ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.

~1 ஆதியாகமம் 1:1

1 கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து மோசேயைக்கூப்பிட்டு, அவனை நோக்கி:
2 நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலிசெலுத்த வந்தால், மாட்டுமந்தையிலாவது, ஆட்டுமந்தையிலாவது ஒரு மிருகத்தைத் தெரிந்தெடுத்து, பலிசெலுத்தவேண்டும்.
3 அவன் செலுத்துவது மாட்டுமந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்கதகன பலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக; கர்த்தருடைய சந்நிதியில் தான் அங்கிகரிக்கப்படும்படி, அவன் அதை ஆசரிப்புக் கூடாரவாசலில் கொண்டுவந்து,
4 அது தன் பாவநிவிர்த்திக்கென்று அங்கிகரிக்கப்படும்படி தன் கையை அதின் தலையின்மேல் வைத்து,
5 கர்த்தருடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தை எடுத்து, அதை ஆசரிப்புக் கூடாரவாசலில் இருக்கிற பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
6 பின்பு அவன் அந்தச் சர்வாங்கத் தகனபலியைத் தோலுரித்து, அதைச் சந்துசந்தாகத் துண்டிக்கக்கடவன்.
7 அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோனின் குமாரர் பலிபீடத்தின்மேல் அக்கினியைப்போட்டு, அக்கினியின்மேல் கட்டைகளை அடுக்கி,
8 அவன் குமாரராகிய ஆசாரியர்கள், துண்டங்களையும் தலையையும் கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவர்கள்.
9 அதின் குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியாகத் தகனிக்கக் கடவன்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.
10 அவன் செலுத்துவது செம்மறியாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது வெள்ளாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், பழுதற்ற ஒரு கடாவைக் கொண்டுவந்து,
11 கர்த்தருடைய சந்நிதியில் பலிபீடத்தின் வடபுறத்தில் அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக் கடவர்கள்.
12 பின்பு அவன் அதைச் சந்துசந்தாகத் துண்டித்து, அதின் தலையையும் கொழுப்பையும் கூடவைப்பானாக; அவைகளை ஆசாரியன் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவன்.
13 குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் கொண்டுவந்து பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.
14 அவன் கர்த்தருக்குச் செலுத்துவது பறவைகளிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், காட்டுப் புறாக்களிலாவது புறாக்குஞ்சுகளிலாவது எடுத்துச் செலுத்தக்கடவன்.
15 அதை ஆசாரியன் பலிபீடத்தண்டையில் கொண்டுவந்து, அதின் தலையைக் கிள்ளி, பலிபீடத்தில் தகனித்து, அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின் பக்கத்தில் சிந்தவிட்டு,
16 அதின் இரைப்பையை அதின் மலத்தோடுங்கூட எடுத்து, அதைப் பலிபீடத்தண்டையில் கீழ்ப்புறமாகச் சாம்பல் இருக்கிற இடத்திலே எறிந்துவிட்டு,
17 பின்பு அதின் செட்டைகளுடன் அதை இரண்டாக்காமல் பிளப்பானாக; பின்பு ஆசாரியன் அதைப் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் தகனிக்கக் கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.


1 The LORD called Moses, and spoke to him from the tent of meeting, saying,
2 "Speak to the people of Israel, and say to them, When any man of you brings an offering to the LORD, you shall bring your offering of cattle from the herd or from the flock.
3 "If his offering is a burnt offering from the herd, he shall offer a male without blemish; he shall offer it at the door of the tent of meeting, that he may be accepted before the LORD;
4 he shall lay his hand upon the head of the burnt offering, and it shall be accepted for him to make atonement for him.
5 Then he shall kill the bull before the LORD; and Aaron's sons the priests shall present the blood, and throw the blood round about against the altar that is at the door of the tent of meeting.
6 And he shall flay the burnt offering and cut it into pieces;
7 and the sons of Aaron the priest shall put fire on the altar, and lay wood in order upon the fire;
8 and Aaron's sons the priests shall lay the pieces, the head, and the fat, in order upon the wood that is on the fire upon the altar;
9 but its entrails and its legs he shall wash with water. And the priest shall burn the whole on the altar, as a burnt offering, an offering by fire, a pleasing odor to the LORD.
10 "If his gift for a burnt offering is from the flock, from the sheep or goats, he shall offer a male without blemish;
11 and he shall kill it on the north side of the altar before the LORD, and Aaron's sons the priests shall throw its blood against the altar round about.
12 And he shall cut it into pieces, with its head and its fat, and the priest shall lay them in order upon the wood that is on the fire upon the altar;
13 but the entrails and the legs he shall wash with water. And the priest shall offer the whole, and burn it on the altar; it is a burnt offering, an offering by fire, a pleasing odor to the LORD.
14 "If his offering to the LORD is a burnt offering of birds, then he shall bring his offering of turtledoves or of young pigeons.
15 And the priest shall bring it to the altar and wring off its head, and burn it on the altar; and its blood shall be drained out on the side of the altar;
16 and he shall take away its crop with the feathers, and cast it beside the altar on the east side, in the place for ashes;
17 he shall tear it by its wings, but shall not divide it asunder. And the priest shall burn it on the altar, upon the wood that is on the fire; it is a burnt offering, an offering by fire, a pleasing odor to the LORD.

1 ஒருவன் போஜனபலியாகிய காணிக்கையைக் கர்த்தருக்குச் செலுத்தவேண்டுமானால், அவன் காணிக்கை மெல்லிய மாவாயிருப்பதாக; அவன் அதின்மேல் எண்ணெய் வார்த்து, அதின்மேல் தூபவர்க்கம் போட்டு,
2 அதை ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்களிடத்தில் கொண்டுவருவானாக; அப்பொழுது ஆசாரியன் அந்த மாவிலும் எண்ணெயிலும் ஒரு கைப்பிடி நிறைய தூபவர்க்கம் எல்லாவற்றோடும் எடுத்து, அதைப் பலிபீடத்தின்மேல் ஞாபகக்குறியாகத் தகனிக்கக்கடவன்; அது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.
3 அந்தப் போஜனபலியில் மீதியாயிருப்பது ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்; கர்த்தருக்கு இடும் தகனபலிகளில் இது மகா பரிசுத்தமானது.
4 நீ படைப்பது அடுப்பில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் செய்த புளிப்பில்லா அதிரசங்களாயாவது, எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளாயாவது இருப்பதாக.
5 நீ படைப்பது தட்டையான சட்டியில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா மெல்லிய மாவினால் செய்யப்பட்டதாயிருப்பதாக.
6 அதைத் துண்டு துண்டாகப் பிட்டு, அதின்மேல் எண்ணெய் வார்ப்பாயாக; இது ஒரு போஜனபலி.
7 நீ படைப்பது பொரிக்குஞ் சட்டியில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் செய்யப்படுவதாக.
8 இப்படிச் செய்யப்பட்ட போஜனபலியைக் கர்த்தருக்குச் செலுத்துவாயாக; அது ஆசாரியனிடத்தில் கொண்டுவரப்படும்போது, அவன் அதைப் பலிபீடத்தண்டையில் கொண்டுவந்து,
9 அந்தப் போஜனபலியிலிருந்து ஆசாரியன் ஞாபகக் குறியாக ஒரு பங்கை எடுத்துப் பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.
10 இந்தப் போஜனபலியில் மீதியானது ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்; கர்த்தருக்கு இடும் தகனங்களில் இது மகா பரிசுத்தமானது.
11 நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தும் எந்த போஜனபலியும் புளித்தமாவினால் செய்யப்படாதிருப்பதாக; புளித்தமாவுள்ளதொன்றையும் தேனுள்ளதொன்றையும் கர்த்தருக்குத் தகனபலியாகத் தகனிக்கவேண்டாம்.
12 முதற்கனிகளைக் காணிக்கையாகக் கொண்டுவந்து, அவைகளைக் கர்த்தருக்குச் செலுத்தலாம்; ஆனாலும், பலிபீடத்தின்மேல் அவைகள் சுகந்த வாசனையாகத் தகனிக்கப்படலாகாது.
13 நீ படைக்கிற எந்த போஜனபலியும் உப்பினால் சாரமாக்கப்படுவதாக; உன் தேவனின் உடன்படிக்கையின் உப்பை உன் போஜனபலியிலே குறையவிடாமல், நீ படைப்பது எல்லாவற்றோடும் உப்பையும் படைப்பாயாக.
14 முதற்பலன்களை போஜனபலியாக நீ கர்த்தருக்குச் செலுத்தவந்தால், நிறைந்த பச்சையான கதிர்களை நெருப்பிலே வாட்டி உதிர்த்து, அதை உன் முதற்பலனின் போஜனபலியாக கொண்டுவரக்கடவாய்.
15 அதின்மேல் எண்ணெய் வார்த்து, அதின்மேல் தூபவர்க்கத்தைப் போடுவாயாக; இது ஒரு போஜனபலி.
16 பின்பு ஆசாரியன், உதிர்த்த தானியத்திலும் எண்ணெயிலும் எடுத்து, ஞாபகக் குறியான பங்கை அதின் தூபவர்க்கம் எல்லாவற்றோடுங்கூடத் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்கு இடும் தகனபலி.


1 "When any one brings a cereal offering as an offering to the LORD, his offering shall be of fine flour; he shall pour oil upon it, and put frankincense on it,
2 and bring it to Aaron's sons the priests. And he shall take from it a handful of the fine flour and oil, with all of its frankincense; and the priest shall burn this as its memorial portion upon the altar, an offering by fire, a pleasing odor to the LORD.
3 And what is left of the cereal offering shall be for Aaron and his sons; it is a most holy part of the offerings by fire to the LORD.
4 "When you bring a cereal offering baked in the oven as an offering, it shall be unleavened cakes of fine flour mixed with oil, or unleavened wafers spread with oil.
5 And if your offering is a cereal offering baked on a griddle, it shall be of fine flour unleavened, mixed with oil;
6 you shall break it in pieces, and pour oil on it; it is a cereal offering.
7 And if your offering is a cereal offering cooked in a pan, it shall be made of fine flour with oil.
8 And you shall bring the cereal offering that is made of these things to the LORD; and when it is presented to the priest, he shall bring it to the altar.
9 And the priest shall take from the cereal offering its memorial portion and burn this on the altar, an offering by fire, a pleasing odor to the LORD.
10 And what is left of the cereal offering shall be for Aaron and his sons; it is a most holy part of the offerings by fire to the LORD.
11 "No cereal offering which you bring to the LORD shall be made with leaven; for you shall burn no leaven nor any honey as an offering by fire to the LORD.
12 As an offering of first fruits you may bring them to the LORD, but they shall not be offered on the altar for a pleasing odor.
13 You shall season all your cereal offerings with salt; you shall not let the salt of the covenant with your God be lacking from your cereal offering; with all your offerings you shall offer salt.
14 "If you offer a cereal offering of first fruits to the LORD, you shall offer for the cereal offering of your first fruits crushed new grain from fresh ears, parched with fire.
15 And you shall put oil upon it, and lay frankincense on it; it is a cereal offering.
16 And the priest shall burn as its memorial portion part of the crushed grain and of the oil with all of its frankincense; it is an offering by fire to the LORD.

1 ஒருவன் சமாதான பலியைப் படைக்கவேண்டுமென்று, மாட்டுமந்தையில் எடுத்துச் செலுத்துவானாகில், அது காளையானாலும் சரி, பசுவானாலும் சரி, பழுதற்றிருப்பதை கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தக்கடவன்.
2 அவன் தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
3 பின்பு சமாதான பலியிலே குடல்களை மூடிய கொழுப்பையும், குடல்களிலுள்ள கொழுப்பு முழுவதையும்,
4 இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்துவானாக.
5 அதை ஆரோனின் குமாரர் பலிபீடத்து அக்கினியிலுள்ள கட்டைகளின்மேல் போட்டிருக்கும் சர்வாங்க தகனபலியின்மீதில் போட்டுத் தகனிக்கக்கடவர்கள்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.
6 அவன் கர்த்தருக்குச் சமாதான பலியைப் படைக்கவேண்டுமென்று ஆட்டு மந்தையிலிருந்து எடுத்துச் செலுத்துவானாகில், அது ஆண் ஆனாலும் சரி, பெண் ஆனாலும் சரி, பழுதற்றிருப்பதைச் செலுத்துவானாக.
7 அவன் ஆட்டுக்குட்டியைப் பலியாகச் செலுத்தவேண்டுமானால், அதைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து,
8 தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
9 பின்பு அவன் சமாதான பலியிலே அதின் கொழுப்பையும், நடுவெலும்பிலிருந்து எடுத்த முழு வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகளின்மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும்,
10 இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தக்கடவன்.
11 அதை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்கு இடும் தகன ஆகாரம்.
12 அவன் செலுத்துவது வெள்ளாடாயிருக்குமானால், அவன் அதை கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து,
13 அதின் தலையின்மேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
14 அவன் அதிலே குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகளின்மேலிருக்கிற கொழுப்பு முழுவதையும்,
15 இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தக்கடவன்.
16 ஆசாரியன் பலிபீடத்தின்மேல் அவைகளைத் தகனிக்கக்கடவன்; இது சுகந்த வாசனையான தகன ஆகாரம்; கொழுப்பு முழுவதும் கர்த்தருடையது.
17 கொழுப்பையாவது இரத்தத்தையாவது நீங்கள் புசிக்கலாகாது; இது உங்கள் வாசஸ்தலங்கள் எங்கும் உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்று சொல் என்றார்.


1 "If a man's offering is a sacrifice of peace offering, if he offers an animal from the herd, male or female, he shall offer it without blemish before the LORD.
2 And he shall lay his hand upon the head of his offering and kill it at the door of the tent of meeting; and Aaron's sons the priests shall throw the blood against the altar round about.
3 And from the sacrifice of the peace offering, as an offering by fire to the LORD, he shall offer the fat covering the entrails and all the fat that is on the entrails,
4 and the two kidneys with the fat that is on them at the loins, and the appendage of the liver which he shall take away with the kidneys.
5 Then Aaron's sons shall burn it on the altar upon the burnt offering, which is upon the wood on the fire; it is an offering by fire, a pleasing odor to the LORD.
6 "If his offering for a sacrifice of peace offering to the LORD is an animal from the flock, male or female, he shall offer it without blemish.
7 If he offers a lamb for his offering, then he shall offer it before the LORD,
8 laying his hand upon the head of his offering and killing it before the tent of meeting; and Aaron's sons shall throw its blood against the altar round about.
9 Then from the sacrifice of the peace offering as an offering by fire to the LORD he shall offer its fat, the fat tail entire, taking it away close by the backbone, and the fat that covers the entrails, and all the fat that is on the entrails,
10 and the two kidneys with the fat that is on them at the loins, and the appendage of the liver which he shall take away with the kidneys.
11 And the priest shall burn it on the altar as food offered by fire to the LORD.
12 "If his offering is a goat, then he shall offer it before the LORD,
13 and lay his hand upon its head, and kill it before the tent of meeting; and the sons of Aaron shall throw its blood against the altar round about.
14 Then he shall offer from it, as his offering for an offering by fire to the LORD, the fat covering the entrails, and all the fat that is on the entrails,
15 and the two kidneys with the fat that is on them at the loins, and the appendage of the liver which he shall take away with the kidneys.
16 And the priest shall burn them on the altar as food offered by fire for a pleasing odor. All fat is the LORD's.
17 It shall be a perpetual statute throughout your generations, in all your dwelling places, that you eat neither fat nor blood."

1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
2 நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், ஒருவன் கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை அறியாமையினால் மீறி, செய்யத்தகாததைச் செய்து பாவத்துக்கு உட்பட்டால் அறியவேண்டியதாவது:
3 அபிஷேகம் பெற்ற ஆசாரியன், ஜனங்கள் குற்றத்திற்கு உட்படத்தக்கதாகப் பாவஞ்செய்தால், தான் செய்த பாவத்தினிமித்தம் பழுதற்ற ஒரு இளங்காளையைப் பாவநிவாரண பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன்.
4 அவன் அந்தக் காளையை ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அதின் தலைமேல் தன் கையை வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் அதைக் கொல்லக்கடவன்.
5 அப்பொழுது அபிஷேகம் பெற்ற ஆசாரியன் அந்தக் காளையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, அதை ஆசரிப்புக் கூடாரத்தில் கொண்டுவந்து,
6 தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, பரிசுத்த ஸ்தலத்தின் திரைக்கு எதிரே கர்த்தருடைய சந்நிதியில் ஏழுதரம் தெளிக்கக்கடவன்.
7 பின்பு, ஆசாரியன் அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தருடைய சந்நிதியில் இருக்கும் சுகந்த தூபபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, காளையினுடைய மற்ற இரத்தம் முழுவதையும் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக இருக்கிற தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,
8 பாவநிவாரணபலியான காளையின் எல்லாக் கொழுப்புமாகிய குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகள்மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும்,
9 இரண்டு குண்டிக்காய்களையும், அவைகள்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும்,
10 சமாதானபலியின் காளையிலிருந்து எடுக்கிறதுபோல அதிலிருந்து எடுத்து, அவைகளைத் தகனபலிபீடத்தின்மேல் தகனிக்கக் கடவன்.
11 காளையின் தோலையும், அதின் மாம்சம் முழுவதையும், அதின் தலையையும், தொடைகளையும், அதின் குடல்களையும், அதின் சாணியையும்,
12 காளை முழுவதையும் பாளயத்துக்குப் புறம்பே சாம்பல் கொட்டுகிற சுத்தமான இடத்திலே கொண்டுபோய், கட்டைகளின்மேல் போட்டு, அக்கினியாலே சுட்டெரிக்கக் கடவன்; சாம்பல் கொட்டியிருக்கிற இடத்திலே அதைச் சுட்டெரிக்கக்கடவன்.
13 இஸ்ரவேல் சபையார் எல்லாரும் அறியாமையினால் பாவஞ்செய்து, காரியம் தங்கள் கண்களுக்கு மறைவாயிருக்கிறதினால், கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை மீறி, செய்யத்தகாததைச் செய்து, பாவத்துக்குட்பட்டுக் குற்றவாளிகளானால்,
14 அவர்கள் செய்த பாவம் தெரியவரும்போது, சபையார் அந்தப் பாவத்தினிமித்தம் ஒரு இளங்காளையை ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகப் பலியிடக் கொண்டுவரவேண்டும்.
15 சபையின் மூப்பர் கர்த்தருடைய சந்நிதியில் தங்கள் கைகளை அதின் தலைமேல் வைக்கக்கடவர்கள்; பின்பு கர்த்தருடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லவேண்டும்.
16 அப்பொழுது அபிஷேகம் பெற்ற ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்தில் கொண்டுவந்து,
17 தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, கர்த்தருடைய சந்நிதியில் திரைக்கு எதிரே ஏழுதரம் தெளித்து,
18 ஆசரிப்புக் கூடாரத்தில் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கும் பலிபீடத்தின் கொம்புகளின்மேல் அந்த இரத்தத்தில் கொஞ்சம் பூசி, மற்ற இரத்தமெல்லாம் ஆசரிப்புக் கூடாரவாசலில் இருக்கிற தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,
19 அதின் கொழுப்பு முழுவதையும் அதிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேல் தகனித்து,
20 பாவநிவாரணபலியின் காளையைச் செய்தபிரகாரம் இந்தக்காளையையும் செய்து, இவ்வண்ணமாய் ஆசாரியன் அவர்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவர்களுக்கு மன்னிக்கப்படும்.
21 பின்பு காளையைப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், முந்தின காளையைச் சுட்டெரித்ததுபோலச் சுட்டெரிக்கக் கடவன்; இது சபைக்காகச் செய்யப்படும் பாவநிவாரணபலி.
22 ஒரு பிரபு தன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை மீறி அறியாமையினால் செய்யத்தகாததைச் செய்து, பாவத்துக்குட்பட்டுக் குற்றவாளியானால்,
23 தான் செய்தது பாவம் என்று தனக்குத் தெரியவரும்போது, அவன் வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு இளங்கடாவைப் பலியாகக் கொண்டுவந்து,
24 அந்தக் கடாவின் தலைமேல் தன் கையை வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில் அதைக் கொல்லக்கடவன்; இது பாவநிவாரணபலி.
25 அப்பொழுது ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகனபலிபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தத்தைத் தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,
26 அதின் கொழுப்பு முழுவதையும், சமாதானபலியின் கொழுப்பைப் போல, பலிபீடத்தில் தகனித்து, இவ்வண்ணமாய் ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக் குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
27 சாதாரண ஜனங்களில் ஒருவன் அறியாமையினால் கர்த்தரின் கட்டளைகளில் யாதொன்றை மீறி, செய்யத்தகாததைச் செய்து, பாவத்துக்குட்பட்டுக் குற்றவாளியானால்,
28 தான் செய்தது பாவம் என்று தனக்குத் தெரியவரும்போது, அவன் தான் செய்த பாவத்தினிமித்தம் வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு பெண்குட்டியைப் பலியாகக் கொண்டுவந்து,
29 பாவநிவாரணபலியின் தலைமேல் தன் கையை வைத்து, சர்வாங்க தகனபலியிடும் இடத்தில் அந்தப் பாவநிவாரணபலியைக் கொல்லக்கடவன்.
30 அப்பொழுது ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகனபலிபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தமெல்லாம் பலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,
31 சமாதானபலியிலிருந்து கொழுப்பை எடுப்பதுபோல, அதின் கொழுப்பு முழுவதையும் எடுத்து, ஆசாரியன் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனித்து, இவ்வண்ணமாய் அவனுக்குப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
32 அவன் பாவநிவாரண பலியாக ஒரு ஆட்டுக்குட்டியைக் கொண்டுவருவானாகில், பழுதற்ற பெண்குட்டியைக் கொண்டுவந்து,
33 அந்தப் பாவநிவாரணபலியின் தலைமேல் தன் கையை வைத்து, சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில் அதைப் பாவநிவாரண பலியாகக் கொல்லக்கடவன்.
34 அப்பொழுது ஆசாரியன் அந்தப் பாவநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகன பலிபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தமெல்லாம் பலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,
35 சமாதான பலியான ஆட்டுக்குட்டியின் கொழுப்பை எடுக்கிறதுபோல, அதின் கொழுப்பு முழுவதையும் எடுத்து, கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளைப் போல, பலிபீடத்தின்மேல் ஆசாரியன் தகனிக்கவேண்டும்; இவ்வண்ணமாய் அவன் செய்த பாவத்துக்கு ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.


1 And the LORD said to Moses,
2 "Say to the people of Israel, If any one sins unwittingly in any of the things which the LORD has commanded not to be done, and does any one of them,
3 if it is the anointed priest who sins, thus bringing guilt on the people, then let him offer for the sin which he has committed a young bull without blemish to the LORD for a sin offering.
4 He shall bring the bull to the door of the tent of meeting before the LORD, and lay his hand on the head of the bull, and kill the bull before the LORD.
5 And the anointed priest shall take some of the blood of the bull and bring it to the tent of meeting;
6 and the priest shall dip his finger in the blood and sprinkle part of the blood seven times before the LORD in front of the veil of the sanctuary.
7 And the priest shall put some of the blood on the horns of the altar of fragrant incense before the LORD which is in the tent of meeting, and the rest of the blood of the bull he shall pour out at the base of the altar of burnt offering which is at the door of the tent of meeting.
8 And all the fat of the bull of the sin offering he shall take from it, the fat that covers the entrails and all the fat that is on the entrails,
9 and the two kidneys with the fat that is on them at the loins, and the appendage of the liver which he shall take away with the kidneys
10 (just as these are taken from the ox of the sacrifice of the peace offerings), and the priest shall burn them upon the altar of burnt offering.
11 But the skin of the bull and all its flesh, with its head, its legs, its entrails, and its dung,
12 the whole bull he shall carry forth outside the camp to a clean place, where the ashes are poured out, and shall burn it on a fire of wood; where the ashes are poured out it shall be burned.
13 "If the whole congregation of Israel commits a sin unwittingly and the thing is hidden from the eyes of the assembly, and they do any one of the things which the LORD has commanded not to be done and are guilty;
14 when the sin which they have committed becomes known, the assembly shall offer a young bull for a sin offering and bring it before the tent of meeting;
15 and the elders of the congregation shall lay their hands upon the head of the bull before the LORD, and the bull shall be killed before the LORD.
16 Then the anointed priest shall bring some of the blood of the bull to the tent of meeting,
17 and the priest shall dip his finger in the blood and sprinkle it seven times before the LORD in front of the veil.
18 And he shall put some of the blood on the horns of the altar which is in the tent of meeting before the LORD; and the rest of the blood he shall pour out at the base of the altar of burnt offering which is at the door of the tent of meeting.
19 And all its fat he shall take from it and burn upon the altar.
20 Thus shall he do with the bull; as he did with the bull of the sin offering, so shall he do with this; and the priest shall make atonement for them, and they shall be forgiven.
21 And he shall carry forth the bull outside the camp, and burn it as he burned the first bull; it is the sin offering for the assembly.
22 "When a ruler sins, doing unwittingly any one of all the things which the LORD his God has commanded not to be done, and is guilty,
23 if the sin which he has committed is made known to him, he shall bring as his offering a goat, a male without blemish,
24 and shall lay his hand upon the head of the goat, and kill it in the place where they kill the burnt offering before the LORD; it is a sin offering.
25 Then the priest shall take some of the blood of the sin offering with his finger and put it on the horns of the altar of burnt offering, and pour out the rest of its blood at the base of the altar of burnt offering.
26 And all its fat he shall burn on the altar, like the fat of the sacrifice of peace offerings; so the priest shall make atonement for him for his sin, and he shall be forgiven.
27 "If any one of the common people sins unwittingly in doing any one of the things which the LORD has commanded not to be done, and is guilty,
28 when the sin which he has committed is made known to him he shall bring for his offering a goat, a female without blemish, for his sin which he has committed.
29 And he shall lay his hand on the head of the sin offering, and kill the sin offering in the place of burnt offering.
30 And the priest shall take some of its blood with his finger and put it on the horns of the altar of burnt offering, and pour out the rest of its blood at the base of the altar.
31 And all its fat he shall remove, as the fat is removed from the peace offerings, and the priest shall burn it upon the altar for a pleasing odor to the LORD; and the priest shall make atonement for him, and he shall be forgiven.
32 "If he brings a lamb as his offering for a sin offering, he shall bring a female without blemish,
33 and lay his hand upon the head of the sin offering, and kill it for a sin offering in the place where they kill the burnt offering.
34 Then the priest shall take some of the blood of the sin offering with his finger and put it on the horns of the altar of burnt offering, and pour out the rest of its blood at the base of the altar.
35 And all its fat he shall remove as the fat of the lamb is removed from the sacrifice of peace offerings, and the priest shall burn it on the altar, upon the offerings by fire to the LORD; and the priest shall make atonement for him for the sin which he has committed, and he shall be forgiven.

1 சாட்சியாகிய ஒருவன், இடப்பட்ட ஆணையைக் கேட்டிருந்தும், தான் கண்டதையும் அறிந்ததையும் தெரிவியாதிருந்து பாவஞ்செய்தால், அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.
2 அசுத்தமான காட்டுமிருகத்தின் உடலையாவது, அசுத்தமான நாட்டுமிருகத்தின் உடலையாவது, அசுத்தமான ஊரும்பிராணிகளின் உடலையாவது, இவ்வித அசுத்தமான யாதொரு வஸ்துவையாவது, ஒருவன் அறியாமல் தொட்டால், அவன் தீட்டும் குற்றமும் உள்ளவனாவான்.
3 அல்லது, எந்த அசுத்தத்தினாலாகிலும் தீட்டுப்பட்ட ஒரு மனிதனை ஒருவன் அறியாமல் தொட்டு, பின்பு அதை அறிந்து கொண்டால், அவன் குற்றமுள்ளவனாவான்.
4 மனிதர் பதறி ஆணையிடும் எந்தக்காரியத்தினாலாகிலும் தீட்டுப்பட்ட ஒருவன் தீமை செய்கிறதற்காவது நன்மை செய்கிறதற்காவது, தன் மனம் அறியாமல், தன் உதடுகளினால் பதறி ஆணையிட்டு, பின்பு அவன் அதை அறிந்துகொண்டால், அதைக்குறித்துக் குற்றமுள்ளவனாவான்.
5 இப்படிப்பட்டவைகள் ஒன்றில், ஒருவன் குற்றமுள்ளவனாகும்போது, அவன் தான் செய்தது பாவம் என்று அறிக்கையிட்டு,
6 தான் செய்த பாவத்துக்குப் பாவநிவாரண பலியாக, ஆடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது, ஒரு பெண்குட்டியைக் குற்றநிவாரண பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக்குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
7 ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், அவன் செய்த குற்றத்தினிமித்தம் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைப் பாவநிவாரண பலியாகவும் மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும், கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன்.
8 அவைகளை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக; அவன் பாவநிவாரண பலிக்கானதை முன்னே செலுத்தி, அதின் தலையை அதின் கழுத்தினிடத்தில் கிள்ளி, அதை இரண்டாக்காமல் வைத்து,
9 அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்தின் பக்கத்தில் தெளித்து, மீதியான இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே வடியவிடுவானாக; இது பாவநிவாரணபலி.
10 மற்றதை நியமத்தின்படியே அவன் தகனபலியாய்ச் செலுத்தக்கடவன்; இவ்விதமாக அவன் செய்த பாவத்தை ஆசாரியன் நிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
11 இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், பாவம் செய்தவன் பாவநிவாரணத்துக்காக ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கைத் தன் காணிக்கையாகக் கொண்டுவருவானாக; அது பாவநிவாரண பலியாயிருப்பதினால், அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம் போடாமலுமிருந்து,
12 அதை ஆசாரியனிடத்தில் கொண்டுவரவேண்டும்; அதிலே ஆசாரியன் ஞாபகக்குறியான பங்காகத் தன் கைப்பிடி நிறைய எடுத்து, கர்த்தருக்கு இடும் தகனபலிகளைப்போல, பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது பாவநிவாரணபலி.
13 இவ்விதமாக மேற்சொல்லிய காரியங்கள் ஒன்றில் அவன் செய்த பாவத்துக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும், மீதியானது போஜன பலியைப்போல ஆசாரியனைச் சேரும் என்றார்.
14 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
15 ஒருவன் கர்த்தருக்குரிய பரிசுத்தமானவைகளில் குற்றஞ்செய்து, அறியாமையினால் பாவத்துக்குட்பட்டால், அவன் தன் குற்றத்தினிமித்தம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படியே, நீ அவன்மேல் சுமத்தும் அபராதம் எவ்வளவோ, அவ்வளவு வெள்ளிச் சேக்கல் பெறும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவைக் குற்றநிவாரணபலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து,
16 பரிசுத்தமானதைக்குறித்துத் தான் செய்த தப்பிதத்தினால் உண்டான நஷ்டத்தைச் செலுத்தி, அதினோடு ஐந்தில் ஒரு பங்கை அதிகமாகக் கூட்டி, ஆசாரியனுக்குக் கொடுப்பானாக; குற்றநிவாரணபலியாகிய ஆட்டுக்கடாவினாலே அவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
17 ஒருவன் செய்யத்தகாதென்று கர்த்தருடைய கட்டளைகளினால் விலக்கப்பட்ட யாதொன்றைச் செய்து பாவத்துக்குட்பட்டால், அதை அவன் அறியாமையினால் செய்தாலும், அவன் குற்றமுள்ளவனாயிருந்து, தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.
18 அதினிமித்தம் அவன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்புக்குச் சரியான பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக; அவன் அறியாமல் செய்த தப்பிதத்தை ஆசாரியன் அவனுக்காக நிவிர்த்திசெய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
19 இது குற்றநிவாரணபலி; அவன் கர்த்தருக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தான் என்பது நிச்சயம் என்றார்.


1 "If any one sins in that he hears a public adjuration to testify and though he is a witness, whether he has seen or come to know the matter, yet does not speak, he shall bear his iniquity.
2 Or if any one touches an unclean thing, whether the carcass of an unclean beast or a carcass of unclean cattle or a carcass of unclean swarming things, and it is hidden from him, and he has become unclean, he shall be guilty.
3 Or if he touches human uncleanness, of whatever sort the uncleanness may be with which one becomes unclean, and it is hidden from him, when he comes to know it he shall be guilty.
4 Or if any one utters with his lips a rash oath to do evil or to do good, any sort of rash oath that men swear, and it is hidden from him, when he comes to know it he shall in any of these be guilty.
5 When a man is guilty in any of these, he shall confess the sin he has committed,
6 and he shall bring his guilt offering to the LORD for the sin which he has committed, a female from the flock, a lamb or a goat, for a sin offering; and the priest shall make atonement for him for his sin.
7 "But if he cannot afford a lamb, then he shall bring, as his guilt offering to the LORD for the sin which he has committed, two turtledoves or two young pigeons, one for a sin offering and the other for a burnt offering.
8 He shall bring them to the priest, who shall offer first the one for the sin offering; he shall wring its head from its neck, but shall not sever it,
9 and he shall sprinkle some of the blood of the sin offering on the side of the altar, while the rest of the blood shall be drained out at the base of the altar; it is a sin offering.
10 Then he shall offer the second for a burnt offering according to the ordinance; and the priest shall make atonement for him for the sin which he has committed, and he shall be forgiven.
11 "But if he cannot afford two turtledoves or two young pigeons, then he shall bring, as his offering for the sin which he has committed, a tenth of an ephah of fine flour for a sin offering; he shall put no oil upon it, and shall put no frankincense on it, for it is a sin offering.
12 And he shall bring it to the priest, and the priest shall take a handful of it as its memorial portion and burn this on the altar, upon the offerings by fire to the LORD; it is a sin offering.
13 Thus the priest shall make atonement for him for the sin which he has committed in any one of these things, and he shall be forgiven. And the remainder shall be for the priest, as in the cereal offering."
14 The LORD said to Moses,
15 "If any one commits a breach of faith and sins unwittingly in any of the holy things of the LORD, he shall bring, as his guilt offering to the LORD, a ram without blemish out of the flock, valued by you in shekels of silver, according to the shekel of the sanctuary; it is a guilt offering.
16 He shall also make restitution for what he has done amiss in the holy thing, and shall add a fifth to it and give it to the priest; and the priest shall make atonement for him with the ram of the guilt offering, and he shall be forgiven.
17 "If any one sins, doing any of the things which the LORD has commanded not to be done, though he does not know it, yet he is guilty and shall bear his iniquity.
18 He shall bring to the priest a ram without blemish out of the flock, valued by you at the price for a guilt offering, and the priest shall make atonement for him for the error which he committed unwittingly, and he shall be forgiven.
19 It is a guilt offering; he is guilty before the LORD."

