness endures to all generations; thou hast established the earth, and it stands fast.
91 By thy appointment they stand this day; for all things are thy servants.
92 If thy law