1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
2 ஒருவன் கர்த்தருக்கு விரோதமாக அநியாயம் செய்து, தன்வசத்தில் ஒப்புவிக்கப்பட்ட பொருளிலாவது, கொடுக்கல் வாங்கலிலாவது, தன் அயலானுக்கு மாறாட்டம்பண்ணி, அல்லது ஒரு வஸ்துவைப் பலாத்காரமாய்ப் பறித்துக்கொண்டு, அல்லது தன் அயலானுக்கு இடுக்கண்செய்து,
3 அல்லது காணாமற்போனதைக் கண்டடைந்தும் அதை மறுதலித்து, அதைக் குறித்துப் பொய்யாணையிட்டு, மனிதர் செய்யும் இவைமுதலான யாதொரு காரியத்தில் பாவஞ்செய்தானேயாகில்,
4 அவன் செய்த பாவத்தினாலே குற்றவாளியானபடியால், தான் பலாத்காரமாய்ப் பறித்துக்கொண்டதையும், இடுக்கண்செய்து பெற்றுக்கொண்டதையும், தன் வசத்திலே ஒப்புவிக்கப்பட்டதையும், காணாமற்போயிருந்து தான் கண்டெடுத்ததையும்,
5 பொய்யாணையிட்டுச் சம்பாதித்த பொருளையும் திரும்பக்கொடுக்கக் கடவன்; அந்த முதலைக்கொடுக்கிறதும் அல்லாமல், அதினோடு ஐந்தில் ஒரு பங்கு அதிகமாகவும் கூட்டி, அதைத் தான் குற்றநிவாரணபலியை இடும் நாளில், அதற்குரியவனுக்குக் கொடுத்துவிட்டு,
6 தன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்புக்குச் சரியான பழுதற்ற ஆட்டுக்கடாவை கர்த்தருக்குச் செலுத்தும்படி, அதை ஆசாரியனிடத்தில் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவருவானாக.
7 கர்த்தருடைய சந்நிதியில் அவன் பாவத்தை ஆசாரியன் நிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவன் குற்றவாளியாகச் செய்த அப்படிப்பட்ட எந்தக்காரியமும் அவனுக்கு மன்னிக்கப்படும் என்றார்.
8 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
9 நீ ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் கற்பிக்கவேண்டிய சர்வாங்க தகனபலிக்குரிய பிரமாணம் என்னவென்றால், சர்வாங்க தகனபலியானது இராமுழுவதும் விடியற்காலமட்டும் பலிபீடத்தின்மேல் எரியவேண்டும்; பலிபீடத்தின்மேலுள்ள அக்கினி எரிந்துகொண்டே இருக்கவேண்டும்.
10 ஆசாரியன் தன் சணல்நூல் அங்கியைத் தரித்து, தன் சணல்நூல் ஜல்லடத்தை அரையில் போட்டுக்கொண்டு, பலிபீடத்தின்மேல் அக்கினியில் எரிந்த சர்வாங்க தகனபலியின் சாம்பலை எடுத்து, பலிபீடத்துப் பக்கத்தில் கொட்டி,
11 பின்பு தன் வஸ்திரங்களைக் கழற்றி, வேறு வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அந்தச் சாம்பலைப் பாளயத்துக்குப் புறம்பே சுத்தமான ஒரு இடத்திலே கொண்டுபோய்க் கொட்டக்கடவன்.
12 பலிபீடத்தின்மேலிருக்கிற அக்கினி அவியாமல் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; ஆசாரியன் காலைதோறும் அதின்மேல் எரியும்படி கட்டைகளைப் போட்டு அதின்மேல் சர்வாங்க தகனபலியை வரிசையாக வைத்து, அதின்மேல் சமாதான பலிகளின் கொழுப்பைப் போட்டுத் தகனிக்கக்கடவன்.
13 பலிபீடத்தின்மேல் அக்கினி எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; அது ஒருபொழுதும் அவிந்துபோகலாகாது.
14 போஜனபலியின் பிரமாணம் என்னவென்றால், ஆரோனின் குமாரர் அதைக் கர்த்தருடைய சந்நிதியில் பலிபீடத்துக்கு முன்னே படைக்கவேண்டும்.
15 அவன் போஜனபலியின் மெல்லிய மாவிலும் அதின் எண்ணெயிலும் தன் கைப்பிடி நிறைய எடுத்து, போஜனபலியின்மேலுள்ள தூபவர்க்கம் யாவற்றோடும்கூட அதை ஞாபகக் குறியாகப் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனிக்கக்கடவன்.
16 அதில் மீதியானதை ஆரோனும் அவன் குமாரரும் புசிப்பார்களாக; அது புளிப்பில்லா அப்பத்துடன் பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்படக்கடவது; ஆசரிப்புக் கூடாரத்தின் பிராகாரத்தில் அதைப் புசிக்கவேண்டும்.
17 அதைப் புளித்தமாவுள்ளதாகப் பாகம்பண்ணவேண்டாம்; அது எனக்கு இடப்படும் தகனங்களில் நான் அவர்களுக்குக் கொடுத்த அவர்களுடைய பங்கு; அது பாவநிவாரண பலியைப்போலும் குற்றநிவாரண பலியைப்போலும் மகா பரிசுத்தமானது.
18 ஆரோனின் பிள்ளைகளில் ஆண்மக்கள் யாவரும் அதைப்புசிப்பார்களாக; கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளில் அது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாய் இருக்கக்கடவது; அவைகளைத் தொடுகிறவனெவனும் பரிசுத்தமாய் இருப்பான் என்று சொல் என்றார்.
19 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
20 ஆரோன் அபிஷேகம் பண்ணப்படும் நாளில், அவனும் அவன் குமாரரும் கர்த்தருக்குச் செலுத்தவேண்டிய படைப்பு என்னவென்றால், ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கை, காலையில் பாதியும் மாலையில் பாதியும், நித்திய போஜனபலியாகச் செலுத்தக்கடவர்கள்.
21 அது சட்டியிலே எண்ணெய்விட்டுப் பாகம்பண்ணக்கடவது; பாகம்பண்ணப்பட்டபின்பு அதைக் கொண்டுவந்து, போஜனபலியாகப் பாகம்பண்ணப்பட்ட துண்டுகளைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகப் படைக்கக்கடவாய்.
22 அவன் குமாரரில் அவனுடைய ஸ்தலத்திலே அபிஷேகம்பண்ணப்படுகிற ஆசாரியனும் அப்படியே செய்யக்கடவன்; அது முழுவதும் தகனிக்கப்படவேண்டும்; அது கர்த்தர் நியமித்த நித்திய கட்டளை.
23 ஆசாரியனுக்காக இடப்படும் எந்தப்போஜனபலியும் புசிக்கப்படாமல், முழுவதும் தகனிக்கப்படவேண்டும் என்றார்.
24 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
25 நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்லவேண்டியதாவது, பாவநிவாரணபலியின் பிரமாணம் என்னவென்றால், சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில் பாவநிவாரணபலியும் கர்த்தருடைய சந்நிதியில் கொல்லப்படக்கடவது; அது மகா பரிசுத்தமானது.
26 பாவநிவிர்த்திசெய்ய அதைப் பலியிடுகிற ஆசாரியன் அதைப்புசிக்கக்கடவன்; ஆசரிப்புக் கூடாரத்தின் பிராகாரமாகிய பரிசுத்த ஸ்தலத்திலே அது புசிக்கப்படவேண்டும்.
27 அதின் மாம்சத்தில் படுகிறது எதுவும் பரிசுத்தமாயிருக்கும்; அதின் இரத்தத்திலே கொஞ்சம் ஒரு வஸ்திரத்தில் தெறித்ததானால், இரத்தந்தெறித்த வஸ்திரத்தைப் பரிசுத்த ஸ்தலத்தில் கழுவவேண்டும்.
28 அது சமைக்கப்பட்ட மண்பாண்டம் உடைக்கப்படவேண்டும்: செப்புப்பானையில் சமைக்கப்பட்டதானால், அது விளக்கப்பட்டுத் தண்ணீரில் கழுவப்படவேண்டும்.
29 ஆசாரியரில் ஆண்மக்கள் யாவரும் அதைப்புசிப்பார்களாக: அது மகா பரிசுத்தமானது.
30 எந்தப் பாவநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் பரிசுத்த ஸ்தலத்தில் பாவநிவிர்த்தியின்பொருட்டு ஆசரிப்புக் கூடாரத்துக்குள்ளே கொண்டுவரப்பட்டதோ, அந்தப் பலி புசிக்கப்படலாகாது, அது அக்கினியிலே தகனிக்கப்படவேண்டும்.


1 The LORD said to Moses,
2 "If any one sins and commits a breach of faith against the LORD by deceiving his neighbor in a matter of deposit or security, or through robbery, or if he has oppressed his neighbor
3 or has found what was lost and lied about it, swearing falsely -- in any of all the things which men do and sin therein,
4 when one has sinned and become guilty, he shall restore what he took by robbery, or what he got by oppression, or the deposit which was committed to him, or the lost thing which he found,
5 or anything about which he has sworn falsely; he shall restore it in full, and shall add a fifth to it, and give it to him to whom it belongs, on the day of his guilt offering.
6 And he shall bring to the priest his guilt offering to the LORD, a ram without blemish out of the flock, valued by you at the price for a guilt offering;
7 and the priest shall make atonement for him before the LORD, and he shall be forgiven for any of the things which one may do and thereby become guilty."
8 The LORD said to Moses,
9 "Command Aaron and his sons, saying, This is the law of the burnt offering. The burnt offering shall be on the hearth upon the altar all night until the morning, and the fire of the altar shall be kept burning on it.
10 And the priest shall put on his linen garment, and put his linen breeches upon his body, and he shall take up the ashes to which the fire has consumed the burnt offering on the altar, and put them beside the altar.
11 Then he shall put off his garments, and put on other garments, and carry forth the ashes outside the camp to a clean place.
12 The fire on the altar shall be kept burning on it, it shall not go out; the priest shall burn wood on it every morning, and he shall lay the burnt offering in order upon it, and shall burn on it the fat of the peace offerings.
13 Fire shall be kept burning upon the altar continually; it shall not go out.
14 "And this is the law of the cereal offering. The sons of Aaron shall offer it before the LORD, in front of the altar.
15 And one shall take from it a handful of the fine flour of the cereal offering with its oil and all the frankincense which is on the cereal offering, and burn this as its memorial portion on the altar, a pleasing odor to the LORD.
16 And the rest of it Aaron and his sons shall eat; it shall be eaten unleavened in a holy place; in the court of the tent of meeting they shall eat it.
17 It shall not be baked with leaven. I have given it as their portion of my offerings by fire; it is a thing most holy, like the sin offering and the guilt offering.
18 Every male among the children of Aaron may eat of it, as decreed for ever throughout your generations, from the LORD's offerings by fire; whoever touches them shall become holy."
19 The LORD said to Moses,
20 "This is the offering which Aaron and his sons shall offer to the LORD on the day when he is anointed: a tenth of an ephah of fine flour as a regular cereal offering, half of it in the morning and half in the evening.
21 It shall be made with oil on a griddle; you shall bring it well mixed, in baked pieces like a cereal offering, and offer it for a pleasing odor to the LORD.
22 The priest from among Aaron's sons, who is anointed to succeed him, shall offer it to the LORD as decreed for ever; the whole of it shall be burned.
23 Every cereal offering of a priest shall be wholly burned; it shall not be eaten."
24 The LORD said to Moses,
25 "Say to Aaron and his sons, This is the law of the sin offering. In the place where the burnt offering is killed shall the sin offering be killed before the LORD; it is most holy.
26 The priest who offers it for sin shall eat it; in a holy place it shall be eaten, in the court of the tent of meeting.
27 Whatever touches its flesh shall be holy; and when any of its blood is sprinkled on a garment, you shall wash that on which it was sprinkled in a holy place.
28 And the earthen vessel in which it is boiled shall be broken; but if it is boiled in a bronze vessel, that shall be scoured, and rinsed in water.
29 Every male among the priests may eat of it; it is most holy.
30 But no sin offering shall be eaten from which any blood is brought into the tent of meeting to make atonement in the holy place; it shall be burned with fire.

1 குற்றநிவாரணபலியின் பிரமாணம் என்னவென்றால், அது மகா பரிசுத்தமானது.
2 சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில், குற்றநிவாரண பலியும் கொல்லப்படவேண்டும்: அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,
3 அதினுடைய கொழுப்பு முழுவதையும், அதின் வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும்,
4 இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்திலிருக்கிற கொழுப்பையும் குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்துச் செலுத்துவானாக.
5 இவைகளை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குத் தகனபலியாகத் தகனிக்கக்கடவன்; அது குற்றநிவாரண பலி.
6 ஆசாரியரில் ஆண்மக்கள் யாவரும் அதைப் புசிப்பார்களாக; அது பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்படவேண்டும், அது மகா பரிசுத்தமானது.
7 பாவநிவாரணபலி எப்படியோ, குற்றநிவாரணபலியும் அப்படியே; அவ்விரண்டிற்கும் பிரமாணம் ஒன்றே: அதினாலே பாவநிவிர்த்திசெய்த ஆசாரியனை அது சேரும்.
8 ஒருவனுடைய சர்வாங்க தகனபலியைச் செலுத்தின ஆசாரியன் தான் செலுத்தின தகனபலியின் தோலைத் தனக்காக வைத்துக்கொள்ளவேண்டும்.
9 அடுப்பிலே பாகம்பண்ணப்பட்டதும், சட்டியிலும் தட்டின்மேலும் சமைக்கப்பட்டதுமான போஜனபலியாகவும் அதைச் செலுத்துகிற ஆசாரியனுடையவைகளாயிருக்கும்.
10 எண்ணெயிலே பிசைந்ததும் எண்ணெயிலே பிசையாததுமான சகல போஜனபலியும் ஆரோனுடைய குமாரர் யாவருக்கும் சரிபங்காகச் சேரவேண்டும்.
11 கர்த்தருக்குச் செலுத்துகிற சமாதானபலிகளின் பிரமாணம் என்னவென்றால்,
12 அதை ஸ்தோத்திரத்துக்காகச் செலுத்துவானானால், அவன் ஸ்தோத்திர பலியோடுங்கூட எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா அதிரசங்களையும், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளையும் எண்ணெயிலே பிசைந்து வறுக்கப்பட்ட மெல்லிய மாவினால் செய்த அதிரசங்களையும் படைக்கக்கடவன்.
13 அவைகளைப் படைக்கிறதும் அல்லாமல், புளித்தமாவினால் செய்த அப்பத்தையும், தன்னுடைய சமாதான பலியாகிய ஸ்தோத்திரபலியோடுகூடப் படைக்கவேண்டும்.
14 அந்தப் படைப்பு முழுவதிலும் வகைக்கு ஒவ்வொன்றை எடுத்துக் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் பலியாகச் செலுத்துவானாக; அது சமாதான பலியின் இரத்தத்தைத் தெளித்த ஆசாரியனுடையதாகும்.
15 சமாதானபலியாகிய ஸ்தோத்திரபலியின் மாம்சமானது செலுத்தப்பட்ட அன்றைத்தினமே புசிக்கப்படவேண்டும்; அதில் ஒன்றும் விடியற்காலமட்டும் வைக்கப்படலாகாது.
16 அவன் செலுத்தும் பலி பொருத்தனையாவது உற்சாகபலியாயாவது இருக்குமானால், அது செலுத்தப்படும் நாளிலும், அதில் மீதியாயிருக்கிறது மறுநாளிலும் புசிக்கப்படலாம்.
17 பலியின் மாம்சத்தில் மீதியாயிருக்கிறது மூன்றாம் நாளில் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது.
18 சமாதானபலியின் மாம்சத்தில் மீதியானது மூன்றாம் நாளில் புசிக்கப்படுமானால், அது அங்கிகரிக்கப்படாது; அதைச் செலுத்தினவனுக்கு அது பலிக்காது; அது அருவருப்பாயிருக்கும்; அதைப் புசிக்கிறவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.
19 தீட்டான எந்த வஸ்துவிலாவது அந்த மாம்சம் பட்டதானால் அது புசிக்கப்படாமல் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது; மற்றமாம்சத்தையோ சுத்தமாயிருக்கிறவனெவனும் புசிக்கலாம்.
20 ஒருவன் தீட்டுள்ளவனாயிருக்கையில் கர்த்தருடைய சமாதானபலியின் மாம்சத்தைப் புசித்தால், அவன் தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
21 மனுஷருடைய தீட்டையாவது, தீட்டான மிருகத்தையாவது, அருவருக்கப்படத்தக்க தீட்டான மற்ற எந்த வஸ்துவையாவது ஒருவன் தொட்டிருந்து, கர்த்தருடைய சமாதானபலியின் மாம்சத்திலே புசித்தால், அவன் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார்.
22 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
23 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், மாடு ஆடு வெள்ளாடு என்பவைகளின் கொழுப்பை நீங்கள் புசிக்கலாகாது
24 தானாய்ச் செத்த மிருகத்தின் கொழுப்பையும், பீறுண்ட மிருகத்தின் கொழுப்பையும் பலவிதவேலைகளுக்கு வழங்கலாம்; ஆனாலும் நீங்கள் அதை ஒருபோதும் புசிக்கலாகாது.
25 கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தப்படும் மிருகத்தின் கொழுப்பைப் புசிக்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
26 உங்கள் வாசஸ்தலங்களில் எங்கும் யாதொரு பறவையின் இரத்தத்தையாவது, யாதொரு மிருகத்தின் இரத்தத்தையாவது புசிக்கலாகாது.
27 எவ்வித இரத்தத்தையாகிலும் புசிக்கிற எவனும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்று சொல் என்றார்.
28 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
29 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், கர்த்தருக்குச் சமாதானபலி செலுத்துகிறவன் தான் செலுத்தும் சமாதானபலியைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவருவானாக.
30 கர்த்தருக்குத் தகனபலியாகப் படைப்பவைகளை அவன் கைகளே கொண்டுவரவேண்டும்; மார்க்கண்டத்தையும் அதனோடேகூட அதின்மேல் வைத்த கொழுப்பையும் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டும்படிக்குக் கொண்டுவரக்கடவன்.
31 அப்பொழுது ஆசாரியன் அந்தக் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் தகனிக்கவேண்டும்; மார்க்கண்டமோ ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்.
32 உங்கள் சமாதானபலிகளில் வலது முன்னந்தொடையை ஏறெடுத்துப் படைக்கும் பலியாகப் படைக்கும்படி ஆசாரியனிடத்தில் கொடுப்பீர்களாக.
33 ஆரோனுடைய குமாரரில், சமாதானபலியின் இரத்தத்தையும் கொழுப்பையும் செலுத்துகிறவனுக்கு, வலது முன்னந்தொடை பங்காகச் சேரும்.
34 இஸ்ரவேல் புத்திரரின் சமாதானபலிகளில் அசைவாட்டும் மார்க்கண்டத்தையும் ஏறெடுத்துப் படைக்கும் முன்னந்தொடையையும் நான் அவர்கள் கையில் வாங்கி, அவைகளை ஆசாரியனாகிய ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் இஸ்ரவேல் புத்திரருக்குள் நடக்கும் நித்திய கட்டளையாகக் கொடுத்தேன் என்று சொல் என்றார்.
35 கர்த்தருக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி ஆரோனும் அவன் குமாரரும் நியமிக்கப்பட்ட நாளிலே, இது அபிஷேகம்பண்ணப்பட்ட அவர்களுக்குக் கர்த்தருடைய தகனபலிகளில் கிடைக்கும்படி உண்டான கட்டளை.
36 இப்படி அவர்களுக்கு இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாகக் கொடுக்கும்படி கர்த்தர் அவர்களை அபிஷேகம்பண்ணின நாளிலே கட்டளையிட்டார்.
37 சர்வாங்க தகனபலிக்கும் போஜனபலிக்கும் குற்றநிவாரண பலிக்கும் பிரதிஷ்டை பலிகளுக்கும் சமாதான பலிகளுக்கும் அடுத்த பிரமாணம் இதுவே.
38 கர்த்தருக்குத் தங்கள் பலிகளைச் செலுத்தவேண்டும் என்று அவர் இஸ்ரவேல் புத்திரருக்குச் சீனாய் வனாந்தரத்திலே கற்பிக்கும்போது இவைகளை மோசேக்குச் சீனாய் மலையில் கட்டளையிட்டார்.


1 "This is the law of the guilt offering. It is most holy;
2 in the place where they kill the burnt offering they shall kill the guilt offering, and its blood shall be thrown on the altar round about.
3 And all its fat shall be offered, the fat tail, the fat that covers the entrails,
4 the two kidneys with the fat that is on them at the loins, and the appendage of the liver which he shall take away with the kidneys;
5 the priest shall burn them on the altar as an offering by fire to the LORD; it is a guilt offering.
6 Every male among the priests may eat of it; it shall be eaten in a holy place; it is most holy.
7 The guilt offering is like the sin offering, there is one law for them; the priest who makes atonement with it shall have it.
8 And the priest who offers any man's burnt offering shall have for himself the skin of the burnt offering which he has offered.
9 And every cereal offering baked in the oven and all that is prepared on a pan or a griddle shall belong to the priest who offers it.
10 And every cereal offering, mixed with oil or dry, shall be for all the sons of Aaron, one as well as another.
11 "And this is the law of the sacrifice of peace offerings which one may offer to the LORD.
12 If he offers it for a thanksgiving, then he shall offer with the thank offering unleavened cakes mixed with oil, unleavened wafers spread with oil, and cakes of fine flour well mixed with oil.
13 With the sacrifice of his peace offerings for thanksgiving he shall bring his offering with cakes of leavened bread.
14 And of such he shall offer one cake from each offering, as an offering to the LORD; it shall belong to the priest who throws the blood of the peace offerings.
15 And the flesh of the sacrifice of his peace offerings for thanksgiving shall be eaten on the day of his offering; he shall not leave any of it until the morning.
16 But if the sacrifice of his offering is a votive offering or a freewill offering, it shall be eaten on the day that he offers his sacrifice, and on the morrow what remains of it shall be eaten,
17 but what remains of the flesh of the sacrifice on the third day shall be burned with fire.
18 If any of the flesh of the sacrifice of his peace offering is eaten on the third day, he who offers it shall not be accepted, neither shall it be credited to him; it shall be an abomination, and he who eats of it shall bear his iniquity.
19 "Flesh that touches any unclean thing shall not be eaten; it shall be burned with fire. All who are clean may eat flesh,
20 but the person who eats of the flesh of the sacrifice of the LORD's peace offerings while an uncleanness is on him, that person shall be cut off from his people.
21 And if any one touches an unclean thing, whether the uncleanness of man or an unclean beast or any unclean abomination, and then eats of the flesh of the sacrifice of the LORD's peace offerings, that person shall be cut off from his people."
22 The LORD said to Moses,
23 "Say to the people of Israel, You shall eat no fat, of ox, or sheep, or goat.
24 The fat of an animal that dies of itself, and the fat of one that is torn by beasts, may be put to any other use, but on no account shall you eat it.
25 For every person who eats of the fat of an animal of which an offering by fire is made to the LORD shall be cut off from his people.
26 Moreover you shall eat no blood whatever, whether of fowl or of animal, in any of your dwellings.
27 Whoever eats any blood, that person shall be cut off from his people."
28 The LORD said to Moses,
29 "Say to the people of Israel, He that offers the sacrifice of his peace offerings to the LORD shall bring his offering to the LORD; from the sacrifice of his peace offerings
30 he shall bring with his own hands the offerings by fire to the LORD; he shall bring the fat with the breast, that the breast may be waved as a wave offering before the LORD.
31 The priest shall burn the fat on the altar, but the breast shall be for Aaron and his sons.
32 And the right thigh you shall give to the priest as an offering from the sacrifice of your peace offerings;
33 he among the sons of Aaron who offers the blood of the peace offerings and the fat shall have the right thigh for a portion.
34 For the breast that is waved and the thigh that is offered I have taken from the people of Israel, out of the sacrifices of their peace offerings, and have given them to Aaron the priest and to his sons, as a perpetual due from the people of Israel.
35 This is the portion of Aaron and of his sons from the offerings made by fire to the LORD, consecrated to them on the day they were presented to serve as priests of the LORD;
36 the LORD commanded this to be given them by the people of Israel, on the day that they were anointed; it is a perpetual due throughout their generations."
37 This is the law of the burnt offering, of the cereal offering, of the sin offering, of the guilt offering, of the consecration, and of the peace offerings,
38 which the LORD commanded Moses on Mount Sinai, on the day that he commanded the people of Israel to bring their offerings to the LORD, in the wilderness of Sinai.

1 கர்த்தர் மோசேயை நோக்கி:
2 நீ ஆரோனையும் அவன் குமாரரையும் வரவழைத்து, வஸ்திரங்களையும், அபிஷேக தைலத்தையும், பாவநிவாரணபலிக்கு ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு கூடையில் புளிப்பில்லா அப்பங்களையும் கொண்டு வந்து,
3 சபையெல்லாம் ஆசரிப்புக் கூடார வாசலுக்கு முன்பாகக் கூடிவரச்செய் என்றார்.
4 கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே செய்தான்: சபை ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாகக் கூடினபோது,
5 மோசே சபையை நோக்கி: செய்யும்படி கர்த்தர் இட்ட காரியம் இதுவே என்று சொல்லி,
6 கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் வரவழைத்து, அவர்களை ஜலத்தினால் ஸ்நானம்பண்ணுவித்து,
7 அவனுக்கு உள்ளங்கியைப் போட்டு, இடைக்கச்சையைக் கட்டி, மேலங்கியை உடுத்தி, ஏபோத்தைத் தரித்து, அதின்மேல் ஏபோத்தின் விசித்திரமான கச்சையைக் கட்டி,
8 அவனுக்கு மார்ப்பதக்கத்தை அணிந்து, மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளையும் வைத்து,
9 அவன் தலையிலே பாகையைத் தரித்து, பாகையின்மேல் அவன் நெற்றியிலே பரிசுத்த கிரீடம் என்னும் பொற்பட்டத்தைக் கட்டினான்.
10 பின்பு மோசே, அபிஷேக தைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவற்றையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப்படுத்தி,
11 அதில் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்தின்மேல் ஏழுதரம் தெளித்து, பலிபீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும் அதின் பாதத்தையும் பரிசுத்தம்படுத்தும்படிக்கு அபிஷேகம் பண்ணி,
12 அபிஷேகதைலத்திலே கொஞ்சம் ஆரோனுடைய சிரசின்மேல் வார்த்து, அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி அபிஷேகம்பண்ணினான்.
13 பின்பு மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, ஆரோனின் குமாரரை வரவழைத்து, அவர்களுக்கு அங்கிகளை உடுத்தி, இடைக்கச்சைகளைக் கட்டி, குல்லாக்களைத் தரித்து,
14 பாவநிவாரண பலிக்கான காளையைக் கொண்டு வந்தான்; அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள்;
15 அப்பொழுது அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தை எடுத்து, தன் விரலினால் பலிபீடத்தின் கொம்புகளின்மேல் சுற்றிலும் பூசி, பலிபீடத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிட்டு, அதின்மேல் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு அதைப் பரிசுத்தப்படுத்தினான்.
16 பின்பு மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, குடல்கள்மேல் இருந்த கொழுப்பு முழுவதையும், கல்லீரலின்மேல் இருந்த ஜவ்வையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின் கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தின்மேல் தகனித்து,
17 காளையையும் அதின் தோலையும் மாம்சத்தையும் சாணியையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியிலே சுட்டெரித்தான்.
18 பின்பு அவன் சர்வாங்க தகனபலிக்கு ஆட்டுக்கடாவைக்கொண்டு வந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள்.
19 அப்பொழுது அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தான்.
20 ஆட்டுக்கடா சந்து சந்தாகத் துண்டிக்கப் பட்டது; கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே அதின் தலையையும் துண்டங்களையும் கொழுப்பையும் தகனித்தான்.
21 குடல்களையும் தொடைகளையும் தண்ணீரால் கழுவினபின், மோசே ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனைக்கான சர்வாங்க தகனபலியாகத் தகனித்தான்.
22 பின்பு பிரதிஷ்டைப்படுத்துவதற்குரிய மற்ற ஆட்டுக்கடாவைக் கொண்டு வந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள்.
23 பின்பு அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனுடைய வலது காதின் மடலிலும் வலது கையின் பெருவிரலிலும் வலது காலின் பெருவிரலிலும் பூசினான்.
24 பின்பு ஆரோனுடைய குமாரரையும் அழைத்தான்; மோசே அந்த இரத்தத்திலே கொஞ்சம் அவர்களுடைய வலது காதின் மடலிலும் வலது கையின் பெருவிரலிலும் வலது காலின் பெருவிரலிலும் பூசி, இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,
25 கொழுப்பையும், வாலையும், குடல்கள்மேலிருந்த கொழுப்பு முழுவதையும், கல்லீரலின்மேலிருந்த ஜவ்வையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின் கொழுப்பையும், வலது முன்னந்தொடையையும் எடுத்து,
26 கர்த்தருடைய சந்நிதியில் வைத்திருந்த புளிப்பில்லா அப்பங்களின் கூடையிலுள்ள புளிப்பில்லா அதிரசத்தில் ஒன்றையும், எண்ணெயிட்ட அப்பமாகிய அதிரசத்தில் ஒன்றையும், ஒரு அடையையும் எடுத்து, அந்தக் கொழுப்பின்மேலும், முன்னந்தொடையின்மேலும் வைத்து,
27 அவைகளையெல்லாம் ஆரோனுடைய உள்ளங்கைகளிலும் அவன் குமாரருடைய உள்ளங்கைகளிலும் வைத்து, அசைவாட்டும்பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டி,
28 பின்பு மோசே அவைகளை அவர்கள் உள்ளங்கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேலிருக்கிற தகனபலியின்மேல் தகனித்தான்; அவைகள் சுகந்தவாசனையான பிரதிஷ்டைப்பலிகள்; இது கர்த்தருக்குத் தகனபலியானது.
29 பின்பு மோசே மார்க்கண்டத்தை எடுத்து, அதைக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவிலே அது மோசேயின் பங்காயிற்று.
30 மோசே அபிஷேக தைலத்திலும், பலிபீடத்தின்மேலிருந்த இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, ஆரோன்மேலும் அவன் வஸ்திரங்கள் மேலும், அவன் குமாரர்மேலும் அவர்கள் வஸ்திரங்கள்மேலும் தெளித்து, ஆரோனையும் அவன் வஸ்திரங்களையும், அவன் குமாரரையும் அவன் குமாரரின் வஸ்திரங்களையும் பரிசுத்தப்படுத்தினான்.
31 பின்பு மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் நோக்கி: நீங்கள் அந்த மாம்சத்தை ஆசரிப்புக் கூடாரவாசலிலே வேவித்து, ஆரோனும் அவன் குமாரரும் அதைப் புசிப்பார்களாக என்று கட்டளையிட்டிருக்கிறபடியே, அங்கே அதையும் உங்கள் பிரதிஷ்டைப் பலிகளுள்ள கூடையில் இருக்கிற அப்பத்தையும் புசித்து,
32 மாம்சத்திலும் அப்பத்திலும் மீதியானதை அக்கினியிலே சுட்டெரித்து,
33 பிரதிஷ்டையின் நாட்கள் நிறைவேறும்வரைக்கும், ஏழுநாள் ஆசரிப்புக் கூடாரவாசலை விட்டுப் புறப்படாதிருங்கள்; ஏழு நாளளவும் நீங்கள் பிரதிஷ்டைப்படுத்தப்படுவீர்கள்.
34 இன்று செய்ததுபோல, உங்கள் பாவநிவிர்த்திக்காக இனிமேலும் செய்யவேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டார்.
35 நீங்கள் சாகாதபடிக்கு ஏழுநாள் இரவும் பகலும் ஆசரிப்புக் கூடாரவாசலிலிருந்து, கர்த்தருடைய காவலைக் காக்கக்கடவீர்கள்; இப்படி நான் கற்பிக்கப்பட்டேன் என்றான்.
36 கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்ட எல்லாக் காரியங்களையும் ஆரோனும் அவன் குமாரரும் செய்தார்கள்.


1 The LORD said to Moses,
2 "Take Aaron and his sons with him, and the garments, and the anointing oil, and the bull of the sin offering, and the two rams, and the basket of unleavened bread;
3 and assemble all the congregation at the door of the tent of meeting."
4 And Moses did as the LORD commanded him; and the congregation was assembled at the door of the tent of meeting.
5 And Moses said to the congregation, "This is the thing which the LORD has commanded to be done."
6 And Moses brought Aaron and his sons, and washed them with water.
7 And he put on him the coat, and girded him with the girdle, and clothed him with the robe, and put the ephod upon him, and girded him with the skilfully woven band of the ephod, binding it to him therewith.
8 And he placed the breastpiece on him, and in the breastpiece he put the Urim and the Thummim.
9 And he set the turban upon his head, and on the turban, in front, he set the golden plate, the holy crown, as the LORD commanded Moses.
10 Then Moses took the anointing oil, and anointed the tabernacle and all that was in it, and consecrated them.
11 And he sprinkled some of it on the altar seven times, and anointed the altar and all its utensils, and the laver and its base, to consecrate them.
12 And he poured some of the anointing oil on Aaron's head, and anointed him, to consecrate him.
13 And Moses brought Aaron's sons, and clothed them with coats, and girded them with girdles, and bound caps on them, as the LORD commanded Moses.
14 Then he brought the bull of the sin offering; and Aaron and his sons laid their hands upon the head of the bull of the sin offering.
15 And Moses killed it, and took the blood, and with his finger put it on the horns of the altar round about, and purified the altar, and poured out the blood at the base of the altar, and consecrated it, to make atonement for it.
16 And he took all the fat that was on the entrails, and the appendage of the liver, and the two kidneys with their fat, and Moses burned them on the altar.
17 But the bull, and its skin, and its flesh, and its dung, he burned with fire outside the camp, as the LORD commanded Moses.
18 Then he presented the ram of the burnt offering; and Aaron and his sons laid their hands on the head of the ram.
19 And Moses killed it, and threw the blood upon the altar round about.
20 And when the ram was cut into pieces, Moses burned the head and the pieces and the fat.
21 And when the entrails and the legs were washed with water, Moses burned the whole ram on the altar, as a burnt offering, a pleasing odor, an offering by fire to the LORD, as the LORD commanded Moses.
22 Then he presented the other ram, the ram of ordination; and Aaron and his sons laid their hands on the head of the ram.
23 And Moses killed it, and took some of its blood and put it on the tip of Aaron's right ear and on the thumb of his right hand and on the great toe of his right foot.
24 And Aaron's sons were brought, and Moses put some of the blood on the tips of their right ears and on the thumbs of their right hands and on the great toes of their right feet; and Moses threw the blood upon the altar round about.
25 Then he took the fat, and the fat tail, and all the fat that was on the entrails, and the appendage of the liver, and the two kidneys with their fat, and the right thigh;
26 and out of the basket of unleavened bread which was before the LORD he took one unleavened cake, and one cake of bread with oil, and one wafer, and placed them on the fat and on the right thigh;
27 and he put all these in the hands of Aaron and in the hands of his sons, and waved them as a wave offering before the LORD.
28 Then Moses took them from their hands, and burned them on the altar with the burnt offering, as an ordination offering, a pleasing odor, an offering by fire to the LORD.
29 And Moses took the breast, and waved it for a wave offering before the LORD; it was Moses' portion of the ram of ordination, as the LORD commanded Moses.
30 Then Moses took some of the anointing oil and of the blood which was on the altar, and sprinkled it upon Aaron and his garments, and also upon his sons and his sons' garments; so he consecrated Aaron and his garments, and his sons and his sons' garments with him.
31 And Moses said to Aaron and his sons, "Boil the flesh at the door of the tent of meeting, and there eat it and the bread that is in the basket of ordination offerings, as I commanded, saying, `Aaron and his sons shall eat it';
32 and what remains of the flesh and the bread you shall burn with fire.
33 And you shall not go out from the door of the tent of meeting for seven days, until the days of your ordination are completed, for it will take seven days to ordain you.
34 As has been done today, the LORD has commanded to be done to make atonement for you.
35 At the door of the tent of meeting you shall remain day and night for seven days, performing what the LORD has charged, lest you die; for so I am commanded."
36 And Aaron and his sons did all the things which the LORD commanded by Moses.

1 எட்டாம் நாளிலே மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் இஸ்ரவேலின் மூப்பரையும் அழைத்து,
2 ஆரோனை நோக்கி: நீ பாவநிவாரணபலியாகப் பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், சர்வாங்க தகனபலியாகப் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும் தெரிந்துகொண்டு, கர்த்தருடைய சந்நிதியில் பலியிடக்கடவாய்.
3 மேலும் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: கர்த்தருடைய சந்நிதியில் பலியிடும்படிக்கு, நீங்கள் பாவநிவாரண பலியாகப் பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக் கடாவையும், சர்வாங்க தகனபலியாக ஒரு வயதான பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், ஒரு ஆட்டுக்குட்டியையும்,
4 சமாதானபலிகளாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், எண்ணெயிலே பிசைந்த போஜனபலியையும் கொண்டுவாருங்கள்; இன்று கர்த்தர் உங்களுக்குத் தரிசனமாவார் என்று சொல் என்றான்.
5 மோசே கட்டளையிட்டவைகளை அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். சபையார் எல்லாரும் சேர்ந்து, கர்த்தருடைய சந்நிதியில் நின்றார்கள்.
6 அப்பொழுது மோசே: கர்த்தர் கட்டளையிட்ட இந்தக் காரியத்தைச் செய்யுங்கள்; கர்த்தருடைய மகிமை உங்களுக்குக் காணப்படும் என்றான்.
7 மோசே ஆரோனை நோக்கி: நீ பலிபீடத்தண்டையில் சேர்ந்து, கர்த்தர் கட்டளையிட்டபடியே, உன் பாவநிவாரண பலியையும் உன் சர்வாங்க தகனபலியையும் செலுத்தி, உனக்காகவும் ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, ஜனங்களுடைய பலியையும் செலுத்தி, அவர்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய் என்றான்.
8 அப்பொழுது ஆரோன் பலிபீடத்தண்டையில் சேர்ந்து, தன் பாவநிவாரண பலியாகிய கன்றுக்குட்டியைக் கொன்றான்.
9 ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் தன் விரலை அந்த இரத்தத்தில் தோய்த்து, பலிபீடத்தின் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே ஊற்றி,
10 பாவநிவாரணபலியின் கொழுப்பையும், குண்டிக்காய்களையும், கல்லீரலில் எடுத்த ஜவ்வையும், கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, பலிபீடத்தின்மேல் தகனித்து,
11 மாம்சத்தையும் தோலையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியிலே சுட்டெரித்தான்.
12 பின்பு சர்வாங்க தகனபலியையும் கொன்றான்; ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனித்து,
13 சர்வாங்க தகனபலியின் துண்டங்களையும் தலையையும் அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனித்து,
14 குடல்களையும் தொடைகளையும் கழுவி, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியின்மேல் தகனித்தான்.
15 பின்பு அவன் ஜனங்களின் பலியைக் கொண்டுவந்து, ஜனங்களின் பாவநிவிர்த்திக்குரிய வெள்ளாட்டுக்கடாவைக் கொன்று, முந்தினதைப் பலியிட்டதுபோல, அதைப்பாவநிவாரணபலியாக்கி,
16 சர்வாங்க தகனபலியையும் கொண்டுவந்து, நியமத்தின்படி, அதைப் பலியிட்டு,
17 போஜனபலியையும் கொண்டுவந்து, அதில் கைநிறைய எடுத்து, அதைக் காலையில் செலுத்தும் சர்வாங்க தகனபலியுடனே பலிபீடத்தின்மேல் தகனித்தான்.
18 பின்பு ஜனங்களின் சமாதானபலிகளாகிய காளையையும் ஆட்டுக்கடாவையும் கொன்றான்; ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அதைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,
19 காளையிலும் ஆட்டுக்கடாவிலும் எடுத்த கொழுப்பையும், வாலையும், குடல்களை மூடிய ஜவ்வையும், குண்டிக்காய்களையும், கல்லீரலின்மேல் இருந்த ஜவ்வையும் கொண்டுவந்து,
20 கொழுப்பை மார்க்கண்டங்களின்மேல் வைத்தார்கள்; அந்தக் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் தகனித்தான்.
21 மார்க்கண்டங்களையும் வலது முன்னந்தொடையையும், மோசே கட்டளையிட்டபடியே, ஆரோன் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான்.
22 பின்பு ஆரோன் ஜனங்களுக்கு நேராகத் தன் கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்து, தான் பாவநிவாரணபலியையும், சர்வாங்க தகனபலியையும், சமாதானபலிகளையும் செலுத்தின இடத்திலிருந்து இறங்கினான்.
23 பின்பு மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசித்து, வெளியே வந்து, ஜனங்களை ஆசீர்வதித்தார்கள்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை சகல ஜனங்களுக்கும் காணப்பட்டது.
24 அன்றியும் கர்த்தருடைய சந்நிதியிலிருந்து அக்கினி புறப்பட்டு, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியையும் கொழுப்பையும் எரித்துவிட்டது; ஜனங்களெல்லாரும் அதைக் கண்டபோது ஆரவாரித்து முகங்குப்புற விழுந்தார்கள்.


1 On the eighth day Moses called Aaron and his sons and the elders of Israel;
2 and he said to Aaron, "Take a bull calf for a sin offering, and a ram for a burnt offering, both without blemish, and offer them before the LORD.
3 And say to the people of Israel, `Take a male goat for a sin offering, and a calf and a lamb, both a year old without blemish, for a burnt offering,
4 and an ox and a ram for peace offerings, to sacrifice before the LORD, and a cereal offering mixed with oil; for today the LORD will appear to you.'"
5 And they brought what Moses commanded before the tent of meeting; and all the congregation drew near and stood before the LORD.
6 And Moses said, "This is the thing which the LORD commanded you to do; and the glory of the LORD will appear to you."
7 Then Moses said to Aaron, "Draw near to the altar, and offer your sin offering and your burnt offering, and make atonement for yourself and for the people; and bring the offering of the people, and make atonement for them; as the LORD has commanded."
8 So Aaron drew near to the altar, and killed the calf of the sin offering, which was for himself.
9 And the sons of Aaron presented the blood to him, and he dipped his finger in the blood and put it on the horns of the altar, and poured out the blood at the base of the altar;
10 but the fat and the kidneys and the appendage of the liver from the sin offering he burned upon the altar, as the LORD commanded Moses.
11 The flesh and the skin he burned with fire outside the camp.
12 And he killed the burnt offering; and Aaron's sons delivered to him the blood, and he threw it on the altar round about.
13 And they delivered the burnt offering to him, piece by piece, and the head; and he burned them upon the altar.
14 And he washed the entrails and the legs, and burned them with the burnt offering on the altar.
15 Then he presented the people's offering, and took the goat of the sin offering which was for the people, and killed it, and offered it for sin, like the first sin offering.
16 And he presented the burnt offering, and offered it according to the ordinance.
17 And he presented the cereal offering, and filled his hand from it, and burned it upon the altar, besides the burnt offering of the morning.
18 He killed the ox also and the ram, the sacrifice of peace offerings for the people; and Aaron's sons delivered to him the blood, which he threw upon the altar round about,
19 and the fat of the ox and of the ram, the fat tail, and that which covers the entrails, and the kidneys, and the appendage of the liver;
20 and they put the fat upon the breasts, and he burned the fat upon the altar,
21 but the breasts and the right thigh Aaron waved for a wave offering before the LORD; as Moses commanded.
22 Then Aaron lifted up his hands toward the people and blessed them; and he came down from offering the sin offering and the burnt offering and the peace offerings.
23 And Moses and Aaron went into the tent of meeting; and when they came out they blessed the people, and the glory of the LORD appeared to all the people.
24 And fire came forth from before the LORD and consumed the burnt offering and the fat upon the altar; and when all the people saw it, they shouted, and fell on their faces.

1 பின்பு ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியூவும் தன்தன் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் அக்கினியையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதியில் கொண்டுவந்தார்கள்.
2 அப்பொழுது அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, அவர்களைப் பட்சித்தது; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் செத்தார்கள்.
3 அப்பொழுது மோசே ஆரோனை நோக்கி: என்னிடத்தில் சேருகிறவர்களால் நான் பரிசுத்தம்பண்ணப்பட்டு, சகல ஜனங்களுக்கும் முன்பாக நான் மகிமைப்படுவேன் என்று கர்த்தர் சொன்னது இதுதான் என்றான்; ஆரோன் பேசாமலிருந்தான்.
4 பின்பு மோசே ஆரோனின் சிறிய தகப்பனான உசியேலின் குமாரராகிய மீசவேலையும் எல்சாபானையும் அழைத்து: நீங்கள் கிட்ட வந்து, உங்கள் சகோதரரைப் பரிசுத்த ஸ்தலத்துக்கு முன்னின்று எடுத்து, பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோங்கள் என்றான்.
5 மோசே சொன்னபடி அவர்கள் கிட்டவந்து, அவர்களை அவர்கள் உடுத்தியிருந்த சட்டைகளோடும் எடுத்துப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோனார்கள்.
6 மோசே ஆரோனையும் எலெயாசார் இத்தாமார் என்னும் அவன் குமாரரையும் நோக்கி: நீங்கள் சாகாதபடிக்கும், சபையனைத்தின்மேலும் கடுங்கோபம் வராதபடிக்கும், நீங்கள் உங்கள் தலைப்பாகையை எடுத்துப்போடாமலும், உங்கள் வஸ்திரங்களைக் கிழிக்காமலும் இருப்பீர்களாக; உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் கர்த்தர் கொழுத்தின இந்த அக்கினிக்காகப் புலம்புவார்களாக.
7 நீங்கள் சாகாதபடிக்கு ஆசரிப்புக் கூடாரவாசலிலிருந்து புறப்படாதிருங்கள்; கர்த்தருடைய அபிஷேகதைலம் உங்கள்மேல் இருக்கிறதே என்றான்; அவர்கள் மோசேயினுடைய வார்த்தையின்படியே செய்தார்கள்.
8 கர்த்தர் ஆரோனை நோக்கி:
9 நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, திராட்சரசத்தையும் மதுவையும் குடிக்கவேண்டாம்.
10 பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும், தீட்டுள்ளதற்கும் தீட்டில்லாததற்கும், வித்தியாசம்பண்ணும்படிக்கும்,
11 கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்ன சகல பிரமாணங்களையும் அவர்களுக்குப் போதிக்கும்படிக்கும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்.
12 மோசே ஆரோனையும் மீதியாயிருந்த அவன் குமாரராகிய எலெயாசாரையும் இத்தாமாரையும் நோக்கி: நீங்கள் கர்த்தருடைய தகனபலிகளில் மீதியான போஜனபலியை எடுத்து, பலிபீடத்தண்டையிலே புளிப்பில்லாததாகப் புசியுங்கள்; அது மகா பரிசுத்தமானது.
13 அதைப் பரிசுத்த ஸ்தலத்திலே புசியுங்கள்; அது கர்த்தருடைய தகனபலிகளில் உனக்கும் உன்குமாரருக்கும் ஏற்படுத்தப்பட்டதாயிருக்கிறது; இப்படிக் கட்டளை பெற்றிருக்கிறேன்.
14 அசைவாட்டும் மார்க்கண்டத்தையும், ஏறெடுத்துப் படைக்கும் முன்னந் தொடையையும், நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் குமாரத்திகளும் சுத்தமான ஸ்தலத்திலே புசிப்பீர்களாக; இஸ்ரவேல் புத்திரருடைய சமாதானபலிகளில் அவைகள் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் கிடைக்கும்படி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
15 கொழுப்பாகிய தகனபலிகளோடே அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டும்படி ஏறெடுத்துப் படைக்கும் முன்னந் தொடையையும், அசைவாட்டும் மார்க்கண்டத்தையும் கொண்டுவருவார்கள்; அது கர்த்தர் கட்டளையிட்டபடியே உனக்கும் உன்பிள்ளைகளுக்கும் நித்திய கட்டளையாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றான்.
16 பாவநிவாரணபலியாகச் செலுத்தப்பட்ட வெள்ளாட்டுக்கடாவை மோசே தேடிப்பார்த்தான்; அது தகனிக்கப்பட்டிருந்தது; ஆகையால், மீதியாயிருந்த எலெயாசார் இத்தாமார் என்னும் ஆரோனின் குமாரர்மேல் அவன் கோபங்கொண்டு:
17 பாவநிவாரணபலியை நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தில் புசியாமற்போனதென்ன? அது மகா பரிசுத்தமாயிருக்கிறதே; சபையின் அக்கிரமத்தைச் சுமந்து தீர்ப்பதற்குக் கர்த்தருடைய சந்நிதியில் அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, அதை உங்களுக்குக் கொடுத்தாரே.
18 அதின் இரத்தம் பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே கொண்டுவரப்படவில்லையே; நான் கட்டளையிட்டபடி நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கவேண்டியதாயிருந்ததே என்றான்.
19 அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: அவர்கள் தங்கள் பாவநிவாரணபலியையும், தங்கள் சர்வாங்க தகனபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தின இன்றுதானே எனக்கு இப்படி நேரிட்டதே; பாவநிவாரணபலியை இன்று நான் புசித்தேனானால், அது கர்த்தரின் பார்வைக்கு நன்றாய் இருக்குமோ என்றான்.
20 மோசே அதைக் கேட்டபோது அமைதலாயிருந்தான்.


1 Now Nadab and Abi'hu, the sons of Aaron, each took his censer, and put fire in it, and laid incense on it, and offered unholy fire before the LORD, such as he had not commanded them.
2 And fire came forth from the presence of the LORD and devoured them, and they died before the LORD.
3 Then Moses said to Aaron, "This is what the LORD has said, `I will show myself holy among those who are near me, and before all the people I will be glorified.'" And Aaron held his peace.
4 And Moses called Mish'a-el and Elza'phan, the sons of Uz'ziel the uncle of Aaron, and said to them, "Draw near, carry your brethren from before the sanctuary out of the camp."
5 So they drew near, and carried them in their coats out of the camp, as Moses had said.
6 And Moses said to Aaron and to Elea'zar and Ith'amar, his sons, "Do not let the hair of your heads hang loose, and do not rend your clothes, lest you die, and lest wrath come upon all the congregation; but your brethren, the whole house of Israel, may bewail the burning which the LORD has kindled.
7 And do not go out from the door of the tent of meeting, lest you die; for the anointing oil of the LORD is upon you." And they did according to the word of Moses.
8 And the LORD spoke to Aaron, saying,
9 "Drink no wine nor strong drink, you nor your sons with you, when you go into the tent of meeting, lest you die; it shall be a statute for ever throughout your generations.
10 You are to distinguish between the holy and the common, and between the unclean and the clean;
11 and you are to teach the people of Israel all the statutes which the LORD has spoken to them by Moses."
12 And Moses said to Aaron and to Elea'zar and Ith'amar, his sons who were left, "Take the cereal offering that remains of the offerings by fire to the LORD, and eat it unleavened beside the altar, for it is most holy;
13 you shall eat it in a holy place, because it is your due and your sons' due, from the offerings by fire to the LORD; for so I am commanded.
14 But the breast that is waved and the thigh that is offered you shall eat in any clean place, you and your sons and your daughters with you; for they are given as your due and your sons' due, from the sacrifices of the peace offerings of the people of Israel.
15 The thigh that is offered and the breast that is waved they shall bring with the offerings by fire of the fat, to wave for a wave offering before the LORD, and it shall be yours, and your sons' with you, as a due for ever; as the LORD has commanded."
16 Now Moses diligently inquired about the goat of the sin offering, and behold, it was burned! And he was angry with Elea'zar and Ith'amar, the sons of Aaron who were left, saying,
17 "Why have you not eaten the sin offering in the place of the sanctuary, since it is a thing most holy and has been given to you that you may bear the iniquity of the congregation, to make atonement for them before the LORD?
18 Behold, its blood was not brought into the inner part of the sanctuary. You certainly ought to have eaten it in the sanctuary, as I commanded."
19 And Aaron said to Moses, "Behold, today they have offered their sin offering and their burnt offering before the LORD; and yet such things as these have befallen me! If I had eaten the sin offering today, would it have been acceptable in the sight of the LORD?"
20 And when Moses heard that, he was content.

1 கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
2 நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், பூமியிலிருக்கிற சகல மிருகங்களிலும் நீங்கள் புசிக்கத்தக்க ஜீவ ஜந்துக்கள் யாதெனில்:
3 மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும் அசைபோடுகிறதுமானவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.
4 ஆனாலும் அசைபோடுகிறதும் விரிகுளம்புள்ளதுமானவைகளில் ஒட்டகமானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லாதபடியால், அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.
5 குழிமுசலானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.
6 முயலானது அசைபோடுகிறதாயிருந்தும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.
7 பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாகப் பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.
8 இவைகளின் மாம்சத்தைப் புசிக்கவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.
9 ஜலத்திலிருக்கிறவைகளில் நீங்கள் புசிக்கத்தக்கது யாதெனில்; கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களிலே சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.
10 ஆனாலும், கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களில் நீந்துகிறதும் வாழ்கிறதுமான பிராணிகளில் சிறகும் செதிளும் இல்லாதவைகள் யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.
11 அவைகள் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது; அவைகளின் மாம்சத்தைப் புசியாதிருந்து, அவைகளின் உடல்களை அருவருப்பீர்களாக.
12 தண்ணீர்களிலே சிறகும் செதிளும் இல்லாத யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது.
13 பறவைகளில் நீங்கள் புசியாமல் அருவருக்கவேண்டியவைகள் யாதெனில்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும்,
14 பருந்தும் சகலவித வல்லுூறும்,
15 சகலவித காகங்களும்,
16 தீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவித டேகையும்,
17 ஆந்தையும், நீர்க்காகமும், கோட்டானும்,
18 நாரையும், கூழக்கடாவும், குருகும்,
19 கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வெளவாலும் ஆகிய இவைகளே.
20 பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற ஊரும் பிராணிகள் யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.
21 ஆகிலும் பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற யாவிலும், நீங்கள் புசிக்கத்தக்கது யாதெனில் தரையிலே தத்துகிறதற்குக் கால்களுக்குமேல் தொடைகள் உண்டாயிருக்கிறவைகளிலே,
22 வெட்டுக்கிளி ஜாதியாயிருக்கிறதையும், சோலையாம் என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும், அர்கொல் என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும், ஆகாபு என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும் நீங்கள் புசிக்கலாம்.
23 பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற மற்ற யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.
24 அவைகளாலே தீட்டுப்படுவீர்கள்; அவைகளின் உடலைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
25 அவைகளின் உடலைத் சுமந்தவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
26 விரிநகங்களுள்ளவைகளாயிருந்தும், இருபிளவான குளம்பில்லாமலும் அசைபோடாமலும் இருக்கிற மிருகங்கள் யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகளைத் தொடுகிறவன் எவனும் தீட்டுப்படுவான்.
27 நாலுகாலால் நடக்கிற சகல ஜீவன்களிலும் தங்கள் உள்ளங்கால்களை ஊன்றி நடக்கிற யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகளின் உடலைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
28 அவைகளின் உடலைச் சுமந்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.
29 தரையில் ஊருகிற பிராணிகளில் உங்களுக்கு அசுத்தமானவைகள் எவையெனில் பெருச்சாளியும், எலியும், சகலவிதமான ஆமையும்,
30 உடும்பும், அழுங்கும், ஓணானும், பல்லியும், பச்சோந்தியும் ஆகிய இவைகளே.
31 சகல ஊரும் பிராணிகளிலும் இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது; அவைகளில் செத்ததைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
32 அவைகளில் செத்தது ஒன்று யாதொன்றின்மேல் விழுந்தால் அது தீட்டுப்பட்டிருக்கும்; அது மரப்பாத்திரமானாலும், வஸ்திரமானாலும், தோலானாலும், பையானாலும், வேலை செய்கிறதற்கேற்ற ஆயுதமானாலும் சாயங்காலம்மட்டும் தீட்டாயிருக்கும்; அது தண்ணீரில் போடப்படவேண்டும், அப்பொழுது சுத்தமாகும்.
33 அவைகளில் ஒன்று மண்பாண்டத்துக்குள் விழுந்தால், அதற்குள் இருக்கிறவை யாவும் தீட்டுப்பட்டிருக்கும்; அதை உடைத்துப்போடவேண்டும்.
34 புசிக்கத்தக்க போஜனபதார்த்தத்தின்மேல் அந்தத் தண்ணீர் பட்டால், அது தீட்டாகும்; குடிக்கத்தக்க எந்தப்பானமும் அப்படிப்பட்ட பாத்திரத்தினால் தீட்டுப்படும்.
35 அவைகளின் உடலில் யாதொன்று எதின்மேல் விழுதோ, அதுவும் தீட்டுப்படும்; அடுப்பானாலும் மண்தொட்டியானாலும் தகர்க்கப்படுவதாக; அவைகள் தீட்டுப்பட்டிருக்கும்; ஆகையால், அவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.
36 ஆனாலும், நீரூற்றும் மிகுந்த ஜலம் உண்டாகிய கிணறும் சுத்தமாயிருக்கும்; அவைகளிலுள்ள உடலைத் தொடுகிறவனோ தீட்டுப்படுவான்.
37 மேற்சொல்லியவைகளின் உடலில் யாதொன்று விதைத்தானியத்தின்மேல் விழுந்தால், அது தீட்டுப்படாது.
38 அந்த உடலில் யாதொன்று தண்ணீர் வார்க்கப்பட்டிருக்கிற விதையின்மேல் விழுந்ததானால், அது உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.
39 உங்களுக்கு ஆகாரத்துக்கான ஒரு மிருகம் செத்தால், அதின் உடலைத் தொடுகிறவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
40 அதின் மாம்சத்தைப் புசித்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அதின் உடலை எடுத்துப் போனவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவனும் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
41 தரையில் ஊருகிற பிராணிகளெல்லாம் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது; அவை புசிக்கப்படலாகாது.
42 தரையில் ஊருகிற சகல பிராணிகளிலும், வயிற்றினால் நகருகிறவைகளையும், நாலுகாலால் நடமாடுகிறவைகளையும், அநேகங் கால்களுள்ளவைகளையும் புசியாதிருப்பீர்களாக; அவைகள் அருவருப்பானவைகள்.
43 ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களை அருவருப்பாக்கிக்கொள்ளாமலும், அவைகளால் தீட்டுப்படாமலும் இருப்பீர்களாக; அவைகளாலே நீங்கள் தீட்டுப்படுவீர்கள்.
44 நான் உங்கள் தேவனாகிய கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால் தரையில் ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களைத் தீட்டுப்படுத்தாமல், உங்களைப் பரிசுத்தமாக்கிக்கொண்டு, பரிசுத்தராயிருப்பீர்களாக.
45 நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக.
46 சுத்தமானதற்கும் அசுத்தமானதற்கும், புசிக்கத்தக்க ஜந்துக்களுக்கும் புசிக்கத்தகாத ஜந்துக்களுக்கும் வித்தியாசம்பண்ணும்பொருட்டு,
47 மிருகத்துக்கும் பறவைகளுக்கும், தண்ணீர்களில் நீந்துகிற சகல ஜீவஜந்துக்களுக்கும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளுக்கும் அடுத்த பிரமாணம் இதுவே என்று சொல்லுங்கள் என்றார்.


1 And the LORD said to Moses and Aaron,
2 "Say to the people of Israel, These are the living things which you may eat among all the beasts that are on the earth.
3 Whatever parts the hoof and is cloven-footed and chews the cud, among the animals, you may eat.
4 Nevertheless among those that chew the cud or part the hoof, you shall not eat these: The camel, because it chews the cud but does not part the hoof, is unclean to you.
5 And the rock badger, because it chews the cud but does not part the hoof, is unclean to you.
6 And the hare, because it chews the cud but does not part the hoof, is unclean to you.
7 And the swine, because it parts the hoof and is cloven-footed but does not chew the cud, is unclean to you.
8 Of their flesh you shall not eat, and their carcasses you shall not touch; they are unclean to you.
9 "These you may eat, of all that are in the waters. Everything in the waters that has fins and scales, whether in the seas or in the rivers, you may eat.
10 But anything in the seas or the rivers that has not fins and scales, of the swarming creatures in the waters and of the living creatures that are in the waters, is an abomination to you.
11 They shall remain an abomination to you; of their flesh you shall not eat, and their carcasses you shall have in abomination.
12 Everything in the waters that has not fins and scales is an abomination to you.
13 "And these you shall have in abomination among the birds, they shall not be eaten, they are an abomination: the eagle, the vulture, the osprey,
14 the kite, the falcon according to its kind,
15 every raven according to its kind,
16 the ostrich, the nighthawk, the sea gull, the hawk according to its kind,
17 the owl, the cormorant, the ibis,
18 the water hen, the pelican, the carrion vulture,
19 the stork, the heron according to its kind, the hoopoe, and the bat.
20 "All winged insects that go upon all fours are an abomination to you.
21 Yet among the winged insects that go on all fours you may eat those which have legs above their feet, with which to leap on the earth.
22 Of them you may eat: the locust according to its kind, the bald locust according to its kind, the cricket according to its kind, and the grasshopper according to its kind.
23 But all other winged insects which have four feet are an abomination to you.
24 "And by these you shall become unclean; whoever touches their carcass shall be unclean until the evening,
25 and whoever carries any part of their carcass shall wash his clothes and be unclean until the evening.
26 Every animal which parts the hoof but is not cloven-footed or does not chew the cud is unclean to you; every one who touches them shall be unclean.
27 And all that go on their paws, among the animals that go on all fours, are unclean to you; whoever touches their carcass shall be unclean until the evening,
28 and he who carries their carcass shall wash his clothes and be unclean until the evening; they are unclean to you.
29 "And these are unclean to you among the swarming things that swarm upon the earth: the weasel, the mouse, the great lizard according to its kind,
30 the gecko, the land crocodile, the lizard, the sand lizard, and the chameleon.
31 These are unclean to you among all that swarm; whoever touches them when they are dead shall be unclean until the evening.
32 And anything upon which any of them falls when they are dead shall be unclean, whether it is an article of wood or a garment or a skin or a sack, any vessel that is used for any purpose; it must be put into water, and it shall be unclean until the evening; then it shall be clean.
33 And if any of them falls into any earthen vessel, all that is in it shall be unclean, and you shall break it.
34 Any food in it which may be eaten, upon which water may come, shall be unclean; and all drink which may be drunk from every such vessel shall be unclean.
35 And everything upon which any part of their carcass falls shall be unclean; whether oven or stove, it shall be broken in pieces; they are unclean, and shall be unclean to you.
36 Nevertheless a spring or a cistern holding water shall be clean; but whatever touches their carcass shall be unclean.
37 And if any part of their carcass falls upon any seed for sowing that is to be sown, it is clean;
38 but if water is put on the seed and any part of their carcass falls on it, it is unclean to you.
39 "And if any animal of which you may eat dies, he who touches its carcass shall be unclean until the evening,
40 and he who eats of its carcass shall wash his clothes and be unclean until the evening; he also who carries the carcass shall wash his clothes and be unclean until the evening.
41 "Every swarming thing that swarms upon the earth is an abomination; it shall not be eaten.
42 Whatever goes on its belly, and whatever goes on all fours, or whatever has many feet, all the swarming things that swarm upon the earth, you shall not eat; for they are an abomination.
43 You shall not make yourselves abominable with any swarming thing that swarms; and you shall not defile yourselves with them, lest you become unclean.
44 For I am the LORD your God; consecrate yourselves therefore, and be holy, for I am holy. You shall not defile yourselves with any swarming thing that crawls upon the earth.
45 For I am the LORD who brought you up out of the land of Egypt, to be your God; you shall therefore be holy, for I am holy."
46 This is the law pertaining to beast and bird and every living creature that moves through the waters and every creature that swarms upon the earth,
47 to make a distinction between the unclean and the clean and between the living creature that may be eaten and the living creature that may not be eaten.

1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
2 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒரு ஸ்திரீ கர்ப்பவதியாகி ஆண்பிள்ளையைப் பெற்றால், அவள் சூதகஸ்திரீ விலக்கமாயிருக்கும் நாட்களுக்குச் சரியாக ஏழுநாள் தீட்டாயிருப்பாள்.
3 எட்டாம் நாளிலே அந்தப் பிள்ளையினுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படக்கடவது.
4 பின்பு அவள் முப்பத்துமூன்றுநாள் தன் உதிரச் சுத்திகரிப்பு நிலையிலே இருந்து, சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறுமளவும் பரிசுத்தமான யாதொரு வஸ்துவைத் தொடவும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் வரவுங் கூடாது.
5 பெண்பிள்ளையைப் பெற்றாளாகில், அவள், இரண்டு வாரம் சூதகஸ்திரீயைப்போலத் தீட்டாயிருந்து, பின்பு அறுபத்தாறுநாள் உதிரச் சுத்திகரிப்பு நிலையிலே இருக்கக்கடவள்.
6 அவள் ஆண்பிள்ளையையாவது பெண்பிள்ளையையாவது பெற்றதற்காக அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபின்பு, அவள் ஒரு வயதான ஆட்டுக்குட்டியை சர்வாங்க தகனபலியாகவும், ஒரு புறாக்குஞ்சையாவது காட்டுப்புறாவையாவது பாவநிவாரண பலியாகவும், ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்திற்குக் கொண்டுவரக்கடவள்.
7 அதை அவன் கர்த்தருடைய சந்நிதியில் பலியிட்டு, அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்வானாக; அப்பொழுது அவள் தன் உதிர ஊறலின் தீட்டு நீங்கிச் சுத்தமாவாள். இது ஆண்பிள்ளையையாவது பெண்பிள்ளையையாவது பெற்றவளைக்குறித்த பிரமாணம்.
8 ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவளுக்குச் சக்தியில்லாதிருந்தால், இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைச் சர்வாங்க தகனபலியாகவும் மற்றொன்றைப் பாவநிவாரணபலியாகவும் கொண்டுவரக்கடவள்; அதினால் ஆசாரியன் அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவள் சுத்தமாவாள் என்று சொல் என்றார்.


1 The LORD said to Moses,
2 "Say to the people of Israel, If a woman conceives, and bears a male child, then she shall be unclean seven days; as at the time of her menstruation, she shall be unclean.
3 And on the eighth day the flesh of his foreskin shall be circumcised.
4 Then she shall continue for thirty-three days in the blood of her purifying; she shall not touch any hallowed thing, nor come into the sanctuary, until the days of her purifying are completed.
5 But if she bears a female child, then she shall be unclean two weeks, as in her menstruation; and she shall continue in the blood of her purifying for sixty-six days.
6 "And when the days of her purifying are completed, whether for a son or for a daughter, she shall bring to the priest at the door of the tent of meeting a lamb a year old for a burnt offering, and a young pigeon or a turtledove for a sin offering,
7 and he shall offer it before the LORD, and make atonement for her; then she shall be clean from the flow of her blood. This is the law for her who bears a child, either male or female.
8 And if she cannot afford a lamb, then she shall take two turtledoves or two young pigeons, one for a burnt offering and the other for a sin offering; and the priest shall make atonement for her, and she shall be clean."

1 பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
2 ஒரு மனிதனுடைய சரீரத்தின்மேல் குஷ்டரோகம்போலிருக்கிற ஒரு தடிப்பாவது அசறாவது வெள்ளைப்படராவது உண்டானால், அவன் ஆசாரியனாகிய ஆரோனிடத்திலாகிலும், ஆசாரியராகிய அவன் குமாரரில் ஒருவனிடத்திலாகிலும் கொண்டுவரப்படக்கடவன்.
3 அப்பொழுது ஆசாரியன் அவன் சரீரத்தின்மேல் இருக்கிற ரோகத்தைப் பார்க்கவேண்டும்; ரோகம் இருக்கும் இடத்தில் மயிர் வெளுத்தும், ரோகமுள்ள இடம் அவனுடைய மற்றச் சரீரத்தைப்பார்க்கிலும் அதிகமாய்க் குழிந்தும் இருந்தால் அது குஷ்டரோகம்; ஆசாரியன் அவனைப் பார்த்தபின்பு, அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்.
4 அவன் சரீரத்தின்மேல் வெள்ளைப் படர்ந்திருந்தாலும், அவ்விடம் அவனுடைய மற்றத் தோலைப்பார்க்கிலும் அதிக பள்ளமாயிராமலும், அதின் மயிர் வெள்ளையாக மாறாமலும் இருந்தால், ஆசாரியன் அவனை ஏழுநாள் அடைத்துவைத்து,
5 ஏழாம் நாளில் அவனைப் பார்க்கக்கடவன்; தோலில் ரோகம் அதிகப்படாமல், அவன் பார்வைக்கு ரோகம் நின்றிருந்தால், ஆசாரியன் இரண்டாந்தரம் அவனை ஏழுநாள் அடைத்துவைத்து,
6 இரண்டாந்தரம் அவனை ஏழாம்நாளில் பார்க்கக்கடவன்; தோலில் ரோகம் அதிகப்படாமல் சுருங்கியிருந்தால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது அசறு; அவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்துச் சுத்தமாயிருப்பானாக.
7 தன்னைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கிறதற்கு அவன் தன்னை ஆசாரியனுக்குக் காண்பித்தபின்பு, அசறு தோலில் அதிகமாய்ப் படர்ந்திருந்தால், அவன் மறுபடியும் ஆசாரியனுக்குத் தன்னைக் காண்பிக்கக்கடவன்.
8 அப்பொழுது அசறு தோலிலே படர்ந்தது என்று ஆசாரியன் கண்டால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது குஷ்டரோகம்.
9 குஷ்டரோகம் ஒரு மனிதனுக்கு இருந்தால், அவனை ஆசாரியனிடத்தில் கொண்டுவரவேண்டும்.
10 அப்பொழுது ஆசாரியன் அவனைப் பார்த்து, தோலிலே வெள்ளையான தடிப்பிருந்து, அது மயிரை வெண்மையாக மாறப்பண்ணிற்றென்றும், அந்தத் தடிப்புள்ள இடத்திலே இரணமாம்சம் உண்டென்றும் கண்டால்,
11 அது அவன் சரீரத்திலுள்ள நாள்பட்ட குஷ்டம்; அவன் தீட்டுள்ளவன். ஆதலால், ஆசாரியன் அவனை அடைத்து வைக்காமல், தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்.
12 ஆசாரியன் பார்க்கிற இடங்களெங்கும் தோலிலே குஷ்டம் தோன்றி, அந்த ரோகமுள்ளவனுடைய தலை தொடங்கி அவன் கால்மட்டும் அது தேகமுழுவதையும் மூடியிருக்கக்கண்டால்,
13 அப்பொழுது ஆசாரியன் பார்த்து, குஷ்டம் அவன் சரீரம் முழுவதையும் மூடியிருந்தால், அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் உடம்பெல்லாம் வெண்மையாய்ப்போனபடியால், அவன் சுத்தமுள்ளவன்.
14 ஆனாலும் இரணமாம்சம் அவனில் காணப்பட்டால், அவன் தீட்டுள்ளவன்.
15 ஆகையால், இரணமாம்சத்தை ஆசாரியன் காணும்போது, அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; இரணமாம்சம் தீட்டுள்ளது; அது குஷ்டம்.
16 அல்லது, இரணமாம்சம் மாறி வெண்மையானால், அவன் ஆசாரியனிடத்துக்கு வரவேண்டும்.
17 ஆசாரியன் அவனைப் பார்த்து, ரோகமுள்ள இடம் வெண்மையாக மாறினதென்று கண்டால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் சுத்தமுள்ளவன்.
18 சரீரத்தின்மேல் புண் உண்டாயிருந்து ஆறிப்போய்,
19 அவ்விடத்திலே ஒரு வெள்ளைத்தடிப்பாவது சிவப்பு கலந்த ஒரு வெள்ளைப்படராவது உண்டானால், அதை ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும்.
20 ஆசாரியன் அதைப் பார்த்து, அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் குழிந்திருக்கவும், அதின் மயிர் வெள்ளையாக மாறியிருக்கவும் கண்டால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கவேண்டும்; அது புண்ணில் எழும்பின குஷ்டம்.
21 ஆசாரியன் அதைப் பார்த்து, அதில் வெள்ளைமயிர் இல்லை என்றும், அது மற்றத் தோலைப்பார்க்கிலும் குழிந்திராமல் சுருங்கியிருக்கிறது என்றும் கண்டானாகில், அவனை ஏழுநாள் அடைத்துவைத்து,
22 அது தோலில் அதிகமாய்ப் படர்ந்திருக்கக் கண்டால், அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது குஷ்டந்தான்.
23 அந்த வெள்ளைப்படர் அதிகப்படாமல், அவ்வளவில் நின்றிருக்குமாகில், அது புண்ணின் தழும்பாயிருக்கும்; ஆகையால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்.
24 ஒருவனுடைய சரீரத்தின்மேல் நெருப்புப்பட்டதினாலே வெந்து, அந்த வேக்காடு ஆறிப்போன இடத்திலே சிவப்பான படராவது வெண்மையான படராவது உண்டானால்,
25 ஆசாரியன் அதைப்பார்க்கக்கடவன்; அந்தப் படரிலே மயிர் வெண்மையாக மாறி, அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமாயிருந்தால், அது வேக்காட்டினால் எழும்பின குஷ்டம்; ஆகையால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது குஷ்டரோகந்தான்.
26 ஆசாரியன் அதைப் பார்க்கிறபோது, படரிலே வெள்ளைமயிர் இல்லை என்றும், அது மற்றத் தோலைப்பார்க்கிலும் குழிந்திராமல், சுருங்கியிருக்கிறது என்றும் கண்டானாகில், அவனை ஏழுநாள் அடைத்து வைத்து,
27 ஏழாம்நாளில் அவனைப் பார்க்கக்கடவன்; அது தோலில் அதிகமாய்ப் படர்ந்திருந்தால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது குஷ்டரோகம்.
28 படரானது தோலில் பெருகாமல், அவ்வளவில் நின்று சுருங்கியிருந்ததாகில், அது சூட்டினால் உண்டான தழும்பு; ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவனென்று தீர்க்கக்கடவன்; அது சூட்டினால் வந்த வேக்காடு.
29 புருஷனுக்காகிலும் ஸ்திரீக்காகிலும் தலையிலாவது தாடியிலாவது ஒரு சொறி உண்டானால்,
30 ஆசாரியன் அதைப் பார்த்து, அவ்விடம் மற்றத்தோலைப்பார்க்கிலும் பள்ளமும் அதிலே மயிர் பொன் நிறமும் மிருதுவுமாயிருக்கக்கண்டால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவனென்று தீர்க்கக்கடவன்; அது தலையிலும் தாடியிலும் உண்டாகிற சொறிகுஷ்டம்.
31 ஆசாரியன் அந்தச் சொறிகுஷ்டத்தைப் பார்க்கும்போது, அவ்விடம் மற்றத்தோலைப்பார்க்கிலும் பள்ளமாயிராமலும் அதிலே கறுத்தமயிர் இல்லாமலும் இருக்கக்கண்டால், ஆசாரியன் அவனை ஏழு நாள் அடைத்துவைத்து,
32 ஏழாம்நாளில் ஆசாரியன் அதைப் பார்க்கக்கடவன்; அந்தச் சொறி இடங்கொள்ளாமலும் அதிலே பொன்நிறமயிர் இல்லாமலும், அவ்விடம் மற்றத்தோலைப் பார்க்கிலும் பள்ளமில்லாமலும் இருந்தால்,
33 அந்தச் சொறியுள்ள இடந்தவிர, மற்ற யாவையும் அவன் சிரைத்துக்கொள்ளக்கடவன்; பின்பு, ஆசாரியன் இரண்டாந்தரம் அவனை ஏழு நாள் அடைத்துவைத்து,
34 ஏழாம் நாளில் அதைப் பார்க்கக்கடவன்; சொறி தோலில் இடங்கொள்ளாமலும், அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமில்லாமலும் இருந்தால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்தபின் சுத்தமாயிருப்பான்.
35 அவன் சுத்தமுள்ளவனென்று தீர்க்கப்பட்டபின், அந்தச் சொறி தோலில் இடங்கொண்டதானால்,
36 ஆசாரியன் அவனைப் பார்க்கக்கடவன்; சொறி தோலில் இடங்கொண்டிருந்தால், அப்பொழுது மயிர் பொன்நிறமா அல்லவா என்று ஆசாரியன் விசாரிக்கவேண்டியதில்லை; அவன் தீட்டுள்ளவனே.
37 அவன் பார்வைக்கு அந்தச் சொறி நீங்கி, அதில் கறுத்தமயிர் முளைத்ததேயாகில், சொறி சொஸ்தமாயிற்று; அவன் சுத்தமுள்ளவன்; ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்.
38 ஒரு புருஷனுக்காகிலும் ஸ்திரீக்காகிலும் அவர்கள் சரீரத்தின்மேல் வெள்ளைப் புள்ளிகள் உண்டாயிருந்தால்,
39 ஆசாரியன் பார்க்கக்கடவன்; அவர்கள் சரீரத்திலே மங்கின வெள்ளைப் புள்ளிகள் இருந்தால், அது தோலில் எழும்புகிற வெள்ளைத் தேமல்; அவர்கள் சுத்தமுள்ளவர்கள்.
40 ஒருவனுடைய தலைமயிர் உதிர்ந்து, அவன் மொட்டையனானாலும் அவன் சுத்தமாயிருக்கிறான்.
41 அவனுடைய முன்னந்தலை மயிர் உதிர்ந்தால், அவன் அரை மொட்டையன்; அவனும் சுத்தமாயிருக்கிறான்.
42 மொட்டைத்தலையிலாவது அரைமொட்டைத்தலையிலாவது சிவப்புக்கலந்த வெண்மையான படர் உண்டானால், அது அதில் எழும்புகிற குஷ்டம்.
43 ஆசாரியன் அவனைப் பார்க்கக்கடவன்; அவனுடைய மொட்டைத்தலையிலாவது அரைமொட்டைத்தலையிலாவது, மற்ற அங்கங்களின்மேல் உண்டாக்கும் குஷ்டத்தைப்போல, சிவப்புக்கலந்த வெண்மையான தடிப்பு இருக்கக் கண்டால்,
44 அவன் குஷ்டரோகி, அவன் தீட்டுள்ளவன்; ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் வியாதி அவன் தலையிலே இருக்கிறது.
45 அந்த வியாதி உண்டாயிருக்கிற குஷ்டரோகி வஸ்திரம் கிழிந்தவனாயும், தன் தலையை மூடாதவனாயும் இருந்து, அவன் தன் தாடியை மூடிக்கொண்டு, "தீட்டு, தீட்டு" என்று சத்தமிடவேண்டும்.
46 அந்த வியாதி அவனில் இருக்கும் நாள்வரைக்கும் தீட்டுள்ளவனாக எண்ணப்படக்கடவன்; அவன் தீட்டுள்ளவனே; ஆகையால், அவன் தனியே குடியிருக்கவேண்டும்; அவன் குடியிருப்பு பாளயத்துக்குப் புறம்பே இருக்கக்கடவது.
47 ஆட்டுமயிர் வஸ்திரத்திலாவது, பஞ்சுநூல் வஸ்திரத்திலாவது,
48 பஞ்சுநூல், அல்லது ஆட்டுமயிரான பாவிலாவது, ஊடையிலாவது, ஒரு தோலிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது குஷ்டதோஷம் தோன்றி,
49 வஸ்திரத்திலாவது, தோலிலாவது பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது குஷ்டதோஷம் பச்சையாயாவது சிவப்பாயாவது காணப்பட்டால் அது குஷ்டமாயிருக்கும்; அதை ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும்.
50 ஆசாரியன் அதைப் பார்த்து, ஏழுநாள் அடைத்துவைத்து,
51 ஏழாம் நாளிலே அதைப் பார்க்கக்கடவன்; வஸ்திரத்திலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது அது அதிகப்பட்டிருந்தால், அது அரிக்கிற குஷ்டம்; அது தீட்டாயிருக்கும்.
52 அந்தத் தோஷம் இருக்கிற ஆட்டு மயிரினாலும் பஞ்சுநூலினாலும் செய்த வஸ்திரத்தையும் பாவையும், ஊடையையும், தோலினால் செய்த எந்தவித வஸ்துவையும் சுட்டெரிக்கக்கடவன்; அது அரிக்கிற குஷ்டம்; ஆகையால் அக்கினியில் சுட்டெரிக்கப்படவேண்டும்.
53 வஸ்திரத்தின் பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது, அந்தத் தோஷம் அதிகப்படவில்லை என்று ஆசாரியன் கண்டால்,
54 அப்பொழுது ஆசாரியன் அதைக் கழுவச்சொல்லி, இரண்டாந்தரம் ஏழு நாள் அடைத்துவைத்து,
55 அது கழுவப்பட்டபின்பு அதைப் பார்க்கக்கடவன்; அந்தத் தோஷம் அதிகப்படாதிருந்தாலும் அது நிறம் மாறாததாயிருந்தால் தீட்டாயிருக்கும்; அக்கினியில் அதைச் சுட்டெரிக்கவேண்டும்; அது அவ்வஸ்திரத்தின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் உருவ அரிக்கும்.
56 கழுவப்பட்டபின்பு அது குறுகிறதென்று ஆசாரியன் கண்டானேயாகில், அதை வஸ்திரத்திலாவது, தோலிலாவது, பாவிலாவது, ஊடையிலாவது இராதபடிக்கு எடுத்துப்போடவேண்டும்.
57 அது இன்னும் வஸ்திரத்திலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது காணப்பட்டால், அது படருகிற தோஷம்; ஆகையினால் அது உள்ளதை அக்கினியில் சுட்டெரிக்கவேண்டும்.
58 வஸ்திரத்தின் பாவாவது, ஊடையாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவாவது கழுவப்பட்டபின்பு, அந்தத் தோஷம் அதைவிட்டுப் போயிற்றேயானால், இரண்டாந்தரம் கழுவப்படவேண்டும்; அப்பொழுது சுத்தமாயிருக்கும்.
59 ஆட்டுமயிராலாகிலும் பஞ்சுநூலாலாகிலும் நெய்த வஸ்திரத்தையாவது, பாவையாவது, ஊடையையாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவையாவது, சுத்தமென்றாவது தீட்டென்றாவது தீர்க்கிறதற்கு, அதினுடைய குஷ்டதோஷத்துக்கடுத்த பிரமாணம் இதுவே என்றார்.


1 The LORD said to Moses and Aaron,
2 "When a man has on the skin of his body a swelling or an eruption or a spot, and it turns into a leprous disease on the skin of his body, then he shall be brought to Aaron the priest or to one of his sons the priests,
3 and the priest shall examine the diseased spot on the skin of his body; and if the hair in the diseased spot has turned white and the disease appears to be deeper than the skin of his body, it is a leprous disease; when the priest has examined him he shall pronounce him unclean.
4 But if the spot is white in the skin of his body, and appears no deeper than the skin, and the hair in it has not turned white, the priest shall shut up the diseased person for seven days;
5 and the priest shall examine him on the seventh day, and if in his eyes the disease is checked and the disease has not spread in the skin, then the priest shall shut him up seven days more;
6 and the priest shall examine him again on the seventh day, and if the diseased spot is dim and the disease has not spread in the skin, then the priest shall pronounce him clean; it is only an eruption; and he shall wash his clothes, and be clean.
7 But if the eruption spreads in the skin, after he has shown himself to the priest for his cleansing, he shall appear again before the priest;
8 and the priest shall make an examination, and if the eruption has spread in the skin, then the priest shall pronounce him unclean; it is leprosy.
9 "When a man is afflicted with leprosy, he shall be brought to the priest;
10 and the priest shall make an examination, and if there is a white swelling in the skin, which has turned the hair white, and there is quick raw flesh in the swelling,
11 it is a chronic leprosy in the skin of his body, and the priest shall pronounce him unclean; he shall not shut him up, for he is unclean.
12 And if the leprosy breaks out in the skin, so that the leprosy covers all the skin of the diseased person from head to foot, so far as the priest can see,
13 then the priest shall make an examination, and if the leprosy has covered all his body, he shall pronounce him clean of the disease; it has all turned white, and he is clean.
14 But when raw flesh appears on him, he shall be unclean.
15 And the priest shall examine the raw flesh, and pronounce him unclean; raw flesh is unclean, for it is leprosy.
16 But if the raw flesh turns again and is changed to white, then he shall come to the priest,
17 and the priest shall examine him, and if the disease has turned white, then the priest shall pronounce the diseased person clean; he is clean.
18 "And when there is in the skin of one's body a boil that has healed,
19 and in the place of the boil there comes a white swelling or a reddish-white spot, then it shall be shown to the priest;
20 and the priest shall make an examination, and if it appears deeper than the skin and its hair has turned white, then the priest shall pronounce him unclean; it is the disease of leprosy, it has broken out in the boil.
21 But if the priest examines it, and the hair on it is not white and it is not deeper than the skin, but is dim, then the priest shall shut him up seven days;
22 and if it spreads in the skin, then the priest shall pronounce him unclean; it is diseased.
23 But if the spot remains in one place and does not spread, it is the scar of the boil; and the priest shall pronounce him clean.
24 "Or, when the body has a burn on its skin and the raw flesh of the burn becomes a spot, reddish-white or white,
25 the priest shall examine it, and if the hair in the spot has turned white and it appears deeper than the skin, then it is leprosy; it has broken out in the burn, and the priest shall pronounce him unclean; it is a leprous disease.
26 But if the priest examines it, and the hair in the spot is not white and it is no deeper than the skin, but is dim, the priest shall shut him up seven days,
27 and the priest shall examine him the seventh day; if it is spreading in the skin, then the priest shall pronounce him unclean; it is a leprous disease.
28 But if the spot remains in one place and does not spread in the skin, but is dim, it is a swelling from the burn, and the priest shall pronounce him clean; for it is the scar of the burn.
29 "When a man or woman has a disease on the head or the beard,
30 the priest shall examine the disease; and if it appears deeper than the skin, and the hair in it is yellow and thin, then the priest shall pronounce him unclean; it is an itch, a leprosy of the head or the beard.
31 And if the priest examines the itching disease, and it appears no deeper than the skin and there is no black hair in it, then the priest shall shut up the person with the itching disease for seven days,
32 and on the seventh day the priest shall examine the disease; and if the itch has not spread, and there is in it no yellow hair, and the itch appears to be no deeper than the skin,
33 then he shall shave himself, but the itch he shall not shave; and the priest shall shut up the person with the itching disease for seven days more;
34 and on the seventh day the priest shall examine the itch, and if the itch has not spread in the skin and it appears to be no deeper than the skin, then the priest shall pronounce him clean; and he shall wash his clothes, and be clean.
35 But if the itch spreads in the skin after his cleansing,
36 then the priest shall examine him, and if the itch has spread in the skin, the priest need not seek for the yellow hair; he is unclean.
37 But if in his eyes the itch is checked, and black hair has grown in it, the itch is healed, he is clean; and the priest shall pronounce him clean.
38 "When a man or a woman has spots on the skin of the body, white spots,
39 the priest shall make an examination, and if the spots on the skin of the body are of a dull white, it is tetter that has broken out in the skin; he is clean.
40 "If a man's hair has fallen from his head, he is bald but he is clean.
41 And if a man's hair has fallen from his forehead and temples, he has baldness of the forehead but he is clean.
42 But if there is on the bald head or the bald forehead a reddish-white diseased spot, it is leprosy breaking out on his bald head or his bald forehead.
43 Then the priest shall examine him, and if the diseased swelling is reddish-white on his bald head or on his bald forehead, like the appearance of leprosy in the skin of the body,
44 he is a leprous man, he is unclean; the priest must pronounce him unclean; his disease is on his head.
45 "The leper who has the disease shall wear torn clothes and let the hair of his head hang loose, and he shall cover his upper lip and cry, `Unclean, unclean.'
46 He shall remain unclean as long as he has the disease; he is unclean; he shall dwell alone in a habitation outside the camp.
47 "When there is a leprous disease in a garment, whether a woolen or a linen garment,
48 in warp or woof of linen or wool, or in a skin or in anything made of skin,
49 if the disease shows greenish or reddish in the garment, whether in warp or woof or in skin or in anything made of skin, it is a leprous disease and shall be shown to the priest.
50 And the priest shall examine the disease, and shut up that which has the disease for seven days;
51 then he shall examine the disease on the seventh day. If the disease has spread in the garment, in warp or woof, or in the skin, whatever be the use of the skin, the disease is a malignant leprosy; it is unclean.
52 And he shall burn the garment, whether diseased in warp or woof, woolen or linen, or anything of skin, for it is a malignant leprosy; it shall be burned in the fire.
53 "And if the priest examines, and the disease has not spread in the garment in warp or woof or in anything of skin,
54 then the priest shall command that they wash the thing in which is the disease, and he shall shut it up seven days more;
55 and the priest shall examine the diseased thing after it has been washed. And if the diseased spot has not changed color, though the disease has not spread, it is unclean; you shall burn it in the fire, whether the leprous spot is on the back or on the front.
56 "But if the priest examines, and the disease is dim after it is washed, he shall tear the spot out of the garment or the skin or the warp or woof;
57 then if it appears again in the garment, in warp or woof, or in anything of skin, it is spreading; you shall burn with fire that in which is the disease.
58 But the garment, warp or woof, or anything of skin from which the disease departs when you have washed it, shall then be washed a second time, and be clean."
59 This is the law for a leprous disease in a garment of wool or linen, either in warp or woof, or in anything of skin, to decide whether it is clean or unclean.

1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
2 குஷ்டரோகியினுடைய சுத்திகரிப்பின் நாளில் அவனுக்கடுத்த பிரமாணம் என்னவென்றால்: அவன் ஆசாரியனிடத்தில் கொண்டுவரப்படவேண்டும்.
3 ஆசாரியன் பாளயத்துக்குப் புறம்பே போய்; குஷ்டரோகியின் குஷ்டவியாதி சொஸ்தமாயிற்று என்று கண்டால்,
4 சுத்திகரிக்கப்படவேண்டியவனுக்காக, உயிரோடிருக்கும் சுத்தமான இரண்டு குருவிகளையும், கேதுருக் கட்டையையும், சிவப்பு நூலையும், ஈசோப்பையும் வாங்கிவரக்கடவன்.
5 பின்பு, ஆசாரியன் அந்தக் குருவிகளில் ஒன்றை ஒரு மண்பாண்டத்திலுள்ள ஊற்றுநீர்மேல் கொல்லச் சொல்லி,
6 உயிருள்ள குருவியையும், கேதுருக் கட்டையையும், சிவப்பு நூலையும், ஈசோப்பையும் எடுத்து, இவைகளையும் உயிருள்ள குருவியையும் ஊற்றுநீர்மேல் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலே தோய்த்து,
7 குஷ்டம் நீங்கச் சுத்திகரிக்கப்படுகிறவன்மேல் ஏழுதரம் தெளித்து, அவனைச் சுத்தம்பண்ணி, உயிருள்ள குருவியை வெளியிலே விட்டுவிடக்கடவன்.
8 சுத்திகரிக்கப்படுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தன் மயிர் முழுவதையும் சிரைத்து, தான் சுத்தமாகும்படி ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, பின்பு பாளயத்தில் பிரவேசித்து, தன் கூடாரத்துக்குப் புறம்பே ஏழுநாள் தங்கி,
9 ஏழாம் நாளிலே தன் தலையையும் தாடியையும் புருவங்களையும் தன்னுடைய மயிர் முழுவதையும் சிரைத்து, தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்தில் ஸ்நானம்பண்ணவேண்டும்; அப்பொழுது சுத்தமாயிருப்பான்.
10 எட்டாம்நாளிலே அவன் பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும், ஒரு வயதான பழுதற்ற ஒரு பெண்ணாட்டுக்குட்டியையும், போஜனபலிக்காக எண்ணெயிலே பிசைந்த ஒரு மரக்காலில் பத்தில் மூன்று பங்காகிய மெல்லிய மாவையும், ஆழாக்கு எண்ணெயையும் கொண்டுவரக்கடவன்.
11 சுத்திகரிக்கிற ஆசாரியன் சுத்திகரிக்கப்படும் மனிதனையும் அவ்வஸ்துக்களையும் ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தக்கடவன்.
12 பின்பு ஆசாரியன் ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதையும் அந்த ஆழாக்கு எண்ணெயையும் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவந்து, கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டி,
13 பாவநிவாரணபலியும் சர்வாங்க தகனபலியும் இடும் பரிசுத்த ஸ்தலத்திலே அந்த ஆட்டுக்குட்டியைக் கொல்லக்கடவன்; குற்றநிவாரணபலி பாவநிவாரணபலியைப்போல ஆசாரியனுக்கு உரியது; அது மகா பரிசுத்தமானது.
14 அந்தக் குற்றநிவாரணபலியின் இரத்தத்தில் ஆசாரியன் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்படுகிறவன் வலது காதின் மடலிலும், அவன் வலது கையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் பூசக்கடவன்.
15 பின்பு, ஆசாரியன் அந்த ஆழாக்கு எண்ணெயிலே கொஞ்சம் தன் இடது கையில் வார்த்து,
16 தன் இடது கையிலுள்ள எண்ணெயில் தன் வலது கையின் விரலைத் தோய்த்து, தன் விரலினால் ஏழுதரம் அந்த எண்ணெயில் எடுத்து, கர்த்தருடைய சந்நிதியில் தெளித்து,
17 தன் உள்ளங்கையில் இருக்கிற மீதியான எண்ணெயிலே கொஞ்சம் எடுத்து சுத்திகரிக்கப்படுகிறவன் வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், முந்தப் பூசியிருக்கிற குற்றநிவாரணபலியினுடைய இரத்தத்தின்மேல் பூசி,
18 தன் உள்ளங்கையில் இருக்கிற மீதியான எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுகிறவன் தலையிலே வார்த்து, கர்த்தருடைய சந்நிதியில் அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
19 ஆசாரியன் பாவநிவாரணபலியையும் செலுத்தி, சுத்திகரிக்கப்படுகிறவனின் தீட்டு நீங்க, அவனுக்குப் பாவநிவிர்த்தி செய்து, பின்பு சர்வாங்க தகனபலியைக்கொன்று,
20 சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் பலிபீடத்தின்மேல் வைத்து, அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவன் சுத்தமாயிருப்பான்.
21 அவன் இம்மாத்திரம் செய்யத் திராணியற்ற தரித்திரனாயிருந்தால், அவன் தன் பாவநிவிர்த்திக்கென்று அசைவாட்டும் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்குட்டியையும், போஜனபலிக்கு எண்ணெயில் பிசைந்த ஒரு மரக்கால் மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கையும், ஆழாக்கு எண்ணெயையும்,
22 தன் திராணிக்குத் தக்கபடி இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது ஒன்று பாவநிவாரணபலியாகவும், மற்றொன்று சர்வாங்க தகனபலியாகவும் செலுத்தும்படி வாங்கி,
23 தான் சுத்திகரிக்கும்படி எட்டாம் நாளில் ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் ஆசாரியனிடத்துக்குக் கொண்டுவருவானாக.
24 அப்பொழுது ஆசாரியன் குற்றநிவாரணபலிக்குரிய ஆட்டுக்குட்டியையும் அந்த ஆழாக்கு எண்ணெயையும் வாங்கி, கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் போஜனபலியாக அசைவாட்டி,
25 குற்றநிவாரணபலிக்கான அந்த ஆட்டுக்குட்டியைக் கொன்று, குற்றநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்படுகிறவன் வலது காதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் பூசி,
26 அந்த எண்ணெயிலே கொஞ்சம் தன் இடதுகையில் வார்த்து,
27 தன் இடது கையிலுள்ள எண்ணெயிலே தன் வலது விரலைத் தோய்த்து, கர்த்தருடைய சந்நிதியில் ஏழுதரம் தெளித்து,
28 தன் உள்ளங்கையிலிருக்கிற எண்ணெயில் கொஞ்சம் எடுத்துச் சுத்திகரிக்கப்படுகிறவன் வலதுகாதின் மடலிலும், அவன் வலது கையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் குற்றநிவாரணபலியின் இரத்தம் பூசியிருக்கிற இடத்திலே பூசி,
29 தன் உள்ளங்கையில் இருக்கிற மற்ற எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுகிறவன் தலையின்மேல் அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யும்படி தடவி,
30 பின்பு, அவன் தன் திராணிக்கும் தகுதிக்கும் தக்கதாய்க் காட்டுப்புறாக்களையாவது புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவந்து,
31 அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்கதகனபலியுமாக்கி, போஜனபலியோடேகூடச் செலுத்தி, இப்படியே ஆசாரியன் சுத்திகரிக்கப்படுகிறவனுக்காக, கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
32 தன் சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளைச் சம்பாதிக்கக் கூடாத குஷ்டரோகியைக் குறித்த பிரமாணம் இதுவே என்றார்.
33 பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
34 நான் உங்களுக்குக் காணியாட்சியாகக் கொடுக்கும் தேசத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்தபின்பு, உங்கள் காணியாட்சியான தேசத்தில் ஒரு வீட்டிலே குஷ்டதோஷத்தை நான் வரப்பண்ணினால்,
35 அந்த வீட்டிற்கு உடையவன் வந்து, வீட்டிலே தோஷம் வந்திருக்கிறதாகத் தோன்றுகிறது என்று ஆசாரியனுக்கு அறிவிக்கக்கடவன்.
36 அப்பொழுது வீட்டிலுள்ள யாவும் தீட்டுப்படாதபடிக்கு, ஆசாரியன் அந்தத் தோஷத்தைப் பார்க்கப் போகும்முன்னே வீட்டை ஒழித்துவைக்கும்படி சொல்லி, பின்பு வீட்டைப்பார்க்கும்படி போய்,
37 அந்தத் தோஷம் இருக்கிற இடத்தைப் பார்க்கக்கடவன்; அப்பொழுது வீட்டுச் சுவர்களிலே கொஞ்சம் பச்சையும் கொஞ்சம் சிவப்புமான குழி விழுந்திருந்து, அவைகள் மற்றச் சுவரைப்பார்க்கிலும் பள்ளமாயிருக்கக்கண்டால்,
38 ஆசாரியன் வீட்டைவிட்டுப் புறப்பட்டு வாசற்படியிலே வந்து, வீட்டை ஏழுநாள் அடைத்துவைத்து,
39 ஏழாம்நாளிலே திரும்பப் போய்ப் பார்த்து, தோஷம் வீட்டுச் சுவர்களில் படர்ந்ததென்று கண்டால்,
40 தோஷம் இருக்கும் அவ்விடத்துக் கல்லுகளைப் பெயர்க்கவும், பட்டணத்துக்கு புறம்பே அசுத்தமான ஒரு இடத்திலே போடவும் அவன் கட்டளையிட்டு,
41 வீட்டை உள்ளே சுற்றிலும் செதுக்கச்சொல்லி, செதுக்கிப்போட்ட மண்ணைப் பட்டணத்துக்குப் புறம்பே அசுத்தமான ஒரு இடத்திலே கொட்டவும்,
42 வேறே கல்லுகளை எடுத்துவந்து, அந்தக் கல்லுகளுக்குப் பதிலாகக் கட்டி, வேறே சாந்தை எடுத்து வீட்டைப் பூசவும் கட்டளையிடுவானாக.
43 கல்லுகளைப் பெயர்த்து, வீட்டைச் செதுக்கி, நவமாய்ப் பூசினபின்பும், அந்தத் தோஷம் திரும்ப வீட்டில் வந்ததானால்,
44 ஆசாரியன் போய்ப் பார்க்கக்டவன்; தோஷம் வீட்டில் படர்ந்ததானால், அது வீட்டை அரிக்கிற குஷ்டம், அது தீட்டாயிருக்கும்.
45 ஆகையால் வீடுமுழுவதையும் இடித்து, அதின் கல்லுகளையும், மரங்களையும், அதின் சாந்து எல்லாவற்றையும் பட்டணத்துக்குப் புறம்பே அசுத்தமான இடத்திலே கொண்டுபோகவேண்டும்.
46 வீடு அடைக்கப்பட்டிருக்கும் நாட்களில் அதற்குள் பிரவேசிக்கிறவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
47 அந்த வீட்டிலே படுத்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அந்த வீட்டிலே சாப்பிட்டவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்.
48 ஆசாரியன் திரும்ப வந்து, வீடு பூசப்பட்டபின்பு வீட்டிலே அந்தத் தோஷம் படரவில்லை என்று கண்டானேயாகில், தோஷம் நிவிர்த்தியானபடியால், ஆசாரியன் அந்த வீட்டைச் சுத்தம் என்று தீர்க்கக்கடவன்.
49 அப்பொழுது வீட்டிற்குத் தோஷம் கழிக்க, இரண்டு குருவிகளையும், கேதுருக் கட்டையையும், சிவப்பு நூலையும், ஈசோப்பையும் எடுத்து,
50 ஒரு குருவியை ஒரு மண்பாண்டத்திலுள்ள ஊற்றுநீரின்மேல் கொன்று,
51 கேதுருக்கட்டையையும், ஈசோப்பையும், சிவப்புநூலையும், உயிருள்ள குருவியையும் எடுத்து, இவைகளைக் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலும் ஊற்று நீரிலும் தோய்த்து, வீட்டின்மேல் ஏழுதரம் தெளித்து,
52 குருவியின் இரத்தத்தினாலும், ஊற்றுநீரினாலும், உயிருள்ள குருவியினாலும், கேதுருக்கட்டையினாலும் ஈசோப்பினாலும், சிவப்புநூலினாலும் வீட்டிற்குத் தோஷங்கழித்து,
53 உயிருள்ள குருவியைப் பட்டணத்துக்குப் புறம்பே வெளியிலே விட்டுவிட்டு, இப்படி வீட்டிற்குப் பிராயச்சித்தம் செய்யக்கடவன்; அப்பொழுது அது சுத்தமாயிருக்கும்.
54 இது சகலவித குஷ்டரோகத்துக்கும், சொறிக்கும்,
55 வஸ்திரக் குஷ்டத்துக்கும், வீட்டுக் குஷ்டத்துக்கும்,
56 தடிப்புக்கும், அசறுக்கும், வெள்ளைப் படருக்கும் அடுத்த பிரமாணம்.
57 குஷ்டம் எப்பொழுது தீட்டுள்ளது என்றும், எப்பொழுது தீட்டில்லாதது என்றும் தெரிவிப்பதற்குக் குஷ்டரோகத்துக்கு அடுத்த பிரமாணம் இதுவே என்றார்.


1 The LORD said to Moses,
2 "This shall be the law of the leper for the day of his cleansing. He shall be brought to the priest;
3 and the priest shall go out of the camp, and the priest shall make an examination. Then, if the leprous disease is healed in the leper,
4 the priest shall command them to take for him who is to be cleansed two living clean birds and cedarwood and scarlet stuff and hyssop;
5 and the priest shall command them to kill one of the birds in an earthen vessel over running water.
6 He shall take the living bird with the cedarwood and the scarlet stuff and the hyssop, and dip them and the living bird in the blood of the bird that was killed over the running water;
7 and he shall sprinkle it seven times upon him who is to be cleansed of leprosy; then he shall pronounce him clean, and shall let the living bird go into the open field.
8 And he who is to be cleansed shall wash his clothes, and shave off all his hair, and bathe himself in water, and he shall be clean; and after that he shall come into the camp, but shall dwell outside his tent seven days.
9 And on the seventh day he shall shave all his hair off his head; he shall shave off his beard and his eyebrows, all his hair. Then he shall wash his clothes, and bathe his body in water, and he shall be clean.
10 "And on the eighth day he shall take two male lambs without blemish, and one ewe lamb a year old without blemish, and a cereal offering of three tenths of an ephah of fine flour mixed with oil, and one log of oil.
11 And the priest who cleanses him shall set the man who is to be cleansed and these things before the LORD, at the door of the tent of meeting.
12 And the priest shall take one of the male lambs, and offer it for a guilt offering, along with the log of oil, and wave them for a wave offering before the LORD;
13 and he shall kill the lamb in the place where they kill the sin offering and the burnt offering, in the holy place; for the guilt offering, like the sin offering, belongs to the priest; it is most holy.
14 The priest shall take some of the blood of the guilt offering, and the priest shall put it on the tip of the right ear of him who is to be cleansed, and on the thumb of his right hand, and on the great toe of his right foot.
15 Then the priest shall take some of the log of oil, and pour it into the palm of his own left hand,
16 and dip his right finger in the oil that is in his left hand, and sprinkle some oil with his finger seven times before the LORD.
17 And some of the oil that remains in his hand the priest shall put on the tip of the right ear of him who is to be cleansed, and on the thumb of his right hand, and on the great toe of his right foot, upon the blood of the guilt offering;
18 and the rest of the oil that is in the priest's hand he shall put on the head of him who is to be cleansed. Then the priest shall make atonement for him before the LORD.
19 The priest shall offer the sin offering, to make atonement for him who is to be cleansed from his uncleanness. And afterward he shall kill the burnt offering;
20 and the priest shall offer the burnt offering and the cereal offering on the altar. Thus the priest shall make atonement for him, and he shall be clean.
21 "But if he is poor and cannot afford so much, then he shall take one male lamb for a guilt offering to be waved, to make atonement for him, and a tenth of an ephah of fine flour mixed with oil for a cereal offering, and a log of oil;
22 also two turtledoves or two young pigeons, such as he can afford; the one shall be a sin offering and the other a burnt offering.
23 And on the eighth day he shall bring them for his cleansing to the priest, to the door of the tent of meeting, before the LORD;
24 and the priest shall take the lamb of the guilt offering, and the log of oil, and the priest shall wave them for a wave offering before the LORD.
25 And he shall kill the lamb of the guilt offering; and the priest shall take some of the blood of the guilt offering, and put it on the tip of the right ear of him who is to be cleansed, and on the thumb of his right hand, and on the great toe of his right foot.
26 And the priest shall pour some of the oil into the palm of his own left hand;
27 and shall sprinkle with his right finger some of the oil that is in his left hand seven times before the LORD;
28 and the priest shall put some of the oil that is in his hand on the tip of the right ear of him who is to be cleansed, and on the thumb of his right hand, and the great toe of his right foot, in the place where the blood of the guilt offering was put;
29 and the rest of the oil that is in the priest's hand he shall put on the head of him who is to be cleansed, to make atonement for him before the LORD.
30 And he shall offer, of the turtledoves or young pigeons such as he can afford,
31 one for a sin offering and the other for a burnt offering, along with a cereal offering; and the priest shall make atonement before the LORD for him who is being cleansed.
32 This is the law for him in whom is a leprous disease, who cannot afford the offerings for his cleansing."
33 The LORD said to Moses and Aaron,
34 "When you come into the land of Canaan, which I give you for a possession, and I put a leprous disease in a house in the land of your possession,
35 then he who owns the house shall come and tell the priest, `There seems to me to be some sort of disease in my house.'
36 Then the priest shall command that they empty the house before the priest goes to examine the disease, lest all that is in the house be declared unclean; and afterward the priest shall go in to see the house.
37 And he shall examine the disease; and if the disease is in the walls of the house with greenish or reddish spots, and if it appears to be deeper than the surface,
38 then the priest shall go out of the house to the door of the house, and shut up the house seven days.
39 And the priest shall come again on the seventh day, and look; and if the disease has spread in the walls of the house,
40 then the priest shall command that they take out the stones in which is the disease and throw them into an unclean place outside the city;
41 and he shall cause the inside of the house to be scraped round about, and the plaster that they scrape off they shall pour into an unclean place outside the city;
42 then they shall take other stones and put them in the place of those stones, and he shall take other plaster and plaster the house.
43 "If the disease breaks out again in the house, after he has taken out the stones and scraped the house and plastered it,
44 then the priest shall go and look; and if the disease has spread in the house, it is a malignant leprosy in the house; it is unclean.
45 And he shall break down the house, its stones and timber and all the plaster of the house; and he shall carry them forth out of the city to an unclean place.
46 Moreover he who enters the house while it is shut up shall be unclean until the evening;
47 and he who lies down in the house shall wash his clothes; and he who eats in the house shall wash his clothes.
48 "But if the priest comes and makes an examination, and the disease has not spread in the house after the house was plastered, then the priest shall pronounce the house clean, for the disease is healed.
49 And for the cleansing of the house he shall take two small birds, with cedarwood and scarlet stuff and hyssop,
50 and shall kill one of the birds in an earthen vessel over running water,
51 and shall take the cedarwood and the hyssop and the scarlet stuff, along with the living bird, and dip them in the blood of the bird that was killed and in the running water, and sprinkle the house seven times.
52 Thus he shall cleanse the house with the blood of the bird, and with the running water, and with the living bird, and with the cedarwood and hyssop and scarlet stuff;
53 and he shall let the living bird go out of the city into the open field; so he shall make atonement for the house, and it shall be clean."
54 This is the law for any leprous disease: for an itch,
55 for leprosy in a garment or in a house,
56 and for a swelling or an eruption or a spot,
57 to show when it is unclean and when it is clean. This is the law for leprosy.

1 பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
2 நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒருவனுக்குப் பிரமியம் உண்டானால், அவன் தன் பிரமியத்தினாலே தீட்டானவன்.
3 அவனுடைய மாம்சத்திலுள்ள பிரமியம் ஊறிக்கொண்டிருந்தாலும், அவன் பிரமியம் அடைபட்டிருந்தாலும், அதினால் அவனுக்குத் தீட்டுண்டாகும்
4 பிரமியமுள்ளவன் படுக்கிற எந்தப்படுக்கையும் தீட்டாகும்; அவன் எதின்மேல் உட்காருகிறானோ அதுவும் தீட்டாகும்.
5 அவன் படுக்கையைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகக்கடவன்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.
6 பிரமியம் உள்ளவன் உட்கார்ந்ததின்மேல் உட்காருகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
7 பிரமியம் உள்ளவனின் சரீரத்தைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
8 பிரமியம் உள்ளவன் சுத்தமாயிருக்கிற ஒருவன்மேல் துப்பினால், இவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
9 பிரமியம் உள்ளவன் ஏறும் எந்தச்சேணமும் தீட்டாயிருக்கும்.
10 அவனுக்குக் கீழிருந்த எதையாகிலும் தொடுகிறவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அதை எடுத்துக்கொண்டு போகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
11 பிரமியம் உள்ளவன் தன் கைகளைத் தண்ணீரினால் கழுவாமல் ஒருவனைத் தொட்டால், இவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
12 பிரமியம் உள்ளவன் தொட்ட மண்பாண்டம் உடைக்கப்படவும், மரச்சாமான் எல்லாம் தண்ணீரினால் கழுவப்படவும் வேண்டும்.
13 பிரமியம் உள்ளவன் தன் பிரமியம் நீங்கிச் சுத்தமானால், தன் சுத்திகரிப்புக்கென்று ஏழுநாள் எண்ணிக்கொண்டிருந்து, தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தன் தேகத்தை ஊற்றுநீரில் கழுவக்கடவன்; அப்பொழுது சுத்தமாயிருப்பான்.
14 எட்டாம் நாளிலே, அவன் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, ஆசாரியனிடத்தில் கொடுக்கக்கடவன்.
15 ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும் மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக்கி, அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவன் பிரமியத்தினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யவேண்டும்.
16 ஒருவனிலிருந்து இந்திரியம் கழிந்ததுண்டானால், அவன் தண்ணீரில் முழுகவேண்டும்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.
17 கழிந்த இந்திரியம் பட்ட வஸ்திரமும் தோலும் தண்ணீரினால் கழுவப்பட்டு, சாயங்காலம்மட்டும் தீட்டாயிருப்பதாக.
18 இந்திரியம் கழிந்தவனோடே ஸ்திரீ படுத்துக்கொண்டிருந்தால், இருவரும் தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பார்களாக.
19 சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
20 அவள் விலக்கலாயிருக்கையில், எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும்.
21 அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
22 அவன் உட்கார்ந்த மணையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
23 அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த மணையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
24 ஒருவன் அவளோடே படுத்துக்கொண்டதும், அவள் தீட்டு அவன்மேல் பட்டதுமுண்டானால், அவன் ஏழுநாள் தீட்டாயிருப்பானாக; அவன் படுக்கிற படுக்கையும் தீட்டுப்படும்.
25 ஒரு ஸ்திரீ விலகியிருக்கவேண்டியகாலம் அல்லாமல் அவளுடைய உதிரம் அநேகநாள் ஊறிக்கொண்டிருந்தால், அல்லது அந்தக் காலத்துக்கு மிஞ்சி அது கண்டிருக்கும் நாளெல்லாம் ஊறிக்கொண்டிருந்தால், தன் விலக்கத்தின் நாட்களிலிருந்ததுபோல அவள் தீட்டாயிருப்பாளாக.
26 அந்த நாட்களெல்லாம் அவள் படுக்கும் எந்தப்படுக்கையும், அவள் விலக்கத்தின் படுக்கையைப்போல, அவளுக்குத் தீட்டாயிருக்கும்; அவள் உட்கார்ந்த மணையும், அவளுடைய விலக்கத்தின் தீட்டைப்போலவே தீட்டாயிருக்கும்.
27 அப்படிப்பட்டவைகளைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
28 அவள் தன் உதிர ஊறல் நின்று சுத்தமானபோது, அவள் ஏழுநாள் எண்ணிக்கொள்வாளாக, அதின்பின்பு சுத்தமாயிருப்பாள்.
29 எட்டாம் நாளிலே இரண்டு காட்டுப்புறக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவள்.
30 ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக்கி, அவளுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவளுடைய உதிர ஊறலினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
31 இஸ்ரவேல் புத்திரர் தங்கள் நடுவே இருக்கிற என்னுடைய வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, தங்கள் தீட்டுகளால் சாகாதபடிக்கு, இப்படி நீங்கள் அவர்கள் தீட்டுகளுக்கு அவர்களை விலக்கிவைக்கக்கடவீர்கள்.
32 பிரமியமுள்ளவனுக்கும், இந்திரியக் கழிவினாலே தீட்டானவனுக்கும்,
33 சூதக பலவீனமுள்ளவளுக்கும், பிரமியமுள்ள ஸ்திரீ புருஷருக்கும், தீட்டாயிருக்கிறவளோடே படுத்துக்கொண்டவனுக்கும் ஏற்றபிரமாணம் இதுவே என்றார்.


1 The LORD said to Moses and Aaron,
2 "Say to the people of Israel, When any man has a discharge from his body, his discharge is unclean.
3 And this is the law of his uncleanness for a discharge: whether his body runs with his discharge, or his body is stopped from discharge, it is uncleanness in him.
4 Every bed on which he who has the discharge lies shall be unclean; and everything on which he sits shall be unclean.
5 And any one who touches his bed shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the evening.
6 And whoever sits on anything on which he who has the discharge has sat shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the evening.
7 And whoever touches the body of him who has the discharge shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the evening.
8 And if he who has the discharge spits on one who is clean, then he shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the evening.
9 And any saddle on which he who has the discharge rides shall be unclean.
10 And whoever touches anything that was under him shall be unclean until the evening; and he who carries such a thing shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the evening.
11 Any one whom he that has the discharge touches without having rinsed his hands in water shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the evening.
12 And the earthen vessel which he who has the discharge touches shall be broken; and every vessel of wood shall be rinsed in water.
13 "And when he who has a discharge is cleansed of his discharge, then he shall count for himself seven days for his cleansing, and wash his clothes; and he shall bathe his body in running water, and shall be clean.
14 And on the eighth day he shall take two turtledoves or two young pigeons, and come before the LORD to the door of the tent of meeting, and give them to the priest;
15 and the priest shall offer them, one for a sin offering and the other for a burnt offering; and the priest shall make atonement for him before the LORD for his discharge.
16 "And if a man has an emission of semen, he shall bathe his whole body in water, and be unclean until the evening.
17 And every garment and every skin on which the semen comes shall be washed with water, and be unclean until the evening.
18 If a man lies with a woman and has an emission of semen, both of them shall bathe themselves in water, and be unclean until the evening.
19 "When a woman has a discharge of blood which is her regular discharge from her body, she shall be in her impurity for seven days, and whoever touches her shall be unclean until the evening.
20 And everything upon which she lies during her impurity shall be unclean; everything also upon which she sits shall be unclean.
21 And whoever touches her bed shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the evening.
22 And whoever touches anything upon which she sits shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the evening;
23 whether it is the bed or anything upon which she sits, when he touches it he shall be unclean until the evening.
24 And if any man lies with her, and her impurity is on him, he shall be unclean seven days; and every bed on which he lies shall be unclean.
25 "If a woman has a discharge of blood for many days, not at the time of her impurity, or if she has a discharge beyond the time of her impurity, all the days of the discharge she shall continue in uncleanness; as in the days of her impurity, she shall be unclean.
26 Every bed on which she lies, all the days of her discharge, shall be to her as the bed of her impurity; and everything on which she sits shall be unclean, as in the uncleanness of her impurity.
27 And whoever touches these things shall be unclean, and shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the evening.
28 But if she is cleansed of her discharge, she shall count for herself seven days, and after that she shall be clean.
29 And on the eighth day she shall take two turtledoves or two young pigeons, and bring them to the priest, to the door of the tent of meeting.
30 And the priest shall offer one for a sin offering and the other for a burnt offering; and the priest shall make atonement for her before the LORD for her unclean discharge.
31 "Thus you shall keep the people of Israel separate from their uncleanness, lest they die in their uncleanness by defiling my tabernacle that is in their midst."
32 This is the law for him who has a discharge and for him who has an emission of semen, becoming unclean thereby;
33 also for her who is sick with her impurity; that is, for any one, male or female, who has a discharge, and for the man who lies with a woman who is unclean.

1 ஆரோனின் இரண்டு குமாரர் கர்த்தருடைய சந்நிதியிலே சேர்ந்து மரித்துப்போனபின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி:
2 கிருபாசனத்தின்மேல் ஒரு மேகத்தில் நான் காணப்படுவேன்; ஆதலால் உன் சகோதரனாகிய ஆரோன் சாகாதபடி, பரிசுத்த ஸ்தலத்திலே திரைக்கு உட்புறத்திலிருக்கிற பெட்டியின்மேலுள்ள கிருபாசன மூடிக்கு முன்பாகச் சகல வேளையிலும் வரவேண்டாம் என்று அவனுக்குச் சொல்.
3 ஆரோன் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கவேண்டிய விதமாவது: அவன் ஒரு காளையைப் பாவநிவாரணபலியாகவும், ஒரு ஆட்டுக்கடாவைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்திப் பிரவேசிக்கவேண்டும்.
4 அவன் பரிசுத்தமான சணல்நூல் சட்டையைத் தரித்து, தன் அரைக்குச் சணல்நூல் ஜல்லடத்தைப்போட்டு, சணல்நூல் இடைக்கச்சையைக் கட்டி, சணல்நூல் பாகையைத் தரித்துக்கொண்டிருக்கவேண்டும்; அவைகள் பரிசுத்த வஸ்திரங்கள்; அவன் ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, அவைகளைத் தரித்துக்கொண்டு,
5 இஸ்ரவேல் புத்திரராகிய சபையாரிடத்திலே, பாவநிவாரணபலியாக இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும், சர்வாங்க தகனபலியாக ஒரு ஆட்டுக்கடாவையும் வாங்கக்கடவன்.
6 பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கு, தன்னுடைய பாவநிவாரணபலியின் காளையைச் சேரப்பண்ணி,
7 அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி,
8 அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையுங்குறித்துக் கர்த்தருக்கென்று ஒரு சீட்டும், போக்காடாக விடப்படும் வெள்ளாட்டுக்கடாவுக்கென்று ஒரு சீட்டும் போட்டு,
9 கர்த்தருக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணபலியாகச் சேரப்பண்ணி,
10 போக்காடாக விடப்படச் சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவை, அதைக்கொண்டு பாவநிவிர்த்தி உண்டாக்கவும் அதைப் போக்காடாக வனாந்தரத்திலே போகவிடவும், கர்த்தருடைய சந்நிதியில் உயிரோடே நிறுத்தி;
11 பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி, தன்னுடைய பாவநிவாரணத்துக்கான காளையைக் கொண்டுவந்து, அதைக் கொன்று,
12 கர்த்தருடைய சந்நிதியிலிருக்கும் பலிபீடத்தின்மேலுள்ள நெருப்புத்தணலினால் தூபகலசத்தை நிரப்பி, பொடியாக்கப்பட்ட சுகந்த தூபவர்க்கத்திலே தன் கைப்பிடிகள் நிறைய எடுத்து, திரைக்கு உட்புறமாகக் கொண்டு வந்து,
13 தான் சாகாதபடிக்குத் தூபமேகமானது சாட்சிப்பெட்டியின்மேல் இருக்கும் கிருபாசனத்தை மூடத்தக்கதாக, கர்த்தருடைய சந்நிதியில் அக்கினியின்மேல் தூபவர்க்கத்தைப் போடக்கடவன்
14 பின்பு காளையின் இரத்தத்திலே கொஞ்சம் எடுத்து, கீழ்ப்புறமாக நின்று, தன் விரலினால் கிருபாசனத்தின்மேல் தெளித்து, அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துக் கிருபாசனத்துக்கு முன்பாக, ஏழுதரம் தன் விரலினால் தெளிக்கக்கடவன்.
15 பின்பு ஜனத்தினுடைய பாவநிவாரணபலியான வெள்ளாட்டுக்கடாவை அவன் கொன்று, அதின் இரத்தத்தைத் திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து, காளையின் இரத்தத்தைத் தெளித்ததுபோல, அதின் இரத்தத்தையும் கிருபாசனத்தின்மேலும் அதற்கு முன்பாகவும் தெளித்து,
16 இஸ்ரவேல் புத்திரருடைய தீட்டுகளினிமித்தமும் அவர்களுடைய சகல பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய மீறுதல்களினிமித்தமும், பரிசுத்த ஸ்தலத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, அவர்களிடத்தில் அவர்களுடைய தீட்டுகளுக்குள்ளே நிற்கிற ஆசரிப்புக் கூடாரத்திற்காகவும் அப்படியே செய்யக்கடவன்.
17 பாவநிவிர்த்தி செய்யும்படி அவன் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து, தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் இஸ்ரவேல் சபையார் அனைவருக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, வெளியே வருமளவும் ஆசரிப்புக் கூடாரத்தில் ஒருவரும் இருக்கலாகாது.
18 பின்பு அவன் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தண்டை வந்து, அதற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, காளையின் இரத்தத்திலும் வெள்ளாட்டுக்கடாவின் இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்துக் கொம்புகளின்மேல் சுற்றிலும் பூசி,
19 தன் விரலினால் அந்த இரத்தத்தில் எடுத்து, ஏழுதரம் அதின்மேல் தெளித்து, அதை இஸ்ரவேல் புத்திரரின் தீட்டுகள் நீங்கச் சுத்திகரித்து, பரிசுத்தப்படுத்தக்கடவன்
20 அவன் இப்படிப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் பிராயச்சித்தஞ்செய்து தீர்த்தபின்பு, உயிரோடிருக்கிற வெள்ளாட்டுக்கடாவைச் சேரப்பண்ணி,
21 அதின் தலையின்மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக்கடாவினுடைய தலையின்மேல் சுமத்தி, அதை அதற்கான ஆள்வசமாய் வனாந்தரத்துக்கு அனுப்பிவிடக்கடவன்.
22 அந்த வெள்ளாட்டுக்கடா அவர்களுடைய அக்கிரமங்களையெல்லாம் தன்மேல் சுமந்துகொண்டு, குடியில்லாத தேசத்துக்குப் போவதாக; அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவை வனாந்தரத்திலே போகவிடக்கடவன்.
23 ஆரோன் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் வந்து, தான் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கும்போது, உடுத்தியிருந்த சணல்நூல் வஸ்திரங்களைக் களைந்து, அங்கே வைத்துவிட்டு,
24 பரிசுத்த இடத்திலே ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, தன் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, வெளியே வந்து, தன் சர்வாங்க தகனபலியையும் ஜனங்களின் சர்வாங்க தகனபலியையும் இட்டு, தனக்காகவும் ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து,
25 பாவநிவாரணபலியின் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்.
26 போகவிடப்படும் போக்காடாகிய வெள்ளாட்டுக்கடாவைக் கொண்டுபோய் விட்டவன், தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, பின்பு பாளயத்துக்குள் வருவானாக.
27 பாவநிவிர்த்திக்கென்று பரிசுத்தஸ்தலத்துக்குள் இரத்தம் கொண்டுவரப்பட்ட பாவநிவாரணபலியாகிய காளையையும், பாவநிவாரணபலியாகிய வெள்ளாட்டுக்கடாவையும், பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், அவைகளின் தோலையும் மாம்சத்தையும் சாணியையும் அக்கினியிலே சுட்டெரிக்கக்கடவர்கள்.
28 அவைகளைச் சுட்டெரித்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, பின்பு பாளயத்துக்குள் வருவானாக.
29 ஏழாம் மாதம் பத்தாம் தேதியிலே, சுதேசியானாலும் உங்களுக்குள் தங்கும் பரதேசியானாலும், தங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்துவதுமன்றி, ஒரு வேலையும் செய்யாமல் இருக்கவேண்டும்; இது உங்களுக்கு நித்திய கட்டளையாய் இருக்கக்கடவது.
30 கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் பாவமெல்லாம் நீங்கிச் சுத்திகரிக்கும்படி, அந்நாளில் உங்களைச் சுத்திகரிக்கும் பொருட்டு, உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும்.
31 உங்களுக்கு அது விசேஷித்த ஓய்வுநாள்; அதிலே உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப் படுத்தக்கடவீர்கள்; இது நித்திய கட்டளை.
32 அபிஷேகம் பெற்றவனும், தன் தகப்பன் பட்டத்திற்கு வந்து ஆசாரிய ஊழியஞ்செய்யப் பிரதிஷ்டைபண்ணப்பட்டவனுமாகிய ஆசாரியனே பாவநிவிர்த்தி செய்யக்கடவன். அவன் பரிசுத்த வஸ்திரங்களாகிய சணல்நூல் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு,
33 பரிசுத்த ஸ்தலத்துக்கும் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் பிராயச்சித்தஞ்செய்து, ஆசாரியருக்காகவும் சபையின் சகல ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
34 இப்படி வருஷத்தில் ஒருமுறை இஸ்ரவேல் புத்திரருக்காக, அவர்களுடைய சகல பாவங்களுக்கும் பாவநிவிர்த்தி செய்வது, உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கக்கடவது என்று சொல் என்றார். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் செய்தான்.


1 The LORD spoke to Moses, after the death of the two sons of Aaron, when they drew near before the LORD and died;
2 and the LORD said to Moses, "Tell Aaron your brother not to come at all times into the holy place within the veil, before the mercy seat which is upon the ark, lest he die; for I will appear in the cloud upon the mercy seat.
3 But thus shall Aaron come into the holy place: with a young bull for a sin offering and a ram for a burnt offering.
4 He shall put on the holy linen coat, and shall have the linen breeches on his body, be girded with the linen girdle, and wear the linen turban; these are the holy garments. He shall bathe his body in water, and then put them on.
5 And he shall take from the congregation of the people of Israel two male goats for a sin offering, and one ram for a burnt offering.
6 "And Aaron shall offer the bull as a sin offering for himself, and shall make atonement for himself and for his house.
7 Then he shall take the two goats, and set them before the LORD at the door of the tent of meeting;
8 and Aaron shall cast lots upon the two goats, one lot for the LORD and the other lot for Aza'zel.
9 And Aaron shall present the goat on which the lot fell for the LORD, and offer it as a sin offering;
10 but the goat on which the lot fell for Aza'zel shall be presented alive before the LORD to make atonement over it, that it may be sent away into the wilderness to Aza'zel.
11 "Aaron shall present the bull as a sin offering for himself, and shall make atonement for himself and for his house; he shall kill the bull as a sin offering for himself.
12 And he shall take a censer full of coals of fire from the altar before the LORD, and two handfuls of sweet incense beaten small; and he shall bring it within the veil
13 and put the incense on the fire before the LORD, that the cloud of the incense may cover the mercy seat which is upon the testimony, lest he die;
14 and he shall take some of the blood of the bull, and sprinkle it with his finger on the front of the mercy seat, and before the mercy seat he shall sprinkle the blood with his finger seven times.
15 "Then he shall kill the goat of the sin offering which is for the people, and bring its blood within the veil, and do with its blood as he did with the blood of the bull, sprinkling it upon the mercy seat and before the mercy seat;
16 thus he shall make atonement for the holy place, because of the uncleannesses of the people of Israel, and because of their transgressions, all their sins; and so he shall do for the tent of meeting, which abides with them in the midst of their uncleannesses.
17 There shall be no man in the tent of meeting when he enters to make atonement in the holy place until he comes out and has made atonement for himself and for his house and for all the assembly of Israel.
18 Then he shall go out to the altar which is before the LORD and make atonement for it, and shall take some of the blood of the bull and of the blood of the goat, and put it on the horns of the altar round about.
19 And he shall sprinkle some of the blood upon it with his finger seven times, and cleanse it and hallow it from the uncleannesses of the people of Israel.
20 "And when he has made an end of atoning for the holy place and the tent of meeting and the altar, he shall present the live goat;
21 and Aaron shall lay both his hands upon the head of the live goat, and confess over him all the iniquities of the people of Israel, and all their transgressions, all their sins; and he shall put them upon the head of the goat, and send him away into the wilderness by the hand of a man who is in readiness.
22 The goat shall bear all their iniquities upon him to a solitary land; and he shall let the goat go in the wilderness.
23 "Then Aaron shall come into the tent of meeting, and shall put off the linen garments which he put on when he went into the holy place, and shall leave them there;
24 and he shall bathe his body in water in a holy place, and put on his garments, and come forth, and offer his burnt offering and the burnt offering of the people, and make atonement for himself and for the people.
25 And the fat of the sin offering he shall burn upon the altar.
26 And he who lets the goat go to Aza'zel shall wash his clothes and bathe his body in water, and afterward he may come into the camp.
27 And the bull for the sin offering and the goat for the sin offering, whose blood was brought in to make atonement in the holy place, shall be carried forth outside the camp; their skin and their flesh and their dung shall be burned with fire.
28 And he who burns them shall wash his clothes and bathe his body in water, and afterward he may come into the camp.
29 "And it shall be a statute to you for ever that in the seventh month, on the tenth day of the month, you shall afflict yourselves, and shall do no work, either the native or the stranger who sojourns among you;
30 for on this day shall atonement be made for you, to cleanse you; from all your sins you shall be clean before the LORD.
31 It is a sabbath of solemn rest to you, and you shall afflict yourselves; it is a statute for ever.
32 And the priest who is anointed and consecrated as priest in his father's place shall make atonement, wearing the holy linen garments;
33 he shall make atonement for the sanctuary, and he shall make atonement for the tent of meeting and for the altar, and he shall make atonement for the priests and for all the people of the assembly.
34 And this shall be an everlasting statute for you, that atonement may be made for the people of Israel once in the year because of all their sins." And Moses did as the LORD commanded him.

1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
2 நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொல்லவேண்டியதாவது; கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால்:
3 இஸ்ரவேல் குடும்பத்தாரில் எவனாகிலும் மாட்டையாவது செம்மறியாட்டையாவது வெள்ளாட்டையாவது ஆசரிப்புக் கூடாரவாசலாகிய கர்த்தருடைய வாசஸ்தலத்துக்கு முன்பாக, கர்த்தருக்குச் செலுத்தும்படி கொண்டுவராமல்,
4 பாளயத்துக்குள்ளேயாகிலும் பாளயத்துக்குப் புறம்பேயாகிலும் அதைக் கொன்றால், அது அந்த மனிதனுக்கு இரத்தப்பழியாக எண்ணப்படும். அந்த மனிதன் இரத்தம் சிந்தினபடியால், தன் ஜனத்தில் இராமல் அறுப்புண்டு போவான்.
5 ஆகையால் இஸ்ரவேல் புத்திரர் வெளியிலே பலியிடுகிற தங்கள் பலிகளை, ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அங்கே அவைகளைக் கர்த்தருக்குச் சமாதான பலிகளாகச் செலுத்தக்கடவர்கள்.
6 அங்கே ஆசாரியன் இரத்தத்தை ஆசரிப்புக் கூடாரவாசலிலிருக்கிற கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் தெளித்து, கொழுப்பைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனிக்கக்கடவன்.
7 தாங்கள் சோரமார்க்கமாய்ப் பின்பற்றுகிற பேய்களுக்குத் தங்கள் பலிகளை இனிச் செலுத்தாதிருப்பார்களாக; இது அவர்கள் தலைமுறைதோறும் அவர்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கக் கடவது.
8 மேலும் நீ அவர்களை நோக்கி: இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் சர்வாங்க தகனபலி முதலானவைகளையிட்டு,
9 அதை ஆசரிப்புக் கூடார வாசலிலே கர்த்தருக்குச் செலுத்தும்படி கொண்டுவராவிட்டால், அவன் தன் ஜனத்தில் இராமல் அறுப்புண்டுபோவான் என்று சொல்.
10 இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்களுக்குள் தங்கும் அந்நியர்களிலும் எவனாகிலும் இரத்தம் என்னப்பட்டதைப் புசித்தால், இரத்தத்தைப் புசித்த அவனுக்கு விரோதமாக நான் என் முகத்தைத் திருப்பி, அவன் தன் ஜனத்தில் இராதபடிக்கு அவனை அறுப்புண்டுபோகப் பண்ணுவேன்.
11 மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.
12 அதினிமித்தம் உங்களில் ஒருவனும் இரத்தம் புசிக்கவேண்டாம், உங்கள் நடுவே தங்குகிற அந்நியனும் இரத்தம் புசிக்கவேண்டாம் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.
13 இஸ்ரவேல் புத்திரரிலும் உங்களுக்குள் தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் புசிக்கத்தக்க ஒரு மிருகத்தையாவது ஒரு பட்சியையாவது வேட்டையாடிப் பிடித்தால், அவன் அதின் இரத்தத்தைச் சிந்தப்பண்ணி, மண்ணினால் அதை மூடக்கடவன்.
14 சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது; இரத்தம் ஜீவனுக்குச் சமானம்; ஆகையால் எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்கவேண்டாம். சகல மாம்சத்தின் உயிரும் அதின் இரத்தந்தானே; அதைப் புசிக்கிற எவனும் அறுப்புண்டுபோவான் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.
15 தானாய் இறந்துபோனதையாவது, பீறுண்டதையாவது, புசித்தவன் எவனும், அவன் சுதேசியானாலும் பரதேசியானாலும், தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டாயிருப்பானாக; பின்பு சுத்தமாயிருப்பான்.
16 அவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்காமலும், ஸ்நானம்பண்ணாமலும் இருந்தால், தன் அக்கிரமத்தைச் சுமப்பான் என்று சொல் என்றார்.


1 And the LORD said to Moses,
2 "Say to Aaron and his sons, and to all the people of Israel, This is the thing which the LORD has commanded.
3 If any man of the house of Israel kills an ox or a lamb or a goat in the camp, or kills it outside the camp,
4 and does not bring it to the door of the tent of meeting, to offer it as a gift to the LORD before the tabernacle of the LORD, bloodguilt shall be imputed to that man; he has shed blood; and that man shall be cut off from among his people.
5 This is to the end that the people of Israel may bring their sacrifices which they slay in the open field, that they may bring them to the LORD, to the priest at the door of the tent of meeting, and slay them as sacrifices of peace offerings to the LORD;
6 and the priest shall sprinkle the blood on the altar of the LORD at the door of the tent of meeting, and burn the fat for a pleasing odor to the LORD.
7 So they shall no more slay their sacrifices for satyrs, after whom they play the harlot. This shall be a statute for ever to them throughout their generations.
8 "And you shall say to them, Any man of the house of Israel, or of the strangers that sojourn among them, who offers a burnt offering or sacrifice,
9 and does not bring it to the door of the tent of meeting, to sacrifice it to the LORD; that man shall be cut off from his people.
10 "If any man of the house of Israel or of the strangers that sojourn among them eats any blood, I will set my face against that person who eats blood, and will cut him off from among his people.
11 For the life of the flesh is in the blood; and I have given it for you upon the altar to make atonement for your souls; for it is the blood that makes atonement, by reason of the life.
12 Therefore I have said to the people of Israel, No person among you shall eat blood, neither shall any stranger who sojourns among you eat blood.
13 Any man also of the people of Israel, or of the strangers that sojourn among them, who takes in hunting any beast or bird that may be eaten shall pour out its blood and cover it with dust.
14 "For the life of every creature is the blood of it; therefore I have said to the people of Israel, You shall not eat the blood of any creature, for the life of every creature is its blood; whoever eats it shall be cut off.
15 And every person that eats what dies of itself or what is torn by beasts, whether he is a native or a sojourner, shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the evening; then he shall be clean.
16 But if he does not wash them or bathe his flesh, he shall bear his iniquity."

1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
2 நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
3 நீங்கள் குடியிருந்த எகிப்துதேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், நான் உங்களை அழைத்துப்போகிற கானான் தேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும்,
4 என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
5 ஆகையால் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளக்கடவீர்கள்; அவைகளின்படி செய்கிறவன் எவனும் அவைகளால் பிழைப்பான்; நான் கர்த்தர்.
6 ஒருவனும் தனக்கு நெருங்கின இனமாகிய ஒருத்தியை நிர்வாணமாக்கும்படி அவளைச் சேரலாகாது; நான் கர்த்தர்.
7 உன் தகப்பனையாவது உன் தாயையாவது நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் தாயானவள்; அவளை நிர்வாணமாக்கலாகாது.
8 உன் தகப்பனுடைய மனைவியை நிர்வாணமாக்கலாகாது; அது உன் தகப்பனுடைய நிர்வாணம்.
9 உன் தகப்பனுக்காவது உன் தாய்க்காவது வீட்டிலாகிலும் புறத்திலாகிலும் பிறந்த குமாரத்தியாகிய உன் சகோதரியை நிர்வாணமாக்கலாகாது.
10 உன் குமாரனுடைய மகளையாவது உன் குமாரத்தியினுடைய மகளையாவது நிர்வாணமாக்கலாகாது அது உன்னுடைய நிர்வாணம்.
11 உன் தகப்பனுடைய மனைவியினிடத்தில் உன் தகப்பனுக்குப் பிறந்த குமாரத்தியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உனக்குச் சகோதரி.
12 உன் தகப்பனுடைய சகோதரியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் தகப்பனுக்கு நெருங்கின இனமானவள்.
13 உன் தாயினுடைய சகோதரியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் தாய்க்கு நெருங்கின இனமானவள்.
14 உன் தகப்பனுடைய சகோதரனை நிர்வாணமாக்கலாகாது; அவன் மனைவியைச் சேராயாக; அவள் உன் தகப்பனுடைய சகோதரி.
15 உன் மருமகளை நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் குமாரனுக்கு மனைவி, அவளை நிர்வாணமாக்கலாகாது.
16 உன் சகோதரனுடைய மனைவியை நிர்வாணமாக்கலாகாது; அது உன் சகோதரனுடைய நிர்வாணம்.
17 ஒரு ஸ்திரீயையும் அவள் மகளையும் நிர்வாணமாக்கலாகாது; அவளுடைய குமாரரின் மகளையும் அவளுடைய குமாரத்தியின் மகளையும் நிர்வாணமாக்கும்படி விவாகம்பண்ணலாகாது; இவர்கள் அவளுக்கு நெருங்கின இனமானவர்கள்; அது முறைகேடு.
18 உன் மனைவி உயிரோடிருக்கையில், அவளுக்கு உபத்திரவமாக அவள் சகோதரியையும் நிர்வாணமாக்கும்பொருட்டு அவளை விவாகம்பண்ணலாகாது.
19 ஸ்திரீயானவள் சூதகத்தால் விலக்கத்திலிருக்கையில், அவளை நிர்வாணமாக்க அவளோடே சேராதே.
20 பிறனுடைய மனைவியோடே சேரும்படி சயனித்து, அவளால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளவேண்டாம்.
21 நீ உன் சந்ததியில் யாரையாகிலும் மோளேகுக்கென்று தீக்கடக்கும்படி இடங்கொடாதே; உன் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதே; நான் கர்த்தர்.
22 பெண்ணோடு சம்யோகம் பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம் பண்ணவேண்டாம்; அது அருவருப்பானது.
23 யாதொரு மிருகத்தோடும் நீ புணர்ச்சி செய்து, அதினாலே உன்னைத் தீட்டுப்படுத்தவேண்டாம்; ஸ்திரீயானவள் மிருகத்தோடே புணரும்படி அதற்கு முன்பாக நிற்கலாகாது; அது அருவருப்பான தாறுமாறு.
24 இவைகளில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருங்கள்; நான் உங்கள் முன்னின்று துரத்திவிடுகிற ஜாதிகள் இவைகளெல்லாவற்றினாலும் தங்களைத் தீட்டுப்படுத்தியிருக்கிறார்கள்; தேசமும் தீட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.
25 ஆகையால் அதின் அக்கிரமத்தை விசாரிப்பேன்; தேசம் தன் குடிகளைக் கக்கிப்போடும்.
26 இந்த அருவருப்புகளையெல்லாம் உங்களுக்குமுன் இருந்த அந்தத் தேசத்தின் மனிதர் செய்ததினாலே தேசம் தீட்டாயிற்று.
27 இப்பொழுது உங்களுக்கு முன் இருந்த ஜாதிகளைத் தேசம் கக்கிப்போட்டதுபோல, நீங்கள் அதைத் தீட்டுப்படுத்தும்போது அது உங்களையும் கக்கிப்போடாதபடிக்கு,
28 நீங்கள் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொண்டு, தேசத்திலே பிறந்தவனானாலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியனானாலும் இந்த அருவருப்புக்களில் ஒன்றையும் செய்யவேண்டாம்.
29 இப்படிப்பட்ட அருவருப்பானவைகளில் யாதொன்றை யாராவது செய்தால், செய்த அந்த ஆத்துமாக்கள் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவார்கள்.
30 ஆகையால் உங்களுக்குமுன் செய்யப்பட்ட அருவருப்பான முறைமைகளில் யாதொன்றை நீங்கள் செய்து, அவைகளால் உங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாதபடிக்கு என் கட்டளையைக் கைக்கொள்ளுங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.


1 And the LORD said to Moses,
2 "Say to the people of Israel, I am the LORD your God.
3 You shall not do as they do in the land of Egypt, where you dwelt, and you shall not do as they do in the land of Canaan, to which I am bringing you. You shall not walk in their statutes.
4 You shall do my ordinances and keep my statutes and walk in them. I am the LORD your God.
5 You shall therefore keep my statutes and my ordinances, by doing which a man shall live: I am the LORD.
6 "None of you shall approach any one near of kin to him to uncover nakedness. I am the LORD.
7 You shall not uncover the nakedness of your father, which is the nakedness of your mother; she is your mother, you shall not uncover her nakedness.
8 You shall not uncover the nakedness of your father's wife; it is your father's nakedness.
9 You shall not uncover the nakedness of your sister, the daughter of your father or the daughter of your mother, whether born at home or born abroad.
10 You shall not uncover the nakedness of your son's daughter or of your daughter's daughter, for their nakedness is your own nakedness.
11 You shall not uncover the nakedness of your father's wife's daughter, begotten by your father, since she is your sister.
12 You shall not uncover the nakedness of your father's sister; she is your father's near kinswoman.
13 You shall not uncover the nakedness of your mother's sister, for she is your mother's near kinswoman.
14 You shall not uncover the nakedness of your father's brother, that is, you shall not approach his wife; she is your aunt.
15 You shall not uncover the nakedness of your daughter-in-law; she is your son's wife, you shall not uncover her nakedness.
16 You shall not uncover the nakedness of your brother's wife; she is your brother's nakedness.
17 You shall not uncover the nakedness of a woman and of her daughter, and you shall not take her son's daughter or her daughter's daughter to uncover her nakedness; they are your near kinswomen; it is wickedness.
18 And you shall not take a woman as a rival wife to her sister, uncovering her nakedness while her sister is yet alive.
19 "You shall not approach a woman to uncover her nakedness while she is in her menstrual uncleanness.
20 And you shall not lie carnally with your neighbor's wife, and defile yourself with her.
21 You shall not give any of your children to devote them by fire to Molech, and so profane the name of your God: I am the LORD.
22 You shall not lie with a male as with a woman; it is an abomination.
23 And you shall not lie with any beast and defile yourself with it, neither shall any woman give herself to a beast to lie with it: it is perversion.
24 "Do not defile yourselves by any of these things, for by all these the nations I am casting out before you defiled themselves;
25 and the land became defiled, so that I punished its iniquity, and the land vomited out its inhabitants.
26 But you shall keep my statutes and my ordinances and do none of these abominations, either the native or the stranger who sojourns among you
27 (for all of these abominations the men of the land did, who were before you, so that the land became defiled);
28 lest the land vomit you out, when you defile it, as it vomited out the nation that was before you.
29 For whoever shall do any of these abominations, the persons that do them shall be cut off from among their people.
30 So keep my charge never to practice any of these abominable customs which were practiced before you, and never to defile yourselves by them: I am the LORD your God."

1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
2 நீ இஸ்ரவேல் புத்திரரின் சபை அனைத்தோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்.
3 உங்களில் அவனவன் தன்தன் தாய்க்கும், தன்தன் தகப்பனுக்கும் பயந்திருக்கவும், என் ஓய்வுநாட்களை ஆசரிக்கவும் கடவீர்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
4 விக்கிரகங்களை நாடாமலும் வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
5 நீங்கள் சமாதானபலியைக் கர்த்தருக்குச் செலுத்தினால், அதை மனோற்சாகமாய்ச் செலுத்துங்கள்.
6 நீங்கள் அதைச் செலுத்துகிற நாளிலும் மறுநாளிலும் அதைப் புசிக்கவேண்டும்; மூன்றாம் நாள்மட்டும் மீதியானது அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது.
7 மூன்றாம் நாளில் அதில் ஏதாகிலும் புசிக்கப்பட்டால் அருவருப்பாயிருக்கும்; அது அங்கிகரிக்கப்படமாட்டாது.
8 அதைப் புசிக்கிறவன் கர்த்தருக்குப் பரிசுத்தமானதைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினபடியால் அவன் தன் அக்கிரமத்தைச் சுமந்து, தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
9 நீங்கள் தேசத்தின் பயிரை அறுக்கும்போது, உன் வயலின் ஓரத்திலிருக்கிறதைத் தீர அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும்,
10 உன் திராட்சத்தோட்டத்திலே பின் அறுப்பை அறுக்காமலும், அதிலே சிந்திக்கிடக்கிற பழங்களைப் பொறுக்காமலும், அவைகளை எளியவனுக்கும் பரதேசிக்கும் விட்டுவிடுவாயாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
11 நீங்கள் களவு செய்யாமலும், வஞ்சனைபண்ணாமலும், ஒருவருக்கொருவர் பொய் சொல்லாமலும் இருங்கள்.
12 என் நாமத்தைக் கொண்டு பொய்யாணையிடுகிறதினால், உங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்.
13 பிறனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருப்பாயாக; கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம்மட்டும் உன்னிடத்தில் இருக்கலாகாது.
14 செவிடனை நிந்தியாமலும், குருடனுக்கு முன்னே தடுக்கலை வையாமலும், உன் தேவனுக்குப் பயந்திருப்பாயாக; நான் கர்த்தர்.
15 நியாயவிசாரணையில் அநியாயம் செய்யாதிருங்கள்; சிறியவனுக்கு முகதாட்சிணியம் செய்யாமலும், பெரியவனுடைய முகத்துக்கு அஞ்சாமலும், நீதியாகப் பிறனுக்கு நியாயந்தீர்ப்பாயாக.
16 உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் கர்த்தர்.
17 உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகையாயாக; பிறன்மேல் பாவம் சுமராதபடிக்கு அவனை எப்படியும் கடிந்து கொள்ளவேண்டும்.
18 பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் கர்த்தர்.
19 என் கட்டளைகளைக் கைக்கொள்வீர்களாக; உன் மிருக ஜீவன்களை வேறுஜாதியோடே பொலியவிடாயாக; உன் வயலிலே வெவ்வேறு வகையான விதைகளைக் கலந்து விதையாயாக; சணல் நூலும் கம்பளிநூலும் கலந்த வஸ்திரத்தை உடுத்தாதிருப்பாயாக.
20 ஒருவனுக்கு அடிமையானவள் ஒரு புருஷனுக்கு நியமிக்கப்பட்டவளாயிருந்து, முற்றிலும் மீட்கப்படாமலும் தன்னிச்சையாய் விடப்படாமலுமிருக்க, அவளோடே ஒருவன் சம்யோகமாய்ச் சயனம்பண்ணினால், அவர்கள் கொலைசெய்யப்படாமல், அடிக்கப்படவேண்டும்; அவள் சுயாதீனமுள்ளவள் அல்ல.
21 அவன் தன் குற்றநிவாரணபலியாய் ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் ஒரு ஆட்டுக்கடாவைக் கொண்டுவரக்கடவன்.
22 அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தினிமித்தம் அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவன் செய்த பாவம் அவனுக்கு மன்னிக்கப்படும்.
23 நீங்கள் அந்தத் தேசத்தில் வந்து, புசிக்கத்தக்க கனிகளைத் தருகிற பலவித மரங்களை நாட்டினபின்பு, அவைகளின் கனிகளை விருத்தசேதனமில்லாதவைகளென்று எண்ணுவீர்களாக; மூன்று வருஷம் அது புசிக்கப்படாமல், விருத்தசேதனமில்லாததாய் உங்களுக்கு எண்ணப்படவேண்டும்.
24 பின்பு நாலாம் வருஷத்திலே அவைகளின் கனிகளெல்லாம் கர்த்தருக்குத் துதிசெலுத்துகிறதற்கேற்ற பரிசுத்தமாயிருக்கும்.
25 ஐந்தாம் வருஷத்திலே அவைகளின் கனிகளைப் புசிக்கலாம்; இப்படி அவைகளின் பலன் உங்களுக்குப் பெருகும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
26 யாதொன்றையும் இரத்தத்துடன் புசிக்கவேண்டாம். குறிகேளாமலும், நாள்பாராமலும் இருப்பீர்களாக.
27 உங்கள் தலைமயிரைச் சுற்றி ஒதுக்காமலும், தாடியின் ஓரங்களைக் கத்தரிக்காமலும்,
28 செத்தவனுக்காக உங்கள் சரீரத்தைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துக்களை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்
29 தேசத்தார் வேசித்தனம்பண்ணி தேசமெங்கும் முறைகேடான பாவம் நிறையாதபடிக்கு உன் குமாரத்தியை வேசித்தனம்பண்ண விடுகிறதினாலே பரிசுத்தக் குலைச்சலாக்காயாக.
30 என் ஓய்வுநாட்களை ஆசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாயிருப்பீர்களாக; நான் கர்த்தர்.
31 அஞ்சனம் பார்க்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்படவேண்டாம்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
32 நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக; நான் கர்த்தர்.
33 யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்தவேண்டாம்.
34 உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தீர்களே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
35 நியாயவிசாரணையிலும், அளவிலும், நிறையிலும், படியிலும் அநியாயம் செய்யாதிருப்பீர்களாக.
36 சுமுத்திரையான தராசும், சுமுத்திரையான நிறைகல்லும், சுமுத்திரையான மரக்காலும் சுமுத்திரையான படியும் உங்களுக்கு இருக்கவேண்டும்; நான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்.
37 ஆகையால் என்னுடைய கட்டளைகள் யாவையும் என்னுடைய நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு, அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.


1 And the LORD said to Moses,
2 "Say to all the congregation of the people of Israel, You shall be holy; for I the LORD your God am holy.
3 Every one of you shall revere his mother and his father, and you shall keep my sabbaths: I am the LORD your God.
4 Do not turn to idols or make for yourselves molten gods: I am the LORD your God.
5 "When you offer a sacrifice of peace offerings to the LORD, you shall offer it so that you may be accepted.
6 It shall be eaten the same day you offer it, or on the morrow; and anything left over until the third day shall be burned with fire.
7 If it is eaten at all on the third day, it is an abomination; it will not be accepted,
8 and every one who eats it shall bear his iniquity, because he has profaned a holy thing of the LORD; and that person shall be cut off from his people.
9 "When you reap the harvest of your land, you shall not reap your field to its very border, neither shall you gather the gleanings after your harvest.
10 And you shall not strip your vineyard bare, neither shall you gather the fallen grapes of your vineyard; you shall leave them for the poor and for the sojourner: I am the LORD your God.
11 "You shall not steal, nor deal falsely, nor lie to one another.
12 And you shall not swear by my name falsely, and so profane the name of your God: I am the LORD.
13 "You shall not oppress your neighbor or rob him. The wages of a hired servant shall not remain with you all night until the morning.
14 You shall not curse the deaf or put a stumbling block before the blind, but you shall fear your God: I am the LORD.
15 "You shall do no injustice in judgment; you shall not be partial to the poor or defer to the great, but in righteousness shall you judge your neighbor.
16 You shall not go up and down as a slanderer among your people, and you shall not stand forth against the life of your neighbor: I am the LORD.
17 "You shall not hate your brother in your heart, but you shall reason with your neighbor, lest you bear sin because of him.
18 You shall not take vengeance or bear any grudge against the sons of your own people, but you shall love your neighbor as yourself: I am the LORD.
19 "You shall keep my statutes. You shall not let your cattle breed with a different kind; you shall not sow your field with two kinds of seed; nor shall there come upon you a garment of cloth made of two kinds of stuff.
20 "If a man lies carnally with a woman who is a slave, betrothed to another man and not yet ransomed or given her freedom, an inquiry shall be held. They shall not be put to death, because she was not free;
21 but he shall bring a guilt offering for himself to the LORD, to the door of the tent of meeting, a ram for a guilt offering.
22 And the priest shall make atonement for him with the ram of the guilt offering before the LORD for his sin which he has committed; and the sin which he has committed shall be forgiven him.
23 "When you come into the land and plant all kinds of trees for food, then you shall count their fruit as forbidden; three years it shall be forbidden to you, it must not be eaten.
24 And in the fourth year all their fruit shall be holy, an offering of praise to the LORD.
25 But in the fifth year you may eat of their fruit, that they may yield more richly for you: I am the LORD your God.
26 "You shall not eat any flesh with the blood in it. You shall not practice augury or witchcraft.
27 You shall not round off the hair on your temples or mar the edges of your beard.
28 You shall not make any cuttings in your flesh on account of the dead or tattoo any marks upon you: I am the LORD.
29 "Do not profane your daughter by making her a harlot, lest the land fall into harlotry and the land become full of wickedness.
30 You shall keep my sabbaths and reverence my sanctuary: I am the LORD.
31 "Do not turn to mediums or wizards; do not seek them out, to be defiled by them: I am the LORD your God.
32 "You shall rise up before the hoary head, and honor the face of an old man, and you shall fear your God: I am the LORD.
33 "When a stranger sojourns with you in your land, you shall not do him wrong.
34 The stranger who sojourns with you shall be to you as the native among you, and you shall love him as yourself; for you were strangers in the land of Egypt: I am the LORD your God.
35 "You shall do no wrong in judgment, in measures of length or weight or quantity.
36 You shall have just balances, just weights, a just ephah, and a just hin: I am the LORD your God, who brought you out of the land of Egypt.
37 And you shall observe all my statutes and all my ordinances, and do them: I am the LORD."

1 கர்த்தர் மோசேயை நோக்கி:
2 பின்னும் நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரரிலும் இஸ்ரவேலில் வாசம்பண்ணுகிற அந்நியர்களிலும் எவனாகிலும் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுத்தால், அவன் கொலை செய்யப்படவேண்டும்; தேசத்தின் ஜனங்கள் அவன்மேல் கல்லெறியவேண்டும்.
3 அவன் என் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்கும்படிக்கு, தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுத்ததினாலே, நான் அப்படிப்பட்டவனுக்கு விரோதமாக எதிர்த்து நின்று அவனைத் தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டு போகப்பண்ணுவேன்.
4 அவன் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுக்கும்போது, தேசத்தின் ஜனங்கள் அவனைக் கொலைசெய்யாதபடிக்குக் கண்சாடையாயிருந்தால்,
5 நான் அந்த மனிதனுக்கும் அவன் குடும்பத்துக்கும் விரோதமாக எதிர்த்து நின்று , அவனையும், அவன் பிறகே மோளேகை விபசாரமார்க்கமாய்ப் பின்பற்றின யாவரையும், தங்கள் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகப்பண்ணுவேன்.
6 அஞ்சனம் பார்க்கிறவர்களையும், குறிசொல்லுகிறவர்களையும், பின்தொடர்ந்து சோரம்போக எந்த ஆத்துமா அவர்களை நாடுகிறானோ, அந்த ஆத்துமாவுக்கு விரோதமாக எதிர்த்துநின்று, அவனைத் தன் ஜனத்திலிராதபடிக்கு அறுப்புண்டுபோகப்பண்ணுவேன்.
7 ஆதலால் நீங்கள் உங்களைப் பரிசுத்தப்படுத்திப் பரிசுத்தராயிருங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
8 என் கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.
9 தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன்; அவன் தன் தகப்பனையும் தன் தாயையும் சபித்தான், அவன் இரத்தப்பழி அவன்மேல் இருப்பதாக.
10 ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபசாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபசாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலைசெய்யப்படக்கடவர்கள்.
11 தன் தகப்பன் மனைவியோடே சயனிக்கிறவன் தன் தகப்பனை நிர்வாணமாக்கினபடியால், இருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள்; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.
12 ஒருவன் தன் மருமகளோடே சயனித்தால், இருவரும் கொலை செய்யப்படக்கடவர்கள்; அருவருப்பான தாறுமாறு பண்ணினார்கள்; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.
13 ஒருவன் பெண்ணோடே சம்யோகம்பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம்பண்ணினால், அருவருப்பானகாரியம் செய்த அவ்விருவரும் கொலை செய்யப்படக்கடவர்கள் அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.
14 ஒருவன் ஒரு ஸ்திரீயையும் அவள் தாயையும் படைத்தால், அது முறைகேடு; இவ்வித முறைகேடு உங்களுக்குள் இராதபடிக்கு, அவனையும் அவர்களையும் அக்கினியில் சுட்டெரிக்கவேண்டும்.
15 ஒருவன் மிருகத்தோடே புணர்ந்தால், அவன் கொலைசெய்யப்படக்கடவன்; அந்த மிருகத்தையும் கொல்லக்கடவீர்கள்.
16 ஒரு ஸ்திரீ யாதொரு மிருகத்தோடே சேர்ந்து சயனித்தால், அந்த ஸ்திரீயையும் அந்த மிருகத்தையும் கொல்லக்கடவாய்; இரு ஜீவனும் கொலைசெய்யப்படவேண்டும்; அவைகளின் இரத்தப்பழி அவைகளின்மேல் இருப்பதாக.
17 ஒருவன் தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது குமாரத்தியாயிருக்கிற தன் சகோதரியைச் சேர்த்துக்கொண்டு, அவன் அவளுடைய நிர்வாணத்தையும், அவள் அவனுடைய நிர்வாணத்தையும் பார்த்தால் அது பாதகம்; அவர்கள் தங்கள் ஜனங்களின் கண்களுக்கு முன்பாக அறுப்புண்டு போகக்கடவர்கள்; அவன் தன் சகோதரியை நிர்வாணப்படுத்தினான்; அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.
18 ஒருவன் சூதக ஸ்திரீயோடே சயனித்து, அவளை நிர்வாணமாக்கினால், அவன் அவளுடைய உதிர ஊற்றைத் திறந்து, அவளும் தன் உதிர ஊற்றை வெளிப்படுத்தினபடியால், இருவரும் தங்கள் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகவேண்டும்.
19 உன் தாயினுடைய சகோதரியையும் உன் தகப்பனுடைய சகோதரியையும் நிர்வாணமாக்காயாக, அப்படிப்பட்டவன் தன் நெருங்கிய இனத்தை அவமானமாக்கினான்; அவர்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள்.
20 ஒருவன் தன் தகப்பனின் சகோதரனுடைய மனைவியோடே சயனித்தால் அவன் தன் தகப்பனின் சகோதரனை நிர்வாணமாக்கினான், அவர்கள் தங்கள் பாவத்தைச் சுமப்பார்கள், சந்தானமில்லாமல் சாவார்கள்.
21 ஒருவன் தன் சகோதரனுடைய மனைவியை விவாகம்பண்ணினால், அது அசுத்தம்; தன் சகோதரனை நிர்வாணமாக்கினான், அவர்கள் சந்தானமற்றிருப்பார்கள்.
22 ஆகையால் நீங்கள் குடியிருப்பதற்காக நான் உங்களைக் கொண்டுபோகிற தேசம் உங்களைக் கக்கிக்போடாதபடிக்கு, நீங்கள் என் கட்டளைகள் யாவையும் கைக்கொண்டு நடவுங்கள்.
23 நான் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுகிற ஜனத்தினுடைய வழிபாடுகளில் நடவாதிருங்கள்; அவர்கள் இப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் செய்தபடியால் நான் அவர்களை அரோசித்தேன்.
24 நீங்கள் அவர்கள் தேசத்தைச் சுதந்தரிப்பீர்கள் என்று உங்களோடே சொன்னேன்; பாலும் தேனும் ஓடுகிற அந்த தேசத்தை உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுப்பேன்; உங்களை மற்ற ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்த உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே.
25 ஆகையால் சுத்தமான மிருகங்களுக்கும் அசுத்தமான மிருகங்களுக்கும், சுத்தமான பறவைகளுக்கும் அசுத்தமான பறவைகளுக்கும் நீங்கள் வித்தியாசம் பண்ணி, நான் உங்களுக்குத் தீட்டாக எண்ணச் சொல்லி விலக்கின மிருகங்களாலும் பறவைகளாலும் தரையிலே ஊருகிற யாதொரு பிராணிகளாலும் உங்களை அருவருப்பாக்காதிருப்பீர்களாக.
26 கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக, நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்தேன்.
27 அஞ்சனம்பார்க்கிறவர்களும் குறிசொல்லுகிறவர்களுமாயிருக்கிற புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கொலைசெய்யப்படவேண்டும்; அவர்கள்மேல் கல்லெறிவார்களாக; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருக்கக்கடவது என்று சொல் என்றார்.


1 The LORD said to Moses,
2 "Say to the people of Israel, Any man of the people of Israel, or of the strangers that sojourn in Israel, who gives any of his children to Molech shall be put to death; the people of the land shall stone him with stones.
3 I myself will set my face against that man, and will cut him off from among his people, because he has given one of his children to Molech, defiling my sanctuary and profaning my holy name.
4 And if the people of the land do at all hide their eyes from that man, when he gives one of his children to Molech, and do not put him to death,
5 then I will set my face against that man and against his family, and will cut them off from among their people, him and all who follow him in playing the harlot after Molech.
6 "If a person turns to mediums and wizards, playing the harlot after them, I will set my face against that person, and will cut him off from among his people.
7 Consecrate yourselves therefore, and be holy; for I am the LORD your God.
8 Keep my statutes, and do them; I am the LORD who sanctify you.
9 For every one who curses his father or his mother shall be put to death; he has cursed his father or his mother, his blood is upon him.
10 "If a man commits adultery with the wife of his neighbor, both the adulterer and the adulteress shall be put to death.
11 The man who lies with his father's wife has uncovered his father's nakedness; both of them shall be put to death, their blood is upon them.
12 If a man lies with his daughter-in-law, both of them shall be put to death; they have committed incest, their blood is upon them.
13 If a man lies with a male as with a woman, both of them have committed an abomination; they shall be put to death, their blood is upon them.
14 If a man takes a wife and her mother also, it is wickedness; they shall be burned with fire, both he and they, that there may be no wickedness among you.
15 If a man lies with a beast, he shall be put to death; and you shall kill the beast.
16 If a woman approaches any beast and lies with it, you shall kill the woman and the beast; they shall be put to death, their blood is upon them.
17 "If a man takes his sister, a daughter of his father or a daughter of his mother, and sees her nakedness, and she sees his nakedness, it is a shameful thing, and they shall be cut off in the sight of the children of their people; he has uncovered his sister's nakedness, he shall bear his iniquity.
18 If a man lies with a woman having her sickness, and uncovers her nakedness, he has made naked her fountain, and she has uncovered the fountain of her blood; both of them shall be cut off from among their people.
19 You shall not uncover the nakedness of your mother's sister or of your father's sister, for that is to make naked one's near kin; they shall bear their iniquity.
20 If a man lies with his uncle's wife, he has uncovered his uncle's nakedness; they shall bear their sin, they shall die childless.
21 If a man takes his brother's wife, it is impurity; he has uncovered his brother's nakedness, they shall be childless.
22 "You shall therefore keep all my statutes and all my ordinances, and do them; that the land where I am bringing you to dwell may not vomit you out.
23 And you shall not walk in the customs of the nation which I am casting out before you; for they did all these things, and therefore I abhorred them.
24 But I have said to you, `You shall inherit their land, and I will give it to you to possess, a land flowing with milk and honey.' I am the LORD your God, who have separated you from the peoples.
25 You shall therefore make a distinction between the clean beast and the unclean, and between the unclean bird and the clean; you shall not make yourselves abominable by beast or by bird or by anything with which the ground teems, which I have set apart for you to hold unclean.
26 You shall be holy to me; for I the LORD am holy, and have separated you from the peoples, that you should be mine.
27 "A man or a woman who is a medium or a wizard shall be put to death; they shall be stoned with stones, their blood shall be upon them."

1 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்களில் ஒருவனும் தன் ஜனத்தாரில் இறந்துபோன யாதொருவருக்காகத் தங்களை தீட்டுப்படுத்தலாகாது என்று அவர்களோடே சொல்.
2 தன் தாயும், தன் தகப்பனும், தன் குமாரனும், தன் குமாரத்தியும், தன் சகோதரனும்,
3 புருஷனுக்கு வாழ்க்கைப்படாமல் தன்னிடத்திலிருக்கிற கன்னியாஸ்திரீயான தன் சகோதரியுமாகிய தனக்கு நெருங்கின இனமான இவர்களுடைய சாவுக்காகத் தீட்டுப்படலாம்.
4 தன் ஜனத்தாரில் பெரியவனாகிய அவன் வேறொருவருக்காகவும் தன்னைப் பரிசுத்தக்குலைச்சலாக்கித் தீட்டுப்படுத்தலாகாது.
5 அவர்கள் தங்கள் தலையை மொட்டையடிக்காமலும், தங்கள் தாடியின் ஓரங்களைச் சிரைத்துப்போடாமலும், தங்கள் தேகத்தைக் கீறிக்கொள்ளாமலும் இருப்பார்களாக.
6 தங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமல் அவருக்கேற்ற பரிசுத்தராயிருப்பார்களாக; அவர்கள் கர்த்தரின் தகனபலிகளையும் தங்கள் தேவனுடைய அப்பத்தையும் செலுத்துகிறவர்களாதலால் பரிசுத்தராயிருக்கவேண்டும்.
7 அவர்கள் தங்கள் தேவனுக்குப் பரிசுத்தமானவர்கள், ஆகையால் வேசியையாகிலும் கற்புக்குலைந்தவளையாகிலும் விவாகம்பண்ணார்களாக; தன் புருஷனாலே தள்ளப்பட்ட ஸ்திரீயையும் விவாகம்பண்ணார்களாக.
8 அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்துகிறபடியால் நீ அவனைப் பரிசுத்தப்படுத்தவேண்டும்; உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியால், அவனும் உனக்கு முன்பாகப் பரிசுத்தனாயிருப்பானாக.
9 ஆசாரியனுடைய குமாரத்தி வேசித்தனம்பண்ணி, தன்னைப் பரிசுத்தக் குலைச்சலாக்கினால், அவள் தன் தகப்பனையும் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறாள்; அவள் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவள்.
10 தன் சகோதரருக்குள்ளே பிரதான ஆசாரியனாகத் தன் சிரசில் அபிஷேகதைலம் வார்க்கப்பட்டவனும், அவனுக்குரிய வஸ்திரங்களைத் தரிக்கும்படி பிரதிஷ்டைபண்ணப்பட்டவனுமாயிருக்கிறவன் எவனோ, அவன் தன் பாகையை எடுக்காமலும், தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொள்ளாமலும்,
11 பிரேதம் கிடக்கும் இடத்தில் போகாமலும், தன் தகப்பனுக்காகவும் தன் தாய்க்காகவும் தன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாமலும்,
12 பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படாமலும், தன் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காமலும் இருப்பானாக; அவனுடைய தேவனின் அபிஷேகதைலம் என்னும் கிரீடம் அவன்மேல் இருக்கிறதே: நான் கர்த்தர்.
13 கன்னிகையாயிருக்கிற பெண்ணை அவன் விவாகம்பண்ணவேண்டும்.
14 விதவையானாலும் தள்ளப்பட்டவளையானாலும் கற்பு குலைந்தவளையானாலும் வேசியையானாலும் விவாகம்பண்ணாமல், தன் ஜனங்களுக்குள்ளே ஒரு கன்னிகையை விவாகம்பண்ணக்கடவன்.
15 அவன் தன் வித்தைத் தன் ஜனங்களுக்குள்ளே பரிசுத்தக் குலைச்சலாக்காமல் இருப்பானாக; நான் அவனைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார்.
16 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
17 நீ ஆரோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உன் சந்ததியாருக்குள்ளே அங்கவீனமுள்ளவன் தலைமுறைதோறும் தேவனுடைய அப்பத்தைச் செலுத்தும்படி சேரலாகாது.
18 அங்கவீனமுள்ள ஒருவனும் அணுகலாகாது; குருடனானாலும், சப்பாணியானாலும், குறுகின அல்லது நீண்ட அவயவமுள்ளவனானாலும்,
19 காலொடிந்தவனானாலும், கையொடிந்தவனானாலும்,
20 கூனனானாலும், குள்ளனானாலும், பூவிழுந்த கண்ணனானாலும், சொறியனானாலும், அசறுள்ளவனானாலும், விதை நசுங்கினவனானாலும் அணுகலாகாது.
21 ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியாரில் அங்கவீனமுள்ள ஒருவனும் கர்த்தரின் தகனபலிகளைச் செலுத்தச் சேரலாகாது; அவன் அங்கவீனமுள்ளவனாகையால், அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்தச் சேரலாகாது.
22 அவன் தன் தேவனுடைய அப்பமாகிய மகா பரிசுத்தமானவைகளிலும் மற்ற பரிசுத்தமானவைகளிலும் புசிக்கலாம்.
23 ஆனாலும் அவன் அங்கவீனமுள்ளவனாகையால், அவன் என் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடிக்குத் திரைக்குள்ளே போகாமலும் பலிபீடத்தண்டையில் சேராமலும் இருப்பானாக; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார்.
24 மோசே இவைகளை ஆரோனோடும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொன்னான்.


1 And the LORD said to Moses, "Speak to the priests, the sons of Aaron, and say to them that none of them shall defile himself for the dead among his people,
2 except for his nearest of kin, his mother, his father, his son, his daughter, his brother,
3 or his virgin sister (who is near to him because she has had no husband; for her he may defile himself).
4 He shall not defile himself as a husband among his people and so profane himself.
5 They shall not make tonsures upon their heads, nor shave off the edges of their beards, nor make any cuttings in their flesh.
6 They shall be holy to their God, and not profane the name of their God; for they offer the offerings by fire to the LORD, the bread of their God; therefore they shall be holy.
7 They shall not marry a harlot or a woman who has been defiled; neither shall they marry a woman divorced from her husband; for the priest is holy to his God.
8 You shall consecrate him, for he offers the bread of your God; he shall be holy to you; for I the LORD, who sanctify you, am holy.
9 And the daughter of any priest, if she profanes herself by playing the harlot, profanes her father; she shall be burned with fire.
10 "The priest who is chief among his brethren, upon whose head the anointing oil is poured, and who has been consecrated to wear the garments, shall not let the hair of his head hang loose, nor rend his clothes;
11 he shall not go in to any dead body, nor defile himself, even for his father or for his mother;
12 neither shall he go out of the sanctuary, nor profane the sanctuary of his God; for the consecration of the anointing oil of his God is upon him: I am the LORD.
13 And he shall take a wife in her virginity.
14 A widow, or one divorced, or a woman who has been defiled, or a harlot, these he shall not marry; but he shall take to wife a virgin of his own people,
15 that he may not profane his children among his people; for I am the LORD who sanctify him."
16 And the LORD said to Moses,
17 "Say to Aaron, None of your descendants throughout their generations who has a blemish may approach to offer the bread of his God.
18 For no one who has a blemish shall draw near, a man blind or lame, or one who has a mutilated face or a limb too long,
19 or a man who has an injured foot or an injured hand,
20 or a hunchback, or a dwarf, or a man with a defect in his sight or an itching disease or scabs or crushed testicles;
21 no man of the descendants of Aaron the priest who has a blemish shall come near to offer the LORD's offerings by fire; since he has a blemish, he shall not come near to offer the bread of his God.
22 He may eat the bread of his God, both of the most holy and of the holy things,
23 but he shall not come near the veil or approach the altar, because he has a blemish, that he may not profane my sanctuaries; for I am the LORD who sanctify them."
24 So Moses spoke to Aaron and to his sons and to all the people of Israel.

1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
2 இஸ்ரவேல் புத்திரர் எனக்கென்று நியமித்துச் செலுத்துகிற பரிசுத்த வஸ்துக்களைக் குறித்து ஆரோனும் அவன் குமாரரும் என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காதபடிக்கு எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று அவர்களோடே சொல்; நான் கர்த்தர்.
3 அன்றியும் நீ அவர்களை நோக்கி: உங்கள் தலைமுறைகளில் உள்ள சந்ததியாரில் எவனாகிலும் தான் தீட்டுப்பட்டிருக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு நியமித்துச் செலுத்துகிற பரிசுத்தமானவைகளண்டையில் சேர்ந்தால், அந்த ஆத்துமா என் சந்நிதியில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்று சொல்; நான் கர்த்தர்.
4 ஆரோனின் சந்ததியாரில் எவன் குஷ்டரோகியோ, எவன் பிரமியமுள்ளவனோ, அவன் சுத்தமாகும்மட்டும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது; பிணத்தினாலே தீட்டானவைகளில் எதையாகிலும் தொட்டவனும், இந்திரியங்கழிந்தவனும்,
5 தீட்டுப்படுத்துகிற யாதொரு ஊரும்பிராணியையாகிலும் தீட்டுள்ள மனிதனையாகிலும் தொட்டவனும்,
6 சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அவன் ஜலத்தில் ஸ்நானம்பண்ணும்வரைக்கும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது.
7 சூரியன் அஸ்தமித்தபின்பு சுத்தமாயிருப்பான்; அதன்பின்பு அவன் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாம்; அது அவனுடைய ஆகாரம்.
8 தானாய்ச் செத்ததையும் பீறுண்டதையும் அவன் புசிக்கிறதினாலே தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது; நான் கர்த்தர்.
9 ஆகையால் பரிசுத்தமானதை அவர்கள் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறதினாலே, பாவம் சுமந்து அதினிமித்தம் சாகாதபடிக்கு, என் கட்டளையைக் காக்கக்கடவர்கள்; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.
10 அந்நியன் ஒருவனும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது; ஆசாரியன் வீட்டில் தங்கியிருக்கிறவனும் கூலிவேலைசெய்கிறவனும் பரிசுத்தமானதில் புசிக்கலாகாது.
11 ஆசாரியனால் பணத்துக்குக் கொள்ளப்பட்டவனும், அவன் வீட்டிலே பிறந்தவனும் அவனுடைய ஆகாரத்தில் புசிக்கலாம்.
12 ஆசாரியனுடைய குமாரத்தி அந்நியனுக்கு வாழ்க்கைப்பட்டால், அவள் பரிசுத்தமானவைகளின் படைப்பிலே புசிக்கலாகாது.
13 விதவையாய்ப்போன, அல்லது தள்ளப்பட்டவளான ஆசாரியனுடைய குமாரத்தி பிள்ளையில்லாதிருந்து, தன் தகப்பன் வீட்டில் தன்னுடைய இளவயதில் இருந்ததுபோலத் திரும்பவந்து இருந்தாளேயாகில், அவள் தன் தகப்பன் ஆகாரத்தில் புசிக்கலாம், அந்நியனாகிய ஒருவனும் அதில் புசிக்கலாகாது.
14 ஒருவன் அறியாமல் பரிசுத்தமானதில் புசித்ததுண்டானால், அவன் அதிலே ஐந்தில் ஒரு பங்கு அதிகமாய்க் கூட்டிப் பரிசுத்தமானவைகளோடுங்கூட ஆசாரியனுக்குக் கொடுக்கக்கடவன்.
15 அவர்கள் கர்த்தருக்குப் படைக்கிற இஸ்ரவேல் புத்திரருடைய பரிசுத்தமானவைகளைப் பரிசுத்தக்குலைச்சலாக்காமலும்,
16 அவைகளைப் புசிக்கிறதினால் அவர்கள்மேல் குற்றமான அக்கிரமத்தைச் சுமரப்பண்ணாமலும் இருப்பார்களாக; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார்.
17 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
18 நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் இஸ்ரவேலில் தங்குகிற அந்நியர்களிலும் தங்களுடைய பொருத்தனைகளின்படியாகிலும் உற்சாகத்தின்படியாகிலும் சர்வாங்க தகனபலிகளாகக் கர்த்தருக்குத் தங்கள் காணிக்கையை எவர்கள் செலுத்தப்போகிறார்களோ,
19 அவர்கள் தங்கள் மனதின்படியே மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் வெள்ளாடுகளிலாகிலும் பழுதற்ற ஒரு ஆணைப் பிடித்துவந்து செலுத்துவார்களாக.
20 பழுதுள்ள ஒன்றையும் செலுத்த வேண்டாம்; அது உங்கள் நிமித்தம் அங்கிகரிக்கப்படுவதில்லை.
21 ஒருவன் விசேஷித்த பொருத்தனையாவது, உற்சாகமாயாவது, கர்த்தருக்கு மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் சமாதானபலிகளைச் செலுத்தப்போனால், அது அங்கிகரிக்கும்படி, ஒரு பழுதுமில்லாமல் உத்தமமாயிருக்கவேண்டும்.
22 குருடு, நெரிசல், முடம், கழலை, சொறி, புண் முதலிய பழுதுள்ளவைகளை நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தாமலும், அவைகளாலே கர்த்தருக்குப் பலிபீடத்தின்மேல் தகனபலியிடாமலும் இருப்பீர்களாக.
23 நீண்ட அல்லது குறுகின அவயவமுள்ள மாட்டையும் ஆட்டையும் நீ உற்சாகபலியாக இடலாம்; பொருத்தனைக்காக அது அங்கிகரிக்கப்படமாட்டாது.
24 விதை நசுங்கினதையும் நொறுங்கினதையும் காயம்பட்டதையும் விதை அறுக்கப்பட்டதையும் நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தாமலும், அவைகளை உங்கள் தேசத்திலே பலியிடாமலும் இருப்பீர்களாக.
25 அந்நியன் புத்திரன் கையிலும் இப்படிப்பட்டதை வாங்கி, தேவனுக்கு அப்பமாகச் செலுத்தீர்களாக; அவைகளின் கேடும் பழுதும் அவைகளில் இருக்கிறது; அவைகள் உங்களுக்காக அங்கிகரிக்கப்படுவதில்லை என்று சொல் என்றார்.
26 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
27 ஒரு கன்றாவது செம்மறியாட்டுக்குட்டியாவது வெள்ளாட்டுக்குட்டியாவது பிறந்தால், அது ஏழுநாள் தன் தாயினிடத்தில் இருக்கக்கடவது; எட்டாம் நாள்முதல் அது கர்த்தருக்குத் தகனபலியாக அங்கிகரிக்கப்படும்.
28 பசுவையும் அதின் கன்றையும், ஆட்டையும் அதின் குட்டியையும் ஒரேநாளில் கொல்லவேண்டாம்.
29 கர்த்தருக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்துவீர்களானால் மனப்பூர்வமாய் அதைச் செலுத்துவீர்களாக.
30 அந்நாளிலேதான் அது புசிக்கப்படவேண்டும்; விடியற்காலம்மட்டும் நீங்கள் அதில் ஒன்றும் மீதியாக வைக்கவேண்டாம்; நான் கர்த்தர்.
31 நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்யக்கடவீர்கள்; நான் கர்த்தர்.
32 என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காதிருப்பீர்களாக; நான் இஸ்ரவேல் புத்திரர் நடுவே பரிசுத்தர் என்று மதிக்கப்படுவேன்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.
33 நான் உங்களுக்குத் தேவனாயிருப்பதற்காக, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினேன்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.


1 And the LORD said to Moses,
2 "Tell Aaron and his sons to keep away from the holy things of the people of Israel, which they dedicate to me, so that they may not profane my holy name; I am the LORD.
3 Say to them, `If any one of all your descendants throughout your generations approaches the holy things, which the people of Israel dedicate to the LORD, while he has an uncleanness, that person shall be cut off from my presence: I am the LORD.
4 None of the line of Aaron who is a leper or suffers a discharge may eat of the holy things until he is clean. Whoever touches anything that is unclean through contact with the dead or a man who has had an emission of semen,
5 and whoever touches a creeping thing by which he may be made unclean or a man from whom he may take uncleanness, whatever his uncleanness may be --
6 the person who touches any such shall be unclean until the evening and shall not eat of the holy things unless he has bathed his body in water.
7 When the sun is down he shall be clean; and afterward he may eat of the holy things, because such are his food.
8 That which dies of itself or is torn by beasts he shall not eat, defiling himself by it: I am the LORD.'
9 They shall therefore keep my charge, lest they bear sin for it and die thereby when they profane it: I am the LORD who sanctify them.
10 "An outsider shall not eat of a holy thing. A sojourner of the priest's or a hired servant shall not eat of a holy thing;
11 but if a priest buys a slave as his property for money, the slave may eat of it; and those that are born in his house may eat of his food.
12 If a priest's daughter is married to an outsider she shall not eat of the offering of the holy things.
13 But if a priest's daughter is a widow or divorced, and has no child, and returns to her father's house, as in her youth, she may eat of her father's food; yet no outsider shall eat of it.
14 And if a man eats of a holy thing unwittingly, he shall add the fifth of its value to it, and give the holy thing to the priest.
15 The priests shall not profane the holy things of the people of Israel, which they offer to the LORD,
16 and so cause them to bear iniquity and guilt, by eating their holy things: for I am the LORD who sanctify them."
17 And the LORD said to Moses,
18 "Say to Aaron and his sons and all the people of Israel, When any one of the house of Israel or of the sojourners in Israel presents his offering, whether in payment of a vow or as a freewill offering which is offered to the LORD as a burnt offering,
19 to be accepted you shall offer a male without blemish, of the bulls or the sheep or the goats.
20 You shall not offer anything that has a blemish, for it will not be acceptable for you.
21 And when any one offers a sacrifice of peace offerings to the LORD, to fulfil a vow or as a freewill offering, from the herd or from the flock, to be accepted it must be perfect; there shall be no blemish in it.
22 Animals blind or disabled or mutilated or having a discharge or an itch or scabs, you shall not offer to the LORD or make of them an offering by fire upon the altar to the LORD.
23 A bull or a lamb which has a part too long or too short you may present for a freewill offering; but for a votive offering it cannot be accepted.
24 Any animal which has its testicles bruised or crushed or torn or cut, you shall not offer to the LORD or sacrifice within your land;
25 neither shall you offer as the bread of your God any such animals gotten from a foreigner. Since there is a blemish in them, because of their mutilation, they will not be accepted for you."
26 And the LORD said to Moses,
27 "When a bull or sheep or goat is born, it shall remain seven days with its mother; and from the eighth day on it shall be acceptable as an offering by fire to the LORD.
28 And whether the mother is a cow or a ewe, you shall not kill both her and her young in one day.
29 And when you sacrifice a sacrifice of thanksgiving to the LORD, you shall sacrifice it so that you may be accepted.
30 It shall be eaten on the same day, you shall leave none of it until morning: I am the LORD.
31 "So you shall keep my commandments and do them: I am the LORD.
32 And you shall not profane my holy name, but I will be hallowed among the people of Israel; I am the LORD who sanctify you,
33 who brought you out of the land of Egypt to be your God: I am the LORD."

1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
2 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: சபைகூடிவந்து பரிசுத்த நாட்களாக ஆசரிக்கும்படி, நீங்கள் கூறவேண்டிய கர்த்தருடைய பண்டிகை நாட்களாவன:
3 ஆறுநாளும் வேலை செய்யவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்த சபைகூடுதலான ஓய்வுநாள், அதில் ஒரு வேலையும் செய்யவேண்டாம்; அது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் நாளாயிருப்பதாக.
4 சபைகூடிவந்து பரிசுத்தமாய் ஆசரிக்கும்படி, நீங்கள் குறித்தகாலத்தில் கூறவேண்டிய கர்த்தரின் பண்டிகைகளாவன:
5 முதலாம் மாதம் பதினாலாம் தேதி அந்திநேரமாகிற வேளையிலே கர்த்தரின் பஸ்காபண்டிகையும்,
6 அந்த மாதம் பதினைந்தாம் தேதியிலே, கர்த்தருக்குப் புளிப்பில்லா அப்பப் பண்டிகையுமாய் இருக்கும்; ஏழுநாள் புசிப்பில்லா அப்பங்களைப் புசிக்கவேண்டும்
7 முதலாம் நாள் உங்களுக்குப் பரிசுத்தமான சபைகூடுதல்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
8 ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலியிடவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்தமான சபைகூடுதல்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது என்று சொல் என்றார்.
9 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
10 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து, அதின் வெள்ளாண்மையை அறுக்கும்போது, உங்கள் அறுப்பின் முதற்பலனாகிய ஒரு கதிர்க்கட்டை ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவீர்கள்.
11 உங்களுக்காக அது அங்கிகரிக்கும்படி, ஆசாரியன் அந்தக் கதிர்க்கட்டை ஓய்வுநாளுக்கு மறுநாளில் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டவேண்டும்.
12 நீங்கள் அந்தக் கதிர்க்கட்டை அசைவாட்டும் நாளில் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக, ஒருவயதான பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும்,
13 கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவாகிய போஜனபலியையும், திராட்சப்பழரசத்திலே காற்படியாகிய பானபலியையும் செலுத்தக்கடவீர்கள்.
14 உங்கள் தேவனுக்குக் காணிக்கையை நீங்கள் கொண்டுவரும் அந்நாள் மட்டும், அப்பமும் வாட்டிய கதிரும் பச்சைக்கதிரும் புசியீர்களாக; இது உங்கள் வாசஸ்தலங்களில் எல்லாம் உங்கள் தலைமுறைதோறும் சொல்லவேண்டிய நித்திய கட்டளை.
15 நீங்கள் அசைவாட்டும் கதிர்க்கட்டைக் கொண்டுவரும் ஓய்வுநாளுக்கு மறுநாள் முதற்கொண்டு எண்ணத்துவங்கி, ஏழுவாரங்கள் நிறைவேறினபின்பு,
16 ஏழாம் ஓய்வுநாளுக்கு மறுநாளாகிய ஐம்பதாம் நாள்மட்டும் எண்ணி, கர்த்தருக்குப் புதிய போஜனபலியைச் செலுத்தக்கடவீர்கள்.
17 நீங்கள் ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்காகிய மெல்லிய மாவிலே புளிப்பாகப் பாகம்பண்ணப்பட்ட அசைவாட்டும் காணிக்கையாயிருக்கிற இரண்டு அப்பங்களை உங்கள் வாசஸ்தலங்களிலிருந்து கர்த்தருக்கென்று முதற்பலனாகக் கொண்டுவந்து,
18 அப்பத்தோடேகூடக் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக, ஒருவயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக அவைகளுக்கு அடுத்த போஜனபலியையும், பானபலிகளையும் செலுத்தி,
19 வெள்ளாடுகளில் ஒரு கடாவைப் பாவநிவாரணபலியாகவும், ஒருவயதான இரண்டு ஆட்டுக்குட்டிகளைச் சமாதானபலியாகவும் இடக்கடவீர்கள்.
20 அவைகளை ஆசாரியன் முதற்பலனாகிய அப்பத்தோடும் இரண்டு ஆட்டுக்குட்டிகளோடுங்கூடக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டக்கடவன்; கர்த்தருக்குப் பரிசுத்தமாகிய அவைகள் ஆசாரியனுடையவைகளாகும்.
21 அந்த நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்த நாள் என்று கூறவேண்டும்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; இது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை.
22 உங்கள் தேசத்தின் வெள்ளாண்மையை நீங்கள் அறுக்கையில், வயலின் ஓரத்தில் இருக்கிறதை முற்றிலும் அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும், எளியவனுக்கும் பரதேசிக்கும் அவைகளை விட்டுவிடவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.
23 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
24 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால் உங்களுக்கு ஏழாம் மாதம் முதலாந்தேதி எக்காளச் சத்தத்தால் ஞாபகக்குறியாகக் கொண்டாடுகிற பண்டிகை என்கிற சபை கூடும் பரிசுத்த ஓய்வுநாளாயிருப்பதாக.
25 அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யாமல், கர்த்தருக்குத் தகனபலி செலுத்தவேண்டும் என்று சொல் என்றார்.
26 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
27 அந்த ஏழாம் மாதம் பத்தாந்தேதி உங்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யும் நாளும் சபைகூடும் பரிசுத்தநாளுமாயிருப்பதாக; அப்பொழுது நீங்கள் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தி, கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்.
28 அந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யப்படும் பாவநிவாரண நாளாயிருக்கிறபடியால், அதிலே யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
29 அந்நாளிலே தன்னைத் தாழ்மைப்படுத்தாத எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டு போவான்.
30 அந்நாளிலே ஒரு ஆத்துமா யாதொரு வேலையைச் செய்தால், அந்த ஆத்துமாவை அவன் ஜனத்தின் நடுவிலே வைக்காமல் அழிப்பேன்.
31 அதில் நீங்கள் எந்த வேலையும் செய்யாதிருப்பது உங்கள் வாசஸ்தலங்களில் எல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை.
32 அது உங்களுக்கு விசேஷித்த ஓய்வுநாள்; அதில் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தவேண்டும்; அந்த மாதத்தின் ஒன்பதாந்தேதி சாயங்காலந்துவங்கி, மறுநாள் சாயங்காலம்மட்டும் உங்கள் ஓய்வை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார்.
33 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
34 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அந்த ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் ஏழுநாளளவும் கர்த்தருக்கு ஆசரிக்கும் கூடாரப்பண்டிகையாயிருப்பதாக.
35 முதலாம் நாள் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.
36 ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; எட்டாம் நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; அது ஆசரிக்கப்படும் நாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
37 நீங்கள் கர்த்தருடைய ஓய்வுநாட்களில் செலுத்துவதும் தவிர, நீங்கள் கர்த்தருக்குப் படைக்கிற உங்கள் எல்லாக் காணிக்கைகளும் பொருத்தனைகளும் உற்சாகபலிகளும் தவிர,
38 நீங்கள் அந்தந்த நாளுக்குத்தக்கதாய்க் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலி, போஜனபலி, இரத்தப்பலி, பானபலி முதலானவைகளைச் செலுத்தும்படி சபைகூடிவந்து, பரிசுத்தமாய் ஆசரிப்பதற்காக நீங்கள் கூறவேண்டிய கர்த்தருடைய பண்டிகைகள் இவைகளே.
39 நிலத்தின் பலனை நீங்கள் சேர்த்துவைக்கும் ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் கர்த்தருக்குப் பண்டிகையை ஏழுநாள் ஆசரிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளிலும் ஓய்வு: எட்டாம் நாளிலும் ஓய்வு.
40 முதல் நாளிலே அலங்காரமான விருட்சங்களின் கனிகளையும் பேரீச்சின் ஓலைகளையும் தழைத்திருக்கிற விருட்சங்களின் கிளைகளையும் ஆற்றலரிகளையும் கொண்டுவந்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாளும் மகிழ்ச்சியாயிருங்கள்.
41 வருஷந்தோறும் ஏழுநாள் கர்த்தருக்கு இந்தப் பண்டிகையை ஆசரிக்கக்கடவீர்கள்; இது உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை; ஏழாம் மாதத்தில் அதை ஆசரிக்கவேண்டும்.
42 நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, அவர்களைக் கூடாரங்களில் குடியிருக்கப்பண்ணினதை உங்கள் சந்ததியார் அறியும்படிக்கு,
43 ஏழுநாள் கூடாரங்களில் குடியிருக்கக்கடவீர்கள்; இஸ்ரவேலில் பிறந்தவர்கள் எல்லாரும் கூடாரங்களில் வாசம்பண்ணவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.
44 அப்படியே மோசே கர்த்தருடைய பண்டிகைகளை இஸ்ரவேல் புத்திரருக்குத் தெரிவித்தான்.


1 The LORD said to Moses,
2 "Say to the people of Israel, The appointed feasts of the LORD which you shall proclaim as holy convocations, my appointed feasts, are these.
3 Six days shall work be done; but on the seventh day is a sabbath of solemn rest, a holy convocation; you shall do no work; it is a sabbath to the LORD in all your dwellings.
4 "These are the appointed feasts of the LORD, the holy convocations, which you shall proclaim at the time appointed for them.
5 In the first month, on the fourteenth day of the month in the evening, is the LORD's passover.
6 And on the fifteenth day of the same month is the feast of unleavened bread to the LORD; seven days you shall eat unleavened bread.
7 On the first day you shall have a holy convocation; you shall do no laborious work.
8 But you shall present an offering by fire to the LORD seven days; on the seventh day is a holy convocation; you shall do no laborious work."
9 And the LORD said to Moses,
10 "Say to the people of Israel, When you come into the land which I give you and reap its harvest, you shall bring the sheaf of the first fruits of your harvest to the priest;
11 and he shall wave the sheaf before the LORD, that you may find acceptance; on the morrow after the sabbath the priest shall wave it.
12 And on the day when you wave the sheaf, you shall offer a male lamb a year old without blemish as a burnt offering to the LORD.
13 And the cereal offering with it shall be two tenths of an ephah of fine flour mixed with oil, to be offered by fire to the LORD, a pleasing odor; and the drink offering with it shall be of wine, a fourth of a hin.
14 And you shall eat neither bread nor grain parched or fresh until this same day, until you have brought the offering of your God: it is a statute for ever throughout your generations in all your dwellings.
15 "And you shall count from the morrow after the sabbath, from the day that you brought the sheaf of the wave offering; seven full weeks shall they be,
16 counting fifty days to the morrow after the seventh sabbath; then you shall present a cereal offering of new grain to the LORD.
17 You shall bring from your dwellings two loaves of bread to be waved, made of two tenths of an ephah; they shall be of fine flour, they shall be baked with leaven, as first fruits to the LORD.
18 And you shall present with the bread seven lambs a year old without blemish, and one young bull, and two rams; they shall be a burnt offering to the LORD, with their cereal offering and their drink offerings, an offering by fire, a pleasing odor to the LORD.
19 And you shall offer one male goat for a sin offering, and two male lambs a year old as a sacrifice of peace offerings.
20 And the priest shall wave them with the bread of the first fruits as a wave offering before the LORD, with the two lambs; they shall be holy to the LORD for the priest.
21 And you shall make proclamation on the same day; you shall hold a holy convocation; you shall do no laborious work: it is a statute for ever in all your dwellings throughout your generations.
22 "And when you reap the harvest of your land, you shall not reap your field to its very border, nor shall you gather the gleanings after your harvest; you shall leave them for the poor and for the stranger: I am the LORD your God."
23 And the LORD said to Moses,
24 "Say to the people of Israel, In the seventh month, on the first day of the month, you shall observe a day of solemn rest, a memorial proclaimed with blast of trumpets, a holy convocation.
25 You shall do no laborious work; and you shall present an offering by fire to the LORD."
26 And the LORD said to Moses,
27 "On the tenth day of this seventh month is the day of atonement; it shall be for you a time of holy convocation, and you shall afflict yourselves and present an offering by fire to the LORD.
28 And you shall do no work on this same day; for it is a day of atonement, to make atonement for you before the LORD your God.
29 For whoever is not afflicted on this same day shall be cut off from his people.
30 And whoever does any work on this same day, that person I will destroy from among his people.
31 You shall do no work: it is a statute for ever throughout your generations in all your dwellings.
32 It shall be to you a sabbath of solemn rest, and you shall afflict yourselves; on the ninth day of the month beginning at evening, from evening to evening shall you keep your sabbath."
33 And the LORD said to Moses,
34 "Say to the people of Israel, On the fifteenth day of this seventh month and for seven days is the feast of booths to the LORD.
35 On the first day shall be a holy convocation; you shall do no laborious work.
36 Seven days you shall present offerings by fire to the LORD; on the eighth day you shall hold a holy convocation and present an offering by fire to the LORD; it is a solemn assembly; you shall do no laborious work.
37 "These are the appointed feasts of the LORD, which you shall proclaim as times of holy convocation, for presenting to the LORD offerings by fire, burnt offerings and cereal offerings, sacrifices and drink offerings, each on its proper day;
38 besides the sabbaths of the LORD, and besides your gifts, and besides all your votive offerings, and besides all your freewill offerings, which you give to the LORD.
39 "On the fifteenth day of the seventh month, when you have gathered in the produce of the land, you shall keep the feast of the LORD seven days; on the first day shall be a solemn rest, and on the eighth day shall be a solemn rest.
40 And you shall take on the first day the fruit of goodly trees, branches of palm trees, and boughs of leafy trees, and willows of the brook; and you shall rejoice before the LORD your God seven days.
41 You shall keep it as a feast to the LORD seven days in the year; it is a statute for ever throughout your generations; you shall keep it in the seventh month.
42 You shall dwell in booths for seven days; all that are native in Israel shall dwell in booths,
43 that your generations may know that I made the people of Israel dwell in booths when I brought them out of the land of Egypt: I am the LORD your God."
44 Thus Moses declared to the people of Israel the appointed feasts of the LORD.

1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
2 குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி அதற்காக இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை இஸ்ரவேல் புத்திரர் உன்னிடத்தில் கொண்டுவரும்படி அவர்களுக்குக் கட்டளையிடு.
3 ஆசரிப்புக் கூடாரத்தில் சாட்சிசந்நிதியின் திரைக்கு வெளிப்புறமாக ஆரோன் அதை எப்பொழுதும் சாயங்காலம் தொடங்கி விடியற்காலம்மட்டும் கர்த்தருடைய சந்நிதியில் எரியும்படி ஏற்றக்கடவன்; இது உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை.
4 அவன் எப்பொழுதும் கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்தமான குத்துவிளக்கின்மேல் இருக்கிற விளக்குகளை எரிய வைக்கக்கடவன்.
5 அன்றியும் நீ மெல்லிய மாவை எடுத்து, அதைப் பன்னிரண்டு அப்பங்களாகச் சுடுவாயாக; ஒவ்வொரு அப்பம் மரக்காலிலே பத்தில் இரண்டுபங்கு மாவினால் செய்யப்படவேண்டும்.
6 அவைகளை நீ கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்தமான மேஜையின்மேல் இரண்டு அடுக்காக, ஒவ்வொரு அடுக்கில் அவ்வாறு அப்பம் இருக்கும்படியாக வைத்து,
7 ஒவ்வொரு அடுக்கினிடத்தில் சுத்தமான தூபவர்க்கம் போடக்கடவாய்; அது அப்பத்தோடிருந்து, ஞாபகக்குறியாகக் கர்த்தருக்கேற்ற தகனபலியாயிருக்கும்.
8 அப்பத்தை நித்திய உடன்படிக்கையாக இஸ்ரவேல் புத்திரர் கையிலே வாங்கி, ஓய்வுநாள்தோறும் கர்த்தருடைய சந்நிதியில் அடுக்கிவைக்கக்கடவன்.
9 அது ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்; அதைப் பரிசுத்த இடத்திலே புசிக்கக்கடவர்கள்; நித்திய கட்டளையாகக் கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளில் அது அவனுக்கு மகா பரிசுத்தமாயிருக்கும் என்றார்.
10 அக்காலத்திலே இஸ்ரவேல் ஜாதியான ஸ்திரீக்கும் எகிப்திய புருஷனுக்கும் பிறந்த புத்திரனாகிய ஒருவன் இஸ்ரவேல் புத்திரரோடேகூடப் புறப்பட்டு வந்திருந்தான்; இவனும் இஸ்ரவேலனாகிய ஒரு மனிதனும் பாளயத்திலே சண்டைபண்ணினார்கள்.
11 அப்பொழுது இஸ்ரவேல் ஜாதியான அந்த ஸ்திரீயின் மகன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்துத் தூஷித்தான். அவனை மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள். அவன் தாயின்பேர் செலோமித்; அவள் தாண் கோத்திரத்தானாகிய திப்ரியின் குமாரத்தி.
12 கர்த்தரின் வாக்கினாலே தங்களுக்கு உத்தரவு வருமட்டும், அவனைக் காவல்படுத்தினார்கள்.
13 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:
14 தூஷித்தவனைப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோ; கேட்டவர்கள் எல்லாரும் தங்கள் கைகளை அவன் தலையின்மேல் வைப்பார்களாக; பின்பு சபையார் எல்லாரும் அவனைக் கல்லெறியக்கடவர்கள்.
15 மேலும் நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: எவனாகிலும் தன் தேவனைத்தூஷித்தால், அவன் தன் பாவத்தைச் சுமப்பான்.
16 கர்த்தருடைய நாமத்தை நிந்திக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைக் கல்லெறியவேண்டும்; பரதேசியானாலும் சுதேசியானாலும் கர்த்தரின் நாமத்தைத் தூஷிக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்.
17 ஒரு மனிதனைக் கொல்லுகிறவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும்.
18 மிருகத்தைக் கொன்றவன் மிருகத்துக்கு மிருகம் கொடுக்கக்கடவன்.
19 ஒருவன் பிறனை ஊனப்படுத்தினால், அவன் செய்தபடியே அவனுக்கும் செய்யப்படக்கடவது.
20 நொறுக்குதலுக்கு நொறுக்குதல், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்; அவன் ஒரு மனிதனை ஊனப்படுத்தினதுபோல அவனும் ஊனப்படுத்தப்படவேண்டும்.
21 மிருகத்தைக் கொன்றவன் பதில் கொடுக்கவேண்டும்; மனிதனைக் கொன்றவனோ கொலைசெய்யப்படக்கடவன்.
22 உங்களில் பரதேசிக்கும் சுதேசிக்கும் ஒரே நியாயம் இருக்கவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.
23 அப்படியே, தூஷித்தவனைப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், அவனைக் கல்லெறியும்படி மோசே இஸ்ரவேல் புத்திரரோடே சொன்னான்; கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.


1 The LORD said to Moses,
2 "Command the people of Israel to bring you pure oil from beaten olives for the lamp, that a light may be kept burning continually.
3 Outside the veil of the testimony, in the tent of meeting, Aaron shall keep it in order from evening to morning before the LORD continually; it shall be a statute for ever throughout your generations.
4 He shall keep the lamps in order upon the lampstand of pure gold before the LORD continually.
5 "And you shall take fine flour, and bake twelve cakes of it; two tenths of an ephah shall be in each cake.
6 And you shall set them in two rows, six in a row, upon the table of pure gold.
7 And you shall put pure frankincense with each row, that it may go with the bread as a memorial portion to be offered by fire to the LORD.
8 Every sabbath day Aaron shall set it in order before the LORD continually on behalf of the people of Israel as a covenant for ever.
9 And it shall be for Aaron and his sons, and they shall eat it in a holy place, since it is for him a most holy portion out of the offerings by fire to the LORD, a perpetual due."
10 Now an Israelite woman's son, whose father was an Egyptian, went out among the people of Israel; and the Israelite woman's son and a man of Israel quarreled in the camp,
11 and the Israelite woman's son blasphemed the Name, and cursed. And they brought him to Moses. His mother's name was Shelo'mith, the daughter of Dibri, of the tribe of Dan.
12 And they put him in custody, till the will of the LORD should be declared to them.
13 And the LORD said to Moses,
14 "Bring out of the camp him who cursed; and let all who heard him lay their hands upon his head, and let all the congregation stone him.
15 And say to the people of Israel, Whoever curses his God shall bear his sin.
16 He who blasphemes the name of the LORD shall be put to death; all the congregation shall stone him; the sojourner as well as the native, when he blasphemes the Name, shall be put to death.
17 He who kills a man shall be put to death.
18 He who kills a beast shall make it good, life for life.
19 When a man causes a disfigurement in his neighbor, as he has done it shall be done to him,
20 fracture for fracture, eye for eye, tooth for tooth; as he has disfigured a man, he shall be disfigured.
21 He who kills a beast shall make it good; and he who kills a man shall be put to death.
22 You shall have one law for the sojourner and for the native; for I am the LORD your God."
23 So Moses spoke to the people of Israel; and they brought him who had cursed out of the camp, and stoned him with stones. Thus the people of Israel did as the LORD commanded Moses.

1 கர்த்தர் சீனாய்மலையில் மோசேயை நோக்கி:
2 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்திருக்கும்போது, தேசம் கர்த்தருக்கென்று ஓய்வு கொண்டாடவேண்டும்.
3 ஆறு வருஷம் உன் வயலை விதைத்து, உன் திராட்சத்தோட்டத்தைக் கிளைகழித்து, அதின் பலனைச் சேர்ப்பாயாக.
4 ஏழாம் வருஷத்திலோ, கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வு தேசத்திற்கு இருக்கவேண்டும்; அதில் உன் வயலை விதைக்காமலும் உன் திராட்சத்தோட்டத்தைக் கிளைகழிக்காமலும்,
5 தானாய் விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைகழிக்காதேவிட்ட திராட்சச்செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பாயாக; தேசத்துக்கு அது ஒரு ஓய்வுவருஷமாயிருக்கக்கடவது.
6 தேசத்தின் ஓய்விலே பயிராகிறது உங்களுக்கு ஆகாரமாயிருப்பதாக; உன் வேலைக்காரனுக்கும், உன் வேலைக்காரிக்கும், உன் கூலிக்காரனுக்கும், உன்னிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும்,
7 உன் நாட்டு மிருகத்துக்கும், உன் தேசத்தில் இருக்கிற காட்டு மிருகத்துக்கும் அதில் விளைந்திருப்பதெல்லாம் ஆகாரமாயிருப்பதாக.
8 அன்றியும், ஏழு ஓய்வு வருஷங்களுள்ள ஏழு ஏழு வருஷங்களை எண்ணுவாயாக; அந்த ஏழு ஓய்வு வருஷங்களும் நாற்பத்தொன்பது வருஷமாகும்.
9 அப்பொழுதும் ஏழாம் மாதம் பத்தாந்தேதியில் எக்காளச்சத்தம் தொனிக்கும்படி செய்யவேண்டும்; பாவநிவாரணநாளில் உங்கள் தேசமெங்கும் எக்காளச்சத்தம் தொனிக்கும்படி செய்யவேண்டும்.
10 ஐம்பதாம் வருஷத்தைப் பரிசுத்தமாக்கி, தேசமெங்கும் அதின் குடிகளுக்கெல்லாம் விடுதலை கூறக்கடவீர்கள்; அது உங்களுக்கு யூபிலி வருஷமாயிருப்பதாக; அதிலே உங்களில் ஒவ்வொருவனும் தன் தன் காணியாட்சிக்கும் தன் தன் குடும்பத்துக்கும் திரும்பிப் போகக்கடவன்.
11 அந்த ஐம்பதாம் வருஷம் உங்களுக்கு யூபிலி வருஷமாயிருப்பதாக; அதிலே விதைக்காமலும், தானாய் விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைகழிக்காமல் விடப்பட்ட திராட்சச் செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பீர்களாக.
12 அது யூபிலி வருஷம்; அது உங்களுக்குப் பரிசுத்தமாயிருக்கவேண்டும்; அந்த வருஷத்தில் வயல்வெளியில் விளைந்தவைகளை நீங்கள் புசிக்கவேண்டும்.
13 அந்த யூபிலி வருஷத்தில் உங்களில் அவனவன் தன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போகக்கடவன்.
14 ஆகையால், பிறனுக்கு எதையாவது விற்றாலும், அவனிடத்தில் எதையாவது கொண்டாலும் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யக் கூடாது.
15 யூபிலி வருஷத்துக்குப் பின்வரும் வருஷங்களின் தொகைக்கேற்கப் பிறனிடத்தில் கொள்ளுவாயாக; பலனுள்ள வருஷங்களின் தொகைக்கேற்க அவன் உனக்கு விற்பானாக.
16 பலனுள்ள வருஷங்களின் இலக்கத்தைப் பார்த்து அவன் உனக்கு விற்கிறபடியால், வருஷங்களின் தொகை ஏறினால் விலையேறவும், வருஷங்களின் தொகை குறைந்தால், விலை குறையவும்வேண்டும்.
17 உங்களில் ஒருவனும் பிறனுக்கு அநியாயஞ்செய்யக் கூடாது; உன் தேவனுக்குப் பயப்படவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
18 என் கட்டளைகளின்படி செய்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; அப்பொழுது தேசத்திலே சுகமாய்க்குடியிருப்பீர்கள்.
19 பூமி தன் கனியைத்தரும்; நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டு, அதில் சுகமாய்க் குடியிருப்பீர்கள்.
20 ஏழாம் வருஷத்தில் எதைப் புசிப்போம்? நாங்கள் விதைக்காமலும், விளைந்ததைச் சேர்க்காமலும் இருக்கவேண்டுமே! என்று சொல்வீர்களானால்,
21 நான் ஆறாம் வருஷத்தில் உங்களுக்கு ஆசீர்வாதத்தை அநுக்கிரகம்பண்ணுவேன்; அது உங்களுக்கு மூன்று வருஷத்தின் பலனைத்தரும்.
22 நீங்கள் எட்டாம் வருஷத்திலே விதைத்து, ஒன்பதாம் வருஷம்மட்டும் பழைய பலனிலே சாப்பிடுவீர்கள்; அதின் பலன் விளையும்வரைக்கும் பழைய பலனைச் சாப்பிடுவீர்கள்.
23 தேசம் என்னுடையதாயிருக்கிறபடியால், நீங்கள் நிலங்களை அறுதியாய் விற்கவேண்டாம்; நீங்கள் பரதேசிகளும் என்னிடத்தில் புறக்குடிகளுமாயிருக்கிறீர்கள்.
24 உங்கள் காணியாட்சியான தேசமெங்கும் நிலங்களை மீட்டுக்கொள்ள இடங்கொடுக்கக்கடவீர்கள்.
25 உங்கள் சகோதரன் தரித்திரப்பட்டு, தன் காணியாட்சியிலே சிலதை விற்றால், அவன் இனத்தான் ஒருவன் வந்து, தன் சகோதரன் விற்றதை மீட்கக்கடவன்.
26 அதை மீட்க ஒருவனும் இல்லாமல், தானே அதை மீட்கத்தக்கவனானால்,
27 அதை விற்றபின் சென்ற வருஷங்களின் தொகையைத் தள்ளி, மீந்த தொகையை ஏற்றி, கொண்டவனுக்குக் கொடுத்து, அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போகக்கடவன்.
28 அப்படிக் கொடுப்பதற்கான நிர்வாகம் அவனுக்கு இல்லாவிட்டால், அவன் விற்றது வாங்கினவன் கையிலே யூபிலி வருஷம்மட்டும் இருந்து, யூபிலி வருஷத்திலே அது விடுதலையாகும்; அப்பொழுது அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போவான்.
29 ஒருவன் மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள தன் வாசஸ்தலமாகிய வீட்டை விற்றால், அதை விற்ற ஒரு வருஷத்துக்குள் அதை மீட்டுக்கொள்ளலாம்; ஒரு வருஷத்துக்குள்ளாகவே அதை மீட்டுக்கொள்ளவேண்டும்.
30 ஒரு வருஷத்துக்குள்ளே அதை மீட்டுக்கொள்ளாதிருந்தால், மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள அந்த வீடு தலைமுறைதோறும் அதை வாங்கினவனுக்கே உரியதாகும்; யூபிலி வருஷத்திலும் அது விடுதலையாகாது.
31 மதில் சூழப்படாத கிராமங்களிலுள்ள வீடுகளோ, தேசத்தின் நிலங்கள் போலவே எண்ணப்படும்; அவைகள் மீட்கப்படலாம்; யூபிலி வருஷத்தில் அவைகள் விடுதலையாகும்.
32 லேவியரின் காணியாட்சியாகிய பட்டணங்களிலுள்ள வீடுகளையோ லேவியர் எக்காலத்திலும் மீட்டுக்கொள்ளலாம்.
33 இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே லேவியருடைய பட்டணங்களிலுள்ள வீடுகள் அவர்களுக்குரிய காணியாட்சியானபடியால், லேவியரிடத்தில் அவனுடைய காணியாட்சிப்பட்டணத்திலுள்ள வீட்டை ஒருவன் வாங்கினால், விற்கப்பட்ட அந்த வீடு யூபிலி வருஷத்தில் விடுதலையாகும்.
34 அவர்கள் பட்டணங்களைச் சூழ்ந்த வெளிநிலம் விற்கப்படலாகாது; அது அவர்களுக்கு நித்திய காணியாட்சியாயிருக்கும்.
35 உன் சகோதரன் தரித்திரப்பட்டு, கையிளைத்துப்போனவனானால், அவனை ஆதரிக்கவேண்டும்; பரதேசியைப்போலும் தங்கவந்தவனைப்போலும் அவன் உன்னோடே பிழைப்பானாக.
36 நீ அவன் கையில் வட்டியாவது பொலிசையாவது வாங்காமல், உன் தேவனுக்குப் பயந்து, உன் சகோதரன் உன்னோடே பிழைக்கும்படி செய்வாயாக.
37 அவனுக்கு உன் பணத்தை வட்டிக்கும், உன் தானியத்தைப் பொலிசைக்கும் கொடாயாக.
38 உங்களுக்குக் கானான் தேசத்தைக் கொடுத்து, உங்களுக்கு தேவனாயிருக்கும்படி, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே.
39 உன் சகோதரன் தரித்திரனாகி, உனக்கு விலைப்பட்டுப்போனால், அவனை அடிமையைப்போல ஊழியஞ்செய்ய நெருக்கவேண்டாம்.
40 அவன் கூலிக்காரனைப்போலவும் தங்கவந்தவனைப்போலவும் உன்னோடே இருந்து, யூபிலி வருஷம்மட்டும் உன்னிடத்தில் சேவிக்கக்கடவன்.
41 பின்பு, தன் பிள்ளைகளோடுங்கூட உன்னை விட்டு நீங்கலாகி, தன் குடும்பத்தாரிடத்துக்கும் தன் பிதாக்களின் காணியாட்சிக்கும் திரும்பிப்போகக்கடவன்.
42 அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின என்னுடைய ஊழியக்காரர்; ஆகையால் அவர்கள் அடிமைகளாக விற்கப்படலாகாது.
43 நீ அவனைக் கொடூரமாய் ஆளாமல் உன் தேவனுக்குப் பயந்திரு.
44 உனக்கு இருக்கும் ஆண் அடிமையும் பெண் அடிமையும் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகளாயிருக்கவேண்டும்; அவர்களில் நீ ஆண் அடிமையையும் பெண் அடிமையையும் விலைக்கு வாங்கலாம்.
45 உங்களிடத்திலே பரதேசிகளாய்த் தங்குகிற அந்நிய புத்திரரிலும், உங்கள் தேசத்தில் உங்களிடத்திலே பிறந்திருக்கிற அவர்களுடைய குடும்பத்தாரிலும் நீங்கள் உங்களுக்கு அடிமைகளைக் கொண்டு, அவர்களை உங்களுக்குச் சுதந்தரமாக்கலாம்.
46 அவர்களை உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியாரும் சுதந்தரிக்கும்படி நீங்கள் அவர்களைச் சுதந்தரமாக்கிக்கொள்ளலாம்; என்றைக்கும் அவர்கள் உங்களுக்கு அடிமைகளாயிருக்கலாம்; உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் புத்திரரோ ஒருவரையொருவர் கொடூரமாக ஆளக் கூடாது.
47 உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும் அந்நியனும் செல்வனாயிருக்க, அவனிடத்தில் இருக்கிற உன் சகோதரன் தரித்திரப்பட்டு, அந்தப் பரதேசிக்காவது, அந்நியனுக்காவது, பரதேசியின் குடும்பத்தாரில் எவனுக்காவது அவன் விலைப்பட்டுப்போனால்,
48 அவன் விலைப்பட்டுப்போனபின் திரும்ப மீட்கப்படலாம்; அவன் சகோதரரில் ஒருவன் அவனை மீட்கலாம்.
49 அவனுடைய பிதாவின் சகோதரனாவது, அந்தச் சகோதரனுடைய புத்திரனாவது, அவன் குடும்பத்திலுள்ள அவனைச் சேர்ந்த இனத்தாரில் எவனாவது அவனை மீட்கலாம்; தன்னால் கூடுமானால், தன்னைத்தானே மீட்டுக்கொள்ளலாம்.
50 அவன் தான் விலைப்பட்ட வருஷந்தொடங்கி, யூபிலி வருஷம்வரைக்கும் உண்டான காலத்தைத் தன்னை விலைக்குக்கொண்டவனுடன் கணக்குப்பார்க்கக்கடவன்; அவனுடைய விலைக்கிரயம் கூலிக்காரனுடைய காலக்கணக்குப்போல, வருஷத்தொகைக்கு ஒத்துப்பார்க்கவேண்டும்.
51 இன்னும் அநேக வருஷங்கள் இருந்தால், அவன் தன் விலைக்கிரயத்திலே அவைகளுக்குத் தக்கதைத் தன்னை மீட்கும்பொருளாகத் திரும்பக் கொடுக்கக்கடவன்.
52 யூபிலி வருஷம்மட்டும் மீதியாயிருக்கிற வருஷங்கள் கொஞ்சமேயானால், அவனோடே கணக்குப் பார்த்து, தன் வருஷங்களுக்குத் தக்கதை, தன்னை மீட்கும்பொருளாகத் திரும்பக் கொடுக்கவேண்டும்.
53 இவன் வருஷத்திற்கு வருஷம் கூலிபொருந்திக்கொண்ட கூலிக்காரனைப்போல, அவனிடத்தில் இருக்கவேண்டும்; அவன் இவனை உனக்கு முன்பாகக் கொடூரமாய் ஆளக் கூடாது.
54 இப்படி இவன் மீட்டுக்கொள்ளப்படாதிருந்தால், இவனும் இவனோடேகூட இவன் பிள்ளைகளும் யூபிலி வருஷத்தில் விடுதலையாவார்கள்.
55 இஸ்ரவேல் புத்திரர் என் ஊழியக்காரர்; அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின என் ஊழியக்காரரே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.


1 The LORD said to Moses on Mount Sinai,
2 "Say to the people of Israel, When you come into the land which I give you, the land shall keep a sabbath to the LORD.
3 Six years you shall sow your field, and six years you shall prune your vineyard, and gather in its fruits;
4 but in the seventh year there shall be a sabbath of solemn rest for the land, a sabbath to the LORD; you shall not sow your field or prune your vineyard.
5 What grows of itself in your harvest you shall not reap, and the grapes of your undressed vine you shall not gather; it shall be a year of solemn rest for the land.
6 The sabbath of the land shall provide food for you, for yourself and for your male and female slaves and for your hired servant and the sojourner who lives with you;
7 for your cattle also and for the beasts that are in your land all its yield shall be for food.
8 "And you shall count seven weeks of years, seven times seven years, so that the time of the seven weeks of years shall be to you forty-nine years.
9 Then you shall send abroad the loud trumpet on the tenth day of the seventh month; on the day of atonement you shall send abroad the trumpet throughout all your land.
10 And you shall hallow the fiftieth year, and proclaim liberty throughout the land to all its inhabitants; it shall be a jubilee for you, when each of you shall return to his property and each of you shall return to his family.
11 A jubilee shall that fiftieth year be to you; in it you shall neither sow, nor reap what grows of itself, nor gather the grapes from the undressed vines.
12 For it is a jubilee; it shall be holy to you; you shall eat what it yields out of the field.
13 "In this year of jubilee each of you shall return to his property.
14 And if you sell to your neighbor or buy from your neighbor, you shall not wrong one another.
15 According to the number of years after the jubilee, you shall buy from your neighbor, and according to the number of years for crops he shall sell to you.
16 If the years are many you shall increase the price, and if the years are few you shall diminish the price, for it is the number of the crops that he is selling to you.
17 You shall not wrong one another, but you shall fear your God; for I am the LORD your God.
18 "Therefore you shall do my statutes, and keep my ordinances and perform them; so you will dwell in the land securely.
19 The land will yield its fruit, and you will eat your fill, and dwell in it securely.
20 And if you say, `What shall we eat in the seventh year, if we may not sow or gather in our crop?'
21 I will command my blessing upon you in the sixth year, so that it will bring forth fruit for three years.
22 When you sow in the eighth year, you will be eating old produce; until the ninth year, when its produce comes in, you shall eat the old.
23 The land shall not be sold in perpetuity, for the land is mine; for you are strangers and sojourners with me.
24 And in all the country you possess, you shall grant a redemption of the land.
25 "If your brother becomes poor, and sells part of his property, then his next of kin shall come and redeem what his brother has sold.
26 If a man has no one to redeem it, and then himself becomes prosperous and finds sufficient means to redeem it,
27 let him reckon the years since he sold it and pay back the overpayment to the man to whom he sold it; and he shall return to his property.
28 But if he has not sufficient means to get it back for himself, then what he sold shall remain in the hand of him who bought it until the year of jubilee; in the jubilee it shall be released, and he shall return to his property.
29 "If a man sells a dwelling house in a walled city, he may redeem it within a whole year after its sale; for a full year he shall have the right of redemption.
30 If it is not redeemed within a full year, then the house that is in the walled city shall be made sure in perpetuity to him who bought it, throughout his generations; it shall not be released in the jubilee.
31 But the houses of the villages which have no wall around them shall be reckoned with the fields of the country; they may be redeemed, and they shall be released in the jubilee.
32 Nevertheless the cities of the Levites, the houses in the cities of their possession, the Levites may redeem at any time.
33 And if one of the Levites does not exercise his right of redemption, then the house that was sold in a city of their possession shall be released in the jubilee; for the houses in the cities of the Levites are their possession among the people of Israel.
34 But the fields of common land belonging to their cities may not be sold; for that is their perpetual possession.
35 "And if your brother becomes poor, and cannot maintain himself with you, you shall maintain him; as a stranger and a sojourner he shall live with you.
36 Take no interest from him or increase, but fear your God; that your brother may live beside you.
37 You shall not lend him your money at interest, nor give him your food for profit.
38 I am the LORD your God, who brought you forth out of the land of Egypt to give you the land of Canaan, and to be your God.
39 "And if your brother becomes poor beside you, and sells himself to you, you shall not make him serve as a slave:
40 he shall be with you as a hired servant and as a sojourner. He shall serve with you until the year of the jubilee;
41 then he shall go out from you, he and his children with him, and go back to his own family, and return to the possession of his fathers.
42 For they are my servants, whom I brought forth out of the land of Egypt; they shall not be sold as slaves.
43 You shall not rule over him with harshness, but shall fear your God.
44 As for your male and female slaves whom you may have: you may buy male and female slaves from among the nations that are round about you.
45 You may also buy from among the strangers who sojourn with you and their families that are with you, who have been born in your land; and they may be your property.
46 You may bequeath them to your sons after you, to inherit as a possession for ever; you may make slaves of them, but over your brethren the people of Israel you shall not rule, one over another, with harshness.
47 "If a stranger or sojourner with you becomes rich, and your brother beside him becomes poor and sells himself to the stranger or sojourner with you, or to a member of the stranger's family,
48 then after he is sold he may be redeemed; one of his brothers may redeem him,
49 or his uncle, or his cousin may redeem him, or a near kinsman belonging to his family may redeem him; or if he grows rich he may redeem himself.
50 He shall reckon with him who bought him from the year when he sold himself to him until the year of jubilee, and the price of his release shall be according to the number of years; the time he was with his owner shall be rated as the time of a hired servant.
51 If there are still many years, according to them he shall refund out of the price paid for him the price for his redemption.
52 If there remain but a few years until the year of jubilee, he shall make a reckoning with him; according to the years of service due from him he shall refund the money for his redemption.
53 As a servant hired year by year shall he be with him; he shall not rule with harshness over him in your sight.
54 And if he is not redeemed by these means, then he shall be released in the year of jubilee, he and his children with him.
55 For to me the people of Israel are servants, they are my servants whom I brought forth out of the land of Egypt: I am the LORD your God.

1 நீங்கள் உங்களுக்கு விக்கிரகங்களையும் சுரூபங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலையை நிறுத்தாமலும், சித்திரந்தீர்ந்த கல்லை நமஸ்கரிக்கும்பொருட்டு உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
2 என் ஓய்வுநாட்களை ஆசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாயிருப்பீர்களாக; நான் கர்த்தர்.
3 நீங்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்தால்,
4 நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழைபெய்யப்பண்ணுவேன்; பூமி தன் பலனையும், வெளியிலுள்ள மரங்கள் தங்கள் கனியையும் கொடுக்கும்.
5 திராட்சப்பழம் பறிக்குங்காலம்வரைக்கும் போரடிப்புக்காலம் இருக்கும்; விதைப்புக்காலம் வரைக்கும் திராட்சப்பழம் பறிக்குங்காலம் இருக்கும்; நீங்கள் உங்கள் அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்டு, உங்கள் தேசத்தில் சுகமாய்க் குடியிருப்பீர்கள்.
6 தேசத்தில் சமாதானம் கட்டளையிடுவேன்; தத்தளிக்கப்பண்ணுவார் இல்லாமல் படுத்துக்கொள்வீர்கள்; துஷ்ட மிருகங்களைத் தேசத்தில் இராதபடிக்கு ஒழியப்பண்ணுவேன்; பட்டயம் உங்கள் தேசத்தில் உலாவுவதில்லை.
7 உங்கள் சத்துருக்களைத் துரத்துவீர்கள்; அவர்கள் உங்கள் முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்.
8 உங்களில் ஐந்துபேர் நூறுபேரைத்துரத்துவார்கள்; உங்களில் நூறுபேர் பதினாயிரம்பேரைத் துரத்துவார்கள்; உங்கள் சத்துருக்கள் உங்களுக்கு முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்.
9 நான் உங்கள்மேல் கண்ணோக்கமாயிருந்து, உங்களைப் பலுகவும் பெருகவும்பண்ணி, உங்களோடே என் உடன்படிக்கையைத் திடப்படுத்துவேன்.
10 போனவருஷத்துப் பழைய தானியத்தைச் சாப்பிட்டு, புதிய தானியத்துக்கு இடமுண்டாகும்படி, பழையதை விலக்குவீர்கள்.
11 உங்கள் நடுவில் என் வாசஸ்தலத்தை ஸ்தாபிப்பேன்; என் ஆத்துமா உங்களை அரோசிப்பதில்லை.
12 நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்.
13 நீங்கள் எகிப்தியருக்கு அடிமைகளாயிராதபடிக்கு, நான் அவர்கள் தேசத்திலிருந்து உங்களைப் புறப்படப்பண்ணி, உங்கள் நுகத்தடிகளை முறித்து, உங்களை நிமிர்ந்து நடக்கப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்.
14 நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படி செய்யாமலும்,
15 என் கட்டளைகளை வெறுத்து, உங்கள் ஆத்துமா என் நியாயங்களை அரோசித்து, என் கற்பனைகள் எல்லாவற்றின்படியும் செய்யாதபடிக்கு, என் உடன்படிக்கையை நீங்கள் மீறிப்போடுவீர்களாகில்:
16 நான் உங்களுக்குச் செய்வது என்னவென்றால், கண்களைப் பூத்துப்போகப்பண்ணுகிறதற்கும், இருதயத்தைத் துயரப்படுத்துகிறதற்கும், திகிலையும் ஈளையையும் காய்ச்சலையும் உங்களுக்கு வரப்பண்ணுவேன்; நீங்கள் விதைக்கும் விதை விருதாவாயிருக்கும்; உங்கள் சத்துருக்கள் அதின் பலனைத் தின்பார்கள்.
17 நான் உங்களுக்கு விரோதமாக என் முகத்தைத் திருப்புவேன்; உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிய அடிக்கப்படுவீர்கள்; உங்கள் பகைஞர் உங்களை ஆளுவார்கள்; துரத்துவார் இல்லாதிருந்தும் ஓடுவீர்கள்.
18 இவ்விதமாய் நான் உங்களுக்குச் செய்தும், இன்னும் நீங்கள் எனக்குச் செவிகொடாதிருந்தால், உங்கள் பாவங்களினிமித்தம் பின்னும் ஏழத்தனையாக உங்களைத் தண்டித்து,
19 உங்கள் வல்லமையின் பெருமையை முறித்து, உங்கள் வானத்தை இரும்பைப்போலவும், உங்கள் பூமியை வெண்கலத்தைப்போலவும் ஆக்குவேன்.
20 உங்கள் பெலன் விருதாவிலே செலவழியும்; உங்கள் தேசம் தன் பலனையும், தேசத்தின் மரங்கள் தங்கள் கனிகளையும் கொடுக்கமாட்டாது.
21 நீங்கள் எனக்குச் செவிகொடுக்க மனதில்லாமல், எனக்கு எதிர்த்து நடப்பீர்களானால், நான் உங்கள் பாவங்களுக்குத் தக்கதாக இன்னும் ஏழத்தனை வாதையை உங்கள்மேல் வரப்பண்ணி,
22 உங்களுக்குள்ளே வெளியின் துஷ்டமிருகங்களை வரவிடுவேன்; அவைகள் உங்களைப் பிள்ளைகளற்றவர்களாக்கி, உங்கள் மிருக ஜீவன்களை அழித்து, உங்களைக் குறைந்துபோகப்பண்ணும், உங்கள் வழிகள் பாழாய்க்கிடக்கும்.
23 நான் செய்யும் தண்டனையினால் நீங்கள் குணப்படாமல், எனக்கு எதிர்த்து நடந்தால்,
24 நான் உங்களுக்கு எதிர்த்து நடந்து, உங்கள் பாவத்தினிமித்தம் ஏழத்தனையாக வாதித்து,
25 என் உடன்படிக்கையை மீறினதற்குப் பழிவாங்கும் பட்டயத்தை உங்கள்மேல் வரப்பண்ணி, நீங்கள் உங்கள் பட்டணங்களில் சேர்ந்தபின், கொள்ளைநோயை உங்கள் நடுவிலே அனுப்புவேன்; சத்துருவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள்.
26 உங்கள் அப்பம் என்னும் ஆதரவுகோலை நான் முறித்துப்போடும்போது, பத்து ஸ்திரீகள் ஒரே அடுப்பில் உங்கள் அப்பத்தைச் சுட்டு, அதைத் திரும்ப உங்களுக்கு நிறுத்துக்கொடுப்பார்கள்; நீங்கள் சாப்பிட்டும் திருப்தியடையமாட்டீர்கள்
27 இன்னும் இவைகள் எல்லாவற்றாலும் நீங்கள் எனக்குச் செவிகொடாமல், எனக்கு எதிர்த்து நடந்தால்,
28 நானும் உக்கிரத்தோடே உங்களுக்கு எதிர்த்து நடந்து, நானே உங்கள் பாவங்களினிமித்தம் உங்களை ஏழத்தனையாய்த் தண்டிப்பேன்.
29 உங்கள் குமாரரின் மாம்சத்தையும் உங்கள் குமாரத்தியின் மாம்சத்தையும் புசிப்பீர்கள்.
30 நான் உங்கள் மேடைகளை அழித்து, உங்கள் விக்கிரகச் சிலைகளை நிர்த்தூளியாக்கி, உங்கள் உடல்களை உங்கள் நரகலான தேவர்களுடைய உடல்கள்மேல் எறிவேன்; என் ஆத்துமா உங்களை அரோசிக்கும்.
31 நான் உங்கள் பட்டணங்களை வெறுமையும், உங்கள் பரிசுத்த ஸ்தலங்களைப் பாழுமாக்கி, உங்கள் சுகந்த வாசனையை முகராதிருப்பேன்.
32 நான் தேசத்தைப் பாழாக்குவேன்; அதிலே குடியிருக்கிற உங்கள் சத்துருக்கள் பிரமிப்பார்கள்.
33 ஜாதிகளுக்குள்ளே உங்களைச் சிதற அடித்து, உங்கள் பின்னாகப் பட்டயத்தை உருவுவேன்; உங்கள் தேசம் பாழும், உங்கள் பட்டணங்கள் வனாந்தரமுமாகும்.
34 நீங்கள் உங்கள் சத்துருக்களின் தேசத்தில் இருக்கும்போது, தேசமானது பாழாய்க்கிடக்கிற நாளெல்லாம் தன் ஓய்வுநாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும்; அப்பொழுது தேசம் ஓய்வடைந்து, தன் ஓய்வுநாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும்;
35 நீங்கள் அதிலே குடியிருக்கும்போது, அது உங்கள் ஓய்வு வருஷங்களில் ஓய்வடையாதபடியினாலே, அது பாழாய்க்கிடக்கும் நாளெல்லாம் ஓய்வடைந்திருக்கும்.
36 உங்களில் உயிரோடு மீதியாயிருப்பவர்களின் இருதயங்கள் தங்கள் சத்துருக்களின் தேசங்களில் மனத்தளர்ச்சியடையும்படி செய்வேன்; அசைகிற இலையின் சத்தமும் அவர்களை ஓட்டும்; அவர்கள் பட்டயத்திற்குத் தப்பி ஓடுகிறதுபோல ஓடி, துரத்துவார் இல்லாமல் விழுவார்கள்.
37 துரத்துவார் இல்லாமல், பட்டயத்துக்கு முன் விழுவதுபோல, ஒருவர்மேல் ஒருவர் இடறி விழுவார்கள்; உங்கள் சத்துருக்களுக்குமுன் நிற்க உங்களுக்குப் பெலன் இராது.
38 புறஜாதிகளுக்குள்ளே அழிந்துபோவீர்கள்; உங்கள் சத்துருக்களின் தேசம் உங்களைப் பட்சிக்கும்.
39 உங்களில் தப்பினவர்கள் தங்கள் அக்கிரமங்களினிமித்தமும், தங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினிமித்தமும், உங்கள் சத்துருக்களின் தேசங்களில் வாடிப்போவார்கள்.
40 அவர்கள் எனக்கு விரோதமாகத் துரோகம்பண்ணி நடப்பித்த தங்கள் அக்கிரமத்தையும், தங்கள் பிதாக்களின் அக்கிரமத்தையும் அறிக்கையிடுகிறதுமன்றி,
41 அவர்கள் எனக்கு எதிர்த்து நடந்தபடியினால், நானும் அவர்களுக்கு எதிர்த்து நடந்து, அவர்களுடைய சத்துருக்களின் தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய்விட்டதையும் அறிக்கையிட்டு, விருத்தசேதனமில்லாத தங்கள் இருதயத்தைத் தாழ்த்தி, தங்கள் அக்கிரமத்துக்குக் கிடைத்த தண்டனையை நியாயம் என்று ஒத்துக்கொண்டால்,
42 நான் யாக்கோபோடே பண்ணின என் உடன்படிக்கையையும், ஈசாக்கோடே பண்ணின என் உடன்படிக்கையையும், ஆபிரகாமோடே பண்ணின என் உடன்படிக்கையையும் நினைப்பேன்; தேசத்தையும் நினைப்பேன்.
43 தேசம் அவர்களாலே விடப்பட்டு, பாழாய்க்கிடக்கிறதினாலே தன் ஓய்வுநாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும்; அவர்கள் என் நியாயங்களை அவமதித்து, அவர்களுடைய ஆத்துமா என் கட்டளைகளை வெறுத்தபடியினால் அடைந்த தங்களுடைய அக்கிரமத்தின் தண்டனையை நியாயம் என்று ஒத்துக்கொள்ளுவார்கள்.
44 அவர்கள் தங்கள் சத்துருக்களின் தேசத்திலிருந்தாலும், நான் அவர்களை நிர்மூலமாக்கத்தக்கதாகவும், நான் அவர்களோடே பண்ணின என் உடன்படிக்கையை அபத்தமாக்கத்தக்கதாகவும், நான் அவர்களைக் கைவிடவும் வெறுக்கவுமாட்டேன்; நான் அவர்கள் தேவனாகிய கர்த்தர்.
45 அவர்களுடைய தேவனாயிருக்கும்படிக்கு, நான் புறஜாதிகளின் கண்களுக்கு முன்பாக எகிப்து தேசத்திலிருந்து அவர்களைப் புறப்படச்செய்து, அவர்களுடைய முன்னோர்களோடே நான் பண்ணின உடன்படிக்கையை அவர்கள் நிமித்தம் நினைவுகூருவேன்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.
46 கர்த்தர் தமக்கும் இஸ்ரவேல் சந்ததியாருக்கும் நடுவே இருக்கும்படி மோசேயைக்கொண்டு, சீனாய்மலையின்மேல் கொடுத்த கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே.


1 "You shall make for yourselves no idols and erect no graven image or pillar, and you shall not set up a figured stone in your land, to bow down to them; for I am the LORD your God.
2 You shall keep my sabbaths and reverence my sanctuary: I am the LORD.
3 "If you walk in my statutes and observe my commandments and do them,
4 then I will give you your rains in their season, and the land shall yield its increase, and the trees of the field shall yield their fruit.
5 And your threshing shall last to the time of vintage, and the vintage shall last to the time for sowing; and you shall eat your bread to the full, and dwell in your land securely.
6 And I will give peace in the land, and you shall lie down, and none shall make you afraid; and I will remove evil beasts from the land, and the sword shall not go through your land.
7 And you shall chase your enemies, and they shall fall before you by the sword.
8 Five of you shall chase a hundred, and a hundred of you shall chase ten thousand; and your enemies shall fall before you by the sword.
9 And I will have regard for you and make you fruitful and multiply you, and will confirm my covenant with you.
10 And you shall eat old store long kept, and you shall clear out the old to make way for the new.
11 And I will make my abode among you, and my soul shall not abhor you.
12 And I will walk among you, and will be your God, and you shall be my people.
13 I am the LORD your God, who brought you forth out of the land of Egypt, that you should not be their slaves; and I have broken the bars of your yoke and made you walk erect.
14 "But if you will not hearken to me, and will not do all these commandments,
15 if you spurn my statutes, and if your soul abhors my ordinances, so that you will not do all my commandments, but break my covenant,
16 I will do this to you: I will appoint over you sudden terror, consumption, and fever that waste the eyes and cause life to pine away. And you shall sow your seed in vain, for your enemies shall eat it;
17 I will set my face against you, and you shall be smitten before your enemies; those who hate you shall rule over you, and you shall flee when none pursues you.
18 And if in spite of this you will not hearken to me, then I will chastise you again sevenfold for your sins,
19 and I will break the pride of your power, and I will make your heavens like iron and your earth like brass;
20 and your strength shall be spent in vain, for your land shall not yield its increase, and the trees of the land shall not yield their fruit.
21 "Then if you walk contrary to me, and will not hearken to me, I will bring more plagues upon you, sevenfold as many as your sins.
22 And I will let loose the wild beasts among you, which shall rob you of your children, and destroy your cattle, and make you few in number, so that your ways shall become desolate.
23 "And if by this discipline you are not turned to me, but walk contrary to me,
24 then I also will walk contrary to you, and I myself will smite you sevenfold for your sins.
25 And I will bring a sword upon you, that shall execute vengeance for the covenant; and if you gather within your cities I will send pestilence among you, and you shall be delivered into the hand of the enemy.
26 When I break your staff of bread, ten women shall bake your bread in one oven, and shall deliver your bread again by weight; and you shall eat, and not be satisfied.
27 "And if in spite of this you will not hearken to me, but walk contrary to me,
28 then I will walk contrary to you in fury, and chastise you myself sevenfold for your sins.
29 You shall eat the flesh of your sons, and you shall eat the flesh of your daughters.
30 And I will destroy your high places, and cut down your incense altars, and cast your dead bodies upon the dead bodies of your idols; and my soul will abhor you.
31 And I will lay your cities waste, and will make your sanctuaries desolate, and I will not smell your pleasing odors.
32 And I will devastate the land, so that your enemies who settle in it shall be astonished at it.
33 And I will scatter you among the nations, and I will unsheathe the sword after you; and your land shall be a desolation, and your cities shall be a waste.
34 "Then the land shall enjoy its sabbaths as long as it lies desolate, while you are in your enemies' land; then the land shall rest, and enjoy its sabbaths.
35 As long as it lies desolate it shall have rest, the rest which it had not in your sabbaths when you dwelt upon it.
36 And as for those of you that are left, I will send faintness into their hearts in the lands of their enemies; the sound of a driven leaf shall put them to flight, and they shall flee as one flees from the sword, and they shall fall when none pursues.
37 They shall stumble over one another, as if to escape a sword, though none pursues; and you shall have no power to stand before your enemies.
38 And you shall perish among the nations, and the land of your enemies shall eat you up.
39 And those of you that are left shall pine away in your enemies' lands because of their iniquity; and also because of the iniquities of their fathers they shall pine away like them.
40 "But if they confess their iniquity and the iniquity of their fathers in their treachery which they committed against me, and also in walking contrary to me,
41 so that I walked contrary to them and brought them into the land of their enemies; if then their uncircumcised heart is humbled and they make amends for their iniquity;
42 then I will remember my covenant with Jacob, and I will remember my covenant with Isaac and my covenant with Abraham, and I will remember the land.
43 But the land shall be left by them, and enjoy its sabbaths while it lies desolate without them; and they shall make amends for their iniquity, because they spurned my ordinances, and their soul abhorred my statutes.
44 Yet for all that, when they are in the land of their enemies, I will not spurn them, neither will I abhor them so as to destroy them utterly and break my covenant with them; for I am the LORD their God;
45 but I will for their sake remember the covenant with their forefathers, whom I brought forth out of the land of Egypt in the sight of the nations, that I might be their God: I am the LORD."
46 These are the statutes and ordinances and laws which the LORD made between him and the people of Israel on Mount Sinai by Moses.

1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
2 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: யாதாமொருவர் ஒரு விசேஷித்த பொருத்தனை பண்ணியிருந்தால், பொருத்தனை பண்ணப்பட்டவர்கள் உன் மதிப்பின்படி கர்த்தருக்கு உரியவர்கள்.
3 இருபது வயதுமுதல் அறுபது வயதுக்குட்பட்ட ஆண்பிள்ளையை நீ பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலாகிய ஐம்பது வெள்ளிச்சேக்கலாகவும்,
4 பெண்பிள்ளையை முப்பது சேக்கலாகவும் மதிப்பாயாக.
5 ஐந்து வயதுமுதல் இருபது வயதுக்கு உட்பட்ட ஆண்பிள்ளையை இருபது சேக்கலாகவும், பெண்பிள்ளையை பத்துச்சேக்கலாகவும்,
6 ஒரு மாதம்முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட ஆண்பிள்ளையை ஐந்து வெள்ளிச்சேக்கலாகவும், பெண்பிள்ளையை மூன்று வெள்ளிச்சேக்கலாகவும்,
7 அறுபது வயது தொடங்கி, அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளையைப் பதினைந்து சேக்கலாகவும், பெண்பிள்ளையைப் பத்துச்சேக்கலாகவும் மதிக்கக்கடவாய்.
8 உன் மதிப்பின்படி செலுத்தக் கூடாத தரித்திரனாயிருந்தால், அவன் ஆசாரியனுக்கு முன்பாக வந்து நிற்கக்கடவன்; ஆசாரியன் அவனை மதிப்பானாக; பொருத்தனை பண்ணினவனுடைய திராணிக்கேற்றபடி ஆசாரியன் அவனை மதிக்கக்கடவன்.
9 ஒருவன் பொருத்தனை பண்ணினது கர்த்தருக்குப் பலியிடப்படத்தக்க மிருக ஜீவனானால் அவன் கர்த்தருக்குக் கொடுக்கிற அப்படிப்பட்டதெல்லாம் பரிசுத்தமாயிருப்பதாக.
10 அதை மாற்றாமலும் வேறுபடுத்தாமலும் இருப்பானாக; இளப்பமானதற்குப் பதிலாக நலமானதையும், நலமானதற்குப் பதிலாக இளப்பமானதையும் செலுத்தாமல் இருப்பானாக; அவன் மிருகத்துக்குப் பதிலாக மிருகத்தை மாற்றிக்கொடுப்பானாகில், அப்பொழுது அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுத்ததும் பரிசுத்தமாயிருப்பதாக.
11 அது கர்த்தருக்குப் பலியிடப்படத்தகாத சுத்தமில்லாத யாதொரு மிருகமானால், அதை ஆசாரியனுக்கு முன்பாக நிறுத்தக்கடவன்.
12 ஆசாரியன் அது நல்லதானாலும் இளப்பமானதானாலும் அதை மதிப்பானாக; உன் மதிப்பின்படியே இருக்கக்கடவது.
13 அதை மீட்டுக்கொள்ளமனதாயிருந்தானாகில், உன் மதிப்போடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன்.
14 ஒருவன் தன்வீட்டைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், ஆசாரியன் அதின் நலத்துக்கும் இளப்பத்துக்கும் தக்கதாக அதை மதிக்கக்கடவன்; ஆசாரியன் மதிக்கிறபடி அது இருக்கக்கடவது.
15 தன் வீட்டைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், நீ மதிக்கும் திரவியத்தோடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுடையதாகும்.
16 ஒருவன் தன் காணியாட்சியான வயலில் யாதொரு பங்கைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், உன் மதிப்பு அதின் விதைப்புக்குத்தக்கதாய் இருக்கவேண்டும்; ஒரு கலம் வாற்கோதுமை விதைக்கிற வயல் ஐம்பது வெள்ளிச்சேக்கலாக மதிக்கப்படவேண்டும்.
17 யூபிலி வருஷமுதல் அவன் தன் வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், அது உன் மதிப்பின்படி இருக்கவேண்டும்.
18 யூபிலி வருஷத்துக்குப்பின் தன் வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டானானால், யூபிலி வருஷம்மட்டுமுள்ள மற்றவருஷங்களின்படியே ஆசாரியன் திரவியத்தைக் கணக்குப்பார்த்து, அதற்குத்தக்கது உன் மதிப்பிலே தள்ளப்படவேண்டும்.
19 வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்து கொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், உன் மதிப்பான திரவியத்தோடே ஐந்தில் ஒரு பங்கைக்கூட்டிக் கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு உறுதியாகும்.
20 அவன் வயலை மீட்டுக்கொள்ளாமல், வயலை வேறொருவனுக்கு விற்றுப்போட்டால், அது திரும்ப மீட்கப்படாமல்,
21 யூபிலி வருஷத்தில் மீட்கப்படும்போது, சாபத்தீடான வயலாகக் கர்த்தருக்கென்று நியமிக்கப்பட்டதாயிருக்கக்கடவது; அது ஆசாரியனுக்குக் காணியாட்சியாகும்.
22 ஒருவன் தனக்குக் காணியாட்சி வயலாயிராமல் தான் விலைக்கு வாங்கின ஒரு வயலைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால்,
23 அது யூபிலி வருஷம்மட்டும், உன் மதிப்பின்படி பெறும் விலை இன்னதென்று ஆசாரியன் அவனோடே கணக்குப்பார்த்து, அந்த உன் மதிப்பை, கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்படி, அவன் அந்நாளிலே கொடுக்கக்கடவன்.
24 யார் கையிலே அந்த வயலைக் கொண்டானோ, அந்தக் காணியாட்சிக்காரன் வசமாய் அது யூபிலி வருஷத்தில் திரும்பச் சேரும்.
25 உன் மதிப்பெல்லாம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்காயிருக்கக்கடவது; ஒரு சேக்கலானது இருபது கேரா.
26 தலையீற்றானவைகள் கர்த்தருடையது, ஆகையால் ஒருவரும் தலையீற்றாகிய மிருகஜீவனைப் பரிசுத்தம் என்று நேர்ந்து கொள்ளலாகாது; அது மாடானாலும் ஆடானாலும் கர்த்தருடையது.
27 சுத்தமில்லாத மிருகத்தினுடைய தலையீற்றினால், அதை அவன் உன் மதிப்பின்படி மீட்டுக்கொண்டு, அதனுடனே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன்; மீட்கப்படாதிருந்தால், உன் மதிப்பின்படி அது விற்கப்படக்கடவது.
28 ஒருவன் தன் வசத்திலுள்ள நரஜீவனிலாவது, மிருகஜீவனிலாவது, காணியாட்சி நிலத்திலாவது, எதையாகிலும் கர்த்தருக்கென்றுசாபத்தீடாக நேர்ந்துகொண்டால், அது விற்கப்படவும் மீட்கப்படவும் கூடாது; நேர்ந்துகொள்ளப்பட்டவைகளெல்லாம் கர்த்தருக்காகப் பரிசுத்தமாயிருக்கும்.
29 நரஜீவனில் சாபத்தீடாக நியமிக்கப்பட்டவைகளெல்லாம் மீட்கப்படாமல் கொலைசெய்யப்படக்கடவது.
30 தேசத்திலே நிலத்தின் வித்திலும், விருட்சங்களின் கனியிலும், தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது.
31 ஒருவன் தன் தசமபாகத்திலே எவ்வளவாவது மீட்டுக்கொள்ள மனதாயிருந்தானானால், அதனுடன் ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன்.
32 கோலின் கீழ்ப்பட்ட ஆடுமாடுகளிலே பத்தில் ஒரு பங்காகிறதெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமானது.
33 அது நல்லதோ இளப்பமானதோ என்று அவன் பார்க்கவேண்டாம்; அதை மாற்றவும் வேண்டாம்; மாற்றினால், அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுக்கப்பட்டதுமாகிய இரண்டும் பரிசுத்தமாகும்; அது மீட்கப்படக் கூடாதென்று அவர்களோடே சொல் என்றார்.
34 இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லும்படி, கர்த்தர் சீனாய்மலையில் மோசேக்கு விதித்த கட்டளைகள் இவைகளே.


1 The LORD said to Moses,
2 "Say to the people of Israel, When a man makes a special vow of persons to the LORD at your valuation,
3 then your valuation of a male from twenty years old up to sixty years old shall be fifty shekels of silver, according to the shekel of the sanctuary.
4 If the person is a female, your valuation shall be thirty shekels.
5 If the person is from five years old up to twenty years old, your valuation shall be for a male twenty shekels, and for a female ten shekels.
6 If the person is from a month old up to five years old, your valuation shall be for a male five shekels of silver, and for a female your valuation shall be three shekels of silver.
7 And if the person is sixty years old and upward, then your valuation for a male shall be fifteen shekels, and for a female ten shekels.
8 And if a man is too poor to pay your valuation, then he shall bring the person before the priest, and the priest shall value him; according to the ability of him who vowed the priest shall value him.
9 "If it is an animal such as men offer as an offering to the LORD, all of such that any man gives to the LORD is holy.
10 He shall not substitute anything for it or exchange it, a good for a bad, or a bad for a good; and if he makes any exchange of beast for beast, then both it and that for which it is exchanged shall be holy.
11 And if it is an unclean animal such as is not offered as an offering to the LORD, then the man shall bring the animal before the priest,
12 and the priest shall value it as either good or bad; as you, the priest, value it, so it shall be.
13 But if he wishes to redeem it, he shall add a fifth to the valuation.
14 "When a man dedicates his house to be holy to the LORD, the priest shall value it as either good or bad; as the priest values it, so it shall stand.
15 And if he who dedicates it wishes to redeem his house, he shall add a fifth of the valuation in money to it, and it shall be his.
16 "If a man dedicates to the LORD part of the land which is his by inheritance, then your valuation shall be according to the seed for it; a sowing of a homer of barley shall be valued at fifty shekels of silver.
17 If he dedicates his field from the year of jubilee, it shall stand at your full valuation;
18 but if he dedicates his field after the jubilee, then the priest shall compute the money-value for it according to the years that remain until the year of jubilee, and a deduction shall be made from your valuation.
19 And if he who dedicates the field wishes to redeem it, then he shall add a fifth of the valuation in money to it, and it shall remain his.
20 But if he does not wish to redeem the field, or if he has sold the field to another man, it shall not be redeemed any more;
21 but the field, when it is released in the jubilee, shall be holy to the LORD, as a field that has been devoted; the priest shall be in possession of it.
22 If he dedicates to the LORD a field which he has bought, which is not a part of his possession by inheritance,
23 then the priest shall compute the valuation for it up to the year of jubilee, and the man shall give the amount of the valuation on that day as a holy thing to the LORD.
24 In the year of jubilee the field shall return to him from whom it was bought, to whom the land belongs as a possession by inheritance.
25 Every valuation shall be according to the shekel of the sanctuary: twenty gerahs shall make a shekel.
26 "But a firstling of animals, which as a firstling belongs to the LORD, no man may dedicate; whether ox or sheep, it is the LORD's.
27 And if it is an unclean animal, then he shall buy it back at your valuation, and add a fifth to it; or, if it is not redeemed, it shall be sold at your valuation.
28 "But no devoted thing that a man devotes to the LORD, of anything that he has, whether of man or beast, or of his inherited field, shall be sold or redeemed; every devoted thing is most holy to the LORD.
29 No one devoted, who is to be utterly destroyed from among men, shall be ransomed; he shall be put to death.
30 "All the tithe of the land, whether of the seed of the land or of the fruit of the trees, is the LORD's; it is holy to the LORD.
31 If a man wishes to redeem any of his tithe, he shall add a fifth to it.
32 And all the tithe of herds and flocks, every tenth animal of all that pass under the herdsman's staff, shall be holy to the LORD.
33 A man shall not inquire whether it is good or bad, neither shall he exchange it; and if he exchanges it, then both it and that for which it is exchanged shall be holy; it shall not be redeemed."
34 These are the commandments which the LORD commanded Moses for the people of Israel on Mount Sinai.